kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒளியின் தூதனின் வேஷம் தரித்தவர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஒளியின் தூதனின் வேஷம் தரித்தவர்கள்!!


//

இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்டீரா..?

ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று உம்மைப் பார்த்து கேட்ட பவுலுடன் பேசினீரே இவர்களுடன் பேசமாட்டீரா..?

உம்மை நோக்கி கூப்பிட்டால் பிதா கேட்கமாட்டாரா,நீரும் பிதாவும் வெவ்வேறானவர்களா, நீர் அனுப்பிய தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் வெறும் காற்று போன்றவரா..?

சொல்லும் ஐயா, சொல்லும், உம்முடைய பிள்ளைகளுடன் பேசும், எமது குற்றங்குறைகளை தயவாக மன்னித்து எங்களுக்கு நியாயஞ்செய்ய இரங்கும்..!

//
ஒளியின் தூதனின் வேஷம் தரித்தவன் சாத்தான் என்கிற வசனத்துடன் இன்னோரு வசனமும் இருக்கிறது!!

2 கொரிந்தியர் 11:15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

ஆகா, அந்த ஒளியின் தூதனான கிறிஸ்துவின் வேஷத்தை தரித்த சாத்தானுக்கு ஊழியக்காரர்கள் இருக்கிறார்களாம்!! இவர்கள் நீதியின் ஊழியக்காரருடைய வேஷம் தரித்தவர்களாம்!!

"பிதா"வும் ஒருவரே என்று வேதத்தில் கிறிஸ்து தெளிவாக சொல்லியும் இவர்களிடம் "யாரோ வந்து", இல்லை இல்லை இயேசுவும் பிதாவும் ஒருவரே என்று பேசுகிறார்களாம்!! அய்யா, அவர்கள் உங்களுடன் பேசியதோடு இருக்கட்டும் எங்களுடன் வந்து பேசும் படியாக ஒளியின் தூதனின் வேஷத்தை தரித்திருக்கும் கூட்டத்தார் யாரும் வந்து பேச வேண்டியது கிடையாது!! ஒளியின் தூதனான கிறிஸ்து இயேசுவே எல்லாவற்றையும் வேதத்தில் எழுதியிருக்கிறார், அது போதும்!! இப்படி கலர் கலராக பாடல்கள் எழுதி விட்டு வேதத்தில் உள்ளதை திசை திருப்புவதே ஒளியின் தூதனின் வேஷத்தை தரித்திருக்கும் சாத்தானின் ஊழியர்களே அன்றி வேறு யாரும் இல்லை!!

வந்து பேசும் வந்து பேசும் என்று சொன்னால் பேசுவதற்கு ஒருவன் இருக்கிறான், அவன் வந்து பேசுவான், நல்லா கேளும்!!

இருவரும் ஒருவரே என்பார்களாம், அப்புறம் உம்மை (கிறிஸ்துவை) நோக்கி கூப்பிட்டால் பிதா கேட்கமாட்டாரா என்பார்கள்??

அட சர்ப்பமே,

இயேசு கிறிஸ்து இப்பொழுது பிரதான தூதன் என்று யாரும் சொல்லுவதில்லை, நீ விஷமாக கக்குவதை தவிர!! இயேசு கிறிஸ்து இப்பொழுது பிதாவினால் உயர்த்தப்பட்டிருக்கிறார் (பிலிப்பியர் 2:8-11)என்று வசனம் சொல்லுவதையே நாங்களும் நம்புகிறோம்!! ஒருவர் உயர்த்துகிறார் என்றும் ஒருவர் உயர்த்தப்படுகிறார் என்றும் வாசித்தால், இருவரும் வெவ்வேறானவர்கள் என்று தான் புரிய முடியுமே தவிர உயர்த்துகிறவரும், உயர்த்தப்படுகிறாவரும் ஒருவரே தான் என்று அறிவீனர்கள் தான் சொல்ல முடியும்!!

நான் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் கேட்டாராம்!! அட பாவகிளா, அந்த சவுலை பவுலாக மாற்றி கூட்டிகிட்டு வந்தவரே கிறிஸ்து தான்!! பவுல் கேட்டதால் தான் கிறிஸ்து அவரிடம் பேசியதாக புது கதை எழுப்பி அதை பாட்டு பாடி வஞ்சம் யார் செய்கிறார்கள் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!! இந்த நவீன கிறிஸ்து விரோதிகள் வேதத்தை விட்டு பாடல்களை காட்டி வஞ்சிக்கிறார்கள், வேட்டையாடுகிறார்கள்!!

இவர் காட்டிய பாடல்கள் எழுதியவர்:


Making a Difference!!

அதாவது ஒரு பேதத்தை, ஒரு வேற்றுமையை, ஒரு மாறுபட்ட நிலையை உருவாக்குவோம் என்கிறது இந்த ஊழிய விஷன் ஸ்டேட்மெண்ட்!! இது போதாதா!!



-- Edited by soulsolution on Monday 26th of September 2011 11:21:24 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard