kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாரையும் இரட்சிக்க தேவனாலும் கிறிஸ்துவினாலு முடியாது என்கிறார் அன்பு!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
எல்லாரையும் இரட்சிக்க தேவனாலும் கிறிஸ்துவினாலு முடியாது என்கிறார் அன்பு!!


இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது; தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிறார் கிரியையை நம்பி இருக்கும் "நித்திய ஜீவன்" தளத்தின் நிர்வாகி அன்பு அவர்கள்!!

இப்படி பட்ட ஒரு விகாரமான நம்பிக்கையை வைத்துக்கொண்டு தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில் அவர் வேண்டுமென்றால் பெறுமை கொள்ளலாம், ஆனால் இந்த தளத்தை பொறுத்த மட்டும் இது வரையில் சொல்லப்பட்ட தேவதூஷனங்களிலும் பெரிதான தேவ தூஷனம் இதுவே!!

இப்படி பட்ட ஒரு நம்பிக்கையை பகிரங்கமாக அறிவித்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கும் அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள்!! அவருக்கு இதை சொல்லுவதில் சற்றும் அச்சமும் பயமும் கிடையாதாம்!!

ஆதியாகமம் 18:14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

என்றால், அன்பு அவர்களை பொறுத்தவரையில் கர்த்தரால் ஆகாத காரியம் என்னவென்றால் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாதாம்!! கரு செத்து போன பிறகு குழந்தை கொடுக்க முடிகிற கர்த்தருக்கு எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகி!!

இதோ அவர் தன் தளத்தில் பதிவு செய்தவைகளை இங்கே வெளியிடுகிறேன்:

 

avatar?id=1218535&m=75&t=1301450258

Militant
flame.gif

Status: Offline
Posts: 694
Date: yesterday
 
  
 

சோல்சொல்யூஷன்:

//நண்பர் ஜோசஃப் அவர்களே, "இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு செய்தால் நாங்கள் இந்தத் தளத்தையே மூடிவிடுகிறோம் என்று சொல்கிறோம்.//

மனிதனின் கிரியை இல்லாமல் “இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது” என்பதற்கு தகுந்த வேத வசன ஆதாரங்கள் ஏராளம் உண்டு.

அவற்றை ஏற்கனவே இத்திரியில் நான் பதிவு செய்துள்ளேன்.

எனவே நான் சொல்கிறேன்:

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

சோல்சொல்யூஷன் சொன்னபடியே தனது தளத்தை மூடுவாரா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

avatar?id=1218535&m=75&t=1301450258

Militant
flame.gif

Status: Offline
Posts: 694
Date: yesterday
 
  
 

சோல்சொல்யூஷன்:

//சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?//

சோல்சொல்யூஷன் கேட்டுக்கொண்டபடி இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

சகோ.பெரியன்ஸ் கேட்டுக்கொண்டபடியேயும் சொல்லிவிடுகிறேன்.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

உண்மையைச் சொல்ல ஏன் நடுங்க வேண்டும்?

சவாலில் சொன்னபடியே யாரையும் விமர்சிக்காமல், தளத்தை உடனடியாக மூடவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

avatar?id=1218535&m=75&t=1301450258

Militant
flame.gif

Status: Offline
Posts: 694
Date: yesterday
 
  
 

"இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது."

எனும் இவ்விரு கூற்றுக்களையும் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவோ, நடுங்கவோ வேண்டியதில்லை. ஏனெனில், இவ்விரு கூற்றுகளும் உண்மையாயிருந்தாலும் பொய்யாயிருந்தாலும், அதினிமித்தம் எனது இரட்சிப்பு பாதிக்கப்படப்போவதில்லை. எப்படியெனில்:

உண்மையாயிருந்தால், உண்மையைச் சொன்ன எனது இரட்சிப்புக்கு பங்கம் வரப்போவதில்லை.

பொய்யாயிருந்தால்,

"இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும்.

தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியும்."

