kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துருபதேசர்களின் துருபதேசங்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
துருபதேசர்களின் துருபதேசங்கள்!!


துருபதேசங்களை குறித்து ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது!! என்ன ஒரு கொடுமையென்றால், இன்று காளான் போல் தெருவிற்கு 10 சபைகள் என்று சிதறி கிடக்கும் 2000த்திற்கும் மேல் உள்ள சபைகள் தான் துருபதேசங்களின் கோட்டை என்று தெரியாமல் இன்று துருபதேசங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

அப்போஸ்தலர் 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

பவுல் இதை எழுதியது முத்லாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், அதாவது சுமார் கி.பி 60 62ல் எழுதப்பட்ட புத்தகம்!!

நான் போய் சுமார் 1900 வருடங்கள் பின் மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும் என்று எழுதாமல், நான் போனபின்பு மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் வந்து, உங்களில் சிலர் எழும்பி (அதாவது பவுல் இருந்த காலத்தில் உள்ளவர்களை தான் அவர் அப்படி எழுதுகிறார்) சீஷர்களைத் (கிறிஸ்துவை உண்மையாக தேவ குமாரன் என்றும் தங்களின் மூத்த சகோதரன் என்று எண்ணி அவரை பின்பற்றியவர்கள்) மாறுபாடான மனித போதனைகளை போதித்து கிறிஸ்தவம் என்கிற ஒரு உன்னதமான வழியை வியாபாரப்பொருளாக மாற்றிவிடுவார்கள் என்றார்!!

எப்ப இதன் தொடக்கம்? 1900 வருடங்கள் கழித்து வந்த ரஸ்ஸல் (வேத மாணவர்கள் என்கிற ஐக்கியத்தை உருவாக்கியவர், ஆனால் துருபதேசக்காரர்களுக்கு இவர் யெகோவா சாட்சிகள் என்கிற குழுவை ஆரம்பித்தார் என்கிற அளவிற்கு தான் தெரியும்)!! ஆக பவுல் சென்றவுடன் (அதாவது ஒன்று அவர் அந்த ஊரைவிட்டு அல்லது அவர் இந்த உலகத்திலிருந்து மறைந்தவுடன்) தான் இந்த துருபதேசங்கள் ஆரம்பமானது!! இதை தெரியாமல் துருபதேச சபைகளில் உட்கார்ந்துக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி (பிரசங்கிக்கவும், சுட்டிக்காட்டவும், காணிக்கைகளை பெற்றுக்கொள்ளவும்) பழகியவர்களுக்கு துருபதேசம் எப்போ தொடங்கியது, எப்படி தொடங்கியது, அவைகள் என்ன என்று நிதானமாக பதிவுகளை தொடங்குவோம்!!

ஆவிக்குரிய சபைகள் என்றும் ஆவிகுரிய மனிதர்கள் என்று சிலவற்றை முடிவு செய்துக்கொண்டு, அவர்களுக்கு மூத்த அப்போஸ்தலர், தேவ மனிதர்கள், ரெவெரெண்டுகள், கர்தினால்கள், டாக்டர்கள், போப்பாண்டவர், போன்றோர் சிலர் தான் வேதத்திற்கும் அதன் மொழிப்பெயர்ப்புகளுக்கும் அங்கிகாரம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்!! என்ன கொடுமை என்றால், இவர்கள் மனித தன்மையில் மனித ஞானத்தில், மனித முயற்சியில், மனித கல்வியில் தான் வேதத்தை மொழிப்பெயர்த்தார்களே தவிர ஒருவரும் தேவனின் சிந்தையில் (ஆவியில்) செயல்ப்படவில்லை!! சில பல வசனங்களை தனி திரியில் கொடுத்து வருகிறேன், இவர்கள் எந்த அளவிற்கு பிழை செய்திருக்கிறார்கள் என்று!! இதை வைத்துக்கொண்டு தான் இத்துனை ஆண்டுகள் அதில் உள்ள தவறை அறிந்தோ, அறியாமலோ போதித்து வருகிறார்கள்!! கிறிஸ்துவின் வருகையின் வெளிச்சம் தெரியவர மறைவாக இருந்த பல விஷயங்கள் நமக்கு வெளிச்சமாக இருக்கிறது, விஞானத்தின் வளர்ச்சி நம்மை வேதத்தை இன்னும் தெளிவாகவும், அநேக மொழிப்பெயர்ப்புகளில் வாசிக்க துனை செய்கிறது!!

தேவ மனிதர்கள் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபையை சார்ந்தவராக இருக்கிறார்கள்!! இவர்கள் அனைவரும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்களென்றால், தங்கள் சபைக்கு வருவோரிடம் பிற சபைகளுக்கும் போய் வாருங்கள் என்று சொல்லுவார்கள், ஆனால் இவர்கள் ஒரே விசுவாசத்தை கொண்டிராதவர்களாக இருப்பதினால் தங்கள் சபைக்கு வருவோரை பிற சபைக்கு போகக்கூடாது என்று போதிக்கிறார்கள்!! இது என்ன நாடகம்!!

தொடரும்...............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சரியான உபதேசமே என்னவென்று சற்றும் அறியாத 'தேவ மனிதர்கள்' அடிப்படை சத்தியங்களான மரணம், ஆவி, ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், வாழ்நாள் முழுவதும் போலியை போதித்துக்கொண்டும், பிரசங்கம் செய்துகொண்டும் இருக்க சிருஷ்டிகராலே மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, வஞ்சிக்கிற ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்படுவதாலேயே யோவான் இதைக் குறித்து திகைத்து ஆச்சரியப்படுகிறான்....

2யோவான்7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

3யோவான் 9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.

அப்போஸ்தலரையே ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்போதே இருந்திருக்கிறார்கள்.

தற்கால பாபிலோனிய கிறிஸ்தவம் சேற்றில் மூழ்கிக்கொண்டு துருபதேசம் பற்றி எச்சரிக்கிறது. எங்கே நீங்கள் சொன்னதுபோல அடுத்த சபைக்கு போகவோ அல்லது அங்கு காணிக்கை அனுப்பவோ சொல்லுங்கள் பார்க்கலாம். 'இங்க பிரியாணி சாப்பிட்டுவிட்டு பக்கத்து ஹோட்டலில் பில் கட்டுவாயா?' என்று வெட்கமில்லாமல் கேட்பார்கள்.

திரித்துவக் கோமாளிகள்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

யோவான்:

//உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.//

நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் தேவசித்தம். நாம் பூரண பலனைப் பெறுவதும், பெறாதிருப்பதும் தேவசித்தப்படியே நடந்துவிட்டு போகட்டும். மனிதன் எச்சரிக்கையாயிருந்தால்தான் தேவன் அவனுக்கு பூரண பலனைக் கொடுக்கமுடியுமா? அது உண்மையெனில் அது தேவவல்லமையை அவமாக்கிவிடுமே!

(எல்லாம் தேவசித்தம் எனும் “உங்கள்” சித்தாந்தத்தின் அடிப்படையில் இக்கருத்து. எனது கருத்து: வசனம் சொல்கிறபடி நாம் எச்சரிக்கையாயிருந்தால்தான், தேவனால் நமக்கு பூரணபலனைத் தரமுடியும்)



-- Edited by anbu57 on Tuesday 12th of July 2011 05:52:40 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//'இங்க பிரியாணி சாப்பிட்டுவிட்டு பக்கத்து ஹோட்டலில் பில் கட்டுவாயா?' என்று வெட்கமில்லாமல் கேட்பார்கள்.//

எல்லாம் தேவசித்தப்படி நடந்துவருகிறது. அவர்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தான். அவர்களை ஏன் வெட்கமில்லாதவர்கள் என்கிறீர்கள்?

எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடக்கின தேவன், அவர்களையும் கீழ்ப்படியாமைக்குள் அடக்கிவைத்துள்ளதால்தான் அவர்கள் இப்படி நடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரக்கம்தானே கிடைக்கப்போகிறது?

தேவஇரக்கத்தைப் பெறப்போகிறவர்களைப் பார்த்து, ஏன் “வெட்கமில்லாதவர்கள்” என பரிகாசம் செய்கிறீர்கள்? ஓ, நீங்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தானோ? அதற்கு நான் இம்மாதிரி பதில் சொல்வதும் தேவசித்தம் தானோ?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//சரியான உபதேசமே என்னவென்று சற்றும் அறியாத 'தேவ மனிதர்கள்' அடிப்படை சத்தியங்களான மரணம், ஆவி, ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், வாழ்நாள் முழுவதும் போலியை போதித்துக்கொண்டும், பிரசங்கம் செய்துகொண்டும் இருக்க சிருஷ்டிகராலே மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, வஞ்சிக்கிற ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்படுவதாலேயே யோவான் இதைக் குறித்து திகைத்து ஆச்சரியப்படுகிறான்....//

இதில் ஏன் யோவான் திகைத்து, ஆச்சரியப்படவேண்டும்? எல்லாம் தேவசித்தப்படியே நடக்கிறது என நீங்கள் அறிந்ததை யோவான் அறியவில்லையோ?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//திரித்துவக் கோமாளிகள்!//

என்ன சார் நியாயம் இது? தேவசித்தப்படியே நடந்துவருகிறவர்களைப் பார்த்து இப்படி சொல்வது நியாயம்தானா?

ஓ, நீங்கள் இப்படிச் சொல்வதும் தேவசித்தம்தானோ? இதை நான் அடிக்கடி மறந்துவிடுகிறேன். சாரி பிரதர்.

ஆனாலும் நான் இப்படிக் கேட்பதும் தேவசித்தம்தானே! அதனால் என்மீது கோபம் வேண்டாம் பிரதர்.

இல்லையில்லை. நீங்கள் கோபப்படுவதானால் தாராளமாகக் கோபப்படுங்கள். ஏனெனில் நீங்கள் கோபப்பட்டால் அதுவுங்கூட தேவசித்தம்தானே!



-- Edited by anbu57 on Tuesday 12th of July 2011 06:17:46 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//தேவ மனிதர்கள் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபையை சார்ந்தவராக இருக்கிறார்கள்!! இவர்கள் அனைவரும் ஒரே விசுவாசத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்களென்றால், தங்கள் சபைக்கு வருவோரிடம் பிற சபைகளுக்கும் போய் வாருங்கள் என்று சொல்லுவார்கள், ஆனால் இவர்கள் ஒரே விசுவாசத்தை கொண்டிராதவர்களாக இருப்பதினால் தங்கள் சபைக்கு வருவோரை பிற சபைக்கு போகக்கூடாது என்று போதிக்கிறார்கள்!! இது என்ன நாடகம்!!//

என்ன பிரதர் இப்படி வருத்தப்படுகிறீர்கள்? இந்த நாடகம் எல்லாவற்றையும் தேவன்தானே அரங்கேற்றி வருகிறார்? அவரது சித்தம் இல்லாமல் யாராவது இந்த நாடகத்தை நடத்த முடியுமா?

இந்த நாடகத்தில் தேவனுக்கும் பங்கு உண்டு. இதை நான் சொல்லவில்லை, நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆம், நடப்பது எல்லாம் தேவசித்தமே என ஒரு வரியில் நீங்கள் தானே சொல்லியுள்ளீர்கள்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//துருபதேசங்களை குறித்து ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது!! என்ன ஒரு கொடுமையென்றால்,//

கொடுமையாக இருந்தாலும், அதுதான் தேவசித்தம் சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

நீங்கள் தேவசித்தத்தை கொச்சைப்படுத்துவதாக எழுதுகிறீர்கள்!! வேண்டாம் என்று நினைக்கிறேன்!! நடப்பது எல்லாம் தேவனின்சித்தம் தான்!! யூதாஸ் இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுப்பான் என்று தெரிந்தும், அவர் சொல்லுகிறார்,

மாற்கு 14:21. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

கிறிஸ்து மரிப்பதே தேவனின் சித்தம் என்று தெரிந்தும், அவர் கேட்கிறார்,

லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மனிதர்களான நாம் தேவனின் சித்தம் அறியாதவர்களாக நடந்துக்கொள்வதினால் தான் பிரச்சனையே!! நாம் மனுஷத்தன்மையில் யோசிக்கிறோம், நாம் யோசிப்பது ஜெயம்பெறுவதில்லை, ஏனென்றால் அது தேவனுக்கு சித்தமானது அல்ல!! நான் ஜெபிக்கும் போது தேவ சித்தம் இருந்தால் இது நடைபெறட்டும் என்று தான் கேட்கிறோம்!! நடந்தாலும் நடக்காவிட்டாலும் அது தேவ சித்தம் என்கிறோம், அப்படி என்றால் அது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொல்லுகிறோமா!!

உங்களுக்கு நீங்கள் செய்யும் கிரியைகளின் மேல் அதிகம் விசுவாசம் போல்!! ஆனாலும் அந்த கிரியைகளை செய்ய வைக்கிறவரும் தேவனின் சித்தம் தான் என்று அறியாமல் உங்கள் சுய சித்தத்தினால் நீங்கள் செய்வதாக நினைக்கிறீர்கள் போல்!! எல்லாமே தேவ சித்தம் தான் என்று இருக்கும் போது, நான் சப்பிட்டு விட்டு கை கழுவுவது தேவ சித்தமா, நான் பல் தெய்த்துவிட்டு சாப்பிடுவது தேவ சித்தமா அல்லது பல் துளக்காமல் சாப்பிடுவது தேவ சித்தமா என்று கேட்பது தேவ சித்தத்தை நக்கல் செய்து கேட்பது போல் இருக்கிறது!!

இவ்வுளவு கேட்ட நீங்கள் ஏன் இந்த வசனத்திற்கு பதில் சொல்ல கூடாது?

1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

யார் அவர்களை திருவசனத்திற்கு கீழ்ப்படியதவர்களாயிருக்க நியமிக்கிறார்?

ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ஏன் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்?

ரோமர் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

எதற்கு இந்த முன்குறிப்பு?? அது தான் கிரியைகளினால் நீங்களாகவே அவரின் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாகலாமே!!

தேவனை அறிகிற அறிவு என்பதே அவரின் சித்தத்தின்படி செய்கிறோம் என்று தான் அர்த்தம்!! நீங்கள் உடை அனிவதில் கூட அவரின் சித்தம் இருக்கிறது, நீங்கள் சாப்பிடும் ஆகாரத்திலும் அவர் சித்தம் இருக்கிறது!! நீங்கள் தீமை செய்வதிலும் அவர் சித்தம் தான் இருக்கிறது!! இதை எல்லாம் மீறி நீங்கள் உங்கள் செயல்களால் அல்லது கிரியைகள் செய்து அது தேவனின் சித்தம் அல்லாமல் நீங்களாக செய்கிறீர்கள் என்று நினைப்பது தவறாகும்!! உடனே நீங்கள் கேட்கலாம், அப்படி நான் (அன்பு) நினைப்பது தேவனின் சித்தம் தானே என்றால் அதற்கு நான் ஆம், அதுவும் தேவனின் சித்தம் தான் என்று தான் பதில் தருவேன்!!

//என்ன பிரதர் இப்படி வருத்தப்படுகிறீர்கள்? இந்த நாடகம் எல்லாவற்றையும் தேவன்தானே அரங்கேற்றி வருகிறார்? அவரது சித்தம் இல்லாமல் யாராவது இந்த நாடகத்தை நடத்த முடியுமா?

இந்த நாடகத்தில் தேவனுக்கும் பங்கு உண்டு. இதை நான் சொல்லவில்லை, நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆம், நடப்பது எல்லாம் தேவசித்தமே என ஒரு வரியில் நீங்கள் தானே சொல்லியுள்ளீர்கள்?//

நான் இப்ப என்ன சொல்லுகிறேன், அவரின் சித்தம் இல்லாமலா அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றா எழுதியிருக்கிறேன்!! அவர்கள் செய்வது தேவ சித்தம் என்றால், அது வேதத்தின்படி தவறு என்று எழுதுவதும் தேவன் எனக்கு நியமித்திருக்கிறார் என்று தான் சொல்லுவேன்!!

//கொடுமையாக இருந்தாலும், அதுதான் தேவசித்தம் சகோதரரே!//

அதில் என்ன சந்தேகம்!! தேவனின் சித்தம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது!! அவரின் ஆவியை பெற்ற நான் வேதத்தின்படி எழுதுகிறேன் என்றால் நிச்சயமாக அவரின் சித்தம் இல்லாமல் எழுதமுடியாது!! நான் செய்யும் எதற்கும் தேவனுக்கு க்ரெடிட் தருகிறேன் ஏனென்றால் அவரால் தான் நான் எதையும் செய்கிறேன் என்று, ஆனால் நீங்கள் ஒருவேளை உங்கள் சுய முயற்சியை மெச்சிக்கொள்வதால் தேவனுக்கு அடுத்த இடத்தை தருகிறீர்களோ என்கிறா சந்தேகம் ஏற்படுகிறது!!
இப்படி பட்ட பல கொடுமைகளை வேதத்தில் எழுதியிருக்கிறார்கள்!! உயிர்த்தெழுதல் நடந்தாகிவிட்டது என்று பிரசங்கித்தவர்களை பவுல் சாத்தானுக்கு ஒப்பு கொடுக்கிறார்!! ஓநாய்கள் வரும் என்கிறார், வியாதிக்கு தேவனை நம்பியிருக்கிறார்!!

II தெசலோனிக்கேயர் 1:12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.

விசுவாசத்தின் கிரியை பலமாய் நீங்களாக செய்துக்கொள்ளுங்கள் என்று பவுல் சொல்லவில்லை, மாறாக தேவன் அதை உங்களிடத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று ஜெபிக்கிறோம் என்கிறார்!! தேவனை குறித்தான அறிவே தேவ சித்தம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2 தெசலோனிக்கேயர் 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

என்ன சகோ அன்பு அவர்களே, பொய்யை விசுவாசிக்கத்தகதாக கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்று தானே வசனம் இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இதில் ஏன் யோவான் திகைத்து, ஆச்சரியப்படவேண்டும்? எல்லாம் தேவசித்தப்படியே நடக்கிறது என நீங்கள் அறிந்ததை யோவான் அறியவில்லையோ?//

யோவானும் நம்மைப்போன்ற மனிதன் தான். நாங்களும் தேவனுடைய செய்கைகளின் மகத்துவங்களை அறிந்து திகைத்து, ஆச்சரியப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு இது கேலிக்கூத்தாக இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும். 

I கொரிந்தியர் 4:5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

யோபு 21:27 இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.

சங்கீதம் 33:10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

சங்கீதம் 33:11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

 

சங்கீதம் 139:2 என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

 

ஆமோஸ் 4:13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

 

எரேமியா 17:10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

 

தேவனுக்கு சித்தமில்லாத காரியங்களும் மனிதன் மூலமாய் நடக்கிறது என்றால் தேவன் மாபெரும் குழப்பத்துக்கு ஆளாவார். யூதாஸ் காட்டிக்கொடுக்க 'நினைக்காவிட்டால்' அப்படி 'நினைக்கப்போகும்' யாருக்காகவாவது தேவன் காத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது 'தற்செயலாக' யூதாஸ் காட்டிக்கொடுக்கப்போவதை அவர் 'ஞான திருஷ்டியில்' தெரிந்து கொண்டு எழுதிவைத்தாரா தெரியவில்லை.

பிரசங்கி 6:10 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்;

அப்போஸ்தலர் 15:18 உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.

அன்பு அவர்களே, எங்களுக்கு 'நியமிக்கப்பட்டதை' நாங்கள் செய்கிறோம். எதையும் எதிர்பார்த்தல்ல. நாங்கள் இப்போது எதிர்க்கும் யாவரும் உயிர்தெழுதலில் கற்றுக்கொள்வார்கள் என்று தெரியும். யாரையும் திருத்தவோ, மனம் மாறச்செய்வதோ எங்கள் நோக்கமல்ல. இத்தளத்தின் மூலம் ஒருசிலராவது தேவனால் சத்தியத்தை அறிய 'நியமிக்கப்பட்டிருக்கலாம்'. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 

சகலமும் தேவ சித்தம்.

நீதிமொழிகள் 16:4 கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;

அப்போஸ்தலர் 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

I யோவான் 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

வெளி 4:11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//சகோ அன்பு அவர்களே,

நீங்கள் தேவசித்தத்தை கொச்சைப்படுத்துவதாக எழுதுகிறீர்கள்!! வேண்டாம் என்று நினைக்கிறேன்!! நடப்பது எல்லாம் தேவனின்சித்தம் தான்!!//

சோல்சொல்யூஷன்:

//யோவானும் நம்மைப்போன்ற மனிதன் தான். நாங்களும் தேவனுடைய செய்கைகளின் மகத்துவங்களை அறிந்து திகைத்து, ஆச்சரியப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு இது கேலிக்கூத்தாக இருக்குமானால் இருந்துவிட்டுப்போகட்டும்.//

தேவசித்தத்தைக் கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை; உங்களது கருத்தை கேலிக்கூத்தாகவும் நான் நினைக்கவில்லை. நாம் உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்ற அவாவில், வேறு வழியின்றி, “எல்லாம் தேவசித்தம்” எனும் உங்கள் சித்தாத்தத்தின் விளைவுகளை சற்று ஜனரஞ்சகமாக எழுதியிருந்தேன். அது உங்கள் மனதைப் புண்படுத்தினால் மன்னியுங்கள் சகோதரர்களே!

பெரியன்ஸ்:

//2 தெசலோனிக்கேயர் 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

என்ன சகோ அன்பு அவர்களே, பொய்யை விசுவாசிக்கத்தகதாக கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்று தானே வசனம் இருக்கிறது!!//

வசனத்தை அரைகுறையாக வெளியிடுவதும் ஒரு வகையில் வேதப்புரட்டாகிவிடும் சகோதரரே! உங்கள் வசனத்தை முழுமையாகப் படியுங்கள்.

2 தெச. 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

வசனத்தின் முழுமையான கருத்து இப்போது புரிந்ததா சகோதரரே?

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுவோர் ஆக்கினைக்குள்ளாகத்தான் தேவன் கொடியை வஞ்சகத்தை அனுப்புவார், எல்லோருக்காகவும் அல்ல.

இதே போல்தான் நீங்கள் குறிப்பிடுகிற பல வசனங்கள். உதாரணமாக: ரோமர் 11:32-ன்படி தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமையில் அடைத்துப்போடுவார் என்பது, கீழ்ப்படிய வாஞ்சிப்பவர்கள், வாஞ்சியாதவர்கள் எனும் எல்லாரையும் அல்ல; கீழ்ப்படிய வாஞ்சியாத எல்லோரையும் தான் கீழ்ப்படியாமையில் அடைத்துப்போடுவார். கீழ்ப்படிய வாஞ்சிப்பவர்களை அவர் கீழ்ப்படியாமைக்குள் அடைப்பதில்லை. மாறாக, அவர்கள் கீழ்ப்படியத்தக்கதாக அவர்களுக்கு உதவிதான் செய்வார். (இதுபற்றி தீமைக்கு யார் காரணம் எனும் திரியிலுள்ள எனது பதிவைப் படியுங்கள்.)

உதாரணமாக: ஆபிரகாமை கீழ்ப்படியாமையில் அடைக்கவில்லை, ஈசாக்கை அடைக்கவில்லை, யோபுவை அடைக்கவில்லை, யோசேப்பை அடைக்கவில்லை, நோவாவை அடைக்கவில்லை; இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றுமொரு வசனத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

இவ்வசனத்தின் கருத்தையும் புரட்டத்தக்கதாக, அரைகுறையாகத்தான் வெளியிட்டுள்ளீர்கள். கீழே முழுமையாக நான் தருகிறேன், கவனமாகப் படியுங்கள்.

1 பேதுரு 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; 8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

விசுவாசிப்பவர்கள் (கீழ்ப்படிகிறவர்கள்), கீழ்ப்படியாதவர்கள் (அவிசுவாசிகள்) எனும் 2 பிரிவினரைக் குறித்து பேதுரு சொல்வதைக் கவனியுங்கள். இவ்விரு பிரிவினருமல்ல, கீழ்ப்படியாமற்போனவர்கள் எனும் ஒரு பிரிவினரிலுள்ள எல்லோரும்தான், தங்கள் கீழ்ப்படியாமையின் காரணமாக இடறுவதெற்கென்று நியமிக்கப்பட்டார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.பெரியன்ஸ் அவர்களே!

இத்திரியின் ஓட்டத்தைத் திசை திருப்பும் வண்ணமாக சில பதிவுகளை நான் பதித்துவிட்டேன். எப்படியாயினும் நாம் உண்மையைக் கண்டறிய வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில்தான் அப்பதிவுகளைப் பதிய நேரிட்டது. தவறானால் மன்னிக்கவும்.

திசை திருப்பப்பட்ட இத்திரி நேராகச் செல்லத்தக்கதாக, திசை மாறிச் சென்ற எனது வாதத்தை வேறொரு திரியில் தொடர்கிறேன்.

இனி நீங்கள் இத்திரி நேராகச் செல்லத்தக்கதான உங்கள் பதிவுகளைப் பதியுங்கள். நன்றி.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இனியும் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால், அடுத்தவர்கள் எதை எழுதுகிறார்களோ அதை எடுத்து போடுவது சிலருக்கு புதிய தொழிலாக இருக்கிறது!!

இதுவும் தேவனின் சித்தம் தான்!! நம் தளத்தில் வந்து வாசிக்க முடியாதவர்கள், தேவ சித்தம் என்றால் என்ன என்பதை குறித்து அவரின் தளத்திலேயே வசிப்பது தேவனின் சித்தமாக தான் இருக்க முடியும்!! தேவ சித்தம் பலருக்கு நக்கலாகவும் நய்யாண்டியாகவும் தான் இருக்கும், ஏனென்றால் இவர்கள் ஊழியம் (!!) என்று ஒன்று செய்வது கூட இவர்களின் வல்லமையும், பேச்சு திறனிலும் தான் என்று நினைத்திருக்கிறார்கள்!!

சும்மா தேவன் மேல் மரியாதை வைத்திருப்பது போல், "கர்த்தருக்கு சித்தமானால், நாம் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லுவார்கள் போல்!! ஆனால் நாங்கள் அப்படி அல்ல, உண்மையாகவே அதை நம்புகிறோம், ஏனென்றால் கர்த்தரின் சித்தமே சகலத்திலும் இருக்கிறது!! சகலமும் அவரின் சித்தத்தின்படியே நடக்கிறது!! தேவனின் சித்தம் இவர்களுக்கு புரியாததினால் தான் இது வரையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் அனைவருக்கும் மீட்பு உண்டு என்கிற தேவ சித்தத்தையும் புரியாதப்படிக்கு இடறுகிறார்கள்!!

சகோ அன்பு அவர்களே, இந்த திரியில் துருபதேசத்தாரின் துருபதேசங்களை குறித்து தான் எழுத நினைத்தேன், ஆனால் தங்களின் கேள்விகள் சற்றே திசை திருப்பி விட்டது, ஆனாலும் தேவனின் சித்தத்தை குறித்தான பதிவுகள் எல்லா திரியிலும் இருக்க வேண்டும் என்பது தேவ சித்தம் என்று தான் நினைக்க தோன்றுகிறது!!

உங்களின் கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு பிறகு தொடருகிறேன்,

2 தெச. 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

சகோ அன்பு அவர்களே, சத்தியத்தை விசுவாசியாமல் இருந்து நியாயத்தீர்ப்பு அடைய (ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு) தேவன் அவர்களை பொய்யை விசுவாசிக்கத்தத்தாகக் கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார்!! ஏற்கனவே பொய்யர்களாக இருக்கிறவர்களுக்கு கொடிய வஞ்சகம் எதற்கு!! ஏற்கனவே வஞ்சகத்திற்குள் இருப்பவர்களுக்கு தேவன் வஞ்சகத்தை ஏன் அனுப்புவார்!! ஆகவே, இந்த வசனத்தின்படி கொடிய வஞ்சகத்தை தேவன் அனுப்பியதால் தான் இவர்கள் பொய்யை விசுவாசிக்கிறார்கள் என்பது தான் சரியான புரிந்துக்கொள்ளுதல்!!

//சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுவோர் ஆக்கினைக்குள்ளாகத்தான் தேவன் கொடியை வஞ்சகத்தை அனுப்புவார், எல்லோருக்காகவும் அல்ல.//

ஏற்கனவே அநீதியிலும் பொய்யிலும் இருப்பவர்களுக்கு எதற்கு அய்யா கொடிய வஞ்சகம் தேவை!! கொடிய வஞ்சகமே அவர்கள் சத்தியத்தை விசுவசியாமல் போவதற்கு தான்!!!

ரோமர் 11ம் அதிகாரத்தை குறித்து தனி திரியில் விளக்கம் தருகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard