kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் தளத்தின் கேள்விகள்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நித்திய ஜீவன் தளத்தின் கேள்விகள்


சகோ அன்பு அவர்கள் தன் தளமான "நித்திய ஜீவன்"இல் என்னை குறித்து பதிந்து வரும் சில பதிவுகள்;

அறிந்ததும் அறியாததும் திரியின் 6-ம் பக்கம் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ள ஒரு கூற்று:

//கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது, எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்று சொல்லி தருவதற்கு அர்த்தம் புரிகிறதா!! அப்படி என்றால் சோதனையில் விழ (சோதனை கொடுப்பதில் வேறு சோதனையில் விழுவது வேறு) விடாமால் என்னை நடத்தும் என்று கேட்க சொல்லுகிறார்!! அப்படி என்றால் விழசெய்கிறவர் தேவன் தானே!! தேவன் அந்த விழுதலை அனுமதிக்கிறார்!!//

சோதனையில் விழச்செய்பவர் தேவன் தானாம்; ஆனால் தேவன் அவ்வாறு விழச்செய்யாதபடி தேவனிடமே நாம் ஜெபிக்க வேண்டுமென இயேசு சொல்கிறாராம்!

அதாவது சோதனையில் விழச்செய்கிறதான அந்த தேவசித்தம் நிறைவேறாதபடிக்கு தேவனிடமே நாம் ஜெபிக்க வேண்டுமாம்.

இது ஒரு முரண்பாடான கூற்றா அல்லது குழப்பமான கூற்றா என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.


முறண்பாடானது அல்ல குழப்பமானதும் அல்ல!! கிறிஸ்து ஜெபிக்க சொல்லி தரும் முறை இது அவ்வளவே!! ஆனாலும் நமக்கு சோதனையை நியமித்திருந்தால் அது நடந்தேறும்!! இது தேவனின் சித்தத்தை எந்த விதத்திலும் நம்மில் செய்ய விடாமல் இருக்க வேண்டிய ஜெபம் கிடையாது!! கிறிஸ்துவே ஜெபித்திருக்கிறார்,

மத்தேயு 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

அப்படி என்றால், தேவன் தான் இவரை சிலுவைக்கே அனுப்பினார், ஆனாலும் தன்னை அதிலிருந்து விடுவிக்க சொல்லி ஜெபிப்பதும் உங்களை குழப்பியதா அல்லது மாறுபாடான போதனையோ!! இருக்கலாம்!!

தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்கிற வேதத்தின் உண்மையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததினால் உங்களுக்கு இது குழப்பமாகவும் முறனாகவும் தெரியும், கிறிஸ்து இயேசு சொன்ன பிறகும் கூட!! ஆகவே தான் உங்கள் கேள்வி இது சரியா தவறா என்று இல்லாமல், இது முறணா அல்லது குழப்பமான கூற்றா என்றே இருக்கிறது!!

ஆனாலும் இவை எல்லாம் தேவனின் சித்தத்தின்படியே ஆகட்டும் என்று நான் பதிவு செய்ததை எல்லாம் விட்டு விட்டு உங்களுக்கு முறனாக தோன்றியதை ஒரு கேள்வியாக எடுத்து போட்டது தான் குழப்பம்!! குழப்பம் என் பதிவில் அல்ல, மாறாக தேவனே அதை நியமிக்கிறார்,

1 பேதுரு 2:7. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; 8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

இப்படி திருவசனத்தில் இருப்பதை விசுவசிக்காமல் நடக்க செய்வதும் தேவன் நியமித்தது தான் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அறிந்ததும் அறியாததும் திரியின் 6-ம் பக்கம் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ள மற்றொரு கூற்று:

//மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
நிலைத்திருக்க செய்பவர் தேவனே!!//
ஆனால் அவர் அவ்வாறு நிலைத்திருக்கச் செய்யவேண்டுமெனில், சீஷர்கள் செய்யவேண்டிய சில காரியங்கள் உண்டு. அவை:

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; (கோவை பெரியன்ஸ்: நீங்கள் ஓடாவிட்டாலும் தேவன் உங்களை ஓடவைத்து விடுவார்)

இது எனக்கு நடக்குமானால் அது தேவனின் சித்தமே!! ஏனென்றால் அதே அப்போஸ்தலர்களிடம் தான்,

யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

உபத்திரவம் இருக்கு என்று ஏதோ தோராயமாகவோ, எதேட்சையாகவோ சொல்லவில்லை!! நடக்கும் என்பதற்காக தான் சொன்னார்!! ஆனால் உங்களை பொறுத்தவரை பவுல் பேதுரு போன்றோர் தங்களின் செயல்களினால் தான் உபத்திரவங்களை சம்பாதித்திருப்பார்கள் என்பது தான்!! (சகோ அன்பு: உபத்திரவம் நியமிக்கப்பட்டிருந்தாலும் என் கிரியைகளினால் அதை மாற்றுவேன்)

26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; (கோவை பெரியன்ஸ்: நீங்கள் பயப்பட நினைத்தாலும் பயப்படமாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் பயப்படக்கூடாது எனும் தேவசித்தத்தை மீறி உங்களால் பயப்படமுடியாது)

இது அப்போஸ்தலர்களுக்கு நடந்தது, எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் நடக்கிறது!! ஏதோ கொள்ளை அடித்தோ கொலை செய்தோ நான் பந்தாவாக சுற்றிவருகிறேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் அன்பு சகோதரரே!! அவர்களுக்கு பயப்படாதிருங்கள் என்று சொன்னபடி,

லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

அப்போஸ்தலர் 18:9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;

அப்போஸ்தலர் 27:24 பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.

I பேதுரு 3:14 நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,

ஆனால் சகோ அன்பு சொல்லுவது: என் கிரியை நிமித்தமே நான் பயப்படுவதும், பயப்படாமல் இருப்பதும்!! தேவனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை!! ஒரு வேளை இது தேவனுக்கு தெரியலாம் தெரியாமல் இருக்கலாம், ஆனாலும் நான் நினைத்தால் பயந்துக்கொள்வேன் அல்லது பயப்படாமல் இருப்பேன்!!

32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். (கோவை பெரியன்ஸ்: நீங்கள் இயேசுவை அறிக்கை பண்ணுகிறீர்களா? அப்படியானால் அதினிமித்தம் மேன்மை பாராட்டாதிருங்கள். ஏனெனில் தேவன்தான் நீங்கள் இயேசுவை அறிக்கை பண்ணும்படி செய்கிறார்)

நான் இயேசுவின் நாமத்தை அவரின்சித்தத்தின்படி அறிக்கை செய்கிறேன் என்று சொல்லுவேன்!! தேவனை அறியசெய்திருப்பதினால் மேன்மை பாராட்டுவேன்!! இதை செய்ய கூடாது என்று வசனம் ஒன்றும் இல்லை!! தேவனின் அறிவு இருப்பதற்காக மேன்மை பாராட்டுவதும் தேவனின் சித்தமே!! போதுமா!! (ஆனால் சகோ அன்பு சொல்லுகிறார்: என் சொந்த முயற்சியிலும், என் கிரியையிலும் நான் தேவனை அறிந்துக்கொண்டேன்!! இதற்கும் தேவனுக்கும் சம்பந்தமே கிடையாது!! அவருக்கே தெரியாது நான் அவரை தெரிந்துக்கொள்வேன் என்று!!)

39 என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். (கோவை பெரியன்ஸ்: இயேசுவினிமித்தம் நீங்கள் ஜீவனை இழந்தீர்களல்லவா? அதினிமித்தம் மேன்மை பாராட்டாதிருங்கள். ஏனெனில் நீங்களாக உங்கள் ஜீவனை இழக்கவில்லை; தேவன் தான் உங்கள் ஜீவனை இழக்கச் செய்தார். இப்படியெல்லாம் செய்து நீங்கள் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி தேவன் செய்துவிடுவார்.)

இந்த மேன்மைப்பாராட்டுதல் என்கிற கருத்து ஏன் என் மேல் தினிக்கப்படுகிறது என்பதை விளக்குவீர்களென்றால் நல்லதாக இருக்கும்!! நீங்கள் அடைப்புகுறிக்குள் போட்டிருப்பது உண்மையே!! ஆனால் சகோ அன்பு: நான் என் ஜீவனை இழப்பதும் இழக்காமல் இருப்பதும் என் கிரியையில் தான் இருக்கிறது!! நான் விரும்பினால் அதை இழப்பேன், இஷ்ட்டம் இல்லை என்றால் அதை இழக்க மாட்டேன்) பாவம் சவுலாக இருந்து பவுலாக மாறியவருக்கு இது தெரியாமல் போய் விட்டது!! அவன் கிறிஸ்தவர்களை கொலை செய்ய புறப்பட, அவனை கிறிஸ்தவனாக மாற்றியது யார்? பவுலின் சொந்த முயற்சியிலேயே அவன் கிறிஸ்தவனாக மாறிவிட்டானா!!

அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

சகோ அன்பு அவர்களே, அவர் தான் தெரிந்துக்கொள்ளவேண்டும்!! இதை நான் இல்லை வசனம் தான் சொல்லுகிறது, உங்கள் வேதத்திலும் இதே வசனம் தான் இருக்கும்!!

தேவன் எவர்களை நிலைத்திருக்கச் செய்ய சித்தம் கொள்கிறாரோ அவர்களை மேற்கூறியபடி செய்ய வைத்து, அவர்களை நிலைத்திருக்கச் செய்துவிடுவார்.

ரொம்ப நல்லது, ஆனால் 33, 39 வசனங்களின்படி செய்வோரின் முடிவு என்ன?

33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். (கோவை பெரியன்ஸ்: அன்பர்களே, இயேசுவை மறுதலித்ததற்காக நீங்கள் கொஞ்சமும் வருத்தப்படவேண்டாம். ஏனெனில் நீங்களாக இயேசுவை மறுதலிக்கவில்லை; தேவன் தான் உங்களை மறுதலிக்க வைத்தவர். தேவன் அதற்கென்றே உங்களை நியமித்து வைத்துள்ளார். இயேசுவை நீங்கள் மறுதலித்ததால் உங்களுக்கு ஒரு ஆபத்தும் கிடையாது. ஒரேயொரு சின்ன பாதிப்பு மட்டும் நேரிடும். அதாவது பிதாவுக்கு முன்பாக இயேசு உங்களை மறுதலிப்பார். ஆனாலும் இதெல்லாம் தேவனின் நியமனம்தான்; எனவே இதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. உங்களுக்குத்தான் ஒரு விஷயத்தில் உத்தரவாதம் உள்ளதே. அதாவது 1 கொரி. 15:22-ன்படி நீங்கள்தான் உயிர்த்தெழுந்து விடுவீர்களே! பின் ஏன் வருத்தப்படுகிறீர்கள்? எனவே முடிவுபரியந்தம் நீங்கள் நிலைத்திராதபடிக்கு தேவன் செய்தாலும், முடிவில் அவர் உங்கள் இரட்சித்துவிடுவார்)

அவர் அப்படி நியமிப்பதில் உங்களுக்கு ஏன் கஷ்ட்டமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்று தெரியவில்லையே!! நீங்கள் உங்கள் கிரியையே நம்பியிருக்க செய்திருப்பதும் அவரின் சித்தம் என்று தான் சொல்லுவேன்!! உங்கள் கிரியை மூலமாகவே நடக்க போவது அனைத்தும் அறிந்து நடக்கலாமே!! நாளை என்ன என்பதே தெரியாத அளவிற்கு செய்திருப்பவரும் தேவனே! ஆனால் நீங்கள் சொல்லுவது ஏதோ ஜோஷியக்காரன் சொல்லுவது போல் இருகிறது!!

1 கொரி 15:22ன் படி எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் தான், ஆனால் ஒரு சிறுமந்தையே பரலோகம் போகும்!! மற்றவர்கள், அதான் பிதாவிற்கு முன் மறுதலிக்கப்பட்டவர்கள் உட்பட, தங்களை தீர்க்கதரிசிகள், கைகளை வைத்து சுகம் கொடுப்பவர்கள், அற்புதங்கள் செய்பவர்கள், போன்றோரையும் சேர்த்து தான் அவர் இந்த பூமியில் உயிர்த்தெழசெய்வார், அவர்களுக்கு சத்தியத்தை அறிந்துக்கொள்ள தான்!! நீங்கள் நினைக்கும் 2ம் மரணத்திற்கு அல்ல, தேவன் நியமித்திருக்கும் இந்த பூமிக்கு!!

நான் வருத்தப்பட்டதாக ஒரு பதிவும் இருக்காது!! நீங்கள் தான் வேற்று மதத்தார் போல் கிரியையின் சுவிசேஷத்தை பிரசிங்கிக்க தீவிரம் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்!! ஆனால் நீங்கள் அப்படி செய்வதும் தேவனின் சித்தமே, ஏதோ நீங்களாக முன்வந்து அப்படி செய்து வெற்றி பெறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்!!

39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; (கோவை பெரியன்ஸ்: அன்பர்களே, நீங்கள் உங்கள் ஜீவனை காத்துக்கொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. தேவ நியமனத்தின்படிதான் நீங்கள் உங்கள் ஜீவனைக் காத்துக்கொண்டீர்கள். இதன் காரணமாக நீங்கள் உங்கள் ஜீவனை இழந்து போவீர்கள் என்பது மெய்தான். ஆனாலும் 1 கொரி. 15:22-ன்படி நீங்களும் நிச்சயமாக உயிர்த்தெழுந்து விடுவீர்கள். எனவே சற்றும் வருத்தம் வேண்டாம்.)

உங்களின் கிரியையின் விசுவாசம் தெளிவாக புரிந்துக்கொள்ள தான் தேவன் இந்த விவாதத்தை அனுமதித்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்!! 1 கொரி 15:22ன் படி எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்று நான் தெளிவாக தான் இருக்கிறேன்!! ஆனால் நீங்கள் தான் ஒரு தடவை எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றும், இன்னோரு தடவை, கிரியை செய்யாதவர்கள் நேரடியாக 2ம் மரணத்திற்கும் என்று வெளி 21:5ஐ காண்பித்து குழம்பியும் குழப்ப்க்கொண்டும் இருக்கிறீகள்!!

இப்பதிவை படித்து யாராவது குழம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. குழம்பினவர்கள் தெளிவு பெறவேண்டுமெனில் கோவை பெரியன்ஸ் தளத்தை அணுகவும்.

இப்பவும் உங்களின் இமாலய கிரியைகளின் மேல் தான் உங்கள் நம்பிக்கை இருக்கிறது என்று உங்களின் இந்த பதிவும் காண்பிக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மறுபடியும் எனக்கு அந்த சைக்கிள் ஜோக்தான் ஞாபகம் வருகிறது.

 

புதிய வாசகர்களுக்காக் இதோ மீண்டும்.

 

பைத்தியக்கார மருத்துவமனை ஒன்றில் ஏராளம் பைத்தியங்களுக்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்ததாம். நீண்ட கால ட்ரீட்மெண்டுக்குப் பிறகு எல்லா பைத்தியங்களையும் அழைத்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதை சோதித்தார்களாம். அதாவது எல்லாரையும் நிற்கச் சொல்லி "இப்ப நீங்களெல்லாம் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் எங்கே வேகமாக ஓட்டுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னவுடனேயே எல்லா பைத்தியங்களும் இல்லாத சைகிளில் ஏறி மூச்சிறைக்க பெடல் செய்வதுபோல, வேக வேகமாக ஓட்டுவதுபோல பாவனை செய்தார்களாம். டாக்டர்களுக்கு ஒரே அதிர்ச்சி. இத்தனை கால ட்ரீட்மெண்டில் ஒரு முன்னேற்றமும் இல்லையே என வருந்தினார்களாம். ஆனால் ஒரே ஒரு பேஷண்ட் மட்டும் 'சைக்கிள்' ஓட்டாமல் நின்று கொண்டிருந்தானாம். அப்பாடா ஒரு ஆளாவது மாறியிருக்கிறானே என்று சந்தோஷப்பட்டு அவனிடம் போய் "ஏன் நீங்கள் சைக்கிள் ஓட்டவில்லையா?" என்றனர். அதற்கு அவன் பதில் அவர்களை உறையவைத்தது.

 

 அவன் சொன்னது " சைக்கிள் பெடல் பண்ண நானென்ன பைத்தியமா? நான் தான் இறக்கத்தில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறேனே!"



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்த நாம் அதன் பின்னர் நம் ஜீவனை இழப்பதும் இரட்சிப்பதும் நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. நம் கிரியையைச் சார்ந்து நாம் பெறுகிற இந்த இரட்சிப்புதான் நம் இரட்சிப்பின் 2-ம் பகுதியாகும்.//

வேதம் ஒரே ஒரு மரணத்தையும் ஒரே ஒரு உயிர்த்தெழுதலையும்(இரட்சிப்பு) குறித்துதான் போதிக்கிறது. பாவத்தின் சம்பளம் முதல் மரணம்; அந்தப்பாவத்தை கிறிஸ்து ஏற்றுக்கொண்டு அவர் பலியானதால் உயிர்த்தெழுதல்; அந்த உயிர்தெழுதலுக்குப் பின்னர் சாகாமல் இருப்பதற்கு இப்போதே நம் கிரியைகளினால் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிர்த்தெழுந்தவுடனேயே மீண்டும் செத்துவிடுவோம். என்ற விசுவாசத்தைப் போதித்துவரும் அன்பு அவர்களே. முரணாக, குழப்பமாக நாங்கள் பதிக்கிறோம் என்று சொல்லும் நீங்கள் "உங்கள் விசுவாசத்தை குழப்பமில்லாமல் வசன ஆதாரங்களோடு பதித்தால் நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை தளத்துக்கு வருகை புரிபவர்கள் புரிந்து கொள்வார்கள். மேற்கண்ட விசுவாசத்தில்தான்  நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அது உண்மையில் வருந்தத்தக்கதே.,

 

செய்வீர்களா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//தேவகிருபையைக் குறித்த அவசியத்தை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், கோவை பெரியன்ஸ் சகோதரர்களின் “கிரியை தேவையில்லை” எனும் கருத்தை எதிர்த்து விவாதிக்க வேண்டியதிருந்ததால், கிரியை குறித்த வேதவசனங்களை அதிகமாக எடுத்துப்போட்டு அதற்கு ஆதரவாக விவாதிக்க வேண்டியதாயிருந்தது.//

மீண்டும் மீண்டும் நாங்கள் கிரியை தேவையில்லை என்று போதிப்பதாக லூசுத்தனமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உம்மண்டையில் நாங்கள் சொல்வது உண்மையிலேயே ஏறவில்லையா அல்லது நடிக்கிறீகளா என்று தெரியவில்லை.  கிரியைகள் மட்டுமெ இரட்சிப்புக்கு ஒருக்காலும் போதாது என்றுதான் பதிக்கிறோம் விசுவாசிக்கிறோம். ஒருவன் கிரியை செய்வதும் செய்யாமல் இருப்பதும் தேவ சித்தம் என்கிறோம்.

இரக்கம் செய்யக்கூடாது, நன்மை செய்யக்கூடாது என்று ஒருபோதும் நாங்கள் பதித்ததில்லை. பதிவுகளை கூர்ந்து படித்து பதில் தரவும்.

மீண்டும் நாங்கள் கிரியை தேவையில்லை, யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தாராளமாக பாவம் செய்யலாம் என்றெல்லாம் போதிப்பதாக பதித்தீர்கள் என்றால் வன்மையாகக் கண்டிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//மீண்டும் நாங்கள் கிரியை தேவையில்லை, யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தாராளமாக பாவம் செய்யலாம் என்றெல்லாம் போதிப்பதாக பதித்தீர்கள் என்றால் வன்மையாகக் கண்டிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

ரொம்ப டென்ஷன் ஆகாதீர்கள் சோல்சொல்யூஷன் அவர்களே!

இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை, எனது பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்; அப்பதில், உங்களைக் குறித்து இதுவரை நான் பதித்த பதிப்புகளுக்கு ஒத்ததாக இல்லையெனில் எனது தவறுக்காக நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.

1. நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு கிரியை தேவையா, தேவையில்லையா?

2. எப்பேற்பட்ட கொடிய பாவம் செய்தவனாக இருந்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். இக்கூற்று உண்மையா, இல்லையா?

3. தாராளமாக துணிகரமாக ஒருவன் பாவம் செய்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும். இக்கூற்று உண்மையா, இல்லையா?

நறுக்குத் தெரித்தாற்போல் நேரடியாக பதில் சொல்லவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//1. நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு கிரியை தேவையா, தேவையில்லையா?//

சகோ அன்பு அவர்களே, முதலில் நித்திய ஜீவன் என்றால் என்னவென்று பதிவிடுங்கள்!! இரட்சிபு என்றால் என்னவென்று பதிவிடுங்கள், கண்டிப்பாக உங்கள் கேள்விக்கு பதில் பதிவு செய்கிறோம்!!

//2. எப்பேற்பட்ட கொடிய பாவம் செய்தவனாக இருந்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். இக்கூற்று உண்மையா, இல்லையா?//

உண்மையே!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.


அவர் சித்தம் நிறைவேறும் என்பது தான் வேதம் சொல்லுகிறது!! நீங்கள் எப்படி புரிந்துக்கொண்டாலும் சரி!!


//3. தாராளமாக துணிகரமாக ஒருவன் பாவம் செய்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும். இக்கூற்று உண்மையா, இல்லையா?//

மேலே சொல்லப்பட்ட பதிலே இதற்கும்!! ஆனால் உங்களுக்கு இரட்சிப்பு, நித்திய ஜீவன், சாவாமை என்பதற்கு அர்த்தம் தெரிந்தால் தான் சொல்லுவதை புரிந்துக்கொள்ள பிரயாசிக்க முடியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//சகோ அன்பு அவர்களே, முதலில் நித்திய ஜீவன் என்றால் என்னவென்று பதிவிடுங்கள்!!//

லூக்கா 18:18-ல் நித்திய ஜீவனை சுதந்தரிக்க நான் என்ன செய்யவேண்டும் என இயேசுவிடம் ஒருவன் கேட்டானல்லவா, அதே நித்திய ஜீவனை சுதந்தரிப்பதைக் குறித்துதான் நானும் கேட்கிறேன்.




-- Edited by anbu57 on Saturday 30th of July 2011 06:04:45 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

மரணத்துக்கு எதிர்ப்பதம் நித்திய ஜீவன் மட்டுமே.

பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிறிஸ்து இயேசுவினால் உண்டான ஒரே பலியினால் கிடைக்கும் பாவமன்னிப்புக்குள் எல்லா பாவங்களும் அடங்கும். இதில் சிறிய பாவம், பெரிய பாவம் என்றில்லை. பாவமன்னிப்பின் பலனே உயிர்த்தெழுதல். ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவனுக்கு உயிர்தெழ தகுதியில்லை. மேலும் தீமை நிறைந்த, பாவஉலகில் நிர்ப்பந்தமான நிலையில் மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையாக மரணத்தைக் கொடுத்துவிட்டு, பின்பு உயிரோடு அவனை எழுப்பி மீண்டும் மரிக்கச்செய்வது தேவனை இழிவானவராக, ஒரு முட்டாளாக சித்தரிக்கும் ஒரு செயலாகும்.

முதலில் இரட்சிப்பு, நித்திய ஜீவன், பாவம் இவைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுங்கள்....

2. எப்பேற்பட்ட கொடிய பாவம் செய்தவனாக இருந்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். இக்கூற்று உண்மையா, இல்லையா?

எப்பேர்பட்ட கொடிய பாவத்தையும் கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிக்குமா இல்லையா? ஆம் எனும் பட்சம் அவனுக்கு நித்திய ஜீவன் நிச்சயம்.

3. தாராளமாக துணிகரமாக ஒருவன் பாவம் செய்தாலும் அவனுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும். இக்கூற்று உண்மையா, இல்லையா?

என்ன தாராளமாக துணிகரமான பாவம், சாதாரண பாவம்? ஹிட்லருக்கே நித்திய ஜீவன் உண்டு. போதுமா? 

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார் என்றால் சாதாபாவம், ஸ்பெஷல் பாவம், சூப்பர் ஸ்பெஷல் பாவம் எல்லாம்தான். சர்வலோகத்தின் பாவத்தி நிவிர்த்தி செய்து சிலுவையில் வெற்றிச் சிறந்தார். மரணமே உன் கூரெங்கே என்றுதான் வசனம் சொல்கிறது. (முதல்)மரணமே உன் கூர் எங்கே என்று உங்கள் வேதாகமத்தில் இருக்கிறதோ என்னவோ? 

II தீமோத்தேயு 1:10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//முதலில் இரட்சிப்பு, நித்திய ஜீவன், பாவம் இவைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுங்கள்....//

எதற்கு மீண்டும் மீண்டும் இவ்வாறு கேட்கிறீர்கள்? நீங்கள் எத்தனை முறை கேட்டாலும், “நித்திய ஜீவன்” என நான் சொல்வது, லூக்கா 18:18-ல் எந்த “நித்திய ஜீவனைக்” குறித்து ஒருவன் இயேசுவிடம் கேட்டானோ, எந்த “நித்திய ஜீவனைக்” குறித்து இயேசு பதில் சொன்னாரோ அதே “நித்திய ஜீவனை”த்தான் என்பதே எனது பதில்.

லூக்கா 18:18-ல் கூறப்பட்டுள்ள “நித்திய ஜீவனை” நீங்கள் எவ்விதமாகப் புரிந்துகொண்டுள்ளீர்களோ, அதன் அடிப்படையில் எனது கேள்விக்குப் பதில் சொன்னால் போதும்.

நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவை அல்லது நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவையில்லை எனும் 2 பதில்களில் ஒரு பதிலைச் சொன்னால் போதும். அதற்கு மேல் வேறு எந்த விளக்கமோ வசனமோ வேண்டாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

//மறுபடியும் எனக்கு அந்த சைக்கிள் ஜோக்தான் ஞாபகம் வருகிறது.

புதிய வாசகர்களுக்காக் இதோ மீண்டும்.

பைத்தியக்கார மருத்துவமனை ஒன்றில் ஏராளம் பைத்தியங்களுக்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்ததாம். நீண்ட கால ட்ரீட்மெண்டுக்குப் பிறகு எல்லா பைத்தியங்களையும் அழைத்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதை சோதித்தார்களாம். அதாவது எல்லாரையும் நிற்கச் சொல்லி "இப்ப நீங்களெல்லாம் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் எங்கே வேகமாக ஓட்டுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னவுடனேயே எல்லா பைத்தியங்களும் இல்லாத சைகிளில் ஏறி மூச்சிறைக்க பெடல் செய்வதுபோல, வேக வேகமாக ஓட்டுவதுபோல பாவனை செய்தார்களாம். டாக்டர்களுக்கு ஒரே அதிர்ச்சி. இத்தனை கால ட்ரீட்மெண்டில் ஒரு முன்னேற்றமும் இல்லையே என வருந்தினார்களாம். ஆனால் ஒரே ஒரு பேஷண்ட் மட்டும் 'சைக்கிள்' ஓட்டாமல் நின்று கொண்டிருந்தானாம். அப்பாடா ஒரு ஆளாவது மாறியிருக்கிறானே என்று சந்தோஷப்பட்டு அவனிடம் போய் "ஏன் நீங்கள் சைக்கிள் ஓட்டவில்லையா?" என்றனர். அதற்கு அவன் பதில் அவர்களை உறையவைத்தது.

அவன் சொன்னது " சைக்கிள் பெடல் பண்ண நானென்ன பைத்தியமா? நான் தான் இறக்கத்தில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறேனே!"//

கோவை பெரியன்ஸ் சகோதரர்களை பலரும், பல முறை “காமெடியன்ஸ்” எனச் சொன்னபோது அதை ஒத்துக் கொள்ள நான் மனதில்லாதிருந்தேன். தற்போது ஒத்துக்கொள்கிறேன், “கோவை பெரியன்ஸ் சகோதர்களில் ஒருவர் காமெடியன் தான்என.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

//எப்பேர்பட்ட கொடிய பாவத்தையும் கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிக்குமா இல்லையா? ஆம் எனும் பட்சம் அவனுக்கு நித்திய ஜீவன் நிச்சயம்.//

உங்கள் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ஆம் என்கிறீர்களா, இல்லை என்கிறீர்களா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//லூக்கா 18:18-ல் நித்திய ஜீவனை சுதந்தரிக்க நான் என்ன செய்யவேண்டும் என இயேசுவிடம் ஒருவன் கேட்டானல்லவா, அதே நித்திய ஜீவனை சுதந்தரிப்பதைக் குறித்துதான் நானும் கேட்கிறேன்.//

இந்த நித்திய ஜீவன் என்றால் என்ன என்று தானே கேட்க்கிறேன்!! அந்த வாலிபன் கேட்ட நித்தியஜீவனுக்கு தான் அர்த்தம் என்னவென்று கேட்க்கிறேன்!!

//லூக்கா 18:18-ல் கூறப்பட்டுள்ள “நித்திய ஜீவனை” நீங்கள் எவ்விதமாகப் புரிந்துகொண்டுள்ளீர்களோ, அதன் அடிப்படையில் எனது கேள்விக்குப் பதில் சொன்னால் போதும்.//

உங்கள் புரிந்துக்கொள்ளுதலை தான் கேட்க்கிறேன்!! நான் எதை புரிந்திருக்கிறேன் என்பதை நிச்சயமாக விளக்குவேன்!! வாலிபன் சொன்ன நித்தியஜீவன் எல்லாம் பதில் கிடையாது!!

உங்கள் பெயர் என்னவென்று கேட்டால் பெயரை தான் சொல்ல வேண்டும்!! அதான் சான்றுகளில் இருக்கிறதே அது தான் என் பெயர் என்று சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் பதில்!!

சரி லூக்கா 18:18ல் உள்ள நித்தியஜீவனுக்கு என்ன அர்த்தம்!!??

//நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவை அல்லது நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவையில்லை எனும் 2 பதில்களில் ஒரு பதிலைச் சொன்னால் போதும். அதற்கு மேல் வேறு எந்த விளக்கமோ வசனமோ வேண்டாம்.//

நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை மட்டுமே போதுமென்றால் ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவோ, ஏன் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது கூட கிடையாது!! நித்திய ஜீவன் என்னவென்று முதலில் சொல்லுங்கள், உங்களுக்கு நான் பதில் தருகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//இந்த நித்திய ஜீவன் என்றால் என்ன என்று தானே கேட்கிறேன்!! அந்த வாலிபன் கேட்ட நித்தியஜீவனுக்கு தான் அர்த்தம் என்னவென்று கேட்கிறேன்!!//

அன்பான சகோதரரே! நித்திய ஜீவன் என்றால் என்னவென நான் உங்களுக்குச் சொல்லவும் வேண்டாம், நீங்கள் அதைப் புரியவும் வேண்டாம்.

//உங்கள் புரிந்துகொள்ளுதலை தான் கேட்கிறேன்!! நான் எதை புரிந்திருக்கிறேன் என்பதை நிச்சயமாக விளக்குவேன்!! வாலிபன் சொன்ன நித்தியஜீவன் எல்லாம் பதில் கிடையாது!!//

எனது புரிந்து கொள்தலை நீங்களும் அறியவேண்டாம்; உங்கள் புரிந்துகொள்தலை நானும் அறியவேண்டாம்.

//நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை மட்டுமே போதுமென்றால் ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவோ, ஏன் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது கூட கிடையாது!! நித்திய ஜீவன் என்னவென்று முதலில் சொல்லுங்கள், உங்களுக்கு நான் பதில் தருகிறேன்!!//

நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை மட்டுமே போதுமா இல்லையா என்பது தற்போதைய கேள்வி அல்ல. நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிரியை தேவையா, இல்லையா என்பதுதான் கேள்வி. அதைக்குறித்துதான் என்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. எனது கேள்விக்கு நறுக்குத் தெரித்தாற்போல் பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள், முடியாவிட்டால் உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பல்ல.

வேதாகமம் சொல்கிற நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிரியை தேவையா இல்லையா என்பதற்குப் பதில் சொன்னால் போதும். வேதாகமம் சொல்கிற நித்திய ஜீவனுக்கு உதாரணமாக லூக்கா 18:18 வசனத்தையும் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன விளக்கத்தைச் சொல்வது? பதில் சொல்ல விருப்பப்பட்டால் சொல்லுங்கள். இல்லாவிடில் என்மேல் என்ன குற்றச்சாட்டையும் கூறிக்கொள்ளுங்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தப்போவதில்லை.

உங்கள் குற்றச்சாட்டு அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் நீங்கள் இப்படியிப்படி போதிப்பதாக எனது எந்தப் பதிவிலும் நான் கூறவில்லை. நீங்கள்தான் போதனையே வேண்டாம் எனச் சொல்கிறவராச்சே!

உங்கள் கருத்தைக் குறித்துதான் எனது பதிவுகள் முழுவதிலும் நான் விமர்சித்துள்ளேன்/விவாதித்துள்ளேன். கருத்து வேறு, போதனை வேறு. ஆனால் சோல்சொல்யூஷனோ என்மீது இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

//மீண்டும் மீண்டும் நாங்கள் கிரியை தேவையில்லை என்று போதிப்பதாக லூசுத்தனமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.//

//மீண்டும் நாங்கள் கிரியை தேவையில்லை, யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தாராளமாக பாவம் செய்யலாம் என்றெல்லாம் போதிப்பதாக பதித்தீர்கள் என்றால் வன்மையாகக் கண்டிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

நீங்கள் இப்படி போதிப்பதாகவோ, அப்படி போதிப்பதாகவோ நான் ஒருபோதும் பதிக்கவில்லை. உங்கள் கருத்து/கொள்கை/கோட்பாட்டை எதிர்த்துதான் நான் விமர்சித்தும் விவாதித்துமுள்ளேனேயொழிய உங்கள் போதனையை எதிர்த்து அல்ல. நீங்கள் தான் இதுவரை எந்தப் போதனையும் தரவில்லையே! இல்லாத போதனைக்கு எதிராக நான் என்னத்தைச் சொல்லமுடியும்?

ஏதோ ன்மையாகக் கண்டிப்போம் என்றெல்லாம் சோல்சொல்யூஷன் மிரட்டுகிறார். இதுவரை ஏதோ மென்மையாகக் கண்டித்ததைப் போல.

தெரியாமல்தான் கேட்கிறேன், “லூசுத்தனமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்” எனச் சொல்வதெல்லாம் உங்கள் அகராதியில் மென்மையான கண்டிப்போ?

என்ன மென்மையோ, என்ன வன்மையோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் நீங்கள் எவ்வளவுதான் வன்மையாகக் கண்டித்தாலும் சரி, உங்கள் வேதாகமக் கருத்து/கொள்கை/கோட்பாடு பற்றிய எனது எந்தக் கருத்தையும் நான் திரும்பப்பெறப்போவதில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கோவை பெரியன்ஸ் சகோதரர்களை பலரும், பல முறை “காமெடியன்ஸ்” எனச் சொன்னபோது அதை ஒத்துக் கொள்ள நான் மனதில்லாதிருந்தேன். தற்போது ஒத்துக்கொள்கிறேன், “கோவை பெரியன்ஸ் சகோதர்களில் ஒருவர் காமெடியன் தான்” என.//

பரவாயில்லை, புரியாதவர்களுக்கு நாங்கள் (சகோதரர்களின் புரிந்துக்கொள்ளுதல் ஒன்று தான்) காமெடியன்ஸாகவே இருந்துவிட்டு போகிறோம்!! இதுவும் உங்களின் கிரியை தானே!! இதை எல்லாம் செய்துவிட்டு தானே நீங்கள் நித்திய ஜீவனை போதிக்கிறீர்கள்!! பரவாயில்லை, உங்களின் இப்படி பட்ட கிரியைகள் நித்திய ஜீவனை தேடித்தரும்!! இது மட்டுமல்ல, இப்படியே பழைய பதிவுகளெல்லாம் தேடி பிடித்து, எப்போ உங்களை விமர்சித்து எழுதினோம் என்றெல்லாம் தேடி பிடித்து எழுதுவதும் ஒரு கிரியை தான்!! அதாவது மன்னிக்க முடியவில்லை என்கிற கிரியை, மறக்க முடியவில்லை என்கிற கிரியை!!

இயேசு கிறிஸ்துவின் ஈடுபலி எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க வல்லமையில்லாதது என்று எழுத முடியுமா என்று நான் சுமார் 10க்கும் மேற்பட்ட தடவை கேட்டு விட்டேன்!! இது வரை பதில் இல்லை!! ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் தராததால் உங்களின் பதிவுகள் இதோ,

//அன்பான சகோதரரே! நித்திய ஜீவன் என்றால் என்னவென நான் உங்களுக்குச் சொல்லவும் வேண்டாம், நீங்கள் அதைப் புரியவும் வேண்டாம்.//

//எனது புரிந்து கொள்தலை நீங்களும் அறியவேண்டாம்; உங்கள் புரிந்துகொள்தலை நானும் அறியவேண்டாம்.//

பிறகு எதற்கு விவாதம்!! நாங்கள் எதையோ எழுதிவிட்டு போகிறோம் என்று விட வேண்டியது தானே!! அதை உங்கள் தளத்தில் ஏன் விமர்சிக்கனும்!! ஓஹோ இதுவும் கிரியை தானோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இதை அறியாமல் ஒருவரும் நித்திய ஜீவனை அடையமுடியாது. ஆனால் 

உயிர்த்தெழுந்த அனைவரும் ராஜ்ஜியத்தில்  

யோவேல் 2:28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; 

என்ற வசனம் நிறைவேறுமாகையால்

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

அனைவரும் நீதியைக் கற்றுகொண்டு நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள்...

உம்முடைய எல்லாக் கேள்விகளூக்கும் பதில் இதில் அடங்கியுள்ளது.

ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாதது உங்கள் இஷ்டம்.

தேவனையும் கிறிஸ்துவையும் அறியாமல் நித்தியஜீவன் இல்லை. உமது கிரியைகளைக்கொண்டு குப்பையில் போடும். "எங்களூடைய‌ நீதியெல்லாம் அழுக்கும் கந்தையுமாயிருக்கிறது" என்பதற்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம்.

காமெடியன்கள் என்று எங்களை அங்கீகரித்ததற்கு நன்றி! உலகம் அப்படித்தான் சொல்லும் என்று அறிந்திருக்கிறோம். 

பாபிலோனியக் பயித்தியக்காரக் கூட்டத்தின் தளங்களில் "நித்தியஜீவன்" என்ற தளம் "சைக்கிள் ஓட்டாமல்" வித்தியாசமாக் இருக்கிறதே என்று எண்ணினேன். அது "இரக்கத்தில்" ஓடும் சைக்கிள் என்று இப்போது புரிந்துகொண்டேன். நல்லா ஓட்டுங்க சகோதரரே. நூதன போதனை என்ன என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமல்லவா அதை உங்கள் மூலம் தேவன் நிறைவேற்றிவருகிறார். அவ்வளவே! நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. "இரக்கத்தில்" சைக்கிள் ஓட்ட தேவன் உங்களை முன்குறித்திருக்கிறார்.

அந்தப் பைத்தியமாவது இறக்கத்தில் சைக்கிள் ஓட்டியது; ஒரு சில பைத்தியங்கள் 'இரக்கத்தில்' ஓட்டிக்கொண்டிருக்கிறது. பாவம். ராஜ்ஜியத்தில் இந்த மூளைக்கோளாறுகளெல்லாம் சரியாகி நிதானமாக இருப்பார்கள்.

கிறிஸ்துவின் ஈடுபலியையும், அவரால் உண்டான இரட்சிப்பையும் கொச்சை படுத்தினால் ராஜ்ஜியத்தில் அனேக அடிகள் விழும்....

உங்களை ஒரு பொருட்டாக எண்ணி இதுநாள்வரை பதில் தந்தது குறித்து வருந்தினாலும் இந்த விவாதங்களின் மூலம் எம் தளத்துக்கு வரும் அநேகருக்கு இப்படியும் சில கேரக்டர்களை தேவன் அனுமதித்திருக்கிறார் என்ற உண்மை புரிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததால் உமது பங்களிப்புக்கு என‌து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேவன் தாமே அவரது சித்தப்படி உங்களை நடத்துவாராக‌...!





-- Edited by soulsolution on Sunday 31st of July 2011 12:38:05 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//இயேசு கிறிஸ்துவின் ஈடுபலி எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க வல்லமையில்லாதது என்று எழுத முடியுமா என்று நான் சுமார் 10க்கும் மேற்பட்ட தடவை கேட்டு விட்டேன்!! இது வரை பதில் இல்லை!!//

இக்கேள்விக்கு தனியே பதில் சொன்னால்தான் புரியுமா சகோதரரே! இயேசுகிறிஸ்துவின் ஈடுபலியால் முதலாம் மரணத்திலிருந்து எல்லோரும் இரட்சிக்கப்பட்டு உயிர்த்தெழுவார்கள் என்றும், ஒருவன் 2-ம் மரணத்திற்கு தப்பிக்க வேண்டுமெனில் அவனிடம் கிரியை கட்டாயம் வேண்டுமென்றும் எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது.

இதற்கு மேல் வேறென்ன சொல்லவேண்டும்? என் கூற்றுக்கு ஆதாரமான வசனத்தையும் காட்டியாகிவிட்டது.

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

இயேசுவே சொல்லிவிட்டார், ஒருவன் அவர் நிமித்தமாக தன் ஜீவனை இழக்க முன்வந்தால்தான் அவன் தன் ஜீவனை இரட்சித்துக்கொள்ளமுடியும் என்று. இதற்குமேல் நான் தனியாக என்ன சொல்ல?

இயேசு சொன்ன மற்றொரு வசனத்தையும் கவனியுங்கள்.

லூக்கா 9:25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

ஒருவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தவும் முடியும், அதை ஆதாயப்படுத்தவும் முடியவும் என்பது இன்னமும் உங்களுக்குப் புரியவில்லையா?

இயேசுவின் ஈடுபலி ஒருவனை முதலாம் மரணத்திலிருந்துதான் இரட்சிக்கும்; 2-ம் மரணத்திலிருந்து எவரையுமே அது இரட்சிக்காது. அவனவன் தன் ஜீவனை ஆதாயப்படுத்த முன்வந்தால்தான் அவன் அதை இரட்சிக்கமுடியும். இப்படியாக நான் சொல்லவில்லை; மேற்கூறிய வசனங்களில் இயேசுதான் சொல்லுகிறார்.






__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இன்னும் உங்களுடைய சுயநீதியில்தான் இருக்கிறீர்கள் போலுள்ளது. கீழ்க்கண்ட வசனத்துக்கு மட்டும் பதில் தெரிந்தால் போதும், இதில் முதல் மரணம், இரண்டாம் மரணம் ஒன்றும் இல்லை. தேவனுடைய கிருபைவரம்தான் கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவனேயன்றி கிரியையினால் உண்டான நித்தியஜீவன் அல்ல.

பாவத்தின் சம்பளம் மரணம்தான் மரணமடையும் "வாய்ப்பு" அல்ல. அதேபோல தேவனுடைய கிருபைவரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். நித்தியஜீவன் பெறும் 'வாய்ப்பு' அல்ல‌.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

யோவான்3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

உயிர்த்தெழுந்து எல்லாரும் யார் தேவன் யார் கர்த்தர் என்று அறிந்து கொண்டு நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள்.

இரண்டாம் மரணதிலிருந்து இரட்சிப்பு மனிதனால்தான் முடியும் என்று நீங்கள் சொல்வது முட்டாள்தனமான வாதம் மட்டுமல்ல மஹா குழப்பமான வாதம். 

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard