இதோ பிரபலமான தொ(ல்)லைகாட்சி ஊழியர்களின்(!!) பறந்து விரிந்து இருக்கும் எல்லைகள்!!
மத்தேயு 8:20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
லூக்கா 9:58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
தலைசாய்க்க கூட சொந்த கல்லறையில்லாமல் ஓசி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர் உலகத்தின் இரட்சகர்!! ஆனால் அந்த எஜமானனுக்கு ஊழியம் செய்கிறோம் பேர்வழிகள் என்று இந்த கூட்டத்தின் பன ஆசை சாரி வெறியை பார்க்கலாம்!! ஒவ்வொரு ஊழியர்களின் பெயரை சொடிக்கினால் போதும் அவர்களை குறித்து வாசிக்கலாம்!!
பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் என்று சொல்லுகிற பவுலை விட உயர்ந்த ஊழியர்களான இவர்கள் எதை தன் சொத்துக்களாக சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்!! இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்!!
இவர்கள் வைத்திருக்கும் சொத்து சுகத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை, ஆனால் தங்களை கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று சொல்லி இவர்கள் வாழும் இந்த லக்ஸரியான வாழ்க்கையை கிறிஸ்தவம் என்று சொல்லலாமா!!??
// ஊழியர்கள் ஆடம்பரமா வாழக் கூடாது,சரி. விசுவாசிகள் வாழலாமா பெரேயன்ஸ் அவர்களே?//
கிறிஸ்தவர்களையே ஊழியர்கள் என்றும் விசுவாசிகள் என்றும் சாதாரன விசுவாசிகள் என்றும் தரம் பிரிப்பதே உங்கள் கூட்டத்தார் தான்!! சரி என்றால் முதலில் அதை குறித்து யோசியுங்கள்!! அவன் அவன் செய்யும் கைய்யின் கிரியை (வேலைப்பார்ப்பதை தான் சொல்லுகிறேன்) தேவன் ஆசீர்வதிக்கிறார்!! ஆனால் ஊழியர்கள் அப்படி இல்லை, இவர்கள் அடுத்தவர்களின் கைய்யின் கிரியையில் வாழும் சோம்பேறிகள்!! அந்த பக்கங்களை எல்லாம் பார்த்திருப்பீர்களே, அவர்கள் வாழும் அந்த ஆடம்பரங்களும், அந்த சொகுசு பங்களாக்களும் பரலோகத்திலிருந்து வந்தததா, அல்லது இந்த "ஊழிய" கூட்டம் உழைத்து அதை சம்பாதித்ததா!!