//ஆம், பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனுக்கும் “தெளிவான வசனம்” கிடைக்காத பஞ்சம்தான், எப்படி எனக் கேட்கிறீர்களா?
ஒருபுறம் தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறார்கள்; மற்றொரு புறம் இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிபவன் மீதுதான் தேவன் அன்பாக இருக்கிறார் என்கிறார்கள். இவர்களின் புரிந்துகொள்தலின்படி பார்த்தால், கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட எவருமே (பெரியன்ஸ், சோல்சொல்யூஷன், பவுல், பேதுரு, யோவான் etc etc) இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படியமாட்டார்கள். எனவே உலகில் எவர் மீதும் பிதாவாகிய தேவன் அன்பாக இருக்கமாட்டார்.
ஆனால் எல்லா மனிதர் மீதும் தேவன் அன்பாக இருப்பதாகவும் மற்றொரு திரியில் பெரியன்ஸ் கூறுகிறார்.//
அன்பு அவர்கள் தன் போக்கில் விமர்சனங்களை விடுகிறார்!! வசன பஞ்சத்திற்கு அன்பிற்கு என்ன சம்பந்தம் என்று அவர் தான் விளக்க வேண்டும்!! அன்பு அவர்களே ஒன்றை முடிந்தால் புரிந்துக்கொள்ளுங்கள்;
வசனமே தெரியாதவர்கள் சகோ அன்பை விட அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்!! ஆனால் வசனம் தெரியும் என்று நீதியின் கிரியைகளில் தன் இரட்சிப்பை தானே நிர்னையித்துக்கொள்ளும் அன்பு போன்றவர்கள் தான் பாவம் 2000 சபைகளில் தத்தளிக்கிறார்கள்!!
அன்பு அவர்களே நீங்கள் போதிக்கும் நீதியின் கிரியையே வசனத்திற்கு முறனாக தான் இருக்கிறது!! உங்கள் நீதியின் கிரியை அத்துனை வலிமையானது என்றால் கிறிஸ்துவின் மரணம் வீண் என்று அப்போஸ்தலர் சொல்லுவது எல்லாம் உங்கள் கதோரமாக கூட படுவித்தல்லை என்று நினைக்கிறேன்!!
//ஆக, எவர்கள் மீதும் தேவன் அன்பாக இருக்கமாட்டார், ஆனால் எல்லார் மீதும் தேவன் அன்பாக இருக்கிறார் என வசனம் சொல்வதாக பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷன் கூறுகின்றனர்.//
இத்துனை வாசித்தும் நீங்கள் என்னத்தை வாசித்தீர்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது!! தேவனின் அன்பு இருப்பதால் தான் அனைவருக்கும் இரட்சிப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!! இல்லை இல்லை, எங்கள் கிரியை எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்கிற கிரியையின் உபதேசத்தில் தாங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்!!
தேவன் தீமையை அனுமதித்தார் என்று வேதம் சொல்லுவதிலிருந்து நாங்கள் ஏதோ தேவனை ஒரு வில்லனாக சித்தரிப்பது போல் போதித்தும் எழுதியும் வருவதே நீங்கள் எவ்வுளவு பெறிய பஞ்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை தான் நிரூபிக்கிறது!! தேவனை ஞானத்தை அளவிட முடியாமல் இருப்பதால் தான் தீமையின் அனுமதிப்பை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாமால் தேவனை ஏதோ உங்களின் கிரியை கொண்டு காப்பாற்றி கிறிஸ்தவத்திற்கு ஒரு அவப்பெயர் வராமல் பாதுகாப்பு தருவதாக உங்களுக்கு ஒரு நினைப்பு!! தேவனின் எல்லா செயல்களும் மனிதனின் இரட்சிப்புக்கே என்று நாங்கள் தெளிவாக இருப்பதால், அவரின் ஒவ்வொரு செயலிலும் அவரின் அன்பு தான் வெளிப்படுகிறது என்று உறுதியாக இருக்கிறோம்!!
இன்று அத்துனை பெரிய வேதத்தை கைகளில் வைத்துக்கொண்டு அதில் உள்ள நீதியை மட்டும் போதிப்பது நீங்கள் ஆரோக்கியமான வசனத்தில் இருப்பதாக நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள்!! நீங்கள் கொண்டுள்ள அர்த்தம் எல்லா நீதியும் நியாயமும் நிறைந்தது என்று உங்கள் வாதத்திற்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்கிறீர்கள், அல்லது அதற்கு ஒரு கூட்டம் இருந்தாலும் இருக்கும்!!
//அவர்கள் எந்த வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டனர்?//
நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?? சுயநீதியின் போதனையை கிறிஸ்துவின் ஈடுபலிக்கும் மேலாக உயர்த்தி பேசும் நீங்கள் எப்படி வசனத்தில் தெளிவாக இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமே!! இருக்கும் 2000 சபைகளும், ஒரு போதகரை நியமித்துக்கொண்டு வேதத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு இது தான் எங்கள் சபையின் தரிசனம், இது தான் எங்கள் பாஸ்டரின் தரிசனம் என்று அந்த தரிசனத்தின் மேல் விசுவாசத்தை வைத்திருக்கிறீர்கள்!! அப்படியே நீங்களும் தேவனின் கிருபையை பார்க்கிலும் உங்களின் கிரியை வலிமையுள்ளதாக நிரூபிக்க பிரயாசப்படுகிறீர்கள்!! நீங்கள் கிரியையின் மேல் வைத்திருக்கும் விசுவாசம் கிறிஸ்துவினால் உண்டான கிருபையை கொச்சைப்படுத்துகிறது!! இதுவே நீங்கள் எத்துனை பெரிய வசன பஞ்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது!!
//ரோமர் 11-ம் அதிகாரம் ஒரு critical-ஆன அதிகாரம். மிகவும் ஆழமாகத் தியானித்தால்தான் அதன் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக இங்கு தியானிக்க முடியாவிட்டாலும், நம் விவாதத்திற்கு தேவையான சில வசனங்களை மட்டும் பார்ப்போம்.//
வேதத்தில் ஒரு சில பகுதிகளை கிரிட்டிக்கலாக இருக்கு என்று சொல்லுவதே, நீங்கள் உங்கள் போதனைக்கு துனை தேடுகிறீர்கள் என்ரு தான் அர்த்தம்!! தேவ சிந்தையோடு இருந்தோமென்றால், எதுவும் கிரிட்டிக்கல் கிடையாது!! உங்கள் போதனையைக்கொண்டு வருவதாக தோன்றும் வசனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் இனை வசனம் இல்லாமல் நீங்கள் என்ன தான் அர்த்தம் கொள்ள நினைத்தாலும் அது தவறாகவே போய் விடும்!! இஸ்ராயலர்கள் எப்படி கீழ்ப்படியாமையில் இருந்தார்கள் என்பதை தான் கிறிஸ்து தன் அப்போஸ்தலர்களிடம் சொல்லுகிறாரே,
மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
இங்கே உங்களுக்கு என்பது அப்போஸ்தலர்களும், அவர்களுக்கோ என்பது மற்ற இஸ்ராயலர்களை குறிக்கும்!!
அருளப்படவில்லை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியவேண்டும்!! கிறிஸ்துவின் கிரியை காட்டிலும் உங்கள் கிரியை ஒன்றும் ஒசத்தியானது என்கிற போதனை வேண்டாதது!! அவரின் கிரியை கண்டே இஸ்ராயலர் மனந்திரும்பவில்லை என்று தான் வேதத்திலிருந்து நாம் அறிகிரோமே!! ஆனால் உங்களின் கிரியையின் போதனையை கொண்டு நீங்கல் இரட்சிப்பை அறிவிக்கிறீர்கள்!! நல்ல சுவிசேஷம் தான்!! ஒருத்தருக்கு ஆக்கினை தான் சுவிசேஷமாம், உங்களுக்கு கிரியை செய்வது சுவிசேஷம், ஆனால் மொத்த கிறிஸ்தவமே வசன பஞ்சத்தினால் தேவனின் கிருபை ஒன்று இருக்கிறது என்பதை மறந்து பிதற்றும் கூட்டமாக தான் காணப்படுகிறது!!
II கொரிந்தியர் 3:5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
அப்போஸ்தலர் சொல்லுவதை கவணித்தீர்களா!! அய்யா நீங்கள் செய்வது ஏதோ உங்கள் முயற்சி என்று உங்களை அளவிற்கு அதிகமாக தகுதியானவர் என்று நினைக்க வேண்டாம்!! உங்களுக்கு என்ன தகுதி என்று தேவனே நிர்னையம் செய்கிறார்!! அந்த தகுதியும் தேவனால் தான் உண்டாயிருக்கிறது!!
//இப்படியாக எரேமியா 31:34-க்குப் பின்னே இத்தனை விஷயங்கள் இருக்க, கோவை பெரியன்ஸ் நண்பர்கள் “ஒரு வசனத்தை” மட்டும் எடுத்துப்போட்டு அதனடிப்படையில் சொல்லும் கருத்து சரியாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது.//
இஸ்ராயேல் என்பதே இந்த உலகத்திற்கு ஒரு நிழல் என்பது எந்த ஒரு வேத ஆராய்ச்சியாலரும் ஒத்துக்கொள்வார்!! இந்த அதிகாரத்தை 1ம் வசனம் முதல் 40ம் வசனம் முடிய வாசிப்பவர்கள் அது ஒரு கோர்வையான பகுதி என்று ஒத்துக்கொள்வார்களோ!! இது இந்த அதிகாரம் மாத்திரம் இல்லை, தீர்க்கதரிசன புத்தகங்கள் எல்லாவற்றிலுமே இருக்கும்!! நீங்கள் வாசிக்கிறபடியே எடுத்துக்கொண்டால் நிச்சயமாக நீங்கள் எண்ணுவதை அதில் கொண்டு வர முடியும்!!
என் வாதத்திற்கு ஆதாரமான வசனம்:
ஏசாயா 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஆகவே தான் தேவன் வேதத்தில் வைத்திருக்கும் திட்டங்களும் வெளிப்பாடுகளும் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக இருக்கும்!! அன்பு அவர்கள் நினைப்பது போல் இது ஒரு தொடர்கதை அல்லது நாவல் கிடையாது, இடையில் ஒரு வரியை வாசித்து அந்த அதிகாரத்தை முழுவதும் அந்த வரியுடன் தொடர்பு படுத்த!! ஆகவே தான் வேதம் சொல்லுகிறது,
ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
அன்பு அவர்களே ஏரே 31:34ம் அப்படி பட்ட ஒரு இனை வசனமே!! ஆனால் நீங்கள் உங்கள் கிரியைகளையே எல்லா இடங்களிலும் "தேடிக்கொண்டு" இருக்கிறீர்கள்!!
இப்படி ஒவ்வொரு சபையிலும் தனக்கு இஷ்டமான ஒன்றை மாத்திரமே பிடித்துக்கொண்டு இருப்பதினால் தான்,
ஏசாயா 28:8. போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
அன்பு: //அன்பான சகோதரரே! அநேகர் உங்களைக் குறித்து சொல்கிற பிரகாரம், “வேதவசனத்தைப் புரிந்துகொள்வதில்” உங்களுக்கு சற்று பிரச்சனை இருப்பதுபோலத்தான் உள்ளது.//
அன்புள்ள அன்பு அவர்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு வியாதி இருக்கிறது என்று தான் எனக்கும் தோன்றுகிறது!! இப்படி சத்தமாக எழுதிவிட்டால் இவனுக்கு உண்மையில் புரிந்துக்கொள்ளுதல் இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!! உங்கள் அளவிற்கு எழுத்து திறனால், வார்த்தை ஜாலங்களினாலும், அநேகரை "கவரும்" பக்குவம் எனக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னமோ வேதத்தில் உள்ள வசனங்களை நீங்கள் மாத்திரமே புரிந்துக்கொண்டிருக்கிற மமதை வேண்டாம்!! ஏனென்றால் தங்களின் பெரும்பாளுமான பதில்கள் முதலில் என்னை மட்டம் தட்டி பிறகு "இது எனக்கு தெரிந்த கருத்து" என்று எழுதி என்னமோ தாங்கள் சொல்லும் கருத்து 100 சதவிதம் ஏற்றுக்கொண்டப்பட்ட கருத்து போல் சொல்லி வருகிறீர்கள்!! எனக்கு உண்டான தேவ வசனத்தின் புரிந்துகொள்ளுதலில் நான் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்!!
ஆகையால் விவாதம் என்றால் விவாதத்தோடு நிற்கட்டும்!! நீங்கள் இப்படி தனிப்பட்ட விமர்சனங்கள் எழுப்புவது என்னமோ நான் முற்றிலும் தவறு என்றும் "என் கருத்து" என்று நீங்கள் சொல்லுவது மாத்திரம் முற்றிலும் புரிந்துக்கொள்ளுதல் உள்ள கருத்து என்று நினைக்க வேண்டாம்!! இது போன்ற விமர்சனங்களே பிறகு தனிப்பட்ட விமரசனத்தை தூண்டுகிறது!!
Isaiah 28:13 So then, the word of the LORD to them will become: Do this, do that, a rule for this, a rule for that; a little here, a little there— so that as they go they will fall backward; they will be injured and snared and captured.
இது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்: “அந்தக் கிரியை வேண்டும்; இங்கேயும் அங்கேயும் எழுதியுள்ளதை தேடிப்பிடித்து அவற்றின்படி செய்ய வேண்டும்; இல்லாவிடில், விழுந்து நொறுங்கிப் போவீர்கள்; சிக்குண்டு பிடிபடுவீர்கள்”
நீங்கள் மெச்சி கொள்கிறீர்கள், எனக்கு வசனம் புரியவில்லை என்று!! மிக்க நன்றி!! நான் எழுதியபடியே நீங்கள் எல்லா இடங்களிலும் கிரியை மாத்திரமே நாடுவதால் இல்லாதது கூட இருப்பதை போன்ற தோன்ற செய்கிறீர்கள்!!
இந்த வசனம் எந்த இடத்தில் அந்த கிரியை வேண்டும், என்கிறது!! நீங்கள் கிரியை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு இருக்கும் வசனங்களை வாசித்துக்கொண்டு, என்னமோ சகல புரிந்துக்கொள்ளுதலும் உங்களுக்கு இருக்கு என்கிற மாயை தோற்றுவிக்கிறீர்கள்!!
எப்படியோ நீங்கள் கிரியைகளினால் நீதிமானாக இருக்க பிரயாசப்படுகிறீர்கள்!! நாங்கள் கிருபையினால் நீதிமான்களாகி கொள்கிறோம்!!
நீங்கள் விருத்தசேதனம் செய்யாமலே இன்னும் நியாயப்பிரமானத்திற்குள் இருக்க பிரயாசப்படுகிறீர்கள்!! தொடருங்கள்!! உங்கள் புரிந்துக்கொள்ளுதல் உங்களுடன் இருக்கட்டும்!! என்னை தேவன் தன் சித்தத்தின்படியே நடத்தட்டும், நீங்கள் உங்கள் சித்தத்தின்படி நடந்துக்கொள்ளுங்கள்!!
//ஒருவர் கிறிஸ்துவின் வசனங்களைக் கைக்கொண்டால்தான் அந்த நபர்மீது பிதா அன்பாக இருப்பார் என்றும் சொல்கிறீர்கள்; தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டுள்ளார் என்றும் சொல்கிறீர்கள். அதாவது நீங்கள், பவுல், பேதுரு, யோவான் உட்பட அனைவரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள், பவுல், பேதுரு, யோவான் உட்பட எவருமே கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்பவர் அல்லதானே? அப்படியானால் நம்மில் எவர் மீதுமே பிதா அன்பாக இருக்க மாட்டார் தானே?//
ஒருவர் கிறிஸ்துவின் வசனங்களைக் கைக்கொள்ளுவதே பிதாவினால் தான்!!
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
அப்படி பிதா ஒருவனை கிறிஸ்துவிடத்திற்கு அனுப்பிவிடுகிறார் என்றாலே தேவன் அந்த நபர் மீது அன்பாக இருக்கிறார்!! எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டுள்ளார் என்பதற்காக அவருக்கென்று அதிலிருந்து தேர்ந்து எடுக்கிறார்!! ஒரே களிமண்ணு தான், சில பாத்திரங்களை கனமானதாக செய்ய தேவனுக்கு அதிகாரம் இல்லையோ!! நான், பவுல், பேதுரு, யோவான் உட்பட அதே கீழ்படியாமைக்குள்ளிருது தான் அழைத்திருக்கிறார்!! வாசித்தத்தில்லையா, உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்று!! அப்படி தூக்கி எடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக அவருக்கு கீழ்ப்படிந்தவர்கள் தான்!! கிரியை செய்வதை பார்த்து தான் தேவன் அழைக்கிறார் என்றால் பவுல் இரக்கம் கொண்டவனாக இருந்தவன் இல்லை!! நீங்கள் இப்பவும் உங்கள் கிரியை உசத்தியாக நினைக்கிறீர்களே தவிர தேவனால் என்ன செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இல்லையே!! ஒரு வேளை உங்களுக்கு அந்த விசுவாசத்தை அவர் கொடுக்கவில்லையோ!!
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
II கொரிந்தியர் 9:15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
//இக்கேள்விக்கு பதில் சொல்லாமல், என்னைப் பற்றி ஏதேதோ வழ வழா விமர்சனம் ஏன் செய்கிறீர்கள் சகோதரரே?//
இந்த பதில்கள் எல்லாம் பல முறை எழுதியாகிவிட்டது!! உங்களுக்கு கிரியையின் மேல் எவ்வுளவு நம்பிக்கை இருக்கிறதோ, தேவனின் கிருபையின் மேல் அதை காட்டிலும் பல மடங்கு அதிக நம்பிக்கை எனக்கு இருக்கிறது!! ஏனென்றால் அந்த கிருபையை நம்பசெய்வது அவர் தருகிற விசுவாசமே தவிர என் கிரியைகளினால் இல்லை!! நான் இப்படி எழுதுவதும் ஏதோ என் பிரயாசம் இல்லை, மாறாக பவுல் சொல்லுவது போல் அந்த பிரயாசமே அவரின் கிருபை தான் என்பேன், நீங்களோ அதை உங்கள் கிரியை என்கிறீர்கள்!!
I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
வழ வழா விமர்சனம் ஏன் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கேட்க கூடாது!! என்னை குறித்து என்னவெல்லாம் எழுதுகிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள்!!
//முடிந்தால் எனது வாதத்திற்கு பதில் சொல்லுங்கள்.//