//ஏசாயா 28:13-ம் வசனம் கிரியை பற்றி சொல்லவில்லை என்கிறார் பெரியன்ஸ். இவ்விஷயத்தில் அவர் சொல்வது சரியா அல்லது நான் சொல்வது சரியா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் “தேவனின் திட்டமும் வெளிப்பாடும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக இருக்கும்” என பெரியன்ஸ் சொன்னது தவறா இல்லையா என்பதுதான் முதலாவதாக தீர்மானிக்க வேண்டிய விஷயம். இதைக் குறித்து பெரியன்ஸ் இதுவரை எந்த விளக்கமோ எதிர்ப்போ கூறவில்லை.//
ஏசாயா 28:13. ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
Isaiah 28:13 And the word of Jehovah was unto them precept upon precept, precept upon precept, line upon line, line upon line, here a little, there a little: that they might go, and fall backward, and be broken, and snared, and taken. Darby Translation (DARBY)
இந்த வசனம் தேவனின் அநாதி திட்டங்களையும் தீர்மானங்களையும் குறித்தே அன்றி அன்பு அவர்கள் சொல்லுவது போல் இது கிரியைகளை குறித்து அல்ல!!
செய்ய வேண்டியவைகளை சட்டமாக சுமார் 600+ மோசேக்கு கொடுத்தாகிவிட்டது!! அதை மோசே இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் வைக்காமல் மொத்தமாகவே வைத்து, அதை செய்தால் நன்மை என்றும் செய்யாமல் போனால் சாபம் என்றும் எழுதிவைத்துவிட்டார்!!
வசனம் சொல்லுவது போல் அந்த கிரியைகளை செய்தால் எதற்கு பின்னிட்டு விழுந்து நொறுங்குவார்கள் என்பது அன்பு அவர்களுக்கே புரிகிறதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை!! மாறாக தேவனின் திட்டங்களை இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் வாசித்து அதை புரியாதப்படிக்கு இன்று கிறிஸ்தவ உலகமே விழுந்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது!! வசனத்தை கொண்டே இடறுகிறதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் கூட்டத்தை தான் இந்த வசனம் சொல்லுகிறது!! அநேகருக்கு இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் இருக்கும் காரியங்கள் புரியாமல் பின்னிட்டு போவார்கள்!!
இந்த வசனம் கிரியையக் குறித்து இருந்திருக்குமேயானால், கிரியை செய்கிறவர்கள் ஏன் பின்னிட்டு விழுந்து நொறுகுவார்கள் என்கிறது!! செய்ய வேண்டிய கிரியைகளை மோசே எழுத்துப்பூர்வமாக அனைவரும் பின்பற்றும்படி வைத்துவிட்டார்!! அதில் ஒரு இரகசியமும் இல்லை, அதை இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் தேடிப்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!!
ஆனால் தேவன் தன் திட்டங்களை நேரடியாக வேதத்தில் வைக்காமல், அவர் நியமித்த மனிதர்கள் அதை புரிந்துக்கொள்ளும்படியாக இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் தன் எழுத்தாக வைத்திருக்கிறார்!! எடுத்துக்காட்டாக ஆதாமிடம் ஒரு வித்தை குறித்து வாக்கு கொடுத்தார், அதன் பின் அதை ஏசாயா மூலமாக தீர்க்கதரிசனமாக எழுத வைத்தார், பின் அது நிறைவேறியது கல்வாரியில்!! இதை ஒரே இடத்தில் வைக்காமல் வேதத்தை ஏதோ ஒரு கதை புத்தகம் போல் படிப்பவர்களுக்கு புரியாமல் இருக்கவே வைத்தார்!!
கிரியையின் போதனையே மனிதனின் சுயத்தை காட்டும் போதனையே தவிர தேவனை மகிமைப்படுத்தும் போதனையே கிடையாது!! ஏசாயா 28:13க்கும் கிரியையின் போதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை இந்த தளத்தின் மூலம் அன்பு அவர்களின் கேள்விக்கு பதிலாக நான் வைக்கிறேன்!! அவர் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றோ நான் சொல்லுவதற்கு இல்லை!! ஏனென்றால் புரிந்துக்கொள்ளுதலை அவர் தன் கிரியையாக நினைக்கலாம் ஆனால் ஒருவன் ஒரு காரியத்தை புரிவதும் புரியாமல் போவதும் தேவனின் சித்தம் தான் என்பது தான் இந்த தளத்தின் விசுவாசம்!!
அன்பு அவர்கள் இந்த வசனம் கிரியை போதிக்கிறது என்று சொல்லுகிறாரோ!! அப்படி சொன்னால் கிரியை செய்கிறவர் பின்னிட்டு விழுந்து நொறுங்கும்படியாக ஏன் எழுதப்பட வேண்டும்!! அப்படி என்றால் அன்பு அவர்கள் போதிக்கும் கிரியையை செய்தால் இப்படி பின்னிட்டு விழுந்து நொறுங்கும்படியாக தான் இருக்குமோ!!??!