சகோதரர் பெரியன்ஸ் அவர்கள் அடிக்கடி ஒரு வசனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கான விளக்கத்தைத் தரும்படி கேட்டுள்ளார். அவ்வசனத்தை நான் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் அவர் கருதுகிறார். அவர் கருதுவது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளும்படியாக இத்திரியில் அவ்வசனத்திற்கான எனது விளக்கத்தைத் தருகிறேன்.
2 தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
இரட்சிப்பு என்பதில் 2 பகுதி அடங்கியுள்ளது என்பதை அறியாததால்தான் சகோ.பெரியன்ஸ் போன்றவர்கள் வசனங்களின் கருத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, அதையே மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறார்கள். அதற்கு ஓர் உதாரணம் தான் மேற்கூறிய வசனத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவருவது.
மேற்கூறிய வசனம் அடங்கியுள்ள அதே வேதாகமத்தில் பின்வரும் வசனமும் அடங்கியுள்ளதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
இப்பொழுது நாம் சற்று சிந்தித்துப்பார்ப்போம். 2 தீமோ. 1:9-ல் பவுல் கூறுகிற இரட்சிப்பும், லூக்கா 9:24-ல் இயேசு கூறுகிற இரட்சிப்பும் ஒரே இரட்சிப்பாக இருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது.
ஏனெனில் பவுல் கூறுகிற இரட்சிப்பு நம் கிரியைகளினால் இல்லாமல் தேவனின் ஆதித்தீர்மானத்தின்படி தேவனிடமிருந்து கிடைக்கிற இரட்சிப்பாகும். ஆனால், லூக்கா 9:24-ல் இயேசு கூறுகிற இரட்சிப்போ, நாம் நம் சுயகிரியையினால் நம் ஜீவனைக்கூட கொடுக்குமளவு கிரியைசெய்து அதன்மூலம் சம்பாதிக்கிற இரட்சிப்பாகும்.
இப்படி நாம் சொன்னால், ஏதோ நாம் நம் கிரியையை மேன்மை பாராட்டுவதாக சகோ.பெரியன்ஸ் கருதுகிறார். நாம் நம் கிரியையை மேன்மைபாராட்டுவதைக் குறித்து இத்தளத்திலும் சரி, வேறெந்த தளத்திலும் சரி, நான் ஒருபோதும் கூறவில்லை. நாம் இரட்சிக்கப்படுவதில் தேவனின் கிருபை மட்டுமின்றி, நமது கிரியையும் பங்கு வகிக்கிறது என வேதாகமம் கூறுகிற உண்மையைத்தான் நான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன்.
மேலே லூக்கா 9:24-ல் இயேசு சொல்வதை எடுத்துக்கொள்வோம். அவர் அதில் மனிதரின் 2 எதிரெதிர் கிரியைகளைப் பற்றி கூறுகிறார்.
1. தன் ஜீவனை இரட்சிக்க விரும்பி அதற்காக செயல்படுதல்
2. கிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனையும் இழக்க முன்வருதல்
இவ்விரு கிரியைகளில் முதல் கிரியையைச் செய்கிறவனுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதையும், 2-வது கிரியையைச் செய்பவனுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதையும் அதே வசனத்தில் இயேசு கூறுகிறார்.
//2 தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
என்ற வசனத்துக்கு முதலில் விளகக்மளித்தால் நலம்.
இதில் நம்மை என்பது யாரை?//
நாம் தான்.
//தம்முடைய தீர்மானம் என்ன தீர்மானம்?//
பலி, தான தர்மம், தவம் போன்ற மனிதக் கிரியைகளால் அல்ல, இயேசு கிறிஸ்துவுக்குள் இலவசமாக இரட்சிப்பு உண்டு என்ற தீர்மானம்
//அதென்ன பரிசுத்த அழைப்பு?//
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட அழைக்கிறார். வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறார்.//
சகோ.அன்பு ஏதோ பிதாவையும் குமாரனையும் குறித்து தெரிந்து வைத்திருக்கிறாரே, நிறைய வசனங்களை மேற்கோள்காட்டி விவாதத்தை சுவாரசியமாக கொண்டுசெல்கிறாரே அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்ற நோக்கில் அவரது பதிவுகளுக்கு சீரியஸாக பதிலளித்துக்கொண்டிருக்கிறோம். இடையில் சாது செல்வராஜ் என்ற கோமுட்டித்தலையனின் விசிறி வந்து பதில் பதிக்கிறது. எள்ளுதான் காயுதென்றால்.....
.முதலில் சாது அய்யா ஊழியனா திருடனா என்ற விவாதத்தை முடியுங்கள். நாங்கள் ஏதோ காமெடி பண்ணிவிட்டுப் போகிறோம் உங்களுக்கேன் எறிகிறது?
கோமாளி என்று என்றைக்க்கு உங்கள் 'தள' பதி ஒத்துக்கொண்டாரோ அன்றிலிருந்து கோமாளி ஜனத்தை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரித்தேயாக வேண்டும் (அதாவது தங்கள் ஜீவனை இழந்தேயாக வேண்டும்) என்பது நாம் அறிந்ததே. ஆகிலும் அந்த ஜீவனை நாம் அத்தனை எளிதில் இழக்க முன்வருவதில்லை.
நம் சொத்து ஆஸ்தி அத்தனையையும் இழந்தாவது நம் ஜீவனைக் காக்கவேண்டும் என்பதுதான் பொதுவாக நம்மனைவரின் எண்ணமாக உள்ளது.
நம் ஜீவன்மேல் இத்தனை ஆசை வைத்துள்ள நாம், கிறிஸ்துவினிமித்தம் நம் ஜீவனை இழக்க வேண்டிய நிலை வந்தால், எதை நாம் தெரிந்துகொள்வோம்?
கிறிஸ்துவை விட்டுக்கொடுத்துவிட்டு, நம் ஜீவனைக் காத்துக் கொள்வதையா? அல்லது நம் ஜீவனை இழக்கக்கொடுத்துவிட்டு, கிறிஸ்துவை விட்டுக்கொடாதிருப்பதையா?
ஒருவேளை கிறிஸ்துவை விட்டுக்கொடுத்துவிட்டு நம் ஜீவனைக் காத்துக்கொண்டால் அதன் விளைவு என்னாகும்? அல்லது கிறிஸ்துவினிமித்தம் நம் ஜீவனை இழந்தால் அதன் விளைவு என்னாகும்?
இக்கேள்விகளுக்கான பதிலைத்தான் லூக்கா 9:24-ல் இயேசு கூறுகிறார்.
கிறிஸ்துவை விட்டுக்கொடுத்துவிட்டு நம் ஜீவனைக் காத்துக்கொண்டால் அதன் விளைவாக நம் ஜீவனை இழந்து போவோம் என்றும், கிறிஸ்துவினிமித்தம் நம் ஜீவனை இழந்தால் அதன் விளைவாக நம் ஜீவனைக் காத்துக்கொள்வோம் என்றும் இயேசு கூறுகிறார்.
நம் ஜீவனைக் காத்துக்கொண்டால் அதை இழந்துபோவோம், நம் ஜீவனை இழந்துபோனால் அதைக் காத்துக்கொள்வோம் எனும் இயேசுவின் இக்கூற்று நமக்கு சற்று குழப்பமாகத் தோன்றலாம்.
தன் ஜீவனைக் காத்துக் கொண்டவன் அதை எப்படி இழக்கமுடியும்? தன் ஜீவனை இழந்துபோனவன் அதை எப்படிக் காத்துக்கொள்ள முடியும்? இக்கேள்விகளுக்கான பதிலை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் நம் குழப்பம் நீங்கிவிடும்.
இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஒரு நாள் நம் ஜீவனை இழந்தேயாக வேண்டும் என்பது நிச்சயம்; ஜீவனை இழந்த நாம் அனைவரும், 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்து மீண்டும் ஜீவனைப் பெறுவோம் என்பதும் நிச்சயம்.
இப்படியாக உயிர்த்தெழுந்த நாம் மறுபடியும் ஜீவனை இழந்தும்போகலாம், அல்லது இழக்காமல் அதைக் காத்துக்கொள்ளவும் செய்யலாம். இவ்விரு காரியங்களுக்கான நிபந்தனைகளைத்தான் லூக்கா 9:24-ல் இயேசு கூறுகிறார்.
இவ்வுலகில் தன் ஜீவனைக் காத்துக்கொள்ள விரும்பி, கிறிஸ்துவைப் புறக்கணித்தவன், உயிர்த்தெழுதலுக்குப் பின் தன் ஜீவனை இழந்துபோவான்; மாறாக, கிறிஸ்துவினிமித்தம் இவ்வுலகில் தன் ஜீவனை இழக்க முன்வருபவன், உயிர்த்தெழுதலுக்குப் பின் தன் ஜீவனைக் காத்துக் கொள்வான்.
இதிலிருந்து நாம் அறிவதென்ன? 1 கொரி. 15:22-ன்படி நாம் உயிர்த்தெழுந்தபின் நம் ஜீவனை இழப்பதும் காத்துக்கொள்வதும் (அதாவது இரட்சித்துக்கொள்வதும்) நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. அதாவது நம் ஜீவனுக்காக கிறிஸ்துவைப் புறக்கணித்தல் அல்லது கிறிஸ்துவினிமித்தம் ஜீவனை இழக்க முன்வருதல் எனும் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது.
1 கொரி. 15:22-ன்படி நாம் உயிர்த்தெழுவதென்பது நம் ஜீவனைக் காப்பதன் (அதாவது நாம் இரட்சிக்கப்படுவதன்) முதல் பகுதியாகும். இந்த இரட்சிப்புக்கும் நம் கிரியைகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை; மாறாக, இந்த இரட்சிப்பு முழுக்க முழுக்க தேவகிருபையை மட்டுமே சார்ந்ததாகும். இதைத்தான் 2 தீமோ. 1:9-ம் வசனம் கூறுகிறது.
இவ்வுலகில் நாம் என்னதான் நீதிமான்களாக நடந்தாலும், அல்லது பலி/காணிக்கை கொடுத்தாலும், அல்லது நற்கிரியைகளைச் செய்தாலும் அதினிமித்தம் நாம் உயிர்த்தெழுவதென்பது நிச்சயமாக சாத்தியமில்லை. எனவே நம் கிரியைகளால் நாம் நம்மை இரட்சித்துக்கொள்வோம் என எண்ணி நம் கிரியைகளை மேன்மைபாராட்ட இயலாது.
இயேசுகிறிஸ்துவின் ஈடுபலியால் நமக்குக் கிடைத்த இரட்சிப்பினால்தான் 1 கொரி. 15:22-ன்படி நாம் அனைவரும் உயிர்த்தெழக்கூடிய பாக்கியத்தைப் பெறுகிறோம். இதைத்தான் 2 தீமோ. 1:9 கூறுகிறது.
1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்த நாம் அதன் பின்னர் நம் ஜீவனை இழப்பதும் இரட்சிப்பதும் நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. நம் கிரியையைச் சார்ந்து நாம் பெறுகிற இந்த இரட்சிப்புதான் நம் இரட்சிப்பின் 2-ம் பகுதியாகும்.
நம் இரட்சிப்பின் முதல் பகுதி (தேவகிருபையைச் சார்ந்தது) மற்றும் 2-ம் பகுதி (நம் கிரியையைச் சார்ந்தது) எனும் இவ்விரு பகுதிகளும் நிறைவேறினால்தான் நம் இரட்சிப்பு முழுமை பெறும். எனவேதான் நம் கிரியைகளினால் நாம் நீதிமான்களாவதில்லை எனக் கூறுகிற அதே வேதாகமம் நம் கிரியைகளை வலியுறுத்தியும் போதிக்கிறது.
இதை அறியாமல் நம் இரட்சிப்படைவதற்கு தேவகிருபை மட்டும் போதும், கிரியைகள் தேவையில்லை என நம்மில் சிலர் கூறிவருகிறோம்.
இப்போது மீண்டும் 2 தீமோ. 1:9-ஐப் படிப்போம்.
2 தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
1 கொரி. 15:22-ன்படி நாம் உயிர்த்தெழுவதென்பது நம் கிரியைகளால் ஆவதில்லை; எனவே தான் “நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல்” என பவுல் கூறுகிறார்.
இவ்விதமாக நம்மை இரட்சிக்கவேண்டும் என்பது தேவனின் ஆதித் தீர்மானம். எப்போது ஆதாம் பாவம் செய்து நம் மரணத்திற்குக் காரணமானானோ அப்போதே அந்த மரணத்திலிருந்து நம்மை இரட்சிக்க தேவன் தீர்மானித்தார். அதை நிறைவேற்றவே கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு கிருபை அருளினார்; எனவேதான் “ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படி” என பவுல் கூறுகிறார்.
இவ்விதமாய் கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம் அந்தக் கிருபையையே சொல்லிக்கொண்டிராமல், நாம் பரிசுத்தமாக நடக்கவேண்டுமென்றும் தேவன் அழைத்துள்ளார்; எனவேதான் “பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” என பவுல் கூறுகிறார்.
தேவனின் பரிசுத்த அழைப்பை நாம் புறக்கணித்தால், “தேவகிருபையால் பெற்ற ஜீவனை” நாம் இழக்க நேரிடும். இதைத்தான் லூக்கா 9:24-ல் இயேசு கூறுகிறார்.
இரட்சிப்பு என்பதற்கு அர்த்தம் என்னவென்று கூட தெரியாமல் அன்பு போன்ற மூத்த சகோதரர்களே குழம்பிப்போயிருப்பது உண்மையில் வருத்தத்தைத்தான் அளிக்கிறது.
'இரட்சிப்பு' என்ற சொல்லுக்கு அர்த்தம் 'காப்பாற்றப்படுதல்' என்பதாகும். இதற்கும் என்ன அர்த்தம்மென்றால் முற்றும் முடிய காப்பாற்றப்படுதலே ஆகும். எதிலிருந்து காப்பாற்ற? மரணம் என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றுவதே.
பாவிகளை முதல் மரணத்திலிருந்து இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகில் வந்தார் என்று அன்பு கூறுவது நகைப்புக்குரியது. எல்லாருமே உயிர்த்தெழுவார்கள் என்பதை நம்பும் அன்பு அவர்களுக்கு எல்லாருமே மீண்டும் மரிக்கப்போவதில்லை என்று வேதம் கூறும் கூற்று புரியாதது ஆச்சரியமே.
//1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்த நாம் அதன் பின்னர் நம் ஜீவனை இழப்பதும் இரட்சிப்பதும் நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. நம் கிரியையைச் சார்ந்து நாம் பெறுகிற இந்த இரட்சிப்புதான் நம் இரட்சிப்பின் 2-ம் பகுதியாகும்.
நம் இரட்சிப்பின் முதல் பகுதி (தேவகிருபையைச் சார்ந்தது) மற்றும் 2-ம் பகுதி (நம் கிரியையைச் சார்ந்தது) எனும் இவ்விரு பகுதிகளும் நிறைவேறினால்தான் நம் இரட்சிப்பு முழுமை பெறும். எனவேதான் நம் கிரியைகளினால் நாம் நீதிமான்களாவதில்லை எனக் கூறுகிற அதே வேதாகமம் நம் கிரியைகளை வலியுறுத்தியும் போதிக்கிறது.//
இந்த இரட்சிப்புக்கு முதல் பகுதி, இரண்டாம் பகுதி என்று நூதன போதனைகள் செய்து வருகிறார் அன்பு. எத்தனை இரட்சிப்பு என்று வேதம் சொல்கிறதோ? "இரண்டாம்" மரணத்துக்குப் போகப்போகும் ஒருவனை எதற்காக உயிர்தெழுப்ப வேண்டும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்பதற்கு என்னதான் அர்த்தம்?
பாவமன்னிப்பு என்றால் என்ன?
கிருபை என்றால் என்ன?
முதல்மரணத்திலிருந்து இரட்சிப்பாம் அதன்பின் இரண்டாம் மரணமாம்...
மனிதன் சுயசித்தத்தினால் மட்டுமே கிரியை செய்ய முடியும் என்றால் முன்குறிக்கப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்றெல்லாம் பதங்கள் வருகிறதே இவைகளுக்கு என்ன விளக்கம்?
முன்குறிக்கப்பட்டவர்கள் தங்களுடைய 'கிரியை'களினாலோ அல்லது கிரியைகள் செய்யாததாலோ வாய்ப்பை நழுவவிட ஏதுவுண்டா?
அல்லது முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவருமே கட்டாயம் அந்தத் தகுதியை அடைவார்களா?
இதற்கும் உங்களுடைய 'கிரியை'யினால் இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிப்பு என்கிற வாதத்துக்கு நேரடி தொடர்பிருப்பதால் இக் கேள்விகளை உதாசீனப்படுத்தவேண்டாம் என்று சகோ.அன்பு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
"நீர்" என்ற பதம் கெட்ட வார்த்தை இல்லை. இயேசு பிதாவையே நீர் என்றுதான் விளித்திருக்கிறார்.
//'இரட்சிப்பு' என்ற சொல்லுக்கு அர்த்தம் 'காப்பாற்றப்படுதல்' என்பதாகும். இதற்கும் என்ன அர்த்தம்மென்றால் முற்றும் முடிய காப்பாற்றப்படுதலே ஆகும். எதிலிருந்து காப்பாற்ற? மரணம் என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றுவதே.//
லூக்கா 9:24 ... என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
இவ்வசனம் கூறுகிற இரட்சிப்புக்கு அர்த்தமென்ன? அந்த இரட்சிப்பு கிடைப்பது யாரால்?
//"நீர்" என்ற பதம் கெட்ட வார்த்தை இல்லை. இயேசு பிதாவையே நீர் என்றுதான் விளித்திருக்கிறார்.//
என்மீது எந்த வெறுப்பும் இல்லாமல் சாதாரணமாகத்தான் என்னை “நீர்” என விளித்ததாக உங்கள் மனம் ஒத்துக்கொண்டால் போதும். மற்றபடி, “நீர்” எனும் பதம் மோசமான பதம் இல்லை என்பதை நான் அறிவேன்.
//இதிலிருந்து நாம் அறிவதென்ன? 1 கொரி. 15:22-ன்படி நாம் உயிர்த்தெழுந்தபின் நம் ஜீவனை இழப்பதும் காத்துக்கொள்வதும் (அதாவது இரட்சித்துக்கொள்வதும்) நம் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது. அதாவது நம் ஜீவனுக்காக கிறிஸ்துவைப் புறக்கணித்தல் அல்லது கிறிஸ்துவினிமித்தம் ஜீவனை இழக்க முன்வருதல் எனும் கிரியையைச் சார்ந்ததாயுள்ளது.//
வேதம் சொல்லுவது ஒரே ஒரு இரட்சிப்பைத்தான். உயிர்தெழும் முன் ஒரு இரட்சிப்பு, அதன் பின் வேறொரு இரட்சிப்பு என்பது வேதத்தில் இல்லாத ஒன்று. எழுதியதற்கு மிஞ்சின எண்ணம். அதைவிட உயிர்த்தெழுந்த பின் வரும் இரட்சிப்புக்கு இப்போது கிரியை செய்தால்தான் ஆகும் என்பது யாருமே இதுவரை யோசிக்காத ஒன்று.
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
இயேசு கூறுகிறார் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான் என்று. என்ன அர்த்தம்? பிதா யாரை முன்குறித்திருக்கிறாரோ அவர்கள் மட்டுமே கிறிஸ்துவினடத்தில் வருவார்கள். முன் குறிக்காத யாரும் கிறிஸ்துவினிடத்தில் வரப்போவதில்லை. இதில் கிரியை எங்கிருந்து வரும்? வராதவனையும் கடைசிநாளில் இவர் எழுப்புவாரம், எதற்கு எழுப்பி உடனடியாக இன்னொரு மரண தண்டனை கொடுப்பதற்கா?
லூக்9:23. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
எந்த இழந்துபோனதைத் தேட, இரட்சிக்க மனுஷகுமாரன் வந்தார்?
பாவத்தின் சம்பளமான நிரந்தர மரணத்தை சுதந்தரித்து நித்திய ஜீவனை இழந்து போயிருக்கும் மனுஷனை இரட்சிக்கவே மனுஷகுமாரன் வந்தார்? ஏதோ ஒரு தற்காலிக இரட்சிப்புக்காக அல்ல.
எபி8:7. அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
8. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
9. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10. அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
11. அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
முதல் உடன்படிக்கை கிரியாப்பிரமாணத்தில் ஒருவரும் நிலைநிற்காததால் அது பிழைக்கவில்லை.
அன்பு சொல்லும் கிரியாப்பிரமாணம் பழமையானது. இப்போது செல்லாது.