//ஒவ்வொரு மனிதனுக்கும் எது சரி எது தவறு என்பதை பற்றிய உணர்த்துதல் உள்ளே ஆண்டவர் வைத்திருக்கிறார், அவரவர் தாங்கள் அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தேவன் அவர்கள் உள்ளத்தில் வைத்துள்ள அந்த உணர்த்துதலாலேயே நிறுக்கப்படும். அந்த உணர்த்துதலை கூட மந்தமாக்கிவிட்டு பாவத்தில் உழன்றததால் தான் தேவன் நினிவே மேல் கோபம் கொண்டு தன் தீர்க்கனை அனுப்பி எச்சரிக்கை செய்தார், அந்த உணர்த்துதலை குறித்து அவர்கள் தட்டியெழுப்பப்பட்டதால் தான் அவர்கள் அழிவில் இருந்து தப்பித்தார்கள். இயேசு என்ற ஒருவர் வந்து மனித சரித்திரத்தை பிளந்த பிறகு அவரை பற்றி அறிந்தவர்கள் அதைப்பற்றி போக்குச்சொல்ல இடமில்லை கிருபையினால் மீட்பு என்பது செயல்பாடுகளினால் உள்ள மீட்பை விட மேலானதால் தான் இயேசுவை அறிவிக்க ஆதங்கப்படுகிறோம். ரோமர் 2:14,15,16 ஐ வாசிக்கவும்.//
ஏன் புதிய ஏற்பாட்டில் இந்த உணர்த்துதலை மனிதனிடமிருந்து எடுத்துவிட்டாரா? அப்படி எல்லாரையுமே உணர்த்துதலினால் நியாயம் தீர்க்கலாமே எதற்கு இயேசு...? பலி?
//அதான் புடிச்சீங்கல்ல பாயிண்டை, இதுக்கு ஏதாவது மூல பாஷை விவகாரம் இருக்கும். இந்த ஆத்துமாக்கள் மட்டும் அல்ல, மறுரூப மலையில் இயேசுவோடு தோன்றின அந்த ரெண்டு பேர் யார் என்பதை வேதம் சொல்லியிருக்கிறது, செத்தா அவ்வளவு தான் End of the game என சொல்லும் இவர்களின் வாதம் எந்தளவுக்கு குறைபாடு உள்ளது பார்த்தீர்களா?//
அப்10: 10. அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
11. வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
எனவே பரலோகத்தில் "பூமியிலுள்ள" எல்லா பிராணிகளூம் இருக்குமோ?
//செத்தா எல்லாம் முடிந்தது என்று சொல்றீங்களே, இந்த ஆசாமிகள் செத்து பரலோகம் போய் கேள்வி கேட்டுக் கொண்டல்லவா இருக்கிறார்கள்?//
வெளிப்படுத்தலில் உள்ள அத்தனையுமே ஒரு காட்சி, அதை அப்படியே நேரடி எடுக்கும்பட்சம் விபரீதமாகிவிடும். ஒரு ஸ்த்ரீ சூரியனை அணிந்திருந்தாள்... நட்சத்திரங்கள் விழுந்தது... மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என்ற தேவன் சொன்ன விஷயத்தை ஏற்க மனம் மறுக்கிறது அந்த அளவு நீங்கள் சாகவே சாவதில்லை என்ற உங்கள் தேவன் சொன்னதில் உள்ள விசுவாசம். அதனால்தான் வேத வசனத்தை //வாழ்ந்து கெட்ட ஞானி சாலமோன், சூரியனுக்கு கீழே உலகத்தில் நடக்கும் காரியங்களை ஆராய்ச்சி செய்து எழுதியதுதான் பிரசங்கி புத்தகம். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் ஆராய்ச்சி செய்து எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்.// என்று துணிகரமாக எழுத முடிகிறது. அதைக் கண்டிக்க வக்கில்லை ஒருத்தனுக்கும், இப்ப மட்டும் புடிச்சீங்க பாயிண்டை என்று அபத்தக்குரல்...
முதலில் நீங்கள் எதைப் பிரசங்கிக்கிறீர்கள் என்று தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். உங்களைப் போன்ற முட்டாள்கள் வேண்டுமானால் கேள்வி கேட்காமல் இருக்கலாம். எல்லாரும் அப்படியல்லை.
"பாவத்தின் சம்பளம் மரணம்" அவ்வளவே..
உங்க பிரச்சனையே இதுதானே... மரணத்தில் இவ்வளவு குழப்பம்.
சரி சாலமோன் தான் வாழ்ந்து கெட்டவன், இயேசுகிறிஸ்து....?
பிரசங்கி 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிரசங்கி 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
சங்கீதம் 115:17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.