I கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
1கொரி 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
"அழியாமை", "சாவாமை" என்பது உயிர்த்தெழுதலுக்குப் பின் சபைக்கும், உலகத்துக்கும் கிடைக்கப்போகும் பாக்கியமாகும்.
"அழிவில்லாததாய்" எழுந்திருக்கும். இரண்டாம் மரணத்தில் "இன்னொரு" அழிவு இருக்கும் என்று வாதிடுபவர்களுக்கு இந்த வசனம் பெரும் சவால்.
"எல்லாரும் இன்புன்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்ற தாயுமானவரின் கூற்று அன்பின் உச்சம். ஒரு மனிதனுக்கே இத்தனை அன்பிருந்தால் சர்வவல்ல தேவனுக்கு எத்தனை அன்பிருக்கும்.
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே? மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. என்ற வசனங்கள் மரணம் என்ற ஒரு விஷயமே இனி கிடையாது என்பதைத்தான் விளக்குகின்றன. இது ஏதோ கிறிஸ்துவின் மரணத்தை மட்டும் குறிப்பிடும் வசனங்கள் அல்ல. மரணம் என்ற கான்செப்ட் பற்றிய வசனங்கள்.