kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிந்ததும் அறியாததும்...


Executive

Status: Offline
Posts: 425
Date:
அறிந்ததும் அறியாததும்...


சோல்சொல்யூஷன்:

//இவையெல்லாம் எழுத்தின்படியேதான் சீடர்கள் செய்திருப்பார்கள். நாம் என்ன வாதிடுவோம் இது சீடர்களுக்கு அந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட கட்டளை, நமகெப்படி பொருந்தும், நம்மால் எப்படி மரித்தோரை எழுப்பமுடியும் என்று சப்பை கட்டு கட்டுவோம்.//

இயேசுவின் பொதுவான உபதேசமும் உண்டு; தனிப்பட்ட மனிதருக்கான கட்டளைகளும் உண்டு. இயேசு சொன்னவற்றில் எவையெல்லாம் பொதுவான உபதேசம் எவையெல்லாம் தனிப்பட்டவர்களுக்கான கட்டளை என்பதை உங்களால் பிரித்தறியத் தெரியவில்லையெனில் உங்களோடு விவாதித்துப் பயனில்லை.

சீஷர்களிடம் ஒருமுறை இப்படிச் சொன்னார்:

லூக்கா 10:4 பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.

அதே சீஷர்களிடம் மற்றொரு சந்தர்ப்பத்தில் இப்படியும் சொன்னார்:

லூக்கா 22:36 இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? இயேசுவின் சில கட்டளைகள் முழுக்க முழுக்க தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே என்பதுதானே?

லூக்கா 10:4-ஐச் சொன்னவர், 22:36-ஐச் சொல்லாமல் இருந்திருந்தால், யாரும் பணப்பை, சாமான்பை, பாதரட்சை வைத்திருக்கக்கூடாது என்றுதான் நீங்கள் சொல்வீர்கள் போலும்.

எதையும் நுனிப்புல் மேய்வதுபோல் படித்து பொருள் கொள்ளாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் logical சிந்தனையுடன் படித்து பொருள் கொள்ளுங்கள்.

இயேசுவின் சீஷர்கள் வீடு, மனைவி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு இயேசுவின் பின்னே சென்றனர் எனக் கூறினீர்கள். இயேசுவின் இவ்வசனத்தையும் காட்டியிருந்தீர்கள்.

மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

ஆனால் பேதுருவைக் குறித்து பவுல் இப்படிச் சொல்கிறாரே!

1 கொரி. 9:5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

கேபா எனப்படுபவர் பேதுரு தான் என்பதை அறிவீர்களல்லவா? மத்தேயு 19:29-ன்படி மனைவியை விட்டுவந்த அவர், எப்படி மனைவியை கூட்டிக்கொண்டு திரிந்தார்?

உங்களைப் போன்றோருக்காகத்தான் இயேசு இப்படியொரு கூற்றை சொல்லி வைத்துள்ளார்.

யோவான் 7:24 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள்.

கிறிஸ்துவினிமித்தம் வீடு, மனைவி, பிள்ளைகளை விடவேண்டுமென்றால்: “கிறிஸ்துவின் பணியைச் செய்வதற்கு வீடோ, மனைவியோ, பிள்ளைகளோ தடையாக/இடறலாக இருந்தால் அவற்றைக்கூட விட்டுவிடத் தயங்கக்கூடாது” என்பதே பொருள்.

மாறாக, “எழுத்தின்படியே வீடு, மனைவி, பிள்ளைகளை விட வேண்டுமென்றால்”, பவுல் ஏன் இவ்வாறு கூறினார்?

1 தீமோ. 3:2 கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

சிந்தியுங்கள் சகோதரரே!




-- Edited by anbu57 on Sunday 10th of July 2011 08:49:58 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//நன்மை செய்யாதவர்களை பாவிகள் என்கிறீர்கள். தீமைகளை திட்டமிட்டு செய்துவிட்டு அதைச் செய்கிறவர் நானே என்று தேவன் கூறுவதாக மேற்படி வசனங்கள் சொல்கின்றன. உங்கள் வேதாகமத்திலும் அப்படியேதான் இருக்குமென்று நம்புகிறேன்.

உங்கள் கூற்றுப்படி முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் தேவனே.

ஆனால் இதெற்கெல்லாம் நீங்கள்தான் பதிலே சொல்ல மாட்டீர்களே?//

வேதாகமத்தில் காணப்படும், “தேவன் செய்த தீமைகளில்” ஒன்றைச் சொல்லுங்களேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//உம்முடைய ராஜ்யம் வருவதாக என்றும் பரமண்டலத்திலே தேவனின் சித்தம் செய்யப்படுவது போல் இந்த பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று கிறிஸ்து இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறார்!!//

சோல்சொல்யூஷன் (சகலமும் தேவசித்தம் திரியில்):

//அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது.//

//நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது யாவும் தேவ சித்தம். தேவசித்தம் மட்டுமே.//

சோல்சொல்யூஷனின் இக்கருத்துக்களை பெரியன்ஸ் ஆதரித்து, இவ்வாறு கூறுகிறார்.

//இப்படி எல்லாமே தேவ சித்தம் என்று சொல்லுவதால் இதை கால்வனிஸம் (Calvinism) என்று ஒதுக்குவார்கள் இந்த கிறிஸ்தவர்கள், ஏனென்றால் இவர்களுக்கு இவர்கள் மேல் தேவனை காட்டிலும் அதிக நம்பிக்கை இருக்கிறது!!//

நடப்பவை, நடந்தவை, நடக்கப்போவது எல்லாமுமே தேவசித்தமாக இருக்கையில், இப்பூமியில் தேவசித்தம் நடப்பதற்கு ஜெபிக்கவேண்டும் என ஏன் இயேசு கூறினார்?

ஏற்கனவே தேவசித்தம் தானே நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிற ஒன்று நடப்பதற்காக ஜெபிக்கும்படி இயேசு சொல்வது அவசியம்தானா?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//அதற்காகத்தான் ஒரு மகனது(ஆதாம் சந்ததி) பாவத்துக்கு 'ஈடுபலி'யாக இன்னொரு குமாரனை தண்டனைக்குள்ளாக்கி அந்த மகனை 'நிரபராதி'யாக்கி விடுவிக்கிறார்.//

இன்னொரு குமாரனை (அதாவது தமது சொந்த குமாரனாகிய இயேசுவை) தண்டனைக்குள்ளாக்கினார் எனில், தமது சொந்த குமாரனை அவர் நேசிக்கவில்லையா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//எதையும் நுனிப்புல் மேய்வதுபோல் படித்து பொருள் கொள்ளாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் logical சிந்தனையுடன் படித்து பொருள் கொள்ளுங்கள்.//

இதைத்தான் நாங்களும் சொல்லிக்கொண்டுவருகிறோம். இயேசு கிறிஸ்து 'பொதுவாக' யாருக்குச் சொன்னார்? அவர் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி யாருக்குச் சொன்னார்? பொதுவாகச் சொன்னது உலகத்துக்கா? சபைக்கா? இலலை வேதம் வாசிக்க முற்படும் யாவருக்கும் அது பொருந்துமா? வேதத்தை வாசிக்கும் பெரும்பாலோர் அதை புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறதே? இன்னமும் அதை வாசிக்கும் பெருவாரிக் கிறிஸ்தவம் பிதா யார்? குமாரன் யார்? என்றுகூட அறியவில்லையே. இதில் உங்களைப்போல எத்தனை பேர் 'கட்டளை'களைக் கைக்கொள்கிறார்கள், போதிக்கிறார்கள்..? 'உலகம் அவரை அறிவில்லை' என்று வேதம் சொல்லும்போது வேதம் உலகத்துக்கு என்று வாதிடுகிறீர்கள். 

சபைக்கு (முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரம் அடங்கிய) நியாயத்தீர்ப்பு (ட்ரெய்னிங்) இப்போது. உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உயிர்த்தெழுந்தபின். நம் கிரியைகளைக் காண்பித்து முன்குறிக்கப்பட்டவர்கள் லிஸ்டில் யாரும் இடம் கேட்கமுடியாது. பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவினிடத்தில்

வரவே முடியாது.

லாஜிக் பற்றி நீங்கள் பேசுவது வியப்பாக இருக்கிறது. பவுல் என்ன சொல்கிறார் பாருங்கள்

 ரோமர்7:15. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

16. இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

17. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.

19. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

20. அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

இப்படிப்பட்ட நிர்ப்பந்தமான நிலையில்தான் இருக்கிறோம். எனவேதான் கிருபையின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு சாத்தியம்

//நடப்பவை, நடந்தவை, நடக்கப்போவது எல்லாமுமே தேவசித்தமாக இருக்கையில், இப்பூமியில் தேவசித்தம் நடப்பதற்கு ஜெபிக்கவேண்டும் என ஏன் இயேசு கூறினார்?

ஏற்கனவே தேவசித்தம் தானே நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிற ஒன்று நடப்பதற்காக ஜெபிக்கும்படி இயேசு சொல்வது அவசியம்தானா?//

ஓ அப்ப நாம் ஜெபிக்காவிட்டால் தேவசித்தம் நடக்காதா? நாம் என்னதான் ஜெபித்தாலும் தேவசித்தம் மட்டுமேதான் நடக்கும் என்பதைக் குறிக்கத்தான் அந்த ஜெபம் சகோதரரே. நம் ஜெபம் தேவனுடைய தீர்மானங்களை மாற்றுவதில்லை...

//இன்னொரு குமாரனை (அதாவது தமது சொந்த குமாரனாகிய இயேசுவை) தண்டனைக்குள்ளாக்கினார் எனில், தமது சொந்த குமாரனை அவர் நேசிக்கவில்லையா?//

யோவான்3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

இதை அவரிடம்தான் கேட்கவேண்டும். இந்த வசனம் அவர் உலகத்தில் அன்புகூர்ந்ததை விளக்குகிறது.

//வேதாகமத்தில் காணப்படும், “தேவன் செய்த தீமைகளில்” ஒன்றைச் சொல்லுங்களேன்.//

தனித்திரியில் காண்க‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இன்னொரு குமாரனை (அதாவது தமது சொந்த குமாரனாகிய இயேசுவை) தண்டனைக்குள்ளாக்கினார் எனில், தமது சொந்த குமாரனை அவர் நேசிக்கவில்லையா?//

அவர் நேசிக்காமலா அவரை மரணத்திலிருந்து உயிர்த்தெழச்செய்தார்!! அவரை பலியாக அனுப்பியது உலகத்தின் மேல் வைத்திருக்கும் அன்பு, அவரை மீண்டும் எழுப்பியது அவர் மேல் இருக்கும் நேசம்!! பலி செலுத்தப்பட வேண்டியது முன் நியமிக்கப்பட்டது தானே!!

தன் குமாரனை பலிக்கு ஒப்புக்கொடுத்ததால் அவரை நேசிக்கவில்லை என்று எப்படி அர்த்தக் கொள்ள முடியும்??

மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு 1:11 அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு 9:7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

லூக்கா 9:35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.

II பேதுரு 1:17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

உலகில் இத்துனை தீமைகள் நடைப்பெற்றாலும் தேவன் என்னமோ நம்மை கைவிட்டது போல் இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே, அது அவரின் நேசத்தை தான் காண்பிக்கிறது!! எது நடந்தாலும் நன்றி சொல்லும்படி இதற்காக தான் பவுல் எழுதுகிறார்!!

//ஏற்கனவே தேவசித்தம் தானே நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிற ஒன்று நடப்பதற்காக ஜெபிக்கும்படி இயேசு சொல்வது அவசியம்தானா?//

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் இந்த பூமியிலும் செய்யப்படுவதாக என்று கிறிஸ்து ஜெபிக்க சொன்னார்!! இல்லை என்று சொல்லவில்லை, அது ஏதோ இங்கே தேவ சித்தம் நடக்காமல் போவதால் அல்ல, மாறாக பரலோகத்தில் இருக்கிறது போல் (தீமையற்ற) ஒரு ராஜியத்தின் வருகைக்காக தான் ஜெபிக்க சொன்னார்!! அப்படி பட்ட ஒரு ராஜியத்தை தேவன் தருகிறார், தமக்கு சித்தமான காலத்தில்!!

//வேதாகமத்தில் காணப்படும், “தேவன் செய்த தீமைகளில்” ஒன்றைச் சொல்லுங்களேன்.//

இது வேதத்தில் உள்ள வசனம் தானே:

"ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7

சங்கார தூதனை அனுப்பி எகிப்தியரின் முதற்பேறானவர்களை கொன்றது யார்??
சிவந்த சமுத்திரத்தில் எகிப்த்தியரை அமுக்கியது யார்??

தேவனே இதை சொல்லும்போது நீங்கள் ஏன் அதை மறுக்க விரும்புகிறீர்கள் என்பது தான் புரியவில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//நான் இப்படி நடந்துக்கொண்டால், நான் இதை செய்தால், நான் அப்படி பேசினால் தான் தேவனால் இரட்சிக்க முடியுமென்றால் அது சர்வ வல்லமையுள்ள தேவனை தூஷிப்பதாகும்!!//

அவ்வாறெனில் இவ்வசனங்களுக்கு அர்த்தமென்ன?

மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

லூக்கா 8:12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

யோவான் 10:9  நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்,

அப்போஸ்தலர் 2:40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

அப்போஸ்தலர் 16:31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

(உங்கள் நினைவுக்கு: கிரியையில்லாத விசுவாசம் செத்தது)

ரோமர் 1:16 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

1 கொரி. 15:2  நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

1 தீமோ. 4:16 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

தொடர்ந்து பின்வரும் வசனங்களைப் படித்து அவற்றையடுத்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.

2 கொரி. 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.

எவர்கள் கெட்டுப்போகிறவர்கள்? எவர்கள் இரட்சிக்கப்படுகிறவர்கள்? கெட்டுப்போகிறவர்களுக்கு மரணவாசனை என்றால் என்ன அர்த்தம்?

2 கொரி. 7:10  தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலைப் பெற்றவர்கள் பின்னால் மனஸ்தாபப்பட இடமிருக்காது” என்கிறார் பவுல். அவ்வாறெனில் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலைப் பெறாதவர்கள் “பின்னால் மனஸ்தாபப்பட இடமுண்டல்லவா?”.

பின்னால்” என்றால் அது எப்போது? உயிர்த்தெழுதலுக்குப் பின்னா? அல்லது முன்னா?

லௌகீக துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது என்கிறாரே பவுல், இது எந்த மரணம்?

ஆதாமின் பாவத்துக்கான மரணமும் லௌகீக துக்கத்தின் விளைவான மரணமும் ஒரே மரணம்தானா? ஆம் எனில், ஆதாமின் பாவத்துக்கான மரணம்தான் ஏற்கனவே உண்டாகிவிட்டதே, ஏற்கனவே உண்டான அந்த மரணத்தை லௌகீக துக்கம் மீண்டும் உண்டாக்குகிறதா?

யாக்கோபு 5:19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து” எனச் சொல்லும் யாக்கோபு, எந்த மரணத்தினின்று இரட்சிப்பதைக் குறித்து கூறுகிறார்?

தற்போதைய இம்மைக்குரிய மரணத்தைக் குறித்து என்றால் பின்வரும் கேள்விக்கு பதில் சொல்லவும்.

தற்போதைய இம்மைக்குரிய மரணத்திலிருந்து எல்லோருக்கும் இரட்சிப்பு (அதாவது உயிர்த்தெழுதல்) என 1 கொரி. 15:22 கூறுகிறதே, பின்னர் ஏன் அந்த மரணத்திலிருந்து இரட்சிப்பதற்கு பாவியைத் திருப்பவேண்டும்?

தற்போதைய இம்மைக்குரிய மரணத்தைக் குறித்து யாக்கோபு சொல்லவில்லையெனில், வேறு எந்த மரணத்தைக் குறித்துக் கூறுகிறார்? அதிலிருந்து ஒருவனை இரட்சிக்கவேண்டுமெனில், அவனை மனந்திரும்பச் செய்வது அவசியந்தானே?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//"ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7

தேவனே இதை சொல்லும்போது நீங்கள் ஏன் அதை மறுக்க விரும்புகிறீர்கள் என்பது தான் புரியவில்லை!! //

நான் மறுக்கவில்லை சகோதரரே! “தேவன் தீங்கை உண்டாக்குகிறார்” என்பதை நாம் சரியான கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் “தேவன் செய்த தீமைகளில்” ஒன்றைக் கேட்டிருந்தேன்.

நான் கேட்டதற்கிணங்க “தேவன் செய்த தீமைகளில்” ஒன்றை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

பெரியன்ஸ்:

//சங்கார தூதனை அனுப்பி எகிப்தியரின் முதற்பேறானவர்களை கொன்றது யார்??
சிவந்த சமுத்திரத்தில் எகிப்த்தியரை அமுக்கியது யார்??//

தேவன் இந்த தீமையை ஏன் செய்தார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும் தானே? பார்வோனிடம் எத்தனையோ எச்சரிப்பு கொடுத்து, அதற்கு அவன் செவிமடுக்காததால்தானே அவன் மீதும் அவன் ஜனங்களின் மீதும் தேவன் தீமையை வருவித்தார்? இதை வைத்து, “எல்லா தீமைக்கும் தேவனே காரணம், அவர்தான் தீமைகளைக் கொண்டுவருகிறார்” என எப்படிச் சொல்லமுடியும்?

மனிதனின் கீழ்ப்படியாமைதான் தேவன் அவன் மீது தீமையைக் கொண்டுவர பிரதான காரணம். வேறு சில காரணங்களும் உண்டு. ஆனால் பிரதான காரணம் மனிதனின் கீழ்ப்படியாமையே!

முடிந்தால் தேவன் செய்த மற்றொரு தீமையையும் சொல்லுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு எழுதுகிறார்:
//தேவன் இந்த தீமையை ஏன் செய்தார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும் தானே? பார்வோனிடம் எத்தனையோ எச்சரிப்பு கொடுத்து, அதற்கு அவன் செவிமடுக்காததால்தானே அவன் மீதும் அவன் ஜனங்களின் மீதும் தேவன் தீமையை வருவித்தார்? இதை வைத்து, “எல்லா தீமைக்கும் தேவனே காரணம், அவர்தான் தீமைகளைக் கொண்டுவருகிறார்” என எப்படிச் சொல்லமுடியும்?//

அதாவது பார்வோன் தன் சுயத்தினால் அந்த எச்சரிப்புகளுக்கு செவிமடுக்காமல் இருந்தானா அல்லது அதற்கு வேறு காரணம் இருந்ததா?? வேதம் சொல்லுகிறது, அவன் அப்படி செய்யாமல் போனது தேவனே அவன் இருதயத்தை கடினப்படுத்தினதால் தான்!! பார்வோனுக்கு ஒவ்வொரு முறையும் எச்சரிப்பு மோசேயின் மூலமாக போனது, அதை மறுக்கும்படியாக தேவன் தானே அவன் இருதயத்தை கடினப்படித்தினார் என்று வசனம் சொல்லுகிறது!! அப்படி இருக்க பார்வோன் தன் சுயத்தினால் செய்தான் என்று எப்படி சொல்ல முடியும்!!

யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. (கர்த்தர் மனதை கடினப்படுத்தியதால் தான் அவன் கீழ்ப்படியாமற்போகிறான்)

யாத்திராகமம் 10:2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.

யாத்திராகமம் 10:20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 10:27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.

இந்த வசனங்கள் எல்லாம் நீங்களும் வாசித்து இருப்பீர்கள்!! இப்படி எல்லாவற்றிலும் யெகோவா தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்திவிடுகிறார், அதற்குண்டான மரணத்தண்டனையையும் தந்துவிடுகிறார்!! இனி அவன் கிரியை சரி இல்லை என்று சொல்லி அவனை எழுப்பி, நீ கர்த்தர் சொன்னது ஒன்றையும் நீ மரிக்கும் முன் கேட்கவில்லை ஆகவே இனி நீ இரண்டாம் மரணத்திற்கு போ என்று அவனின் கிரியைகளினால் அவன் தண்டிக்கப்படுவான் என்றால் அங்கே நீதி இருக்க முடியாது!! பார்வோனின் இருதயத்தை தேவன் கடினப்படித்தியதற்கு நோக்கம் இருக்கிறது!! தேவன் தீமையை படைத்து, அனுமதித்து, பாராமல் இருப்பது எல்லாம் நன்மைக்கே தவிர இதினால் ஒரு மனிதனின் கிரியை ஆறாயவதற்கல்ல‌!!

//மனிதனின் கீழ்ப்படியாமைதான் தேவன் அவன் மீது தீமையைக் கொண்டுவர பிரதான காரணம். வேறு சில காரணங்களும் உண்டு. ஆனால் பிரதான காரணம் மனிதனின் கீழ்ப்படியாமையே!//

மனிதனை கீழ்ப்படியாமைக்குள் போகும்படி அவரே மனதை கடினப்படுத்துகிறார் என்று இத்துனை வசனங்கள் இருப்பதால் தங்களின் இந்த கேள்விக்கு இந்த வசனங்களே பதில்!!

//முடிந்தால் தேவன் செய்த மற்றொரு தீமையையும் சொல்லுங்கள்.//

இதையே முதலில் தீர்த்து வைய்யுங்கள், பிறகு அடுத்த தீமைக்கு செல்லலாம்!! தேவன் தீமையை படைத்து அதை அனுமதிக்கிறார் என்று சொல்லுவதால் நாங்கள் எந்த விதத்திலும் தேவனை தூஷிக்கவில்லை, ஏனென்றால் தேவன் அந்த தீமைகளை மனிதன் கற்றுக்கொள்ளவே அனுமதிக்கிறார் என்று நான் அறிவேன், தேவன் ஒரு மகிழ்சியான எதிர்காலத்தை முன்னிட்டே இவைகளை அனுமதிக்கிறார் என்பதை வசனங்கள் மூலமாக அறிந்திருக்கிறேன்!! ஆனால் இப்ப நடத்தப்படும் கிரியைகளுக்கு மனிதனே காரணம் (அது விசுவாசமாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி) என்று நீங்கள் சொல்லுவதால் தான், கிரியை செய்பவன் பிழைப்பான் மற்றவர்கள் இரண்டாம் மரணத்திற்கு போவார்கள் என்று சிந்திக்க முடிகிறது!! தேவனே இருதயத்தை கடினப்படுத்தி விட்டு அதற்கு இரண்டாம் மரணம் என்கிற‌ தண்டனையும் கொடுக்கிறார் என்றால் இதில் என்ன நீதி இருக்கிறது? இதை தேவனிடத்தில் கேளுங்கள் என்று தட்டி கழிக்க வேண்டாம்!!

கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது, எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்று சொல்லி தருவதற்கு அர்த்தம் புரிகிறதா!! அப்படி என்றால் சோதனையில் விழ (சோதனை கொடுப்பதில் வேறு சோதனையில் விழுவது வேறு) விடாமால் என்னை நடத்தும் என்று கேட்க சொல்லுகிறார்!! அப்படி என்றால் விழசெய்கிறவர் தேவன் தானே!! தேவன் அந்த விழுதலை அனுமதிக்கிறார்!! இது எந்த விதத்திலும் தேவ தூஷனம் கிடையாது, ஏனென்றால் விழசெய்கிற அவரே நம்மை தூக்கியும் விடுகிறார், நித்தியத்திற்கும்!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

நிலைத்திருக்க செய்பவர் தேவனே!! ஏனென்றால் எல்லாம் அவரின் நியமனத்தின்படியே நடக்கிறது!! அவரே சிலருக்கு விசுவாசத்தை கொடுத்து அநேகருக்கு அதே விசுவாசத்திற்காக வேறு ஒரு காலம் தீர்மானித்து வைத்திருக்கிறார்!! அவரூடைய தீர்மானத்தின்படியே அழைக்கப்படுகிறார்கள், அவரின் தீர்மானத்தின்படியே நிலைத்திருக்கவும் செய்கிறார்கள்!! யூதாஸ் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!! யூதாஸ் செய்தது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை, தற்செய்லாக அவன் இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்கவில்லை, அவன் காட்டி கொடுப்பான் என்று தீர்க்கதரிசனம் இருக்கிறது!! இதற்காகவே அவனை முதலில் அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்தார் தேவன், ஏனென்றால் அவனை தானே கிறிஸ்துவை காட்டிக்கொடுக்கும் கருவியாக பயன்ப்படுத்த வேண்டும்!! முதலில் தேர்ந்தெடுத்தார், அதன் பின் நிலைத்திருக்கச்செயவில்லை, அவரின் தீர்மானம் தானே!! இதை குறித்து என்ன சொல்லுவீர்கள், சகோ அன்பு அவர்களே!!

ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

இப்படி எல்லாவற்றையும் (முழு சிருஷ்டியையும்) மாயைக்கு கீழ்ப்படுத்தியவர் முழு சிருஷ்டியையும் விடுவிப்பார், அதற்கு முன் அவரின் குமாரனின் சாயலில் சிலரை உருவாக்கவே இந்த காலம்!!

இன்னோரு எடுத்துக்காட்டு பவுல்!! தேவன் ஒரு காலக்கட்டம் வரை இவனின் இருதயத்தையும் கடினப்படுத்தி கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழும்பசெய்தார்!! காலம் வந்த போது அவனை பயன்ப்படுத்தினார்!! ஏதோ பவுல் தன் சுயத்தினாலோ அல்லது அவனின் சுய கிரியைகளினாலோ விசுவாசத்தை பெற்றுக்கொள்ளவில்லை!!

அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

இப்படி அவரே பவுலை தெரிந்துக்கொள்கிறார் என்று வசனம் சொல்லுகிறது!! மேலும் ரோமர் 9ல் உள்ள கீழ் காணும் வசனங்களை வாசியுங்கள்!!

ரோமர் 9:18. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். 19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். 20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

தொடரும்.......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//மேலும், காலையில் உழைக்க வந்தவனுக்கும் அந்திவேளையில் உழைக்க வந்தவனுக்கும் அவர் ஒரே கூலியை கொடுக்கும் போது, காலையில் வந்தவன் இதை எஜமானனிடம் கேட்ட போது அவர் சொன்னது,

மத்தேயு 20:14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.//

கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, ஆனால் வேலை செய்தவர்களுக்குத்தான் கூலி கொடுத்தார்; வேலை செய்யாதவர்களுக்கு கூலி கொடுக்கவில்லையே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2 கொரி. 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.

இதற்கு முந்தய வசனத்தை பார்த்தோமென்றால் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கும்!!

15. இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

இந்த மரணவாசனையோ, ஜீவவாசனையோ நடக்க போகும் காரியங்களை குறித்து அல்ல, மாறாக அப்போஸ்தலர்கள் சுவிசேஷம் சொல்லுவதினால், சாவாமையை பெற நியமிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்லும் அப்போஸ்தலர்கள் ஜீவவாசனையாக இருக்கிறார்கள், நியமிக்கப்படாதவர்களுக்கு அவர்கள் மரணவாசனயாக இருக்கிறார்கள்!! மரணவாசனை என்பது எந்த விதத்திலும் இரண்டாம் மரணத்தை குறிக்கும் வார்த்தையில்லை!!

1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

பார்த்தீர்களா, வசனத்திற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் "நியமிக்க" தான் பட்டிருக்கிறார்கள்!! இவர்களுக்கு எப்படி சுவிசேஷம் சொல்லும் அப்போஸ்தலர்கள் ஜீவவாசனை என்கிற நற்கந்தமாக இருக்க முடியும்!!

2 கொரி. 7:10  தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

தேவனுக்கேற்ற துக்கம், லெளகிக துக்கம் என்று இரு விதமான துக்கங்களுக்கு அர்த்தம் புரியவைத்திருக்கிறார் அப்போஸ்தலர்!! தேவனுக்கேற்ற துக்கம் மனந்திரும்புதலை கொண்டு வரும், சாவாமைக்கேதுவான உயிர்த்தெழுதல் தரும், ஆனாலும் அதற்கும் மரித்து தான் ஆக வேண்டும்!! லெளகிக துக்கம், உலக விஷயத்திற்கு மாத்திரம் கவலைப்பட்டு கொண்டு இருப்பது நமக்கு நிச்சயமாக சாவாமை என்கிற உயிர்த்தெழுதல் தராது, நியாயத்தீர்ப்பின் நாட்களில் இவை நினைக்கப்படும் போது, சாவாமையின் இழப்பு புரியும்!! அவ்வளவே!! ஆனாலும் இந்த இரு வகுப்பினரும் இப்படி இருக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்!!

சாவாமைக்கேதுவானவர்கள், கிறிஸ்துவின் சாயாலாக மாறுவோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் (ரோம் 8:29)!! இவர்களுக்கே மனந்திரும்புதலுக்கான துக்கம்!! மற்றவர்கள் நியமிக்கப்படாதவர்களாக இருப்பதினால் லெளகிக துக்கம்!! ஆனாலும் என்ன, இவர்கள் என்றைக்கும் மரித்திருக்க போவதில்லை, நீதியை கற்றுக்கொண்டு இந்த பூமியில் வாழயிருக்கிறார்கள்!!

நீங்கள் எத்துனை வசனங்கள் கொடுத்தாலும், அடிப்படையான விஷயம் என்னவென்றால், நாம் யாவரும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று நியமிக்கப்பட்டிருக்கிறோம்!! இதில் தான் தேவனின் வல்லமை விளங்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  14 5 6 | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard