kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: II கொரிந்தியர் 11:14 - ஒளியின் தூதன் கிறிஸ்து இயேசுவே


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
II கொரிந்தியர் 11:14 - ஒளியின் தூதன் கிறிஸ்து இயேசுவே


II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

spetersamuel:

//ஒளியின் தூதன் என்பது, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும் தேவதுடைய தூதர்களைக் குறிக்கும் ஒரு சொல். பரலோகமே ஒளிமயம் என்பதிலிருந்து பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகத்தின் ஒளியாய் வந்தவருக்கு பணிவிடை செய்யும் தூதர்கள் ஒளியின் தூதர்கள்.....//

ஒளியின் தூதனுக்கு இதைவிட தமாசான ஒரு விளக்கத்தை இவரை தவிர வேறு எவர் கொடுக்க முடியும்!! ஒளியின் தூதன் என்று ஒருமையில் எழுதப்பட்ட ஒரு வார்த்தையை இனை மேய்ப்பர் தனக்கு சாதகமாக "தூதர்கள்" என்று மாற்றியதில் தான் விஷயமே இருக்கிறது!!

I யோவான் 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

தேவன் ஒளியாக இருக்கிறார்!! அந்த தேவனின் குமாரனாக வந்தவரே "ஒளியின் தூதன்" என்கிறது வேதம்!! கிறிஸ்து எனும் ஒளியின் தூதனின் வேஷத்தை தான் சாத்தான் தரித்திருக்கிறான் என்கிறது வசனம்!! இனை மேய்ப்பர் சொல்லுவது போல் பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்களாக இருக்கிறார்கள், அவர்களின் வேஷத்தை தரித்துக்கொண்டவன் அல்ல பிசாசு!! அவர்களின் வேஷத்தை தரிப்பதினால் என்ன லாபம்!! மாறாக கிறிஸ்துவின் போதனைகளை மாற்றி அந்திகிறிஸ்துவின் (கிறிஸ்துவிரோதி) போதனைகளை தருபவன் கிறிஸ்துவை போல் தான் வேஷம் தரிக்க வேண்டுமே தவிர, பரலோகத்தில் உள்ள தூதர்களை வேதம் ஒளியின் தூதர்கள் என்று சொல்லுவது கிடையாது!! அது கள்ள போதகர்களின் தலைமையில் இருக்கும் புதிய வேதத்தில் இருக்கும் போல்!!

இந்த போதகர்களின் போதனையின்படி தேவனே கிறிஸ்துவாக வந்தார் என்பதால், ஒளியின் தூதன் யார் என்கிற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது!! ஆனால் ஏதோ ஒரு சபையில் குறிப்பிட்ட அந்த போதகர் சரியாக புரிந்து சரியானதை சொல்லியிருக்கிறார்!! ஒளியின் தூதன் கிறிஸ்துவே!!

//இயேசுவை தூதனாக கூறிய அந்த பாஸ்டருடைய phone no. கிடைக்குமா.? ஒருமுறை பேசிப்பார்க்கலாமே...? T.V. - ல் அனேகர் பார்க்கும் நிலையில் ஒரு அமைப்பின் பாஸ்டர் இப்படி கருத்தைக்கூறினால் அது அந்த அமைப்பே இந்த கருத்தைக் கொண்டிருப்பதாக அர்த்தம். என்வே A.G. சபை அமைப்பு இதற்கு நிச்சயம் மறுப்பு தெரிவிக்கவேண்டும்.... //

இவர்களின் கவலையே வேறு!! இயேசு கிறிஸ்துவை எப்படி தூதனாக கூறுகிறார் என்பதே!! இருப்பதை அந்த பாஸ்டர் சொல்லியிருக்கிறார், ஆனால் இந்த இனை மேய்ப்பர் எந்த ஒரு வசனத்தையும் தன் விளக்கத்திற்கு துனையாக எடுத்துக்கொள்ளவில்லை, அதை வசனத்தை சொல்லுவோர் மீது இவர்களின் கோபத்தை பாருங்களேன்!! வசனம் என்றால் இவர்களுக்கு அப்படி ஒரு பயம் போல்!! ஏனென்றால் ஒளியின் தூதனான கிறிஸ்து இயேசுவின் வேஷம் தரித்தவனின் ஊழியக்காரர்கள் தான் இவர்கள்!!

இயேசு கிறிஸ்து இப்பொழுது தூதராக இருக்கிறார் என்று வேதம் சொல்லுவது இல்லை, அதையே நாங்களும் சொல்லுகிறோம்!! மாம்சத்தின் வந்த கிறிஸ்து இயேசு தேவனுக்கு கீழ்ப்படிந்து தன்னையே உலகத்தின் பாவங்களுக்கு பலியாக ஒப்புக்கொடுத்ததின் நிமித்தம், உயர்த்தப்பட்டார், பிதாவின் வலது பாரிசத்திற்கு!! ஆனால் அவர் மாம்சத்தில் வரும் முன் "கர்த்தரின் தூதனாக" இருந்தவர் தான்!! ஆகவே தான் அப்போஸ்தலன் இங்கு இயேசு கிறிஸ்துவை ஒளியின் (தேவனின்) தூதன் என்று மிகவும் சரியாகவும் துனிச்சலாகவும் எழுதுகிறார்!! ஆனால் வழக்கம் போல் குழப்பத்தை விளைவிக்கும் நம் ஊழியர்கள், அது எப்படி கிறிஸ்து "தூதராக" இருந்திருக்க முடியும் என்று பாய்கிறார்கள், அர்த்தம் புரியாமல்!!

  • கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் உள்ள நிலை: லோகோஸ் என்கிற கர்த்தரின் தூதனாக இருந்தவர்
  • அதன் பின் கிறிஸ்து மாம்சத்தில் வந்தார்
  • மாம்சத்தின் வந்த கிறிஸ்து தேவனின் சித்தத்தை நிறைவேற்றியதால் உயர்த்தப்பட்டார் (பிலி 2:8-11)

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: II கொரிந்தியர் 11:14 - ஒளியின் தூதன் கிறிஸ்து இயேசுவே


//May be it is just a slip of the tongue. இயேசு கிறிஸ்து தூதன் என்று நினைத்து அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.//

இதுவும் நீங்கள் ஆழமாக நம்பியிருக்கும் கோட்ப்பாட்டின் வெளிப்பாடு தான்!!

அவர் என்ன நினைத்து சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் கேட்காமலும் பார்க்காமலும் எப்படி விமர்சிக்க முடியும்!! என்னடா நம்மை போன்றே திரித்துவத்தை போதிக்கும் ஒருவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்கிற சங்கோஜமா!! கவலைப்படாதீர்கள், நீங்களும் அப்படியே பேசும் காலம் வருகிறது!! சத்தியத்தை ஏற்றுக்கொள்வீர்கள், தப்பிக்க வழி இல்லீங்கோ!!


கேட்டால் "தேவ செய்தி" தருகிறோம் என்கிறார்களே, தேவ செய்தியில் Slip of Tongue!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard