கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்?? [ஏற்கனவே 250 கோடி திடவிசுவாசிகள்.......இன்னும் கூடிக்கொண்டிருக்கிறது கூட்டம்]
இன்று உலகில் சுமார் 250 கோடிக்கு மேலான கிறிஸ்தவ ஜனத்தொகை இருக்கிறது, ஆனால் இவர்கள் அனைவரும் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்களா?? வேத வசனங்கள் பொய்யாகிவிட்டதோ!!?? தீர்க்கதரிசனங்கள் தப்பாகி விட்டதோ!!?? இந்த பொல்லாத பிரபஞ்சத்தில், கிறிஸ்துவின் சுவிசேஷம் அவர் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான பலனை தந்திருக்கிறதோ!!?? அவரின் இரண்டாம் வருகையின் போது உள்ள விசுவாசிகளின் எண்ணிக்கையை குறித்து கிறிஸ்து தப்பான கணக்கு போட்டு விட்டாரோ!!?? இந்த சுமார் 250 கோடி கிறிஸ்தவ கூட்டம் கிறிஸ்துவை ஒரு கள்ள தீர்க்கதரிசியாக்கி விட்டதோ!!?? இதோ கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம்:
"......பூமியில் அவர் விசுவாசத்தை காண்பாரோ?"
பிதாவின் ராஜ்யத்தை இந்த பூமியில் ஸ்தாபிக்க வரும் கிறிஸ்து எத்துனை விசுவாசிகளை இந்த பூமியில் எதிர்ப்பார்க்கிறார் என்பதற்கான ஒரு தீர்க்கதரிசனம், அவரே சொன்னது:
லூக்கா 18:7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
பதில்: விசுவாசத்தை காண்பாரோ?? மிகவும் அழுத்தமாக "விசுவாசத்தை காண்பாரோ"
அவரது வருகையின் போது பூமியில் விசுவாசமே இருக்காதாம்!! ஏனென்றால், "அநேகர் அழைக்கப்பட்டிருந்தும், சிலரே தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள்"!! அந்த "அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்" (வெளி. 17:14)
சுமார் 250 கோடி கிறிஸ்தவர்களின் இந்த கூட்டம் மிகவும் ஆத்தும பாரத்துடன் நடத்தப்பட்ட "பெருவிழாக்கள், கூட்டங்கள், விடுதலை முகாம்கள்" மூலமாக வந்தவர்கள்!! தங்களின் பாவங்களை அறிக்கை செய்து "இரட்சிக்க" பட்டோம் என்கிறது இந்த கூட்டம்!!
கிறிஸ்துவிற்காக நீங்கள் ஆத்தும "ஆதாயம்" செய்ய முடியுமா?
கிறிஸ்தவத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் "கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்" என்பதை கேட்டு வளர்ந்திருக்கிறேன்!! கிறிஸ்தவ மண்டலத்தின் பிரதான போதனை இதுவே!! கிறிஸ்தவர்களுக்கு சொல்லி தரும் இரு காரியங்கள், முதலில் தாங்கள் "கிறிஸ்துவிற்கு சாட்சியாக இருக்க வேண்டும்", அப்படி இருந்துக்கொண்டு கிறிஸ்துவிற்காக ஆத்தும "ஆதாயம்" செய்ய வேண்டும்!! அநேக கிறிஸ்தவர்கள் எப்படியாவது அவர்கள் மரிக்கும் முன் ஜனங்களை சந்தித்து இதை செய்து ஆக வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள்!! கிறிஸ்தவ போதனை என்னவென்றால், ஒருவனுக்கு சுவிசேஷம் செல்லாமல், அவன் கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போனால், அவன் உடனடியாக "அக்கினி எரிகிற நரகத்தில்" நித்திய வாதைக்கு சென்று விடுவானாம்!!
இது அதிர்ச்சியாக தான் இருக்கும், ஆனால் வேதம் எங்கேயும் 'கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்" செய்யும் பணியை சொல்லுவது கிடையாது. இது முற்றிலும் மாம்ச சிந்தையில் உருவான ஒரு மனித கோட்பாடே!!
அதாவது, வேதத்தில் எங்குமே "ஆத்தும ஆதாயத்தை" குறித்து இல்லையா? இல்லையே!!
முழு வேதத்தையும் தேடி பார்த்தால், ஒரே ஒரு இடத்தில் தான் "ஆத்தும ஆதாயத்தை" குறித்து ஒரு வசனம் இருக்கிறது:
நீதிமொழிகள் 11:30 நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
ஆனால் இந்த வசனம், எந்த விதத்திலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் "ஆத்தும ஆதாயம்" கிடையாது!! "ஆதாயம்" (WIN) என்று மொழிப்பெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையான "law-kakh'" சுமார் 100 தடவைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் ஒரே ஒரு முறை தான் "ஆதாயம்" (WIN) என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்கிறது ஸ்ட்ராங்க்ஸ் கன்கார்டன்ஸ்!!
தொடரும்................
பி.கு. இந்த கட்டுரையானது பிரபல வேத ஆராய்ச்சியாளர் எல். ரே ஸ்மித் என்பவர் எழுதிய ஆங்கில "WINNING SOULS FOR JESUS" என்பதின் தமிழ் முயற்சி!!
-- Edited by soulsolution on Tuesday 6th of September 2011 10:53:33 PM
இரட்சிப்பு யாருக்கு, எப்பொழுது என்பதை தேவனே தீர்மானிக்கிறார்
ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
யார் தீர்மானித்து அழைக்கிறார்? மனிதர்களா? நம் சொந்த கிரியைகளா? அல்லது மனிதர்களின் பிரயாசங்களா? இல்லை!! தேவனே தீர்மானிக்கார், அவரே முன்னறிகிறார், அவரே முன் குறிக்கிறார், அவரே அழைக்கிறார், அவரே நீதிமானாக்குகிறார்!!
எல்லாமே தேவனால் தான்!! தேவன் நமக்கு தந்திருக்கும் அவரின் ஞானத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் தவறில்லை!! ஆனால் "நான் இரட்சிக்காவிட்டால்!!??" என்கிற கவலையோ கடமையோ நம் மேல் இருக்கிறது என்பது கிடையாது!! தேவனே அதை தீர்மானித்து செய்கிறார்!!
தேவனே அழைக்கிறார்:
1 கொரிந்தியர் 1:26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
யார் அழைக்கிறார்?? ஊழியரா?? பிரசங்கியா?? போதகரா?? இல்லை, தேவனே அழைக்கிறார்!!
தேவனே இழுக்கிறாராம்:
யோவான் 6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
யோவான் 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
இறுதியாக முழு மனிதகுலமும் இதில் அடங்கும்!!
யோவான் 12:32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
அதன் பின் தேவனின் நியாயத்தீர்ப்பிலும், சிட்சையினாலும்,
பிலிப்பியர் 2:10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் பிரபலமாக போதிக்கும் உபதேசம் என்னவென்றால், "இப்பொழுதே நீ உன் முழங்கால் முடங்காவிட்டால், தேவன் அந்த முழங்கால்களை உடைத்துவிடுவார்"!! மனித ஞானத்தில் உருவான மாம்ச போதனைகள், வேதத்தில் இல்லாத போதனைகள்!! இப்பொழுது இரட்சிப்பு இல்லை என்றால் ஒருபோதும் கிடையாது என்பது தேவனற்றவர்கள் சொல்லும் வாக்கியம்!!
-- Edited by soulsolution on Wednesday 7th of September 2011 10:07:36 AM