வணக்கம், சகோதரர்களே!!!! என் பெயர் ரோஹான். சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்டவன். நான் "வேதமானாக்கர்" விசுவாசத்தைக் கொண்டவன். அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் எனது சக விசுவாசிகள் மூலம் இந்த தளத்தை அறிந்து கொண்டேன். இதில் பலரால் பதிந்து இருக்கும் ஒவ்வொரு பதிவுகளும் எனக்கு பிரயோஜனமாக இருகின்றன. அத்துடன் எனக்கு தெரிந்த சத்தியத்தை இதில் எழுதுவதற்கு பிரியப்படுகிறேன்.
என் விசுவாசப்பிரமான அறிக்கை!!!!
தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும் ஆதியந்தமில்லாத ஏக சக்கிராதிபதியுமான யேகோவா என்னும் நாமமுள்ள ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கின்றோம். (1 தீமோ. 6:15,16; யாத் 6:3)
அவருடைய ஒரே பேரான குமாரனும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுக் கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். (யோவா 3:16)
இவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும் சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். தேவன் இவரைக் கொண்டும் இவருக்கென்றும் உலகங்களை எல்லாம் உண்டாக்கி இவரையே சர்வத்துக்கும் சுதந்திரவாளியாகவும் நியமித்தார். எல்லாம் இவருக்குள் நிலை நிற்கிறதென்றும் விசவாசிக்கிறோம். (கொலோ 1:15: எபி. 1:2.)
இவர் தேவ குமாரனாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருக்க எண்ணாமல், அக்கிரமங்களினால் ஜீவனை இழந்த மனுஷர் பேரில் மனதுருகி தம்மைத் தாமே வெறுமையாக்கி மனிதனாகி எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனையே கொடுத்து தேவனுக்கும் மனுஷருக்கும் சமாதானத்தை உண்டு பண்ணினாரென்றும் விசுவாசிக்கின்றோம். (யோவா .10:36)
ஆதலால் தேவன் இவரை மரித்தோரிலிருந்து எழுப்பி நம்மைப்போல் குமாரனும் ஜீவனுடையவராயிருக்க அருள் செய்து, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி தம்முடைய வல்லமையின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார் என்றும் விசுவாசிக்கின்றோம். (அப். 3:15: யோவா 5:26).
இவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகவும் சபையாகிய சரீரத்துக்குத் தலையாகவும் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம்.
இவர் பரலோகத்துக்கேறி, தாம் வாக்குத்தத்தம் பண்ணின, உன்னதத்திலிருந்து வரும் பெலனாகிய, பரிசுத்தாவியை, விசுவாசிகளடங்கிய சபைக்கு அருளி, தேவ சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி, பலியின் ஜீவியத்தில் அவர்களை நடத்தி வருகிறாரென்றும் விசுவாசிக்கிறோம். (அப். 1:11)
பிதா குறித்த காலத்தில், இவர், பலியின் மரணத்துக்குட்பட்டு முதலாம் உயிர்தெழுதலடையும், தம்முடைய சபையாகிய சகல பரிசுத்தவான்களோடும்(எண்ணிக்கை ), இப்பூமிமைய நீதியாய் நியாயந்தீர்த்து, சகல துரைத்தனத்தையும் அதிகாரத்தையும், வல்லமையையும் பரிகரித்து என்று அழியாத தம்முடைய நீதியுள்ள அரசாட்சியை ஸ்தாபிப்பர் என்றும் விசுவாசிக்கிறோம்.
மரணமடைந்த மற்றவர்கள், கிறிஸ்துவின் அரசாட்சி காலத்தில், அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவர் தம்முடைய மரணத்தினால் சம்பாதித்த, நித்திய ஜீவனையடைய வழி நடத்தப்பட்டு, பூரணப்படுவார்கள். ஆய்ரம் வருட ஆட்சிக்கு பின்பு மனப்பூர்வமாய் சீர்திருந்தாதவர்கள், இரண்டாம் மரணத்திலே அழிக்கப்படுவார்கள் என்றும் விசுவாசிக்கிறோம். (வெளி.20:5: 1 கொரி.15:23)
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதபடியாக்கு மட்டும், இவர் ஆளுகை செய்து, கடைசிச் சத்துருவாகிய மரணத்தையும் பரிகரித்து எல்லாவற்றையும் முந்தினசீருக்குக் கொண்டு வந்து, பிதாவே சகலத்திலும் சகலமுமாய் இருப்பதற்கு, அவருக்கு இராஜ்யத்தை ஒப்புக்கொடுத்து, அவருக்குக் கீழப்பட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். (1கொரி 15:25,26,28.) ஆமென்
ரோஹன் அவர்களின் விசுவாச அறிக்கை குறித்து அதிக மகிழ்ச்சி;ஆனால் ஒரு சில ஐயங்களுக்கு விடை தருவீர்களா..? அதாவது //ஆதலால் தேவன் இவரை மரித்தோரிலிருந்து எழுப்பி நம்மைப்போல் குமாரனும் ஜீவனுடையவராயிருக்க அருள் செய்து, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி தம்முடைய வல்லமையின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார் என்றும் விசுவாசிக்கின்றோம். (அப். 3:15: யோவா 5:26). // என்று சொல்லும் உங்கள் அறிக்கையின்படி இவ்வுலகின் முதல் மனிதனான ஆதாமுக்கு உயிர்த்தெழுதல் உண்டா என்று சொல்லவேண்டுகிறேன்.
வணக்கம் நண்பர் சில்சாம் அவர்களே!!! உங்கள் பதிவுக்கும், கேள்விக்கும் நன்றி. பதிவை வாசித்தவுடன் புரிந்துகொண்டேன் தாங்கள் வேதமானாக்கர் அல்ல என்று. அது இருக்கட்டும் .... உங்கள் கேள்விக்கு பதிலை இந்த தளத்து நிர்வாகிகள் கொடுப்பார்கள். பொருத்து இருக்கவும். நன்றி