kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
தீமைக்கு யார் காரணம்? தேவனா?


 

தீமைக்கு யார் காரணம்? தேவனா?

வசனம் என்ன சொல்கிறது?

பார்க்கலாம்.

"ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7

"உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?." புலம்பல் 3:38

"... மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்." பிர 1:13

"... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?" ரோம 9:18‍‍ ‍‍‍‍‍முதல் 25

"... நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகாசங்காரத்தையும் வரப்பண்ணுவேன்." எரே 4:6

"... நான் அவர்கள் மேல் ... தீங்கை வரப்பண்ணுவேன்." எரே 6:19

" ... அப்பொழுது அது(பொய்யின் ஆவி), நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்(கர்த்தர்):... போய் அப்படிச் செய் என்றார்." 1இராஜா 22:22

"தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்." சங்105:25

"... இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்..." எரே18:11

"கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் ப்யப்படாதபடிக்கு கடினப்படுத்துவானேன்?..." ஏசா 63:17

"...இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்...." யோசு 23:16

"... கர்த்தருடைய செயல் இல்லமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?" ஆமோஸ் 3:6

" சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.

 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.யாத்திராகமம் 10:20

நடக்கின்ற காரியங்களுக்கு தேவன் பொறுப்பல்ல என்று வாதிடுவதும் துருபதேசம்தான். ஆனால் தேவன் இவற்றையெல்லாம் செய்வது ஒரு உன்னத நோக்கத்துக்குத்தான் என்று அறியவேண்டும்! 

.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இத்துனை வசனங்களையும் மீறி தேவன் படைத்து, அனுமதிக்கிற தீமைக்கும் தேவனுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் சுய‌நீதிமான்கள் சொல்லுவதுண்டு!!

ஏசாயா 40:13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

தேவன் யார் என்று தெரியாதவர்கள் தேவனின் பன்புகளையும் அவரின் வல்லமையையும் அவர் வைத்திருக்கும் நன்மையானவைகளையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்!! மாறாக தேவனை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்!!

அது மாத்திரம் இல்லை, எல்லாமே அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், ஒன்றும் எல்லை மீற முடியாது என்பதை படைத்தவர் அறிய மாட்டாரா!! அவர் விரட்டி அடித்த, அவர் வெறுத்த அனைவரையும் அவர் கூட்டி சேர்க்கும் காலம் வருகிறது!!

எரேமியா 31:8 இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

இவர்களையேல்லாம் கூப்பீட்டு அவர்களை "நித்திய ஆக்கினை" அல்லது என்றென்றைக்கும் எரிந்துக்கொண்டிருக்கும் நரகத்தில் தேவன் போடுவார் என்று சொல்லுவது எத்துனை பெரிய அபத்தம்!!

இப்பொழுது தேவன் தீமையை அனுமதித்து, மனுக்குலம் தீமையின் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும்படி அனுமதித்திருக்கிறார்!! அதை தான் பவுல் இப்ப இருக்கும் பொல்லாத பிரபஞ்சம் என்கிறார்!!

கலாத்தியர் 1:4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

இப்பவும் ஒரு பொல்லாத பிரபஞ்சத்தை கொடுத்து அதன் பின் தூக்கி இன்னோரு பொல்லாத அக்கினியில் போட்டு வேகவைத்துக்கொண்டிருப்பது தான் தேவனின் நோக்கம் என்று சொல்லி வேறு ஒரு சுவிசேஷத்தை பிரசங்கம் செய்கிறார்கள் தேவனை அறியாதவர்கள்!! மாறாக இந்த இப்ப இருக்கும் இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் தீமையின் அனுபவத்தை பெற்றுக்கொண்டு அதன் பின் தேவனின் ராஜியத்தில் நன்மையின் அனுபவத்தை பெற்றுக்கொள்வார்கள்!!

ஏசாயா 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

அவரின் வழியை பின்பற்றுவோராக இருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//அவரின் வழியை பின்பற்றுவோராக இருங்கள்!!//

அவரது வழியைப் பின்பற்றுவது எப்படி?

அவரது வழியை எதற்காகப் பின்பற்ற வேண்டும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மனிதனின் கீழ்ப்படியாமைதான் தேவன் அவன் மீது தீமையைக் கொண்டுவர பிரதான காரணம். வேறு சில காரணங்களும் உண்டு. ஆனால் பிரதான காரணம் மனிதனின் கீழ்ப்படியாமையே!

முடிந்தால் தேவன் செய்த மற்றொரு தீமையையும் சொல்லுங்கள்.//

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

மனிதனுடைய கீழ்ப்படியாமைக்கும் காரணம் யார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லி தேவனைக் காப்பாற்றப்போகிறீர்களோ?

உலககில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும், அநியாயங்களும், கொள்ளை நோய், இன்னபிர துர்சம்பவங்கள், இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே தேவனால் 'ப்ரொக்ராமிங்' செய்யப்பட்டவையே! இது ஏதோ அவருக்கே தெரியாமல் அவருக்கு வியப்பளிப்பதாக இருந்தால் தேவனுடைய வல்லமையை குறைகூறுவதாகும். 'கடைசிக் காலங்களில்' இப்படி நடக்கும் என்று ஏன் தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டும். 'தற்செயலாக' நடக்காமல் போகக்கூட வாய்ப்புள்ளதே? 

நடப்பிக்கிறவர் மட்டுமே ஆணித்தரமாக இவைதான் நடக்கும் என்று சொல்ல முடியும்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தேவனால் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டதுதான். அவை நடந்தே தீரும். அப்படி நடக்காதபட்சம் தேவன் தேவத்துவத்தை இழந்துவிடுவார். 

யூதாஸ் தன்னுடைய பாத்திரத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்; அது போலத்தான் உலகத்திலுள்ள அனைவருமே. வேறு வழியே இல்லை. களிமண், குயவன் ஒரு சிறந்த உதாரணம். அதைவிட வேறு விளக்கம் தேவையில்லை.

இப்போது இரட்சிக்கப்படுவதற்கு ஒரு 'சிறு மந்தை'யை அவர் முன்குறித்திருக்கிறார் 'அந்த இரட்சிப்புக்கான' வசனங்களை நீங்கள் உலகத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். உலகத்துக்கு இரட்சிப்பு உயிர்த்தெழுந்தபின்னர் அறிவிக்கப்படும். 

நம் கையில் ஒன்றுமேயில்லை என்று ஏற்றுக்கொள்வதற்கு எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக (உபதேசங்களை) எண்ணும் மனப்பாங்கும், தேவனுடைய பரிபூரண அன்பை உணரும் இருதயமும், எல்லாவற்றுக்கும் மேலாக சத்தியத்தை அறியும் அறிவையடைய அவர் கிருபையும் வேண்டும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

மனிதனுடைய கீழ்ப்படியாமைக்கும் காரணம் யார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லி தேவனைக் காப்பாற்றப்போகிறீர்களோ?//

பவுலின் கூற்றுப்படி தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறீர்கள். சரி, பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

ஆபிரகாமை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்? (அதாவது ஆபிரகாம் எந்த விஷயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை?)

நோவாவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

ஈசாக்கை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

யோபுவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆபிரகாமை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்? (அதாவது ஆபிரகாம் எந்த விஷயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை?)

நோவாவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

ஈசாக்கை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

யோபுவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?//

இவர்களின் யார் ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொல்லுங்கள்!! கீழ்ப்படியாமை என்பதே மரணத்துக்கு ஏதுவாக வந்த தீமையின் விளைவான பாவம் தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//

//ஆபிரகாமை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்? (அதாவது ஆபிரகாம் எந்த விஷயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை?)

நோவாவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

ஈசாக்கை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?

யோபுவை எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்?//

இவர்களின் யார் ஒரு பாவமும் செய்யவில்லை என்று சொல்லுங்கள்!! கீழ்ப்படியாமை என்பதே மரணத்துக்கு ஏதுவாக வந்த தீமையின் விளைவான பாவம் தான்!!//

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சகோ.பெரியன்ஸ் அவர்களே!

ஆபிரகாமைக் குறித்து தேவன் இப்படிச் சொல்கிறார்.

ஆதியாகமம் 22:18  என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆபிரகாம், ஈசாக்கு, நோவா, யோபு ஆகியோர் பாவம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர்களில் யாரையாவது தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டாரா? ஆம் எனில், எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போட்டார்? கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

இப்படி ஒரு வசனம் இருக்கும் போதே, மோசே, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு போன்றோரை தேவன் எந்த கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் என்கிற கேள்வியே தவறு!! ஆகவே தான் நான் அப்படி கேட்டேன்!!

சகோ அன்பு அவர்களே, கீழ்ப்படியாமைக்குள்ளே தேவன் அனைவரையும் அடைத்துப்போட்டார் என்று அவரின் வசனம் சொல்லும் போது, அது எப்படி என்று எதிர்த்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது!! தாவீதும் தான் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான், அவனின் பாவம் பகிரங்கமாக எழுதப்பட்டிருக்கிறது!! நீங்கள் கேட்ட இந்த நால்வரின் பாவங்களை குறித்து வேதம் எதுவும் சொல்லியிருக்கிறதா என்று பார்த்து தான் சொல்ல முடியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

// நீங்கள் கேட்ட இந்த நால்வரின் பாவங்களை குறித்து வேதம் எதுவும் சொல்லியிருக்கிறதா என்று பார்த்து தான் சொல்ல முடியும்!!//

இவர்களெல்லாம் பாவமே செய்யாத நீதிமான்கள் என்றால் பாவத்தின் சம்பளமான மரணம் இவர்களுக்கு நேரிட்டிருக்க கூடாது.

ரோமர் 3:23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

எல்லாரும் பாவிகள் என்றுதான் வேதம் சொல்கிறது.ஒருவர்கூட பாக்கியில்லாமல்... 

I யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நீதிமான்(பரமயோக்கியன்) ஒருவனாகிலும் இல்லை. யாரும் விதிவிலக்கல்ல‌...

அப்படி யாராவது இருக்கும்பட்சம் கிறிஸ்துவின் இரத்தம் விருதா... 

யோபு42:1. அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

2. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

3. அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். 

இப்படித்தான் நம் புத்திக்கு எட்டாததையும், நாம் அறியாததையும் அலப்பி. எல்லாரும் இரட்சிக்கப்படவும் அவரை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்று அவர் நினைத்தது மனிதன் மூலமாய்த் தடைப்படும் என்றும் வாதாடிக்கொண்டிருக்கிறோம்.

வேதம் எல்லாரையும், எல்லாரும் என்றால் எல்லாரையும்தான்; இதில் என்ன சந்தேகம், ஆராய்ச்சி வேண்டியுள்ளது?



-- Edited by soulsolution on Monday 11th of July 2011 11:12:05 PM



-- Edited by soulsolution on Monday 11th of July 2011 11:12:47 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இவர்களெல்லாம் பாவமே செய்யாத நீதிமான்கள் என்றால் பாவத்தின் சம்பளமான மரணம் இவர்களுக்கு நேரிட்டிருக்க கூடாது.//

அப்படியானால், பிறந்தவுடன் எத்தனையோ குழந்தைகள் மரித்துள்ளனவே! அதற்குக் காரணம் என்ன?

உடனே, சங்கீதம் 51:1-ஐக் காட்டி, பிறக்கும்போதே எல்லாரும் பாவத்தில்தான் பிறக்கிறார்கள் எனச் சொல்லக்கூடாது. ஏனெனில், அப்படி நீங்கள் சொல்வதாக இருந்தால், ஆபிரகாம், நோவா, யோபு போன்றவர்களுக்கு மரணம் நேரிட்டிருக்கக்கூடாது என நீங்கள் சொல்லியிருக்கக்கூடாது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேதம் எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான். எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டதை தேவன் ஒத்துக்கொண்டார் அன்பு ஒத்துக்கொள்ளவில்லை.

எல்லாரையும் அடைத்துப்போட்டதால் எல்லாரையும் அவரே கீழ்ப்படிதலுக்குள்ளும் அடைத்துப்போட்டு நித்திய ஜீவனைத் தருவார். அது அவர் சித்தம்.

மனிதன் என்றாலே மரித்துதான் ஆக வேண்டும் காரணம் பாவம், பாவமே இல்லாதவன் மரிக்கக்கூடாது. ஒரு முறை மரிப்பதும், அதன் பின் கற்றுக்கொண்டு நித்தியஜீவனை அடைவதும் மனிதனுக்கு தேவனால் 'நியமிக்கப்பட்டிருக்கிறது' மனிதன் என்றால் மனிதக் குலம். இது பெரியவர், சிறியவர், ஆண், பெண் என்றெல்லாம் இல்லை.

//அப்படியானால், பிறந்தவுடன் எத்தனையோ குழந்தைகள் மரித்துள்ளனவே! அதற்குக் காரணம் என்ன?//

சகலத்துக்கும் காரணம் தேவசித்தம் என்பதால் இதற்கும் காரணம் தேவசித்தம்தான்! "எல்லாரும்", "எல்லாரையும்", "சகலமும்" போன்ற எளிதான வார்த்தைகளுக்குக்கூட விளக்கம் சொல்ல வேண்டியுள்ளது.

குழந்தைகள் ஏன் மரிக்கிறார்கள் என்றால் அது தேவனால் 'நியமிக்கப்பட்டிருக்கிறது' ஒருத்தருக்கு 1000 வருடம் கொடுப்பதும் அல்லது சில நிமிடங்கள் கொடுப்பதும் அவர் இஷ்டம். இது அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி.

" சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.

 

பிள்ளைகளையும், குழந்தைகளையும் கொல்லும்படிக்கு 'நியமிப்பவர்' தேவன். அங்கு நேரடியாகக் கொல்லச் சொன்னார் இங்கு அவர் சித்தப்படியே குழந்தைகள் இறக்க வைக்கிறார். 

 

ஏனென்றால்,

பிரசங்கி 3:1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

 

பிரசங்கி 3:2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

 

பிரசங்கி 3:3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

நம் கையில் ஒன்றுமே கிடையாது என்பதை உணரவும் ஒரு காலமுண்டு!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பு57:

//ஆபிரகாம், ஈசாக்கு, நோவா, யோபு ஆகியோர் பாவம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர்களில் யாரையாவது தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டாரா? ஆம் எனில், எந்த கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போட்டார்? கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.//

பெரியன்ஸ்:

//சகோ அன்பு அவர்களே, கீழ்ப்படியாமைக்குள்ளே தேவன் அனைவரையும் அடைத்துப்போட்டார் என்று அவரின் வசனம் சொல்லும் போது, அது எப்படி என்று எதிர்த்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது!! தாவீதும் தான் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான், அவனின் பாவம் பகிரங்கமாக எழுதப்பட்டிருக்கிறது!! நீங்கள் கேட்ட இந்த நால்வரின் பாவங்களை குறித்து வேதம் எதுவும் சொல்லியிருக்கிறதா என்று பார்த்து தான் சொல்ல முடியும்!!//

உங்களால் என் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவும் முடியாது, அந்த நால்வரின் பாவம் குறித்து வேதாகமம் சொல்லியுள்ளதைக் கண்டுபிடிக்கவும் முடியாது.

எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் எனும் பவுலின் கூற்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் உங்களுக்கு இந்த நிலை.

தேவன் யாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட விரும்புவதில்லை. ஆதாம் உட்பட தமது சிருஷ்டிப்பான எல்லா ஜனங்களும் தமக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதுதான் தேவனின் விருப்பம்.

வேதாகமத்தை ஆதி முதல் அந்தம் வரை படித்துப்பார்த்தால், யாரெல்லாம் தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுடன் தேவன் நல்லுறவு வைத்து பிரியமாயிருப்பதையும், யாரெல்லாம் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்களோ அவர்களை அவர் பகையாய் பகைப்பதையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

தமது தாசன் என அன்போடு அழைத்த தாவீதுகூட, அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தபோது, தாவீதையும் தேவன் வெறுத்து அவருக்கு உரிய தண்டனையையும் கொடுத்தார்.

அப்படியிருக்க, ஒருவனைப் பகைத்து வெறுக்கும்படியாய், அவரே அவனை கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போடுவதி்ல்லை. எல்லா வசனங்களையும் அவை சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யும் நீங்கள், ரோமர் 11:32-ஐ அப்படி ஆராய்ச்சி செய்யத் தவறியதேனோ?

ரோமர் 11:32-ஐப் புரிந்துகொள்ள நான் ஓர் உதாரணம் சொல்கிறேன், கவனியுங்கள்.

மனிதருக்கும் தேவனுக்கும் உள்ள உறவை, தகப்பன் மகன் என்ற உறவு நிலைக்கு வேதாகமம் ஒப்பிடுவதை நாம் அறிவோம். அதே ஒப்பிடுதலின் அடிப்படையில் நான் சொல்வதை சற்று கவனியுங்கள்.

ஒரு தகப்பன் தன் மகனிடம், “மகனே, நீ எந்த நிலையிலும் யாரிடமும் கடன் வாங்காதே, கடன் வாங்கினால் அது உன்னை அழித்துவிடும்” எனச் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இப்போது தகப்பனின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? தன் மகன் தனக்குக் கீழ்ப்படிந்து யாரிடமும் கடன் வாங்காமலிருக்க வேண்டும் என்பதுதானே?

இப்படி தகப்பன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, மகன் தகப்பனுக்குக் கீழ்ப்படிய மறுத்து யாரிடமாவது கடன் வாங்கினால் தகப்பன் என்ன செய்வார்? 1. கீழ்ப்படியாத மகனை தன்னைவிட்டு புறம்பே தள்ளிவிடுவார், அல்லது 2. அவன் மேலும் மேலும் கடன் வாங்கும்படியான சூழ்நிலைகளை அவரே உண்டாக்கி, அவனை மேலும் மேலும் கடன் வாங்க வைத்து (அதாவது கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டு) கடன் வாங்குவதால் வரக்கூடிய விளைவுகளை முழுமையாக அனுபவிக்கவிட்டு, இறுதியில் மகன் தன் தவறுகளை உணரும்போது, தானே தனது மகனின் கடன்களை அடைத்து, தன்னோடு சேர்த்துக் கொள்வார், அப்படித்தானே?

இவ்விரு காரியங்களில் முதல் காரியத்தைச் செய்தால், தகப்பன் தன் மகனிடம் இரக்கம் கொள்ளவில்லை என அர்த்தம். மாறாக, 2-வது காரியத்தைச் செய்தால், தகப்பன் தன் மகனிடம் மிகுந்த இரக்கம் வைத்துள்ளார் என அர்த்தம். இப்போது நாம் என்ன சொல்வோம்? தன் மகன்மேல் இரக்கமாயிருக்கத்தக்கதாகத்தான் அவனைக் கீழ்ப்படியாமைக்குள் தகப்பன் அடைத்துப்போட்டார் எனச் சொல்வோமல்லவா?

இதே அர்த்தத்தில்தான் ரோமர் 11:32-ஐ பவுல் கூறுகிறார்.

நாமெல்லோரும் தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதே தேவனின் விருப்பம்; யாரெல்லாம் தேவனுக்குக் கீழ்ப்படிய நினைக்கிறார்களோ அவர்களின் சார்பாக தேவன் நின்று, அவர்களுக்கு உதவிசெய்பவராக இருக்கிறார். இதைத்தான் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

1 கொரி. 10:12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

எபிரெயர் 2:18 அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

நாம் விழாதபடி (அதாவது பாவத்தில் விழாதபடி) எச்சரிக்கையாயிருப்பது நமது கடமை. அப்படி எச்சரிக்கையாயிருந்தால், நமக்கு நேரிடக்கூடிய (பாவச்) சோதனைகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழியை தேவனே உண்டாக்கித் தருவார். சோதிக்கப்படுகிற நமக்கு கிறிஸ்துவானவர் உதவிசெய்பவராக இருக்க, தேவன் நம்மைக் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போடுகிறார் எனச் சொல்வது எப்படி பொருத்தமாயிருக்கும்?

எவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்களோ, அவர்கள் எல்லோரையும்தான் (மேற்கூறிய உதாரணத்தில் கூறியபடி) தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப் போடுகிறார். இக்கருத்துக்கு பின்வரும் வசனங்கள் இசைவாக இருப்பதைப் பாருங்கள்.

ஏசாயா 6:9 அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.

மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

மத்தேயு 13:15 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். 15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

எல்லோரது கண்களும் காதுகளும் அடைக்கப்படவில்லை. எவர்கள் உணராதவர்களாக இருந்தார்களோ அவர்கள் மேலும் உணராதிருக்கத்தக்கதாக அவர்களின் இருதயத்தை தேவன் கொழுத்ததாக்கினார். இதேவிதமாகத்தான் பார்வோனின் இருதயத்தையும் தேவன் கடினப்படுத்தினார். பார்வோன் ஏற்கனவே கடினமான இருதயமுள்ளவனாக இருந்ததால்தான், அவன் இஸ்ரவேலரை கொடுமைப்படுத்தினான். அப்படிப்பட்ட அவன் தேவனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவன் மேலும் மேலும் கடினப்பட இடங்கொடுத்தார்.

உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் எனும் கூற்றை நன்றாக சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள்.

ரோமர் 11:32-ல் பவுல் சொல்கிற ஜனங்கள் யாவரும், ஏற்கனவே தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள்தான். அவர்கள் எல்லோரையும்தான் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்.

ஒரு அறைக்கு (room) உள்ளே சென்றவனைத்தான் அந்த அறைக்குள் அடைத்துப்போட முடியும். அறைக்கு வெளியே இருப்பவனை எப்படி அறைக்குள் அடைக்கமுடியும்?

அவ்வாறே, ஏற்கனவே கீழ்ப்படியாமல் இருப்போரைத்தான் கீழ்ப்படியாமைக்கும் அடைக்கமுடியும். கீழ்ப்படிபவர்களை எப்படி கீழ்ப்படியாமைக்குள் அடைக்க முடியும்?

நாம் சுயத்தினால் எதுவும் செய்வதில்லை, தேவன் தான் நம்மைப் பாவம் செய்ய வைக்கிறார் என்கிறீர்களே! பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

யாக்கோபு 1:13  சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். 16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். (கவனம்)

மனிதர்களின் மனதை யார் குருடாக்கி வைத்துள்ளான எனப் பின்வரும் வசனம் சொல்வதையும் படியுங்கள்.

2 கொரி. 4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

இதைச் செய், இதைச் செய்யாதே என தேவனே மனிதனுக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தமது கட்டளைகளை மீறும்படியும் செய்யவைக்கிறார் என தேவனைக் குறித்து நீங்கள் சொல்வது, தேவனுக்கு அவப்பெயரைத்தான் கொண்டுவரும்.

இன்னும் வரும் ...



-- Edited by anbu57 on Tuesday 12th of July 2011 02:26:20 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இவர்களெல்லாம் பாவமே செய்யாத நீதிமான்கள் என்றால் பாவத்தின் சம்பளமான மரணம் இவர்களுக்கு நேரிட்டிருக்க கூடாது.//

//மனிதன் என்றாலே மரித்துதான் ஆக வேண்டும் காரணம் பாவம், பாவமே இல்லாதவன் மரிக்கக்கூடாது.//

//குழந்தைகள் ஏன் மரிக்கிறார்கள் என்றால் அது தேவனால் 'நியமிக்கப்பட்டிருக்கிறது' ஒருத்தருக்கு 1000 வருடம் கொடுப்பதும் அல்லது சில நிமிடங்கள் கொடுப்பதும் அவர் இஷ்டம். இது அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி.//

பாவம் செய்யாதவன் மரிக்கக் கூடாது என்றீர்கள்.

அப்படியானால் பாவமே செய்யாத குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் கேட்டால், அதைத் தேவனிடம் கேட்கவேண்டும் என்கிறீர்கள். உங்கள் கூற்று ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மனிதர்களின் மனதை யார் குருடாக்கி வைத்துள்ளான எனப் பின்வரும் வசனம் சொல்வதையும் படியுங்கள்.

2 கொரி. 4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

இதைச் செய், இதைச் செய்யாதே என தேவனே மனிதனுக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரே தமது கட்டளைகளை மீறும்படியும் செய்யவைக்கிறார் என தேவனைக் குறித்து நீங்கள் சொல்வது, தேவனுக்கு அவப்பெயரைத்தான் கொண்டுவரும்.//

மீண்டும் 'அவப்பெயரிலிருந்து' தேவனைக் 'காப்பாற்ற' எத்தனப்பட்டிருக்கிறீர்கள். 

இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்கள் (அவிசுவாசிகள்) மனதைக் குருடாக்கினான் என்று இப்போது சாத்தான் பேரில் பழிபோடுகிறீர்கள். ஏன் இங்கு மனித சித்தம் என்னாயிற்று? அவன் குருடாக்கிய மனக்கண்களை தேவன் உங்கள் மூலமாக பார்வையடைய கடும் முயற்சியில் இருக்கிறாரோ? 

தேவன் மனிதர்களுடைய‌ முடிவுகளை மாற்றுவதில்லை என்கிறீர்கள். ஆனால் சாத்தானால் அது முடியும் என்கிறீர்களா? விளக்கவும்.

இதைச் செய், அதைச் செய்யாதே என தேவனே மனிதனுக்குக் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு....

இதென்ன அபத்தம், எந்த மனிதனுக்குக் கொடுத்தார் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்? அந்தந்தக் காலக் கட்டத்தில் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கட்டளைகளைக் கொடுத்தார். மனிதனுக்கு என்று  எல்லாருக்கும் என்று நீங்கள் விளங்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. என்னமோ தேவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே உட்காரவைத்து இதைச் செய் அதைச்செய்யாதே என்று சொன்னதுபோல வாதாட வேண்டாம்.

பழைய ஏற்பாடு "என் ஜனங்கள்" என்று அவரால் முன் குறிக்கப்பட்ட சிலருக்கு எழுதப்பட்டது. அதை அவர்களாலெயே கடைபிடிக்க முடியாததால்தான்  கட்டளைகளால் செய்ய முடியாததை கிருபை செய்யும் என்ற புதிய ஏற்பாடு. பயனற்றதும் உருவழிந்துபோனதுமானது... ஒருவரை தண்டனைக்குப் பாத்திரமாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டம்தான் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டின்படி கிருபையும், மன்னிப்பும் கொடுக்கப்பட்டு தண்டனையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. 

ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

விசுவாசத்தைக் கொடுப்பவரும் தேவன் தான், அதைக் கொடுக்காதவரும் தேவன் தான். பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரவே மாட்டான் என்று கிறிஸ்து கூறியதை மறந்தேவிட்டீர்களா? 

 

//1 கொரி. 10:12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

எபிரெயர் 2:18 அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.//

தப்பிக்கொள்ளும் போக்கை ஏன் அவர் உண்டாக்க வேண்டும்? கீழ்ப்படியாமைக்கு தண்டனைதானே கொடுக்க வேண்டும்?

மாற்கு 4:11 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

 

லூக்கா 8:10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக‌... வேடிக்கையாக இல்லை?

இந்த வசனத்துக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்? வேதம் என்னமோ முழு மனுக்குலமும் இப்போதே அறிந்து அவர் சொன்ன அதைச் செய், இதைச்செய்யாதே என்பதை கடைபிடிப்பதற்கு என்று எண்ணினால் அது தேவனை கேலிப்பொருளாக்கிவிடும். வேதத்தை வாழ்நாள்முழுவதும் வாசிக்கிறவர்களே அதைப் புரிந்துகொள்ளவில்லை, நீங்கள் ஏதோ இது மனுக்குலத்துக்குக் கொடுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் என்று புதிதாக ஹாஸ்யம் செய்கிறீர்கள்...

மற்றவர்கள் புரிந்து கொள்ளவே கூடாது என்பதற்காகத்தான் 'உங்களுக்கு' அருளப்பட்டது அவர்களுக்கு அருளப்படவில்லை. அவர்கள் புரியாமல் 2000க்கு மேற்பட்ட உபதேசங்களாக ஆளாளுக்கு விளங்கிக்கொள்வார்கள். 

தேவனை அவப்பெயரிலிருந்து காப்பாற்றும் முயற்சிக்கு வாழ்த்துகள்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

இப்படி ஒரு வசனம் இருக்கும் போதே, மோசே, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு போன்றோரை தேவன் எந்த கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் என்கிற கேள்வியே தவறு!! ஆகவே தான் நான் அப்படி கேட்டேன்!!

சகோ அன்பு அவர்களே, கீழ்ப்படியாமைக்குள்ளே தேவன் அனைவரையும் அடைத்துப்போட்டார் என்று அவரின் வசனம் சொல்லும் போது, அது எப்படி என்று எதிர்த்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது!!//

தேவன் அனைவரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என வசனம் சொல்லவுமில்லை; தேவன் அனைவரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கவுமில்லை. எவர்களை கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்பதை அறிய ரோமர் 11-ம் அதிகாரத்தை சற்று சுருக்கமாகத் தியானிப்போம்.

ரோமர் 11-ம் அதிகாரம் ஒரு critical-ஆன அதிகாரம். மிகவும் ஆழமாகத் தியானித்தால்தான் அதன் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக இங்கு தியானிக்க முடியாவிட்டாலும், நம் விவாதத்திற்கு தேவையான சில வசனங்களை மட்டும் பார்ப்போம்.

ரோமர் 11:9,10 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

தாவீதின் இவ்வாக்கியங்கள் பின்வரும் வசனங்களில் காணப்படுகின்றன.

சங்கீதம் 69:22,23 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.  அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்

தாவீது சொல்கிற “அவர்கள்” யார்? தாவீதின் சத்துருக்களே என 4, 8, 12,14 வசனங்களிலிருந்து அறியலாம். அவரது சத்துருக்களில் பலர் அவரது சகோதரராகவும் இருந்தனர். எனவே “அவர்கள்” என தாவீது குறிப்பிடுவோரில் பலர் இஸ்ரவேலர்களும் தாவீதுக்கு மிகவும் நெருங்கினவர்களுமே.

அந்த “அவர்கள்” விழுந்துபோவதற்காக இடறவில்லை என்றும், அவர்களுடைய தவறினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்ததென்றும் ரோமர் 11:11-ல் பவுல் கூறுகிறார்.

இப்படிச் சொன்ன பவுல், அடுத்த வசனத்தில் அவர்களுடைய தவறினிமித்தம் வருத்தப்பட்டு அங்கலாய்க்கவும் செய்கிறார்.

ரோமர் 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

அவர்கள், அதாவது இஸ்ரவேலர், தவறு செய்தபோதிலும் (அதாவது கீழ்ப்படியாதபோதிலும்) அத்தவறு புறஜாதிகளுக்கு ஐசுவரியமானது. அவர்களுடைய தவறே புறஜாதிகளுக்கு ஐசுவரியமாய் இருந்தால், அவர்களின் நிறைவு புறஜாதிகளுக்கு எவ்வளவு ஐசுவரியமாய் இருந்திருக்கும் என பவுல் கேள்வி கேட்கிறார். இக்கேள்வியிலிருந்து நாம் அறிவதென்ன?

இஸ்ரவேலர் கீழ்ப்படியாமற்போனதற்குப் பதிலாக, கீழ்ப்படிகிறவர்களாக இருந்திருந்தால் அது புறஜாதிகளுக்கு மிகுந்த ஐசுவரியத்தைக் கொண்டுவந்திருக்கும் என்பதே.

இப்போது சொல்லுங்கள், இஸ்ரவேலரின் கீழ்ப்படிதலை தேவன் விரும்பியிருப்பாரா, அல்லது அவர்களின் கீழ்ப்படியாமையை தேவன் விரும்பியிருப்பாரா? நிச்சயம் கீழ்ப்படிதலைத்தான் விரும்பியிருப்பார். பவுலும் அதையே விரும்பியதால்தான், இஸ்ரவேலரின் தவறினிமித்தம் வருத்தப்படுகிறார்.

அடுத்து, 13-ம் வசனம் முதல் புறஜாதிகளிடம் பவுல் பேசுகிறார்.

ரோமர் 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?

15-ம் வசனத்தை சற்று கவனியுங்கள். இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேவன் அவர்களைத் தள்ளிவிட்டதுகூட புறஜாதியாராகிய உலகத்தை ஒப்புரவாக்கியிருந்தால், இஸ்ரவேலர் கீழ்ப்படிந்து அதினிமித்தம் தேவன் அவர்களை அங்கீகரித்திருந்தால், அது எத்தனை நல்லதாக இருந்திருக்கும்? எனக் கேள்வி கேட்கும் பவுல், அப்படி நடந்திருந்தால் அது மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதற்கு சமமாக இருக்குமல்லவா எனக் கேள்வி கேட்கிறார்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனதைவிட, கீழ்ப்படிந்திருப்பதுதான் நல்லதாக இருந்திருக்கும் என்பதுதானே?

அவ்வாறெனில் தேவன் இஸ்ரவேலரின் கீழ்ப்படிதலை விரும்பியிருப்பாரா? கீழ்ப்படியாமையை விரும்பியிருப்பாரா? நிச்சயம் கீழ்ப்படிதலைத்தான் விரும்பியிருப்பார். கீழ்ப்படிதலை விரும்பின அவர், தாமாகவே அவர்களை கீழ்ப்படியாமைக்கும் அடைத்துப் போட்டிருப்பாரா? நிச்சயமாக மாட்டார். இஸ்ரவேலர் தங்கள் சுய சித்தத்தின்படி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால்தான், அவர்களுக்குப் பாடம்புகட்டும்படி தேவன் அவர்களைக் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார்.

தொடர்ந்து 16-ம் வசனத்தைப் படியுங்கள்.

ரோமர் 11:16 முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

இவ்வசனத்தில் முதற்பலனாகிய மாவு என எவர்களைப் பவுல் குறிப்பிடுகிறார் என்பது திட்டமாகத் தெரியவில்லை. ஒருவேளை யூதரையோ அல்லது லேவியரையோ குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் மொத்த மாவும், வேரும் கிளையுமான மரமும் மொத்த இஸ்ரவேலரையே குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். எவர்களை தேவன் முதற்பலன் எனக் கருதினாரோ, அவர்கள் பரிசுத்தமாக இருந்திருந்தால் மொத்த இஸ்ரவேலரும் பரிசுத்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இப்படியிருக்க, புறஜாதியினரை காட்டொலிவ மரத்திற்கு ஒப்பிட்டு, அடுத்த வசனத்தில் பவுல் கூறுகிறார்.

தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

ரோமர் 11:17  சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

இஸ்ரவேலரில் கீழ்ப்படியாதவர்கள் தள்ளப்பட்டதைத்தான், சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க என பவுல் கூறுகிறார். (இந்த ஒப்பிடுதல் சரியே என்பதைப் பின்னால் வரும் வசனங்களில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.)

இஸ்ரவேலர் ஒலிவமரத்துக்கு ஒப்பிடப்படுகின்றனர்; புறஜாதியினர் காட்டொலிவ மரத்துக்கு ஒப்பிடப்படுகின்றனர். ஒலிவமரக் கிளை முறிக்கப்பட்ட இடத்தில், காட்டொலிவ மரம் ஒட்ட வைக்கப்படுகிறது. அதாவது கீழ்ப்படியாமையினால் தள்ளப்பட்ட இஸ்ரவேலரின் இடம், புறஜாதியினருக்குக் கொடுக்கப்படுகிறது.

இதினிமித்தம் புறஜாதியினர் பெருமை பாராட்டக்கூடாது என்பதே பவுல் சொல்ல வரும் போதனை. அவர்கள் ஏன் பெருமை பாராட்டக்கூடாது?

மரத்தின் வேரான இஸ்ரவேலர்கள் தான் (அதாவது கீழ்ப்படிந்த இஸ்ரவேலர்கள்), ஒட்டப்பட்ட கிளைகளைத் தாங்குகின்றனர். அதாவது கீழ்ப்படியாமையின் காரணமாகத் தள்ளப்பட்ட இஸ்ரவேலரின் இடத்தை புறஜாதியினருக்கு தேவன் கொடுத்தாலும், அந்தப் புறஜாதியினராகிய கிளைகளைத் தாங்குவது, வேராகிய இஸ்ரவேலரே.

தொடர்ந்து 19-21 வசனங்களில், சில கிளைகளான இஸ்ரவேலர் முறிக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லி, ஒட்டப்பட்ட கிளைகளான புறஜாதியினரை எச்சரிக்கவும் செய்கிறார் பவுல்.

ரோமர் 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.

இஸ்ரவேலராகிய கிளைகள் முறித்துப்போடப்பட்டதற்குக் காரணம் அவர்களின் அவிசுவாசமே (அல்லது கீழ்ப்படியாமையே). காட்டொலிவக் கிளைகளான புறஜாதிகள் ஒட்டப்பட்டதற்குக் காரணம் அவர்களின் விசுவாசமே (அல்லது கீழ்ப்படிதலே). விசுவாசத்தினிமித்தம் ஒட்டப்பட்ட புறஜாதியினர் மேட்டிமை கொள்ளக்கூடாது என்பதே பவுலின் போதனை. ஏன் அவர்கள் மேட்டிமை கொள்ளக்கூடாது?

சுபாவக்கிளைகளாக இருந்த இஸ்ரவேலரையே அவிசுவாசத்தினிமித்தம் தேவன் முறித்துப்போடுவாரென்றால், ஒட்டப்பட்ட கிளைகளான புறஜாதியினரையும் அதேபோல் முறித்துப்போடுவது நிச்சயமல்லவா? அதனால்தான் புறஜாதியினர் மேட்டிமை கொள்ளக்கூடாது எனப் பவுல் கூறுகிறார்.

தொடர்ந்து 22,23-ம் வசனங்களில், எவர்களிடத்தில் தேவன் கண்டிப்பாக இருப்பார், எவர்களிடத்தில் தேவன் தயவாக (இரக்கமாக) இருப்பார், எந்தக் கிளைகளை தேவன் வெட்டுவார், எந்தக் கிளைகளை தேவன் ஒட்டுவார் என்பதை பவுல் தெளிவாகக் கூறுகிறார்.

ரோமர் 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே.

விழுந்தவர்களாகிய (அதாவது கீழ்ப்படியாதவர்களாகிய) இஸ்ரவேலரிடத்தில் தேவன் கண்டிப்பைக் காண்பித்தார்; அதே வேளையில் கீழ்ப்படிந்தவர்களான (அல்லது விசுவாசிகளான) புறஜாதிகளிடத்தில் தேவன் இரக்கம் வைத்தார். தேவனின் இரக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், ஒட்டவைக்கப்பட்ட புறஜாதியினர் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்; நிலைத்திராவிட்டால் அவர்களுக்கும் இஸ்ரவேலரின் கதிதான் ஏற்படும்; அதாவது அவர்களும் இஸ்ரவேலரைப் போலவே வெட்டப்படுவார்கள்.

அதேவேளையில், வெட்டப்பட்ட இஸ்ரவேலர்கள் அவிசுவாசத்தில் நிலைத்திராவிட்டால் (அதாவது மீண்டும் விசுவாசத்திற்குள் வந்தால்) அவர்களும் மீண்டும் ஒட்டவைக்கப் படுவார்கள் (அதாவது தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்) எனப் பவுல் தெளிவாகக் கூறுகிறார்.

மொத்தத்தில் தேவதயவை அல்லது கண்டிப்பை ஒருவன் பெறுவதென்பது அவனது விசுவாசம் அல்லது அவிசுவாசத்தையே சார்ந்ததாக உள்ளது என அறிகிறோம்.

ஒட்டவைக்கப் பட்ட புறஜாதியினர் ஏன் பெருமை பாராட்டக்கூடாது என்பதற்கான ஒரு காரணத்தை 18-ம் வசனத்தில் பவுல் கூறினார். மற்றுமொரு காரணத்தை 24-ம் வசனத்தில் கூறுகிறார்.

ரோமர் 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

புறஜாதியிலிருந்து வந்தவர்களை விசுவாசத்தினிமித்தம் சேர்த்துக்கொண்ட தேவன், இஸ்ரவேலரில் விழுந்துபோனவர்கள் மீண்டும் விசுவாசத்திற்குள் வந்தால் அவர்களையும் சேர்ப்பது நிச்சயமென்பதால், புறஜாதியினர் எவ்விதத்திலும் பெருமைபாராட்டக் கூடாது எனப் பவுல் கூறுகிறார்.

அடுத்து ஓர் இரகசியத்தை பவுல் அறிவிக்கிறார்.

ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

இவ்வசனம் கோவை பெரியன்ஸ்-ஆகிய உங்களின் சித்தாந்தத்திற்கு சாதகமானது போல் தோன்றக்கூடும். அதாவது இஸ்ரவேலரின் மனதைக் கடினப்படுத்துவது தேவன் தான்; எனவே தேவசித்தப்படிதான் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமைக்குள் இருக்கின்றனர்; எல்லாமே தேவசித்தம்தான் என நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் அப்படியல்ல.

சற்று நிதானமாக, இதுவரை தியானித்ததை மீண்டும் பார்ப்போம். தேவன் சில கிளைகளை (அதாவது இஸ்ரவேலரை) முறித்ததற்குக் காரணம், அவர்களின் அவிசுவாசமே (அல்லது கீழ்ப்படியாமையே). அவர்களிடம் அந்த அவிசுவாசம் இல்லாதிருந்தால், புறஜாதியினரை அங்கீகரித்தல் என்பது நிச்சயம் நடந்திருக்குமென்றும், அது “மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதற்குச் சமமாக இருந்திருக்கும்” என்றும் 15-ம் வசனத்தில் பவுல் கூறுகிறார்.

ஆனால் இஸ்ரவேலரோ விழுந்து போயினர். இதனால் புறஜாதியினர் விசுவாசத்திற்குள் வருவதென்பது தாமதமாக நேர்ந்தது. மேலும், புறஜாதியினரில் விசுவாசத்திற்குள் வரவேண்டியவர்களின் எண்ணிக்கை இவ்வளவாய் இருக்கவேண்டுமென தேவன் நியமித்துள்ளதால், அந்த எண்ணிக்கை நிறைவாகும்வரை விழுந்துபோன இஸ்ரவேலர் அந்த கீழ்ப்படியாமைக்குள் இருப்பது அவசியமானது. எனவே, புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவு பெறுவதற்காகவே இஸ்ரவேலரை தேவன் கீழ்ப்படியாமைக்குள் வைத்துள்ளார்; அதாவது அவர்களின் கடின மனதை மாற்றாமல், அப்படியே அவர்களை விட்டுவைத்துள்ளார்.

எனவே, இஸ்ரவேலர் கீழ்ப்படியாமைக்குள் நிலைத்திருப்பதென்பது தேவசித்தமே; ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமைக்குள் விழுந்ததென்பது அவர்களின் சுயசித்தமேயன்றி, தேவசித்தம் அல்ல. இஸ்ரவேலரின் கீழ்ப்படிதல் மூலம் புறஜாதியினர் நன்மை பெறவேண்டும் என்பதே தேவசித்தம்; அதுவே புறஜாதிகளுக்கு அதிக நன்மையானதுங்கூட (வசனம் 12,15).

தொடர்ந்து 26-29 வசனங்களை விட்டுவிட்டு, 30-ம் வசனத்திற்குச் செல்வோம்.

ரோமர் 11:30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

இவ்வசனங்களில், “நீங்கள்” எனச் சொல்வது முன்னர் கீழ்ப்படியாமலிருந்து தற்போது விசுவாசத்திற்குள் வந்த புறஜாதியினரை; “அவர்கள்” எனச் சொல்வது கீழ்ப்படியத் தவறின இஸ்ரவேலர்கள். இப்புரிந்துகொள்தலுடன் இவ்வசனங்களைத் தியானிப்போம்.

விழுந்துபோன இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையால், புறஜாதியினர் இரக்கம் பெற்றனர். இவ்விதமாக புறஜாதியினர் இரக்கம்பெற்று, அவர்களின் எண்ணிக்கை நிறைவானதும் இஸ்ரவேலர்கள் இரக்கம் பெறுவார்கள். அதாவது: கீழ்ப்படியத் தவறின புறஜாதியினர் ஒரு காலத்தில் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்; பின்னர் இஸ்ரவேலர் கீழ்ப்படியத் தவறினபோது, புறஜாதியினர் இரக்கம் பெற்று, கீழ்ப்படியாமயிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளையில், கீழ்ப்படியத் தவறின இஸ்ரவேலர், புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவுண்டாவதற்கு ஏதுவாக, கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்.

புறஜாதியினரின் எண்ணிக்கை நிறைவாகும்போது, இஸ்ரவேலர் கீழ்ப்படியாமையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். ஆக, மொத்தத்தில் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போடப்பட்ட இஸ்ரவேலரானாலும் சரி, புறஜாதியினராலும் சரி, அவர்கள் கீழ்ப்படியத் தவறியபின்னர்தான், தேவனால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டனர்.

எனவே இஸ்ரவேலரும் புறஜாதியினரும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டதன் காரணம், அவர்களின் கீழ்ப்படியாமையேயன்றி, அவர்கள் மீதான தேவசித்தம் அல்ல.

 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

ரோமர் 11-ம் அதிகாரத்தை இதுவரை நாம் தியானித்ததிலிருந்து அறிவதென்ன? எல்லாரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்தார் என 32-ம் வசனம் கூறுவதில், எல்லாரையும் எனும் வார்த்தை, கீழ்ப்படியாத புறஜாதியினர் மற்றும் இஸ்ரவேலரை மட்டுமே குறிக்கிறதேயன்றி “உலகில் இருந்த/இருக்கிற/இருக்கப்போகிற எல்லாரையும்” அல்ல. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போடுகிறாரேயொழிய, எப்போதுமல்ல.

எனவே நாம் கீழ்ப்படியத் தவறுவது தேவசித்தம் அல்ல, நம் சுயசித்தமே. கீழ்ப்படியத் தவறுகிற நம்மை குறிப்பிட்ட நோக்கத்தில் குறிப்பிட்ட காலம்வரை தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைப்பதுண்டு. இது நிச்சயமாக தேவசித்தமே.

மற்றபடி, நாம் பாவம் செய்வதற்கான காரணம் தேவசித்தமே எனும் கூற்று நிச்சயமாக தவறாகும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ரோமர் 11ம் அதிகாரத்தில் பல பகுதிகளை விட்டு விட்டு தங்களின் வாதத்தை தங்களின் கருத்துக்கு சார்ந்து வைத்திருக்கிறீர்கள்!! சரி ரோமர் 11ம் அதிகாரத்தை பார்ப்போம்!!

எலியா தேவனிடத்தில் தன் கிரியை விளக்குகிறார், நான் ஒருத்தன் மாத்திரமே இதை எல்லாம் செய்ய இருக்கிறேன் என்று, என்னை போல் கிரியை செய்ய ஒருவனும் இல்லையே என்று புலம்புகிறார்!! ஆனால் தேவனோ,

ரோமர் 11:4. அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.

தேவன் சொல்லுகிறார், நீ உன் கிரியைகள் மேல் போகாதே, நான் (தேவன்) பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாதபடி இன்னும் 7000 பேரை வைத்திருக்கிறேன்!! தேவன் வைத்திருக்கிறாராம்!!

ரோமர் 11:7. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே அடைந்திருக்கிறார்கள்!! மற்றவர்களை தேவன் தெரிந்துக்கொள்ளாமல், அவர்களை கடினபடுத்தியிருகிறார்!! ஏன் கடினப்படுத்த வேண்டும்? ஏனென்றால் அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் கற்றுக்கொள்ள வேறு ஒரு காலம் இருக்கிறது!! அவர்கள் தெரிந்துக்கொள்ளப்படாதவர்களாக இருந்ததினால் அவர்களுக்கு உண்டான கவனிப்பை வாசியுங்கள்:

ரோமர் 11:8. கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

இப்படி கொடுக்கப்படும் என்பதும் தேவனின் சித்தம் தான் என்று அதை எழுதி அதை மாற்றாமல் நிறைவேற்றுகிறார் தேவன்!! ஏற்கனவே ஒருவனுக்கு விசுவாசம் இல்லை என்றால் அவனுக்கு எதுக்குங்க வஞ்சகங்கள்!! அவன் தான் ஏற்கனவே அவிசுவாசத்தில் இருப்பவனாக இருக்கிறானே!! மேலும் விசுவாசம் என்பது நம் செயல் கிடையாது அது தேவனால் உண்டான ஈவு என்று வாசிக்கிறோம்!! எப்படி விசுவாசம் ஒரு ஈவாக இருக்கிறதோ, அதே போல் தெரிந்துக்கொள்ளப்படாதவர்களுக்கு அவர் ரோமர் 11:8ன் படி செய்கிறார்!!

நீங்கள் சொன்ன காட்டொலிவமர மற்றும் ஒலிவமரத்தின் உவமைகள் மிகவும் சரியே!! கவனிக்க வேண்டியது என்னவென்றால், "சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க"!! அதாவது தாங்களாகவே முறிந்துபோகவில்லை, முறித்துப்போடப்பட்டிருந்தது!! ஏன்? காரணம் ரோமர் 11:8.

உங்கள் சொல்ப்படி, ஏற்கனவே ஒருவன் விசுவாசம் கொள்ளவில்லை, ஏற்கனவே ஒருவன் பொய்யை விசுவசிக்கிறான் என்றால் அவனுக்கு தேவன் ரோமர் 11:8ன் படியோ அல்லது வஞ்வக ஆவியை அனுப்பும் நோக்கம் என்ன!! அவன் தானேற்கனவே விசுவாசத்தில் இல்லையே!! சகோ அன்பு அவர்களே, விசுவாசம் என்பது தேவன் தரும் ஈவு என்று புரிந்துக்கொள்ளுங்கள்!! இது ஏதோ நீங்கள் செய்யும் கிரியைகள் சம்பாதித்துக்கொடுப்பதில்லை!! ஏனென்றால் கிரியைகள் தான் விசுவாசத்தை முடிவு செய்கிறது என்றால், கிருபை அவசியமாக இருந்திருக்காது!!

ரோமர் 11;25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

யூதர்களின் தொடங்கிய இரட்சிப்பின் சுவிசேஷம் புறஜாதிகளுக்கு வந்த நோக்கமே, அனைத்து மக்களிலிருந்தும் சபை தெரிந்துக்கொள்ளப்படும் என்பதற்கே!! அதற்காகவே இஸ்ரவேலரிலொரு பங்குக்கு கடினமான மனது தேவனே தந்தார்!!

மாற்கு 4:11 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

அவர் சிலருக்கு வெளிப்படுத்தி பலருக்கு வெளிப்படுத்தாது இருக்கிறாரே!! ஏன் உங்கள் கிரியைகளினால் அதை எல்லாம் தெரிந்துக்கொள்ளலாமே!! அறிவில் சிறந்து இருந்த ராதாக்கிருஷ்னன் காந்திஜி போன்றோர் நல்ல கிரியைகள் செய்தார்கள், வேதத்தையும் வாசித்திருக்கிறார்கள், பெரிய விசுவாசிகளாக ஆகி விட்டார்களோ!! இல்லையே, தேவன் அவர்களுக்கு விசுவாசத்தை கொடுக்கவில்லை!! இப்படி தான் உலகம் முழுவதும்!! அவர் யாருக்கு விசுவாசத்தை கொடுக்க சித்தமாக இருக்கிறாரோ அவர்களுக்கு தருகிறார், அவர்களிடம் எடுத்து போட்டு, மீண்டும் அவர்களுக்கு கொடுப்பதும் அவரே!!

கிறிஸ்துவின் சபைக்கு புறஜாதியாரின் எண்ணிக்கையும் நிறைவு பெறும் அளவிற்கு யூதர்கள் கடினப்பட்டிருப்பது தேவனின் சித்தமே!! ஏதோ யூதர்கள் வேண்டுமென்றே விலகி செல்லவில்லை, தேவனே அவர்களை கடினப்படுத்தினார், ஆகவே தான் அவர்கள் கடினப்பட்டிருக்கிறார்கள்!!

ரோமர் 8:26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

அவபக்த்தியும் தானாக சுய சித்தத்தினாலோ, அல்லது கிரியைகளினாலோ விலகிவிடாது, மாறாக மீட்கிறவர் வந்து அதை விலக்குவார்!! அது தான் நீதி கற்றுத்தரப்படும் என்று வேதம் வேறு இடத்தில் சொல்லியிருப்பது!! தானாக அவபக்தி விலகிவிடாது, தேவனே அந்த அவபக்தியை கொடுத்தார், தேவனே அதை விலக்குவார்!!

ரோமர் 8:30. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,

ஏன் முற்காலத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாதிருந்தார்கள், ஏனென்றால் தேவன் இஸ்ராயேலை மாத்திரமே தன் ஜனங்கள் என்று தெரிந்து கொண்டு நடத்தினார், மற்றவர்கள் மேல் கண்ணோக்கமாக அவர்களை நடத்தினார், விசுவாசத்தையோ, கட்டளைகளையோ, வாக்குத்தத்தங்களையோ யூதர்களுக்கு மாத்திரமே கொடுத்தார்!! அவர்களுக்கு இப்பொழுது கீழ்ப்படியாமையை கொடுத்து விட்டு, புறஜாதியிலிருந்தும் சபையின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக புறஜாதியிடத்தில் கிருபையாக ஈவாக விசுவாசத்தை தந்திருக்கிறார்!! இங்கேயும் எல்லாருக்கும் இல்லை!!

அவர் யாரை அழைக்கிறாரோ, அவர்களுக்கு மாத்திரமே!!

இப்படி முதலில் யூதர்களுக்கு விசுவாசத்தை கொடுத்து மற்றவர்களை கீழ்ப்படியாமையில் வைத்திருந்தார், பிறகு புறஜாதியாருக்கு விசுவாசத்தை கொடுத்து யூதர்களை கீழ்ப்படியாமையில் வைத்தார்!! இதை தான் அவர் எல்லாரையும் கீழ்ப்படியாமையில் வைத்தார் என்கிறார்!! கீழ்ப்படியாமையின் காலங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர் எல்லாரையும் கீழ்ப்படியாமையில் அடைத்தார், அவரின் கிருபையையும் அழைப்பையும் தருவதற்கு!!

நீங்கள் எத்துனை தான் இந்த வசனங்களை வியாக்கியானம் செய்ய நினைத்தாலும்,

ரோமர் 8:33. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 34. கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 35. தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?

மனுஷ சித்தம் அல்ல தேவனே அனைத்திற்கு காரணம் என்று,

ரோமர் 8:36. சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


//கீழ்ப்படியத் தவறுகிற நம்மை குறிப்பிட்ட நோக்கத்தில் குறிப்பிட்ட காலம்வரை தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைப்பதுண்டு//

ஏற்கனவே கீழ்ப்படிய தவறுகிற உங்களை எதற்கு கிழ்ப்படியாமைக்குள் அடைக்க வேண்டும்!! உங்களை கீழ்ப்படியாமைக்குள் வைப்பதினால் தான் நீங்கள் கீழ்ப்பட தவறுகிறீர்கள்!! உங்கள் வாதத்தில் லாஜிக் இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

துருபதேசர்களின் துருபதேசங்கள்! திரியில் பெரியன்ஸ்:

//2 தெச. 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

சகோ அன்பு அவர்களே, சத்தியத்தை விசுவாசியாமல் இருந்து நியாயத்தீர்ப்பு அடைய (ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு) தேவன் அவர்களை பொய்யை விசுவாசிக்கத்தத்தாகக் கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார்!! ஏற்கனவே பொய்யர்களாக இருக்கிறவர்களுக்கு கொடிய வஞ்சகம் எதற்கு!! ஏற்கனவே வஞ்சகத்திற்குள் இருப்பவர்களுக்கு தேவன் வஞ்சகத்தை ஏன் அனுப்புவார்!! ஆகவே, இந்த வசனத்தின்படி கொடிய வஞ்சகத்தை தேவன் அனுப்பியதால் தான் இவர்கள் பொய்யை விசுவாசிக்கிறார்கள் என்பது தான் சரியான புரிந்துக்கொள்ளுதல்!!

//சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுவோர் ஆக்கினைக்குள்ளாகத்தான் தேவன் கொடியை வஞ்சகத்தை அனுப்புவார், எல்லோருக்காகவும் அல்ல.//

ஏற்கனவே அநீதியிலும் பொய்யிலும் இருப்பவர்களுக்கு எதற்கு அய்யா கொடிய வஞ்சகம் தேவை!! கொடிய வஞ்சகமே அவர்கள் சத்தியத்தை விசுவசியாமல் போவதற்கு தான்!!!//

முந்தின சில வசனங்களோடு இவ்வசனம்:

2 தெச. 2:9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இவ்வசனங்களைக் கவனமாய் படியுங்கள் சகோதரரே!

10-ம் வசனத்தின் பின்பகுதி: இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

இப்பகுதியின் கூறப்பட்டுள்ள கூற்றின் அடிப்படையில் சில கேள்விகளும், அதே கூற்றில் அடங்கியுள்ள பதில்களும்:

1. எதற்காக அவர்கள் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கீகரிக்க வேண்டும்?

பதில்: இரட்சிக்கப்படுவதற்குத்தான்.

2. அவர்கள் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கீகரித்தார்களா?

பதில்: இல்லை.

3. சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாததால் அவர்களுக்கு என்ன நேரிடும்?

பதில்: அவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள்.

இனி 10-ம் வசனத்தின் முழுக் கருத்தையும் பார்ப்போம்.

சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாததால், அவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கு என்ன நடக்கும்? கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகமும் நடக்கும். அந்த வஞ்சகங்களில் சில எவை? இதற்கான பதில் 9-ம் வசனத்தில் காணப்படுகிறது. சாத்தானின் வல்லமையால் உண்டாகும் அடையாளங்களும் பொய்யான அற்புதங்களுமே அவை.

இன்றைய பொய்யான அற்புதங்களை எவர்கள் விசுவாசிக்கிறார்கள்? தேவனுக்கு விரோதமான பகையாகிய உலகத்தை சினேகிப்பவர்களே!

வேலை, கல்வி, திருமணம், ஐசுவரியம் போன்ற உலகக்காரியங்களில் அன்பு செலுத்தி, சத்தியத்தின்மேலுள்ள அன்பை புறக்கணிப்பவர்கள்தான், எங்கு அற்புதம் நடக்கிறது, யார் அற்புதம் செய்கிறார்கள் எனத் தேடி அங்குமிங்கும் ஓடுகிறார்கள். ஆக, முதல் படி எடுத்து வைப்பவர்கள் இவர்கள்தான். அதன் விளைவாகத்தான் அவர்கள் பொய்யை விசுவாசித்து அதிலேயே நிலைநிற்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தை தேவன் அனுப்புகிறார்.

இனி 11-ம் வசனத்தைப் படியுங்கள்.

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்பட்டு அதை அங்கீகரித்தவர்கள் ஆக்கினையைப் பெற வேண்டும் என்பது தேவநியமனம். அவர்களுக்கான ஆக்கினை உறுதி படுத்தப்படும்படியாகத்தான், பொய்யை விரும்பிய அவர்கள் அதே பொய்யை மேலும் அதிகமாக விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தை தேவன் அனுப்புவார்.

அந்த கொடிய வஞ்சகத்தைத்தான் தேவன் இப்போது அனுப்பிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் எவ்வளவுதான் வேதத்தைக் கற்றாலும், தேவனுக்கு விரோதமான உலகசினேகத்தில் ஜனங்கள் சிக்கி, அதிலிருந்து வெளியே வரமுடியாத நிலையில் கிடக்கிறார்கள். இவர்களை வஞ்சிக்கும்படியாக ஆங்காங்கே (பொய்யான) அற்புதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனவே தேவன் அவராகவே யாருக்குள்ளும் கொடிய வஞ்சகத்தை அனுப்பவில்லை. உதாரணமாக உங்களையும் என்னையும் எடுத்துக்கொள்வோமே. இன்றைய ஊழியர்களின் பொய்யான அற்புதங்கள் நம்மை கடுகளவேனும் வஞ்சிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் நீங்களும் நானும் உலகத்தை சினேகிக்கவில்லை. ஒருவேளை நாம் உலகத்தை சினேகிப்பவர்களாக இருந்தால், நமக்குங்கூட இந்த ஊழியர்களிடம் சென்று, ஏதாவது அற்புதம் நடக்குமா என ஒருகை பார்த்துவிடுவோமே எனும் எண்ணம் வந்துவிடும்.

ஆனால் நாம் உலகத்தை சினேகிக்கப்போவதில்லை; எனவே தேவன் அனுப்பும் கொடிய வஞ்சகம் நம்மை எதுவும் செய்ய இயலாது.

எவர்கள் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறார்களோ, எவர்கள் தேவனுக்கு விரோதமான உலகத்தை சினேகிக்கிறார்களோ, அவர்கள் ஆக்கினைக்குள்ளாகப்படும்படித்தான் தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார். அந்த வஞ்சகத்தில் அவர்கள் கடுமையாக சிக்கிக்கொள்ளவும் செய்கின்றனர்.

கெட்டுப்போகிறவர்கள் என தமிழ்வேதாகமத்தில் காணப்படும் வார்த்தை, ஆங்கில வேதாகமத்தில் "perish" என்பதாக உள்ளது. மூலபாஷையிலும் அழிவு எனும் அர்த்தமுடைய வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழிவைப் பற்றி புதியஏற்பாடு கூறவில்லை எனும் உங்கள் கூற்று தவறு என இப்போதாவது ஒப்புக்கொள்வீர்களா?

2 Thess 2:9 The coming of the lawless one will be in accordance with the work of Satan displayed in all kinds of counterfeit miracles, signs and wonders, 10 and in every sort of evil that deceives those who are perishing. They perish because they refused to love the truth and so be saved. 11 For this reason God sends them a powerful delusion so that they will believe the lie 12 and so that all will be condemned who have not believed the truth but have delighted in wickedness.  NIV



-- Edited by anbu57 on Wednesday 13th of July 2011 08:39:20 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரோமர்8:19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

20. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,

21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

அந்த 'சிருஷ்டி'யில் அனைவரும் அடங்குவார்கள், 'நீதிமானகள்'உட்பட, யாரும் விதிவிலக்கல்ல‌...

இதோ 'மாயை' பற்றியும் சகலமும் தேவன் கையில்தான் இருக்கிறது என்பதையும் ஞானி விளக்குகிறான்.

பிரசங்கி5:19. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

20. அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

6:1. சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

2. அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

7:13. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

9:2. எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.

3. எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்;

12. தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

11:5. ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

8. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

இந்த மாயைக்குத்தான் சர்வசிருஷ்டியும் கீழ்ப்படுத்தினவராலே கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
1 2 35  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard