யோவான் 6:29-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்துப்போட்டு, மனுஷன் செய்யவேண்டிய கிரியையை, தேவனின் கிரியையாகக் காட்டியுள்ளார். அவரது இம்முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பு, அதே NIV-ல்:
John 6:28 Then they asked him, "What must we do to do the works God requires?"
யோவான் 6:28-ல் “the works God requires” என மொழிபெயர்க்கப்பட்ட அதே கிரேக்க வார்த்தைகளான “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் வார்த்தைகள்தான், 6:29-ல் “The work of God” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அதாவது “ho(3588) ergon(2041) ho(3588) theos(2316)” எனும் கிரேக்க வார்த்தைகள் 28-ம் வசனத்தில் “the works God requires” என்றும், 29-ம் வசனத்தில் ”The work of God” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்விரு மொழிபெயர்ப்புகளில் “context”-க்கு பொருத்தமானதாக எது இருக்கும் எனப் பார்த்தால், “the works God requires” என்பதுதான் பொருத்தமானதாக இருக்குமென அறியலாம்.
மனிதனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் எனச் சொல்வதில்தான் அர்த்தம் இருக்குமேயொழிய, தேவனின் செயல் தேவனுக்கேற்றதாக இருக்கவேண்டும் என்பதில் என்ன அர்த்தம் இருக்கும்?
தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் வசனவிளக்கம் தர முயலுகிறார் என்பதற்கு, அவரது இவ்விளக்கம் ஆதாரமாயுள்ளது.
John 6:28 Greek Study Bible (Apostolic / Interlinear)
Does any one ELSE other than Br Anbu57 finds a "REQUIRES" here? or "the work God REQUIRES"!! But still he finds that REQUIRES is very well in context!! And inspite of his error, he is eager to make CAUTION me stating,
//ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்கது.//
நான் எந்த மொழிபெயர்ப்பையும் மறைக்கவில்லை, இது உங்களின் தேவை இல்லாதOut of contextகுற்றசாட்டு!! இந்த பதிவை காலையில் எனக்கு கொடுக்க நேரம் இல்லாததால் இப்பொழுது தருகிறேன், இதற்கு அவசியம் பதில் எழுதுங்கள்!!
REQUIRES என்கிற ஒரு பதமே இல்லை!! ஆனால் அன்புக்கு அது சரி என்று படுவதற்காக இல்லாததை இருக்கு என்று சொல்ல முடியுமா!! முடியாதே!! @@@ என்கிற வார்த்தை இல்லை என்றால் இல்லை தான்!! அன்பு கொடுக்கும் கிரியையின் போதனைக்கு அது ஒத்து போவதால், 29ம் வசனத்தில் இல்லாவிட்டாலும் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டுமாம்!! ஏன்!!??
ho(3588) Original Word: ὁ, ἡ, τό Part of Speech: Definite Article Transliteration: ho, hé, to Phonetic Spelling: (ho) Short Definition: the Definition: the, the definite article.
ergon(2041) Original Word: ἔργον, ου, τό Part of Speech: Noun, Neuter Transliteration: ergon Phonetic Spelling: (er'-gon) Short Definition: work, labor, action, deed Definition: work, task, employment; a deed, action; that which is wrought or made, a work.
ho(3588) Original Word: ὁ, ἡ, τό Part of Speech: Definite Article Transliteration: ho, hé, to Phonetic Spelling: (ho) Short Definition: the Definition: the, the definite article.
theos(2316) Original Word: θεός, οῦ, ὁ Part of Speech: Noun, Feminine; Noun, Masculine Transliteration: theos Phonetic Spelling: (theh'-os) Short Definition: God, a god Definition: (a) God, (b) a god, generally.
எனும் கிரேக்க வார்த்தைகள் 28-ம் வசனத்தில் “the works God requires” என்று அல்ல, மாறாக "the works the (of) God" என்றே உள்ளது!! NIVயில் REQUIRES என்று மொழிப்பெயர்த்ததை தன் வசதிக்காக சேர்த்துக்கொண்டு 29ம் வசனமும் அதையே தான் சொல்லுகிறது என்கிற ஒரு முடிவிற்கு வந்திருக்கிறார்!! இதுவே வசனத்தை புரட்டுவதாகும்!! அதாவது இல்லாத REQUIRES என்கிற வார்த்தையை வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டு அதை பல வர்ணங்களில் எழுதிவிட்டு, திசை திருப்புகிறார் அன்பு!! இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!! கிரேக்க மொழியிலிருந்து எழுதுகிறீர்கள் என்றால், உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்!! உங்கள் வசதிக்காக எதையும் திரிக்க வேண்டாம், சகோ அன்பு அவர்களே!!
இவராகாவே இல்லாத ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டு தவறான ஒரு தகவலை வெளியிட்டு, இது தான் பொருத்தமானதாக இருக்கும் என்கிற முடிவிர்கு வேறு வந்திருக்கிறார்!! இதை வேத புரட்டல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது!!
அதாவது தேவனின் கிரியைகளை செய்ய நாம் என்ன கிரியைகள் செய்ய வேண்டும் என்றே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்!! இதோ சில மிகவும் நெருக்கமான, சரியான மொழிப்பெயர்ப்புகள்:
John 6:28 Darby Translation (DARBY) 28They said therefore to him, What should we do that we may work the works of God?
John 6:28 Wycliffe Bible (WYC) 28 Therefore they said to him, What shall we do, that we work the works of God?
தேவனின் கிரியைகளை செய்ய நாம் என்ன கிரியை செய்ய வேண்டும்? என்று தங்களின் கிரியைகள் மேல் நோக்கமாக இருந்த ஜனங்களிடம் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்,
John 6:29 KJV Jesus answered and said unto them This is the work of God that ye believe on him whom he hath sent
John 6:29 Darby Translation (DARBY) 29Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.
John 6:29 Wycliffe Bible (WYC) 29 Jesus answered, and said to them, This is the work of God, that ye believe to him, whom he sent.
அதாவது, பிதா அனுப்பியவரை விசுவசிக்க செய்ய வைப்பதே தேவனின் செயலாக இருக்கிறது!!
யோவான் 6:28, 29, இரு வசனங்களிலும், தேவனுக்கு ஏற்ற செயல் என்கிற பதமே கிடையாது, மாறாக தேவனின் செயல் (கிரியை) என்றே இருக்கிறது!!
29ம் வசனத்தில் மனிதனின் செயலை குறித்தே வசனம் சொல்லவில்லை!! மாறாக மனிதனுக்கு விசுவாசத்தை கொடுப்பது, தேவனின் செயலே (கிரியை) என்று தான் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!!
அன்பு அவர்கள் தங்களின் கருத்தை நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் வசனவிளக்கம் தர முயலுகிறார் என்பதற்கு, அவரது இவ்விளக்கம் ஆதாரமாயுள்ளது!! அன்பு அவர்களுக்கு தேவனின் கிரியையை விட தன் கிரியை மீது அதிக நம்பிக்கை இருப்பதற்கு அவர் தந்திருக்கும் விளக்கம் இது!! REQUIRES என்கிற ஒரு வார்த்தையே கிடையாது!!! ஆனால் Contextபடி அது தான் பொருந்துதாம், ஆகவே அது தான் சரியாம்!! இத்தனைக்கும் கிரேக்க வார்த்தைகள் (Transliterated) மற்றும் அதன் Strong's எண்களை கொடுத்தவர், அதோடு அர்த்தத்தையும் (நான் கொடுத்தது போல்) கொடுத்திருந்தால், அவரது அறைகுறை பதிவை அவரே நீக்கியிருப்பார்!! ஏனென்றால் வசனத்துடன் சேர்த்து ஒரு வார்த்தையை கொடுத்து தனது போதனைக்கு ஏற்ப வசனத்தை லாவகமாக மாற்றியமைத்து அதர்கு பல வர்ணங்களில் பதில் பதிந்து, என்னை கண்டித்தும் இருக்கிறார்!! இது ஒன்றும் ஆரோக்கியமான விவாதம் இல்லை சகோ அன்பு அவர்களே!! நீங்கள் வார்த்தையை சேர்த்துக்கொண்டு என்னை எந்த சட்டத்தில் கண்டிக்கிறீர்கள்!! நீங்கள் இதற்கு அவசியம் பதில் பதிவு செய்ய வேண்டும்!!
//இவை எந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் என பெரியன்ஸ் குறிப்பிடவில்லை. ஆயினும் நான் பல sources மூலம் பார்த்ததில், அவர் தந்துள்ள முதல் மொழிபெயர்ப்பு New International Version (NIV) என்றும், 2-வது மொழிபெயர்ப்பு New American Standard Bible என்றும் அறிந்தேன்.//
உங்கள் விளக்கமும் தப்பு, உங்கள் சோர்சஸ்@@ம் தப்பு!! அவைகளில் முதல் மொழிபெயர்ப்பு NIV தான், ஆனால் இரண்டாம் மொழிபெயர்ப்பு DARBY Translation!! இதை என் பதில் பதிவில் எழுதியிருக்கிறேன்!!
//அதில் “the works God requires” என்ற சொற்றொடர் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், “the works God requires” எனும் சொற்றொடர் ஏதோ எனது சொந்த மொழிபெயர்ப்பு என்பதுபோல் பெரியன்ஸ் குற்றஞ்சாட்டுகிறார்.//
நான் குற்றஞ்சாட்டியதில் என்ன தவறு இருக்கிறது!! நீங்கள் கிரேக்க வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதன் அர்த்தத்தை கூட பார்க்க நினைக்காமல், உங்கள் போதனைக்கு ஒத்து போகுது என்று the works God requires என்பது தான் Context படி சரி என்று பதிவிட்டதை தான் நான் குற்றஞ்சாட்டியிருக்கிறேன்!! நீங்கள் கொடுத்த கிரேக்க வார்த்தைகளின் அர்த்தத்தை முதலில் பார்த்து விட்டு அதன் பின் எனைவி@@@ மொழிப்பெயர்ப்பை தங்கள் பதிவுக்கு உபயோகித்து இருக்கனும்!! அதை தான் தெளிவாக என்பதில் பதிவில் முழு விவரத்துடன் பதிவிட்டிருக்கிறேன்!!
//ஆனால், அவர் தந்துள்ள முதல் மொழிபெயர்ப்பு NIV மொழிபெயர்ப்புதான் எனில், நிச்சயமாக அவர் கண்டனத்திற்குரியவர்தான். ஏனெனில் 29-ம் வசனத்தை NIV மொழிபெயர்ப்பில் பார்த்த அவர், 28-ம் வசனத்தையும் NIV மொழிபெயர்ப்பில் கட்டாயமாகப் பார்த்திருக்க வேண்டும்; //
எந்த ஒரு மொழிப்பெயர்ப்பும் பூரணமானது என்பதை நான் நம்புவதில்லை!! நீங்கள் கிரேக்க Tools வைத்திருப்பதினால் அதிலிருந்து வார்த்தையின் அர்த்தங்களை பார்த்து NIV மொழிப்பெயர்ப்பு முழுவதும் சரி தான் என்று ஆதாரம் காட்டி விட்டு, அதன் பின் என்னை கண்டித்து எழுதலாம்!! கிரேக்க வார்த்தைகளின் அர்த்தங்களை எழுதியாச்சு, அது NIVயில் இல்லாதது என் தவறு கிடையாது!! என்னமோ நான் 28ம் வசனத்தை மறைத்து அதை வேதத்திலிருந்து எடுத்துப்போட்டு வெறும் 29ம் வசனத்தை மத்திரம் காட்டி ஏமாற்றுவதான குற்றச்சாட்டு தவறானது தான்!!
கிரியை கிரியை என்று சொல்லிக்கொண்டு நான் காட்டிய கிரியையின் வசனங்களை சுமார் மூன்று முறைகளுக்கு மேல் கேட்ட பிறகு சகோ அன்பு பதில் தருகிறார்:
//நல்லது; குற்றச்சாட்டைக் கூறியுள்ள நீங்கள், அதற்கான ஆதாரத்தைக் கூறவில்லையே! முதலாவது ஆதாரத்தைக் கூறுங்கள்; அதன்பின்னர் உங்கள் குற்றச்சாட்டு சரியா தவறா என்பதை நான் சொல்கிறேன்.//
நீங்கள் உண்மையிலேயே இவைகளை பின்பற்றியவராக இருந்தால் அதை சொல்ல வேண்டியது தானே!! இதற்காக தானே நான் இத்துனை முறை கேட்டிருக்கிறேன்!! இப்பவும் நீங்கள் இதற்கு நேரான ஒரு பதிலை தராமல் உங்கள் வார்த்தை ஜாலத்தை மாத்திரமே காட்டுகிறீர்கள்!!
//பின்குறிப்பு: குறிப்பிட்ட இந்த வசனங்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்பதிலிருந்து, இவ்வசனங்களின்படி நீங்கள் நடக்கவில்லை என ஒத்துக்கொள்வதுபோல் தெரிகிறது. Am I corect? If your answer is "yes", then you become a lier. OK//
நான் நடக்கிறேனா இல்லையா என்பதை குறித்து உங்களுக்கு பதில் தர எனக்கு எந்த கடமையும் கிடையாது!! நீங்கள் தான் கிரியைகள் கற்பனைகள், அதை முழுமையாக பின்பற்றாதவன் பொய்யன் என்கிற வசனங்களை எடுத்து காட்டுகிறீர்கள்!! ஆனால் உங்களுடன் நடந்த இந்த விவாதத்தில் இது வரை கிரியைகளுக்கு நீங்கள் எத்துனையோ வசனங்கள் காட்டியிருந்தாலும் நான் குறிப்பிட இந்த வசனங்களை காட்ட மனம் வரவில்லை!! மாறாக இப்பவும் திசை திருப்பி விடுகிறீர்கள்!! நான் கிருபையை நம்பியிருக்கிறவன், எனக்கு ஏற்ற கிரியை என்னவென்று என் தேவன் நியமித்திருக்கிறார், நான் நடந்துக்கொள்கிறேன், நீங்கள் அதை குறித்து துளியும் கவலைப்பட வேண்டாம்!! எனக்கு தெரிந்த வசனத்தின்படி நம் கிரியைகளால் அல்ல மாறாக தேவனின் கிருபையினால் தான் இரட்சிப்பு என்பதை நம்புகிறவன்!!
It doesn't matter whether I say a YES or a NO!! But it will matter IF you are not discussing on these verses!! God knows that I am a poor flesh, and whatever HE pleases he makes me DO!! You need not bother at ALL whether I follow the quoted verses or not!! Your preaching on WORKS remains incomplete without following the quoted verses!! I know not only YOU but LIKES of you also would not be able to follow unless and until it is from GOD!! It requires a stature of Peter or Paul or of any other apostle to follow the above verses!! You may be witty in words, but if you preach WORKS and don't follow the quoted verses you become a LIAR without any difference!! Since I am much more dependent on GRACE of God, you don't have an option of naming me a LIAR!! But you as a sincere follower of WORKS automatically become the greatest LIAR!! And so far by evading the quoted verses, it becomes your duty to clarify!! You please don't worry whether I follow that or not!!
//நீங்கள் உண்மையிலேயே இவைகளை பின்பற்றியவராக இருந்தால் அதை சொல்ல வேண்டியது தானே!! இதற்காக தானே நான் இத்துனை முறை கேட்டிருக்கிறேன்!! இப்பவும் நீங்கள் இதற்கு நேரான ஒரு பதிலை தராமல் உங்கள் வார்த்தை ஜாலத்தை மாத்திரமே காட்டுகிறீர்கள்!!//
அன்பான சகோதரரே!
குறிப்பிட்ட கற்பனைகளை நான் பின்பற்றவில்லை என நீங்கள் ஏற்கனவே தீர்மானித்து, என்னைப் பொய்யன் என அறிவித்து குற்றஞ்சாட்டிவிட்டீர்கள். இது சம்பந்தமான உங்கள் பதிவை சற்று படியுங்கள்.
படித்தீர்களா உங்கள் பதிவை! நான் துணிச்சலாக பொய் சொல்வதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டிவிட்டீர்கள். எனவேதான் உங்கள் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கேட்டேன். இப்போதும் சொல்கிறேன், “நீங்கள் ஆதாரத்தைக் கொடுங்கள், அதன்பின் நான் பதில் சொல்கிறேன்”. மற்றபடி, “வசனத்தின்படி நீங்கள் நடக்கிறீர்களா” எனக் கேட்டு உங்களைக் குற்றப்படுத்த எனக்கு எப்படி உரிமையில்லையோ அதேவிதமாக “வசனத்தின்படி நான் நடக்கிறேனா” எனக் கேட்டு என்னைக் குற்றப்படுத்த உங்களுக்கும் உரிமையில்லை.
நம்மில் யார் வசனத்தின்படி நடக்கிறோம் என்பதை அறியவோ, அதை நிரூபிக்கவோ, அல்லது ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டவோ நாம் இங்கு பதிவுகளைத் தரவில்லை. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் என்ற வசனத்தின்படி “உங்கள் தவறை நான் சுட்டிக்காட்டி புத்தி சொல்லலாம்”, “எனது தவறை நீங்கள் சுட்டிக்காட்டி புத்தி சொல்லலாம்”.
வசனத்தின்படி நடக்கவேண்டும் என மற்றவர்களுக்கு நான் உபதேசிக்கையில், அவ்வுபதேசத்தின்படி நான் நடக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமே. அதனடிப்படையில் நீங்கள் என்னை கேள்விகேட்பதும் நியாயமே. ஆனால் உங்கள் கேள்வி என் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் அல்லது எனது உபதேசத்தின் மூலம் நான் பிறரை இடறச்செய்ததன் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். மாறாக, உங்கள் கருத்திற்கு எதிராக வாதம் செய்துகொண்டிருக்கும் என்னை வாயடைக்கும் நோக்கத்தில் என்னிடம் கேள்வி கேட்பது விவாத இலக்கணத்திற்கு விரோதமானது.
ஆனாலும் உங்களது இம்மாதிரி கேள்விக்கு ஏற்கனவே நான் நேரடியாகப் பதில் சொல்லியுள்ளேன்.
//நன்மை செய்வது பரிபூரணத்தை நாடுவது போன்ற நல்ல விஷயங்களை சொல்லுகிறீர்கள், ஆனால் வசனம் சொல்லியபடி செய்தீர்களா, அல்லது இப்படி செய்யும்படி போதிக்கிறீர்களா,
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம்!! இதை செய்கிறோமா!! இல்லை, நிச்சயமாக இல்லை!! நமக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று விட்டு நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோமா, இல்லையே!! அப்படி என்றால் பூரண சற்குணனாயிருக்க நாம் நமக்கு உண்டானவைகளை விற்று அவரை பின்பற்றாமல் போனோமென்றால் பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் உண்டாகாதா??
இது நாம் வசனத்தை புரிந்துக்கொள்வதில் தான் இருக்கிறது!! இதை அப்படியே எழுத்தின்படி எடுத்துக்கொண்டோமென்றால், யாருக்கு தான் பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும்!! தெரியவில்லை!!! விளக்கத்தை அடுத்த பதிவில் தருகிறேன்.........!!//
அதே திரியில் அன்பு57:
//ஏதோ நம்மில் யாராலும் முடியாது என்பதுபோல் நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுகிற வசனம்:
மத்தேயு 19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இக்கட்டளைப்படி நடப்பதென்பது என்ன அத்தனை கடினமா சகோதரரே? அவரது கற்பனைகள் பாரமானவைகளும் அல்ல என மற்றொரு வேதவசனமே (1 யோவான் 5:3) கூறுகிறதே!
உனக்கு உண்டானவைகள் எவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாததால்தான், இது ஏதோ யாராலும் சாத்தியமற்றது என நீங்கள் எண்ணுகிறீர்கள். உனக்கு உண்டானவைகள் எவை எனும் கேள்விக்கான பதில் அதே வசனத்தில் அடங்கியுள்ளது. அவ்வசனத்தின் பின்பகுதியில், அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் என இயேசு கூறுகிறார். பரலோகப் பொக்கிஷம் வேண்டுமெனில் உனக்கு இப்பூமியில் உண்டானவைகளான பூலோகப் பொக்கிஷங்களை விற்று தரித்திரருக்கு கொடு என்பதே இயேசுவின் கட்டளை.
மற்றபடி நாம் அனுதினமும் பயன்படுத்துகிறவைகளான நமக்கு உண்டானவைகள் அத்தனையையும் விற்றுக் கொடுக்கவேண்டுமென்பது இயேசுவின் கட்டளையல்ல. அப்படிப் பார்த்தால், அடுத்த வேளை நாம் சாப்பிடப்போகிற சாப்பாடுகூட நமக்கு உண்டானதுதான்; அதைக்கூட விற்று தரித்திரக்குக்கொடு என இயேசு கட்டளையிட்டதாகிவிடும்.
இயேசுவின் கட்டளையைக் கேட்ட அவ்வாலிபன் அதன்படி செய்யாததற்குக் காரணமென்ன? அவன் மிகுந்த ஆஸ்தி (அல்லது பொக்கிஷம்) உடையவனாகவும் அந்த ஆஸ்தியின்மீது பற்றுதல் உடையவனாகவும் இருந்ததால் அதை அவனால் செய்யமுடியவில்லை.
எனவே நாம் பொக்கிஷத்தையும் ஆஸ்தியையும் சேர்த்து வைக்கக்கூடாது என்பதே அக்கட்டளையினுள் அடங்கியுள்ள மறைவான கட்டளை. பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்காதிருங்கள் என மற்றொரு வசனத்தில் இயேசு கட்டளையிட்டதை நினைவூட்டுகிறேன் (மத்தேயு 6:19).
நமக்கு உண்டானவை என்றால் நாம் பயன்படுத்துகிற வீடு, மேஜை, நாற்காலி, படுக்கை போன்றதல்ல. எதிர்காலத்தில் (வியாதி போன்ற) எதிர்பாரா செலவினத்திற்காகவோ, அல்லது நம் பெருமைக்காகவோ ஆடம்பரத்திற்காகவோ, அல்லது நாம் பெரும் ஆஸ்தியுள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்காகவோ சேர்த்துவைக்கிற அனைத்தும் பொக்கிஷங்கள்தான்.
பொக்கிஷம் என்றால், நிலம் பொன் வெள்ளி ஆகியவை மட்டுமல்ல; நம் தேவை 2 மேஜைகள் என்றிருக்கும்போது, 100 மேஜைகளை வாங்கிப்போட்டு, நமக்கு எதிர்பாராத செலவு வரும்போது அவற்றை விற்று பயன்படுத்தலாம் என நினைத்தால் அந்த மேஜைகளும்கூட பொக்கிஷமாகி விடும்.
இயேசுவின் இக்கட்டளைப்படி நடப்பது மிகமிக சுலபம். இதற்கு நானே ஓர் உதாரணமாயுள்ளேன் என ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இது ஏதோ மிகவும் பெருமைக்குரிய மாபெரும் சாதனை அல்ல. எனக்கென சொந்தமாக ஒரு வீடு உள்ளது. வீட்டில் பயன்படுத்தும் டி.வி., போன், செல்போன், கணினி, கார், பைக், சில உடைகள் போன்ற பொருட்கள் உண்டு. அதிக பட்சம் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் உண்டு. எனக்கென எந்த ஆபரணமும் கிடையாது.
கார் எப்படி வாங்கினீர்கள்? அதற்காக பணம் சேர்த்திருப்பீர்கள் அல்லவா? என நீங்கள் கேட்கலாம். நம் தேவைக்கென ஒரு பொருளை நாம் வாங்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கென பணம் சேர்ப்பதை பொக்கிஷம் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது மாத வருமானத்தில் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் வங்கிக் கடன் வாங்கி கார் வாங்கினேன்.
(உண்மையில் கார் அவசியத் தேவை அல்ல என்றாலும், குடும்பமாக பயணம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஒரு வாகனம் என்பதாலும், எனது குடும்பத்தாரின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்ய நான் கடமைப்பட்டவன் என்பதாலும் அதை வாங்கினேன்.)
இந்நிலையில் நீடித்திருப்பதில் எனக்கு எந்த சிரமமும் கிடையாது. இப்போது சொல்லுங்கள்; நான் எனக்குண்டான எதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டும்? நான் ஒரு தனி ஆளாக இருந்தால் கார் மட்டுமல்லை பைக் கூட எனக்குத் தேவையல்ல, சைக்கிள் இருந்தால் போதும்; இன்னும் சொல்லப்போனால் சைக்கிள் கூட அவசியமல்ல. உண்ண உணவும் உடுக்க உடையும் மட்டும் இருந்தால், 1 தீமோ. 6:8 சொல்கிறபடி, அதுகூட எனக்கு போதுமானதுதான்.
இந்த மனநிலையில் நீங்களும் நானும் அறியாதவகையில் ஏராளமானவர்கள் உள்ளனர். எனவே மத்தேயு 19:21-ல் இயேசு கட்டளையிட்டபடி வாழ்கிற ஏராளமானோர் உண்டு.//
நான் எதிர்பார்த்தபடியே எனது இப்பதிலை உங்கள் ஆத்ம நண்பர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதே திரியில் சோல்சொல்யூஷன்:
//உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு என்ற 'செய்யக்கூடிய' கட்டளைக்கே நாம் எவ்வளவு கண்டிஷன்கள் போட்டு நமது மேன்மையை நிரூபிக்கிறோம். என்னைப் பின்பற்றி வா என்ற கட்டளைக்கு சீஷர்கள் அப்படியே சொல்லர்த்தமாகப் பின் பற்றினார்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் வந்தோமே என்றார்கள். எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான் அதற்கு நீங்கள் தனியே விளக்கம் கொடுக்கத்தேவையில்லை.//
எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான் என சோல்சொல்யூஷன் சொல்கிறார். அப்படியானால் உடுத்தியுள்ள உடையையுமா, உண்ணவிருக்கும் உணவையுமா எனக் கேட்டால், அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
வசனத்தின்படி நூல் பிடித்தாற்போல் நாம் நடக்கிறோமோ இல்லையோ, ஆனால் வசனத்தின்படி நடக்கவேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும்தான் முதலாவது வேண்டும். நடைமுறை வாழ்வில் வசனத்தின்படி நடப்பதென்பது ஆளாளுக்கு மாறத்தான் செய்யும். ஆனால் அதற்கு அவர்கள் கணக்கு கொடுக்கவேண்டியது தேவனிடம்தானேயொழியஅற்ப மனிதர்களிடம் அல்ல.
தற்போது நீங்கள் நிச்சயமாக நிதானத்தை இழந்து கேள்விகேட்கிறீர்கள், பதிவுகளைத் தருகிறீர்கள். உதாரணமாக இப்பதிவைப் படியுங்கள்.
//நான் நடக்கிறேனா இல்லையா என்பதை குறித்து உங்களுக்கு பதில் தர எனக்கு எந்த கடமையும் கிடையாது!! நீங்கள் தான் கிரியைகள் கற்பனைகள், அதை முழுமையாக பின்பற்றாதவன் பொய்யன் என்கிற வசனங்களை எடுத்து காட்டுகிறீர்கள்!!//
வேதத்திலுள்ள வசனத்தைத்தானே காட்டுகிறேன்? பழையஏற்பாட்டைச் சொன்னால் “அது நியாயப்பிரமாணம்” என்கிறீர்கள்; இயேசுவின் போதனையைச் சொன்னால் “அது யூதருக்கானது” என்கிறீர்கள்; அப்போஸ்தலரின் போதனையைச் சொன்னால் “நீங்கள் வசனத்தின்படி நடக்கிறீர்களா” எனக் கேட்டு வாயடைக்க முயலுகிறீர்கள்.
கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லிவிட்டு, அவருடைய கற்பனைகளின்படி நடவாதவன் பொய்யன் என அப்போஸ்தன் யோவான் கூறுகிறார். அவரது இவ்வசனம் (1 யோவான் 2:4) கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறுகிற அனைவருக்கும் பொருந்தும். மற்ற எந்த வசனத்திற்கும் நீங்கள் சாக்கு போக்கு சொல்லலாம். ஆனால் இவ்வசனத்திற்கு நீங்கள் சாக்குப் போக்கு சொல்லவே முடியாது.
நீங்கள் கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறுவது மெய்தானே? அப்படியென்றால் இவ்வசனம் நிச்சயம் உங்களுக்குமானதுதான். இவ்வசனம் “கிரியையைப் போதிப்பவர்களுக்குத்தான் பொருந்தும்; கிருபையைப் போதிப்பவர்களுக்கு பொருந்தாது” என யோவான் எந்த விதிவிலக்கையும் கூறவில்லை. ஆனால் நீங்களோ நான் கிருபையைப் போதிப்பவன், எனக்கு 1 யோவான் 2:4 பொருந்தாது, அதன் பொருட்டு என்னைக் கேள்விகேட்க யாருக்கும் உரிமையில்லை என்கிறீர்கள்.
வசனத்தின்படி நடப்பதும் நடவாததும் உங்களது தனிப்பட்ட விருப்பம். அது பற்றி நான் உங்களைக் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன்:
கிறிஸ்துவை நான் அறிந்துள்ளேன் என நீங்கள் சொல்லிக்கொண்டு அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாவிட்டால் நீங்கள் பொய்யன் தான். அப்படியாக நான் சொல்லவில்லை, அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். I am just conveying the fact declared by Apostle John in 1 John 2:4.
வசனத்தின்படி நான் நடவாததைக் குறித்து கேள்விகேட்கவோ, என்னைக் கண்டிக்கவோ, புத்திசொல்லவோ உங்களுக்கு முழு உரிமை உண்டு; ஆனால் என்னைக் குற்றப்படுத்தும் நோக்கத்தில் இல்லாமல், எனது மறுமையின் நன்மைக்காக அப்படிச் செய்யும்படி வேண்டுகிறேன்.
-- Edited by anbu57 on Saturday 27th of August 2011 07:25:37 AM
//வசனத்தின்படி நான் நடவாததைக் குறித்து கேள்விகேட்கவோ, என்னைக் கண்டிக்கவோ, புத்திசொல்லவோ உங்களுக்கு முழு உரிமை உண்டு; ஆனால் என்னைக் குற்றப்படுத்தும் நோக்கத்தில் இல்லாமல், எனது மறுமையின் நன்மைக்காக அப்படிச் செய்யும்படி வேண்டுகிறேன்.//
உங்களை குற்றப்படுத்துவதோ, என்னை மேன்மைப்படுத்துவதோ என் நோக்கம் அல்ல!! என் நோக்கம் தேவனின் கிருபை என்னவென்று சொல்லுவதே!! நீங்கள் கிரியை கிரியை என்று சொல்லியும் ஒரு போதும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் சொல்லும் கிரியைகளை சொல்லியது கிடையாதே என்பதற்காக தான் நான் கேட்டேன்!!
இப்படி நடக்க வேண்டியதற்கு அவசியம் கிருபை தேவையாக இருக்கிறது!! இப்படி நடக்க முடியாது என்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு பவுல் பேதுரு போன்ற அழைப்பு, தெரிந்துக்கொள்ளுதல் இருக்க வேண்டும்!! நம் சொந்த முயற்சியினால் இப்படி பட்ட கிரியையை செய்ய முடியாது என்பது என் கருத்து!! இதை செய்யாததினால் என்னமோ நான் கிறிஸ்துவை அறிந்தவனாக முடியாது என்பது தவறு!! ஏனென்றால் என் கிரியைகளினால் அல்ல மாறாக பிதாவின் சித்தத்தினால் தான் நாம் கிறிஸ்துவிடம் போகிறோம்!!
நிங்கள் அல்ல, நானே உங்களை தெரிந்துக்கொண்டேன் என்கிறார் கர்த்தர்!! இதை தான் கிருபை என்று சொல்லுகிறேன்!! வரி வாங்கியவர்கள் முதல் கொலைக்காரர்கள், மீனவர்கள் போன்றவர்களையே தேவன் கிறிஸ்துவிடம் அனுப்பியிருக்கிறார்!! அவர்களின் கிரியைகளை பார்த்து அல்ல, மாறாக அவர்கள் மூலமாக காரியங்களை நடப்பிக்க!! அப்படியே தான் விசுவாசமும்!! இதுவும் ஏதோ என் முயற்சியால் வருவது கிடையாது, இதுவும் தேவனின் கிரியையே!!
ஆனாலும் இப்பவும் நீங்கள் நேரடியாக பதில் சொல்லாமல் இன்னும் சுத்தி வளைத்துக்கொண்டு என்னை பொய்யன் என்று தீர்மானித்து வருகிறீர்கள்!! பரவாயில்லை இதையும் உங்கள் கிரியை என்றே எடுத்துக்கொள்கிறேன்!! ஆனால் நீங்கள் பதில் தரும் வரை, நீங்கள் இந்த கிரியைகளை செய்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருப்பேன், ஏனென்றால் அப்போஸ்தலர் சொல்லுவதாக சொல்லி நீங்கள் தான் என்னை பொய்யன் என்று சொல்லுகிறீர்கள்!! ஆனால் நீங்கள் இவைகளை செய்கிறீர்களா இல்லையா என்பதை இன்னும் சுத்தி வளைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!
உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்க முடியாததற்கு நீங்கள் ஆயிரம் அர்த்தங்கள் வைத்திருக்கலாம், வசனத்தை மாற்ற பல "மறைவான" கட்டளைகளை உருவாக்கலாம்!! ஆனால் முடியாததை முடியாது என்று சொல்லுவதில் என்ன பிரச்சனை!!?? இந்த குறிப்பிட்ட வசனங்களை மாத்திரம் நீங்கள் ஏன் தவிர்த்து வருகிறீர்கள்!!
//உங்களை குற்றப்படுத்துவதோ, என்னை மேன்மைப்படுத்துவதோ என் நோக்கம் அல்ல!! என் நோக்கம் தேவனின் கிருபை என்னவென்று சொல்லுவதே!! நீங்கள் கிரியை கிரியை என்று சொல்லியும் ஒரு போதும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் சொல்லும் கிரியைகளை சொல்லியது கிடையாதே என்பதற்காக தான் நான் கேட்டேன்!!//
தேவனின் கிருபையை தாராளமாகச் சொல்லுங்கள்; ஆனால் கிரியையைக் குறித்த உபதேசம் வேண்டாம் என்றும், அப்படி உபதேசிப்பவர்களை “சுயநீதிக்காரர்கள், தங்களை மேன்மைபாராட்டுபவர்கள், கிறிஸ்துவின் இரத்தத்தை அவமதிப்பவர்கள்” என நிந்திப்பது வேண்டாம் என்றும் தான் சொல்கிறேன்.
வேதாகமத்தில் கிரியைப் போதிக்கும் வசனங்களே கிடையாது எனச் சொல்லுங்கள்; நான் கிரியையைப் போதிப்பதை விட்டுவிடுகிறேன்.
//நீங்கள் கிரியை கிரியை என்று சொல்லியும் ஒரு போதும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் சொல்லும் கிரியைகளை சொல்லியது கிடையாதே என்பதற்காக தான் நான் கேட்டேன்!!//
எந்த வசனத்தையும் மறைக்கவேண்டும் என்ற எண்ணமோ தவிர்க்கவேண்டும் என்ற எண்ணமோ எனக்குக் கிடையாது. உங்களுடனான எனது வாதம், “கிரியை தேவை” என்பதைப் பற்றியதாகவே இருந்ததால்தான் “கிரியை வேண்டும்” என்பதற்கு ஆதாரமான வசனங்களைப் பதித்துவந்துள்ளேன்.
ஒருவேளை “என்னென்ன கிரியை வேண்டும்” என்பது பற்றி நாம் விவாதித்தால், நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களையும் பதித்திருப்பேன். இத்தனை நாட்களாக என்னோடு பழகியும் விவாதித்தும் வந்துள்ள நீங்கள், இதைக்கூட புரிந்துகொள்ளத் தவறியதற்குக் காரணம் என்னவோ?
நீங்களாகவே “இந்த வசனங்கள் சொல்வதையெல்லாம் நம்மால் செய்யஇயலாது” எனத் தீர்மானித்து வைத்துள்ளதால், “அந்த வசனங்களை நான் சொல்கிறானா” என்பதைக் கவனிப்பதிலேயே குறியாக இருந்துள்ளீர்கள்.
முதலாவது “கிரியை வேண்டும்” என வேதாகமம் போதிப்பதை ஒத்துக்கொள்ளுங்கள்; அதன்பின் என்னென்ன கிரியை வேண்டும் என்பது பற்றி பேசலாம்.
ஆங்காங்கே கிடக்கும் வசனங்களை இணைத்துப் பார்க்கவேண்டும் என அடிக்கடி சொல்கிறீர்களே, இவ்விரு வசனங்களையும் இணைத்துப்பார்க்க ஒருபோதும் உங்களுக்குத் தோணவில்லையா?
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
1 யோவான் 2:3 அவருடைய (கிறிஸ்துவின்) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
இவ்விரு வசனங்களையும் இணைத்துப்பார்த்தால் என்ன முடிவுக்கு நாம் வரமுடியும்? “கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும்” என்ற அளவில் கிறிஸ்துவை அறிவதுதான் நித்தியஜீவனேயொழிய வெறுமனே “கிறிஸ்து தேவனுடைய குமாரன், நம் மீட்பர், இரட்சகர்” என்ற அளவில் மட்டும் அவரை அறிவது நித்திய ஜீவன் அல்ல என்பதுதானே?
சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என ஒவ்வொரு பதிவின் கீழும் கூறுகிறீர்களே, “கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளதவனுக்குள் சத்தியம் இல்லை” என வசனம் கூறுவதை நீங்கள் ஏற்கிறீர்களா, இல்லையா?
//இப்படி நடக்க வேண்டியதற்கு அவசியம் கிருபை தேவையாக இருக்கிறது!! இப்படி நடக்க முடியாது என்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு பவுல் பேதுரு போன்ற அழைப்பு, தெரிந்துக்கொள்ளுதல் இருக்க வேண்டும்!! நம் சொந்த முயற்சியினால் இப்படி பட்ட கிரியையை செய்ய முடியாது என்பது என் கருத்து!!//
இந்த விவாத தளத்தை நீங்கள் தொடங்கி நடத்துவதற்கு தேவகிருபை (அல்லது சித்தம்) உங்களுக்கு வேண்டும் என வைத்துக்கொண்டாலும், இத்தளத்திற்காக நீங்கள் எந்த முயற்சியுமே எடுக்கவில்லை என உங்களால் கூறமுடியுமா?
எப்படி இத்தளத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் முயற்சி செய்தீர்களோ, அதேவிதமாக வேதவசனம் சொல்கிற கிரியைகளைச் செய்வதற்கும் நாம் முயற்சி எடுக்கவேண்டும்; அப்போது தேவகிருபை நம் முயற்சியை ஈடேறச் செய்யும்.
“நான் முயற்சியே எடுக்கமாட்டேன், தேவகிருபை என்னை கிரியை செய்யவைக்கும்” என நினைத்துக் கொண்டிருந்தால், இவ்வுலகில் ஒரு துரும்பைக்கூட உங்களால் எடுத்துப்போட முடியாது; வேதவசன ஆதாரத்தோடுதான் இக்கருத்தை நான் சொல்கிறேன்.
மத்தேயு 25:18 ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். 19 வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
24 ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். 25 ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
26 அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. 27 அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி, 28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். 29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
இவ்வுவமை உங்களுக்கு நன்றாகத் தெரிந்த உவமைதான். எஜமானாகிய தேவன் நமக்கு அவரது சாயலின்படி அன்பு, இரக்கம் போன்ற குணநலன்களைக் கொடுத்துள்ளது மெய்தான். ஆனால் அந்த குணநலன்களைப் பயன்படுத்தி தேவசித்தத்தை செயல்படுத்தவேண்டியது நமது கடமை. தேவசித்தத்தை நாம் செயல்படுத்தும்போது அவர் இன்னும் அதிகமாக நமக்குக் கிருபை தந்து இன்னும் அதிகமாக அவரது சித்தத்தை நாம் செய்யவைக்கிறார்.
(முயற்சியும் ஆர்வமும்) உள்ளவனெவனோ அவனுக்கு (இன்னும் அதிகமாக கிருபை) கொடுக்கப்படும்; (முயற்சியும் ஆர்வமும்) இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் (இருக்கிற கிருபையும்) எடுத்துக்கொள்ளப்படும்.
“எல்லாம் தேவகிருபை பார்த்துக்கொள்ளும், நான் எதுவும் முயற்சி செய்யவேண்டியதில்லை” எனும் உங்கள் கொள்கை, “தாலந்தை நிலத்தினுள் புதைத்து வைப்பதற்கு” சமமாகத்தான் உள்ளது. எனது இவ்வார்த்தைகள் ஒருவேளை உங்களை கோபமூட்டுவதாகவே இருக்கலாம். ஆகிலும் உங்களது நன்மைக்காகவும் தளத்திற்கு வருவோரது நன்மைக்காகவும் இதைச் சொல்வது எனது கடமையாகும்.
நீதிமொழிகள் 27:5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
//இப்படி நடக்க முடியாது என்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு பவுல் பேதுரு போன்ற அழைப்பு, தெரிந்துக்கொள்ளுதல் இருக்க வேண்டும்!!//
உங்களது இக்கருத்தை நான் ஏற்கவில்லை; ஆகிலும் நமக்கு அழைப்பு உள்ளதா, நாம் தெரிந்துகொள்ளப்பட்டவரா என்பதெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? எனவே, வசனம் சொல்கிறபடி செய்ய நாம் முயற்சி எடுப்போம்; நமக்கு அழைப்பு இருந்தால், நாம் தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்தால் நம் முயற்சியை தேவன் வாய்க்கச் செய்வார்.
நாம் முயற்சியே செய்யாமலிருந்தால், நமக்கான அழைப்பு எப்படி நிறைவேறும்? நமக்கான தெரிந்துகொள்தல் எப்படி நிறைவேறும்?
“அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என வசனம் சொல்கிறதே! நாம் தேவசித்தப்படி நடக்க எந்த முயற்சியும் எடுக்காதிருந்தால், கைவிடப்பட்ட அநேகரில் ஒருவராக அல்லவா நாம் இருக்க நேரிடும்? எனவே இந்தக் கற்பனை யாருக்கு, அந்தக் கற்பனை யாருக்கு எனக் கேள்வி கேட்காமல், கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் நம் கடமை.
பிரசங்கி 12:13 தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
இப்படிச் சொன்னால், தேவனை அறியாதவர்கள் பலருண்டே, அவரது கற்பனைகளை அறியாதவர்கள் பலருண்டே, அவர்கள் நிலை என்னாகும் என்றெல்லாம் கேள்வி கேட்பது உசிதமல்ல.
நீங்களும் நானும் தேவனை அறிந்துள்ளோம், கிறிஸ்துவையும் அறிந்துள்ளோம், அவர்களின் கற்பனைகளையும் அறிந்துள்ளோம்; எனவே அவற்றைக் கைக்கொள்வது நமது கடமை. அப்படிச் செய்யாவிடில், நாம் தேவனை/கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறுவது பொய்யாகிவிடும். இதைத்தான் 1 யோவான் 2:4-ல் யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில்தான் “கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்கிற நீங்கள், அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லையெனில் நீங்கள் பொய்யர்தான்” என மீண்டும் மீண்டும் சொல்கிறேன்; தற்போது மறுபடியும் ஒருமுறை சொல்கிறேன்.
//ஆனால் நீங்கள் பதில் தரும் வரை, நீங்கள் இந்த கிரியைகளை செய்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருப்பேன், ஏனென்றால் அப்போஸ்தலர் சொல்லுவதாக சொல்லி நீங்கள் தான் என்னை பொய்யன் என்று சொல்லுகிறீர்கள்!! ஆனால் நீங்கள் இவைகளை செய்கிறீர்களா இல்லையா என்பதை இன்னும் சுத்தி வளைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!//
ஏற்கனவே ஒருமுறை நான் பதில் சொல்லிவிட்டேன். உங்கள் திருப்திக்காக இப்போது மீண்டும் சொல்கிறேன்; வசனத்தை நான் புரிந்துகொண்ட வரையில் அதன்படி நடக்கத்தான் செய்கிறேன் (குறைந்தபட்சம் அதற்காக முயற்சியாவது செய்கிறேன்); இதற்குமேல் தேவன் என்னை நியாயந்தீர்த்துக் கொள்வார்.
ஆனால் வசனத்தை நீங்கள் புரிந்துகொண்ட விதமாகத்தான் நான் நடக்கவேண்டுமென்றோ, அல்லது உங்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நான் நடக்கவேண்டுமென்றோ எதிர்பார்க்க உங்களுக்கு உரிமையும் இல்லை, அதன்படித்தான் நடக்கவேண்டுமென எனக்கு அவசியமும் இல்லை.
//உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்க முடியாததற்கு நீங்கள் ஆயிரம் அர்த்தங்கள் வைத்திருக்கலாம், வசனத்தை மாற்ற பல "மறைவான" கட்டளைகளை உருவாக்கலாம்!! ஆனால் முடியாததை முடியாது என்று சொல்லுவதில் என்ன பிரச்சனை!!?? இந்த குறிப்பிட்ட வசனங்களை மாத்திரம் நீங்கள் ஏன் தவிர்த்து வருகிறீர்கள்!!//
ஆம், ஆயிரம் அர்த்தங்கள் வைத்திருக்கலாம்தான்; ஆனால் வசனங்களின்படி நடக்கவேண்டும் எனும் எனது ஒரே குறிக்கோளை தேவன் அறிவார். நான் தேவனை நன்றாக அறிந்துள்ளதால், அவரது கற்பனைகளின்படி நடப்பதில்தான் அவர் பிரியப்படுகிறார் என்பதையும் நன்கறிந்துள்ளேன். “என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” எனும் வசனத்திலிருந்து (ஏசாயா 66:2) அவரது எதிர்பார்ப்பை நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன்.
மாடும் கழுதையும் தன் எஜமானனை அறிந்து நடக்கையில், தன் எஜமானின் எதிர்பார்ப்பின்படி நடக்கையில், மனிதராகிய நாம் நம் எஜமானாகிய தேவனை அறியாமலும் அவரது எதிர்பார்ப்பைப் புரியாமலும் நடப்பதினிமித்தம் அவர் எவ்வளவாய் வருத்தப்படுகிறார் என்பதை ஏசாயா 1:3 மூலம் அறிந்த நான், தேவனின் எதிர்பார்ப்பு என்ன, அதை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே நோக்கமாயுள்ளேன்.
இதுதான் தேவன் எனக்குச் செய்த கிருபைக்கு நான் அவருக்குக் காட்டும் சிறு துளி நன்றி.
“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என மனமுருகக் கேட்கும் தேவனுக்கு (மல்கியா 6:8) நான் என்ன செய்வேன்? அவரது வசனங்களுக்கு எவ்வளவாய் கீழ்ப்படிய முடியுமோ அவ்வளவாய் கீழ்ப்படிவதையல்லாமல் வேறென்ன செய்யமுடியும்? அதைத்தான் நான் செய்கிறேன்; மற்றவர்களுக்கும் போதிக்கிறேன்.
//வசனத்தை மாற்ற பல "மறைவான" கட்டளைகளை உருவாக்கலாம்!!//
இது உங்களது அதிகப்பிரசங்கித்தனமான கூற்றாக உள்ளது. இக்கூற்றுக்கு நீங்கள் தேவனிடம் கணக்குக் கொடுத்தேயாக வேண்டும் என உங்களை எச்சரிக்கிறேன்.
//நீங்கள் இவைகளை செய்கிறீர்களா இல்லையா என்பதை இன்னும் சுத்தி வளைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!//
சுத்தவுமில்லை, வளைக்கவுமில்லை; வசனத்தைச் சொல்லி போதிப்பவன் அதன்படி நடக்கவும் வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். ஆகிலும் இவ்விஷயத்தில் உங்களைத் திருப்திசெய்வது எனக்கு அவசியமில்லை; வசனத்தைச் சொன்ன தேவனை நான் திருப்திசெய்துகொள்வேன்.
இறுதியாக மீண்டுமொருமுறை சொல்கிறேன்:
கிறிஸ்துவை அறிந்துள்ளேன் எனச் சொல்கிற நீங்கள், அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லையெனில் நீங்கள் ஒரு பொய்யரே! இப்படியாக நான் சொல்லவில்லை; அப்போஸ்தலன் யோவான் வேதாகமத்தில் கூறிவைத்துள்ளார்.
மத்தேயு22:37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். இதை விட்டுவிட்டு "மற்ற" கிரியைகளை செய்வதும் போதிப்பதும் ஏற்புடையதல்ல. ஒருவன் கிரியை செய்ய முயற்சிப்பதும் முயற்சிக்காததும் தேவனிடத்தில் உள்ளது. மனிதன் கையில் ஒன்றுமில்லை.
II கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
எபேசியர் 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
//எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான் என சோல்சொல்யூஷன் சொல்கிறார். அப்படியானால் உடுத்தியுள்ள உடையையுமா, உண்ணவிருக்கும் உணவையுமா எனக் கேட்டால், அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
வசனத்தின்படி நூல் பிடித்தாற்போல் நாம் நடக்கிறோமோ இல்லையோ, ஆனால் வசனத்தின்படி நடக்கவேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும்தான் முதலாவது வேண்டும். நடைமுறை வாழ்வில் வசனத்தின்படி நடப்பதென்பது ஆளாளுக்கு மாறத்தான் செய்யும். ஆனால் அதற்கு அவர்கள் கணக்கு கொடுக்கவேண்டியது தேவனிடம்தானேயொழிய அற்ப மனிதர்களிடம் அல்ல.//
அன்பு அவர்களே, சீடர்கள் அப்படியே சொல்லர்த்தமாகத்தான் பின்பற்றினார்கள். எல்லாவற்றையும் விட்டு வந்தோமே என்று கூறவில்லையா? உடுத்தியுள்ள உடையையுமா என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறீர்கள். அவைகளெல்லாம் தேவை என்று பரமபிதா அறிந்திருக்கிறார் என்றுதான் கர்த்தரும் சொல்கிறார். நாளைய தினத்தைக்குறித்து கவலைப்படாதீர்கள் என்றால் என்ன அர்த்தம்? நம் தேவைக்கேற்ப மேஜை நாற்காலி, வீடு, கார், ஏன் பின்னர் சிறியதாக ஒரு விமானம் கூட இந்த லிஸ்டில் சேரும்...
அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டியது தேவனிடம்தானெ என்றால் நீங்கள் எதற்கு போதிக்கிறீர்கள் கண்காணிக்கிறீர்கள்?
நாங்கள் பொய்யர்களா இல்லையா என்பதை தேவனறிவார், அற்ப மனிதர்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
//அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டியது தேவனிடம்தானே என்றால் நீங்கள் எதற்கு போதிக்கிறீர்கள், கண்காணிக்கிறீர்கள்?//
எதற்குப் போதிக்கிறீர்கள் எனும் உங்கள் கேள்வி நியாயமானது; ஆனால் எதற்குக் கண்காணிக்கிறீர்கள் எனும் கேள்வி தவறு. யாரையும் நான் கண்காணிக்கவுமில்லை, அது எனது வேலையுமல்ல.
எல்லாவற்றையும் முடிந்தவரை விரிவாக தெளிவாக எழுதிவிட்டேன். ஆனாலும் நான் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இம்மாதிரி கேள்விகளை மேலும் மேலும் கேட்கிறீர்கள்.
உங்களது எல்லா புரிந்துகொள்ளாமைக்கும் நான் பதிலளிப்பதாக இருந்தால் அப்பணியை மட்டும்தான் செய்யமுடியும்.
எனவே உங்களது கேள்விக்கு பதில் சொல்ல நான் தயாரில்லை. உங்கள் கேள்விக்கான பதில், ஏற்கனவேயுள்ள எனது பதிவில் அடங்கியுள்ளது.
-- Edited by anbu57 on Saturday 27th of August 2011 09:22:45 AM
//அன்பு அவர்களே, சீடர்கள் அப்படியே சொல்லர்த்தமாகத்தான் பின்பற்றினார்கள். எல்லாவற்றையும் விட்டு வந்தோமே என்று கூறவில்லையா?//
ஆம், எல்லாவற்றையும் (அவரவர் வீட்டில்) விட்டுத்தானே வந்தார்கள்; தரித்திரருக்குக் கொடுப்பதற்காக விற்றுவிட்டா வந்தார்கள்?
எதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டுமோ அதை விற்று தரித்திரருக்குக் கொடுத்தால்போதும். எதை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டுமோ அதை விட்டுவிட்டு இயேசுவின் பின்னே போனால் போதும்.
அன்று சொல்லர்த்தமாக இயேசு இருந்தார்; அவர்களை அழைத்தார்; எனவே சொல்லர்த்தமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் சென்றனர். இன்று சொல்லர்த்தமாக இயேசு என்னை அழைத்தார் எனச் சொன்னால் அதை நீங்கள் ஏற்பீர்களா?
//அன்பு அவர்களே, சீடர்கள் அப்படியே சொல்லர்த்தமாகத்தான் பின்பற்றினார்கள். எல்லாவற்றையும் விட்டு வந்தோமே என்று கூறவில்லையா? உடுத்தியுள்ள உடையையுமா என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறீர்கள்.//
எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும்தான் என அழுத்தமாகச் சொன்னது நீங்கள்தான். நான் உணவு உடையையுமா எனக் கேட்டால், சிறுபிள்ளைத்தனமாகக் கேட்பதாகச் சொல்கிறீர்கள். மொத்தத்தில் குழப்பத்தின் மொத்த உருவமாக இருக்கிறீர்கள்.
நான் சிறுபிள்ளைத்தனமாகக் கேட்பதாகச் சொல்லிவிட்டு, நீங்கள் இப்படியாக எழுதியுள்ளீர்கள்.
/நம் தேவைக்கேற்ப மேஜை நாற்காலி, வீடு, கார், ஏன் பின்னர் சிறியதாக ஒரு விமானம் கூட இந்த லிஸ்டில் சேரும்... //
உங்கள் வரைமுறைப்படி இவைகளெல்லாம் தரித்திரருக்குக் கொடுக்கப்படும்படி விற்கப்படவேண்டிய பொருட்களின் லிஸ்டில் சேருமென்றால், இம்மாதிரி பொருட்களை இயேசுவும் பயன்படுத்தியிருக்கக்கூடாதே! குறிப்பிட்ட ஒரு பொருளை விற்று தரித்திரக்குக் கொடுக்கச் சொன்னவர், அதே பொருளை அவர் பயன்படுத்துவது நியாயமாகுமா?
மாற்கு 14:13 அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; 14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
மத்தேயு 8:23 அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
மாற்கு 4:38 கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
இவற்றைப்போல் இன்னும் பல பொருட்களை அவர் பயன்படுத்தியுள்ளார். அவைகளையுங்கூட விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படியா இயேசு சொல்லியிருப்பார்?
உங்கள் சிந்தனையில் கொஞ்சமும் logic இல்லை. வேதவசனங்களை logical thinking-உடன் படித்தால்தான் அதன் சரியான கருத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
முதலாவது உங்கள் logical power-ஐ develop செய்யுங்கள்; அல்லது அதற்காக ஜெபியுங்கள்.
-- Edited by anbu57 on Saturday 27th of August 2011 06:58:53 PM
//அன்று சொல்லர்த்தமாக இயேசு இருந்தார்; அவர்களை அழைத்தார்; எனவே சொல்லர்த்தமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் சென்றனர். இன்று சொல்லர்த்தமாக இயேசு என்னை அழைத்தார் எனச் சொன்னால் அதை நீங்கள் ஏற்பீர்களா?//
உண்மையில் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. மேற்கூறிய பதிவு முற்றிலும் முரணானதாகும். ஓஹோ அப்ப இயேசு சொல்லர்த்தமாக இருந்து சொன்னால்தான் எதையுமே செய்யவேண்டும். அல்லவா? அவர் சொல்லர்த்தமாக யாருக்கோ சொன்னவைகளைத்தான் இன்று கிரியை செய்யவேண்டும் என்று நீங்களே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்று செய்யுங்கள் எவைகளை எல்லாம் சொல்லர்த்தமாக ஏற்பது, எவைகளுக்கு நம் மனம் போன போக்கில் அர்த்தம் எடுத்துகொண்டு 'முயற்சி' செய்வது என்று ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள். நீங்கள் போய்.... என்று சொல்லர்த்தமாக அப்போஸ்தலருக்குக் கூறியவைகளை நீங்கள்தான் நாமும் சொல்லர்த்தமாக செய்யவேண்டும் என்கிறீர்கள்.
வேதத்தை நமக்கு சாதகமாக எப்படியெல்லாம் வளைக்கிறோம் பார்த்தீர்களா?
மத்தேயு 8:20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
மாற்கு 14:13 அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; 14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
மத்தேயு 8:23 அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
மாற்கு 4:38 கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
லாஜிக் பற்றி நீங்கள் பேசுவது கொஞ்சம் ஒவர்தான். அந்த வீட்டு எஜமானனுக்கோ, படகு மற்றும் கப்பலின் ஓனர்களுக்கோ அவர் போதிக்கவில்லை. அவரைப் பின்பற்ற மனதாயிருப்பவர்களுக்குத்தான் அந்த கட்டளை. அந்த கம்பளம் விரித்த வீடோ, படகோ, கப்பலோ இயேசுவுக்கோ சீடர்களுக்கோ சொந்தமானதல்ல.
மத்தேயு 6:34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
பயன் படுத்துவது வேறு சொந்தம்கொண்டாடுவது வேறு சகோதரரே.
உடன் நீஙகள் பதிக்கும் அபத்தங்களைத்தான் உங்கள் தளம் முழுவதும் காண்கிறோமே. பாவிகளை முதல் மரணத்திலுருந்து மட்டும் இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்று வேதத்தைப் புரட்டிவிட்டு லாஜிக் வேறு பார்ப்பது கேலிக்கூத்து...
//உண்மையில் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. மேற்கூறிய பதிவு முற்றிலும் முரணானதாகும். ஓஹோ அப்ப இயேசு சொல்லர்த்தமாக இருந்து சொன்னால்தான் எதையுமே செய்யவேண்டும். அல்லவா? அவர் சொல்லர்த்தமாக யாருக்கோ சொன்னவைகளைத்தான் இன்று கிரியை செய்யவேண்டும் என்று நீங்களே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்று செய்யுங்கள் எவைகளை எல்லாம் சொல்லர்த்தமாக ஏற்பது, எவைகளுக்கு நம் மனம் போன போக்கில் அர்த்தம் எடுத்துகொண்டு 'முயற்சி' செய்வது என்று ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள். நீங்கள் போய்.... என்று சொல்லர்த்தமாக அப்போஸ்தலருக்குக் கூறியவைகளை நீங்கள்தான் நாமும் சொல்லர்த்தமாக செய்யவேண்டும் என்கிறீர்கள்.
வேதத்தை நமக்கு சாதகமாக எப்படியெல்லாம் வளைக்கிறோம் பார்த்தீர்களா?//
சோல்சொல்யூஷனின் இப்பதிவுக்கு, அவரது “எல்லாமே தேவசித்தம்” கொள்கையின் அடிப்படையில் எனது பதில்.
//உண்மையில் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை.//
என்னைப் பற்றி விளங்கிக் கொள்ள தேவசித்தம் உங்களுக்கு இடங்கொடுக்கவில்லை நண்பரே! தேவசித்தம் எப்போது இடங்கொடுக்கிறதோ அப்போது என்னைப் பற்றி விளங்கிக் கொள்வீர்கள்; அதுவரை இப்படி விளங்காப்பிள்ளையாகத்தான் இருப்பீர்கள்.
//மேற்கூறிய பதிவு முற்றிலும் முரணானதாகும்.//
நான் என்ன செய்வது? எல்லாமே தேவசித்தம். அன்று அப்படி எழுதவைத்தார்; இன்று இப்படி எழுதவைக்கிறார். முற்றிலும் முரணானதாக ஏன் என்னை எழுத வைக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை விரைவில் உங்களைப் பைத்தியமாக்க சித்தங்கொண்டிருக்கிறாரோ என்னவோ? (இப்படி என்னை எழுத வைப்பதும் அவர் தான்) நான் எழுதியதை விளங்கிக்கொள்ள இயலாமல் தலையைப் பிய்த்து பிய்த்து விரைவில் நீங்கள் பைத்தியமாக வேண்டும் என அவர் சித்தங்கொண்டால் நான் என்ன செய்யமுடியும்?
//ஓஹோ அப்ப இயேசு சொல்லர்த்தமாக இருந்து சொன்னால்தான் எதையுமே செய்யவேண்டும். அல்லவா? அவர் சொல்லர்த்தமாக யாருக்கோ சொன்னவைகளைத்தான் இன்று கிரியை செய்யவேண்டும் என்று நீங்களே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.//
இப்படியெல்லாம் நான் சொல்லியுள்ளேனா? எனக்கே ஆச்சரியமாக உள்ளது நண்பரே! இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது; நான் என்ன எழுதுகிறேன் என்பது எனக்குத் தெரியாமலேயே தேவன் தமது சித்தத்தை என் மூலம் நடத்தியுள்ளார். எப்படியோ, உங்களைப் பைத்தியமாக்க வேண்டும் என தேவன் சித்தம் கொண்டுவிட்டார். அதற்காக அவர் என்னைப் பயன்படுத்துகிறார். அவரது சித்தம் என்னில் நிறைவேற நான் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். இல்லை இல்லை, நான் என்ன ஒப்புக்கொடுப்பது? அவர் அவராகவே என்னை ஆட்கொள்கிறார். இதில் என் சித்தம், என் அறிவு, என் LOGIC எதுவுமே கிடையாது.
//ஒன்று செய்யுங்கள் எவைகளை எல்லாம் சொல்லர்த்தமாக ஏற்பது, எவைகளுக்கு நம் மனம் போன போக்கில் அர்த்தம் எடுத்துகொண்டு 'முயற்சி' செய்வது என்று ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள்.//
இப்படியெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது நண்பரே! நம் மனம் போன போக்கில் யாரும் எதுவும் செய்யமுடியாது.
உதாரணமாக ஆதாமை எடுத்துக்கொள்ளுங்கள்; அவரென்ன அவரது மனம் போன போக்கிலா விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்?
பார்வோனை எடுத்துக்கொள்ளுங்கள்; அவனென்ன தன் மனம் போன போக்கிலா தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்?
தாவீதை எடுத்துகொள்ளுங்கள்; அவரென்ன தன் மனம் போன போக்கிலா உரியாவின் மனைவியுடன் விபசாரம் செய்து உரியாவைக் கொன்று போட்டார்?
இவ்வளவு ஏன், உலகின் அத்தனை மனிதரையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் மனம் போன போக்கிலா கீழ்ப்படியாமைக்குள் கிடந்தனர்?
இப்படி உலகில் யாருமே தங்கள் மனம் போன போக்கில் நடக்கமுடியாதிருக்கும்போது நீங்களும் நானும் மட்டும் நம் மனம் போன போக்கில் வேதவசனங்களுக்கு அர்த்தம் எடுக்க முடியுமா என்ன? கொஞ்சம் லாஜிக்கலாக சிந்தியுங்கள் நண்பரே! ஓ, sorry brother, நீங்களாக அப்படி சிந்திக்கவும் முடியாதோ? கூடிய விரைவில் தேவன் தமது சித்தப்படி உங்களை சிந்திக்க வைப்பார். இப்படி நான் எழுதுவதுகூட நானல்ல, தேவசித்தம் தான் என்னை இப்படி எழுதவைக்கிறது.
அய்யோ, அய்யோ, அய்யோ!! மீண்டும் மீண்டும் தப்பு தப்பா சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை, நான் சொல்லவில்லை, நான் சொல்லவில்லை! தேவசித்தம் தான் என்னை அப்படி எழுத வைத்துள்ளது. எல்லாமே தேவசித்தம்தான், தேவசித்தம்தான், தேவசித்தம்தான்.
//வேதத்தை நமக்கு சாதகமாக எப்படியெல்லாம் வளைக்கிறோம் பார்த்தீர்களா?//
இதற்கு நான் என்னதான் பதில் சொல்வது? நான் என்ன எனது சித்தப்படியா வேதத்தை எனக்கு சாதகமாக வளைக்கிறேன்? நான் எனக்கு சாதகமாக வேதத்தை வளைத்தால் அதுவும் தேவசித்தம்தான்! நீங்கள் உங்களுக்கு சாதகமாக வேதத்தை வளைத்தால் அதுவும் தேவசித்தம்தான்! அவரவர் அவர்களுக்கு சாதகமாக வேதத்தை வளைத்தால் அதுவும் தேவசித்தம்தான்!
இப்படி “எல்லாமே தேவசித்தமாக” இருக்கும்போது “நாம்” எப்படியெல்லாம் வளைக்கிறோம் பார்த்தீர்களா என என்னிடம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வது?
ஒருவேளை “எல்லாமே தேவசித்தம்” எனும் உங்கள் கொள்கையை மறந்துவிட்டீர்களா, அல்லது அதை வாபஸ் வாங்கிவிட்டீர்களா?
வாபஸ் வாங்கிவிட்டீர்களென்றால் சொல்லுங்கள்; உங்கள் பதிவுக்கு வேறு பதில் தருகிறேன். அல்லது மறந்து விட்டீர்களென்றால், தேவசித்தப்படித்தான் நீங்கள் மறந்துள்ளீர்கள் என எண்ணிக் கொள்கிறேன். ஒருவேளை வாபஸ் வாங்கவுமில்லை, மறக்கவுமில்லை என்றால், உங்களது ஒவ்வொரு பதிவுக்கும் எனது பதில் இப்படித்தான் இருக்கும்.
நீங்கள் சோல் அவர்களை வரிக்கு வரி பைத்தியம் என்று சொல்லுவது உண்மையில் நீங்கள் போதிக்கும் கிரியையை தான் காட்டுகிறது!! உங்கள் பார்வையில் தேவ கிருபை, தேவ சித்தம் எல்லாம் பத்தியம் போல்!! பரவாயில்லை போகட்டும்!! நீங்கள் தொடர்ந்து உங்கள் கிரியையை நடப்பியுங்கள், உங்கள் பார்வையில் தேவ கிருபையையும் தேவ சித்தத்தையும் சொல்லுபவர்கள் பைத்தியங்களாக இருந்துவிட்டு போகட்டும்!! ஆனால் உங்களுக்காக ஒரு வசனம் இருக்கிறது,
பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
உமக்கு என்ன ஆயிற்று என்று இப்போது விளங்கிவிட்டது. கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் உளறுவார்கள் என்பதற்கும் ஒரு உதாரணம் வேண்டுமல்லவா? அதற்கு ஒரு பர்ஃபெக்ட் உதாரணம் நீரும் உம் தளமும்தான். நியாயப்பிரமாண போதகர்களை பக்க வழியாய் நுழைந்த கள்ள சகோதரர்கள் என்று வசனம் கூறுகிறது. தேவ சித்தம் அல்ல உலகில் மனித சித்தம்தான் நடக்கிறது என்று எழுதுபவன் நிச்சயம் ஒரு "புத்திசாலி"யாகத்தான் இருக்க வேண்டும்.
வேசி மார்க்கத்தின் இன்னொரு உருவமே நீங்கள். நூதன போதனைக்குள் அமிழ்ந்து மூழ்கி சிக்கித்தவித்து, செவித்தினவுக்கு இரைபோட எங்களை உபயோகித்துக்கொண்டிருப்பதை அறிவேன். இம்மாதிரி வேதத்தைத் திரித்து அவரவர் வசதிக்கேற்ப நூதன போதனைகளை மனம் போன போக்கில்தான் செய்வீர்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ளீர்கள். மனிதனை சுயநீதியினால் நீதிமானாக்கி இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கவந்த கள்ளகிறிஸ்துதானே நீங்கள். இலவசமான மீட்பை உணராமல் ஒரு சில கிரியைகளை கடைபிடிக்க "முயற்சி" செய்து அதிலும் தோல்வியடைந்து கொண்டு தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது நீரா நானா?
பணிவிடை பற்றி கண்டனம் தெரிவித்ததிலிருந்தே நீரும் ஒரு சாக்கடை சிந்தனை கொண்டவர் என்பதைப் புரிந்துகொண்டோம்.
இயேசு சொன்னவைகளை அப்படியே சீடர்கள்மட்டும்தான் சொல்லர்த்தமாக கடைபிடிக்க முடியும், நமக்கு நேரடி அர்த்தம் கிடையாது என்று ரொம்ப புத்திசாலித்தனமாக எழுதியவர்தானே நீங்கள்.
//உமக்கு என்ன ஆயிற்று என்று இப்போது விளங்கிவிட்டது//
விளங்காப்பிள்ளையாக இருந்தவர், இப்போது விளங்கும் பிள்ளையாகிவிட்டீர்களா? ரொம்ப சந்தோஷம், எல்லாம் தேவசித்தம்.
//கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் உளறுவார்கள் என்பதற்கும் ஒரு உதாரணம் வேண்டுமல்லவா? அதற்கு ஒரு பர்ஃபெக்ட் உதாரணம் நீரும் உம் தளமும்தான்.//
எல்லாம் சரிதான், ஆனால் எவர்களை தேவன் கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுத்தார்?
ரோமர் 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
சரி, எவர்கள் தேவனை அறியும் அறிவில்லாதவர்கள்?
1 யோவான் 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
எரேமியா 22:15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இப்பொழுது சொல்லுங்கள், கிரியை வேண்டும் எனச் சொல்கிற நான் தேவனை அறியும் அறிவில்லாதவனா? அல்லது கிரியை வேண்டாம், அது எதற்கும் உதவாது எனச் சொல்கிற நீங்கள் தேவனை அறியும் அறிவில்லாதவரா?
இப்பொழுது சொல்லுங்கள், கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டர்களுக்கு உதாரணம் நானா, நீங்களா?
//தேவ சித்தம் அல்ல உலகில் மனித சித்தம்தான் நடக்கிறது என்று எழுதுபவன் நிச்சயம் ஒரு "புத்திசாலி"யாகத்தான் இருக்க வேண்டும்.//
ஆம், ஆனால் 4 சின்ன திருத்தங்கள்: எல்லாமே தேவ சித்தம் அல்ல, உலகில் மனித சித்தமும் நடக்கிறது என்று எழுதுபவன் நிச்சயம் ஒரு "பைத்தியமாக" இருக்க மாட்டான்.
ஒருவேளை இருக்கலாம், ஆனால் அதுவுங்கூட தேவசித்தம்தானே.
//இம்மாதிரி வேதத்தைத் திரித்து அவரவர் வசதிக்கேற்ப நூதன போதனைகளை மனம் போன போக்கில்தான் செய்வீர்கள்;//
“எல்லாமே தேவசித்தம்” எனும் உங்கள் கொள்கையை அடிக்கடி நினைவூட்ட வேண்டியதுள்ளது. “எல்லாமே தேவசித்தமாக” இருக்கும்போது நான் எப்படி என் மனம்போனபோக்கில்என் வசதிக்கேற்ப நூதன போதனைகளை போதிக்கமுடியும்?
//மனிதனை சுயநீதியினால் நீதிமானாக்கி இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கவந்த கள்ளகிறிஸ்துதானே நீங்கள்.//
தப்பு, தப்பு. கள்ளக்கிறிஸ்துக்கள் என்ன செய்வார்கள் என இயேசுகிறிஸ்து சொன்னதை கவனமாகப் படியுங்கள்.
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
நான் என்ன அடையாளம் செய்கிறேனா, அல்லது பெரிய அற்புதங்களைச் செய்கிறேனா? என்னைப் போய் கள்ளக்கிறிஸ்து என்கிறீர்களே!. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணுமய்யா!!
//இலவசமான மீட்பை உணராமல் ஒரு சில கிரியைகளை கடைபிடிக்க "முயற்சி" செய்து அதிலும் தோல்வியடைந்து கொண்டு தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது நீரா நானா?//
நெகேமியா 4:3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். 4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும். 5 அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
//பணிவிடை பற்றி கண்டனம் தெரிவித்ததிலிருந்தே நீரும் ஒரு சாக்கடை சிந்தனை கொண்டவர் என்பதைப் புரிந்துகொண்டோம்.//
//இயேசு சொன்னவைகளை அப்படியே சீடர்கள்மட்டும்தான் சொல்லர்த்தமாக கடைபிடிக்க முடியும், நமக்கு நேரடி அர்த்தம் கிடையாது என்று ரொம்ப புத்திசாலித்தனமாக எழுதியவர்தானே நீங்கள்.//
2:4. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
5. சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
//கிரியை வேண்டாம், அது எதற்கும் உதவாது எனச் சொல்கிற நீங்கள் தேவனை அறியும் அறிவில்லாதவரா?//
கிரியை வேண்டாம் என்று நாங்கள் பதித்ததாக லூசுத்தனமாக திரும்பத் திரும்பப் பொய்யாகப் பதித்துக்கொண்டிருக்கிறீர்கள். கிரியை எதற்கும் உதவாது முக்கியமாக இரட்சிப்புக்கு... இதை நான் சொல்லவில்லை... பயித்தியக்காரன் போல பதித்து உங்கள் கிரியையின் மேன்மையை காட்டிக்கொள்ள வேண்டாம். கிரியை செய்து என்னத்த கிழித்தீர்கள் என்று தெரியும். உமது கிரியைத்தூக்கி குப்பையில் போடும். கிறிஸ்து மரித்தது வீண் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
மனித சித்தம் நடக்கிறது என்றாலே மனிதனை தேவனுக்கு மேலாக (அவரது சித்தத்துக்கு எதிராக நடக்கும் சக்தியுள்ளவனாக) உயர்த்துபவன் பயித்தியம் மட்டுமல்ல பிசாசாகவும் இருக்க வேண்டும்.
//உளறல்களுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது.//
எங்களிடம் பதில் உண்டு, உமக்கு அதைத்தானே இத்தனை காலம் செய்துகொண்டிருக்கிறோம்.
//உளறல்களுக்குப் பதில் சொல்வதை நிறுத்திவிட்டு, போய் வேதாகமத்தை ஆராய்ச்சி பண்ணுங்க, உண்மையைக் கண்டறிங்க, எல்லோருக்கும் சொல்லுங்க.//
வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய வேதம் சொலவதால் செய்கிறோமே தவிர உண்மையை கண்டறிங்க எல்லாருக்கும் சொல்லுங்க என்று ஒரு உம் போல ஒரு பைத்தியத்தின் உளரல்களை மதித்தல்ல...
ரொம்ப பொங்குகிறீர்களே, பொறுமை நண்பரே, ஏன் இத்தனை டென்ஷன்? உங்கள் "கிரியை'களில் பொறுமையைக் கடைபிடிப்பது ரொம்ப அவசியம். வயசானகாலத்தில் டென்ஷன் கூடாது.
உங்கள் உளரல்களுக்கு பதில் கொடுக்க ஒரு காரணம் உண்டு.
நீதிமொழிகள் 26:5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி (உளரல்களின்படி) மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
உண்மையை ஏற்கனவே நாங்கள் கண்டறிந்ததால்தான் வைராக்கியமாக சத்தியத்தை எதிர்க்கும் எவனையும் எதிர்க்க்கிறோம். நாங்கள் பொதுவாக சொல்லுகிறோம், வாஞ்சையுள்ளவர்கள் அறிந்தும் கொள்கிறார்கள். உம்மைப் போன்ற முட்டாள்களின் ஆலோசனை தேவையில்லை.
போங்க போயி ஒங்க "கிரியை"யினால் உண்டான இரட்சிப்பை போதித்து ஜனங்களை இரண்டாம் மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள். பாவிகளை இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்க அன்பு57 உலகத்தில் வந்தார் என்ற சத்தியத்தை உலகம் அறிந்து கொள்ளட்டும்.
ஏன் இத்தனை ஃபீலிங்கு, சில சமயம் நீங்கள் சில்சாமின் மறுபதிப்போ என்று தோன்றுகிறது. கள்ள சகோதரரே நீர் எப்பாடுபட்டு "கிரியா"பிரமாணத்தை போதிக்க நினைத்தாலும் கிருபையின் பிரமாணமே எல்லாருக்கும் பலிக்கும். வித்தியாசமே இல்லை. அவ்வப்போது வந்து உம் உளரல்களைப் பதித்து எங்களை என்டர்டெயின் செய்ததற்கு நன்றி!
உமக்குண்டான எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிறிஸ்துவின் போதனைகளை ஒன்றுகூட விடாமல் கைக்கொள்கிறீர்கள் என்றும், நியாயப்பிரமாணம் முழுவதையும் அன்றாடம் கைக்கொள்கிறீர்கள் என்றும் தினசரி செய்திகளில் வந்துகொண்டுதானிருக்கிறது. அவரில் நிலைத்திருக்கிற எவனும் (முக்கியமாக அன்பு) பாவம் செய்வதில்லை என்ற வசனத்தின்படி நீர் பாவம் என்றால் என்னவென்றே தெரியாத பரிசுத்தவான் என்பதும், அவருடைய கற்பனைகளை ஒன்றுகூட விடாமல் கைக்கொள்ளும் மஹாபரிசுத்தவான் என்பதும், உலகத்தில் உள்ள எல்ல சிறுமையும் எளிமையுமானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவர் நீர் என்பதும்//ஆம், ஆனால் 4 சின்ன திருத்தங்கள்: எல்லாமே தேவ சித்தம் அல்ல, உலகில் மனித சித்தமும் நடக்கிறது என்று எழுதுபவன் நிச்சயம் ஒரு "பைத்தியமாக" இருக்க மாட்டான்.// என்ற மாபெரும் சத்தியத்தை பின்வரும் வசனங்களுக்கு எதிராக போதிக்கிறவராக இருக்கிறீர்.
I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டு
சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது என்று வசனம் சொல்லும்போது தேவனால் கூடாதது மனிதனால் கூடும் என்று புரட்ட உமக்கு வெட்கமாக இல்லை?
ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
இதைவிட விளக்கம்தர இன்னொரு வசனம் தேவையில்லை. நீர் என்னடாவென்றால் கிரியையினால் ஒரு கனவீனமான பாத்திரம் கனமான பாத்திரமாகும் என்று உளருகிறீர். புரிந்ததா யார் உளருகிறார்கள் என்று?
மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
மற்றவர்கள் குமாரன் தான் பிதா என்று அபத்தப்பதிவிடுவார்கள்.
லூக்கா 10:22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. மனித சித்தம் உட்பட...
//4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும். 5 அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.//
லூக்கா 21:12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
யோவான் 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
//வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய வேதம் சொல்வதால் செய்கிறோமே தவிர ...//
வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய மட்டும்தான் வேதம் சொல்லிருக்கா? கிரியை செய்யச் சொல்லி, கற்பனைகளைக் கைக்கொள்ளச் சொல்லி வேதம் சொல்லவேயில்லைன்னு உங்களால் சொல்ல முடியுமா?
அப்படிச் சொல்ல தைரியமிருந்தால், அதை அடுத்த பதிவில் அறிவித்துவிட்டு, வேதாகமத்தை ஆராய்ச்சி செய்றத மட்டும் செய்ங்க.
இப்போ புதுசா ஓர் ஆராய்ச்சி தொடங்கினாப்ல இருக்கு ... அதான், சில்சாம் எப்படியெப்படி பிற மதத்தாரை புண்படுத்தினாருங்கிறதைப் பத்திதான்.
எப்படியாவது உங்களுக்கு ஒரு என்டர்டெயின்மண்ட் வேணும். ஒண்ணு, எனது உளறலை வைச்சி என்டர்டெயின் பண்ணணும், அல்லது யாரையாவது குற்றஞ்சாட்டி நிரூபிக்கிறதுல என்டர்டெயின் பண்ணணும். இதையெல்லாம் நான் உளறலை. நீங்கதான் ரொம்ப பெருந்தன்மையாஉளறியிருக்கீங்க, sorry, சொல்லியிருக்கீங்க.
//அவ்வப்போது வந்து உம் உளறல்களைப் பதித்து எங்களை என்டர்டெயின் செய்ததற்கு நன்றி!//
இனிமே நான் இங்க வந்து உளறப்போறதில்லை. அதான் உங்க என்டர்டெயின்மண்டுக்கு அடுத்த topic-ஐ பிடிச்சிட்டீங்களே! அதான் சில்சாமின் பதிவுகளை ஆராச்சிபண்ணி அவர் புறமதத்தாரை புண்படுத்தினார்ங்கிற “உண்மையைக் கண்டுபிடிக்கிறதைத்தான்” சொல்றேன்.
ஆக, வேதம் சொல்ற கிரியையையும் செய்யப்போறதில்ல, வேதம் சொல்ற வேத ஆராய்ச்சியையும் செய்யப்போறதில்லை. ஆனா ஓர் உண்மையை ஜோரா கண்டுபிடிச்சிட்டீங்கல்லா. அதான், “கிருபை மட்டும் போதும், வேறெதுவும் வேண்டாம், எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு” -ங்கிற உண்மையை. அது போதும்.
வேறெந்த உண்மையையும் இனி வேதத்தில தேடவேண்டாம்; என்னை மாதிரி உளறன்களுக்குப் பதில் சொல்றது, ஒவ்வொருத்தரின் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது, குறிப்பா ஊழியக்காரங்களின் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது, எல்லோரையும் சரட்டுமேனிக்கு “லூசு, முட்டாள்”னு திட்டுறது, இப்படியா என்டர்டெயின்மண்ட் பண்ணினா போதும்.
வாழ்க உங்கள் “உண்மை கண்டுபிடிப்பு”, வளர்க உங்கள் “என்டர்டெயின்மண்ட்”.
ஏதோ, தெரியாம மறுபடியும் உளறிட்டேன். வழக்கம்போல இந்த உளறல்களுக்கும் உங்க வழக்கமான பாணியில் திட்டித் தீர்த்துடுங்க. இல்லாட்டி இராத்திரி தூக்கமில்லாம அவதிப்படுவீங்க.
இனிமே இங்கே வந்து உளறமாட்டேன்; “அய்யய்யோ ஓர் என்டர்டெயின்மண்ட் போய்ட்டே”ன்னு வருத்தப்படுறீங்களா? வருத்தம் வேண்டாம்; “என் தளத்திலேயே நான் உளறுவேன்”. அதுக்குப் பதில் சொல்லி என்டர்டெயின் பண்ணிக்கோங்க. OK, Bye.
நீங்கள் ஒருவரை சொல்லும் போது அது உங்களுக்கு விளக்கமாக தெரிகிறது!! அதில் நீங்கள் எங்களை எப்படி வேண்டுமென்றாலும் விமர்சிக்கிறீர்கள், அது உங்களுக்கு பரவாயில்லை என்று தெரிகிறது!! பைத்தியக்காரன் என்று சொல்லுவதில் என்ன தப்பு என்று தோன்றுகிறது, ஆகவே சொல்லுகிறீர்கள்!!
எல்லாவற்றையும் விற்று விட்டு ஊழியத்திற்கு வந்தீர்களா என்று உங்களிடம் கேட்பது உங்களுக்கு எவ்வுளவு மடத்தனமாக இருக்கிறதோ அதே போல் தான், நீங்கள் அறிவுரை கொடுத்து, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவது!! நாங்களாவது வசனத்தை காட்டி சொல்லுகிறோம், நீங்கள் எங்களை வெறுபேற்றவே சொல்லுகிறீர்கள்!
எல்லாவற்றையும் விட்டு விட்டா ஊழியத்திற்கு வந்தீர்கள் என்று மீண்டும் மீண்டும் உங்களிடம் கேட்கும் போது உங்கள் கோப உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்த துவங்கியது உங்கள் பதிவுகளில் தெரிந்தது!! நீங்கள் கிரியைக்காக வாதாடிக்கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் உங்களிடம் நீதியின் கிரியை வெளிப்படவில்லையே!! நாங்கள் கோபித்துக்கொண்டாலும், நீங்கள் உங்கள் நீதியின் கிரியையினால் அல்லவா செயல்ப்பட்டிருக்க வேண்டும்!! நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களுக்கு கோபம் வரவில்லை என்று சொல்ல முடியுமா!! வந்தது தானே!! அதாவது நீங்கள் போதிக்கும் ஒரு கோட்பாட்டை வைத்து கேள்வி கேட்பதற்கு உங்கள் கோபம் வருகிறது!! எல்லா கற்பனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இதை மேன்மையாக போதிக்கும் நீங்கள் இந்த கற்பனைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்றால் உங்களுக்கு கோபம் வருகிறது!! என்ன நியாயம்!!
தன் ஊழியத்தை தக்க வைத்துக்கொள்ள எல்லா ஊழியர்களும் ஒவ்வொரு கோட்பாட்டை வைத்துகொள்வார்கள்!! நீங்களும் அதற்கு விளக்கல்ல!!
நீங்கள் பணம் வாங்காத நேர்மையான ஊழியர் என்று அறிவேன், ஆனால் நீங்கள் சொல்லும் கிரியை தான் வேதம் என்று இருந்தால் எப்படி!! அதிலும் நீங்கள் முழுமையாக இல்லையே!! சில கிரியைகளை பின்பற்ற முடியாது என்று தெரிந்தும் அதை மறைத்து, இது யாராலும் பின்பற்ற முடியாதா என்று அல்லவா நியாயப்படுத்துகிறீர்கள்!! உங்களில் பாவம் இல்லை, நீங்கள் எப்பவுமே நீதியின் கிரியைகள் தான் செய்கிறீர்கள், தவறே செய்யாதவர் என்று உங்களால் சொல்ல முடியுமா!!
நீங்கள் மனிதர்கள் செய்யும் கிரியைகுறித்து மேன்மை பாராட்டுகிறீர்கள்!! நாங்கள் தேவனின் கிருபையை குறித்தே மேன்மைப்பாராட்டுகிறோம்!! கிரியை வேண்டாம் என்று சொல்லிய ஒரு பதிவை காண்பியுங்கள் என்றால் காண்பிக்கவில்லை, ஆனாலும் மீண்டும் மீண்டும், "கிரியை செய்ய கூடாது என்று போதிக்கிறீர்கள்", என்று சொல்லுவது உங்களின் எத்தகையான கிரியை!!?? நாங்கள் சொல்லி ஒருவன் கேட்பதற்காக இங்கே எதையும் எழுதவில்லை, தேவன் யாரை நியமித்திருக்கிறாரோ, அவருக்கு மாத்திரமே இந்த தளம் பிரயோஜனமாக இருக்கும்!! நாங்கள் யாரையும் இதை பின்பற்றுங்கள் என்று போதிப்பதும் கிடையாது!! எங்களுக்கு என்று ஆள் சேர்த்துக்கொள்வதும் இல்லை!! நீங்கள் போதிப்பதையே உங்களிடம் கேள்வி கேட்டது உங்கள் ஈகோவை தொட்டு விட்டது!! இது போன்று கேள்விகள் உங்களிடம் கேட்கப்படாமல் இருந்திருக்கும்!! ஆகவே தான் உங்களுக்கு இத்துனை கோபம் வந்தது!!
பிற மதத்தில் உள்ளவர்களை பரிகாசம் செய்து எழுதும் சில்சாமின் முகத்திறையை கிழிக்கும் காரியம் உங்களுக்கு ஏன் கஷ்ட்டமாக இருக்கிறது!! இதை குறித்து நீங்கள் சோல் சகோதரரை பரிகாசமாக எழுதியிருப்பது நீங்களும் சில்சாமிற்கு இந்த விஷயத்தில் துனை நிற்பதாக தெரிகிறது!! ஏற்கனவே தன் தளத்தில் எங்களுடன் மோதிக்கொண்டு எங்கள் மூக்கை உடைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அவன் உங்களை பாராட்டியிருக்கிறான்!!
இந்த தளத்தில் வேற்று மதத்தாரை பரிகாசம் செய்வதோ, அல்லது அப்படி எழுதுவோருக்கு ஆதரவு தெரிவிப்பதும் கிடையாது!! வேதத்தை அறியாத மற்றவர்களை பரிகாசம் செய்வது உங்களை பொறுத்த வரை "நீதியின்" கிரியைகாக இருக்கலாம், ஆனால் வேதம் எங்களுக்கு சொல்லுவது, கிறிஸ்து அவர்களுக்காகவும் மரித்தார் என்றே!! ஓஹோ, உங்களுக்கு அந்த கிருபை தான் முக்கியம் இல்லையே!!
சகோ சோல் அவர்கள் எழுதியதற்கு இனையாக சில இடங்களில் உங்களின் வார்த்தை ஜாலத்தினால் இன்னும் அதிகமாக குத்தி கிழித்து எழுதியது உங்கள் பார்வைக்கு அருமையாக தெரிந்திருக்கலாம், ஆனால் அப்படி எழுதுவது தான் உங்கள் கிரியை என்று புரிந்துக்கொண்டு நான் அமைதி காத்துக்கொண்டேன்!! அவ்வளவே!!