kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??


கிறிஸ்தவ மண்டலத்தில் அடிப்படியான ஒரு கோட்பாடு என்றால் அது திரித்துவ கோட்பாடே!! இதை விளக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை, அல்லது முழு வேதாகமத்தை தேடி காண்பித்து இதை குறித்து ஒரு நேரடியான வசனத்தை காண்பிக்கும் அவசியமும் இவர்களுக்கு இல்லை!! திரித்துவம் என்பது ஒரு தத்துவம் (தியரி), நிரூபிக்கப்படாத எதுவுமே ஒரு தத்துவம் தான்!! வேதத்தில் திரித்துவம் என்கிற வார்த்தை இல்லாட்டிக்கூட திரித்துவத்தை ஏற்று அதை போதிப்பவர்கள் மாத்திரமே இவர்களுக்கு கிறிஸ்தவர்கள்!!

"தேவன் திரித்துவமாக இருக்கிறார்" என்கிறார்கள் கிறிஸ்தவ மண்டலத்தின் வேத விற்பனர்கள்!! அதாவது தேவன் மூன்று நபர்களாக இருக்கிறார் என்பது தான் இந்த தத்துவம்!!

பிதாவாகிய தேவன்
பரிசுத்த ஆவி(யானவர்)
தேவனின் குமாரனான கிறிஸ்து இயேசு

மேலே சொன்னப்பட்ட தத்துவம் கிறிஸ்தவ மண்டலத்தை பொறுத்த வரையில் பிரமிக்கத்தக்க இரகசியம், ஆனால் நமக்கோ இது வேதத்தில் இல்லாத ஒரு மனித போதனையே!!

மிகவும் முக்கியமான ஒரு காரியத்தை அறிந்துக்கொள்ள வேண்டும்: யாராகிலும் வேதத்தில் இல்லாத ஒரு தத்துவம் அல்லது கோட்ப்பாட்டை சொல்லிக்கொடுக்கிறார் என்றால் அவர் வேதத்தில் இல்லாத வார்த்தைகளை தான் உபயோகப்படுத்துவார்!!

1. வேதத்தை எப்படி வாசித்து, எப்படி தேடிப்பார்த்தாலும் "திரித்துவம்" "திரியேகத்துவம்" போன்ற ஒரு வார்த்தை இல்லவே இல்லை!!

2. தேவனை குறித்து வரும் எந்த ஒரு வசனமும் அவர் மூன்றாக இருக்கிறார் என்கிறதான வசனம் இல்லைவே இல்லை!!

3. தேவனை "ஒரு நபர்"  (a person)  என்று வேதம் சொல்லுவதில்லை!!

4. வேதம் முழுவதையும் தேடி பார்த்தோமென்றால், பரிசுத்த ஆவி ஒரு தேவன் என்கிறதான வசனம் இல்லவே இல்லை!!

5. கிறிஸ்து குமாரனானபடியால், அவர் ஒரு போதும் பிதா என்றோ அல்லது பிதாவிற்கு ஒத்த தகுதியுடையவர் (co-equal) என்றோ சொன்னதில்லை!! அனைவரும் புரிந்துக்கொள்ளும்படியே அவர் சொன்னது,

.......................ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். (யோவான் 14:28)

பரிசுத்த ஆவியை தேவன் என்று வேதம் சொல்லுவதில்லை, தேவன் திரித்துவம் அல்லது திரியேகத்துவம் அல்லது மூன்றாக இருக்கிறார் என்று வேதம் சொல்லுவதில்லை, கிறிஸ்து பிதாவின் குமாரனாக இருக்கிறார் என்றே வேதம் சொல்லுகிறது, ஆனாலும் இந்த "இரகசியமான" கோட்ப்பாட்டை கோடாகோடி ஜனங்கள் நிறைந்த கிறிஸ்தவ மண்டலம் கண் மூடித்தனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது!! ஏன்??

ஹேஸ்டிங்க்ஸ் வேதாகம அகராதி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்!!

    Page 1015: TRINITY--The Christian doctrine of God as existing in three Persons and one Substance IS NOT DEMONSTRABLE BY LOGIC or SCRIPTURAL PROOF..." (Emphasis mine).

பக்கம் 1015: திரித்துவம் : தேவன் மூன்று நபர்களாகவும் (three Persons) அதே சமயம் ஒரே பொருளாக (one Substance) இருக்கிறார் என்கிற கிறிஸ்தவ கோட்ப்பாட்டிற்கு வேதத்தில் எந்த சாட்சியமும் (SCRIPTURAL PROOF) இல்லை, இதை நியாயமான தர்க்கத்தினாலும் (LOGIC) விளக்க முடியாது!!

என்ன ஒரு நேர்மையான ஒப்புதல் வாக்கு!! இது பாதி மாத்திரமே, மற்ற பாதி,

"...a NECESSARY HYPOTHESIS, ABOVE REASON but not contrary to it"

ஆனால் ...... எல்லா காரணங்களுக்கும் மேலாக, இது தேவையான‌ அனுமானம்!!

ஒரே கேள்வி..... எந்த வித வேத சாட்சியமும் இல்லாத ஒரு விச்சித்திரமான கோட்பாட்டை ஏன் நம்ப வேண்டும்?? உண்மையிலேயே இந்த உண்மையில்லாத, வேத சாட்சியம் இல்லாத ஒரு வார்த்தை குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது!! இந்த "பேய்த்தன்மையான" கோட்பாடு வேதத்தில் இல்லை, இது நியாயமான தர்க்கத்தினாலும் நிரூபிக்க முடியாது என்று இருந்தாலும்...... கிறிஸ்தவத்தின் அஸ்திபார கோட்ப்பாடு "திரித்துவம்" கோட்பாடு!!

இந்த கோட்ப்பாட்டில் தேவனை குறித்த இன்னோரு விகர்ப்பமான வார்த்தையை உபயோகிக்கிறார்கள்!! "ஒரே பொருள்"?? தேவனை ஒரு பொருள் என்று வேதம் எங்கும் சொல்லுவதில்லை!! ஒரு பொருள் அல்லது மூன்று பொருள் என்றெல்லாம் வேதம் சொல்லுவதில்லை!! வேதத்தை சாதாரனமாக வாசிப்பவர்கள் கூட தேவன் ஏதோ ஒரு பொருள் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!! வேதம் சொல்லுகிறது,

யோவான் 4:24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

ஆவிக்கும் "பொருள்"க்கும் சம்பந்தமே கிடையாது!! மேலும் தேவன் ஒரு ஆவியாக இருக்கிறார் என்று அல்ல, தேவன் ஆவியாக இருக்கிறார் என்று தான் வசனமும் சொல்லுகிறது, மூல பாஷையின் அர்த்தமும் சொல்லுகிறது!!

தொடரும்.................

பி.கு. இந்த கட்டுரையும் பிரபல வேத ஆராய்ச்சியாளரும் வேத விளக்கத்தை கொடுத்தும் தன்னை ஒரு ஊழியக்காரன் என்று பொய் வேஷம் போடாதவரும், காணிக்கை தசமபாகம் வாங்காத‌ அன்பர் ரே ஸ்மித் எழுதியதன் தமிழ் முயற்சி!!

 

இந்த கட்டுரை முடியும் வரை இந்த திரியில் வேறு பதிவை தராமல் இது சம்பந்தமான பதிவு தரவேண்டுமென்றால் வேறு திரியில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??


திரித்துவ தத்துவம் அல்லது கோட்ப்பாட்டை வேதத்தின் அடிப்படையிலோ அல்லது லாஜிக்கான தர்க்கத்தினாலோ சொல்ல முடியவே முடியாது, ஆனால் இது ஒரு "தேவையான உத்தேசம்" (necessary hypothesis) என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு கோட்ப்பாடாக இருக்கிறது!! ஏன் இந்த "உத்தேசம்" தேவைப்படுகிறது? வேதம் நமக்கு தேவனை குறித்து சரியான விளக்கம் கொடுத்தும் ஏன் இந்த உத்தேசத்தை வைத்து ஒரு கோட்ப்பாடு உருவாகிறது?? நாம் இந்த உத்தேசம் (hypothesis) என்கிற வார்த்தையின் அர்த்தத்தை பார்ப்போம்!!

    Webster’s Dictionary, hypothesis, A system or theory imagined or assumed to account for what is not understood. An unproved theory. theory, a speculative plan... a formulation of underlying principles of certain observed phenomena which has been verified to some degree... a conjecture; guess.

மனிதன் உருவாக்கிய கோட்ப்பாடுகள் தவறு என்று எத்துனையோ முறை தவறாகிவிட்ட எண்ணிக்கைகள் இருக்கிறது!! கோட்ப்பாடுகள் உருவாகும் போது அதில் ஒரு சிறிய அளவிற்காவது உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆகவே தான் இவொல்யூஷன் தியரியை நான் தியரி என்று சொல்லாமல் ஒரு உத்தேசம் என்று தான் சொல்லுவேன்!! அப்படியே தான் திரித்துவமும்!! இது மனிதனின் கோட்ப்பாடு இல்லாமல் ஒரு உத்தேசமே!! ஏனென்றால் இந்த கோட்பாடு வேதத்தின் எந்த ஒரு வசனத்தையும் ஆதாரமாக வைக்காமல் உருவான ஒரு கோட்ப்பாடு!! ஆகவே இது வெறும் ஒரு உத்தேசமே!!

கிறிஸ்தவ மண்டலத்தின் ஒரு அஸ்திபார கோட்பாடு எந்தவிதமான வேத அடிப்படையும் இல்லாமல் இருப்பதை எப்படி பார்க்க முடிகிறது!! ஆச்சரியமே!!

ஆக, திரித்துவம் என்பது வெறுமனே ஒரு உத்தேசம் மாத்திரமே: மனிதனின் சிந்தனையில் கண்டுபிடிக்கப்பட்டதும், அனுமானம், யூகம், கற்பனை, தத்துவம் கலந்த ஒரு அனுமானம், புரிந்துக்கொள்ள முடியாதது என்று அவர்களே சொல்லுவார்கள் (அதாவது, இருக்கு, ஆனா இல்லை என்பது போல்)!!


வேத விற்பனர்கள் சொல்லும் இப்படி பட்ட மனித சிந்தனைகளையோ, அனுமானங்களையோ, யூகத்தின் பெயரில் வருகிற தத்துவத்தையோ, ஆதாரமற்ற கூற்றுக்களாக ஒதுக்கி விட்டு, இவர்கள் தேவன் யார் என்று சொல்லுவதில் குழம்பிவிட வேண்டியதே இல்லை. தேவன் யார் என்று வேதம் யார் என்றும், எத்துனை தேவன் என்றும் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லுகிறது. என்சைக்லோபீடிய ப்ரிடானிக்கா "திரித்துவத்தை" குறித்து சொல்லுவதை முதலில் வாசியுங்கள்:

Encyclopaedia Britannica Vol. 2, page 480:

    (quote) TRINITY. Fundamental Conception.--This conception of the Trinity is systematically developed by theologians, Greek, Latin and Protestant...The doctrine, then, is primarily religious and if we define God--as in practice religion does--as ‘That which has an absolute claim upon our obedience’ or as ‘the Supreme Object of our reverence,’ the paradoxical element in the doctrine is at least diminished...Is there, then any insuperable difficulty in the notion of a threefold personal embodiment of the one Divine Will and Character, an embodiment so complete in each case that contact with the Divine Person is contact with God:...This ultimate unity of subordination to a single principle is not necessarily identical with the unity which comes from being included within the mind of a single Divine Being. Nor is it obviously identical with the theologian’s ‘numerical unity of substance.’ The Unity, then, of the Object of our supreme reverence and trust is not plainly inconsistent with the existence of personal distinctions (in the modern sense of the word) within the Godhead. It was probably an afterthought to regard the doctrine of the Trinity as providing a more satisfactory conception of ‘personality in God’ than could grow up under a ‘uninpersonal’ theology. Yet Trinitarianism has some points of superiority over a theory which may compel us to conceive God as waking up at the Creation from ‘an eternity of idleness.’ ...It has been similarly argued that in conceiving the ‘not-self with which God contrasts Himself’ as ‘wholly internal to His essence’ while the unity (the Holy Spirit) ‘within which the relation of the two falls is not, as in us, a dark mystery at the back of our life but something which ‘proceeds from both’ we have ‘the best notion that we can frame of Being at its highest.’ Such an argument lead not merely to a plurality but to a trinity of Divine persons, and supports the Western doctrine of the procession of the Spirit from the Father and the Son. (End of Britannica quote).

அடேங்கப்பா!! என்ன ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம்!! எப்படி பட்ட ஆழமான இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்கள்!! என்ன ஒரு வேத ஞானம்!! என்ன ஒரு களிமண் விளக்கம்!! இந்த வியாக்கானத்தை கொடுத்தவரே இதில் உபயோகப்படுத்தப்பட்ட சில வார்த்தைகளை

தேவனின் வார்த்தையை போதிப்பவர்கள் எப்படி பேச வேண்டும் என்று பவுல் சொல்லுவதை கவணியுங்கள்:

1 கொரியந்தியர் 14:8. அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? 9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? அக்காயத்தில் பேசுகிறவர்களாகயிருப்பீர்களே.

இந்த வசனத்திற்கு அர்த்தம் தேவைப்படுகிறதா? மேலே திரித்துவத்தை குறித்து விளக்கம் அளித்திருக்கும் வேத விற்பனர்கள் பவுலின் இந்த அறிவுறையை படித்திருக்க மாட்டார்கள், அல்லது அப்போஸ்தலர் எழுதியதை சரியாக பின்பற்றவில்லை என்று தோன்றுகிறது!!

வேதத்தில் தேவன் இன்னும் சில எச்சரிக்கைகளை தந்திருக்கிறார்.....

அவர் வார்த்தைகளோடு "எதையாவது கூட்டினால்" அல்லது "எதையாகிலும் எடுத்துப்போட்டால்" (வெளி. 22:18,19)

"சத்திய வசனங்களை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்க ஜாக்கிரதை" (2 தீமோத்தேயு 2:15,16)

"ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு" (2 தீமோத்தேயு 1:13)

"லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகள் (கொலோ 2:8)

"இவ்வுலகத்தின் ஞானம்" (1 கொரிந்தியர் 1:20; 3:19)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??


உலகம் எங்கும் இருக்கும் கிறிஸ்தவ மண்டல வேத விற்பனர்கள் மற்றும் இன்னும் பல ஊழியர்கள், தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தவர்களாக இருந்தார்களென்றால், வேதத்தை தவிற வெளி வரும் பல கோடி கிறிஸ்தவ புத்தகங்களில் பல புத்தகங்கள் குறைவாகவே இருக்கும்!! மேலும், ஒன்றும், ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் ஒரு திரித்துவ தேவன் என்கிற அபத்தமான கோட்பாடு உருவாகியிருக்காது!!

இன்னோரு எடுத்துக்காட்டு!! டாக்டர் எட் டிவ்ரீஸ் (Dr. Ed DeVries), வேதாகம கல்லூரியின் தலைவர் எழுதிய "திரித்துவ கோட்ப்பாடு" (Doctrine of the Trinity)!! அதன் முதல் சில வரிகள்:

"நமக்கு கிடைத்திருக்கும் பிரதிகளிலோ, அல்லது பிற மொழிப்பெயர்ப்புகளிலோ  திரித்துவம் என்கிற வார்த்தை இல்லாததினால், பலர் வேதத்தில் திரித்துவம் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால், ஒரு மனிதன் இந்த தத்துவத்தை (தியரி) (இந்த வேதாகம கல்லூரியின் தலைவரும் திரித்துவத்தை ஒரு தத்துவம் என்றே புரிந்துவைத்திருக்கிறார்) புரியவந்தானென்றால், அவர்கள் திரித்துவத்தை வேதத்தில் கண்டுபிடித்து விடுவார்களாம். சிலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் திரித்துவத்தை நம்புவதில்லை, ஆனால், திரித்துவத்தை நம்பாதோர் கிறிஸ்தவர்கள் கிடையாது"

அதாவது திரித்துவத்தை கண்டுபிடிக்க முதலில் வேதத்தில் இல்லாத "திருத்துவம்" என்கிற வார்த்தையை புரிந்துக்கொள்ள வேண்டுமாம்!! இது தான் திரித்துவ கோட்பாடு சாரி திரித்துவ தத்துவம் (தியரி)!!

மத்தேயு 11:25 அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

இன்றைய கல்விமான்கள் (இன்றைய கிறிஸ்தவ மண்டல வேதவிற்பனர்கள்) திரித்துவம் என்கிற வேதத்தில் இல்லாத ஒன்றை முதலில் புரிந்துக்கொண்டு அதன் பின் வேதத்தில் அதை கோர்க்க வேண்டும் என்கிறார்கள்!! ஆனால் நமக்கோ தேவன் யார் என்கிற அறிவை கிறிஸ்து காட்டுகிறார், தன் வசனத்தினால் மாத்திரமே!!

மத்தேயு 11:27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

திரித்துவத்தை குறித்து கல்வியறிவை கொண்டு, வேதத்தில் இல்லாததை கொண்டு எத்துனை பெரிய தத்துவங்கள் எழுதப்பட்டாலும் அவைகளை வசனங்கள் அவமாக்கும்!! ஏனென்றால் பிதா யார் என்று யாருக்கு வெளிப்படுட்த கிறிஸ்து சித்தமாயிருக்கிறாரோ, அவனே தேவனை அறிய முடியும்!!

மேலே திரித்துவத்திற்கான விளக்கத்தை கொடுப்பவரும் அவரை போன்றோரும் சொல்லுவது என்னவென்றால், முதலில் அவர்கள் தேவனை விளக்க ஒரு வார்த்தையை கண்டுபிடித்து, பிறகு அந்த வார்த்தையை கொண்டு ஒரு தத்துவத்தை உண்டுப்பன்னுகிறார்களாம் (அதாவது வேதம் தேவையில்லை, சத்தியம் தேவையில்லை, வசனம் தேவையில்லை) மாறாக அவர்கள் கண்டுபிடித்து வார்த்தையான திரித்துவத்தை வைத்து அவர்கள் தத்துவத்தை கண்டுபிடித்து அதை கிறிஸ்தவம் நம்ப வேண்டுமாம்!! என்ன கூத்து தான் நடக்குதோ!!

அன்பர்களே, திரித்துவம் என்கிற "சத்தியம்" வேதத்தில் எங்குமே காணப்பட்டிருந்தால், அதை ஒரு தத்துவம் (தியரி) என்று வேதவிற்பனர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்!! இவைகளை வெளிப்படுத்துவோம்!!



-- Edited by bereans on Monday 19th of September 2011 07:38:31 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??


The concept of the Trinity is the very concept of the existence of God, and since God reveals himself to his children, it only makes sense that all Christian churches would believe in and defend the doctrine of the Trinity.

அந்த கட்டுறையின் முதல் பாராவில் வரும் இந்த வரி!! அதாவது தேவன் இருக்கிறார் என்பது ஒரு எண்ணம் என்கிறார் (concept of the existence of God)!! அதே போல் திரித்துவம் என்பதும் ஒரு எண்ணமே என்கிறார் அந்த கட்டுறையின் ஆக்கியோன்!! அதாவது ஒரு தத்துவம், ஒரு உத்தேசத்தில் பிறந்த கருத்து கிறிஸ்தவர்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியது எத்துனை ஆச்சரியம்!! இந்த திரித்துவர்கள் வேதத்தில் தேவனை தேடாமல் ஒரு எண்ணம் கொண்டிருக்கிறார்களாம், அதாவது தேவன் இருக்கிறார் என்கிறதற்கு இவர்களுக்கு வேத ஆதாரம் தேவையில்லையாம், வெறும் ஒரு எண்ணம் போதுமாம்!! அப்படியே திரித்துவம் என்கிற கோட்பாட்டையும் நிரூபிக்க இவர்களுக்கு வேத ஆதாரம் தேவையில்லையாம், ஒரு எண்ணம் போதுமாம்!!

திரித்துவம் என்றால் தேவன் திரியேகமாக இருக்கிறார் என்கிறார்கள் திரித்துவர்கள்!! திரியேகம் என்றால் என்ன?? நோவா வெப்ஸ்டர் (Noah Webster) சொல்லுகிறது, திரியேகம் என்றால் ஒன்றில் மூன்று!! அதாவது, ஒருத்தர் தான் ஆனால் பரலாரக இருப்பவர்........ எபிரேயத்தில் ஏலோஹிம் என்கிற வார்த்தையை தேவன் என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.... இந்த வார்த்தை ஏலோஹிம் என்றால் ஒன்றில் மூன்றாம்!!

நோவா வெப்ஸ்டர் திரியேகம் என்றால் ஒருவரின் மூன்று என்று சொல்லுகிறதாம், ஆகவே தேவன் திரித்துவமாக இருக்கிறார் என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறதாம்!! இது எந்த விதமான ஞானமோ!!??

ஏலோஹிம் (Elohim) என்பதற்கு திரித்துவர்கள் ஒருவரில் மூன்று தேவன் என்கிறார்கள்!! இந்த எபிரேய வார்த்தை உண்மையில் இந்த அர்த்தம் தான் கொண்டிருக்கிறதா என்று பார்க்கலாம்:

Strong's Concordance:
elohim: God, god
Original Word: אֱלֹהִים
Transliteration: elohim
Phonetic Spelling: (el-o-heem')
Short Definition: God

NAS Exhaustive Concordance:
Word Origin
pl. of eloah
Definition
God, god
NASB Word Usage
divine (1), divine being (1), exceedingly (1), God (2326), god (45), God's (14), goddess (2), godly (1), gods (204), great (2), judges (3), mighty (2), rulers (1), shrine* (1).

NAS Exhaustive Concordance of the Bible with Hebrew-Aramaic and Greek Dictionaries
Copyright © 1981, 1998 by The Lockman Foundation
All rights reserved Lockman.org

Strong's Exhaustive Concordance:
angels, exceeding, God, very great, mighty

Plural of 'elowahh; gods in the ordinary sense; but specifically used (in the plural thus, especially with the article) of the supreme God; occasionally applied by way of deference to magistrates; and sometimes as a superlative -- angels, X exceeding, God (gods)(-dess, -ly), X (very) great, judges, X mighty.

see HEBREW 'elowahh

கிறிஸ்தவ வேத விற்பனர்கள் பயன்ப்படுத்தும் இந்த கன்கார்டென்ஸை தான் நாங்களும் பயன்ப்படுத்தி தேடி பார்த்தோம், இதில் எந்த ஒரு இடத்திலும் மூன்று என்று இல்லையே!! ஏலோவாஹ் என்கிற வார்த்தையின் பன்மை () வார்த்தையே ஏலோஹிம்!! இதில் இரண்டு அல்லது மூன்று, அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையுள்ளவர்கள் என்கிற எந்த விதமான அர்த்தமும் கிடையாது!!

டாக்டர் எட் டிவ்ரீஸ் (Dr. Ed DeVries) மேலும் எழுதுகிறார், இயற்கையில் திரித்துவம் என்கிற தலைப்பில்!!

என்ன ஒரு கோமாளித்தனம் இது!! வேதத்தில் திரித்துவம் என்கிற வார்த்தை அல்லது திரித்துவம் என்கிற ஒரு கோட்பாட்டை காட்ட முடியாதவர்கள் அடுத்து இயற்கையில் திரித்துவத்தை காண்பிக்கிறார்களாம்!!

சரி, இந்த திரித்துவர்கள் சொல்லுவதற்காக நாம் வேதத்தில் திரித்துவம் ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப்பார்ப்போம், ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது போன்ற ஒரு வசனமும் வேதத்தில் கிடையாது!! ஆனாலும் திரித்துவர்கள் தங்களுக்கு சாதகமாக தோன்றும் வசனத்தை நாமும் பார்க்கலாம்!!

முதலாவது கிங் ஜேம்ஸில் 1 யோவான் 5:7ஐ பார்ப்போம்:

    "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one."

இந்த கிங் ஜேம்ஸின் தமிழ் மொழிப்பெயர்ப்பான பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது,

1 யோவான் 5:7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

ஆனால் ஒரு நிமிஷம், அது என்ன 7ம் வசனம் முழுவதும் அடைப்புக்குறிக்குள் இருக்கிறது!! ஏதாவது புரிகிறதா!!??

இதே 1 யோவான் 5:7ஐ மற்ற மொழிப்பெயர்ப்புகளிலும் பார்ப்போம்:

    The Concordant Literal New Testament: "...seeing that three there are that are testifying, the spirit, and the water, and the blood, and the three are for the one thing."

    New World Translation of the Holy Scriptures: "For there are three witness bearers, the spirit and the water and the blood, and the three are in agreement."

    A New Translation by James Moffatt: "The witnesses are three, the Spirit and the water and the blood, and the three of them are in accord."

    The Emphatic Diaglott: "For there are three which testify; the Spirit, and the water, and the blood; and the three are of one."

அடைப்புக்குறிகளின் இரகசியம்......தொடரும்..........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 யோவான் 5:7ஐ ஏன் அடைப்புகுறிக்குள் போட்டிருக்கிறார்கள்?

ஏனென்றால் 15ம் நூற்றாண்டுக்கு முன்பு அப்படி பட்ட ஒரு வாக்கியம் வேதத்தில் கிடையாது என்கிறார்கள் அடைப்புகுறிக்குள் இந்த வார்த்தைகளை கொடுத்தவர்கள்!!

பரலோகத்தில் சாட்சி இடுகிறவர்கள் மூவர் என்கிற இந்த வார்த்தை பகுதியானது (1 யோவான் 5:7) 15ம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த எந்த ஒரு கிரேக்க கையெழுத்து பிரதியிலும் கிடையாது.. எந்த ஒரு கிரேக்க எழுத்தாலர்கள் அல்லது எந்த ஒரு லத்தீன் பாதரியார்களாலும் இதை குறித்து சொன்னதாக இல்லையாம்!!

The New Testament from 26 Translations: Footnote, page 1183:

    "The words between ‘bear record’ (verse 7) and ‘the spirit’ (verse 8) are now recognized as not adequately supported by original manuscripts."

அடுத்து,

யோவான் 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

தேவன் குழப்பத்தின் தேவன் கிடையாது என்று வேதம் சொல்லுகிறது!! இல்லாத ஒன்றை சொல்லி அவர் குழப்புவது கிடையாது!! இந்த வசனத்தை வேதத்தின்படி நியாயமாக (Logically) பார்க்கலாம்!!

ஒன்றுடன் ஒன்றை கூட்டினால் அது ஒரு போதும் ஒன்று கிடையாது (1+1+1 CAN NOT BE EQUAL TO 1 TILL IT IS LOGICAL)

அப்படியே ஒரு தேவன், இன்னோரு தேவன் பிறகு இன்னோரு தேவன் "ஒரே தேவன்" என்று அழைக்க முடியாது!!

ஒருவரிலிருந்து அல்லது ஒருவருடையது என்பது தனித்து ஒரு நபர் அல்லது ஒரு பொருள் என்று சொல்ல முடியாது!!

தந்தை என்று இருப்பவரே மகனாகவும் இருக்க முடியாது (நான் நபர்களை குறித்து சொல்லுகிறேன், அர்த்தத்தை குறித்து அல்ல, ஏனென்றால், நான் என் மனைவிக்கு கணவன், என் பிள்ளைகளுக்கு அப்பா, என் மருமகளுக்கு மாமனார், என் தகப்பனுக்கு பிள்ளை, என் மாமனுக்கு மருமகன் என்று சிலர் பிதற்றுவார்கள்!!)

இந்த உலகத்தில் அதிகமான அன்பும் உரிமையும் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் / நபரையும் "ஒன்றாக" இருக்கும்படியாக சொல்ல முடியும்!! அந்த அன்பிலும் உரிமையிலும் தான் கிறிஸ்து சொன்னது, நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று!! ஒரே கருத்துடைய இருவர் ஒன்றாக இருப்பதாக சொல்ல முடியும்!! எடுத்துக்காட்டு,

"இந்த குறிப்பிட்ட தீர்மானம் நிறைவேற்ற இந்த சபையே "ஒன்றாக" இருந்தது"!! இதை வாசித்தவுடன், ஏதோ 234 பேர் இல்லாமல் ஒரே ஒருத்தர் தான் என்று நினைப்பது எப்படி முட்டாள்த்தனமாக இருக்குமோ, அப்படியே தான் "நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" என்பதில் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று சாதிக்க நினைப்பது!!

THE TWO (FATHER AND CHRIST) ARE ONE IN AGREEMENT, ONE IN THOUGHT BUT NOT ONE IN PERSON!!

இதை வாசிப்போர் ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா, இந்த வசனம் எங்காவது, நானும் பிதாவும், நாங்கள் இருவரும் ஒரே தேவன் தான் என்று சொல்லியதாக இருக்கிறதா? இல்லை, இல்லவே இல்லை!!

ஆனால் வேதத்தில் ஒரே தேவன் என்று இருக்கிறதா?? ஆம் இருக்கிறது!!

அந்த ஒரே தேவன் யார் என்று வேதம் நமக்கு சொல்லுகிறதா?? ஆம் சொல்லுகிறது!!

அந்த ஒரே தேவனுடன் கிறிஸ்துவிற்கு என்ன சொந்தம் இருந்தது என்று வேதம் சொல்லுகிறதா?? ஆம் சொல்லுகிறது!!

இவை அனைத்தும் ஒரே வேத வசனத்தில் உண்டு!!

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

அடுத்த வசனம் சொல்லுகிறது,

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இந்த வசனத்திற்கு கண்டிப்பாக ஆமென் சொல்லியாகவேண்டும்!! உண்மையிலேயே கிறிஸ்தவ மண்டலத்தில் இந்த அறிவு "எல்லாருக்கும்" கிடையாது!!

இத்துனை சுலபமாக எளிதில் புரியும்படியான ஒரு வசனத்திற்கு இது வரை தேவனுக்கு நன்றி சொல்லாதவர்கள், அவசியம் சொல்ல வேண்டும்!! மேலே உள்ள வசனத்திற்கு விளக்கம் தேவையில்லை, ஆனாலும் அதை சொல்லுகிறேன்,

எத்துனை தேவன் உண்டு என்கிறது வசனம்? ஒரே தேவன்

இந்த ஒரே தேவன் யார் என்கிறது வசனம்? பிதா மாத்திரம்!! பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவி என்று சேர்த்து அல்ல!! வெறும், பிதா!! பிதா மாத்திரமே!! ஒரே தேவன், பிதா மாத்திரமே!!

இதை புரிந்துக்கொள்வதற்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா? வேத விற்பனர்கள் சொல்லும் 1+1+1 கோமாளித்தனத்தைவிட, மேலே சொல்லப்பட்ட தேவனின் வசனம் சுலபமாக இருக்கிறது, அல்லவா!!??

தொடரும்..................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசு கிறிஸ்து சர்வவல்லமை தேவன் இல்லை!! கிறிஸ்து கர்த்தரே!! அவர் தேவனின் குமாரன்!! கிறிஸ்து தேவனின் தற்சொரூபமானவர்!! அவர் மத்தியஸ்தர்,

1 தீமோத்தேயு 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

மூன்றாக இருக்கும் ஒருவரே இருவராக இருப்பதை திரித்துவம் போதிப்பவர்கள் எப்படி தான் புரிந்துக்கொள்கிறார்களோ!! இந்த வசனம் எந்த விதத்திலும் மூன்று, அல்லது திரித்துவம் அல்லது திரியேகத்துவத்தை விவரிப்பது கிடையாது!!

இயேசு கிறிஸ்து சொன்னார்,

யோவான் 14:28.........................ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

அதாவது கிறிஸ்துவின் பிதா (நம் பிதா) கிறிஸ்துவோடு பெரியவராக இருக்கிறார் என்று கிறிஸ்துவே சொல்லுகிறார்!! கிறிஸ்து தேவனோடு பெரியவராக இருக்கிறார் அல்லது அந்த பெரிய தேவனாக இருக்கிறார் என்று சொல்லவில்லை!! எங்கே இருக்கு இதில் திரித்துவம்! திரியேகத்துவம்!!

மேலும்,

1 கொரிந்தியர் 15:28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

சகலத்தையும் கீழ்ப்படுத்தியவருக்கு கிறிஸ்து கீழ்ப்பட்டிருப்பார் என்கிறது வசனம்!! பிதா கிறிஸ்துவிற்கு கீழ்ப்பட்டிருப்பார் என்றா வசனம் சொல்லுகிறது!! திரித்துவத்துவம் பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லையே!!

மேலும்,

1 கொரிந்தியர் 11:3. ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

கிறிஸ்து தேவனுக்கு தலையாக இருக்கிறார் என்றா இருக்கிறது!!

பிதா கிறிஸ்த்துவின் தேவனாக இருக்கிறார் என்பதற்கு மாற்று சொல்ல முடியாத ஒரு வசனம் இருக்கிறது,

எபேசியர் 1:17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

கிறிஸ்துவிர்கு தேவன் இருக்கிறார்!! பவுல் இவைகளை எழுதும் போது கிறிஸ்து உயிர்த்தெழுந்து தமக்கு உண்டான மகிமையை பெற்றுக்கொண்டவராக இருந்தார்!! கிறிஸ்துவிற்கு என்று ஒரு மகிமை இருந்தாலும் அவர் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறாவராகவே இருக்கிறார்!! தேவனுக்கு ஒரு தேவன் இருக்கிறார் என்று சொல்லி யார் தேவதூஷனம் செய்ய தையாராக இருக்கிறீர்கள்!! ஆனால் கிறிஸ்துவிற்கு தேவன் இருக்கிறார்,

எபேசியர் 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்;

கொலோசேயர் 1:5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி

1 பேதுரு 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

இந்த வசனங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்த பிறகு எழுதப்பட்டவைகல்!! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஒரு தேவன் இருக்கிறார்!! மேலும் கிறிஸ்துவின் பிதாவும் தேவனுமா இருக்கிறவருக்கு மேல் ஒரு தேவன் கிடையாது!! ஆனாலும் திரித்துவம் இருக்கிறது என்று போதிக்க வசனங்கள் அல்ல, இயற்கையை துனைக்கு கூப்பிடுகிறார்கள், திரித்துவம் பேசுவோர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"பரிசுத்த ஆவி"



மேலே சொன்ன எந்த வசனமும் "பரிசுத்த ஆவி" என்பதை குறித்து சொல்லப்படவில்லை என்பதை கவனித்தீர்களா!! பரிசுத்த ஆவி பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவ"ர்" என்று எப்படி தான் வசனம் இல்லாமல் சொல்ல முடியும்!! ஆனால் கிறிஸ்து பிதாவாகிய தேவன் இல்லாமல் தேவனின் குமாரன் என்கிறபடி பரிசுத்த ஆவி தேவனின் ஆவியே அன்றி தேவன் கிடையாது என்று சொல்லலாமே!! இதை தான் வேதமும் சொல்லி தருகிறது!! தேவனின் குமாரன் என்றும் தேவனின் ஆவி என்றும் வாசிக்கிறோம் ஆனால் கிறிஸ்துவோ ஆவியோ தேவன் கிடையாது!!

இதோ திரித்துவர்கள் திரித்துவத்தை போதிக்கும் வசனம் என்கிற வசனத்தை பார்ப்போம்:

மாத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இந்த வசனங்கள்  திரித்துவத்தையோ திரியேகத்துவத்தை எப்படி போதிக்கிறது?? தெரியவில்லை!! இந்த வசனம் மூவரும் ஒன்று அல்லது ஒருவரே முன்றானவர் என்று நிச்சயமாக சொல்லுவதில்லை!! அல்லது மூவரும் சமமானவர்கள் என்று சொல்லுவதில்லை!! பிதா குமாரன் ஆவி என்று மூன்றையும் ஒரே வசனத்தில் பார்க்கிறோம், அவ்வளவே!!

பரிசுத்த ஆவி என்று சொல்லப்பட்டதினால் தேவன் மூவராக இருக்கிறார் என்று கிடையாது!! யோவான் 15:26ல் "துனையாளர்" என்று இருக்கிறது, அப்படி என்றால் இது தேவத்துவத்தில் நாளாவது நபரா?, மேலும் சத்தியத்தின் ஆவி, இது ஐந்தாம் நபரா? இது மட்டும் இல்லை, பரிசுத்த ஆவிக்கென்று உபயோகப்படுத்தப்பட்ட வேறு "நபர்களையும்" பார்ப்போம், அதன் பின் திரித்துவர்கள் சொல்லும் தேவன் திரியேகமாக இருக்கிறார் என்று அல்ல, மாறாக தேவன் பல தேவன்களாக இருக்கிறார் என்று சொல்லுவார்கள் இந்த திரித்துவர்கள்!!

பார்ப்போமா,

1. தேவன்
2. பிதா
3. உன்னதமானவர்
4. பரிசுத்த ஆவியானவர்
5. பரிசுத்த ஆவி
6. தேவனின் ஆவி
7. கிறிஸ்துவி ஆவி
8. இயேசு கிறிஸ்து
9. தேவ குமாரன்
10. மத்தியஸ்தர்
11. தேவனின் சிந்தை
12. சத்தியத்தின் ஆவி
13. தேவனின் வார்த்தை

இதோடு "தேவனின் ஏழு ஆவிகள்" (வெளி 4:5)........

இந்த திரித்துவ தேவன் என்று சொல்லப்படுபவருடன் 20 தலைகள் இன்னும் கூடினால் அதை என்னவென்று சொல்லுவது!! தேவன் திரித்துவமோ அல்லது திரித்துவமான தேவர்களின் கூட்டனி கிடையாது!!

எத்துனை விதமான ஆவிகளாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம், எல்லா ஆவிகளும் தேவனுடையதே தவிர அதில் ஒன்றும் தேவனோ தேவத்துவத்திற்கு சமமானதோ கிடையாது!! இதோ,

எபிரேயர் 12:9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

காதுள்ளவன் கேட்க்கக்கடவன்!!

எத்துனை "நபர்களை" காட்டினாலும் தேவன் ஒருவரே, முழுமையான ஒருவர்!! பத்தும் கிடையாது, ஐந்தும் கிடையாது, மூன்றோ, இரண்டோ கிடையாது!!

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,

இந்த வசனம் உண்மையா இல்லையா என்பதை மாத்திரம் யோசித்து பாருங்கள்!! ஏனென்றால் இந்த வசனம் உண்மை என்றால் வேதத்தில் இல்லாத "திரித்துவம்" நிச்சயமாகவே வடித்துக்கட்டின பொய்யாக தான் இருக்க முடியும்!! ஏனென்றால் திரித்துவம் என்பதும் பிதாவாகிய ஒரே தேவன் என்பதும் தலைகீழான வேற்றுமையை கொண்டிருக்கிறது!!

மீண்டும் திரித்துவர்களுக்கு ஆதரவாக தோன்றும் வசனத்தை பார்ப்போம்,

மாத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

தொடரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

பரிசுத்த ஆவி என்பதை தேவனின் பரிசுத்த ஆவி என்று சொல்ல ஏதாவது தடை உண்டா? இல்லையே!! பிதாவாகிய தேவன் "பரிசுத்தர்" (யோவான் 17:11), பிதாவாகிய தேவன் "ஆவியாக" இருக்கிறார் (யோவான் 4:24).

தேவன் பரிசுத்தராக இருக்கிறார், அவரின் ஆவி (கிரேக்க நியுமா: பலத்த காற்று, ஆவி) பரிசுத்த ஆவி எனப்படுகிறது!! ஒன்றாக எழுதுவதால் மாத்திரம் வெவ்வேறான வார்த்தைகள் ஒன்றானதாக மாறிவிடாது!!

கத்தோலிக்க தாய் திருச்சபையை பற்றி அனைவரும் அறிவோம், திரித்துவத்தை உருவாக்கியவர்கள்!! அவர்களின் தலைமை ஏதாகிலும் ஒரு சபைக்கு கடிதம் அனுப்பும் போது, அதை இப்படியாக எழுதுவார்கள்:

"போப்பாண்டவர், கர்தினால் மற்றும் பரிசுத்தவான்களின் நாமத்தில் உங்களின் இருதயங்கள் சமாதானமாக இருக்கட்டும்"

இந்த வாக்கியத்தை புரிந்துக்கொள்ள ஏதாகிலும் கஷ்டமா? இதை வாசிக்கிறவர்கள் போப், கர்தினால் மற்றும் பரிசுத்தவான்கள் ஒருவரே என்று சொல்லுவார்களா!!?? அல்லது சமமானவர்கள் என்று தான் சொல்லுவார்களா!!?? இவர்கள் திரித்துவம் என்று யாராகிலும் சொல்ல முடியுமா?? அப்படி இருக்க பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று இருக்கிற மாத்திரத்திலே இது தான் திரித்துவம் என்று சொல்லுவதில் ஏதாகிலும் அர்த்தம் இருக்கிறதா!!?? எந்த ஒரு நியாயமான வாதமும் இதை நிரூபிக்க முடியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவம் என்கிற மனித தியரி தீவிரமாகவும் வெறித்தனமாகவும் வேதத்தின் ஒரு மிக பெரிய உண்மையை எதிர்க்கிறது.....தேவனுக்கு ஒரு பெரிய வீடு இருக்கிறது என்பதை எதிர்க்கிறது "திரித்துவம்" என்கிற மனித தியரி....

எபேசியர் 2:19. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

திரித்துவம் என்பது அடைப்பாட்டிருக்கும் ஒரு முக்கோனம் போன்றது, அதில் வேறு யாரும் நுழைய முடியாது!! இதை தான் சாத்தான் கொண்டு வருகிறான்!! தேவன் ஒரு பெரிய குடும்பத்தை (வீட்டாரை) நியமித்திருக்கிறார், அதில் நீங்களும் நானும் இருக்கிறோம்!! இவை எல்லாம் VBS, Cathechism School போன்றவற்றில் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்!! இறுதியில், முடிவில், முழு பிரபஞ்சமும் ஒன்றாக, பரிசுத்தமாக, ஒற்றுமையாக, சந்தோஷமாக, மகிமையாக, விஸ்தாரமான தேவனின் வீட்டாராக இருக்க தான் போகிறார்கள், அதில் தேவனே அனைத்திலும் அனைத்துமாக இருக்க போகிறார்!!

1 கொரிந்தியர் 15:28...............தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு,................

ஒரு முழு கிறிஸ்தவ மண்டலமே கோடிக்கணக்கான பணம் செலவு செய்துக்கொண்டு, தாங்கள் பரலோகத்திற்கு போய் சந்தோஷமாகவும், நம்மை போல் இல்லாத அனைவரும், நம் நண்பர்கள், பக்கத்து விட்டுக்காரர், சொந்தக்காரர், மற்ற அனைவருமே "நரகத்தில்" என்றென்றைக்கும் வாதிக்கப்படயிருக்கிறார்கள் என்பதே!! இதை தான் இந்த கிறிஸ்தவ மண்டலம் "நற்செய்தி" என்கிறது...சாத்தானுக்கு தான் கொண்டாட்டம்!!

சரி, இந்த கிறிஸ்தவ மண்டலத்தை விட்டு விட்டு நாம் வேதம் சொல்லி தருவதை நாம் பார்ப்போம்!! தேவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, தேவனின் வீட்டார்!! இந்த வீட்டாரின் பிதா தான் பிதாவாகிய தேவன்!! இயேசு கிறிஸ்து தேவனின் இந்த குடும்பத்தாரின் (வீட்டாரின்) முதற்பேறானவர்!!

கொலோசெயர் 1:13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். 14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

நாம் தான் அந்த சிருஷ்டிகள், நீங்களும் நானுமே அந்த சிருஷ்டிகள்!! இந்த வசனம் நம்மை குறித்து தான்!!

ஆவியின் பிரகாரமாக நாம் ஏற்கனவே தேவனின் வீட்டாராக இருக்கிறோம்!!

ரோமர் 8:14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். 15. அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

ஆம், தேவன் நம்மை பிள்ளைகளாக இருக்க நியமித்திருக்கிறார்!!

எபேசியர் 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

திரித்துவம் என்பது ஒரு மூடிய முக்கோனமாக (வேதவிற்பனர்கள் சொல்லுவது போல்) இருந்திருந்தால், அங்கே தேவனின் பிள்ளைகள் என்பதற்கு இடமே இல்லை, எல்லாவற்றுக்கும் மேல், தேவனே எல்லாவற்றிலும் எல்லாம் என்பதும் இல்லாமல் போய் விடுமே.....

கிறிஸ்துவிற்கு தேவன் எதை எல்லாம் கொடுத்தாரோ, புத்திரசுவிகாரத்தை பெற்ற நமக்கும் அவரின் பிள்ளைகளாக இருப்பதினால் பெற்றுக்கொள்வோம்!!

கலாத்தியர் 4:6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். 7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

சர்வவல்லமையுள்ள தேவன், கிறிஸ்து இயேசுவிற்கு அப்பா பிதாவாக இருந்தது போலவே நமக்கும் அப்பா பிதாவாகவே இருக்கிறார்!! தேவன் தம்முடைய குமாரனின் ஆவியை இருதயங்களில் அனுப்பினாராம், திருத்துவத்தின் மூன்றாம் நபரான "பரிசுத்த ஆவியானவரை" அல்ல!! தேவனின் ஆவி, அல்லது கிறிஸ்துவின் ஆவி என்பது ஒரே ஆவி தான், திரித்துவத்தின் மூன்றாம் தேவன் கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆக, தேவன் கிறிஸ்து இயேசுவின் பிதா!! அப்படி என்றால் "பரிசுத்த ஆவியானவர்" என்பது என்ன அல்லது யார்? பிதாவுடன் கிறிஸ்துவின் உறவுமுறையை வேதம் நமக்கு சொல்லி தருகிறது!! ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உறவு முறை என்பதை குறித்து வேதம் ஒன்றும் சொல்லுவதில்லை!! ஆனால் கிறிஸ்து இயேசு கறுவுற்றது பரிசுத்த ஆவியினால் என்கிறது வேதம்!!

மத்தேயு 1:20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

இந்த வசனத்தை புரிந்துக்கொள்ளுதல் உள்ள சின்ன குழந்தைக்கூட புரிந்துக்கொள்ளும்!! இதை புரிந்துக்கொண்டால் திரித்துவ தியரிக்கு சமாதி கட்ட முடியும்!! தேவன், கிறிஸ்துவிற்கு பிதாவாகவும் தேவனாகவும் இருக்கிறார் என்கிறது வேதம்!!

எபேசியர் 1:17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

சரி, இதை வாசிப்போம்: திரித்துவர்கள் சொல்லுவது போல் பரிசுத்த ஆவியானவர் மூன்றாம் தேவன் என்று சொல்லுகிறபடி எடுத்துக்கொண்டால், இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் "உற்பவித்தார்" என்று வசனம் இருக்கிறது!! அதாவது கிறிஸ்து இயேசு பரிசுத்த ஆவியின் குமாரன் என்று இருந்திருக்குமே தவிர பிதாவாகிய தேவனின் குமாரன் என்று சொல்ல முடியாது!!

ஒருவர் மூலமாக உற்பவித்தவருக்கு இன்னோருவர் எப்படி தந்தையாக இருக்க முடியும்!! இது உலகத்திற்கே பொருந்துகிறது, அப்படி என்றால், பரிசுத்த ஆவியினால் உற்பவித்த கிறிஸ்து இயேசுவிற்கு பரிசுத்த ஆவியானவர் தானே தந்தையாக இருக்க முடியும்!! இதுவே திரித்துவர்கள் மரண அடி வாங்கும் இடம்!!

மற்றுமோர் வசனத்தை பார்ப்போம்,

லூக்கா 1:35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

பரிசுத்த ஆவியின் குமாரன் அல்ல, மாறாக உன்னதமான தேவனின் குமாரன் எனப்படுவார்!!

சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமையால் (ஆவியினால்) மரியாள் கருவுற்றாள்!! ஏனென்றால் இந்த ஆவி என்பது பரிசுத்தம் உள்ள தேவனின் வல்லமை என்பதால் தான் கிறிஸ்து இயேசுவின் தந்தை அந்த உன்னதமான தேவனாக இருக்கிறாரே அன்றி பரிசுத்த ஆவியானவர் கிடையாது!!

லூக்கா 1:30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். 31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

மரியாள், திரித்துவ தியரியின் மூன்றாம் தேவனான பரிசுத்த ஆவியானவரிடத்தில் கிருபைபெறவில்லை, தேவனிடத்தில் தான் கிருபை பெற்றாள்!! அந்த கிறிஸ்து உன்னதமான தேவனின் குமாரன் (திரித்துவ தியரியின் மூன்றாம் தேவனான பரிசுத்த ஆவியின் குமாரன் கிடையாது); அந்த தேவன் தான் தாவீதின் சிங்காசனத்தை கிறிஸ்துவிற்கு கொடுப்பார், திரித்துவ தியரியின் மூன்றாம் தேவனான பரிசுத்த ஆவியானவர் கிடையாது!!

திரித்துவ தியரின் எதிரிடையாக தான் வேதம் சொல்லுகிறது!! அதாவது பரிசுத்த ஆவிக்கும் கிறிஸ்துவிற்கும் எந்த ஒரு உறவுமுறையை வேதம் சொல்லுவது கிடையாது!! ஆனால் திரித்துவர்களின் தியரியின்படி பார்த்தோமென்றால் பரிசுத்த ஆவி தான் கிறிஸ்துவின் தந்தையாக இருக்க முடியும்!!

மத்தேயு 12:28. நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

தேவனுடைய ஆவியினால் தான் பிசாசுகளை துரத்தினார்!! திரித்துவ தியரின் மூன்றாம் தேவனான பரிசுத்த ஆவியானவரை கொண்டு துரத்தவில்லை!! மேலும் ஒருவருடைய ஆவி (தேவனுடைய ஆவி) தனியாக ஒரு நபராக இருக்கவே முடியாது!! இதுவே பரிசுத்த ஆவி என்று எழுதப்பட்டிருப்பதும், தேவனுடைய ஆவி எனப்படுவதும் ஒன்றே என்று நிரூபிக்கிறது!!

பரிசுத்த ஆவி என்பது தேவனிடத்தில் இருப்பது, அது தனித்து, திரித்துவ தியரி சொல்லுவது போல் ஒரு தனி நபர் அல்ல!! தேவனுடைய ஆவியே தேவ ஆவி!! தேவன் தன்னிடம் கேட்டு கொள்வோருக்கு அதை பரிசாக தருகிறாராம்,

லூக்கா 11:13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

இங்கே பரிசுத்த ஆவி என்பது தேவனிடத்தில் இருப்பதே தவிர திரித்துவர்களின் கூற்றுப்படி அது ஏதோ ஒரு தனி நபர் கிடையாது!!

பரித்த ஆவி அல்லது பரிசுத்த ஆவியானவர் என்று இஷ்டத்திற்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க வார்த்தை நியுமா (Pneuma)!! ஒரே வார்த்தையை தன் இஷ்டத்திற்கு திரித்துவ தியரியை வைத்துக்கொண்டு மொழிப்பெயர்த்து கோடா கோடி ஜனங்களை வஞ்சித்திருக்கிறார்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் எழுதிய சுவிசேஷத்தில் கடைசி பகுதிகளில் நாம் வாசிக்கும் போது கிறிஸ்துவிற்கும் தேவனுக்கும் உண்டான நெருக்கத்தை உணர்ந்துக்கொள்ள முடிகிறது. இந்த நெருக்கமான உறவுமுறை வேதத்தில் இன்னும் பல வசனங்களில் இருக்கிறது!! ஆனால், பிதாவுடனோ, இயேசு கிறிஸ்துவுடனோ இது போன்ற ஒரு நெருக்கமான உறவுமுறை பரிசுத்த ஆவி"யானவருக்கு" இருப்பதாக வசனங்கள் இல்லை!! ஏனென்றால், பரிசுத்த ஆவி"யானவர்" தெய்வத்துவத்தின் மூன்றாம் நபர் கிடையாது, பிதாவுடனோ, கிறிஸ்துவுடனோ நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள பரிசுத்த ஆவி என்பது நபர் கிடையாது, மாறாக அவர்களின் ஆவி (சிந்தை, வல்லமை)!! பிதாவும், கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியை கொண்டவர்களாகவும், அதை நமக்கு தருபவர்களாகவும் வேதம் சொல்லுகிறது!! ஆகவே தான் இருவரும் (இருவரின் ஆவி தான்) நம்மிடத்தில் வாசமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது (யோவான் 14:23)

பரிசுத்த ஆவி கிறிஸ்து இயேசுவிற்கு தங்கையோ, தம்பியோ, தாயோ அல்லது தந்தையோ கிடையாது!! பிதாவாகிய தேவன், இயேசு கிறிஸ்து போன்றே ஒரு தனி நபராக பரிசுத்த ஆவி"யானவரை" சித்தரிப்பது ஒரு அபத்தமும், வீணான, அற்பமான முயற்சியாகும். நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று தான் கிறிஸ்து இயேசு சொல்லுகிறாரே தவிர நானும் பிதாவும் பரிசுத்த ஆவி"உஆனவர்" நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லவில்லை!! ஒரே சிந்தையினால் (ஆவி) தான் கிறிஸ்து பிதாவோடும், பிதா கிறிஸ்துவோடும், நாம் (சபை) கிறிஸ்துவோடும், பிதா நம்மோடும் இருக்க முடியும்!!

அடுத்து, தேற்றரவாளன் என்று யாரை அல்லது எதை தான் யோவான் சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை பார்கலாம்!!

யோவான் 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

நானே சத்தியம் என்கிறார் கிறிஸ்து இயேசு. அப்படி என்றால் இந்த சத்தியத்தின் ஆவி பிதாவிடத்திலிருந்து வருவதாக வசனம் சொல்லுகிறது? எப்படி? சத்தியத்தின் ஆவி, பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவீயானவர், தேற்றரவாளன் போன்ற வார்த்தைகளை புரிந்துக்கொண்டோம் என்றால் நமக்கு தெளிவு உண்டாகும்!!

பல மொழிபெயர்ப்புகளை பார்த்தாலும், ஏன் மொழிப்பெயர்ப்பாளர்கள் இந்த வார்த்தையை "தேற்றரவாளன்" என்று மொழிப்பெயர்த்தார்கள் என்பது தெளிவாக இல்லை!! கிரேக்க மொழியில் இந்த வார்த்தை: [parakletos BESIDE-CALLER]

மன்றாடுகிறவர் என்றும் தேற்றுகிறவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மொஃபட் மொழிபெயர்ப்பில்.......இன்னோரு உதவியாளன்.........என்று இருக்கிறது

புதிய ஏற்பாடு என்கிற மொழிபெயர்ப்பில், ....இன்னோரு பரிந்துறையாளன்.... என்று இருக்கிறது.

ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் வெர்ஷனில்.......அறிவுரை கூறுபவர்"...என்று இருக்கிறது

மான்சிக்னார் நாக்ஸ் வெர்ஷனில்......இன்னோரு நண்பன்......என்று இருக்கிறது

ஃபிலிப் மொழிப்பெயர்ப்பில்......உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவர்" என்று இருக்கிறது

ஆம்ப்ளிஃபைட் புதிய ஏற்பாட்டில்...... another Comforter (Counselor, Helper, Intercessor, Advocate, Strengthener and Standby)...  என்று இருக்கிறது!!


தொடரும்...........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழில் அநேக மொழிப்பெயர்ப்புகள் இல்லாததினால் நமக்கு வித்தியாசம் தெரியவில்லை, ஆனால் ஆங்கிள மொழிப்பெயர்ப்புகளில் அநேக கிரேக்க மொழிப்பெயர்ப்பாளர்கள் "பாராக்லிடோஸ்" (Gr. parakletos) என்கிற கிரேக்க வார்த்தையை "அவர்" (He) என்று எழுதாமால் "அது" (it) என்று எழுதுகிறார்கள்!! எடுத்துக்காட்டாக‌,

From The Concordant Literal New Testament:

    John 14:16-18, "And I shall be asking the Father, and He will be giving you another consoler, that it, indeed, may be with you for the eon--the spirit of truth, which the world can not get, for it is not beholding it, neither is knowing it. Yet you know it, for it is remaining with you and will be in you. I will not leave you bereaved; I am COMING TO YOU."

அநேகமா இதை கேட்டுக்கொண்டிருந்த அப்போஸ்தலர்களுக்கு உண்மையிலே கிறிஸ்துவின் இந்த வரிகளில் குழம்பியிருப்பார்கள்!! நான் வேறு ஒருவரை (ஒன்றை) அனுப்புகிறேன் என்கிறார், நானே வருகிறேன் என்கிறார்!!

இயேசு கிறிஸ்து இங்கே சத்தியத்தின் ஆவியின் வருகையை குறித்து சொல்லுகிறார்!! மாம்சத்தில் இருக்கும் மட்டும் கிறிஸ்துவே அவர்களுக்கு சத்தியத்தை போதிப்பவராக இருந்தார், ஆனால் அவர் பிதாவிடத்திற்கு போன பிறகு, அவர் இந்த பூமிக்கு மீண்டும் நியமித்த நேரத்தில் தான் திரும்புவார் என்பது அவருக்கு தெரியும் (இன்று பெரும்பாலுமான "ஊழியர்கள்", கிறிஸ்து எங்களை அடிக்கடி வந்து சந்தித்துவிட்டு போகிறார் என்கிறார்கள்)!! ஆகவே அவரின் அந்த சிந்தை, தேவனின் சிந்தை அவர்களுடன் இருக்கும்படியாக செய்கிறார், இதுவே சத்தியத்தின் ஆவியான தேவனின் ஆவி!!

யோவான் 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

அவரே மேலும் சொல்லுகிறார், 23ம் வசனத்தில்,

23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

கிறிஸ்துவும் தேவனும் நேரடியாக ஒருவரின் வந்து வாசம் இருப்பதில்லை, அது தான் தேவனின் ஆவி எனும் சத்தியத்தின் ஆவி, கிறிஸ்து இல்லாமல் இருக்கும் அப்போஸ்தலர்களுக்கு ஆறுதலாக இருக்கும் தேவனின் ஆவி!! தேவன் இதே ஆவியை தன் குமாரனுக்கு அளவில்லாமல் தந்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது, அதே ஆவியை கிறிஸ்து கேட்டுக்கொள்ளுவதின் பெயரில் பிதா நமக்கு தருகிறார்,

யோவான் 16:15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

வேதத்தில் சொல்லப்படும் "பரிசுத்த ஆவியானவரும்", தேவனின் ஆவி ஒன்றே தான். இந்த இரண்டு வசனங்களை பார்த்தால் இந்த ஒற்றுமை புரியும்!!

லூக்கா 12:11. அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள். 12. நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

மத்தேயு 10:19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

பிதாவின் ஆவியே என்பது தான் "பிதாவின் ஆவியானவர்" என்று நம் மொழிப்பெயர்ப்பார்கள் எழுதுகிறார்கள்!!

ஆக பரிசுத்த ஆவி என்பதும் பிதாவின் ஆவி என்பதும் ஒன்றே தான் தவிர பரிசுத்த ஆவியானவர் என்பது ஒரு தனி நபர் கிடையாது!! மேலும் வேதம் ஒரு இடத்திலும் பரிசுத்த ஆவியை தேவன் என்று சொல்லுவதில்லை!! தேவன் ஆவியாக இருக்கிறார்!! ஆவி தேவனாக இருக்கிறது என்பதற்கு வசனமே இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard