//யூதர்களின் புதிய ஆண்டு , ரோஷ் ஹஷானா (Rosh Hashanah), செப் 28 இல் ஆரம்பிக்கிறது. 10 நாள் கழித்து பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வரும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் புதிய வருட நாளன்று பரலோகில் அந்த வருடம் அந்த மனிதனின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய தேவ சித்தம், நன்மைகள், செய்த பாவத்திற்க்கு வர வேண்டிய தீமைகள் எல்லாம் எழுதப்படும். அடுத்த 10 நாட்களும் நாம் அப்பீல் செய்யும் காலம். நம்மைத் தாழ்த்தி, ஆராய்ந்து பார்த்து, மனந்திரும்பும் காலம். அப்படி செய்தோமானால், அச்சமயத்தில் நமக்கு விரோதமாக வர வேண்டிய தீமைகள், நியாயத்தீர்ப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டு, நாம் ஒரு ஆசீர்வாதமான் ஆண்டிற்குள் பிரவேசிப்போம்.
இந்த 2011 அக்டோபர் 8 அன்று பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வருகிறது. அதற்குப் பின் சபை ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கப் போகிறது. Church is going to enter into a new season/ new era. A new dispensation begins.
சபை என்பது எல்லா வகையான ஊழியங்களையும், விசுவாசிகளையும், ஊழியர்களையும் குறிக்கும்.
இந்த வரப் போகும் புதிய காலத்தில் சபையில் என்ன மாற்றங்கள் உண்டாகும்?
1. அற்புதங்கள், அதிசயங்கள் இது வரை கண்டிராத அளவில் ஊழியக்காரர் மூலமாக மட்டுமல்லாமல் , விசுவாசிகள் மூலமாகவும் நடக்கும். மரித்தோரும் உயிர்த்தெழுவார்கள்.
2. திருச்சபைக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயம் நம்மை பார்க்கும் விதம் மாறும்.
3. தேவ இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். பலர் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
4. ஆத்தும அறுவடை பெரிய அளவில் நடக்கும். நாம் கேள்விப்படாத இடங்களிலெல்லாம் ஆத்துமாக்கள் கர்த்தர் பக்கம் திரும்புவார்கள்.
5. ஆவிக்குரிய மண்டலம்/ஆவிக்குரிய காரியங்கள் இன்னும் தெளிவாக பலருக்குத் தெரியும். ஆவி மண்டலமும், பூமி மண்டலமும் ஒன்றாகும்.
6. ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழும்பப் போகிறது.
எனவே செப் 28 - அக் 8 வரை உள்ள நாட்கள் , நாம் தீவிரமாக தேவனைத் தேடும் காலமாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு தேவனைத் தேட வேண்டும். ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சபை ஜெப வீடாக,அப்பத்தின் வீடாக இருக்க வேண்டும். அப்படி ஒரு உண்மையான சபையாக இருந்தால், வரப்போகும் புது யுகத்தில், வியாதியஸ்தர்களை முதலில் சபைக்குத்தான் கொண்டு வருவார்கள், ஆஸ்பத்திரிக்கு அல்ல. சபையில் கர்த்தரின் சித்தம் ஊரீம், தும்மீம் வழியே அன்று வெளிப்பட்டது போல் தெளிவாக வெளிப்படும். (ஆசாரியனின் மார்ப்பதக்கத்தில் ஊரீம், தும்மீம் இருக்கும். தேவ சித்தம் அறிய ஜெபிக்கும் போது தேவ சித்தம் என்றால் பச்சைக் கல் ஒளிருமாம். இல்லையென்றால் சிவப்புக்கல் ஒளிருமாம்!)
எனவே நண்பர்களே, கர்த்தரைத் தேட காலமாச்சு. தேடுவோம். பெரிய காரியங்களை அவ்ருடன் சேர்ந்து அவருக்காக செய்வோம்.
இது சமபந்தமாக ஒரு தீர்க்கதரிசன மாநாடு அக்டோபர் 7-10 இராமநாதபுரத்தில் நடைபெறப் போகிறது. நேராக சென்றும் கலந்து கொள்ளலாம். நேரலையும் ஏஞ்சல் டீவியில் பார்க்கலாம்.//
இது சாது சுந்தர் செலவராஜ் என்ற ஓநாயின் ஆட்டு வேஷத்தின் பகுதி. தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல கேவலமான முறையில் தோற்கப்போகிறான். கோமாளிக்கூட்டத்தின் கேவலங்கள் எப்படி வேதத்துக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்று பார்க்கலாம்.
சாது, விசெ போன்றோருக்கு பொருந்தும் ஒரு வசனம் இருக்கிறது,
மத்தேயு 6:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இவர்கள் கர்த்தாவே கர்த்தாவே என்று தான் "தீர்க்கதரிசனம்" உரைக்கிறார்கள், அல்லவா!! கோல்டா இவர்களை பாராட்டுகிறார், இவர்கள் பெரிய தி.ச என்று, ஆனால் கர்த்தர் இவர்களை ஒரு போதும் பாராட்டுவதில்லை, மாறாக இவர்களை அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்கிறார்!!
அக்கிரமச் செய்கைகாரர்களை பாராட்டும் கோல்டா என்ன செய்வாரோ!!
//யூதர்களின் புதிய ஆண்டு , ரோஷ் ஹஷானா (Rosh Hashanah), செப் 28 இல் ஆரம்பிக்கிறது. 10 நாள் கழித்து பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வரும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் புதிய வருட நாளன்று பரலோகில் அந்த வருடம் அந்த மனிதனின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய தேவ சித்தம், நன்மைகள், செய்த பாவத்திற்க்கு வர வேண்டிய தீமைகள் எல்லாம் எழுதப்படும். அடுத்த 10 நாட்களும் நாம் அப்பீல் செய்யும் காலம். நம்மைத் தாழ்த்தி, ஆராய்ந்து பார்த்து, மனந்திரும்பும் காலம். அப்படி செய்தோமானால், அச்சமயத்தில் நமக்கு விரோதமாக வர வேண்டிய தீமைகள், நியாயத்தீர்ப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டு, நாம் ஒரு ஆசீர்வாதமான் ஆண்டிற்குள் பிரவேசிப்போம்.//
அந்த மனிதனின் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய தேவசித்தம் (?) புது வருட நாளில்தான் எழுதப்படுமாம். செய்த பாவத்திற்கு வர வேண்டிய தீமைகளும் எழுதப்படும். அடுத்த 10 நாட்கள் நாம் அப்பீல் செய்து மனம் திரும்பினால் தீமை வராது , ஆசீர்வாதம் வரும். இதைத்தான் ஒக்காந்து யோசிக்கும் மூடக்கூட்டம் செய்துவருகிறதோ? எத்தகைய அபத்தம்? வேதத்துக்கு முற்றிலும் முரணான ஒரு விஷயத்தைப் பதித்துவிட்டு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேசி மார்க்கத்தின் போதையின் உச்சம் இது. இதை மனிதன் செய்ய முடியுமானால் எதற்கு இயேசு கிறிஸ்து?
//சபை என்பது எல்லா வகையான ஊழியங்களையும், விசுவாசிகளையும், ஊழியர்களையும் குறிக்கும். //
சாதுவின் புதிய விளக்கம்!! கிறிஸ்துவின் சரீரமே சபை என்கிறது வேதம்!! சபை என்றால் ஊழியங்களாம்லே!!
//1. அற்புதங்கள், அதிசயங்கள் இது வரை கண்டிராத அளவில் ஊழியக்காரர் மூலமாக மட்டுமல்லாமல் , விசுவாசிகள் மூலமாகவும் நடக்கும். மரித்தோரும் உயிர்த்தெழுவார்கள்.//
கிறிஸ்து எழுப்புவார் என்றால் நம்பாத கோமாளிகள், விசுவாசிகள் செய்வார்கள் என்றவுடன் அது தீர்க்கதரிசனமாயிற்று!!
//2. திருச்சபைக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயம் நம்மை பார்க்கும் விதம் மாறும். //
கண்டிப்பாக மாறும்!! ஆனால் திருச்சபை என்றால் என்ன!! ஒரு கூட்டத்திற்கு தாய்திருச்சபை, இன்னோரு கூட்டத்தாருக்கு திருச்சபை, மொத்தத்தில் கிறிஸ்துவின் சரீரமான சபை கிடையாது!! சமூதாயத்தில் இவர்களை பார்க்கும் விதம் மாத்திரம் இல்லை கிறிஸ்துவின் பார்வையில் இப்படி இருக்கும்,
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
//3. தேவ இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். பலர் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வார்கள். //
இன்னும் இரகசியங்கள் இருப்பதாக இவர்கள் தான் புது புது வெளிப்பாடுகள் தருகிறார்கள் ஆனால் ஒன்றும் வேதத்தின்படி இருக்காது!! பவுல் சொல்லுகிறார்,
அப்போஸ்தலர் 20:26. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
ஒரு இரகசியம் இன்னும் வெளிப்படாமல் இருக்கிறது போல், அது இவர்களை வெளிப்படுத்தும்:
II தெசலோனிக்கேயர் 2:7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
//4. ஆத்தும அறுவடை பெரிய அளவில் நடக்கும். நாம் கேள்விப்படாத இடங்களிலெல்லாம் ஆத்துமாக்கள் கர்த்தர் பக்கம் திரும்புவார்கள். //
வேதத்திற்கு புறம்பான அப்பட்டம்!! கிறிஸ்துவின் நேரடியான சீஷரான தோமா இந்தியாவிற்கு வந்து, பல மிஷ்னரிகள் வந்து விதைத்தாலும் நடக்காத விளைச்சளை இவர்கள் அறுவடை செய்ய போகிறார்களாம்!! மீண்டும்,
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
விசுவாசத்தை காணாவதவர்கள் தான் இவர்களின் ஆத்துமாக்களோ!!??
//5. ஆவிக்குரிய மண்டலம்/ஆவிக்குரிய காரியங்கள் இன்னும் தெளிவாக பலருக்குத் தெரியும். ஆவி மண்டலமும், பூமி மண்டலமும் ஒன்றாகும். //
திரித்துவம் என்கிற ஒரு தத்துவத்தை உருவாக்கியவர்கள், இப்படி பட்ட அப்பட்டமானதை தீர்க்கதரிசனம் என்று சொல்லி வஞ்சிக்கிறார்கள்!! வஞ்சகம் தான் பெறுகும் என்று வேதம் சொல்லுகிறது, விசுவாசமற்றவர்கள் தான் பெறும் அளவில் காணப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது!! "ஆவி மண்டலமும் பூமி மண்டலமும் ஒன்றாகும் என்பதற்கு வேத ஆதாரமே இல்லை!!
பொதுவாக முன்பெல்லாம் யாராவது தீர்க்கதரிசனம் (!!) என்று சொன்னால் எதாவது ஒரு வசனத்தை சொல்லி காட்டுவார்கள்!! ஆனால் இன்று தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை கூடி விட்டதால், யாருடைய தீர்க்கதரிசனம் அதிக பரபரபறப்பை கொண்டு வருகிறது என்பதர்காக வேதத்தை மிஞ்சி மற்றோர் வேதம் எழுதும் அளவிற்கு துனிந்து "அக்கிரமம்" செய்கிறார்கள்!!
//6. ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழும்பப் போகிறது. //
யார் இந்த தீர்க்கதரிசன சந்ததி!! கள்ள தீர்க்கதரிசிகள் எழும்ப போகிறார்கள்!! நிறைவான வசனம் வந்த பிறகு தீர்க்கதரிசனங்கள் ஓய்ந்து போகும் என்று வசனம் சொல்லுகிறது!!
1 கொரிந்தியர் 13:8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 9. நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 10. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
ஒழிந்து போனதை வைத்து இவர்கள் சந்ததிகளை எழுப்புகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!
வெளி. 22:18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
எதையும் கூட்ட கூடாது என்று வேதத்தில் வாசித்து விட்டு அது கிறிஸ்தவர்களுக்கு தானே என்று இவர்கள் தீர்க்கதரிசன சந்ததியை எழுப்பப் போகிறார்களாம்!!
//எனவே செப் 28 - அக் 8 வரை உள்ள நாட்கள் , நாம் தீவிரமாக தேவனைத் தேடும் காலமாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு தேவனைத் தேட வேண்டும். ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சபை ஜெப வீடாக,அப்பத்தின் வீடாக இருக்க வேண்டும். அப்படி ஒரு உண்மையான சபையாக இருந்தால், வரப்போகும் புது யுகத்தில், வியாதியஸ்தர்களை முதலில் சபைக்குத்தான் கொண்டு வருவார்கள், ஆஸ்பத்திரிக்கு அல்ல. சபையில் கர்த்தரின் சித்தம் ஊரீம், தும்மீம் வழியே அன்று வெளிப்பட்டது போல் தெளிவாக வெளிப்படும். (ஆசாரியனின் மார்ப்பதக்கத்தில் ஊரீம், தும்மீம் இருக்கும். தேவ சித்தம் அறிய ஜெபிக்கும் போது தேவ சித்தம் என்றால் பச்சைக் கல் ஒளிருமாம். இல்லையென்றால் சிவப்புக்கல் ஒளிருமாம்!) //
குறி சொல்லுவோர் நிறத்தை வைத்து தேவ சித்தம் அறிய போகிறார்களாம்!! இதை கள்ள தீர்க்கதரிசிகளின் எழுப்புதல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது!!
பிரசங்கியின் புத்தகத்தில் இவர்கள் விடும் புருடாக்கள் இல்லாததினால் அது நாத்தீகனின் புத்தகமாம்!! ஆனால் தேவ சித்தத்தை அறிந்துக்கொள்ள கற்கலை நம்பும் கூட்டத்தார் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் சந்ததிகளை வேறு எழுப்ப போகிறார்களாம்!! செப் 28 முதல் அக் 8 வரை தேவனை தீவிரமாக தேடுனமுமாம்!! மற்ற நாட்களில் சுமாராக தேடலாம் போல்!! என்ன தான் கூத்து நடக்குதோ!! வியாதியஸ்தர்களை "முதலில்" சபைக்கு கொண்டு வருவார்களாம், அப்படி என்றால் "பிறகு"!!
1. அற்புதங்கள், அதிசயங்கள் இது வரை கண்டிராத அளவில் ஊழியக்காரர் மூலமாக மட்டுமல்லாமல் , விசுவாசிகள் மூலமாகவும் நடக்கும். மரித்தோரும் உயிர்த்தெழுவார்கள்.
ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. இது என் தீர்க்க தரிசனம். மரித்த யாரும் எழும்பப் போவதில்லை. மரித்த தினகரனை சாது ஓநாய் எழுப்புமா?
2. திருச்சபைக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயம் நம்மை பார்க்கும் விதம் மாறும்.
திருச்சபை இன்னும் குழம்பும்.
3. தேவ இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். பலர் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
இதுதான் காலா காலமாக நடக்கிறதே!
4. ஆத்தும அறுவடை பெரிய அளவில் நடக்கும். நாம் கேள்விப்படாத இடங்களிலெல்லாம் ஆத்துமாக்கள் கர்த்தர் பக்கம் திரும்புவார்கள்.
ஆத்துமாக்கள் இருக்கட்டும் மனிதர்கள் திரும்புவார்களா? அவர் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ என்ற வசனம் பொய்யாய்ப் போகுமோ?
5. ஆவிக்குரிய மண்டலம்/ஆவிக்குரிய காரியங்கள் இன்னும் தெளிவாக பலருக்குத் தெரியும். ஆவி மண்டலமும், பூமி மண்டலமும் ஒன்றாகும்.
ஆவி, பூமி????????????
6. ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழும்பப் போகிறது.
சாதுவுக்கா?
என்ன நடக்கும் தெரியுமா?
2 தெச2:9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இந்த வஞ்சகத்தின் தூதன் தான் சாதுவும், வி.செ யும். ஆகையால் நீங்கள் அதை அப்படியே நம்புவீர்கள்..
-- Edited by bereans on Sunday 18th of September 2011 10:48:38 PM