நம் இந்து சகோதர சகோதரிகள் மிருகங்களையும் தெய்வமாக வணங்குபவர்கள்தான். பசு - மாட்டுப் பொங்கலின் போது அது தான் தெய்வம். தெருவில் யானை போனால் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த யானையும் எவ்வளவு சின்சியரா தும்பிக்கையை தலையில் வைக்குதுன்னு பாருங்க!. கடவுளின் வாகனமான மயில் கண்டிப்பா தெய்வம் தான். பாம்பும் தெய்வம் தான். பால், பழம் எல்லாம் கொடுத்து வழிபடுகிறார்கள். எத்தனை படத்தில் வந்து ஹீரோயினைக் காப்பாத்துது!
மயில் என்னும் மிருகத்தை வாகனமாய் கொண்டுள்ள பெருமான் தான் மிருகப் பெருமான்!எனவே அப்பெயரை அவர்கள் புகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது!
விஜய் டிவியில் நேற்று (1.6.11) இரவு 10 மணிக்கு கைலாச மானசரோவர் யாத்திரை - ஜக்கி வாசு தேவ் கூட்டிச் செல்வது பற்றி, ”நடந்தது என்ன” நிகழ்ச்சியில் காட்டினார்கள்.
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைய விரும்புபவர்கள், சிவனை நோக்கி பார்ப்பார்களாம். சிவன் இருக்கும் இடம் தான் கைலாய மலையாம்.
போன கூட்டத்தில் இருந்தது கிறிஸ்தவர் என்று சொல்லப்படும் நடிகர் விஜயின் அப்பாவும், அம்மாவும்.
சென்னையில் இருந்து முதலில் நேபாளம் செல்கிறார்கள். அங்கு உடலையும், மனதையும் திடப்படுத்த , ஜக்கி வாசு தேவ் வந்திருப்பவர்களுக்கு தியான வகுப்பு எடுக்கிறார். அபிஷேகம் பெற்றதுபோல், ஒரு சிலர் reaction காட்டுகிறார்கள்! பின் பாதுகாப்பிற்காக மந்திரித்த கயிறு அனைவருக்கும் கட்டப் படுகிறது.
பின் திபெத்து அங்கிருந்து செல்கிறார்கள். திபெத்தில் ஒவ்வோரு குடும்பத்திலும் மூத்த பிள்ளையை மடாலயத்திற்கு ஒப்புக் கொடுத்து விடுவார்களளாம். ஆன்மீக பலம் மிக்க பூமியாம் அது.
அப்புறம் மானசரோவர் ஏரிக்குப் போகிறார்கள்.
கைலாச மலை தரிசனம், தேவர்கள் இறங்கி வந்த காட்சியெல்லாம் இன்று (2.6.11 10 pm) காட்டப்படுமாம். முடிந்தவர்கள் தவறாமல் பாருங்கள்.ஜக்கி வாசு தேவ் தமிழில் பேசுகிறார்.