1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
இந்த வசனத்தை நானாக திரித்து கொடுத்ததாக சொல்லுகிறீர்கள்!! இந்த வசனம் வேதத்தில் இருக்கிற வசனம் தான் சகோ அன்பு அவர்களே!! இது எந்த விதத்திலும் விவாதத்தை திரிப்பது கிடையாது!! வசனம் எழுதுவது திரிப்பது என்றால் நான் எழுதுவது எந்த மாத்திரம்!!
//1. “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் என்னவென” நீங்கள் சொல்கிறீர்கள்?//
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்று தான் வேதம் சொல்லுகிறதே தவிர இரக்கமில்லாத தண்டனை அல்லது இரக்கமில்லாத மரணம் என்று வேதம் சொல்லுவதில்லை!! நியாயத்தீர்ப்பு என்றால் மரணம் என்று நீங்களாகவே முடிவு செய்துவிட்டு வசனத்தை அதன்படியே அர்த்தம் கொள்கிறீர்கள்!! நியாயத்தீர்ப்புக்கு ஒரு இடத்திலாவது மரணம் என்று அர்த்தம் வருகிறதா!! ஒரே தரம் மரிப்பதும் அதன் பின் நியாயத்தீர்ப்பு அடைய உயிர்த்தெழுவதும் தான் நியமிக்கப்பட்டிருக்கிறது என்கிறது வேதம், ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் அர்த்தத்தை படி, ஒரு தரம் மரித்து, அதன் பின் மரிக்கவே உயிர்த்தெழுதல் நடக்கிறது என்பது போல் இருக்கிறது!! இரக்கம் செய்பவர்களுக்கு பரலோக ராஜியமும், இரக்கம் செய்யாதவர்களுக்கு பரலோக ராஜியம் அல்லாமல், நீதியை கற்றுக்கொள்ள இந்த பூமியில் உயிர்த்தெழுதல் நடைபெறும்!! இரக்கம் செய்தவர்கள் கிறிஸ்ச்துவின் சாயலில் ஆவியிலும், இரக்கம் செய்யாதவர்கள் மாம்ச சரீரத்தில் இந்த பூமியில் நீதியை கற்றுக்கொள்ள எழும்புவார்கள்!! வேதம் இதை தான் சொல்லுகிறதே தவிர, திரித்துவர்கள் போதிப்பது போல், கிரியைகளை வைத்து ஒரு கூட்டம் பரலோகத்திற்கும் மறு கூட்டம் நரகத்திற்கோ போவார்கள் என்று அல்ல!! நீங்களோ ஒரு படி மேலே போய், மனிதர்களின் கிரியைகளை நியாயப்படுத்தி, அந்த கிரியைகளினால் ஒரு கூட்டம் பரலோகத்திற்கும், ஒரு கூட்டம் 1000 வருடம் அரசாட்சியில் நீதியை கற்றுக்கொள்ளவும் (அதிலும் பலர் மரித்து போவார்கள் என்றும்), இரக்கம் செய்யாதவர்கள் என்கிற விசேஷித்த கிரியை உள்ளவர்கள் இரண்டாம் மரணத்திற்கு தான் எழும்புவார்கள் என்று சொல்லுகிறீர்கள்!! 1 தீமோ 2ல் இருந்து வசனத்தை கொடுத்தால் வாதத்தை திரிக்கிறேன் என்கிறீர்கள்!! தேவனே இடற செய்கிறார், தேவனே வஞ்சிக்கும் ஆவியை அனுப்புகிறார் என்றும், இப்பிரபஞ்சத்தின் தேவனைக்கொண்டு மனக்கண்களை குறுடாக்கி வைத்து விட்டிருக்கிறார், சிலருக்கு இரக்கம் காட்டுகிறார், சிலரை இடறசெய்கிறார் என்கிற வசனங்களை காண்பித்தாலும், "இரக்கம் செய்யாதவன்" என்கிற ஒரு கூட்டத்தாருக்கு இரக்கம் இல்லாத நியாயத்தீர்ப்பு என்றால் அது மரணம் தான் என்று நீங்களாகவே ஏன் முடிவு செய்கிறீர்கள்!!
இதோ முழு வசனமும் இங்கே, பாதி வசனத்தை வாசித்து விட்டு நீங்கள் இரக்கமற்றவர்கள் இரக்கமற்றவர்கள் என்று நியாயந்த்தீர்த்துக்கொண்டு இருக்கிறீர்களே,
யாருடைய இரக்கம் நியாயத்தீர்ப்புக்கு முன்பு மேன்மைபாராட்டும்!! சகோ அன்பு அவர்களே, மனிதர்கள் நியமிக்கப்பட்டபடியே நடக்கிறார்கள், இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என்கிறார்!! இது யாருடைய இரக்கம்!! நிச்சயமாக மனிதர்களின் இரக்கமாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் தான் இரக்கமற்றவர்களாக இருக்கிறார்களே!! நியாயத்தீர்ப்பிலும் தேவனின் இரக்கமே மேன்மைப்பாராட்டும்!! ஆகவே நீங்கள் எழுதுவது போல் இந்த வசனத்தை கொண்டு மீண்டும் மீண்டும் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் இரண்டாம் மரணத்தை என்று சொல்லிவருவதை தயவு செய்து இனியும் நிறுத்துங்கள்!! ஏனென்றால் கிறிஸ்துவின் ஈடுபலியினால் தேவனின் இரக்கம் நியாயத்தீர்ப்புக்கு முன்பு கிடைத்து, சிலர் கிறிஸ்துவின் சாயலலிலும் பலர் பூமியிலும் நீதியை கற்றுக்கொள்ள எழும்புவார்கள்!! நீதியை கற்றுக்கொள் எழும்பும் கூட்டத்தை நீங்கள் மரணத்திற்கு போவார்கள் என்று சொல்லி, கிறிஸ்துவின் ஈடுபலியை கொச்சை படுத்துகிறீர்கள்!!
தொடரும்............... (உங்கள் மூன்று கேள்விகளுக்கும் நான் பதில் தந்த பிறகு நீங்கள் விவாதத்தை தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்)
//2. “பிறர் குற்றத்தை மன்னியாத நமது குற்றத்தை தேவன் மன்னிக்காவிட்டால் நம் நிலை என்னாகும்” என நீங்கள் சொல்கிறீர்கள்?//
பிறர் குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்கிற அறிவு எப்படி தான் வரும்!! இந்த வேதத்தை எல்லாரும் வாசிக்கவில்லை, வாசிக்காமல் மரித்தவர்களும் கோடி பேர் இருக்கிறார்கள்!! இதை வாசிக்காமல் இருந்ததினால் அவர்கள் பிறர் குற்றத்தை மன்னியாது தான் மரித்து இருந்திருப்பார்கள், அவர்களின் குற்றத்தை தேவன் மன்னிக்காவிட்டால், மீண்டும் உங்களுக்கு உடன்பாடில்லாத வசனத்தை தான் சொல்ல வேண்டியதாகும்,
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
இப்படி எல்லா மனுஷர்களை இரட்சிக்க சித்தம் உள்ள தேவன் மனிதர்களின் செயல்களை கண்டிஷனாக போடுவார் என்றால் எப்படி!! மன்னிக்கப்படுவதினால் இரட்சிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்!!
வேதத்தில் இன்னும் பல விஷயங்கள் இது போன்று இருக்கிறது,
யூதர்களுக்கு நியாயப்பிரமானம் கொடுத்து அதை நித்தியத்திற்கும் உள்ள நியமமாக தேவன் வைத்தார்!! அது நடுவில் நிறுத்தப்படவில்லையா!!
யாத்திராகமம் 12:14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:17 புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
நீ சாகவே சாவாய் என்கிற மரணத்தண்டனையை கொடுத்த பின்பு கிறிஸ்துவை இந்த உலக இரட்சகராக அனுப்பி அதினால் எல்லா ஜனங்களுக்கும் தான் இரட்சிப்பை தருகிறார் என்று மாற்றவில்லையா!!
இயேசு கிறிஸ்து சொன்னதை நான் மறுக்கவில்லை, ஆனால் வேதத்தில் உள்ள பல வசனங்கள் அனைவருக்கும் இரட்சிப்பு என்று இருப்பதால், அதான் பிதா மன்னிக்கமாட்டார் என்று அதை எல்லாம் விட்டு விடலாமா!!
பிதா மன்னிக்கமாட்டார் என்பது "நித்தியத்திற்கு" என்று இல்லை!! கிறிஸ்து தன்னை ஈடுபலியாக ஒப்புக்கொடுத்த பிறகு, அவரே நமக்கு பரிந்துரையாளராகவும், உலகத்தாருக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருந்து மன்னிப்பு பெற்று தருகிறார்!! மேலும் ஜெபிப்பவர்கள் தங்களின் பாவங்கள் மன்னிப்பு பெற ஜெபிப்பவர்களிடம் கிறிஸ்து இப்படி சொன்னார்!! அவரின் சபையில் உள்ளவர்கள் நிச்சயமாக மன்னிப்பவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்!!
I பேதுரு 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
மனிதனின் அன்பிற்கே இத்துனை வல்லமை என்றால் தேவனின் அன்பு என்ன மன்னியாத அன்பா!! ஏழு எழுபது முறை மன்னிக்க சொல்லித்தந்தவர், மன்னியாதிருப்பாரோ!!
கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பிறகு அவரின் பரிந்துரை மற்றும் அவர் மத்தியஸ்தராக இருப்பதால், பிதாவின் இரக்கமும் மன்னிப்பையும் அனைவரும் பெறுகிறார்கள், அது தான் தேவனின் இரட்சிப்பின் திட்டம் மற்றும் அவரின் சித்தமும்!!
மத்தேயு 9:2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
இங்கே படுக்கையிலே கிடந்த திமிர்வாதக்காரன் மன்னிப்பு கேட்கவும் இல்லை, பிறரை மன்னித்தானா என்றும் இல்லை!! அப்படி என்றால் மத் 6:14,15ல் இயேசு கிறிஸ்து சொன்னதை அவரே மீறிவிட்டாரா?
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மத். 6:14,15ன்படி பிதா தானே மன்னிக்க வேண்டும்!! ஆனால் கிறிஸ்து இயேசுவிற்கு அதிகாரம் உண்டென்று சொல்லுகிறாரே!! அங்கே சொன்னதை இங்கே மீறி விட்டாரா!!
மேலும்,
மத்தேயு 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
என்று ஒரு புதிய சட்டத்தை கிறிஸ்து இயேசு ஸ்தாபிக்கிறார்!! அவர் சிந்திய இரத்தம் பாவங்களின் மன்னிப்புக்கே!!
கிறிஸ்துவின் ஈடுபலியினால் கிருபை வந்தது, அந்த கிருபையினால் அனைவருக்கும் இரட்சிப்பு!! கிரியை செய்கிறவர்களுக்கும், கிரியை செய்யாதவர்களுக்கும்!! அநேக வாசஸ்தலங்களில் கிரியை செய்தவர்களுக்கு ஒரு அங்கிகரிப்பு, மற்றவர்களுக்கு நீதியை கற்றுக்கொடுத்தல்!! ஆனால் இரட்சிப்பு அனைவருக்கும் என்று தான் வேதத்தில் இருக்கும் சுவிசேஷம்!! தண்டனை, நரகம், நித்திய அக்கினி போன்றவைகள் சுவிசேஷமாக இருக்க முடியவே முடியாது!! தேவனின் கிருபை, அவரின் அன்பு, அதற்கு முடிவே இல்லை!!
ஒரே முறை தான் மரணம், அதிலிருந்து கிறிஸ்து இயேசுவின் ஈடுபலியினால் அனைவருக்கும் இரட்சிப்பு, கிறிஸ்துவின் சாயலில் ஒரு கூட்டத்தார் உயிர்த்தெழுந்து சபையாக கிறிஸ்துவுடன் சேர்ந்து பூமியில் உயிர்த்தெழ்ந்தவர்களுக்கு நீதியை கற்று தருவார்கள்!! பிறகு தேவன் ஆதாமுக்கு தந்த ஆசிர்வாதம் என்றென்றைக்கும் தங்கும்!! இன்று சாத்தானும் அவனின் சிந்தையும் எப்படி ஜனங்களின் மனக்கண்களை குருடாக்கி வைத்திருக்கிறது, அந்த கண்கள் எல்லாம் தேவனின் ராஜியத்தில் திறக்கப்படும்!! அருமையான அந்த ராஜியத்தை குறித்து தான் ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார் 35ம் அதிகாரத்தில்!!
எபேசியர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
மேலும் ,
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
அடுத்தவர்களை மன்னிப்பதினால் என்று இல்லாமல், நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி சுத்திரிப்பதற்கு அவர் போதுமானவராக இருக்கிறார்!!
சகோ.அன்பு நிச்சயமாக ஒரு யெகொவா சாட்சி என்றுதான் அவரது வாதங்கள் கூறுகின்றன. அல்லது அவர்களின் உபதேசத் தாக்கத்தில் இருக்கலாம். அதனால்தான் உங்கள் விசுவாசம் என்னவென்று கேட்டேன். இறுதி நியாயத்தீர்ப்பில் ஏற்கனவே இரக்கம் செய்யாமல் மரித்துப்போனவர்களை உயிரோடு எழுப்பி உடனடியாக மறுபடியும் மரிக்கச்செய்வது தேவனை ஒரு கோமாளியாகத்தான் காண்பிக்கும். இப்படிப்பட்ட ஒரு அபத்தத்தை எப்படித்தான் யோசிக்க முடிந்ததோ தெரியவில்லை.
இவர் என்னதான் சொல்லவ்ருகிறார் என்பது இவருகே வெளிச்சம்....
இவர் வாதங்களை இனி ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டான் என்பது என் எண்ணம். ஏனென்றால் நியாயப்பிரமாண போதகர்களை கள்ளச் சகோதரர்கள் என்கிறது வசனம்...
சகோ.பெரியன்ஸ்-இடம் நீங்கள் பதித்த பதிவின் அடிப்படையில் சில வார்த்தைகளைக் கூறுவதற்கு மன்னிக்கவும் சகோ.சோல்சொல்யூஷன் அவர்களே!
சோல்சொல்யூஷன்:
//இறுதி நியாயத்தீர்ப்பில் ஏற்கனவே இரக்கம் செய்யாமல் மரித்துப்போனவர்களை உயிரோடு எழுப்பி உடனடியாக மறுபடியும் மரிக்கச்செய்வது தேவனை ஒரு கோமாளியாகத்தான் காண்பிக்கும்.//
தேவன் இப்படி நடந்தால் புத்திசாலி, இப்படி நடந்தால் கோமாளி என நீங்களாகவே ஒரு வரையறை செய்து, அந்த வரையறைக்குள் தேவன் அடங்கியேயாக வேண்டும், வசனங்கள் அந்த வரையறைக்கு பாதகமாக இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும், அல்லது அவற்றை உங்கள் வரையறைக்கு ஏற்றபடி திரிக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறீர்கள்.
உங்களுக்குரிய எல்லையை மீறி நீங்கள் தேவனைக் குறித்து வரையறை செய்கிறீர்கள். அதன் விளைவாகத்தான் “இரக்கம் செய்யாமல் மரித்துப்போனவர்களை உயிரோடு எழுப்பி உடனடியாக மறுபடியும் மரிக்கச்செய்வதைப்” பற்றி வசனம் கூறுகிறதா இல்லையா என்பதை ஆராய்ந்தறியாமல், “அப்படிச் செய்வது தேவனை ஒரு கோமாளியாகத்தான் காண்பிக்கும்” எனும் முடிவை நீங்கள் கூறுகிறீர்கள்.
“மரித்துப்போனவர்களை தேவன் உயிரோடு எழுப்பி உடனடியாக மறுபடியும் மரிக்கச்செய்கிறார்” என்பதற்கான வசனஆதாரத்தை நான் தருகிறேன், முடிந்தால் அந்த ஆதாரத்தை எதிர்த்து, அதைத் தவறு என நிரூபித்துக் காட்டுங்கள். அதைவிடுத்து, தேவன் இப்படிச் செய்தால் அவர் கோமாளி, இப்படிச் செய்தால் அவர் ஏமாளி என்று சொல்லி தேவத்துவத்தை விமர்சனம் செய்யாதீர்கள்.
“மரித்துப்போனவர்களை தேவன் உயிரோடு எழுப்புகிறார்” என்பதற்கான வசனஆதாரம்:
மரித்தவர்கள் தேவனுக்கு முன்பாக எப்படி நிற்கமுடியும்? மரித்தவர்களாகவா நிற்கமுடியும்? உயிருள்ளவர்களாகத்தான் நிற்கமுடியும். மரித்தவர்களை தேவன் உயிரோடு எழுப்பியதால்தான் அவர்கள் அவருக்கு முன்பாக “நிற்பதை” யோவானால் காணமுடிந்தது.
“உயிரோடு எழுப்பி உடனடியாக மறுபடியும் மரிக்கச்செய்கிறார்” என்பதற்கான வசனஆதாரம்:
வெளி. 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
ஆங்கில வேதாகமத்தில்:
Rev 20:15 If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire. NIV
எவனாவது ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவனாகக் காணப்படாதிருந்தால், அவன் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டான்.
இது தனியொருவனான சாத்தானைக் குறிக்கவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். சாத்தான் ஏற்கனவே அக்கினிக் கடலில் தள்ளப்பட்டுவிட்டான் என 20:10-லேயே கூறப்பட்டுவிட்டது.
எனவே வெளி 20:15 கூறுவது ஒரு பிரிவினரான மனிதர்களையே என அறிகிறோம். இவர்கள் வெளி. 20:12-ன்படி தேவனால் உயிரோடெழுப்பப்பட்ட மனிதர்களில் சிலராகத்தான் இருக்கமுடியும்.
எனவே மரித்துப்போனவர்களில் உயிரோடு எழுப்பியவர்களில் சிலரை தேவன் உடனடியாக மரிக்கச் செய்கிறார் என அறிகிறோம். இப்படி அவர் செய்வதால் அவர் கோமாளியா ஏமாளியா என்ற கேள்வியெல்லாம் நமக்குத் தேவையில்லை.
சகோ அன்பு அவர்களே, வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் தானியேலின் தீர்க்கதரிசன புத்தகங்களை தயவு செய்து வேதத்தில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாசிப்பது போல் வாசிக்க வேண்டாம்!! குழப்பம் தான் மிஞ்சும்!! கேள்வி கேட்டால், தேவனிடத்திலே கேளுங்கள், இயேசுவிடத்தில் கேளுங்கள் என்கிற மாதிரியான பதில் தான் வரும்!!
வெளி. 20:15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
இதை நீங்கள் ஒரு கூட்டம் என்று சொல்லுகிறீர்கள்! ஏன் இத்துனை குழப்பம்!! எவர்களின் பெயர்கள் ஜீவப்புத்தகத்தில் இல்லையோ அவர்கள் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டார்கள் என்று சொல்லுவது அநேகருக்கு பொருந்துமா, அல்லது ஜீவப்புத்தகத்தில் பெயர் இல்லாமல் இருந்த சாத்தான் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் என்பது சரியா!! மேலும் "எவனோ" என்கிற பதத்தை குறித்து ஏற்கனவே பதிவு செய்தேன், நீங்கள் பார்க்கவில்லை போல்!! "குறிப்பிட்ட ஒருவன்" என்று அர்த்தம் கொள்ளும் ஒரு சொல் எப்படி பலரை குறிக்கும் என்பதை தெளிவுப்படுத்துங்கள்!!??
Original Word: τις, τι Part of Speech: Indefinite Pronoun Transliteration: tis Phonetic Spelling: (tis) Short Definition: any one, some one Definition: any one, some one, a certain one or thing.
//எனவே வெளி 20:15 கூறுவது ஒரு பிரிவினரான மனிதர்களையே என அறிகிறோம். இவர்கள் வெளி. 20:12-ன்படி தேவனால் உயிரோடெழுப்பப்பட்ட மனிதர்களில் சிலராகத்தான் இருக்கமுடியும்.
எனவே மரித்துப்போனவர்களில் உயிரோடு எழுப்பியவர்களில் சிலரை தேவன் உடனடியாக மரிக்கச் செய்கிறார் என அறிகிறோம். இப்படி அவர் செய்வதால் அவர் கோமாளியா ஏமாளியா என்ற கேள்வியெல்லாம் நமக்குத் தேவையில்லை.//
மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதைமட்டும் ஆராயும் நீங்கள் இந்த விஷயத்தில்மட்டும் தேவன் எப்படி நியாத்தீர்ப்பு செய்வார் என்று உங்கள் திட்டத்தை தேவனுடைய திட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உள்ள வசனங்களை மாத்திரம் உபயோகித்தால் அதிலுள்ள அனைத்து வசனங்களுக்கும் விளக்கம் சொல்ல கடமைப் பட்டுள்ளீர்கள். முதலில் 20:5 ஐ எப்படி விளங்கிக்கொண்டீர்களோ தெரியாது. இல் இது அடைப்புக்குறிக்குள் உள்ளது. (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம்வருடம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன அர்த்தம்?
5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
இவர்கள் யார்? இந்த "பட்சிப்பு" இரண்டாம் மரணமா?
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
பூமியும் வானமும் அகன்றுபோனால் இது எந்த இடம்?
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
மரித்தோர் எப்படி நியாயத்தீர்படைய முடியும்?
இந்த புஸ்தகங்கள் எவை?
நியாயத்தீர்ப்படைந்த பின்னர் பின்வரும் வசனம் யாரைக் குறிக்கிறது?
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
மரணம் என்ற விஷயத்தை அக்கினிக்கடலில் தள்ளமுடியுமா? அதெப்படி இரண்டாம் மரணமாகும்.
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
"பங்கடைவார்கள்"(இனிமேல்) இது 21:8ல் வரும் வசனம், இவர்கள் யார்? உங்கள் கூற்றுப்படி 'இம்மாதிரியான' ஜனங்கள்தான் ஏற்கனவே மரித்தாயிற்றே? 4ம் வசனம் இவ்வாறு கூறுகிறது..
4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
4ம்வசனத்தில் மரணமில்லை என்று சொல்லிவிட்டு, 8ம் வசனத்தில் இரண்டாம் மரணமா?
ஐயா, வெளிப்படுத்தல் புத்தகத்தைப் பொறுத்தவரை இன்னும் அதற்கு முழுமையான விளக்கம் யாருமே அளிக்கவில்லை. கிறிஸ்துவுடைய பிரசன்னமாகுதல் வர வர எதிர்காலத்தில் இன்னும் அதிக தெளிவாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. 'மரித்தோர்' ருக்கும், சிறியோர், பெரியோருக்கும் நேரடி அர்த்தம் கொண்டுள்ளீர்கள்.
லூக்கா15:32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
"மரித்தான்" என்பதற்கு வேறு அர்த்தமும் உண்டு.
தேவன் ஏற்கனவே மரித்தவர்களை எழுப்பி உடனடியாக மீண்டும் மரிக்கச்செய்வார், அவர் அன்பு, "ஞானம்", வல்லமையுள்ள தேவன் என்று யாரிடமாவது சொல்லிப்பாருங்கள்.
-- Edited by soulsolution on Thursday 21st of July 2011 09:12:17 AM
//சகோ அன்பு அவர்களே, வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் தானியேலின் தீர்க்கதரிசன புத்தகங்களை தயவு செய்து வேதத்தில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாசிப்பது போல் வாசிக்க வேண்டாம்!!//
ஆலோசனைக்கு நன்றி சகோதரரே!
//குழப்பம் தான் மிஞ்சும்!!//
எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாகத்தான் இருக்கிறேன்.
//ஜீவப்புத்தகத்தில் பெயர் இல்லாமல் இருந்த சாத்தான் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் என்பது சரியா!!//
சாத்தான் தள்ளப்பட்டான் என்பதை வேதாகமம் இப்படி சுற்றி வளைத்துக் கூறவேண்டிய அவசியமென்ன? சாத்தானுக்கும் ஜீவபுஸ்தகத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அவன் தான் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டுவிட்டதாக ஏற்கனவே 10-ம் வசனத்தில் கூறப்பட்டுவிட்டதே, பின்னர் மீண்டும் ஏன் அவனைப் பற்றி 15-ம் வசனத்தில் கூறவேண்டும்? இக்கேள்விக்கு பதிலே சொல்லாமல் தவிர்த்து வருகிறீர்கள்.
பின்வரும் வசனத்தை சற்று படியுங்கள்.
வெளி. 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
ஜெயங்கொள்கிறவன் ஒருவன் மட்டுமே எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. ஜெயங்கொள்கிறவர்கள் பலர் உண்டு; வெண்வஸ்திரம் தரித்து பலர் நடப்பார்கள் என முந்தின வசனம் (வ4) தெளிவாகக் கூறுகிறது. அவர்களின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடமாட்டார் என இவ்வசனம் (வ5) கூறுகிறது. அப்படியானால் அவர்களைத் தவிர மற்றவர்களின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார் என்றுதானே அர்த்தம்?
ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் அதை (அந்த மிருகத்தை) வணங்குவார்கள் என வெளி. 13:8 தெளிவாகக் கூறுகிறது. இதற்கு மேலாக வேறென்ன ஆதாரம் வேண்டும்? இன்னமும் சாத்தான் ஒருவன் தான் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்படாதவன் எனக் கூறப்போகிறீர்களா? இன்னமும் உங்களால் ஏற்கமுடியவில்லையெனில் பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.
வெளி. 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
இன்னமும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள ஒருவன் சாத்தான் மட்டுமே எனக் கூறப்போகிறீர்களா?
மூல பஷையிலிருந்து உங்களுக்கு அர்த்தத்தை எடுத்து வைத்தும் நீங்கள் உங்கள் கோட்பாட்டில் பிடிவாதமாக தான் இருக்கிறீர்கள்!! "ஒன்றை மாத்திரம்" என்பதை குறிக்கும் சொல் தான் அந்த வசனத்தில் ஒருவன் என்று உள்ளது!! அந்த ஒருவன் சாத்தானாக மாத்திரமே இருக்க முடியும்!! சோல் சொல்யூஷன் கேட்ட கேள்விகளை போலவே நானும் முதலில் கேட்டிருந்தேன், ஆனால் நீங்கள் கிரியை மற்றும் தண்டனையில் மாத்திரமே இருக்கிறீர்கள்!! அதுவும் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து நீங்கள் சொல்லுவதால் சகோ சோல் சொல்யூஷன் கேட்டுக்கொண்டபடியே மற்ற வசனங்களுக்கும் நீங்கள் பதில் தர கடமைப்பட்டவராக இருக்கிறீர்கள்!!
மரித்திருப்போரை பார்த்து இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன!! மரித்திருப்பது பெயர் தான் உயிர்த்தெழுதலா??
சாத்தானுக்கு முன்பாகாவே கள்ளத்தீர்க்கதரிசி, மிருகம் (இது என்னவோ!!) அக்கினி கடலில் இருக்கிறார்களே!! அது என்ன??
மேலும் 20:15ல் ஒருவன் என்பதை நீங்களே கன்கார்டன்ஸ் எடுத்து வாசித்து பாருங்கள்.
//எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாகத்தான் இருக்கிறேன்.//
நீங்கள் தெளிவாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி!! அப்படி என்றால் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கும் 20:5ஐயும், கள்ளத்தீர்க்கதரிசி, மிருகம் இவை எல்லாம் என்னவென்று விளக்குவீர்களென்றால் நல்லா இருக்கும்!! இது எல்லாம் தேவை இல்லை என்று தட்டி கழிக்க வேண்டாம்!!
வெளி. 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
இது தவறான மொழிபெயர்ப்பு!! "எவனோ" என்கிற வார்த்தை மூல பாஷைகளில் இல்லை!! மாறாக, அந்த வசனத்தின் சரியான மொழிப்பெயர்ப்பு,
ஜெயம்கொள்கிறவர்களுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்!! மேலும் அவன் என்கிற மொழிபெயர்ப்பும் சரியானது அல்ல, ஏனென்றால் மூல பாஷையில் அதன் அர்த்தத்தை தருகிறேனே,
Original Word: αὐτός, αὐτή, αὐτό Part of Speech: Personal Pronoun Transliteration: autos Phonetic Spelling: (ow-tos') Short Definition: he, she, it, they, them, same Definition: he, she, it, they, them, same.
வெளி. 20:15ல் உபயோகப்படுத்தப்பட்ட "அவன்" என்கிற வார்த்தை வெளி. 3:5ல் இல்லை என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!! இரண்டு வசனங்களிலும் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வேறு என்பதால், ஜெயங்கொள்ளுகிறவன் என்று அல்ல, ஜெயங்கொள்ளுகிறவர்கள் என்பதே சரியான மொழிப்பெயர்ப்பு!!
ஆனால் வெளி. 20:15ல் ஒருவனை குறித்தே எழுதியிருக்கிறது!! அந்த ஒருவன் வேறு யாரும் இல்லை எதிராளியான சாத்தான் மாத்திரமே!! ஆகிலும் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல கடமையுள்ளவராக இருக்கிறீர்கள் என்பதை மீண்டும் ஞாபப்படுத்த விரும்புகிறேன்!!
Revelation 3:5
Common English Bible (CEB)
5 Those who emerge victorious will wear white clothing like this. I won’t scratch out their names from the scroll of life, but will declare their names in the presence of my Father and his angels.
//“இரக்கம் மேன்மைபாராட்டும்” எனும் சொற்றொடரிலுள்ள “இரக்கம்” எனும் வார்த்தை தேவனின் இரக்கத்தைக் குறிக்கிறதாம்; மனிதர்கள் எல்லோரும் இரக்கமற்றவர்கள்தானாம்; சிறுகுழந்தைக்குக் கூட புரிகிற ஒரு எளிமையான வசனத்திற்கு இப்படியெல்லாம் விளக்கம் சொன்னால், நான் என்ன பதில் சொல்வது?
வசனத்தின் முதல் பகுதியில் மனிதர்களின் இரக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு, 2-வது பகுதியில் தேவனின் இரக்கத்தைப் பற்றி சொல்வதாகக் கூறும் பெரியன்ஸ்-ன் கற்பனை அபாரம். சற்றும் பொருத்தமில்லாத இப்படி ஒரு கற்பனா சக்தி படைத்தவர்களிடம் நான் என்ன சொல்லி என்ன புரிய வைக்கமுடியும்?
யாக்கோபு 2:13-க்கு நான் விளக்கம் தருகிறேன்; அதை உங்களால் ஏற்க முடிகிறதா எனப் பாருங்கள்.
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு “மரணமா, இல்லையா” என்பதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது நிச்சயம் வேதனையுள்ளதாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, நியாயத்தீர்ப்பின்போது தேவனிடமிருந்தும் இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும். அதாவது பிறருக்கு இரக்கம் செய்யாத ஒருவன், தேவனிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது; எனவே தேவனிடமிருந்து அவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும். இதுதான் யாக்கோபு 2:13-ன் முதல் பகுதிக்கான விளக்கம். இதை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மத்தேயு 18:23-35 வசனங்களைப் படித்துப் பாருங்கள். அதன் இறுதி பகுதியை மட்டும் தருகிறேன்.
மத்தேயு 18:32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
இரக்கமில்லாத ஊழியக்காரனுக்கு, அவனுடைய ஆண்டவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைத்ததல்லவா? அதுபோலத்தான் இப்பூமியில் சகமனிதர்களுக்கு இரக்கம் செய்யாதவனுக்கு, தேவனிடமிருந்து இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.
இவ்விளக்கம் உங்களுக்குப் புரிந்தால், தயவுசெய்து அதை சகோ.பெரியன்ஸ்க்குச் சொல்லி புரியவையுங்கள்.
அடுத்து, யாக்கோபு 2:13-ன் 2-வது பகுதிக்கு வருவோம், “நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என்றால், நியாயத்தீர்ப்பின்போது, மற்றெல்லா காரியங்களைவிட, “இரக்கம்” எனும் பண்புதான் மேன்மைபெற்றதாக, முக்கியத்துவமுள்ளதாக இருக்கும் என்பதே.
அதாவது ஒருவன் வேறு பல பாவங்களைச் செய்திருந்தாலும், அவன் “இரக்கமுள்ளவனாக” இருந்தால், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படும். அவன் “இரக்கமற்றவனாக” இருந்தால் அவனது மற்ற பாவங்கள் மன்னிக்கப்படாது. அதாவது அவனிடம் “இரக்கம்” எனும் பண்பு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அவனது பிற பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இதனால்தான் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் என யாக்கோபு கூறுகிறார்.
நீங்கள் கிரியைகளினால் இரட்சிப்பு என்று சொல்லுவதால் உங்களுக்கு தேவனின் இரக்கம் தெரிய வாய்ப்பில்லை தான்!! இரக்கமற்ற மனிதர்களின் இரக்கம் எப்படி மேன்மைப்பாராட்ட முடியும்!! வசனத்தை நன்றாக வாசியுங்கள்!! அது நியாயத்தீர்ப்புக்கு முன்பு என்கிறது, ஆனால் நீங்களோ நியாயத்தீர்ப்பின்போது என்று விளக்கம் தருகிறீர்கள்!! உங்கள் வாதம் உங்களின் கிரியை மேன்மைப்பாராட்டுகிறதே தவிர, தேவனின் அன்பும் தேவனின் இரக்கத்தையும் நிம்புவதாக இல்லை!! நியாயத்தீர்ப்புக்கு முன்பு இரக்கம் மேன்மை பாராட்டுகிறது, இந்த இடத்தில், மற்ற எல்லா பாவங்களை காட்டிலும் இரக்கம் பாராட்டாத பாவம் மிகவும் கொடியது என்றெல்லாம் நீங்களாகவே கிரியையின் உபதேசத்தில் இருப்பதால் சேர்த்துக்கொள்கிறீர்கள்!! வசனம் சொல்லாததை தயவு செய்து சொல்லாதீர்கள்!! நியாத்தீர்ப்புக்கு முன் என்பதையே நியாயத்தீர்ப்பின்போது என்று திரித்து எழுதி கிரியையில் மேன்மை பாராட்டுகிறீர்கள், இதோ வேதம் சொல்லுகிறது,
ரோமர் 3:27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
விசுவாசத்திற்கு முன்பு உங்கள் கிரியை நிற்காது!! நீங்கள் தேவனுக்கு முன்பாகவே உங்கள் கிரியை குறித்து மேன்மைபாராட்டுகிறீர்கள்!! தேவன் இரக்கம் உள்ளவர் நியாயத்தீர்ப்புக்கு முன் அவரின் இரக்கம் மேன்மை பாராட்டும் என்று எழுதினால், உங்கள் கிரியை மேன்மைப்படுத்தி, இரக்கம் செய்தவர்களின் இரக்கமே மற்ற எல்லா பாவங்களுக்கும் முன்பாக மேன்மைபாராட்டும் என்கிற ஒரு அபத்தமான ஆபத்தான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள்!! முதலாவது நியாத்தீர்ப்புக்கு முன் என்பதை வசனத்தில் உள்ளபடியே அர்த்தம் சொல்லுங்கள்!! அதை திரித்து நியாத்தீர்ப்பின் போது என்று எல்லாம் விளக்கம் வேண்டாம்!! குழந்தைக்கு புரிகிற அளவு தான் புரியும், பால் குடிக்கும் குழந்தைக்கு மாமிசம் செரிக்காது!!
I கொரிந்தியர் 1:30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
உங்கள் கிரியைகளை குறித்து மேன்மைப்பாராட்ட வேண்டியது அல்ல, ஏனென்றால் அந்த கிரியை செய்ய ஒருவனுக்கு தேவனே கிருபை தருகிறார், ஒருவனுக்கு தருவதில்லை!! கிரியை செய்கிறவர் இது என்னால் தான் ஆனது என்று மேன்மைபாராட்ட வேண்டாம், மாறாக கர்த்தரின் கிருபையும் இரக்கத்தையும் குறித்தே மேன்மைபாராட்டுங்கள்!! நியாயத்தீர்ப்புக்கு முன்பும் உங்கள் இரக்கம் அல்ல, தேவனின் இரக்கமே மேன்மை பாராட்டும்!!
II கொரிந்தியர் 10:17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
தங்களின் கிரியைகளை குறித்து மேன்மைபாரட்ட வேண்டாமே!! மேலும் நாங்கள் ஒரு போதும் நீங்கள் நீதியின் கிரியை செய்ய வேண்டாம் அல்லது செய்ய கூடாது என்று சொன்னதில்லையே!! அதற்கு மாறாக நாங்கள் கிருபையின் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருக்கிறோம், அந்த நம்பிக்கையும் விசுவாசமும் ஏதோ தானாக நான் முயற்சித்து என் கிரியையினால் வந்தது என்று நான் நம்புவது கிடையாது!! உலக தோற்ற முதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்ததை என் கிரியை மாற்றி விட்டது என்றால் கிரியையில் தான் மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பேன்!!
ஆக சகோ அன்பு அவர்களே, நீங்களோ கிரியையில் மேன்மைபாராட்டி நியாயத்தீர்ப்பின் போதும் உங்கள் கிரியை மேன்மைபாராட்டும் என்கிற விளக்கத்தை தருகிறீர்கள்!! ஆனால் நானோ, தேவனின் கிருபையின்படி, தேவனின் இரக்கமே நியாயத்தீர்ப்புக்கு முன் இருக்கும் என்று வசனம் சொல்லியபடி சொல்லுவதை நீங்கள் நைய்யாண்டி செய்து, இது குழந்தைகளும் புரிந்துக்கொள்ளும் வசனம் என்கிறீர்கள்!! நியாயத்தீர்ப்புக்குமுன் என்பதையே நியாயத்தீர்ப்பின்போது என்று திரித்து எழுதி உங்கள் விளக்கத்தில் உங்கள் புரிந்துக்கொள்ளுதலை புரிந்துக்கொண்டேன்!!