//உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது என்று பிசாசு ஒரு பக்கம் வந்து சொன்னானாம். இன்னொரு பக்கம் இயேசு கிறிஸ்து , உன்னை திரும்பவும் உயிர்பிப்பேன். பயன்படுத்துவேன் என்று சொன்னாராம். அதன் பின் அற்புதமாக பூரண சுகமடைந்தாராம். டாக்டர் சொல்வதையெல்லாம் நம்பக் கூடாது என்று சொன்னார். //
அதாவது ஒரே மனிதனின் இடது வலது பக்கம் சாத்தானும் இயேசு கிறிஸ்துவும் வந்து அமர்ந்திருந்து தர்க்கம் செய்வதாக அந்த ஊழியர் சாட்சிக்கொடுத்திருக்கிறார்!! பிசாசுக்கு தேவனின் அனுமதின் இன்றி ஒன்றையும் செய்ய முடியாது என்பதை யோபுவின் புத்தகம் நமக்கு சொல்லுகிறது!! ஆனால் உங்கள் ஊழியர்களிடம் கிறிஸ்துவிற்கு முன்பாகவே சாத்தானால் இத்துனை துனிச்சலாக பேச முடிகிறது என்றால் அந்த மனிதரை நானும் சந்திக்கனுமே!!
தேவனால் அற்புத சுகம் கொடுக்க முடியாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் இது போன்ற கதைகளால் தான் அற்புதத்தை நம்ப வைப்பது என்பது சாத்தானை கிறிஸ்துவிற்கு சமமாக உயர்த்துவது என்பதை சாட்சி கொடுத்தவர் தெரிந்திருக்க வேண்டும்!!
யோவான் 14:30 இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
ஆனால் இந்த ஊழியர் மாத்திரம் அல்ல, இவரை போன்ற பலர் இன்று சொல்லும் சாட்சியின் கதை இப்படியாக தான் இருக்கும்!! ஒரு பக்கம் சாத்தான் வந்து உட்காருவதும், மறு பக்கம் கிறிஸ்து இயேசு வந்து உட்கார்ந்து தர்கிப்பதும் சிறுப்பிள்ளைத்தனமான ஒரு கதை!! இது போன்ற கதைகளை கேட்க தான் செவிகள் தையாராக இருக்கும்!!
டாக்டர் சொல்லுவதையெல்லாம் நம்பக் கூடாது என்று சொன்ன அந்த மனிதர் இனி மீண்டும் டாக்டரிடம் செல்ல மாட்டார் என்று கையெழுத்து இட்டு கொடுக்க தையாராக இருக்கிறாரா என்று கேட்டு சொல்ல முடியுமா!!
அற்புதங்கள் நடப்பது தேவனால தான், நாம் அனுதினமும் உயிருடன் இருப்பதும் அதே அற்புதம் தான்!! சாத்தானையும் கிறிஸ்துவையும் இது போன்று பேசும் மனிதர்கள் தப்பான கதைகளினால் கூட்டம் சேர்க்கிறார்கள், அவ்வளவே!!
கிறிஸ்து தான் மரித்தோரிலிருந்து முதலாவது உயிர்த்தெழுந்திருக்கிறார்!! மத்தேயு 27:52,53ல் நடந்தது உயிர்த்தெழுதல் அல்லவே அல்ல!! நான் முன்பு ஒரு முறை இதை குறித்த விளக்கம் தந்திருக்கிறேன்!! உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவசியம் வாசித்து பாருங்கள்!! மத்தேயு 27:52,53 தான் உயிர்த்தெழுதல் என்கிற போதனை சரி என்றால் 1 கொரிந்தியர் 15:20 பவுல் எழுதிய ஒரு பெரிய பொய்யாகி விடும்!!
//ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவில்லை? எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு பாருங்க உங்க தியரியில்!//
ரொம்ப சாதுர்யமான கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக எண்ணவேண்டாம். தேவனுடைய திட்டத்தைக் கிண்டல் செய்யுமளவுக்கு உங்களுக்கு ஞானம் வந்துவிட வில்லை அம்மணி. முதலாவது மரணமின்மையை யாரும் போதிக்கவில்லை. முட்டாள்தனமாக உளரக்கூடாது. ஆனால் ஒருவகையில் இந்த மரணம் மரணமின்மைதான் அதனால்தான் மரணம் நித்திரைக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது. அந்த நீதி அனைவர் மேலும் வந்ததால்தான் அனைவரும் உயிர்த்தெழுவது. சாத்தியமாகிறது. நித்திய ஜீவன் உயிர்த்தெழுந்த பின்னர்தான்.
ஆதாமும் பாவம் செய்த உடனே மரிக்கவில்லை. ஆனால் மரிக்கத் தொடங்கிவிட்டான்.
தேவன் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்து வருகிறார். பாவத்தின் சம்பளமான மரணத்தை மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவனும் அனுபவிக்க வேண்டும். யாருமே விதிவிலக்கல்ல.
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
இங்கு ஒரே என்றால் ஒரேதான்.... ஒரு முறை மரிப்பதும் பின்பு உயிர்த்தெழுவதும் அதன் பின் இரண்டாம் முறை மரிப்பதும் முட்டாள்களின் புரிதல். வேதத்தில் இல்லை.
ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
ஆண்டு கொண்டது! பாவம் செய்தால் எப்படி மரணம் கேரண்டியோ அதேபோல கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு கேரண்டி..
//பெரெயன்ஸ் சோல் முகத்தைப் பார்க்கிறார். சோல் பெரேயன்ஸ் முகத்தைப் பார்க்கிறார். அதாவது இருவருக்கும் பதில் தெரியவில்லை!//
உண்மையில் உங்களுக்கெல்லாம் பதில் எழுதும் நோக்கம் எங்களுக்கு துளிகூட இல்லை. ஆனால் பெருவாரிக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளாக நீங்கள் இருப்பதால் உங்களது கேள்வியும் அறிவுமே அவர்களுக்கும் இருக்கும் என்ற நோக்கில் எங்கள் பதில் இதை வாசிக்கும் ஒரு சிலருக்காவது பிரயோஜனமாக இருக்கும் என்ற விசுவாசத்தில் பதிக்கிறோம். இப்பொழுது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் யாருக்கேனும் எங்கள் தளம் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
//ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவில்லை? எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு பாருங்க உங்க தியரியில்!//
1 கொரிதியர் 1:25. இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.
அப்படியே கோல்டா அவர்களின் "மிகவும் ஞானமான" கேள்வி தேவனுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரிகிறது!! அதான் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறதே!! (ஓஹோ, உங்களுக்கு தான் பிரசங்கியின் புத்தகம் நாத்திகவாதியின் புத்தகமாக இருக்கிறதே!! நல்ல வேலை, அதில் தசமபாகம் காணிக்கை இல்லை என்று நினைக்கிறேன், இல்லாங்காட்டி இந்த மேய்ப்பர்கள், போதகர்கள் அந்த புத்தகத்தை முதலில் பிரசங்கித்திருப்பார்கள்!!)
நீ சாகவே சாவாய என்கிற சாபத்தை பெற்ற ஆதாம் மரிப்பதற்கு 930 வருடங்கள் ஆயிற்று!!
1 தீமோத்தேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் இந்த பலி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது என்று வசனம் சொல்லுகிறது!!
உங்கள் கூட்டத்தாரை போல், "இப்பவே இற்ற்ற்ற்றங்கும்", "கட்டளையிடுகிறேன்", "இப்பவே செய்ய்ய்ய்ய்ய்ய்யும்", என்று அதிரடியாக தேவன் செய்வதில்லை!! அவர் எல்லாவற்றையும் நேர்த்தியாக அதினதின் காலத்தில் செய்து வருகிறார்!! உலக தோற்றமுதல் கிறிஸ்துவை நியமித்துவைத்திருந்த தேவன் மனிதன் பாவத்தில் விழுந்து சுமார் 4000 வருடங்கள் பிறகு தானே அனுப்பினார்!!
//பெரெயன்ஸ் சோல் முகத்தைப் பார்க்கிறார். சோல் பெரேயன்ஸ் முகத்தைப் பார்க்கிறார். அதாவது இருவருக்கும் பதில் தெரியவில்லை!//
நீங்கள் பதிந்தவுடன் உங்களுக்கு பதில் பதியவேண்டும் என்கிற எந்த ஒப்பந்தமும் இல்லை அம்மையாரே (!!)!!
//உயிர்த்தெழுந்தபின்பு 3 நாள் கல்லறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்களா??//
மத்தேயு 27:52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
கிறிஸ்து மரித்தவுடன் உங்கள் கூற்றுபடி சரீரங்கள் எழுந்திருந்தது (உயிர்த்தெழுந்தது)!! இனி அவர்கள் கல்லறைக்குள் உட்கார்ந்திருந்தார்களா இல்லை தோட்டத்தில் இருந்தார்களா என்பதெல்லாம் உங்களுக்கு தான் தெரிய வேண்டும்!!
முழு நிகழ்வையும் வாசிக்காமல், அரை குறையாக வாசித்து ஏன் தப்பு தப்பாக எழுதுகிறீர்கள்!! உயிர்த்தெழுதல் என்கிற வார்த்தையே இல்லாத வசனத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் கிறிஸ்துவிற்கு முன்னமே உயிர்த்தெழுந்தார்கள் என்று விவாதிப்பது முட்டாள்த்தனமும் மடத்தனமுமே!!
// இயேசு கிறிஸ்து எனக்கு சரீரம் இருக்குது...தொட்டுப் பார் என்று சொன்னார். நீங்க அவருக்கு சரீரம் இல்லை, ஆவியாக இருக்கிறார் என்றல்லவா சொல்கிறீர்கள். இதுக்கு பேர் பொய் இல்லையென்றால் , வேறு எதுதான் பொய்??//
இயேசு கிறிஸ்து பூட்டிய அறைக்குள் பிரவேசித்தார் என்கிறது வேதம்!! ஏற்கனவே பயத்தின் உச்சியில் இருந்த தன் சீஷர்களுக்கு தான் உயிருடன் இருப்பதை காட்டவே கிறிஸ்து மாம்சத்தின் தன்னை "வெளிப்படுத்தினார்"!! இங்கே கிறிஸ்து பொய் சொன்னார் என்று யாரும் சொல்லவில்லை!! அவர் மாம்சத்தில் இல்லை ஆவியாக இருக்கிறார் என்று தான் சொல்லி வருகிறோம்!! நீங்கள் தப்பு தப்பாக கேட்டு பொய்யாராக இருக்கிறீர்கள்!!
மாம்சத்தில் கொலையுண்டு ஆவியில் உயிர்த்தெழுந்தார் என்கிற வசனத்தை போய்யாக்குகிறீர்கள் (I பேதுரு 3:18)
//அதாவது, வேதத்தில் எங்குமே "ஆத்தும ஆதாயத்தை" குறித்து இல்லையா? இல்லையே!!//
அதாவது பைபிளை கையில் எடுத்து வாசிக்கணும். இப்படிக் காலில் போட்டு மிதிக்கக்கூடாது.தூங்குறவங்களை எழுப்பிப் பார்க்க வைக்கலாம். தூங்குற மாதிரி நடிப்பவர்களைக் கூட எழுப்பிப் பார்க்க வைக்கலாம்.ஆனால் தன் விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக் குருடாக்கிக் கொள்ளும் குருடர்களைப் பார்க்க வைப்பது கஷ்டம்.//
கையிலும் எடுத்து வாசிக்கக்கூடாது அம்மணி, ஆராய வேண்டும். வேதத்தை வாசிக்கச்சொல்லி ஒரு வசனமும் இல்லை.
ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாத கோமாளிகளுக்கு ஆத்தும ஆதாயம் என்றால் என்ன வென்றா தெரியப்போகிறது? வசனத்தைக் காண்பித்து விளக்கச்சொன்னால் டென்ஷனாகி டயலாக் அடிக்கிறீர்கள். பாவம்...
//அதாவது பைபிளை கையில் எடுத்து வாசிக்கணும். இப்படிக் காலில் போட்டு மிதிக்கக்கூடாது.
தூங்குறவங்களை எழுப்பிப் பார்க்க வைக்கலாம். தூங்குற மாதிரி நடிப்பவர்களைக் கூட எழுப்பிப் பார்க்க வைக்கலாம்.ஆனால் தன் விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக் குருடாக்கிக் கொள்ளும் குருடர்களைப் பார்க்க வைப்பது கஷ்டம்.//
வசனம் இருந்தால் எடுத்து சொல்லியிருப்பார்கள்!! வசனம் இல்லாததால் கதை தான் எழுத முடியும்!! நீங்கள் கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம் செய்யுங்கள் என்கிறதான வசனத்தை எடுத்து சொல்ல வேண்டியது தானே!!
பைபிளை காலின் கீழ் போட்டு மிதிப்பவர்கள் தான் இயேசுவை தெய்வமாக தொழுதுக்கொள்ளும் கூட்டம்!! இவர்கள் தொழும் இயேசுவால் உலகத்தை மீட்க முடியாதாம்!! ஆனால் நாங்கள் தெரிந்திருக்கும் வேதத்தில் உள்ள கிறிஸ்து இயேசு எல்லாரையும் மீட்க வல்லவர் என்று போதிக்கிறோம்!!
ஏன்? கண்கள் திறந்திருந்தும் பார்க்க முடியாதவர்கள் ஏதாவது வசனத்தை கொடுத்து நாங்கள் தப்பு என்று சாதிக்க வேண்டியது தானே!! சோஃபா ஊழியர்களின் வெட்டி கதைகளை நம்பும் இவர்கள் கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று வேறு ஒரு இயேசுவை அறிவிக்கிறார்கள்!! குருட்டு தீர்க்கதரிசனம் (!!) சொல்லும் தொழிலில் இருப்போரின் பிதற்றலை கேட்டு மகிழும் இந்த கூட்டத்தார் வேதத்தை திறந்து பார்த்து கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம் செய்யும் வசனத்தை காட்ட வேண்டியது தானே!! முடியாது!!
//அப்படி ஆராய்ச்சி செய்துதான் “ஆத்தும ஆதாயம்” என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்று கண்டு பிடித்தீர்களோ??//
அரை குறையாக எதையும் படித்து விட்டு பிதற்றவேண்டியது தான்!! ஏன் இவர்களின் வேதத்தில் தனியாக அப்படி எதையும் அச்சடித்திருக்கிறார்களோ!! யாராவது இவருக்கு ஆத்தும ஆதாயத்திற்கான வசனத்தை எடுத்துக்கொடுங்கப்பா!! பாவம்!!
இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் காமெடியாக இருப்பதே நாளைக்கு உங்கள் கண்களின் இருள் நீங்கியதும் சரியாக தெரியும்!!
//நாம் தான் வருகையைக் காணப்போகும் கடைசி சந்ததி. உங்களைப் போன்ற வேத புரட்டர்கள், கள்ள உபதேசக்காரர்கள் எழும்பிய பின் வருகை தாமதிக்காது.//
வேத புரட்டர்கள், கள்ள உபதேசக்காரர்கள் இன்று அல்ல, அப்போஸ்தலர் காலத்தில் வந்தவர்களே!! அவர்களின் தொடர் வாரிசுகள் தான் இன்று உலகமயமாகிய கிறிஸ்தவ மண்டலம்!!
உங்களின் கோன, கள்ள உபதேசக்காரர்களை குறித்து தான் இப்படி விரிவான வாசலும், விசாலமான வழியில் செல்பவர்கள் என்று வேதம் சொல்லுகிறது!! அநேகர் இதில் பிரவேசிக்கிறார்களாம்!! எங்களை போன்ற ஒரு சிலர்....... அதான் இடுக்கமான வாசல் இருக்கிறதே!!
//அந்த நாளில் சாகவே சாவாய் என்று சொன்னார். ஆனால் ஆதாம் சாகவில்லையே. அப்ப ஆண்டவர் பொய் சொன்னாரா? சில விஷயங்களை அப்படியே எழுத்தின்படி அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.//
அதான் உங்களிடத்தில் ஒரு தியரி இருக்குமே, ஆவியில் செத்துவிட்டான் என்கிற ஒரு வஞ்சக தியரி!! ஆதாமின் மரண ப்ராசஸ் துவங்கி விட்டது!! உழைப்பு, வியர்வை, வியாதி, வயது முதிர்வு........ மரணத்தின் ப்ராசஸ் துவங்கி அவன் இருந்த காலத்தில் உள்ள சீதோஷன நிலையை பொறுத்து அத்துனை காலம் உயிருடன் இருந்து, மரணம் என்றால் என்னவென்று அவனின் மகனின் மரணத்திலிருந்து தெரிந்துக்கொண்டு பிறகு செத்தான்!!
கோவைபெரேயன்ஸின் வசன வியாக்கியானத்தை கன்னா பின்னாவென்று புரிந்துக்கொண்டிருக்கிறீர்!! வசனத்தை சார்ந்து பதில் எழுத தெரியவில்லை!! கண்டவன் சொல்லும் வெளிப்பாடுகள், காட்சிகள், தரிசனங்கள் போன்ற கதைகளினால் தான் அங்கே பிழைப்பு ஓடுது என்று எங்களுக்கு தெரியாதா!! அந்த உளையான சேற்றிலிருந்தவர்கள் தான் நாங்களும்!!