எனும் கூற்றுக்கள் உண்மையாகிவிடும். அதாவது இயேசுவால்/தேவனால் என்னையும் இரட்சிக்க முடியும் என்பது உண்மையாகிவிடும். ஆகவே எனக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் எனது இரட்சிப்புக்கு பங்கமில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: எல்லாரையும் இரட்சிக்க தேவனாலும் கிறிஸ்துவினாலு முடியாது என்கிறார் அன்பு!!


//அய்யா பெரியன்ஸ் அவர்களே!

எனது பதிவை எவ்வளவாய் கூவி அறிவிக்கமுடியுமோ அவ்வளவாய் கூவி அறிவித்துக்கொள்ளுங்கள். அது எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் உங்கள் சவால் பற்றி எதுவும் சொல்லாமல் இப்படி மவுனமாயிருந்தால் எப்படி?

உங்கள் (வாய்ச்) சவடாலின்படி உங்கள் தளத்தை உடனடியாக மூடுகிற வழியைப் பாருங்கள்.

எனது பதிவு சம்பந்தமாக நீங்கள் சொல்லுகிற எதுவும் எனக்குப் பொருட்டல்ல; அதற்குப் பதில் விவாதம் தர எனக்கு அவசியமுமில்லை.

எனது எதிர்பார்ப்பெல்லாம் உங்கள் சவால் நிபந்தனைப்படி உங்கள் தளத்தை மூடவேண்டும், இனி யாரைப் பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லவும் கூடாது.

உங்கள் நாக்கு சுத்தமாயிருந்தால், சொன்னதைச் செய்யும் நேர்மைத்திறமிருந்தால், வேறெதுவும் சொல்லாமல் தளத்தை மூடவும்.//

அன்பு அவர்களே,

நீங்கள் எழுதியதை நான் எழுதினேன், அவ்வளவே!! இதில் நான் எதையும் சேர்த்துக்கொண்டு (கூவி) வெளியிட எனக்கு அவசியமில்லை!! தளத்தை மூடுவதாக ஜோசப்பிடம் சவால் விட்டவர் சகோ சோல் அவர்கள்!! நீங்கள் ஏன் முந்திக்கொள்கிறீர்கள்!! நான் சொன்னது வரை நான் தளத்தை மூடிவிடுவதாக எந்த சவாலும் விடவில்லை!!

மேலும் கிறிஸ்தவ அறிக்கை இல்லாத ஒருவருக்கு (அதான் உங்களுக்கு) பயந்து நாங்கள் எதையும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை!! என்றைக்கு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லிவிட்டீர்களோ, உங்களோடு இனியும் இது சம்பந்தமாக விவாதிக்க மனமில்லை!!

நான் தளத்தை மூடுவதோ மூடாமல் இருப்பதோ என்பது என் இஷ்ட்டம், அதை எப்ப செய்ய வேண்டும் எப்ப செய்ய கூடாது என்பதையும் நானே முடிவு செய்கிறவன்!! கூடிய விரைவில் இந்த தளம் மூடப்பட்டு இதே பெயரில் ஒரு புதிய தளம் ஆனால் இது போன்ற இலவசமானதாக இல்லாமல், எங்களின் உழைப்பினால் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!! சீக்கிரமே உங்களின் வஞ்சக பதிவுகளை அதில் வெளிப்படுத்துகிறேன்!! அது வரையில் காத்திருங்கள்!!

மறுதலிக்க மாட்டேன் என்று சொன்ன பேதுரு மறுதலித்தான்!! சத்தியத்தை நசுக்க இதுவும் சாத்தானின் ஒரு முயற்சி (அதான் இந்த தளத்தை மூடுவதற்கு நீங்கள் கொடுத்த வக்கிரமான அறிக்கையை தான் சொல்லுகிறேன்)!! தளத்தை மூட‌ சொல்லியும், துருபதேசக்காரர்களை விமர்சிக்க கூடாது என்பதற்காக கிறிஸ்துவை மறுதலிக்கும் "கிறிஸ்தவர்களை" பார்க்க செய்தீர்கள்!! இனியும் உங்களுடன் விவாதம் என்கிற பெயரில் எழுதுவதே தேவதூஷனமாக ஆகும்!! உங்களுக்கு எங்களை குறித்து என்ன அவதூறு சொல்ல வேண்டுமோ சொல்லுங்ள், இந்த தளத்திற்கு இன்னோரு எதிரி வந்துவிட்டதாக நாங்கள் நினைத்துக்கொள்கிறோம்!!

 

Good Bye Mr Anbu!! Kovai bereans do not have anything more to deal with you!! We remain closed for you or your posts!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தேவனாலும், கிறிஸ்துவாலும் கூடாதது என்னால் கூடும் என்ற அகந்தை உம் போன்றவர்களுக்கு இருக்கிறதா என்பதை அறிவதற்காகவே அவ்வண்ணம் பதித்தேன். நண்பர் ஜோசஃப் அவ்வாறு பதிவதற்கு தயங்குவார் என்பது எனக்குத்தெரியும். இம்மாதிரி பதிக்கச்சொல்லி அநேக நாட்களாகிவிட்டது, இப்போதுதான் அன்பு அவர்களுக்கு ஞானம் வந்ததா என்று தெரியவில்லை.

 

வேதத்தை ஆராய்ந்து தேவனால் எல்லாரையும் இரட்சிப்பது என்பது இயலாத காரியம் என்று ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். இனி உமக்கும் இத்தளத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உம்மைப் பொருத்தவரை இத்தளம் மூடியாகிவிட்டது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சோல்:
//வேதத்தை ஆராய்ந்து தேவனால் எல்லாரையும் இரட்சிப்பது என்பது இயலாத காரியம் என்று ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். இனி உமக்கும் இத்தளத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உம்மைப் பொருத்தவரை இத்தளம் மூடியாகிவிட்டது.//

எந்த விதமான துருபதேசக்காரர்களுக்கும் இந்த தளம் மூடியதாக தான் இருக்கும் சகோதரரே!! கண்கள் கட்டி போட ஒருத்தன் இருக்கும் போது ஆழமானதை புரிந்துக்கொள்ள கஷ்ட்டம் தான்!! தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று சாத்தானை தவிர வேறு ஒருவனும் போதிக்க முடியாது!! அதை தான் அவன் காலம் காலமாக செய்துக்கொண்டிருக்கிறான்!!

கிறிஸ்து எல்லாருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்தார் என்று வசனம் சொல்லியும், தேவனின் கிருபையினால் அவர் எல்லாருக்காகவும் மரணத்தை ருசி பார்தார் என்று வசனம் சொன்னாலும் பிசாசின் போதனையை பொறுத்தவரையில் தேவனாலும் சரி கிறிஸ்துவினாலும் சரி, எல்லாரையும் இரட்சிக்க முடியாது!! கிறிஸ்து இரத்தம் சிந்தியது வீன் தான்!! அடேங்கப்பா, என்ன கண்டுபிடிப்பு!!

விடுங்க பிரதர், இவங்கெல்லாம் இப்படி தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிறார், என்ன செய்ய முடியும்!!

2 தெசலோனிக்கர் 2. 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

தேவன் அனுப்பிய வஞ்சகத்தில் இருப்போருக்கு தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பினால் என்ன செய்ய முடியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

dear sir,
that statement already exist in bible concodarnce
God has some rules you know, he didnt over his rules
for example
he is holy, he didnt do sin
he is truth, he didnt do lie
like that jesus christ blood can forgive all sins except sin against holyspirit
jesus blood can give cool to jehovah feet to forgive except sin against holyspirit

the sin which is not forgiven by jesus blood is sin against holyspirit

do you know why??
research it

__________________
T.balaji


Newbie

Status: Offline
Posts: 3
Date:

இந்த தளத்தில் என்ன விவாதம் செய்ய வேண்டும்  என்ற விவஸ்தையே இல்லை போல ........ சாகோதரர் அன்பு அவர்களின் பதிவு எந்த அளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இது குறித்து உங்கள் தரப்பில் ஏதும் விளக்கம் தரமுடியுமா ? இருதரப்பினரினதும் பதிவுகளை அறிய ஆவலாக இருக்கிறேன் . அன்பு அவர்களின் இணையத்தளம் விபரங்கள் தரமுடியுமா ?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard