kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெத்தப்படித்த கோல்டா...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: மெத்தப்படித்த கோல்டா...


//??? அதுக்குத்தான் ஆவியானவர் துணை வேண்டும் என்பது. சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ கண்டித்து உணர்த்துவார்.(கேட்டுத் திருந்துவது திருந்தாததும் நம் விருப்பம்!) அவர் கூட இருந்தால் Aishwarya வோட graphics பண்ணி படம் போட்டதுக்கு தலையில் ஒரு தட்டு உங்களைத் தட்டியிருப்பார்!! That was very immature and a bit inappropriate. You need to delete that picture!//

ஆமாமா.. 'ஆவியானவர்' துணைகொண்டு உங்க ஆட்கள் வாழும் 'பரிசுத்த' ஜீவியத்தைத்தான் பார்க்கிறோமே... 

தலையில் தட்டி நரகத்தில் நித்திய ஆக்கினைக்கு உட்படுத்தியிருப்பாராக்கும்? இது வெறும் ஹாஸ்யத்துக்கென்றே என்று 'ஆவியானவருக்கு' உங்களை விட அதிகமாக தெரியும். என்னை யாரும் கண்டித்து உணர்த்தவேயில்லை. ஆவியானவருடைய பிரயாசம் வேஸ்ட்.

 

மரணம் என்றால் என்னவென்று தெரிவிக்க முடியாத 'ஆவியானவர்' எனக்கு அவசியமே இல்லை.

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/ஒரு நாளாவது இந்த மாநாடு ஒளிபரப்பைப் (முடிந்தால் ஜெபத்துடன்!) பாருங்க! Thanks!//

 

இம்மாதிரி காமெடிகளை ஏராளமாக பார்த்தாகிவிட்டது. உங்களுக்கு ஹாஸ்யம் தேவைப்பட்டால் நீங்கள் பாருங்கள். அபத்தங்களை மணிக்கணக்காக பார்க்க நேரமில்லை...

 

அதான் களை நீங்களே பதிப்பீர்கள். அல்லது மாநாட்டு வெளிவரும். பார்க்கலாம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நரகம் இல்லை. அனைவருக்கும் இரட்சிப்பு. இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்பதுதான் இக் கடைசிக்காலத்தின் கொடிய வஞ்சக உபதேசமாகத் தெரிகிறது.இப்படிப்பட்ட ஆட்களைப் பார்ப்பேன், பேசுவேன் என்று கற்பனையும் பண்ணிப் பார்த்ததில்லை நான்!//

வஞ்சகத்திற்குள் வாழ்ந்து வருபவர்களுக்கு சத்தியம் சொல்லுவோர் எதிர்களாக தான் தெரிவார்கள்!! என்னடா, நாம் பயப்படுத்தும் நரகம் போல் இல்லாமல் இது வேறு என்னமோ இருக்குதே என்று சந்தோஷப்படுவதை விட்டு விட்டு அங்கே தீ இருக்குமாம், ஆனாலும் ஒன்றும் அதில் அழியாதாம்!! சுத்த லூசுத்தனமான பேச்சு!!

என்னமோ நீங்கள் வந்த பிறகு தான் கடைசிக்காலம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது அறியாமை, அறிவீனம்!! தேவனின் அநாதி தீர்மானங்களின் கடைசி காலம் இந்த சுவிசேஷத்தின் காலம் தான், அது எப்பொழுது தொடங்கியதோ அத்துடன் அதை எதிர்ப்போரும் தோன்றினார்கள்!! திரித்துவம், ஆத்துமா சாகாது, தீ, அக்கினி கடலும் அதில் நியாயத்தீர்ப்புக்கு முன்னமே எரிந்துக்கொண்டு இருக்கும் கோடா கோடி ஆத்துமாக்கள் போன்ற போதனைகள் தான் மனித போதனைகள், அதை கொண்டு வருவது அந்திகிறிஸ்துவின் ஆவி!!

இக்கடைசி காலம் என்பது இயேசு கிறிஸ்து பரமேறியது முதல் துவங்கியது என்பதை கூட அறியாத மூட கூட்டமே!! எப்படி வேண்டுமென்றாலும் வாழ்ந்துக்கொள்ளாம் என்று சத்தியம் சொல்லும் யாரும் போதிப்பது கிடையாது!! அப்படி பட்ட எந்த பதிவு இங்கே பார்த்தீர்கள் என்று காண்பிப்பீர்களா!! அல்லது இப்படி தான் வாழ வேண்டும் என்று குறுட்டுத்தனமாக போதித்துவிட்டு அதன் படி என்ன வாழ்ந்து கிழித்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா!! நாங்கள் சொல்லுவது என்னவென்றால் நீங்கள் என்ன தான் போதித்தாலும் இப்படி தான் இருக்கும்!! ஏனென்றால் இவை தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கிறது!! அதை எதிர்த்து நிற்பவர்கள் மூடர்களே.....!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்று இயேசு கிறிஸ்து கேட்பது தான் நடைபெறும், நீங்கள் எத்துனை தான் முட்டி மோதினாலும்!! நல்ல வேளை, எங்களை நீங்கள் பார்க்கவில்லை.... பேசவில்லை.....!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா ஜாஸ்மின்:
//ரசகுல்லாவைப் பார்க்காதவர்கள் அது கருப்பா, காரமா இருக்கும் என்று கூட ஏதாவது தலை அறிவினால் சொல்லலாம்.ஆனால் பார்த்தவுடன் ரசகுல்லா வெள்ளை என்று தெரியும். ருசித்தவுடன் இனிப்பு என்று புரியும். அது போலவே பலருக்கும் இப்ப தேவை வெளிப்பாட்டு அறிவு. பார்த்து ருசித்து உணரும் அறிவு. இது இல்லாததினால்தான் பல தவறான புரிந்து கொள்ளுதல்கள் உண்டாகி இருக்கிறது .இந்த பிரச்சினை கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இருக்கிறது. எனவேதான் கண்மூடித்தனமாக சாது, வின்செண்ட் போன்றோரை எதிர்க்கிறார்கள்.

எனவே பெரேயன்ஸ் அவர்களே, உங்களுக்கும் இப்ப தேவை வெளிப்பாட்டு அறிவு மற்றும் நிஜ ஆவிக்குரிய அனுபவங்கள். அது இருந்தால் ஆவியானவரை அது இது என்று சொல்ல மாட்டீங்க.

--

எங்களைப் போல உறுப்பினர் ஆகாமலே பங்களிப்பவர்களை என்ன செய்வீங்க பெரேயன்ஸ் அவர்களே?

மாற்றான் தோட்டத்தில் ஏதோ மல்லிகை தெரிகின்றதே! பாத்து சில்சாம் அவர்களே. சோல்சொல்யூஷனின் ஃபேஸ்புக் முகத்தைப் பார்த்து ஏமாந்துடாதீங்க!!//

கோல்டா அவர்களே,

ரசகுல்லா என்று தமிழில் அழைத்தாலும் அதன் உன்மையான உச்சரிப்பு ரொஷ்கொல்லா!! உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்கு தெரியாது!! மேலும் இது தோன்றிய இடம் கொல்கொத்தா!! இது சுத்தமான வெள்ளை நிறம் கிடையாது!! தமிழ்நாட்டில் கிடைப்பது போல் ரசகுல்லாவே அன்றி உண்மையான ரொஷ்கொல்லா கிடையாது!! இனிப்பாக இருக்கிறது என்பதால் ஜாங்கிரியும் மைசூர்ப்பாகும் ஒன்று தான் என்பது போல் இருக்கிறது உங்களின் வாதம்!!

ரொஷ்கொல்லா கிறிஸ்து என்றால் நீங்கள் சொல்லும் ரசகுல்லா கிறிஸ்து விரோதி (அதான் பிரபலமான அந்திகிறிஸ்து)!! ரொஷ்கொல்லா வேத வாக்கியங்கள் என்றால் ரசகுல்லா நீங்கள் சொல்லும் வார்த்தைகள்!! ரொஷ்கொல்லா உண்மை என்றால் நீங்கள் சொல்லும் ரசகுல்லா போலி!!

உங்களுக்கு ரொஷ்கொல்லாவும் தெரியவில்லை, வேதமும் தெரியவில்லை!! போலியானதை பார்த்தே இது தான் உண்மை என்று ஏமாந்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! என்ன செய்வது!!

ஃபேச்புக்கில் என் பதிவை பார்க்காதவர்களுக்கு,

Christian is addicted to HMV!! His Master's Verse!!
The servant of Satan (who transforms himself as Angel of light) is addicted to HMV too!! His Master's Voice!!
The mass Christiandom is interested to preach in that way!! "Yesterday Night He appeared before me in a bright light and spoke to me!" (HMV). That's him, the transformed angel of light!!

வசனம் தெரியாதவர்கள் பேசியதை கேட்டோம் என்கிறார்கள் (அதான் விசெ, சாது போன்றோர்)!! வசனத்தை விட்டு விட்டு கேட்டோம் என்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!! எச்சரிப்பது எம் கடமை!!

கோல்டா அவர்களே, ஆவியை அது இது என்று நான் அல்ல நீங்கள் கைய்யில் வைத்திருக்கும் வேதமும் சொல்லுகிறது!!

நீங்கள் உறுப்பினர் ஆனாலும் என்னை எதிர்ப்பீர்கள்!!

சில்சாமிற்கு நீங்கள் வழங்கிய அறிவுறைக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா ஜாஸ்மின்:
//வெளிப்பாட்டு அறிவு.

எழுதியதை புரிந்து கொள்ள எழுதியவரின் துணை தேவை. கம்பர் ஏதோ நினைத்து எழுதியிருப்பார். அது புரியாமல் கம்பர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் நம் ஆட்கள். அது போல் தான் வேதத்தை சரியாக புரிந்து கொள்ள நமக்கு எழுதிய ஆவியானவர் துணை வேண்டும். அது இல்லாவிட்டால் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தேவ தூஷணம் சொன்னான் என்று சொல்லி சிலுவையில் அறைந்ததுபோல், நாமும் யாரையாவது தேவ தூஷணம் சொல்கிறான் என்று சொல்லி சிலுவையில் அறைந்து கொண்டிருப்போம்.//

ஹம்பக்!!

வேதத்தில் ஆக்கியோன் தேவன்!! அதை எழுதியவர்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மனிதர்கள்!! அதை தேவனின் ஆவியை கொண்டு எழுதினார்கள்!! ஆவியானவர் எழுதினார் என்று சொல்லி உங்கள் அறிவீனத்தை வெளிப்படுத்துகிறீர்கள்!!

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

வசனத்தை புரிந்துக்கொள்ளாத நீங்கள் எதை தான் ருசிக்கிறீர்களோ, பார்க்கிறீர்களோ (ரசகுல்லா போன்று)!! தேவ ஆவி என்பது ஆவியானவர் கிடையாது சகோதரியே!!

இயேசு கிறிஸ்து எல்லா மனுஷர்களுக்காகவும் தம்மை மீட்கும் பொருளாக கொடுத்தார் என்பதை நம்ப மறுத்து, அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சில கோமாளிகள் இருக்கிறார்கள், அவர்களில் நீங்களும் ஒருவரே!! தேவ தூஷணம் செய்துக்கொண்டு கிறிஸ்துவை மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைந்துக்கொண்டிருக்கும் கூட்டத்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பாத்தீங்களா பெரேயன்ஸ் அவர்களே! உங்களுக்கு நேரடி அனுபவம் இருப்பதால்தானே ரசகுல்லா பற்றிய எல்லா விபரமும் தெளிவாக சொல்ல முடிகிறது? இதைத்தான் நானும் சொல்கிறேன். நிஜத்துடன் நேரடி அனுபவம் தேவை. அதுவே நம்மை தெளிவு படுத்தும்.//

இதை தெரிந்துக்கொள்ள நேரடி அனுபவம் தேவையில்லை, வாசித்தால், பார்த்தால் கூட போதும்!! புரிந்துக்கொள்ளுதல் அனுபவத்தினால் தான் வருமென்றால், 13ம் மாடியிலிருந்து குதித்தால் எழும்பு முறியுமா அல்லது மரணமா என்பதை அனுபவித்து பார்ப்பீர்களோ!!?? தீக்குள் கைய்யை வைத்தால் தான் அது சுடும் என்பீர்களா??

தேவ ஞானத்தை கேளுங்கள், அவருக்கு சித்தமிருந்தால் நிச்சயமாக தருவார், வசனத்தை புரிய வைப்பார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard