kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு


//இனிமே இங்கே வந்து உளறமாட்டேன்; “அய்யய்யோ ஓர் என்டர்டெயின்மண்ட் போய்ட்டே”ன்னு வருத்தப்படுறீங்களா? வருத்தம் வேண்டாம்; “என் தளத்திலேயே நான் உளறுவேன்”. அதுக்குப் பதில் சொல்லி என்டர்டெயின் பண்ணிக்கோங்க. OK, Bye.//

அய்யா அன்பு அவர்களே, நீர் ஒரு வார்த்தைகூட என்னைப் பற்றி விமரிசிக்கவில்லை என்பதுபோல வேஷம் போடுகிறீர். இந்த சால்ஜாப்பெல்லாம் எல்லாருக்கும் தெரியும். காமெடியன்கள், கோமாளிகள், பைத்தியக்காரன் என்றெல்லாம் பதிந்துவிட்டு என்னமோ ஒன்னுமே தெரியாதமாதிரி நடிக்கிறீர். 

யாரும் உம்மை எங்கள் தளத்துக்கு வருந்தி அழைக்கவில்லை. எனக்கு பதில் சொல்லும் நேரத்தில் எவனையாவது கிரியைமூலம் நீதிமானாக்கி இரண்டாம் மரணத்திலிருந்து தப்புவியும். 

சகோ.பெரேயன் சொன்னது போல "தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு கொடுங்கள், நாங்கள் யாரையும் விமரிசிக்க மாட்டோம் என்ற சவாலுக்கு ஒருத்தனும் பதில் சொல்லவில்லை. ஏன் கை நடுங்குதோ?

ஏன் அப்படியே கோபம் பொங்குது....? 

எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளில்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் பதிவீர்களோ? எல்லாவற்றையும் கைக்கொண்டு அப்படியே 'பரிசுத்தப் பழமாக' இருக்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். 

//வேறெந்த உண்மையையும் இனி வேதத்தில தேடவேண்டாம்; என்னை மாதிரி உளறன்களுக்குப் பதில் சொல்றது, ஒவ்வொருத்தரின் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது, குறிப்பா ஊழியக்காரங்களின் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது, எல்லோரையும் சரட்டுமேனிக்கு “லூசு, முட்டாள்”னு திட்டுறது, இப்படியா என்டர்டெயின்மண்ட் பண்ணினா போதும்.//

//நான் சற்று மதிப்பு வைத்திருந்த அகஸ்டின் ஜெபக்குமாரும் (போலித்) தீர்க்கதரிசனம் உரைத்து மாட்டிக்கொண்டதை இத்திரி மூலம் அறிந்தபோது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆகிலும் அவரது போலித் தீர்க்கதரிசனத்திற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடித்து வெளியிட்ட soulsolution-க்குப் பாராட்டுக்கள்.//

http://kovaibereans.activeboard.com/t42848650/topic-42848650/

ஆக நீஙக தேவப்பட்டா பாராட்டுவீக, இல்லாவிட்டால் பைத்தியம்பீங்க‌... டபுள் கேம் ஆட வெக்கமாயில்லை. 

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று சொல்ல உமக்கு அருகதை இல்லை. எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற வேத சத்தியம் உமக்கு தாங்கமுடியாத அதிர்ச்சியாக உள்ளது. பாவம் ரொம்ப வருத்தப்படுவீர்கள் போல உள்ளது. என்னடா மஹா பரிசுத்தவானும் நீதிமானுமாகிய எனக்கும் நித்திய ஜீவன், மஹா பாவியாகிய சோலுக்கும் நித்திய ஜீவன்... என்ன அநியாயம் என்று தவிப்பீர்கள்.

பாவம்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நித்தியஜீவன் தளத்தில் நான் கேட்ட கேள்வியை சோல் சகோதரர் சவாலாக கொடுத்திருப்பதை குறித்தான ஒரு விவாதம்!!

அதற்கு நண்பர் அன்பு அவர்கள் அவரின் பதிலுக்கு பூமியில் உள்ள ஒரு நீதிபதியை எடுத்துக்காட்டாக காட்டுகிறார்!! அன்பு அவர்கள் ஒரு விஷயத்தை மறந்திருக்கிறார் போல்!! அனைவருக்கும் இரட்சிப்பை தருவேன் என்று சொன்னவர் தன் ஜீவனை அனைவருக்காகவும் கொடுத்தவர்!! ஜீவனை எடுக்கவும் விட்டு வைக்கவும் உலக பிரகாரமான நீதிபதிக்கும் அதிகாரம் இருக்கிறது என்று சொல்லும் அன்பு அவர்களே, இந்த கேள்வியின் அர்த்தத்தை புரியாமல் நீங்கள் எடுத்துக்காட்டுக்கு எடுத்திருக்கும் நீதிபதியின் எடுத்துக்காட்டு சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கிறது!!

கிறிஸ்து என்கிற நீதிபதி எங்கே, இந்த உலகத்தின் நீதிபதி எங்கே!! இந்த உலகத்தின் நீதிபதி யாருக்காக தன் ஜீவனை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா!!?? ஆனால் கிறிஸ்துவோ,

1 தீமோத்தேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

1 Timothy 2:6 Who gave himself a ransom for all, to be testified in due time.

This truth will come to knowledge of ALL at appointed time and not beforehand!! So Please have patience and please don't compare the worldly judge with the one who gave HIMSELF a ransom for ALL.

இப்படி எல்லாருக்காகவும் ஜீவனை கொடுத்தவர் நீங்கள் செய்யும் கிரியை நம்பி உலகத்தின் இரட்சகராக வரவில்லை!! இப்போ எல்லாருக்கும் இது விளங்காது, ஏற்ற காலங்களில் தான் இது விளங்கும் அப்பொழுது புரிந்துக்கொள்வீர்கள்!!

//ஏசாயா 59:1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஆம், தேவனால் நம்மை இரட்சிக்க முடியும்தான். ஆனால் அந்த இரட்சிப்புக்குக் குறுக்கே நிற்பது நமது அக்கிரமங்களே. நம்மிடம் அக்கிரம் இருக்கும்வரை தேவனால் நம்மை இரட்சிக்க முடியாதுதான்.//

இப்படி இருந்ததால் தான் கிறிஸ்து இயேசு வந்தார் என்கிற அடிப்படை கூட இல்லாமல் அன்பு அவர்களின் விவாதம் திசை திரும்புகிறது!!

//மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

இரட்சிப்பு என்பது அந்தந்த மனிதனின் கரத்திலும் உள்ளது என்பதற்கு இவ்வசனம் பலமான ஆதாரமாயுள்ளது.//

கிறிஸ்துவின் இரத்தம் செய்ய முடியாததை ஒரு மனிதன் தன் சொந்த செயலில் செய்து முடிக்க கூடும் என்று சொல்லுவது நாத்திகமே!!

//இயேசு இவ்வுலகத்திற்கு வந்ததென்னவோ நம் எல்லோரையும் இரட்சிக்கத்தான். ஆனால் அவரையும் அவரது வார்த்தைகளைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அவர் நம்மை இரட்சிப்பது கேள்விக்குறியாகிவிடும்.//

அதாவது மனிதனின் செயல்கள் தேவனின் சித்தத்தையே முறியடிக்கும் வல்லமையுள்ளது என்று நீங்கள் கொடுத்த வசனங்கள் உங்களுக்கு போதிக்கிறது!! சபாஷ்!!

//நன்மை செய்த நீதிமான்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்பதும், நன்மை செய்யாத அநீதிமான்கள் பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்கு சென்று ஆக்கினை அடைவார்கள் என்பதும் இயேசு சொன்ன வசனங்களே.//

பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

அவராலே இரட்சிக்க முடியும் தான், அவர் அதற்காக தான் வந்தார், ஆனால் என்ன செய்ய, மனுஷர்கள் விடுவது இல்லையே என்பது பிசாசின் உபதேசம்!! இந்த உபதேசம் தான் இன்று கிறிஸ்தவத்தில் நிறம்பியிருக்கிறது!! தேவனால் கூடாதாம் மனுஷனால் கூடுமாம்!! இது தான் அன்பு அவர்களின் சுவிசேஷம்!!

மத்தேயு 19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

லூக்கா 18:27 அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.


ஆனால் இந்த வசனங்களை எல்லாம் தூக்கி விழுங்கி விட்டு, தேவனால் கூடாது மனுஷரால் தான் கூடும் என்கிற போதனை பிசாசின் போதனையே!! இந்த போதனைகளுக்கு தான் இன்று அனைவரும் செவிமடுத்து வருகிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆம், தேவனால் நம்மை இரட்சிக்க முடியும்தான். ஆனால் அந்த இரட்சிப்புக்குக் குறுக்கே நிற்பது நமது அக்கிரமங்களே. நம்மிடம் அக்கிரம் இருக்கும்வரை தேவனால் நம்மை இரட்சிக்க முடியாதுதான்.//

சங்கீதம் 103:10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

சங்கீதம் 103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

எசேக்கியேல் 36:33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மேற்கூறிய பதிவுக்கு கோவை பெரியன்ஸ் தள நிர்வாகி பெரியன்ஸ், நான் கொடுத்துள்ள வசனங்களுக்கு பதிலோ விளக்கமோ சொல்லாமல், தனது வழக்கமான பாணியில், “சிறுபிள்ளைத்தனமானது, நாத்திகம், பிசாசின் உபதேசம்” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் தந்துள்ளார்.//

சிறுபிள்ளைத்தனமானது, நாத்திகம், பிசாசின் உபதேசம் போன்ற வார்த்தைகளுடன் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் சேர்த்து போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்!! இப்படி உங்கள் வாசகர்களுக்கு பாதி தகவலை கொடுத்து மீதியை மறைத்து வைப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்!! நீங்கள் தொடுப்பு கொடுத்திருந்தாலும் எத்துனை பேர் அதை சொடுக்கி இப்படி எழுதிய வார்த்தைகளுடன் தொடர்பான பதிவுகளை வாசித்திருப்பார்கள் என்பது தெரியாது!! ஆகவே குறைகளை மாத்திரம் எழுதாமல் அந்த பகுதி முழுவதையும் தந்து எழுதுங்கள்!!

மேலும் சிறுபிள்ளைத்தனமானது, நாத்திகம், பிசாசின் உபதேசம் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தைகள் இல்லை, அதை தவிற நீங்கள் எழுதியப்படி இவைகளை நான் வழக்கமாக உபயோகப்படுத்துகிறேன் என்று சொன்னதும் ஒரு பொய்!!

//எல்லோருக்கும் இரட்சிப்பு என உங்களுக்குத் தெரிந்த விஷயம், பவுலுக்குத் தெரியவில்லையோ?//

உங்கள் பாணியில் பதில் சொல்லுவதென்றால், இதை பவுலிடம் தான் கேட்க வேண்டும்!!

//அது யார் கெட்டுப்போகிறவர்கள்? அவர்களுக்கு இரட்சிப்பு கிடையாதா? “இரட்சிக்கப்படுகிற நமக்கு” எனப் பவுல் பிரித்துப்பேசக் காரணமென்ன?//

கெட்டுப்போகிறவர்களுக்கு இரட்சிப்பு இல்லை என்று நீங்களாகவே அர்த்தம் கொண்டீர்களென்றால் நான் பொறுப்பல்ல!! ஆனால் வசனம் சொல்லுவது,

I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் ஆனால் விசேஷமாக விசுவாசிகளின் இரட்சிப்பு இந்த பூமிக்குரியதாக இல்லாமல் கிறிஸ்துவின் சாயலுக்குரியதாக இருக்கும்!!

//அதான் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு தானே? பின்னர் ஏன் சிலரை மட்டும் இரட்சிக்கும்படிக்கு எனப் பவுல் சொல்கிறார்?//

அய்யா, பவுல் போதிக்கிறது பரலோக ஸ்டாண்டர்ட், அதான் சிலரை மட்டும் என்கிறார்!! ஏனென்றால் இதே பவுல் தான் இப்படியும் எழுதியிருக்கிறார்,

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

//சரி, அவற்றை விடுங்கள். பினவரும் வசனங்கள் எதைப் போதிக்கின்றன?//

ஏன் அவற்றை விட வேண்டும்??

//பவுலின் பிரசங்கத்தைக் கைக்கொண்டால்தான் இரட்சிப்பு என இவ்வசனம் போதிக்கிறதா? அல்லது வேறுவிதமாகப் போதிக்கிறதா?
பவுலின் பிரசங்கத்தைக் கைக்கொள்ளாவிடில் நம் விசுவாசம் விருதாவாகிப் (வீணாகிப்) போவதைப் போல, இயேசுவின் இரத்தமும் வீணாகிப் போகுமா?
வழ வழா, கொழ கொழா விமர்சனம் இல்லாமல் நேரடியான பதிலைக் கூறவும்.//

பவுலின் பிரசங்கம் என்ன என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு பிறகு கேள்வி கேட்கலாம்!!

//கெட்டுப்போகிறவர்கள், இரட்சிக்கப்படுகிறவர்கள் என 2 பிரிவு உண்டா? எல்லோருக்கும் இரட்சிப்பு என்றல்லவா நீங்கள் கூறுகிறீர்கள்?//

2 பிரிவுகள் உண்டு, ஆனால் பொதுவாக கிறிஸ்தவமண்டலம் நினைப்பது போல் ஒரு பிரிவு பரலோகத்திற்கும், ஒரு பிரிவு நரகத்திற்கு போகும் என்று இல்லாமல், இரண்டு பிரிவும் இரட்சிக்கப்படும்!! ஒரு பிரிவு பரலோகம் மற்றோரு பிரிவு இந்த பூமியில்!! இது தான் வித்தியாசம்!! எல்லாரும் இரட்சிக்கப்படுவது தேவனின் சித்தமாக இருக்கிறது என்று எழுதிய பவுல் ஒரு பிரிவு இரட்சிக்கப்படாது என்கிற அர்த்தத்தில் எழுதவில்லை, மாறாக அப்படி நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்!!

நீங்கள் உங்களை அறியாமலே கிறிஸ்துவின் ஈடுபலியை நக்கல் செய்கிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் அன்பு அவர்களே!! உங்கள் கேள்விகள் எனக்கு எந்தவிதத்திலும் நஷ்ட்டத்தை உண்டு பண்ணாது, ஆனால் நிச்சயமாக உங்களின் விசுவாசத்தை பிரதிபலிக்கும்!! நீங்கள் ஏதோ கேள்வி கேட்டு மடக்குவது போல் நினைத்து கிறிஸ்துவின் ஈடுபலியை நைய்யாண்டி செய்கிறீர்கள்!!

இத்துனை கேள்வி கேட்க்கும் நீங்கள் நான் கேட்டப்படி "இயேசு கிறிஸ்துவின் ஈடுபலி எல்லாரையும் இரட்சிக்காது" என்று ஒரு முறை சொல்லி விட்டு போக வேண்டியது தானே!! இத்துனை வசனங்களை கொடுத்து அதன் முடிவில் உங்கள் கேள்வியும் அதையே தான் சொல்லுகிறது!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

எல்லா மனுஷரும் என்றால் எல்லா மனுஷரும் தான்!! தேவனின் சித்தம் நிறைவேறுமா மாட்டாதா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு இல்லை!! அவரின் சித்தம் நிச்சயம் நிறைவேறும்!! நிறைவேறாது என்று நீங்கள் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மூல பாஷை அகராதியில் ஒரு வார்த்தை FIGURATIVE என்று இருப்பதை நீங்கள் இது வரை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்!

அன்புள்ளவன் தான் தேவனை அறிய முடியும்!! மனசெல்லாம் அடுத்தவர்கள் அழிவார்கள் என்கிற சிந்தையில் இருப்பவர்களுக்கு அழிவு தான் தெரியும்!! நாங்கள் எங்கள் தேவனை அன்புள்ளவராக பார்க்கிறோம் ஆகவே மூல பாஷை அகராதியில் இருக்கும் FIGURATIVEஆக தான் அர்த்தக் கொள்கிறோம்!!

இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் இருக்கும் ஒரு பெரிய மேட்டிமையே என்னவென்றால், "நான்" ஏற்றுக்கொண்டிருக்கிறேன், "நான்" போதிக்கிறேன், "நான்" கிரியை செய்கிறேன், "நான்" விசுவசிக்கிறேன் ஆகவே "நான்" இரட்சிக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது!! ஆனால் அவனோ "நான்" போதித்தும் ஏற்றுக்கொள்வதில்லை, அவன் அன்பின் கிரியை நடத்தலாம் ஆனாலும் என் போதனைகளின்படி செய்கிறதில்லை, என் சபைக்கு வருவதில்லை ஆகவே அவன் "அழிந்து" போவான்!!

ஆனால் நாங்களோ, தேவன் அன்புள்ளவராக இருக்கிறார், அவரே சிலருக்கு விசுவாசத்தை தருகிறார், அவரே சிலரை முன்குறித்து நடத்துகிறார் என்பதை வசனம் சொல்லியப்படி நம்புகிறோம்!! எங்களுக்கு எங்கள் கிரியை மேல் விசுவாசம் இல்லை, ஏனென்றால் நாங்கள் செய்யும் கிரியையே தேவன் கொடுத்தது தான், அதை கொண்டு நாங்கள் மேன்மை பாராட்டுவதில்லை!! நாங்கள் யாருக்கும் இன்றைய கிறிஸ்தவ சபைகள் போதிப்பது போல் போதிப்பது கிடையாது, மாறாக தெரிந்த சத்தியத்தை பகிர்ந்துக்கொள்கிறோம்!! ஆகையால் எல்லாமே தேவனின் செயல்பாடாக இருப்பதினால், அவராலே எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்பது எனது நியாயமான நம்பிக்கை!! எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனின் சித்தமும், அதுவே எங்கள் நம்பிக்கையும்!!

//(பெரியன்ஸ்-ன் புரிந்துகொள்தலின்படி இவ்வசனம் கூறுகிற இரட்சிப்பு என்பது பரலோக வாழ்வைக் குறிப்பதாக வைத்துக்கொண்டாலும், அதற்காக ஏன் பயமும், நடுக்கமும்? பெரியன்ஸ்-ன் புரிந்துகொள்தலின்படி, இவர்கள் பரலோக வாழ்வை இழந்தாலும் பூமியில் நித்திய ஜீவன் கிடைக்குமே!! பின் ஏன் பயமும் நடுக்கமும் கொள்ளவேண்டும்? எல்லாருக்கும் நித்திய ஜீவன் உறுதி எனும்போது பயமோ நடுக்கமோ தேவையில்லையே!)//

பயமும் நடுக்கமும் இரட்சிப்பை தருகிற தேவனுக்கு முன்பாக இருக்க தானே வேண்டும்!! தோல் மேல் கைய்யை போட்டு தேவனோடு பேசிவிட்டு வருகிற‌ நவீன ஊழியக்காரர்கள் இருக்கலாம், ஏனென்றால் இரட்சிப்பை தருகிற தேவனை குறித்தான பயமும் நடுக்கமும் அவர்களிடம் இல்லை!! வசனத்தில் சொல்லப்பட்ட பயமும் நடுக்கமும் அன்பு அவர்களின் புரிந்துக்கொள்தலின்படி "அழிவை" குறித்தான பயம் போல்!!

இத்துனை பாவிகளாக இருந்து நம்மை இரட்சிக்கும் படியாக தன் குமாரனை அனுப்பிய தேவனை கண்டு அந்த இரட்சிப்பை தருபவரை கண்டு பயத்துடன் நடுக்கத்துடன் இருப்பதில் என்ன தவறு!!

சங்கீதம் 2:11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

//(இன்னுமொரு முக்கியமான விஷயம்: பெரியன்ஸ்-ன் கொள்கைப்படி நடப்பதெல்லாம் தேவசித்தம் எனும்போது, நடக்கப்போகிற ஒன்றை நினைத்து இவர்கள் ஏன் பயமும் நடுக்கமும் கொள்ள வேண்டும்? மாத்திரமல்ல, இரட்சிப்பு நிறைவேற இவர்கள் ஏன் பிரயாசப்படவேண்டும்? இவர்களின் பிரயாசம் தேவசித்தத்தையும் மிஞ்சிவிடுமா? தேவசித்தத்தைவிட இவர்களின் பிரயாசம் வல்லமையானதா?)//

அய்யா தேவ சித்தம் நடக்காது என்கிற உங்கள் கொள்கை தான் வேதத்திற்கு புறம்பான விஷயம், நான் நம்பும், போதிக்கும் தேவ சித்தம் வேதத்தில் உள்ளது தான்!! மனுஷருக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனின் சித்தத்தை மீண்டும் மீண்டும் அவமாக்குகிறீர்கள்!! பயமும் நடுக்கமும் நடக்கயிருக்கும் காரியத்திற்காக அல்ல, மாறாக பயமும் நடுக்கமும் தேவனின் இரக்கத்திற்காக, இரட்சிப்பு என்கிற இர‌க்கத்திற்காக தான்!! நீங்கள் புரிந்துக்கொண்டிருக்கும் "அழிவிற்கான" பயமும் நடுக்கமும் இல்லை அது!! பிரயாசம் என்பதே தேவ கிருபை தான் என்பது பல முறை வசனத்துடன் சொல்லியிருக்கிறேன்!! தேவ சித்தத்தை விட மனிதர்களின் கிரியை வல்லமையுள்ளது என்பது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்!!

//அதனாலென்ன? பெரியன்ஸ்-ன் “சுவிசேஷப்படி” எனக்கும் நித்திய ஜீவன் உண்டு எனும் உத்தரவாதம் இருக்கும்போது எனக்கென்ன நஷ்டம்? இதற்காக ஏன் பெரியன்ஸ் இத்தனை வருத்தப்படுகிறார்? ஒருவேளை அவரது “சுவிசேஷத்தில்” அவருக்கு முழுநம்பிக்கை இல்லையோ?//

வேதத்தை அறியாதவன் இதை சொல்லியிருந்தால் அது அறியாமை, ஆனால் வேதம் தெரியும் என்கிற நபர் சொல்லுவதால் சற்று சஞ்சலம் தான்!! என் சுவிசேஷம் என்று ஒன்றும் இல்லை, வேதத்தில் உள்ள சுவிசேஷமே, எல்லா மனுஷர்களும் இரட்சிப்பு அடைவது தேவனின் சித்தமாக இருப்பது தான்!! உங்களுக்கு அதற்கான சாட்சி தேவன் உங்களுக்கு நியமித்த நேரத்தில் நிச்சயமாக விளங்கும், அது வரையில் நீங்கள் இப்படி பேசுவதில் தவறு ஒன்றும் இல்லை!!

//பெரியன்ஸ்-ன் லாப/நஷ்டத்துக்காக நான் பதிவுகளைத் தரவில்லை. அவரது “வினோதமான சுவிசேஷத்தால்” அப்பாவிகள் வஞ்சிக்கப்படாதிருக்கவே எனது பதிவுகள்.//

கிரியைகள் எல்லாம் செய்யனும் தான், ஆனால் எல்லாவற்றையும் விற்று விட்டு வர முடியாது, எனக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுப்பது என்றால் அதற்கு வினோதமான அர்த்தங்கள் கொடுக்கும் உங்களின் சுவிசேஷத்தை விட, அரை குறையான உங்கள் "வினோதமான சுவிசேஷத்தை" விட, எல்லாருக்கும் இரட்சிப்பை தரும் தேவனின் சித்தத்தை கொண்ட சுவிசேஷம் யாரையும் வஞ்சிக்காது!! தேவனின் அன்பை சொல்லுவது கிரியையை நம்பும் உங்களை போன்றோருக்கு வஞ்சகமாக இருக்கலாம்!!

//ஆம், நிச்சயமாக பெரியன்ஸ்-ஐ மடக்கி அவரது வினோதமான சுவிசேஷம் தவறு என நிரூபித்து, அப்பாவிகள் தப்புவிக்கப்படவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் கிறிஸ்துவின் ஈடுபலி நையாண்டி செய்யப்படுவதாக பெரியன்ஸ் கருதினால், அதற்காக ஏன் இத்தனை பாரப்படுகிறார்? அதான், எனக்கும் நித்திய ஜீவன் உண்டு என்ற உத்தரவாதம் உள்ளதே! பின் ஏன் பெரியன்ஸ்-க்கு இத்தனை கவலை, பாரம்?//

கிறிஸ்துவின் ஈடுபலியை காட்டிலும் மனுஷரின் அரைகுறையான கிரியைகளை போதிக்கும் அன்பு அவர்களே நீங்கள் என் சுவிசேஷத்தை அல்ல, மாறாக தேவனின் சித்தமான எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை அவமாக்குகிறீர்கள்!! உங்கள் கிரியை என்று எல்லாவற்றையும் விற்று, விட்டு வாருங்கள் என்கிற கிரியையை உங்களால் போதிக்க முடியாது!! யார் கிரியையின் பெயரில் வஞ்சகம் செய்கிறார்கள்!! நானா நீங்களா?? கிரியை அரைகுறையாக போதிக்கும் நீங்கள் சொல்லுவது அரைகுறை சுவிசேஷம் தான்!! தேவனால் கூடாது ஆனால் மனிதர்களின் கிரியையால் கூடும் என்கிற உங்களின் போதனை வஞ்சகம் தான்!! எனக்கு ஒன்றும் உங்களை குறித்தான கவலையில்லை, ஆனால் இப்ப இந்த பதிவில் நீங்கள் எழுப்பியிருக்கும் தூஷனங்களுக்கு நானும் விஷயங்களை எழுதி நீங்கள் செய்யும் வஞ்சகங்களை வெளிப்படுத்த கடமைப்பட்டவனாக இருக்கிறேன்!!

எல்லாவற்றிலும் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லி விட்டு "எல்லாவற்றையும் விற்று தரித்திர்களுக்கு கொடு, எல்லாவற்றையும் விட்டு என்னை பின் தொடர்" என்பதை எல்லாம் நீங்கள் போதிக்க மாட்டீர்கள், ஏனென்றால் இவற்றை உங்களால் பின்பற்ற முடியாது!! உங்கள் பார்வையில் இவைகள் கிரியைகள் அல்ல, அல்லது உங்களின் புரிந்துக்கொள்ளுதல் இந்த இரண்டிற்கு மட்டும் வித்தியாசமாக அர்த்தங்கள் இருக்கும்!!

அப்பவிகள் என்று பிறரை சொல்லி நீங்கள் உங்களையே உங்கள் போதனைகளால் உயர்த்துகிறீர்கள்!! உங்களால் இரட்சிக்க முடியும் ஆனால் தேவனால் முடியாது என்பதைவிட பெரிய ஒரு தேவ தூஷனம் இருக்காது!! வாசிக்கும் வசனங்களை கொண்டு நீங்கள் தேவனுக்கு மகிமை செலுத்தாமல் மனுஷனின் அல்ப கிரியைகளை மய்யப்படுத்தி அந்த வசனங்களை கொண்டு இடறருகிறீர்கள்!! உங்கள் பார்வையில் கிறிஸ்துவின் ஈடுபலி குறைவாகவே இருந்துவிட்டு போகட்டும்!! நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்!!

//கிறிஸ்துவின்மீது மெய்யாகவே பெரியன்ஸ் அன்பு கூர்ந்தால், அவர் முதலாவது கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளட்டும்; அப்படியே கிறிஸ்துவின்மீது அன்பு கூருவதாகச் சொல்வோரிடம், கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி போதிக்கட்டும்.//

தேவனின் அன்பை போதிப்பதினால் தான் அவர் எல்லாரையும் இரட்சிப்பார் என்பதை சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!! ஏனென்றால் எங்களுக்குள் இருப்பதும் அதே தேவ அன்பு தான்!! கிறிஸ்துவின் கற்பனைகளை பின்பற்ற கிருபை தேவை, ஆகவே நாங்கள் அந்த கிருபையை மேன்மைப்பாராட்டுகிறோமே தவிர, அந்த கிருபையை கொண்டு செய்யும் கிரியைகளை அல்ல!! எங்களுக்கு உண்டான கிரியை நீங்கள் பார்த்ததும் இல்லை, அதை குறித்து நீங்கள் எழுத தகுதியில்லாதவராகவும் இருக்கிறீர்கள்!! அதை விமர்சிக்க உங்களுக்கு அதிகாரமும் இல்லை!! நாங்கள் செய்யும் அன்பின் கிரியையோ, நிதியின் கிரியையோ விளம்பரத்துடன் செய்யவேன்டிய அவசியமும் இல்லை!! நாங்கள் செய்யும் கிரியைகளை பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதா பார்த்துக்கொண்டிருக்கிறார்!! அதை டமாரம் அடித்து பிட் நோட்டிஸ் அடித்து புத்தகங்களில் சாட்சியாக வெளியிட்டு மனிதர்களின் பாராட்டை பெற நாங்கள் ஏங்கி நிற்கவில்லை!! நாங்கள் பின்பற்றும் கற்பனைகளை அல்ல, மாறாக அந்த பின்பற்றுதலுக்கு எங்களை நடத்தும் தேவ கிருபையை தான் போதிக்கிறோம்!!

யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

வெளிப்படையாக கிரியை செய்வோர் அநேகர் இருக்கிறார்கள், தான் செய்யும் கிரியகளை உலகத்துக்கு காண்பிக்கும் அநேகர் இருக்கிறார்கள், எங்களுக்கு அது தேவையில்லை, நாங்கள் அதை போதிப்பதும் இல்லை!! எங்கள் கிரியை தேவனுக்குள்ளாய் செய்யப்படுகிறது என்று தேவனுக்கு தெரியும்!! மனுஷர்கள் செய்யும் கிரியை போதிப்பதைவிட தேவனின் கிருபையை சுவிசேஷமாக போதிப்பது எங்களுக்கு பிரியமாக இருக்கிறது!! மனுஷனின் அன்பை அல்ல, தேவனின் அன்பையே நாங்கள் போதிக்கிறோம்!!

II கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இந்த 2 அகராதியிலும் of எனும் ஆங்கில வார்த்தை காணப்படவில்லை. ஆனால் 29-ம் வசனத்தைப் பொறுத்தவரை NIV-யிலும் சரி, மற்ற பல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் சரி, of எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகராதியில் இல்லாத ஒரு வார்த்தையை எப்படி பல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கான விளக்கத்தைத் தரும்படி சகோ.பெரியன்ஸ்-இடம் வேண்டுகிறேன்.//

OF is a preposition. Preposition means A word or phrase placed typically before a substantive and indicating the relation of that substantive to a verb, an adjective, or another substantive. Usage of OF will not necessary bring a change to the meaning of Sentence. Preposition is a grammatical necessity.

REQUIRE is a verb. Verb means a. The part of speech that expresses existence, action, or occurrence in most languages.
b. Any of the words belonging to this part of speech. Adding a verb to a sentence will necessarily bring a Change in the meaning of that sentence.

John 6:28 Then they asked him, "What must we do to do the works God requires?" NIV
and in original without adding the verb REQUIRES

Then said they unto him What shall we do that we might work the works of God

Works of God is naturally different in meaning than WORKS GOD "REQUIRES"!! And even if the word Ho which is translated as OF is removed it renders a meaning that WORKS THE GOD!! How can be NIV correct if you put a word "REQUIRE" out of context.

Secondly I am not debating it on the basis of NIV alone.

Please understand the difference between OF and REQUIRES!! May be REQUIRES is required to substantiate your teachings but it is not REQUIRED in the verse and just because NIV uses it I need not consider it to be correct!!

//ஒருவேளை “நித்திய ஜீவன் தளம் வசனத்தை மாற்றவில்லை, மொழிபெயர்ப்புத் தவறால்தான் இப்பிரச்சனை” என்பதை அவர் உணர்ந்திருந்தால் “வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு” எனும் அபாண்டமான குற்றச்சாட்டு அடங்கிய தலைப்பை அவர் மாற்றவேண்டுமல்லவா? ஆனால் இதைச் செய்யாமல் அவர் வாளாவிருப்பதேனோ?//

ஏன், வேதத்தை நீங்கள் ஆறாய்வதில்லையா!! மூல பாஷைகளை பார்க்க தானே செய்கிறீர்கள்!! REQUIRES என்கிற வார்த்தை வசனத்தில் இல்லை என்று எடுத்து எழுதியும், NIVயில் இருப்பதை நீங்கள் சுட்டி காட்டுவது சரியா!!?? மேலும் இந்த ஒரு வசனத்திற்காக மாத்திரம் அந்த தலைப்பை வைக்கவில்லை!! விவாதத்தை வாசிக்க தானே செய்கிறீர்கள்!!

If you can't differentiate a Preposition from a VERB, I am not here to take English Grammar classes!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அருமையான பதில் சகோதரரே, பாராட்டுக்கள். இத்தனை நிதானமாக பதிலளிக்க உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

தேவனால் மனிதனை இரட்சிக்கவே முடியாது என்ற அபத்தமான ஒரு சுவிசேஷத்தை பரப்பிவரும் அன்பு 'தான்' என்ற அகம்பாவத்தில் கிரியைகளை மேன்மைப்படுத்தியும், கிருபையை உதாசீனப்படுத்தியும் பதித்துவருவது வருத்தத்துக்குரியது. 

 

கிருபையைப் பெறுவதற்கு 'தகுதி' தேவையில்லை என்பது இவரைப் போன்றோருக்கு ஜீரணிக்க முடியாத விஷயம். 

 

எபிரெயர் 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

எபிரெயர் 10:17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

 

அவர் நினைப்பதேயில்லை என்று சொன்னால் இவர்கள் மறப்பதே இல்லை, மன்னிப்பதே இல்லை என்று வாசிக்கிறார்கள்.

தேவனிடத்தில் பட்ச பாதம் இல்லை; ஹிட்லருக்கும் அதேகிருபை, காந்திஜிக்கும் அதே கிருபைதான். என்ன ஹிட்லர் அதிக மேன்மை பாராட்டுவான்.

 

அதென்ன "நடுக்கத்தில்" களிகூறுவது? தேவனுடைய இத்தகைய மேன்மையான அன்பின் நிமித்தம் உணரப்படும் உணர்வுகளை ஏதோ மரணதண்டனையாகவே கொடுத்து ஜனங்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அன்பில்லா தேவனுக்கு முன்பாக அழியப்போவதை நினைத்து பயந்து நடுங்கும் உணர்வாக அன்பு அவர்கள் பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிரியைகளிலும் எல்லா கிரியைகளையும் செய்ய மாட்டோம்!!

எல்லாவற்றையும் விற்று தரித்திரனுக்கு கொடுக்க முடியாது!!
எல்லாவற்றையும் விட்டு விட்டு பின் செல்ல முடியாது!!

நன்மை செய், பொய் பேசாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே (இச்சையுடன் பார்க்காதே), முகம் கோனாமல் கடன் கொடு, தன்னை நேசிப்பது போன்றே பிறனையும் நேசி, தர்மம் செய் போன்றவைகள் தான் கிரியைகள் என்றால் இதை நாங்கள் செய்கிறோமா இல்லையா என்பதை தேவன் அறிவார், ஏனென்றால் நாங்கள் கிறிஸ்து சொன்ன இந்த கற்பனையையும் பின்பற்றுகிறோம்;

மத்தேயு 6:1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

ஆனால் இதை விட மேலானது தேவனின் கிருபை!! அந்த அன்பிற்கு ஈடாக மனிதனின் எந்த கிரியையும் கிடையாது!! தன் ஒரே பேரான மகனை "எல்லோரின்" மீடுப்புக்காகவும் பிதா கொடுத்ததை காட்டிலும் ஒரு பெரிய அன்பு இருக்க முடியாது!! தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து "எல்லாரையும்" மீட்டுக்கொள்ளும்படியாக தன் ஜீவனை கொடுத்த கிறிஸ்து இயேசுவின் கீழ்படிதலை காட்டிலும் கீழ்ப்படிதல் இருக்க முடியாது!!

தன் சத்துருக்களை ஸநேகிக்க முடியாமா? அவர்களுக்காக ஜெபிக்க முடியுமா? முடியும் என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை அறிந்தவர்கள் தான் என்று சொல்ல முடியாது!! இருக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுவார்களா என்பது சந்தேகமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இதற்கும் ஒரு சப்பைக்கட்டு பதிலைத்தான் பெரியன்ஸ் சொல்வார் என எதிர்பார்க்கிறேன். தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இல்லை.//

சிறுப்பிள்ளைத்தனத்தை குறித்து அன்று எழுதிவிட்டு இப்ப சப்பைக்கட்டான பதிலை தான் எழுதுவார் என்றும் எழுதுவதில் என்ன நியாயம்!! ஒன்று நீங்கள் உங்கள் நீதியை சரியாக பின்பற்றி பிறகு என்னை கேள்வி கேட்கனும்!! அதிலும் இல்லாமல் இதிலும் இல்லாமல் என்று என்னிடம் ஏன் கேள்வி கேட்க்கிறீர்கள்!!

the work of God - தேவனின் கிரியை

the work for God - தேவனுக்கான கிரியை

தேவனுக்காக கிரியை செய்யும் அளவிற்கு மனிதனை தேவன் எதிர்ப்பார்க்கவில்லை!! தேவனின் கிரியையினால் தான் மனிதன் வாழ்கிறான்!!

//Usage of OF will not necessary bring a change to the meaning of Sentence. Preposition is a grammatical necessity.//
என்கிற என் கருத்தை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்!! அர்த்தம் மாறுகிறது, ஆனால் பொருத்தமான Preposition போட வேண்டுமே!! அதை விட்டு ஒரு Verbஐ (Requires) போட்டீர்களென்றால் தேவனுக்கு தேவையான கிரியை என்று அர்த்தம் மாறி விடுகிறது!! அதே போல் தேவனுக்கான கிரியை என்றால் ஏதோ தேவனுக்கு உதவும் கிரியை, தேவனால் செய்ய முடியாமல் அதற்கு மனிதன் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்கிற அர்த்தம் அல்லவா வருகிறது!!

John 6:28 Then they asked him, “What must we do to do the works God requires?” (NIV)

John 6:29 Jesus answered, “The work of God is this: to believe in the one he has sent.” (NIV)

If the word requires is translated in verse 28, why it is not translated in verse 29 as such??

Is this (Vs 28) then a fair translation?? Please answer from the bottom of your heart!! Why NIV failed to translate using the same verb in the next verse?? They might have felt it illogical to translate as such using the word REQUIRES and that is why the proper translation "WORK OF GOD"!!

மனிதர்கள் தேவனின் தேவைக்காக கிரியை செய்கிறார்கள் என்பது ஒரு அபத்தமான புரிந்துக்கொள்ளுதலாகும்!! விசுவாசம் மனிதனின் முயற்சி அல்லது கிரியையினால் வருவது இல்லை, ஏனென்றால் விசுவாசம் ஒரு ஈவு!! அதை தேவன் தான் கொடுக்க முடியும்!! ஆகவே இது தேவனின் கிரியையாக இருக்கிறது என்பது சரியான மொழிப்பெயர்ப்பு தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

// “the work of God” எனும் ஆங்கில சொற்றொடருக்கு பெரியன்ஸ் தனது கொள்கையின் அடிப்படையில் “தேவனின் கிரியை”, அதாவது தேவன் செய்கிற கிரியை எனும் அர்த்தத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் பல வேதாகம விமர்சகர்கள் இப்படியாக அர்த்தம் கொடுத்துள்ளனர்.//

அன்பு கிரியையின் போதனையை நிலைநாட்ட சில வசனங்களை எழுதி அதற்கு யாரோ அர்த்தம் தந்ததை அப்படியே போட்டு அது சரி என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்!! WORKS OF GOD என்கிற பதத்திற்கு இவர் அங்கிகரிக்கும் அர்த்தம் தேவன் விரும்பும் கிரியையாம்!! இதற்கு மேல் இதை குறித்து எழுதுவதற்கு ஒன்றும் இல்லை!!

ஏன், இதே வேதாகம விமர்சகர்கள் தான் தேவன் மூன்றாக இருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே!! WORKS OF GOD என்றால் தேவனின் கிரியை என்று அர்த்தம் கொள்ள பெரேயன்ஸின் கொள்கை தேவையில்லை, எந்த கொள்கைக்காரனும் அதை தேவனின் கிரியை என்றே அர்த்தம் கொள்வான்!! இந்த இடத்தில் அன்பு அவர்களின் மனிதர்களின் கிரியை அடிப்படையில் WORKS OF GOD என்றால் தேவன் விரும்பும் கிரியை என்று அர்த்தம் கொள்வது சரி என்று சொல்லுகிறார்!! அதே விமர்சகர்கள் சொல்லும் பிற அர்த்தத்தையும் அவர் விரைவில் சேர்த்துக்கொள்வார் என்றே நம்புகிறேன்!! எடுத்துக்காட்டு. திரித்துவம்!!

There is no word used in this verse in original text that is translated as "APPROVE" or "REQUIRES". This shows that Anbu is no mood to accept what is what as such!! The works of God will mean the WORKS DONE BY GOD and NOT (R) NOT that THINGS (WORKS) THAT GOD WILL APPROVE, that is WORKS DONE BY MEN THAT GOD WILL APPROVE!! How silly to accept this meaning!!

Wesley's Notes

6:28 The works of God - Works pleasing to God.

Any sane man will not approve this meaning!! The works of God can mean THE WORKS DONE BY GOD and not THE WORKS PLEASING TO GOD!!

//ஆனால் பெரியன்ஸோ, நாம் தேவனை விசுவாசிப்பது தேவனின் கிரியையாக (செயலாக) இருக்கிறது என்கிறார்; அதாவது நமது செயலில் எதுவுமில்லை, எல்லாம் தேவனின் செயல்தான் என்கிறார்.//

1 கொரிந்தியர் 12:6. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

அன்பு அவர்களின் போதனை என்னவென்றால், கிரியைகள் செய்து தேவனை பிரியப்படுத்துவது, அல்லது தேவன் விரும்பு செயலை செய்வது தான் WORK OF GOD!!

வசனம் சொல்லுகிறது இதை நடப்பிக்கிறவர் தேவனே!! ஆனால் அன்பு அவர்கள் சில விமர்சகர்கள் எழுதியது சரி என்று அர்த்தம் காட்டுகிறார்!!

நமக்குள் நடத்துகிறவர் தேவன் தான் என்று பெரேயன்ஸ் அல்ல, பவுல் தான் சொல்லுகிறார்!! உங்களுக்கு வேண்டுமென்றால் பவுல் ஊருகாய் போல் வேண்டியதற்கு தொட்டு உபயோகப்படுத்தும் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் வேதத்தில் எழுதிய பிரதான அப்போஸ்தலனின் எழுத்து எனக்கு அதே முக்கியத்துவத்தை தான் தருகிறது!!

யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

பவுல் எழுதிய வார்த்தைகள் மூலமாக நான் கிறிஸ்துவை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்து இயேசு எனக்காக வேண்டியிருக்கிறார்!! ஆகவே பவுலின் எழுத்து எனக்கு அதே அளவிற்கு முக்கியமாக தான் இருக்கிறது!!!




1 கொரிந்தியர் 12:9. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,..........................

ஆக தேவனே சிலருக்கு தரும் ஈவான விசுவாசத்தை அன்பு அவர்களின் கோட்பாட்டிற்கு சாதகமாக அர்த்தம் கொடுக்கும் விமர்சகர்கள் இப்போதைக்கு மேலானவர்களே!!

தேவனின் கிரியை என்பதை தேவன் விரும்பும் கிரியை என்று திரித்து அர்த்தம் கொடுப்பது எப்படி சரியாகிறது!!?? சரியாக தான் இருக்கும், ஏனென்றால் அன்பு அவர்களின் போதனை அது தானே!!

Gill's Exposition of the Entire Bible
what shall we do that we might work the works of God? Such as are agreeable to his will, are acceptable to him, and well pleasing in his sight:

Gill's Exposition of the Entire Bible teaches that WORKS OF GOD means WORKS AGREEABLE TO HIS WILL, ACCEPTABLE TO HIM, WELL PLEASING IN HIS SIGHT!! Wow, what a meaning!! And Anbu out of his Theology, approves all these people who are nothing but Trinitarians!!

இதை அப்படியே மொழிப்பெயர்த்தாலும், தேவனின் கிரியைகளை செய்ய நாங்கள் என்ன கிரிய செய்ய வேண்டும், என்று தான் அர்த்தம் வருமே தவிர தேவன் "விரும்பும்" கிரியை செய்ய நாம் என்ன கிரியை செய்ய வேண்டும் என்று எப்படி வரும்!! விரும்பும் என்கிற வார்த்தையை லாவகமாக உட்புகுத்தி அதற்கு வசனத்தின் அர்த்தத்தை மாற்றுகிறவர்களுக்கு அன்பு துனை போகிறார், அதை சரி என்றும் அங்கிகரிக்கிறார்!! தேவனின் கிரியை என்பதை தேவன் விரும்பும் கிரியை என்று அன்பு அவர்கள் அர்த்தம் கொண்டு விமர்சகர்கள் எழுதியது சரி தான் என்று அன்பு அவர்கள் வாதாடுகிறார் என்றால் அவரும் கிறிஸ்தவ மண்டலத்தில் ஒரு அங்கம் தான் என்று கோவை பெரேயன்ஸ் தளம் சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை!!

தொடர்ந்து இந்த விமர்சகர்கள் எழுதும் அனைத்தையும் இவர் எடுத்து சொன்னாலும் ஆச்சரியம் இல்லை!!

எபிரெயர் 12:1 ................................. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

எங்களை பொறுத்த வரையில் விசுவாசம் தேவனின் ஈவு தான்!! ஆனால் அன்பு அவர்களை பொறுத்தவரையில் விசுவாசம் என்பது மனிதனின் முயற்சியில் வரும் கிரியை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மொத்தத்தில் பெரியன்ஸ்-க்குத் தெரிந்த விஷயங்கள் (எல்லாம் தேவசித்தம், எல்லாம் தேவனின் கிரியை, எல்லாருக்கும் நித்திய ஜீவன்) அன்று இயேசுவுக்கும் அப்போஸ்தலருக்கும் தெரிந்திருந்தால், அவர்கள் இத்தனை சிரமப்பட்டு ஊழியம் செய்திருக்க வேண்டியதில்லை; இத்தனை போதனைகளைப் போதித்திருக்க வேண்டியதில்லை.//

தன் முயற்சியால் விசுவாசத்தை வளர்த்து அதை போதிக்கும் அன்பு அவர்களே, அருளப்பட்டவர்களே விசுவாசிக்க முடியும் என்பதை கிறிஸ்து சீஷர்களுக்கு சொன்னது எல்லாம் சும்மா..அப்படி தானே!!

மத்தேயு 13:11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

அன்பு அவர்களின் போதனையின் படி அருளப்படவில்லை என்றால் என்ன, அது என் முயற்சியால் ஆகும் என்பது தானே!! அத்துனை போதித்தும், அத்துனை சிரமப்பட்டு ஊழியம் செய்தும் சுமார் 500 பேரை மாத்திரமே சீஷர்களாக காண முடிகிறது, ஏனென்றால் அன்புக்கு தெரிந்தது கிறிஸ்துவிற்கு தெரியவில்லை போல்!! அதாவது பிதா இழுத்துக்கொள்ளாமலே ஒருவன் கிறிஸ்துவிடம் போய்விடலாம் என்று கிறிஸ்துவிற்கு தெரியாத ஒரு இரகசியத்தை அன்பு அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார் போல்!! இன்னும் இது போன்ற எத்துனை இரகசியங்களை தெரிந்திருக்கிறோ!!

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

கிறிஸ்து இன்றியே எல்லாவற்றையும் அன்பு அவர்கள் தன் சொந்த கிரியைகளை செய்கிற திறமை உள்ளவராக இருக்கிறார் போல், ஏனென்றால் கிறிஸ்துவுடன் இருந்தவர்களை பார்த்து கிறிஸ்து சொல்லுகிறார்,

யோவான் 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;

கிறிஸ்து என்ன என்னை தெரிந்துக்கொள்வது, என் கிரியைகளினால் நான் கிறிஸ்துவை தெரிந்துக்கொண்டேன் என்கிறார் அன்பு!!

தேவனின் சித்தமே எல்லாம் என்று சொல்லுவது அன்பு அவர்களுக்கு அத்துனை எரிச்சலாகவா இருக்கிறது!! அன்பு அவர்கள் தன் சொந்த முயற்சியில் தன் சித்தத்தினால் தான் கிறிஸ்துவை தெரிந்துக்கொண்டு இருக்கிறார்!! ஆகவே தான் எல்லாமே தேவனின் சித்தம் என்பதில் அவருக்கு உடன்பாடில்லாமல் இருக்கிறது போல்!!

யோவான் 12:32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

ஐய்யே, அவர் என்ன இழுக்கிறது, நான் என் கிரியைகளினாலே அவரிடம் சென்று விடுவேன்!! நீங்கள் உங்களை பலி செலுத்தியிருக்கலாம், ஆனால் நான் நம்பினால் தானே உங்களால் என்னை கட்டுப்படுத்த முடியும், நான் நம்பாமல் போனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லுகிறாரோ அன்பு அவர்கள்!!


அது எப்படிங்க அவர் இழுத்துக்கொள்ளுவேன் என்று சொல்ல முடியும்!! என் சித்தம் இல்லாமல் அவர் என்னை இழுத்துக்கொள்ளுவாரோ, என்கிறார் அன்பு!!

1 கொரிந்தியர் 1:26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

யார் அழைத்தாராம்? வசனம் தேவன் என்று சொன்னாலும், அன்பு அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது!! யார் தெரிந்துக்கொண்டாராம்? வசனம் தேவன் என்று சொல்லுகிறது, ஆனால் அன்பு அவர்கள் தன் கிரியைகளினால் தெரிந்துக்கொள்ளப்பட்டவராக இருக்கிறார் போல்!!

ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

தேவனின் தீர்மானமாக வசனம் சொன்னால் எனக்கு என்ன, நான் நினைக்காமல் போனால் தேவன் எப்படீங்க என்னை அழைக்க முடியும்!! அய்யா அவரின் தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களே தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள முடியும்!!

29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

யார் முன்னறிந்தார்? தேவனா? அது எப்படி என்று அன்பு கேட்கிறார்!! யார் முன்குறித்தார்? தேவனா? அது எப்படி அவரால் முடியும் என்கிறார் அன்பு அவர்கள்!!

30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

என்னங்க திரும்ப திரும்ப பவுல் இப்படி எழுதுவது சரியாவா இருக்கிறது!! தேவன் முன்குறித்தாராம், அழைக்கிறாராம், நீதிமான்களாக்குகிறாம்ல!! அது எப்படி, நானே கிரியை செய்யாமல் நீதிமானாவது!!

பிலிப்பியர் 2:13. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

அது எப்படிங்க நானே கிரியை செய்யாமல் தேவன் தன் சித்தத்தின்படி எனக்கு விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்க முடியும் என்று அன்பு அவர்கள் கேட்பது புரிகிறது!!

அவர் சிலரை தெரிந்துக்கொள்கிறார், சிலரை முன்குறிக்கிறார், சிலரை நீதிமான்களாக்குகிறார் என்றால் அநேகரை அவர் தெர்ந்துக்கொள்ளவில்லை என்பதை சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை!! சிலரை தெரிந்துக்கொள்ளுகிறார் என்றால் மற்றவர்களை கைவிட்டார் என்றும் அல்ல!! மற்ற அனைவரையும் தெரிந்துக்கொள்ளவே கிறிஸ்து சிலுவையில் மரித்தார்!!


//ஒருவனின் விசுவாசம் என்பது தேவனின் ஈவு; அப்படியானால் ஒருவனின் அவிசுவாசம் என்பது தேவனின் வெறுப்பா?//

விசுவாசம் தேவனின் ஈவு என்பதை நான் அல்ல, வசனம் சொல்லுவதை தான் எழுதியிருக்கிறேன்!! அவிசுவாசம் என்பது தேவனின் வெறுப்பு என்று நான் எழுதவும் இல்லை, அப்படி ஒரு வசனமும் இல்லை!!

1 கொரிந்தியர் 12:3. ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

தேவன் தன் சிந்தையான ஆவியை தராமல் இருந்தால் கிறிஸ்துவை கர்த்தர் என்று சொல்ல முடியாதாம், என்கிறார் பவுல்!! போகட்டும், அவருக்கு என்ன அவர் அப்படி தான் சொல்லுவார், நாங்க அப்படி சொல்ல மாட்டோம்ல என்கிறார் அன்பு!!

ஆக, எல்லாருக்கும் இரட்சிப்பு கிடையாது!! தேவனின் சித்தமா? அப்படினா....? அது எப்படிங்க, கிரியை செய்தால் நித்திய ஜீவன் என்பது தானே நியாயம்!! கிரியை செய்யாமலே அநியாயமாக கிறிஸ்து எல்லாருக்கும் நித்திய ஜீவனை கொடுத்தால் கிரியை செய்கிறவர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்!! அது எல்லாம் முடியாதுங்கோ, என்கிறார் அன்பு!!

மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

கிறிஸ்து எல்லாருக்கும் நித்திய ஜீவன் தருகிறார் என்றால் இவர்களுக்கு தாங்க முடியவில்லை!! வன்கண்ணர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard