kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Moderator பக்கம் - சில சந்தேகங்கள்


Executive

Status: Offline
Posts: 425
Date:
Moderator பக்கம் - சில சந்தேகங்கள்


கோவை பெரியன்ஸ்!! திரியில் பெரியன்ஸ்:

//இனி நமக்கு தேவை பவுல் சொல்லும், நம்பிக்கை, விசுவாசம், அன்பு என்கிற மூன்று தான், அதிலும் அன்பே பெரிது என்று 1 கொரி 13ம் அதிகாரத்தின் நமக்கு தெரிவித்திருக்கிறார்!!//

புதிய ஏற்பாட்டு போதனைகள் யாவும் சபைக்கு மட்டுமே என்றும், உலகத்தாருக்கு அல்ல என்றும் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் 1 கொரி. 13-ம் அதிகாரமும் சபைக்குத்தானே உரியது? அதை ஏன் நமக்குத் தேவை என்கிறீர்கள்?

அதான் கிரியை இல்லாமலேயே உலகத்திற்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்கிறீர்களே, பின்னர் ஏன் நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகியவையெல்லாம் நமக்குத் தேவை என்கிறீர்கள்?

தேவை என்றால் எதற்காகத் தேவை? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.



-- Edited by anbu57 on Sunday 17th of July 2011 03:48:29 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேவை, ஏனென்றால் தேவன் நியமித்தது!! இப்ப இருக்கிறது என்று சொல்லவில்லை!! தேவை என்று தான் எழுதியிருக்கிறேன்!! வரும், இப்ப இல்லை, ராஜியத்தில் வரும்!! அதற்கு உண்டான நம்பிக்கையும் விசுவாசத்தையும் தேவன் எல்லாருக்கும் தரவில்லை!! ஆகவே தான் நீங்கள் இது உங்களின் கிரியையினால் வரும் என்று நினைக்கிறீர்கள்!! இப்பொழுது அந்த அன்பு இல்லை, ஆனால் அந்த அன்பு வரும் என்கிற நம்பிக்கையை எனக்கு விசுவாசத்தை ஈவாக தந்த தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது!!

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

கிருபை, விசுவாசம் இரட்சிப்பு அனைத்துமெ தேவனுடைய ஈவு தான்!!

தேவன் தந்த ஈவை நீங்கள் கிரியைகள் கொண்டு விலை பேசுகிறீர்கள்!! நீங்கள் உங்கள் சிந்தையில் செய்யும் கிரியைகள் உங்களுக்கு ஒரு வேளை பெரிதாக இருக்கலாம், ஆனால் தேவனின் பார்வையில் அவைகள் கந்தலான ஒன்றாம்!! எனக்கு என் தேவன் ஈவாக கொடுத்த விசுவாசத்தினால் தேவனின் அன்பு மனிதர்கள் மத்தியில் வரும் நாளிற்காக நம்பிக்கையுடன் இருக்கிறேன்!! நீங்கள் தாராளமாக கிரியைகளில் நிலைத்திருங்கள்!!

மாற்கு 10:26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள். 27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

எனக்கு விசுவாசத்தை தந்த தேவனாலே எல்லாம் கூடும் என்பது என் நம்பிக்கை!! உங்கள் கிரியையினால் நீங்கள் சாதிக்கலாம் என்பது உங்களின் நம்பிக்கை!! ஆனால் இறுதியில் நிறைவேற போவது தேவனின் சித்தம்!! அதற்காக அவர் அனைத்தையும் அனுமதித்துக்கொண்டு இருக்கிறார், சாத்தான் உட்பட‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//கிருபை, விசுவாசம் இரட்சிப்பு அனைத்துமே தேவனுடைய ஈவு தான்!!//

ஒரு விஷயத்துக்குச் சொன்ன வசனத்தை எல்லா விஷயங்களுக்கும் என நீங்கள் புரிந்துகொள்வதால் கிரியையை ஒரு பொருட்டாக நீங்கள் எடுக்காமல், பிறருக்கும் தவறான தகவலைக் கூறி வருகிறீர்கள். கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள் எனச் சொல்லும் அதே வேதாகமம், கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்றும் கூறுகிறது.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என இயேசு சொல்கிறார். தேவனுடைய கிருபை ஒன்றுதான் எல்லாவற்றிற்கும் எனில் இயேசு ஏன் இப்படிச் சொல்லவேண்டும்?

கிரியை சம்பந்தமான ஏராளமான வசனங்களில் ஒன்றை மட்டுமே கூறியுள்ளேன். வேதாகமம் முழுவதும் துன்மார்க்கன், நீதிமான் ஆகியோருக்கான Definition மற்றும் பலன்கள் கூறப்பட்டுள்ளன. நீங்களோ நீதிமான் ஒருவனுமில்லை எனும் ஒரு வசனத்தைச் சொல்லி மற்ற அனைத்து வசனங்களையும் அவமாக்கிப் போடுகிறீர்கள்.

கிரியை தேவையில்லை எனச் சொல்லும் நீங்கள், கிரியையில்லாமல் இருக்கிறீர்களா? நிச்சயமாக உங்களிடம் நற்கிரியை இருக்கத்தான் செய்யும் (இதற்கு சகலமும் தேவசித்தமே திரியில் சோல்சொல்யூஷனின் கூற்றே சாட்சி). ஆனால் மற்றவர்கள் கிரியையில் பலப்படாதபடி அவர்களுக்கு இடறலான தகவலைச் சொல்லி வருகிறீர்கள்.

கிரியையைப் பற்றியும் அது சம்பந்தமான வசனங்களையும் எடுத்துச் சொன்னால், எல்லா மதமும் கிரியையைப் பற்றித்தானே கூறுகின்றன என சம்பந்தமேயில்லாமல் குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறீர்கள். மற்ற மதங்கள் கிரியையைப் பற்றி கூறினால் கிறிஸ்தவம் அதைப் பற்றிக் கூறக்கூடாது என சட்டமா என்ன?

வேதாகமம் சொல்வதை நான் சொல்கிறேன், அவ்வளவே. மற்ற மதங்கள் கூறுகிறதா இல்லையா எனும் கதைக்குதவாத கேள்விகளை நான் கேட்பதில்லை. வேதாகமம் கூறுகிறது என நான் சொன்னால், வேதாகமம் கூறவில்லை என முடிந்தால் சொல்லிப் பாருங்கள். அதை விடுத்து மற்ற மதங்களின் விஷயங்களை ஏன் இழுக்கிறீர்கள்?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கிரியையை வலியுறுத்தி ஏராளமான வசனங்கள் வேதாகமத்தில் உண்டு, உண்டு, உண்டு. இதை உங்களால் திட்டவட்டமாக மறுக்கமுடியுமா? இப்படிக் கேட்டால், வேதாகமத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியுமா எனும் கேள்வியைக் கேட்பீர்கள். அதற்குத்தான் பவுலின் பின்வரும் வசனத்தை எத்தனையோமுறை எடுத்துப்போட்டுள்ளேன், இப்போதும் போடுகிறேன்; முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் (அதாவது புறஜாதியாரிலும்) பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. (இந்த வசனத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் தேவன் பட்சபாதமில்லாமல் அனைவருக்கும் நித்தியஜீவனைக் கொடுத்துவிடுவார் எனும் தவறான தகவலைக் கூறிவருகிறீர்கள். எந்த சந்தர்ப்பத்தில் இக்கூற்று கூறப்பட்டுள்ளது என்பதை சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். நியாயப்பிரமாணம் கையில் கிடைத்தவன்/கிடைக்காதவன் என்ற வித்தியாசமின்றி, அதாவது உங்கள் கூற்றுப்படி வேதாகமம் கையில் கிடைத்தவன்/கிடைக்காதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் கிரியையின் அடிப்படையில்தான் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்பதே, தேவனிடத்தில் பட்சபாதமில்லை எனும் கூற்றின் அர்த்தம்)

12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.(நீதிமான் ஒருவனுமில்லை எனும் ஒரு வசனத்தையே கீறல் விழுந்த இசைத்தட்டு போல மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே, இந்த வசனத்தில் எந்த நீதிமானைக் குறித்து பவுல் கூறுகிறார்? பவுலுக்கென்ன பைத்தியமா, ஒரு வசனத்தில் நீதிமான் ஒருவனும் இல்லை என சொல்லிவிட்டு, மற்றொரு வசனத்தில் இப்படிச் செய்தால்தான் நீதிமான்களாக்கப்படுவார்கள் எனச் சொல்வதற்கு?)

14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ஆம், நியாயத்தீர்ப்பு நாளில்தான் கிரியைக்கான பலன்கள் உங்களுக்கு விளங்கும். மனுஷனின் சித்தம் என ஒன்றுமில்லை, அது நடக்கவும் நடக்காது எனக் கூறுகிறீர்களே, பின்னர் ஏன் மனுஷரின் அந்தரங்க சிந்தைகள் மற்றும் கிரியைகளைக் குறித்து தேவன் நியாயத்தீர்ப்பு கொடுக்கவேண்டும்?

நடப்பவை அனைத்துக்கும் தேவனே பொறுப்பு என்கிறீர்கள்; பின்னர் ஏன் அவர் மனுஷனைப் பொறுப்பாக்கி அவனுடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்பு கொடுக்க வேண்டும்?

நீதிமான் ஒருவனும் இல்லை எனக் கீறல் விழுந்த இசைத்தட்டு போல மீண்டும் மீண்டும் சொல்லும் உங்களுக்கு நீதிமான் பற்றிய மற்றுமொரு வசனம்.

அப்போஸ்தலர் 10:34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

எந்தக் கொர்நேலியுவை சாட்சியாக வைத்து பேதுரு இவ்வாறு கூறுகிறாரோ அந்தக் கொர்நேலியுவின் கிரியை பற்றி வேதாகமம் கூறுவதை சற்று படியுங்கள்.

அப்போஸ்தலர் 10:1 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். 2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

 22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.

இந்தக் கொர்நேலியுவின் எந்தக் கிரியைகள் தேவசந்நிதியில் எட்டினது என வேதாகமம் கூறுவதையும் சற்று படியுங்கள்.

அப்போஸ்தலர் 10:4 அப்பொழுது அவன் (தேவதூதன்): உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

இவ்வளவாயும் இதற்கு மேலாகவும் ஏராளமான வசனங்கள் கிரியையைக் குறித்து கூறுவதால்தான் அதைக் குறித்து நான் கூறுகிறேனேயொழிய, நீங்கள் சொல்வதுபோல் கிருபையில் நம்பிக்கை வையாமல் கிரியையில் மட்டுமே நான் நம்பிக்கை வைப்பதால் அல்ல.

எந்தெந்த விஷயங்களில் கிருபையைச் சார்ந்திருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களில் கிரியையைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் பகுத்தறியத் தவறியதால்தான், நீங்களெல்லாம் கிருபையைச் சார்ந்தவர்களென்றும் என்னைப் போன்றவர்களெல்லாம் கிரியையைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லி வருகிறீர்கள்.

உண்மையில் நானும் கிருபையைச் சார்ந்தவன்தான் என்பதை நான் நன்கறிவேன். எந்த விஷயத்தில்?

ஆதாமின் பாவத்தால் நம்மேல் சுமந்த பாவசுபாவம் மற்றும் அதினிமித்தம் உண்டான மரணம் ஆகியவற்றிலிருந்து நான் விடுதலையாக்கப்படுவதற்கு தேவனின் கிருபையையே நான் சார்ந்துள்ளேன். அந்த விடுதலையால்தான் 1 கொரி. 15:22-ன்படி நான் உயிர்த்தெழுவேன்.

ஆனால் உயிர்த்தெழுந்த நான், 2-ம் மரணத்தில் பங்கடையாமல் இருக்கவேண்டுமெனில், என் கிரியையைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அவனவன் கிரியைக்குத்தக்கதான் பலன் என வேதாகமம் கூறுவதை என்னால் நிச்சயமாகப் புறக்கணிக்க இயலாது.

எல்லாவற்றிற்கும் தேவனுடைய கிருபை மட்டுமே காரணம் எனக் கூறும் நீங்கள், அவனவன் கிரியைக்குத்தக்கதான பலன் பற்றி வேதாகமம் கூறுவதை சற்று விளக்குங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இந்தக் கொர்நேலியுவின் எந்தக் கிரியைகள் தேவசந்நிதியில் எட்டினது என வேதாகமம் கூறுவதையும் சற்று படியுங்கள்.//

நீங்கள் கிரியை என்று எதை சொல்லுகிறீர்கள்?

தேவனின் ஆவி (சிந்தை) புறஜாதியாருக்கும் சேர வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவனே கொர்நேலியு!! கொர்நேலியு புறஜாதியாக தேவனை அறியாத காலத்தில் உள்ள கிரியைகள் அவன் உத்தமன் என்றும் அவன் மூலமாக முதலில் புறஜாதிகளுக்கு சென்றது!! எப்படி யூதர்களுக்கு ஆவி வல்லமையாக பொழியப்பட்டதோ அப்படியே கொர்நேலியு வீட்டிலும் நடந்தது!! தேவன் அவனை கனப்படுத்த சித்தமுள்ளவராய் செய்தார்!!

வெளிப்படித்தலில் சொல்லப்பட்ட அவனவனின் கிரியை என்பது, விசுவாசத்தை சார்ந்த கிரியையே அன்றி ஜெயிலில் போய் பார்த்தது, ஆஸ்பத்திரியில் போய் பார்த்தது என்று இல்லை, ஏனென்றால் இந்த விதமான கிரியகளுக்கு விசுவாசம் அவசியம் இல்லை!!

பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட சட்டத்தை பின்பற்றுவதே கிரியையாக இருந்தது!! புதிய ஏற்பாட்டி விசுவாசமே கிரியையாக இருக்கிறது, அது தேவனின் ஈவாக இருக்கிறது, அந்த விசுவாசம் எல்லாருக்கும் இல்லாததால் எல்லாரும் விசுவாசத்தின் கிரியை எப்படி செய்ய முடியும்?

கிரியை கிரியை என்று சொல்லி வரும் நீங்கள் எதை கிரியை என்று விளக்கமாக சொன்னால் நல்லா இருக்கும், நாங்களும் கேள்விகள் கேட்கலாமே!!

//எந்தெந்த விஷயங்களில் கிருபையைச் சார்ந்திருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களில் கிரியையைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் பகுத்தறியத் தவறியதால்தான், நீங்களெல்லாம் கிருபையைச் சார்ந்தவர்களென்றும் என்னைப் போன்றவர்களெல்லாம் கிரியையைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லி வருகிறீர்கள்.//

கிருபை ஒரு சில விஷயங்களுக்கு மாத்திரமே நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், ஆனால் வேதம் சொல்லுவது,

புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

இது தான் என் சிந்தை!! நான் நிர்மூலமாகாதிருப்பது தேவனுடைய கிருபையே!! ஏதோ ஒரு சில காரியங்களுக்காக தேவ கிருபையயையும் மற்றவைகளுக்கு "சொந்த கிரியைகள்"ஐ சார்ந்து இருப்பவன் இல்லை!! அப்படியே நான் கிரியை செய்தாலும் அது இடது கை வலது கைக்கு தெரியாதப்படிக்கு இருப்பது தான் கிரியை!! நான் கிரியை செய்கிறேன், நான் கிரியை செய்கிறேன் என்று சொல்லுவதே தேவன் கிரியை செய்ய வைத்திருப்பதையே மட்டு படுத்துவதாகும்!! கிரியை செய்யாதீர்கள் என்று நாங்கள் யாரும் போதிக்கவில்லை, கிரியை யார் செய்வதில்லை என்று தான் கேட்க்கிறோம்!! கிறிஸ்துவை அறிந்தவர்களும் கிறிஸ்துவை அறியாதவர்கள் போல் கிரியை ஏன் நம்புகிறீர்கள் என்று தான் கேட்க்கிறோம், அப்படி செய்வதால் தேவனின் கிருபையை மட்டுப்படுத்துவதாக இருக்கிறது!!

//எல்லாவற்றிற்கும் தேவனுடைய கிருபை மட்டுமே காரணம் எனக் கூறும் நீங்கள், அவனவன் கிரியைக்குத்தக்கதான பலன் பற்றி வேதாகமம் கூறுவதை சற்று விளக்குங்கள்.//

அவனவன் செய்யும் கிரியை அவனவனுக்கு தேவனின் ராஜியத்தில் சத்தியத்தை கற்றுக்கொள்ள உதவும்!! ஏனென்றால் அவனவனுக்கு ஏற்றுக்கொள்ளும் இருதயம் இருக்கிறது!! இப்பொழுது பிசாசையும் வைத்து மனதை குறுடாக்கிவைத்திருக்கிறார், ஆனால் அப்பொழுது பிசாசை கட்டி போட்டு, கற்றுக்கொடுக்கப்படும் போது அவனவன் செய்த கிரியைகள் அவனவன் சத்தியத்தை சுலபமாக ஏற்றுக்கொள்ள செய்யும்!! இது தான் அவனவன் செய்யும் கிரியையின் பலனாக இருக்க முடியும்!! மற்றப்படி "இரண்டாம் மரணம்" என்கிற ஒரு கொடூரத்திலிருந்து காப்பாற்ற உங்களுடைய கிரியை உதவும் என்பது அபத்தமான சிந்தையாகும்!!

அவரின் கிருபையினால் தான் எல்லாரும் உயிர்த்தெழுவார்களே, பிறகு என்ன உங்களின் கிரியை உங்களை இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கும்!!

//11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. (இந்த வசனத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் தேவன் பட்சபாதமில்லாமல் அனைவருக்கும் நித்தியஜீவனைக் கொடுத்துவிடுவார் எனும் தவறான தகவலைக் கூறிவருகிறீர்கள். எந்த சந்தர்ப்பத்தில் இக்கூற்று கூறப்பட்டுள்ளது என்பதை சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். நியாயப்பிரமாணம் கையில் கிடைத்தவன்/கிடைக்காதவன் என்ற வித்தியாசமின்றி, அதாவது உங்கள் கூற்றுப்படி வேதாகமம் கையில் கிடைத்தவன்/கிடைக்காதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் கிரியையின் அடிப்படையில்தான் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்பதே, தேவனிடத்தில் பட்சபாதமில்லை எனும் கூற்றின் அர்த்தம்)//

இது உங்களின் புரிந்துக்கொள்ளுதலாகும்!! அனைவரையும் இரட்சித்து அனைவருக்கும் சத்தியத்தை தருவதே நித்தியஜீவனை தருவதற்கு தான் என்று நீங்கள் மறுத்து, உங்களின் கிரியை மேன்மைப்பாராட்டி தவறான போதனையை தருகிறீர்கள்!! நீங்களாகவே எல்லாரையும் இரட்சிக்க சித்தம் இருக்கு தான், ஆனால் என்று ஒரு ஆனால் போட்டு தேவனின் சித்தத்தையே கேள்விகேட்டு, அதற்கு மாறாக உங்களின் கிரியை நம்புகிறீர்கள்!! தேவன் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் தான் "என் ஜனங்கள்" என்கிற யூதர்களுக்கு மாத்திரம் இல்லை, புறஜாதிகளுக்கும் அதே இரட்சிப்பை தருவார் என்கிறது வேதம்!! கிரியைகளின் பேரில் தான் பட்சபாதமில்லை என்றால் ஏன் சுவிசேஷம் சொல்லியே ஆக வேண்டும், பேசாமல் கிரியை செய்யும் புறஜாதியாக இருக்க விட வேண்டியது தானே!! அவர்கள் அங்கே கிரியை தானே செய்கிறார்கள்!! நீங்கள் தவறாக புரிந்துக்கொண்ட இரண்டாம் மரணத்திற்கு அவர்களின் கிரியைகளினால் போகாமல் இருப்பார்களே!! ஏன் சுவிசேஷம் சொல்லியே ஆக வேண்டும் என்கிற போதனையையும் சேர்த்து தருகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட சட்டத்தை பின்பற்றுவதே கிரியையாக இருந்தது!! புதிய ஏற்பாட்டில் விசுவாசமே கிரியையாக இருக்கிறது, //

என்ன சகோதரரே! உங்கள் இஷ்டம்போல் வரையறை செய்கிறீர்கள். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என வசனம் சொல்லியிருக்கையில், விசுவாசம் தான் கிரியை எனும் அபத்தமான கூற்றை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

கிரியை வேறு, விசுவாசம் வேறு. பழைய ஏற்பாடானாலும் சரி, புதிய ஏற்பாடானாலும் சரி, (சடங்காச்சார கற்பனைகளைத் தவிர்த்து பிற) கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் கிரியை. பழைய ஏற்பாட்டில் மோசே மூலம் தேவன் கற்பனைகளைக் கூறினார், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து மூலம் கற்பனைகளைக் கூறினார்.

பெரியன்ஸ்:

//கிரியை கிரியை என்று சொல்லி வரும் நீங்கள் எதை கிரியை என்று விளக்கமாக சொன்னால் நல்லா இருக்கும், நாங்களும் கேள்விகள் கேட்கலாமே!!//

எது கிரியை என்பதுகூட தெரியாமல் இத்தனை வருடம் வேதத்தை ஆராய்கிறேன் என்கிறீர்கள். மெய்யாகவே எனக்கு மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. எது கிரியை என்பதை அறிய மிக எளிதான பின்வரும் வசனபகுதியைப் படியுங்கள்.

யாக்கோபு 2:8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9 பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

13 ... இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 16 உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

இப்போதாவது கிரியை என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன என்பது புரிந்ததா? அன்பு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் நாம் செய்கிற செயல்கள்தான் கிரியை.

பெரியன்ஸ்:

//அப்படியே நான் கிரியை செய்தாலும் அது இடது கை வலது கைக்கு தெரியாதபடிக்கு இருப்பது தான் கிரியை!! நான் கிரியை செய்கிறேன், நான் கிரியை செய்கிறேன் என்று சொல்லுவதே தேவன் கிரியை செய்ய வைத்திருப்பதையே மட்டுப்படுத்துவதாகும்!!//

அப்படியானால் நான் என்ன கொட்டடித்து விளம்பரம் செய்தா கிரியை செய்கிறேன்? தேவையற்ற தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம் சகோதரரே! கிரியை என்றால் என்னவென்றே தெரியாத உங்களுக்கு, கிரியை பற்றிய போதனை பரியாசமாகத்தான் இருக்கும். ஆனால் வேதாகமம் ஆதி முதல் அந்தம் வரை கிரியையைத்தான் வலியுறுத்துகிறது.

ஆதியாகமம் 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;

உபாகமம் 15: 7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

ஏசாயா 1:16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; 17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

ஏசாயா 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். 8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

எசேக்கியேல் 18:5 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும், 7 ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, 8 வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, 9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். 15 நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

யோவான் 5:29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

2 கொரி. 5:10 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். (இதைத்தான் அவனவன் கிரியைக்குத் தக்க பலன் என இயேசு சொல்கிறார்)

கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

எபேசியர் 6:7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, 8 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.

1 தீமோ. 6:17  இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. (நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ள எது ஆதாரமாயிருக்கிறது என்பதை சற்று கவனியுங்கள்)

தீத்து 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். (தைத் திட்டமாய் போதிக்கவேண்டும், எது நமக்கு நன்மையானது, எது பிரயோஜனமானது எனப் பவுல் சொல்வதை உற்று கவனியுங்கள்)

யாக்கோபு 4:17 ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

வெளி. 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

இதுவரை நான் தந்துள்ள வசனங்கள் மிகச்சில துளிகளே! இன்னும் ஏராள வசனங்கள் உண்டு. உங்கள் பார்வையில் இவ்வசனங்கள் கூறுவதெல்லாம் புறஜாதியினரும் செய்கிற காரியமாகத்தான் தெரியும். அதிலொன்றும் தவறில்லை. நம்மைவிட அவர்கள் அதிக நற்கிரியைகளைச் செய்கின்றனர் என்பது மெய்தான். அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம், அவர்களின் சுபாவமான அன்பு மற்றும் மனச்சாட்சியின்படி நடப்பது. அவர்களின் அக்கிரியைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கு ஆதாரமாகத்தான் ரோமர் 2:14-16 வசனங்களைக் காட்டியிருந்தேன்.

ஆனால் எதையுமே ஆழமாகப் படியாமல் பதில் தருகிறீர்கள்.

பெரியன்ஸ்:

//மற்றப்படி "இரண்டாம் மரணம்" என்கிற ஒரு கொடூரத்திலிருந்து காப்பாற்ற உங்களுடைய கிரியை உதவும் என்பது அபத்தமான சிந்தையாகும்!!//

தேவயில்லாமல் வார்த்தைகளைக் கொட்டாதீர்கள் சகோதரரே! உங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் கணக்கொப்புவிக்க வேண்டும்.

உங்களுடைய கிரியை எனச் சொல்லி பரியாசம் வேண்டாம். கிரியை பற்றிய ஏராளமான வசனங்களைத் தந்துவிட்டேன். இனியும் அதை மட்டுப்படுத்தி விமர்சிக்காதீர்கள்.அப்படி விமர்சித்தால் அது என்னை அல்ல, வேத வசனத்தையே விமர்சிப்பதாக இருக்கும்.

அனைவரும் உயிர்த்தெழுந்து, 1000 வருட அரசாட்சி நிறைவுற்று அதன்பின்னர்தான் இறுதி நியாயத்தீர்ப்பு. அந்த இறுதி நியாயத்தீர்ப்பில் அவனவன் கிரியைக்குத்தான் பலன் என வேதாகமம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது (வெளி. 20:12,13). அந்த நியாயத்தீர்ப்பின்போதுதான் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவன் 2-ம் மரணம் எனும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டான் என 14,15 வசனங்கள் கூறுகின்றன.

எனவே 2-ம் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது நம் நற்கிரியைகளே என என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும். வெளி. 20:11-15 வசனங்களை நிதானமாகப் படித்துப் பாருங்கள். அவற்றில் தேவகிருபை, ஈவு பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? முழுக்க முழுக்க கிரியை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

பெரியன்ஸ்:

//அவரின் கிருபையினால் தான் எல்லாரும் உயிர்த்தெழுவார்களே, பிறகு என்ன உங்களின் கிரியை உங்களை இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கும்!! //

வெளி. 20:11-15 வசனங்களைப் படித்துப் பார்த்தீர்களானால் உங்களது இக்கேள்வி அபத்தமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

பெரியன்ஸ்:

//தேவன் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் தான் "என் ஜனங்கள்" என்கிற யூதர்களுக்கு மாத்திரம் இல்லை, புறஜாதிகளுக்கும் அதே இரட்சிப்பை தருவார் என்கிறது வேதம்!!//

தேவன் தரும் இரட்சிப்பைக் குறித்து அவ்வசனங்கள் கூறவேயில்லை. மீண்டும் வசனங்களைத் தருகிறேன் படியுங்கள்.

11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

இவ்வசனங்களில் எங்காவது தேவன் தரும் இரட்சிப்பைக் குறித்து பவுல் கூறுகிறாரா? புறஜாதிகள் யூதர்கள் யாராயினும் பட்சபாதமில்லாமல் அவர்களின் கிரியைகளின்படிதான் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்கிறார். உள்ளங்கை நெல்லிக்கனி போல உள்ள இவ்வசனங்கள்கூட உங்களுக்குப் புரியவில்லையினில் இதற்குமேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நியாயத்தீர்ப்ப்பு நாளில்தான் உங்களுக்கு விளங்கும்.

பட்சபாதம் பற்றி மற்றொரு வசனம் தந்திருந்தேன், அதுவுமா புரியவில்லை.

அப்போஸ்தலர் 10:34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

இவ்வசனத்திலும் தேவன் தரும் இரட்சிப்பு பற்றி பேதுரு எதுவும் சொல்லவில்லை என்பதை அறியவும்.

பெரியன்ஸ்:

//கிரியைகளின் பேரில் தான் பட்சபாதமில்லை என்றால் ஏன் சுவிசேஷம் சொல்லியே ஆக வேண்டும், பேசாமல் கிரியை செய்யும் புறஜாதியாக இருக்க விட வேண்டியது தானே!!//

சுவிசேஷம் என்றாலே நல்லகனிகளைக் கொடுக்கத்தக்கதான மனந்திரும்புதல்தான். யோவானின் சுவிசேஷ அறைகூவலில் என்ன சொன்னார் என்பதை சற்று படியுங்கள்.

லூக்கா 3:6 அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

 7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: ... 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ... 9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான். 

10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான். 

12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

நல்லகனி (நற்கிரியை) கொடாத மரம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் (அதாவது 2-ம் மரணத்தில் அழியும்) என்பதுதான் யோவானின் சுவிசேஷ அறிவிப்பு. இதற்கும் மேலாக கிரியை பற்றி நான் சொல்லவேண்டுமா?



-- Edited by anbu57 on Sunday 17th of July 2011 06:30:07 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நல்லது செய், கொலை செய்யாதே, பொய் பேசாதே, அன்பாக இருக்கவும், இரக்கஞ்செய்யவும், போன்றவற்றை கிரியை அல்ல, மாறாக சுவபாவம் என்கிறே நான்!! இதை கிரியை என்று தெரியாததினால் நான் வேதத்தில் என்ன ஆறாய்ந்தேன் என்று தனிப்பட்ட விமர்சனமும் சகிக்கவில்லை!!


மன்னிக்கனும், இவைகளை நீங்கள் கிரியை என்று சொல்லுவதே ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் கிறிஸ்துவின் சாயலை அடைய விரும்புகிற யாருக்கும் இப்படி எல்லாம் செய்வது ஈவு தான், இது எல்லாம் சுவாபவத்தில் இருப்பவைகள்!! நீங்களோ இதை கிரியை என்று சொல்லி அதை பெரிது படுத்துகிறீர்கள்!! உன்னிடத்தில் அன்பு கூருகிற ஒருவனுக்கு பதிலாக அன்பு கூருவது என்ன கிரியை!! உன்னிடத்தில் அன்பு கூராதவனிடத்தில் அன்பு கூருவது அதை விட பெரிது, கிறிஸ்து அதை செய்தார்!! அன்பை பற்றி இன்றைய சுவிசேஷர்கள் பேசுவதற்கு தகுதியில்லாதவர்கள்!! தேவனின் அன்பை குறித்து அரியாதவர்கள் மனிதனிடத்தில் அன்பு கூருவதை குறித்து பேசுவதெல்லாம் சும்மா!! அன்பு கூருவது எல்லாம் சுவபாவத்தில் இருக்க வேண்டும், இதை ஒரு கிரியை என்று சொல்லுவது கிரியையை பெரிதுப்படுத்துவதாகும்!!

ரோமர் 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்!! அவர் எந்த கிரியையினால் இந்த பெயரை பெற்றார், ஏனென்றால் அவரின் விசுவாசமே அவருக்கு நீதியுள்ளது என்று என்னப்பட்டது என்கிறது வேதம்!! இப்படி விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவது ஆபிரகாமிற்கு மாத்திரம் அல்ல, நமக்காகவும் தான் என்று அப்போஸ்தலர் எழுதுகிறார்:

ரோமர் 4:23. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

நீங்கள் இருக்கும் போதனையை நிலைநாட்ட நீங்கள் கிரியைக்குண்டான வசனங்களை தந்திருக்கிறீர்கள்!! அதே வேதத்தில் உள்ள பிற வசனங்களையும் தருகிறேன்!!

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

நம் கிரியை நம்மை இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கும் என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விசுவாசமாக இருக்கலாம், ஆனால் ஆதிகாலமுதலில் இருந்தே கிறிஸ்து இயேசுவுக்குள் நம் கிரியைபார்த்து அல்ல, நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே இரட்சிக்கிறார்!!

நீங்கள் சுட்டி காண்பித்த கிரியை எல்லா மதங்களிலும் இருக்கும் நீதியின் கிரியை என்று தான் மீண்டும் சொல்லுகிறேன்!! உங்களுக்கு மற்ற மதங்கள் மேல் அக்கறை இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் கிரியை என்று சொல்லுவதற்கு மற்ற மதங்களுடன் தொடர்பு இருக்கிறது!!

யாக்கோபு 2:21. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 22. விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

இது தான் விசுவாசாத்தினால் உண்டாகும் கிரியை!! நீங்கள் சொல்லும் கிரியை எல்லாரும் செய்வது, தேவனின் விசுவாசத்தில் இப்படிப்பட்டவைகள் சுவபாவத்தில் இருக்கும் காரியங்கள், ஆனால் இதை கூட செய்யாதவர்களிடத்தில் தான் யாக்கோபு இப்படி கடிந்துக்கொள்கிறார்!! விசுவாசத்திற்கு ஏற்ற கிரியைகள் கிறிஸ்துவின் சீஷனாக இருந்து "எல்லாவற்றையும்" விட்டு விட்டு அவரை பின்பற்றுவது தான் நமக்கு கொடுக்க பட்ட கட்டளை!! சுலபமான கட்டளையை சுட்டி காண்பித்து, கடினமானதை விட்டு விட்டீர்களே!!

லூக்கா 14:26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

லூக்கா 14:33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மாற்கு 8:34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

ரோமர் 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

I கொரிந்தியர் 4:13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

இவை எல்லாம் விசுவாசத்தின் கிரியைகள்!! ஆபிரகாம் ஈசாக்கை பலி மேடையில் படுக்க வைத்த கிரியைகளுக்கு ஒப்பானவைகள்!! கிறிஸ்துவை பின்பற்றும் விசுவாசம்!! இவைகளில் நீங்கள் கிரியை என்று பார்ப்பது கிடையாதா!!

இதை மீண்டும் மீண்டும் சொல்ல நிர்பந்திக்கப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் காண்பித்த நீதியின் கிரியைகள் எல்லா மதத்தினரும், ஏன் கடவுள் இல்லை என்று சொல்லுபவனும் செய்வது தான்!! இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லியிருக்கிறேனா!! இல்லையே, ஆனால் இதில் பெருமை பாராட்ட ஒன்றும் இல்லை என்று தான் வேதம் சொல்லுகிறது!! நீங்களோ இவைகள் தான் பிரதானம், இந்த கிரியைகள் தான் இரட்சிக்கும் என்று சொல்லி, நான் வேதத்தை என்னத்த ஆறாய்ந்தேன் என்கிற அளவிற்கு எழுதியிருக்கிறீர்கள்!!

இப்படி சீஷனாக இருக்கும் கிரியைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று கேட்டால், அதற்கு எல்லாம் வேறு அர்த்தம் சொல்லுகிறீர்கள்!! அப்படி என்றால் இந்த கிரியைகளை யார் செய்வார்கள்!! நீங்கள் சொல்லும் கிரியைகளை எல்லா மதத்தினரும் செய்கிறார்கள், ஆனால் கிறிஸ்தவர்களுக்கு (சீஷர்களுக்கு) உண்டான கிரியைகளை தான் மேலே உள்ள வசனங்கள் சொல்லுகிறது, இது உங்களின் பார்வையில் என்ன‌??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//நல்லது செய், கொலை செய்யாதே, பொய் பேசாதே, அன்பாக இருக்கவும், இரக்கஞ்செய்யவும், போன்றவற்றை கிரியை அல்ல, மாறாக சுவபாவம் என்கிறே நான்!! இதை கிரியை என்று தெரியாததினால் நான் வேதத்தில் என்ன ஆறாய்ந்தேன் என்று தனிப்பட்ட விமர்சனமும் சகிக்கவில்லை!! //

எது கிரியை என்பதுகூட தெரியாமல் இத்தனை வருடம் வேதத்தை ஆராய்கிறேன் என்கிறீர்கள் என மீண்டும் சொல்கிறேன். எது கிரியை என்பதை அறியத்தக்கதாக ஒரு வேதபகுதியைக் காட்டின பின்னரும் அதைக் கண்டுகொள்ளாமல் நீங்களாக ஒரு வியாக்கினத்தைத் தருகிறீர்கள். மீண்டுமாக பின்வரும் வசனங்களை உன்னிப்பாகப் படியுங்கள்.

யாக்கோபு 2:8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9 பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

13 ... இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 16 உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

இவ்வளவாய் நேரடியான வசன ஆதாரத்தைக் கொடுத்தபின்னரும், இது புறமதத்தார் செய்வதுதானே, இது கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் செய்வதுதானே எனக் கேள்வி கேட்கிறீர்கள்.

எதைப் புறமதத்தார் செய்கின்றனர், புற மதத்தார் செய்யாத எதை நாம் செய்கிறோம் என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது பண்ணவில்லை. வேதத்தின்படி கிரியை என்றால் என்ன என்பதைத்தான் நாம் ஆராய்கிறோம். அதற்கு விளக்கமாக மேற்கூறிய வசனபகுதி ஒன்றே போதுமானது.

மற்றபடி, வேதாகமம் ஆதி முதல் அந்தம் வரை கிரியையை எவ்வளவாய் முக்கியப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டத்தான் அத்தனை வசனங்களை எடுத்துப்போட்டேன். ஆனால் இன்னமும் நீங்கள் புரியாமல், வேறு கோணத்தின் அடிப்படையில் வியாக்கியானம் கூறியுள்ளீர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அனைவரும் உயிர்த்தெழுந்து, 1000 வருட அரசாட்சி நிறைவுற்று அதன்பின்னர்தான் இறுதி நியாயத்தீர்ப்பு. அந்த இறுதி நியாயத்தீர்ப்பில் அவனவன் கிரியைக்குத்தான் பலன் என வேதாகமம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது (வெளி. 20:12,13). அந்த நியாயத்தீர்ப்பின்போதுதான் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவன் 2-ம் மரணம் எனும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டான் என 14,15 வசனங்கள் கூறுகின்றன.

எனவே 2-ம் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது நம் நற்கிரியைகளே என என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும். வெளி. 20:11-15 வசனங்களை நிதானமாகப் படித்துப் பாருங்கள். அவற்றில் தேவகிருபை, ஈவு பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? முழுக்க முழுக்க கிரியை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.//

அது என்ன இறுதி நியாயத்தீர்ப்பு?? எத்துனை விதமான நியாயத்தீர்ப்புகள் நடக்கும்!!?? 1000 வருட அரசாட்சியில் என்ன தான் நடக்கும்? முதலாம் மரணத்திற்கு முன் செய்யப்பட்ட கிரியைகள் ஒரு மனிதன் 1000 வருட அரசாட்சி சென்ற பின்பு "இறுதி நியாயத்தீர்ப்பில்" கைக்கொடுக்கும் என்றால் அந்த 1000 வருடங்கள் அந்த மனிதன் என்ன செய்துக்கொண்டிருப்பான்!! பரலோகத்தில் அல்லது நியாயத்தீர்ப்பின் போது உண்மையிலேயே ஒரு பெரிய சிங்காசனம் போட்டு, ஜீவபுஸ்தகம் என்கிற ஒரு புஸ்தகம் திறக்கப்பட்டு அதில் பெயர் எழுதியிருக்கப்படும் என்று சொல்ல வருகிறீர்களா!!

வெளி. 20:11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

இந்த வசனத்தின்படி ஒரு பெரிய வெள்ளைச் சிங்காசனத்தில் மேல் ஒருவர் அமர்ந்திருப்பார், பூமியிம் வானமும் அகன்றுபோயின என்றும் இடங்காணப்படவில்லை என்றும் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்தால் இந்த நியாயத்தீர்ப்பு வானத்திலோ பூமியிலோ நடக்க வாய்ப்பே இல்லை!! அப்படி தானே, நீங்கள் இதை அப்படி தானெ புரிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!! 1000 வருடம் பூமியில் அரசாட்சி நடந்தவுடன் வெள்ளை சிங்காசனம் போடப்பட்டவுடன் பூமியும் வானமும் காணாமற் போகிறதாம்!! இதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள், அப்படியே எழுத்தின்படியேவா? அப்படி என்றால் அது ஒரு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுக்கும்!!

12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

1000 வருடங்கள் அரசாட்சி நடந்த பிறகு தான் "இறுதி நியாயத்தீர்ப்பு" என்று எழுதியிருக்கிறீர்கள், அதன் பின் "கிரியைகளினால்" இரண்டாம் மரணத்திற்கு போகாதவர்களும், இரண்டாம் மரணத்திற்கு போவர்களும் என்று தீர்ப்பு உண்டாகும், அப்படி என்றால் "மரித்தோராகிய சிறியோரும், பெரியோரும்" யார்?? புஸ்தகங்கள் திறக்கப்பட்டன என்றால் எத்துனை புஸ்தகங்கள், அது மட்டுமில்லாமல் ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது என்றும் அதைக்கொண்டு "மரித்தோர்" தங்கள் கிரியைகளுக்குத்தகதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று இருக்கிறது!! நியாயத்தீர்ப்பு நடந்த பிறகு "இரண்டாம் மரணமா" அல்லது மரித்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பா??

13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

இந்த பகுதியை வாசிக்க சொன்னீர்கள், சரி, 1000 வருடங்கள் அரசாட்சி எங்கே நடக்கிறது, ஏன் சிங்காசனம் போட்ட பிறகு மரித்தோர் வருகிறார்கள், சமுத்திரமும் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கிறதாம், மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன, கிரியைகளின்பொஅடியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று இருக்கிறது!! இது எப்போ நடக்கிறது!! 1000 வருடங்கள் முடிந்து நடக்கும் "இறுதி நியாயத்தீர்ப்பின்" போதா?? அப்படி என்றால் 1000 வருடங்கள் முடிந்து ஒரு முறை எல்லாரும் மரிக்க வேண்டும், ஆனால் இதற்கு எந்த எண்ணும் போடபடவில்லை, அதாவது இது முதலாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, 1000 வருடங்கள் அரசாட்சிக்கு பிறகு, மீண்டும் "மரித்தோராகிவிட்டு" அதன் பின் "இறுதி நியாத்தீர்ப்பு" அடைந்து மீண்டும் "இரண்டாம் மரணத்திற்குள்" போகிறார்கள், ஏனென்றால் கிரியைகள் செய்யவில்லை என்று, அப்படி தானே!!

14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

மரணமும் பாதாளமும் தானே அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன, இதை தான் இரண்டாம் மரணம் என்கிறதே வசனம்!! கிரியை செதவர்கள் இந்த மரணத்திற்குள் போகவில்லை, அல்லது கிரியை செய்யாதவர்கள் இதில் போடப்பட்டார்கள் என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்!! இந்த வசனம் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே!!

15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

ஒருமையில் எழுதப்பட்ட வசனம்!! என்னை பொறுத்தவரையில், என் புரிந்துக்கொள்ளுதலின்படி சாத்தான் ஒருவனுக்கே பொருந்தும் வசனம்!! இந்த பகுதி ஒரு இடத்திலும் கிரியை செய்யாதவர்கள் இரண்டாம் மரணத்திற்குள் போவார்கள் என்று சொல்லுவதில்லையே!! தங்களின் கிரியைக்குத்தக்தாய் நியாயத்தீர்ப்பு அடைவார்கள் என்று எழுதப்பட்டதை நீங்களாகவே எப்படி "கிரியை செய்கிறதினால்" இரண்டாம் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பிட முடியும்!! எங்கே இருக்கு நீங்கள் சொல்லும் வசனம்!! நீங்கள் இந்த பகுதியை கொடுத்து வசனங்களை விளக்குங்களேன்!!

//வெளி. 20:11-15 வசனங்களைப் படித்துப் பார்த்தீர்களானால் உங்களது இக்கேள்வி அபத்தமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.//

நீங்கள் இந்த பகுதிக்கு நான் மேலே கேட்டுக்கொண்டபடியே பதில் தாருங்கள், பிறகு என் கேள்வி உங்களுக்கு அர்த்தமுள்ளதாக தெரியும்!!

//சுவிசேஷம் என்றாலே நல்லகனிகளைக் கொடுக்கத்தக்கதான மனந்திரும்புதல்தான். யோவானின் சுவிசேஷ அறைகூவலில் என்ன சொன்னார் என்பதை சற்று படியுங்கள்.//

யோவான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி, அவன் சொன்னது எல்லாம் நீதியின் கிரியைகள், சுவிசேஷம் என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்!! யோவான் சொன்னது சுவிசேஷமாக இருக்கிறது என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு கிறிஸ்துவின் சிலுவையை பின்பற்ற சொல்லியிருக்கனும்!! யோவான் போதனையாக தந்தது நீதியின் கிரியையே தவிர விசுவாசத்தின் கிரியை இல்லை!! இப்பவும் சொல்லுகிறேன், நீங்கள் கிரியை என்று சொல்லுவது கிறிஸ்தவத்தின் சுவபாவம் தானே அன்றி இந்த கிரியைகளினால் பெருமை பாராட்ட ஒன்றும் இல்லை!! கிறிஸ்து சொன்னப்படி "எல்லாவற்றையும்" விட்டு விட்டு சிலுவை சுமந்து போவது, எல்லாவற்றையும் குப்பையாக என்னுவது போன்றவைகளே விசுவாசத்தின் கிரியைகள், இதை யோவான் போதிக்கவில்லை!!

//எனவே 2-ம் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது நம் நற்கிரியைகளே என என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும்.//

இது உங்கள் கருத்து மாத்திரமே, வசனம் இல்லை!! நீங்கள் கொடுத்த பகுதியை நீங்களே பார்த்து அதில் நீங்கள் சொல்லியது இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எது கிரியை என்பதுகூட தெரியாமல் இத்தனை வருடம் வேதத்தை ஆராய்கிறேன் என்கிறீர்கள் என மீண்டும் சொல்கிறேன்.//

இது நல்ல ஒரு விவாதத்திற்கு அழகல்ல!!

நீங்கள் கிரியைகளை மாத்திரமே ஆறாய்ந்து வருவதால் இப்படி எழுதுகிறீர் என்று சொன்னால் உங்களுக்கு வேதனையாக இருப்பது போல் தான் எல்லாருக்கும் இருக்கும்!! நீங்கள் யாக்கோபு 2ம் அதிகாரத்தை முழுவதுமாக உன்னிப்பாக‌ வாசித்து விட்டு பிறகு என்னை விமர்சிக்கலாம்!! நான் கொடுத்திருக்கும் வசனங்களும் அதே யாக்கோபு 2ம் அதிகாரத்திலிருந்து தான்!!

மேலும் விசுவாசத்திற்குண்டான வசனங்கள் கொடுத்தால் அதற்கு பதில் தரமால் மீண்டும் மீண்டும், எனக்கு கிரியை தெரியவில்லை என்று சொல்லுவது உண்மையில் என் தன்மானத்தை தொடுகிறது!! என் கருத்து உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக நான் வேதத்தில் என்ன ஆறாய்ந்தேன் என்பதை நீங்கள் சொல்லும் கிரியைகளை வைத்து மாத்திரம் எழுத வேண்டாம்!!

நான் அத்துனை வசனங்கள் கொடுத்திருக்கிறேன், அதையும் வாசியுங்கள்!! பிறகு கோபம் கொள்ளுங்கள்!!

//எதைப் புறமதத்தார் செய்கின்றனர், புற மதத்தார் செய்யாத எதை நாம் செய்கிறோம் என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது பண்ணவில்லை. வேதத்தின்படி கிரியை என்றால் என்ன என்பதைத்தான் நாம் ஆராய்கிறோம். அதற்கு விளக்கமாக மேற்கூறிய வசனபகுதி ஒன்றே போதுமானது.//

நீங்கள் சொல்லுவது நீதியின் கிரியை, அதை வைத்து தான் இரண்டாம் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுதல் என்கிற பட்சத்தில் புற மதஸ்தாரும் செய்வது அதை தான், ஆகவே நிச்சயமாக தொடர்ப்பு இருக்கு!! வேதத்தில் புறஜாதி, புற மதஸ்தார் அனைவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள், ஆகவே நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள், ஏன் கோபம் கொள்கிறீர்கள்!!

நீங்கள் சொல்லும் இந்த கிரியைகளை நான் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லையே, நான் சொன்னதாக நீங்கள் சுட்டி காண்பித்து பிறகு சொல்லுங்கள்!! நான் என்ன சொல்லுகிறேன் என்கிறதை உங்களுக்கு நான் சரிவர புரியவைக்கவில்லையோ, அல்லது நீங்கள் புரியவேண்டாம் என்று இருக்கிறீர்களா என்பது தான் எனக்கு புரியவில்லை!! நீங்கள் உங்கள் வாதமான கிரியைகள் அதுவும் நீதியின் கிரியைகளை மாத்திரமே நிலை நாட்ட விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நீதியின் கிரியைகள் நம் சுவபாவமாகவே இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்!! நீங்கள் மனிதனுக்கு விளக்கம் தருகிறீர்கள், நான் கிறிஸ்தவனாக இருப்பதற்கு விளக்கம் தருகிறேன்!!

//மற்றபடி, வேதாகமம் ஆதி முதல் அந்தம் வரை கிரியையை எவ்வளவாய் முக்கியப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டத்தான் அத்தனை வசனங்களை எடுத்துப்போட்டேன். ஆனால் இன்னமும் நீங்கள் புரியாமல், வேறு கோணத்தின் அடிப்படையில் வியாக்கியானம் கூறியுள்ளீர்கள்.//

வேதாகமம் ஆதிமுதல் கிரியைகளை சொல்லுகிறது என்பதை நான் மறுக்கவில்லை!! ஆனால் நீதியின் கிரியைகள்!! ஆபிரகாம் நீதியின் கிரியை செய்யாமல் விசுவாசத்தின் கிரியையினால் நீதிமானாக எண்ணப்படுகிறான், அப்படியே நாமும் என்று அப்போஸ்தலர் சொன்னதை அதே யாக்கோபின் அதிகாரத்தின் தான் இருக்கிறது!! நீதியின் கிரியைகள் பொதுவானவை!! ஆனால் விசுவாசத்தின் கிரியை அழைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே!! நீங்கள் சொல்லும் கிரியைகளுக்கு துனையாக பேசாத ஒரே காரணத்திற்கு நான் வேதத்தில் என்ன ஆறாய்சி செய்தேன் என்று கேட்பது அத்துனை சரியான கேள்வியாக தெரியவில்லை, அதை மீண்டும் மீண்டும் கேட்பது அதைவிட மோசமாக இருக்கிறது!! மேலும் விவாதம் நான் வேதத்தில் என்னத்தை ஆறாய்ந்தேன் என்பது அல்ல!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//அது என்ன இறுதி நியாயத்தீர்ப்பு?? எத்துனை விதமான நியாயத்தீர்ப்புகள் நடக்கும்!!??1000 வருட அரசாட்சியில் என்ன தான் நடக்கும்? முதலாம் மரணத்திற்கு முன் செய்யப்பட்ட கிரியைகள் ஒரு மனிதன் 1000 வருட அரசாட்சி சென்ற பின்பு "இறுதி நியாயத்தீர்ப்பில்" கைக்கொடுக்கும் என்றால் அந்த 1000 வருடங்கள் அந்த மனிதன் என்ன செய்துக்கொண்டிருப்பான்!!//

1000 வருட அரசாட்சியில் ஒரு நியாயத்தீர்ப்பு நடக்கும். அந்த நியாயத்தீர்ப்பை கிறிஸ்துவும் அவரோடுகூட பரிசுத்தவான்களும் நடத்துவார்கள் (அப். 17:31; 1 கொரி. 6:2).

இந்த நியாயத்தீர்ப்புக் காலத்தில், அந்த அரசாட்சியின் கீழுள்ள ஜனங்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படும் (ஏசாயா 26:9).

இக்காலத்தில் சிலர் பாவியாகவும் இருக்கக்கூடும், மரிக்கவும் கூடும் (ஏசாயா 65:20).

இந்த 1000 வருட காலத்தில் எவர்கள் பிரஜைகளாய் இருப்பார்கள் என்பதை என்னால் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை.

இப்பூமியில் (முதலாம் மரணத்திற்கு முன்) அன்பின் கிரியை இல்லாதவர்கள், 1000 வருட அரசாட்சியில் பிரஜைகளாக மாட்டார்கள் என நான் கருதுகிறேன். ஆனால் இதை என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை. அன்பின் கிரியை இல்லாதவர்கள் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்க்கப்படும்படி உயிர்த்தெழுவார்கள் என நான் கருதுகிறேன். ஆனால் இவ்விஷயத்தில் எதையும் என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை.

1000 வருட ஆட்சிக்காலத்தில் பிரஜைகளாகும் ஒவ்வொருவருக்கும் 100 வருட கால அவகாசம் கொடுக்கப்படும் எனக் கருதுகிறேன். ஆதாரம்: ஏசாயா 65:20.

கிறிஸ்துவை அறிய வாய்ப்பில்லாமல் மரித்த அனைவரும், 1000 வருட அரசாட்சிக் காலத்தில் பிரஜைகளாவார்கள் எனக் கருதுகிறேன். ஆகிலும் இவர்களில் அன்பின் கிரியை இல்லாதவர்கள் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்க்கப்படும்படி உயிர்த்தெழுவார்கள் என்றே நான் கருதுகிறேன்.

இரக்கமில்லாதவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும் என யாக்கோபு 2:13 கூறுகிறபடியே, அன்பின் கிரியை இல்லாத அனைவரும் (கிறிஸ்துவை அறிந்த/அறியாத அனைவரும்) இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பைப் பெறும்படி, நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பின்போது உயிர்த்தெழுவார்கள் எனக் கருதுகிறேன்.

ஆக, முதலாம் மரணத்திற்கு முன் இப்பூமியில் இரக்கமுள்ளவர்களாக இருந்தவர்கள் மட்டுமே 1000 வருட ஆட்சியின் பிரஜைகள் ஆவார்கள் எனக் கருதுகிறேன்.

இறுதி நியாயத்தீர்ப்பு என்பதுதான் கிரியைக்கான பலனைக் கொடுக்கிற நியாயத்தீர்ப்பு. அதாவது நற்கிரியை செய்தவர்களுக்கு நித்திய ஜீவன், செய்யாதவர்களுக்கு நித்திய மரணமாகிய 2-ம் மரணம்.

இந்த நியாயத்தீர்ப்பு, 1000 வருட அரசாட்சி காலம் முடிந்தபின் நடக்கும்.

இந்த நியாயத்தீர்ப்பின்போது மரித்த அனைவரும் உயிரோடெழுந்து தேவனுக்கு முன்பாக நிற்பார்கள் (தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன் என வெளி. 20:12 சொல்வதைக் கவனியுங்கள்). அவர்களுக்கு இறுதி நியாயத்தீர்ப்பின் மூலம் மரணம் அல்லது ஜீவன் பலனாகக் கொடுக்கப்படும்.

ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் என வெளி. 20:15 கூறுகிறது. இதில் அவன் என்ற ஒருமை வார்த்தை சாத்தானை மட்டுமே குறிக்கிறது என்பது பெரியன்ஸ்-ன் கருத்து.

சகோ.பெரியன்ஸ் அவர்களே! அவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை சற்று படியுங்கள்.

Rev 20:15 If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire. NIV

Rev 20:15 And anyone not found written in the Book of Life was cast into the lake of fire.  NKJV

அதாவது, ஒருவனின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்காவிட்டால் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என மொழிபெயர்க்கப்படலாம்.

எனவே ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவன் ஒருவன் மட்டுமே என்றிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவீர்கள் என நம்புகிறேன்.

அப்படியே அது ஒருவனாக இருந்தாலும், அந்த ஒருவன் சாத்தானாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், பிசாசானவன் ஏற்கனவே அக்கினிக் கடலில் தள்ளப்பட்டதாக வெளி. 20:10 கூறுகிறது.

அக்கினிக் கடல்தான் இரண்டாம் மரணம் என ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.

Rev 20:14-15 Then death and Hades were thrown into the lake of fire. The lake of fire is the second death.  NIV




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

////எது கிரியை என்பதுகூட தெரியாமல் இத்தனை வருடம் வேதத்தை ஆராய்கிறேன் என்கிறீர்கள் என மீண்டும் சொல்கிறேன்.//

இது நல்ல ஒரு விவாதத்திற்கு அழகல்ல!!

நீங்கள் கிரியைகளை மாத்திரமே ஆராய்ந்து வருவதால் இப்படி எழுதுகிறீர் என்று சொன்னால் உங்களுக்கு வேதனையாக இருப்பது போல் தான் எல்லாருக்கும் இருக்கும்!! நீங்கள் யாக்கோபு 2ம் அதிகாரத்தை முழுவதுமாக உன்னிப்பாக‌ வாசித்து விட்டு பிறகு என்னை விமர்சிக்கலாம்!! நான் கொடுத்திருக்கும் வசனங்களும் அதே யாக்கோபு 2ம் அதிகாரத்திலிருந்து தான்!!//

எனது விமர்சனம் உங்களை வேதனைப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன், சகோதரரே! ஆகிலும் நான் அவ்வாறு விமர்சிக்கத்தக்கதாகத்தான் உங்களது 2 கூற்றுகள் உள்ளன என்பதை சற்று கவனியுங்கள்.

பெரியன்ஸ்:

//நீங்கள் கிரியை என்று எதை சொல்லுகிறீர்கள்?//

//கிரியை கிரியை என்று சொல்லி வரும் நீங்கள் எதை கிரியை என்று விளக்கமாக சொன்னால் நல்லா இருக்கும், நாங்களும் கேள்விகள் கேட்கலாமே!!//

இத்தனை நாள் வேதத்தை ஆராய்ந்த நீங்கள், இப்படியாகக் கேட்டால் அதற்கு என்ன அர்த்தம் சகோதரரே? அதுவும் கிரியை என்றால் என்ன என்பதை தகுந்த வேதவசனத்துடன் எடுத்துரைத்த பின்னரும், நான் சொன்ன கிரியையை மட்டந்தட்டும் விதமாக, விசுவாசத்தின் கிரியை என்றும் புறஜாதிகளும் செய்கிற கிரியை என்றும் சொல்லி நம் விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்கிறீர்கள்.

நம் விவாதத்தின் ஓட்டத்தை சற்று சுருக்கமாகத் தருகிறேன்; ஆரம்பத்தில் நீங்கள் கூறியதையே நீங்கள் முரண்படுகிறீர்களா என்பதை சற்று கவனித்துப் பாருங்கள்.

பெரியன்ஸ்-ன் கூற்று 1:

//இனி நமக்கு தேவை பவுல் சொல்லும், நம்பிக்கை, விசுவாசம், அன்பு என்கிற மூன்று தான், அதிலும் அன்பே பெரிது என்று 1 கொரி 13ம் அதிகாரத்தின் நமக்கு தெரிவித்திருக்கிறார்!!//

அன்பு57-ன் கூற்று 1:

//புதிய ஏற்பாட்டு போதனைகள் யாவும் சபைக்கு மட்டுமே என்றும், உலகத்தாருக்கு அல்ல என்றும் கூறுகிறீர்கள். அவ்வாறெனில் 1 கொரி. 13-ம் அதிகாரமும் சபைக்குத்தானே உரியது? அதை ஏன் நமக்குத் தேவை என்கிறீர்கள்?//

பெரியன்ஸ்-ன் கூற்று 2:

//தேவை, ஏனென்றால் தேவன் நியமித்தது!! இப்ப இருக்கிறது என்று சொல்லவில்லை!! தேவை என்று தான் எழுதியிருக்கிறேன்!! வரும், இப்ப இல்லை, ராஜியத்தில் வரும்!! அதற்கு உண்டான நம்பிக்கையும் விசுவாசத்தையும் தேவன் எல்லாருக்கும் தரவில்லை!!//

(கூற்று 1-ல் விசுவாசத்தைவிட அன்பே பெரியது என்றும், அதுவே தேவை என்றும் சொன்ன நீங்கள், அந்த அன்பு எனும் கிரியை தற்போது இல்லை என்றும், ராஜியத்தில்தான் அது வரும் என்றும் கூற்று 2-ல் கூறியுள்ளீர்கள்)

பெரியன்ஸ்-ன் கூற்று 3:

//இப்பொழுது அந்த அன்பு இல்லை, ஆனால் அந்த அன்பு வரும் என்கிற நம்பிக்கையை எனக்கு விசுவாசத்தை ஈவாக தந்த தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது!!//

(அதாவது இப்போதைக்கு விசுவாசம் எனும் ஈவின் மூலம், பின்னால் அன்பு வரும் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைத்துள்ளதாகக் கூறுகிறீர்கள்)

பெரியன்ஸ்-ன் கூற்று 4:

//தேவன் தந்த ஈவை நீங்கள் கிரியைகள் கொண்டு விலை பேசுகிறீர்கள்!! ... எனக்கு என் தேவன் ஈவாக கொடுத்த விசுவாசத்தினால் தேவனின் அன்பு மனிதர்கள் மத்தியில் வரும் நாளிற்காக நம்பிக்கையுடன் இருக்கிறேன்!!//

(அன்பு என்பது பின்னால் எப்போதோ வருகிற ஒன்று என மீண்டும் கூறியுள்ளீர்கள்)

அன்பு57-ன் கூற்று 2:

//கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள் எனச் சொல்லும் அதே வேதாகமம், கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்றும் கூறுகிறது.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என இயேசு சொல்கிறார். தேவனுடைய கிருபை ஒன்றுதான் எல்லாவற்றிற்கும் எனில் இயேசு ஏன் இப்படிச் சொல்லவேண்டும்?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கிரியையை வலியுறுத்தி ஏராளமான வசனங்கள் வேதாகமத்தில் உண்டு, உண்டு, உண்டு. இதை உங்களால் திட்டவட்டமாக மறுக்கமுடியுமா?

எல்லாவற்றிற்கும் தேவனுடைய கிருபை மட்டுமே காரணம் எனக் கூறும் நீங்கள், அவனவன் கிரியைக்குத்தக்கதான பலன் பற்றி வேதாகமம் கூறுவதை சற்று விளக்குங்கள்.//

பெரியன்ஸ்-ன் கூற்று 5:

//நீங்கள் கிரியை என்று எதை சொல்லுகிறீர்கள்?... கிரியை கிரியை என்று சொல்லி வரும் நீங்கள் எதை கிரியை என்று விளக்கமாக சொன்னால் நல்லா இருக்கும், நாங்களும் கேள்விகள் கேட்கலாமே!!//

அன்பு57-ன் கூற்று 3:

//எது கிரியை என்பதை அறிய மிக எளிதான பின்வரும் வசனபகுதியைப் படியுங்கள்.

யாக்கோபு 2:8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9 பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

13 ... இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 16 உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

இப்போதாவது கிரியை என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன என்பது புரிந்ததா? அன்பு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் நாம் செய்கிற செயல்கள்தான் கிரியை.//

அன்பு57-ன் கூற்று 4:

//உங்கள் பார்வையில் இவ்வசனங்கள் கூறுவதெல்லாம் புறஜாதியினரும் செய்கிற காரியமாகத்தான் தெரியும். அதிலொன்றும் தவறில்லை. நம்மைவிட அவர்கள் அதிக நற்கிரியைகளைச் செய்கின்றனர் என்பது மெய்தான். அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம், அவர்களின் சுபாவமான அன்பு மற்றும் மனச்சாட்சியின்படி நடப்பது. அவர்களின் அக்கிரியைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கு ஆதாரமாகத்தான் ரோமர் 2:14-16 வசனங்களைக் காட்டியிருந்தேன்.//

அன்பு57-ன் கூற்று 5:

//அனைவரும் உயிர்த்தெழுந்து, 1000 வருட அரசாட்சி நிறைவுற்று அதன்பின்னர்தான் இறுதி நியாயத்தீர்ப்பு. அந்த இறுதி நியாயத்தீர்ப்பில் அவனவன் கிரியைக்குத்தான் பலன் என வேதாகமம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது (வெளி. 20:12,13). அந்த நியாயத்தீர்ப்பின்போதுதான் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவன் 2-ம் மரணம் எனும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டான் என 14,15 வசனங்கள் கூறுகின்றன.

எனவே 2-ம் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது நம் நற்கிரியைகளே என என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும். வெளி. 20:11-15 வசனங்களை நிதானமாகப் படித்துப் பாருங்கள். அவற்றில் தேவகிருபை, ஈவு பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? முழுக்க முழுக்க கிரியை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.//

பெரியன்ஸ்-ன் கூற்று 6:

//நல்லது செய், கொலை செய்யாதே, பொய் பேசாதே, அன்பாக இருக்கவும், இரக்கஞ்செய்யவும், போன்றவை கிரியை அல்ல, மாறாக சுபாவம் என்கிறேன் நான்!!//

(இப்போது உங்கள் கூற்று 1-4-ஐயும் கூற்று 6-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள். விசுவாசத்தைவிட அன்பே பெரிது என்று சொன்ன நீங்கள், அன்பு இப்போது இல்லை என்றும், அது பின்னால் வரும் என்ற நம்பிக்கைதான் இப்போது உள்ளது என்றும் கூறினீர்கள். ஆனால் கூற்று 6-ல் அன்பு எனும் கிரியை நம் சுபாவத்திலேயே உள்ளது என்றும், விசுவாசத்தினுள் வராத புறஜாதிகளுக்கும் அது உண்டு என்கிறீர்கள். இது முரண்பாடுதானே?)

பெரியன்ஸ்-ன் கூற்று 7:

//விசுவாசத்திற்கு ஏற்ற கிரியைகள் கிறிஸ்துவின் சீஷனாக இருந்து "எல்லாவற்றையும்" விட்டு விட்டு அவரை பின்பற்றுவது தான் நமக்கு கொடுக்க பட்ட கட்டளை!! சுலபமான கட்டளையை சுட்டி காண்பித்து, கடினமானதை விட்டு விட்டீர்களே!!//

(இது ஒரு தேவையற்ற விமர்சனம். விசுவாசிகள்/அவிசுவாசிகள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் பொதுவானதுதான் அன்பு என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். அந்த அன்பு தான் பிரதான கிரியை எனப் பவுல் சொன்னதையும் நீங்கள் வழிமொழிந்துள்ளீர்கள். அந்த அன்பு எனும் கிரியையை வலியுறுத்திதான் நானும் விவாதித்து வருகிறேன். இப்படியிருக்க சம்பந்தமேயில்லாமல், விசுவாசிகளுக்கு மட்டுமே உரியதான விசுவாசம் எனும் கிரியையைப் பற்றி எழுதி, அதையும் அன்பையும் ஒப்பிட்டு விமர்சனமும் செய்துள்ளீர்கள். உங்களது இச்செயல் சரிதானா என்பதை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.)

பெரியன்ஸ்-ன் கூற்று 8:

//நீங்கள் காண்பித்த நீதியின் கிரியைகள் எல்லா மதத்தினரும், ஏன் கடவுள் இல்லை என்று சொல்லுபவனும் செய்வது தான்!! இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லியிருக்கிறேனா!! இல்லையே, ஆனால் இதில் பெருமை பாராட்ட ஒன்றும் இல்லை என்று தான் வேதம் சொல்லுகிறது!!//

(வேதாகமம் உலகத்துக்கல்ல, சபைக்கு மட்டுமே என்கிறீர்கள்; அப்படியானால் 1 கொரி. 13-ம் அதிகாரமும் சபைக்கு உரியதுதானே? ஆனால் அதில் கூறப்பட்டுள்ள பிரதான கிரியையான அன்பு உலகின் எல்லா மக்களிடமும் சுபாவமாகவே உள்ளது என்கிறீர்கள். 1 கொரி. 13-ன்படி விசுவாசத்தைவிட அன்பே பெரியது என்றும் சொல்கிறீர்கள்; அந்த அன்பு இப்போது இல்லை, இனிமேல்தான் வரும் என்றும் சொல்கிறீர்கள்; அதேவேளையில், நீதி இரக்கம் அன்பு எல்லாம் உலகத்தின் எல்லா மக்களிடமும் உள்ளது என்கிறீர்கள். ஒரே குழப்பமாக உள்ளது.

அன்பு எனும் கிரியை தேவை என்று மட்டுமே விவாதித்து வரும் நான், அதைக் குறித்து ஒருபோதும் மேன்மைபாராட்டாதிருக்கையில், இதில் மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை என்கிறீர்கள்)

பெரியன்ஸ்-ன் கூற்று 9:

//நீங்கள் கிரியைகளை மாத்திரமே ஆறாய்ந்து வருவதால் இப்படி எழுதுகிறீர் என்று சொன்னால் உங்களுக்கு வேதனையாக இருப்பது போல் தான் எல்லாருக்கும் இருக்கும்!! நீங்கள் யாக்கோபு 2ம் அதிகாரத்தை முழுவதுமாக உன்னிப்பாக‌ வாசித்து விட்டு பிறகு என்னை விமர்சிக்கலாம்!! நான் கொடுத்திருக்கும் வசனங்களும் அதே யாக்கோபு 2ம் அதிகாரத்திலிருந்து தான்!!//

உங்களை வேதனைப்படுத்தின என் வார்த்தைகளுக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

இப்போது கேட்கிறேன் சகோதரரே! பதில் சொல்லுங்கள். அன்பு என்பது இப்போது உள்ளதா இல்லையா? விசுவாசத்தைவிட அன்பே மேலானதா இல்லையா? அன்பு எனும் கிரியை புறஜாதிகளிடமும் உள்ளதா இல்லையா? நம் கிரியைக்குத்தக்க பலனைப் பெறத்தக்கதாக அன்பு எனும் கிரியை நமக்கு இப்போது தேவையா இல்லையா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உண்மையான அன்பு நிச்சயமாக இல்லை!! பேசுவதற்கு உணர்சிப்படுவதற்கும் அன்பு என்று சொல்லிவிடுகிறோம், ஆனால் உண்மையான அன்பு இல்லை!! அந்த உண்மையான அன்பு தேவனின் ராஜியத்தில் எல்லாரிடத்திலும் வரும்!!

அன்பே இல்லை என்றும் சொல்லவில்லை!! ஆனால் தேவன் விரும்பு அந்த அன்பு இப்பொழுது இல்லை!! பகைவரை மன்னிக்கும் அன்பு இல்லை, நம்மை போல் பிறரை நேசிக்கும் அன்பு இல்லை, வேற்று மதஸ்தாரிடம் அன்பு இல்லை, வேற்று ஜாதியிடத்தில் அன்பு இல்லை!! ஆனால் சிலரிடத்தில் அன்பு நிச்சயமாக இருகிறது, சுயநலமற்ற அன்பு இருக்கிறது அது மிகவும் சிலரிடத்தில் தான் இருக்கிறது!! கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்தவ பெயர் சபைகளுக்கு போகிற அனைவரிடமும் சுவபாவத்தில் அன்பு இருக்கிறது என்று சொல்லவில்லை!! சீஷர்களாக வாழ அழைக்கப்பட்ட சிலரிடம் மாத்திரமே அந்த அன்பு இருக்கிறது!! அப்படியே புறமதஸ்தாரிடமுன் இருக்கிறது!!

இப்பொழுதே எல்லாரிடமும் அன்பு இருக்கிறது என்றால் இந்த தீர்க்கதரிசங்கள் நிறைவேறாமல் போய்விடும்!! நீங்கள் சுட்டி காட்டும் கிரியைகள் எல்லாவற்றிலும் கீழ்கானும் விஷயங்கள் நடக்கும் என்று பவுல் எழுதியிருக்கிறாரே!! இப்பொழுதே அந்த அன்பு எல்லாரிடமும் இருக்கிறது என்றால் கீழே உள்ள வசனம் பொய்யானதாக இருக்கும்!! சிலர் இருக்கிறார்கள், அவர்கள் ஆதிமுதலிருந்து கிறிஸ்துவிற்குள் தேவனால் தேரிந்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டவர்கள் ஆவர்!! நீங்களோ நானோ அன்பை போதிப்பதாலோ பிரசங்கிப்பதாலோ அன்பு வந்து விடாது, அப்படியே மற்ற கிரியைகளும்!!

2 தீமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,.........

கீழே எழுதிய இந்த வசனமும் நம் வேதத்தில் தான் இருக்கிறது, நீங்கள் மட்டும் இதை ஆறாயவில்லையா, அல்லது உங்கள் போதனைக்கு மாற்றாக இருக்கிறது என்று விட்டு விட்டீர்களா!! நான் இந்த வசனத்தை பல முறை கேட்டுவிட்டேனே!!

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.


//இப்பூமியில் (முதலாம் மரணத்திற்கு முன்) அன்பின் கிரியை இல்லாதவர்கள், 1000 வருட அரசாட்சியில் பிரஜைகளாக மாட்டார்கள் என நான் கருதுகிறேன். ஆனால் இதை என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை. அன்பின் கிரியை இல்லாதவர்கள் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்க்கப்படும்படி உயிர்த்தெழுவார்கள் என நான் கருதுகிறேன். ஆனால் இவ்விஷயத்தில் எதையும் என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை.//

உங்களால் எதையும் திட்டவட்டமாக கூற முடியாது, இது உங்களைன் தனிப்பட்ட வசனம் இல்லாத கருத்து, ஆனால் நான் வேதத்தை என்னத்தை ஆறாய்ந்தேன் என்று மாத்திரம் எழுதுவது எந்த விதமான கிரியை!!?? இப்பூமியில் முதலாம் மரணத்திற்கு முன் அன்பின் கிரியை இல்லாதவர்கள் 1000 வருட அரசாட்சியில் பிரஜைகளாக மாட்டார்கள் என்கிற உங்கள் கருத்தை வசனத்துடன் சொல்லுங்கள்!! அன்பின் கிரியை என்று நீங்கள் நம்புவதால் மாத்திரம் அது சுவிசேஷமாகி விடாது, கடைசி காலத்தில் இப்படி மட்ட மக்கள் தான் இந்த பூமியில் இருப்பார்கள் என்கிற தேவ சித்தம் தீர்க்கதரிசனமாக தான் பவுல் எழுதி வைத்திருக்கிறாரே!!

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

ஒரே முறை மரித்து அதன் பின் அன்பு செய்தவர்களுக்கு ஒரு உயிர்த்தெழுதலும், 1000 வருடங்கள் சென்று அன்பின் கிரியைகள் செய்யாதவர்களுக்கு ஒரு உயிர்த்தெழுதல், 1000 வருட அரசாட்சியில் ஒருநியாயத்தீர்ப்பு, அதன் பின் அன்பு செய்யாதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு (!!) என்பது எல்லாம் உங்களின் கற்பனைகளே!! அன்பு செய்யாதவர்களை எப்படியும் இரண்டாம் மரணத்திற்குள் போடுவார்கள் என்று நீங்கள் எழுதுகிறீர்கள், பிறகு எதற்கு அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு!! மேலும் துண்டுதுண்டாக அல்ல, கிறிஸ்துவின் ஈடுபலியினால் "எல்லாரும்" என்றால் "எல்லாரும்" தான் உயிர்த்தெழுவார்கள்!! அன்பு செய்தவர்கள் ஒருதடவை, அன்பு செய்யாதவர்கள் எழுந்தவுடன் "இறுதி நியாயத்தீர்ப்பு" (இதுவே வேதத்தில் இல்லாத ஒரு கான்செப்ட்) பெற எழுந்து "நியாயத்தீர்ப்பு" செய்யப்பட்டு உடனே இரண்டாம் மரணத்திற்குள் அனுப்பிவிடுவார் தேவன்!! இதில் என்ன நியாயத்தீர்ப்பு இருக்கிறது, அல்லது அவர்களுக்கு உயிர்த்தெழுதல் தான் எதற்கு!! அன்பின் கிரியைகளான உங்கள் போதனை நிரூபிக்க வேதத்தை இந்த அளவிற்கு வளைக்க வேண்டிய அவசியமே இல்லையே!! தேவன், இப்பிரஞ்சத்தின் தேவனான பிசாசைக்கொண்டு சுவிசேஷம் புறியாதப்படிக்கும் மனக்கண்களை குருடாக்கி விடுவார், அவர்கள் அதன்படி வாழ்வார்கள், ஆனால் நேரடியாக இரண்டாம் மரணத்திற்கு எழும்புவார்கள்!! இதில் என்ன "நியாயத்தீர்ப்பு" வேண்டியிருக்கிறது!! இது எப்படி நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும்!!??

//இந்த நியாயத்தீர்ப்புக் காலத்தில், அந்த அரசாட்சியின் கீழுள்ள ஜனங்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படும் (ஏசாயா 26:9).//

ஏற்கனவே நீதியின் கிரியைகள் செய்ததால் தானே இவர்கள் உயிர்த்தெழுந்தே வந்திருக்கிறார்கள், இவர்களுக்கு எதற்கு மீண்டும் நீதியை கற்றுக்கொடுக்கப்படும்??!!

//இக்காலத்தில் சிலர் பாவியாகவும் இருக்கக்கூடும், மரிக்கவும் கூடும் (ஏசாயா 65:20).
1000 வருட ஆட்சிக்காலத்தில் பிரஜைகளாகும் ஒவ்வொருவருக்கும் 100 வருட கால அவகாசம் கொடுக்கப்படும் எனக் கருதுகிறேன். ஆதாரம்: ஏசாயா 65:20.//

இந்த வசனத்திற்கு ஜோடு வசனம் இல்லாததால் இது இன்னும் விளங்காத ஒரு வசனமாக எனக்கு இருக்கிறது!! நிச்சயமாக கிறிஸ்துவின் வருகை இதை விளக்கும், இந்த வசனம் சேர்ந்துவிட்ட வசனமா, தப்பாக மொழிப்பெயர்க்கப்பட்ட வசனமா என்று தெரியவரும்!! என்னால் தற்போது இதற்கு பதில் சொல்ல முடியவில்லை!!

//இரக்கமில்லாதவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புதான் கிடைக்கும் என யாக்கோபு 2:13 கூறுகிறபடியே, அன்பின் கிரியை இல்லாத அனைவரும் (கிறிஸ்துவை அறிந்த/அறியாத அனைவரும்) இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பைப் பெறும்படி, நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பின்போது உயிர்த்தெழுவார்கள் எனக் கருதுகிறேன்.//

அந்த அறியாமைக்குள் அவரே ஜனங்களை வைத்து விட்டு, அவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை பெறும்படி நேரடியாக "இறுதி நியாயத்தீர்ப்பின்" போது உயிர்த்தெழசெய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்!! உங்களின் இந்த கூற்று தேவ நீதியை கொச்சைப்படுதுகிறதாக இருக்கிறது!!

//ஆக, முதலாம் மரணத்திற்கு முன் இப்பூமியில் இரக்கமுள்ளவர்களாக இருந்தவர்கள் மட்டுமே 1000 வருட ஆட்சியின் பிரஜைகள் ஆவார்கள் எனக் கருதுகிறேன்.//

நீங்கள் கருதுவதால் வசனம் பொய்யாகிவிடுமா!! நீங்கள் சுலபமாக ஏற்றுக்கொள்ளாத வசனம் தான், ஆனால் இது தான் சுவிசேஷம் என்று நாம் நம்புகிறேன்:

1 தீமோத்தேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை கிறிஸ்து ஒப்புக்கொடுத்தார் என்றால் அந்த எல்லாரையும் அவர் வகை பிரிக்கவில்லை, நீதியின் கிரியைகள் செய்தவர்கள், செய்யாதவர்கள், அக்கிரமக்காரன், கொலைக்காரன், கொள்ளைக்காரன், விபச்சாரக்கார‌ன் அனைவருமே அந்த "எல்லாரும்"இல் அடங்குவார்கள்!! நீங்களாகவே ஒரு கருத்தை வைத்துக்கொண்டு அதற்காக வேதத்தை மாற்றி போதிக்கிறீர்கள் என்று நானும் குற்றம் சுமத்தலாம்!! ஆனால் அது தேவையில்லாத வாதம்!! நாம் இங்கே நீங்கள் எத்துனை ஆறாய்ந்தீர்கள் நான் எத்துனை ஆறாய்கிறேன் என்பதை விவாதிக்க வரவில்லை!! இப்படி எல்லாருக்காகவும் கிறிஸ்து தன்னை ஈடுபலியாக கொடுத்திருக்கும் போது அது எப்படி ஒரு சாரார் முதலிலும் ஒரு சாரார் 2ம் மரணத்திற்கும் உயிர்த்தெழுவார்கள் என்கிறா போதனை தர முடிகிறது!! நல்ல கிரியைகள் செய்பவருக்கும் கிரியைகள் செய்யாதவர்களுக்கு ஒரே விதமான தீர்ப்பை இன்று கிரியை செய்கிறோம் என்பவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது!! இது எப்படிப்பட்ட அன்பு!! நான் கிரியை செய்தால் நான் பிழைப்பேன், அவன் கிரியை செய்யாமல் எப்படி பிழைக்கூடும் என்பதில் ஒரு அன்பும் இல்லை!! தேவன் ஏதிர்ப்பார்க்கிறது சுயநலமற்ற அன்பு!! நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசு கிடைக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் செய்யப்படுவது அன்பு அல்ல, அது ஒரு கைமாற்று கிரியை, அவ்வளவே!!

அதற்காக தான் சகோதரரே அன்பு இல்லை என்று சொன்னேன்!! நீங்கள் அன்பை கிரியையில் வெளிப்படுத்தினால் தான் அன்பு என்கிறீர்கள்!! நானோ கிறிஸ்துவினால் எல்லாருக்கும் மீடுபு என்கிற விசுவாசத்தில் அன்பை வெளிப்படுத்துகிறேன்!! நீங்கள் "இறுதி நியாயத்தீர்ப்புக்கு" எழச்செய்யும் அளவிற்கு யோசிக்கிறீர்கள், நான் வேதம் கூறுகிறபடி எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற அன்பை வெளிப்படுத்துகிறேன்!! சுவபாவ அன்பு என்பது பிரதிபலன் எதிர்ப்பார்த்து செய்யப்படுவது கிடையாது!! கிறிஸ்து அதற்கு எடுத்துக்காடு, அவரின் அன்பிற்கு ஈடாக ஒருவரும் அன்பு செலுத்த முடியாது என்றே என்னுகிறேன்!! ஆனால் அந்த அன்பில் விசுவாசம் கொள்ளலாமே!!

//சகோ.பெரியன்ஸ் அவர்களே! அவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை சற்று படியுங்கள்.

Rev 20:15 If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire. NIV

Rev 20:15 And anyone not found written in the Book of Life was cast into the lake of fire.  NKJV

அதாவது, ஒருவனின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்காவிட்டால் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என மொழிபெயர்க்கப்படலாம்.

எனவே ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவன் ஒருவன் மட்டுமே என்றிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவீர்கள் என நம்புகிறேன்.

அப்படியே அது ஒருவனாக இருந்தாலும், அந்த ஒருவன் சாத்தானாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், பிசாசானவன் ஏற்கனவே அக்கினிக் கடலில் தள்ளப்பட்டதாக வெளி. 20:10 கூறுகிறது.//

ஒருவன் என்கிற மொழிப்பெயர்ப்பின் கிரேக்க வார்த்தை என்ன அர்த்தம் கொண்டிருக்கிறது என்று பாருங்கள்:

Original Word: τις, τι
Part of Speech: Indefinite Pronoun
Transliteration: tis
Phonetic Spelling: (tis)
Short Definition: any one, some one
Definition: any one, some one, a certain one or thing.

அந்த ஒருவன் சாத்தான் தான் என்பதற்கு ஏகப்பட்ட வசனங்கள் இருக்கிறது:

யோவான் 16:11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.


இந்த உலகத்தின் அதிபதி ஒருவனே நிய்யாந்தீர்க்கப்பாட்டிருக்கிறான்!!

எசேக்கியேல் 28:18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

வெளி 20:15ஐ குறித்த சரியான மொழிப்பெயர்ப்பு

Revelation 20:15 And he that was not found written in the book of life, was sent into the pool of fire. (Wycliffe Bible (WYC))


இதை நிச்சயமாக ஒருவனையே குறிக்கிறது, இல்லாவிட்டல் இதை மொழிப்பெயர்த்தவர்கள் இதை விட சுலபமாக செய்திருக்கலாம்,

And whose-ever name was not found was sent into the pool of fire

இப்படி ஒரு மொழிப்பெயர்ப்பிருந்திருந்தால் நீங்கள் சொல்லுவது போல் "நீதியின் கிரியைகள்" செய்யாதவர்கள் இரண்டாம் மரணத்திற்குள் போவார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்!! ஆனால் வசனம் ஆங்கிளத்திலும் சரி தமிழிலும் சரி ஒருவனை குறித்தே சொல்லுகிறது, அந்த ஒருவன் சாத்தான் தான் என்று எல்லாருடைய கண்களுக்கு முன்பாக உன்னை சாம்பலாக்குவேன் (ஒன்றும் இல்லாமல் செய்வது; அது தானே இரண்டாம் மரணத்தின் அர்த்தம்) என்று வேதத்தில் இருக்கிறது!!

கூற்றுக்களை குறித்து சாயங்காலம் பதில் தருகிறேன்.............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//1000 வருட அரசாட்சியில் என்ன தான் நடக்கும்? முதலாம் மரணத்திற்கு முன் செய்யப்பட்ட கிரியைகள் ஒரு மனிதன் 1000 வருட அரசாட்சி சென்ற பின்பு "இறுதி நியாயத்தீர்ப்பில்" கைகொடுக்கும் என்றால் அந்த 1000 வருடங்கள் அந்த மனிதன் என்ன செய்துக்கொண்டிருப்பான்!!//

இது சம்பந்தமாக ஏற்கனவே என் கருத்தைப் பதித்துள்ளேன்; அதை நன்கு படித்துவிட்டு இதைப் படியுங்கள்.

எனது புரிந்துகொள்தலின்படி, முதலாம் மரணத்திற்கு முன் இப்பூமியில் எவர்கள் இரக்கமாயிருந்தார்களோ அவர்களும், நன்மை/தீமை அறியாமல் மரித்த குழந்தைகளும் மட்டுமே 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக வருவார்கள். கிறிஸ்துவை அறியாமல் மரித்த புறஜாதியினர் மற்றும் கிறிஸ்துவை அறிந்து மரித்த விசுவாசிகள் யாராயினும், அவர்கள் இப்பூமியில் இரக்கமுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாவார்கள். மற்றவர்கள் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்புக்கென உயிர்த்தெழுவார்கள். எனது புரிந்துகொள்தலுக்கு ஆதாரமான வசனங்கள்:

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

(இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பைப் பெறப்போகிறவன், 1000 வருட அரசாட்சியில் பிரஜையாகி நீதியைக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே! எனவே இரக்கம் செய்யாதவன் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாகும்படி வாய்ப்பு கொடுக்கப்படமாட்டாது என்றே கருதுகிறேன்)

ரோமர் 2:9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

நியாயப்பிரமாணம் யாருக்குக் கொடுக்கப்பட்டது/கொடுக்கப்படவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. ஒருவன் நியாயப்பிரமாணத்தை அறிந்தால்தான் இரக்கமுள்ளவனாயிருப்பான் என்பதில்லை. ஒருவனின் மனச்சாட்சி மற்றும் குற்றம்/குற்றமில்லை எனும் சிந்தையின் மூலமே இரக்கமுள்ளவனாயிருக்க முடியும். எனவே புறஜாதியினரிலும் இரக்கம் செய்யாதவர்கள் 1000 வருட அரசாட்சிக்குச் செல்லாமல், நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்புக்கென உயிர்த்தெழுவார்கள் என்றே நான் கருதுகிறேன்.

பெரியன்ஸ்:

//அந்த 1000 வருடங்கள் அந்த மனிதன் என்ன செய்துக்கொண்டிருப்பான்!!//

1000 வருட அரசாட்சியிலுள்ள மனிதர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள் அல்லது குழந்தைகளாக இருப்பார்கள் என்பது எனது புரிந்துகொள்தல். (ஆகிலும் இக்கருத்து தவறு என தகுந்த ஆதாரத்துடன் சொன்னால் எனது கருத்தை நான் மாற்றிக்கொள்ள தயார்.) 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளில் சிலர் கிறிஸ்துவை அறியாதவர்களாகவும், சிலர் அறிந்தும் ஏற்க மறுத்தவர்களாவும், சிலர் ஆதிப்பாவமான இச்சை எனும் பாவத்தில் சிக்குண்டவர்களாகவும், வேறு சில பாவங்களில் சிக்குண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே (அதாவது இரக்கமில்லாத வேதபாரகரர் பரிசேயருக்கு முன்னே) தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் எனும் கிறிஸ்துவின் கூற்றை தற்போது நினைவூட்டுகிறேன்.

1000 வருட அரசாட்சியின் பிரஜைகளுக்கு கிறிஸ்துவை அறிவித்து, அவரது நீதியும் கற்றுக்கொடுக்கப்படும். ஆனாலும் சிலர் கிறிஸ்துவை ஏற்க மறுத்து, அவரது நீதியைக் கற்றுக்கொள்ள மறுப்பவர்களாகவும் இருப்பார்கள். இதற்கு ஆதாரம் ஏசாயா 26:10.

இவர்கள் ஏசாயா 65:20-ன்படி சபிக்கப்பட்டு, நூறு வயது பாவியாக மரித்து, இறுதி நியாயத்தீர்ப்பில் 2-ம் மரணத்தைப் பெறும்படி தேவனுக்கு முன்பாக நிற்பார்கள்.

பெரியன்ஸ்:

//பரலோகத்தில் அல்லது நியாயத்தீர்ப்பின் போது உண்மையிலேயே ஒரு பெரிய சிங்காசனம் போட்டு, ஜீவபுஸ்தகம் என்கிற ஒரு புஸ்தகம் திறக்கப்பட்டு அதில் பெயர் எழுதியிருக்கப்படும் என்று சொல்ல வருகிறீர்களா!!//

வெள்ளை சிங்காசனம், ஜீவபுஸ்தகம் என்பதெல்லாம் எப்படியிருக்கும் எனும் ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை.

பெரியன்ஸ்:

//வெளி. 20:11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

இந்த வசனத்தின்படி ஒரு பெரிய வெள்ளைச் சிங்காசனத்தில் மேல் ஒருவர் அமர்ந்திருப்பார், பூமியிம் வானமும் அகன்றுபோயின என்றும் இடங்காணப்படவில்லை என்றும் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்தால் இந்த நியாயத்தீர்ப்பு வானத்திலோ பூமியிலோ நடக்க வாய்ப்பே இல்லை!! அப்படி தானே, நீங்கள் இதை அப்படி தான் புரிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!! 1000 வருடம் பூமியில் அரசாட்சி நடந்தவுடன் வெள்ளை சிங்காசனம் போடப்பட்டவுடன் பூமியும் வானமும் காணாமற் போகிறதாம்!! இதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள், அப்படியே எழுத்தின்படியேவா? அப்படி என்றால் அது ஒரு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுக்கும்!!//

நம்மைக் குறித்தும், நாம் என்னசெய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் வேதாகமம் சொல்வதைத்தான் நான் முக்கியமாகக் கருதி ஆராய்கிறேனேயொழிய, தேவனின் சிங்காசனம் எப்படிப்பட்டது, வானம் பூமி எப்படி அகன்றுபோகும் எனும் தேவனுக்குரிய காரியங்களை நான் அதிகமாக ஆராய்வதில்லை.

பெரியன்ஸ்:

//12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

1000 வருடங்கள் அரசாட்சி நடந்த பிறகு தான் "இறுதி நியாயத்தீர்ப்பு" என்று எழுதியிருக்கிறீர்கள், அதன் பின் "கிரியைகளினால்" இரண்டாம் மரணத்திற்கு போகாதவர்களும், இரண்டாம் மரணத்திற்கு போவர்களும் என்று தீர்ப்பு உண்டாகும், அப்படி என்றால் "மரித்தோராகிய சிறியோரும், பெரியோரும்" யார்??//

சிறியோர், பெரியோர் எனும் வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தை மற்றும் அதன் அர்த்தங்களைத் தருகிறேன், படித்துப் பாருங்கள்.

சிறியோர் - NT:3398 mikros (mik-ros'); including the comparative mikroteros (mik-rot'-er-os); apparently a primary word; small (in size, quantity, number or (figuratively) dignity):

பெரியோர் - NT:3173 megas (meg'-as); [including the prolonged forms, feminine megale, plural megaloi, etc.; compare also NT:3176, NT:3187]; big (literally or figuratively, in a very wide application):

ஆங்கிலத்தில் அதிக பரிச்சயமான நீங்களே இதற்கான தமிழ் அர்த்தங்களை எடுத்துரையுங்கள். திரித்துவவாதிகளைப் போல் நீங்களுங்கூட தமிழ் வேதாகம வார்த்தைகளை அப்படியே எடுத்து வியாக்கியானம் செய்வது எனக்கு ஆச்சரியமாயுள்ளது.

பெரியன்ஸ்:

//புஸ்தகங்கள் திறக்கப்பட்டன என்றால் எத்துனை புஸ்தகங்கள், அது மட்டுமில்லாமல் ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது என்றும் அதைக்கொண்டு "மரித்தோர்" தங்கள் கிரியைகளுக்குத்தகதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று இருக்கிறது!! நியாயத்தீர்ப்பு நடந்த பிறகு "இரண்டாம் மரணமா" அல்லது மரித்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பா??//

எத்தனை புஸ்தகங்கள் என இந்த வேதபகுதி கூறவுமில்லை, அது எனக்குத் தேவையுமில்லை. வேறு வசனங்களில் இதைக் குறித்து எழுதியிருந்தால் நீங்களே தேடி அறிந்துகொள்ளுங்கள். நம் கிரியைகளைக் குறித்த விபரங்கள் புஸ்தகங்களில் இருக்கும், அவற்றின்படி நாம் நியாயத்தீர்ப்படைவோம் என்பது எனது புரிந்துகொள்தல்.

பெரியன்ஸ்:

//13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

இந்த பகுதியை வாசிக்க சொன்னீர்கள், சரி, 1000 வருடங்கள் அரசாட்சி எங்கே நடக்கிறது,//

இப்பூமியில்தான் எனக் கருதுகிறேன்.

பெரியன்ஸ்:

//ஏன் சிங்காசனம் போட்ட பிறகு மரித்தோர் வருகிறார்கள், சமுத்திரமும் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கிறதாம், மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன,//

குழப்பமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஆகிலும், நான் ஏற்கனவே சொன்னபிரகாரம் இரக்கம் செய்யாதவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமல் நேரடியாக சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வருவார்கள் எனும் தகவலில் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

பெரியன்ஸ்:

//இது எப்போ நடக்கிறது!! 1000 வருடங்கள் முடிந்து நடக்கும் "இறுதி நியாயத்தீர்ப்பின்" போதா?? அப்படி என்றால் 1000 வருடங்கள் முடிந்து ஒரு முறை எல்லாரும் மரிக்க வேண்டும்,//

1000 வருட அரசாட்சியின்போதும் பலர் மரிப்பார்கள். இரக்கம் செய்யாதவர்கள் எனும் பிரிவினர் உயிர்தெழாமலும் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிற்பார்கள். நீங்கள் சொல்வதுபோல் “1000 வருடங்கள் முடிந்தபின் ஒரு முறை மரிக்க வேண்டிய” அவசியமில்லை.

பெரியன்ஸ்:

//அதாவது இது முதலாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, 1000 வருடங்கள் அரசாட்சிக்கு பிறகு, மீண்டும் "மரித்தோராகிவிட்டு" அதன் பின் "இறுதி நியாத்தீர்ப்பு" அடைந்து மீண்டும் "இரண்டாம் மரணத்திற்குள்" போகிறார்கள், ஏனென்றால் கிரியைகள் செய்யவில்லை என்று, அப்படித்தானே!!//

ஆம், அப்படித்தான். 1000 வருட அரசாட்சியிலும் மரிப்பவர்கள் உண்டு என்பதைத்தானே பின்வரும் வசனம் காட்டுகிறது?

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

பெரியன்ஸ்:

//14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

மரணமும் பாதாளமும் தானே அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன, இதை தான் இரண்டாம் மரணம் என்கிறதே வசனம்!!//

இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு புரிந்துகொள்ள எளிதாக உள்ளது.

Rev 20:14 Then death and Hades were thrown into the lake of fire. The lake of fire is the second death. 15 If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire. NIV

Rev 20:14 And death and hell were cast into the lake of fire. This is the second death. 15 And whosoever was not found written in the book of life was cast into the lake of fire. KJV

Rev 20:14 Then Death and Hades were cast into the lake of fire. This is the second death. 15 And anyone not found written in the Book of Life was cast into the lake of fire. NKJV

இவ்வசனங்களின்படி, அக்கினிக்கடலில் வீசப்படுவதுதான் இரண்டாம் மரணம் என்பது எனது புரிந்துகொள்தல். எவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் அக்கினிக்கடலில் வீசப்படுவார்கள்; அதாவது இரண்டாம் மரணம் அடைவார்கள்.

பெரியன்ஸ்:

//15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

ஒருமையில் எழுதப்பட்ட வசனம்!! என்னை பொறுத்தவரையில், என் புரிந்துக்கொள்ளுதலின்படி சாத்தான் ஒருவனுக்கே பொருந்தும் வசனம்!!//

எத்தனையோ வசனங்களை அதிகதிகமாய் ஆராய்கிற நீங்கள், திரித்துவவாதிகளைப் போல், தமிழ் வேதாகமத்தின் ஒரு வார்த்தையைப் பிடித்துகொண்டு விவாதம் செய்வது, உண்மையில் எனக்கு ஆச்சரியமாயுள்ளது.

சாத்தானைப் பொறுத்தவரை அவன் முன்னதாகவே நியாயந்தீர்க்கப்பட்டு இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலில் தள்ளப்பட்டுவிட்டதாக பின்வரும் வசனம் கூறுகிறது.

வெளி. 20:9,10 அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்.

ஏற்கனவே தள்ளப்பட்ட சாத்தானையா மீண்டும் தள்ளுவதாக 15-ம் வசனம் கூறுகிறது? இல்லை சகோதரரே! 11-ம் வசனத்திற்குப் பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ளதெல்லாம் மனிதர்களுக்குரியவைகளே.

பெரியன்ஸ்:

//இந்த பகுதி ஒரு இடத்திலும் கிரியை செய்யாதவர்கள் இரண்டாம் மரணத்திற்குள் போவார்கள் என்று சொல்லுவதில்லையே!! தங்களின் கிரியைக்குத்தக்தாய் நியாயத்தீர்ப்பு அடைவார்கள் என்று எழுதப்பட்டதை நீங்களாகவே எப்படி "கிரியை செய்கிறதினால்" இரண்டாம் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பிட முடியும்!! எங்கே இருக்கு நீங்கள் சொல்லும் வசனம்!! நீங்கள் இந்த பகுதியை கொடுத்து வசனங்களை விளக்குங்களேன்!!//

எல்லாவற்றையும் ஒரே இடத்தில்தான் சொல்லவேண்டுமென்பதில்லை. எவர்கள் (அக்கினிக் கடலெனும்) அக்கினிக்குள் போடப்படுவார்கள் என பின்வரும் வசனங்கள் சொல்வதைப் பாருங்கள்.

மத்தேயு 3:10 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ... 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.

7:10  நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (இயேசு நேரடியாகச் சொன்னது).

13:41  மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, 42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.

18:8  உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; 43 அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.



-- Edited by anbu57 on Monday 18th of July 2011 10:50:27 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.//

இதில் நூறுவயது சென்று மரிக்கிறவன் வாலிபனென்று எண்ணப்படுவான். இது எந்த மரணம்? மரிக்கிறவன் ஏன் வாலிபனென்று எண்ணப்படவேண்டும்? நூறு வயதுள்ள பாவிக்கு என்ன சாபம்? இதில் உங்கள் 'புரிந்து கொள்ளுதலை' விளக்குங்கள்.

//இவ்வசனங்களின்படி, அக்கினிக்கடலில் வீசப்படுவதுதான் இரண்டாம் மரணம் என்பது எனது புரிந்துகொள்தல். எவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் அக்கினிக்கடலில் வீசப்படுவார்கள்; அதாவது இரண்டாம் மரணம் அடைவார்கள்.

நம்மைக் குறித்தும், நாம் என்னசெய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் வேதாகமம் சொல்வதைத்தான் நான் முக்கியமாகக் கருதி ஆராய்கிறேனேயொழிய, தேவனின் சிங்காசனம் எப்படிப்பட்டது, வானம் பூமி எப்படி அகன்றுபோகும் எனும் தேவனுக்குரிய காரியங்களை நான் அதிகமாக ஆராய்வதில்லை.//

நம்மைக் குறித்து என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை? வேதம் வாசிப்பவர்களையா, உலகத்தையா, தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களையா? தெளிவு படுத்துங்கள்.

//மத்தேயு 3:10 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ... 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.

 

மத்தேயு 

7:119  நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (இயேசு நேரடியாகச் சொன்னது).//

 

இதை நீங்கள் பார்க்கவில்லையா?

17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

இயேசு நேரடியாகச் சொன்னதுதான், இது மட்டுமல்ல முழு வேதாகமமுமே வார்த்தையானவர் நேரடியாகச் சொன்னதுதான் என்பது எங்கள் புரிந்து கொள்ளூதல். ஒரு மரம் நல்ல கனி கொடுப்பதும் கொடுக்காததும் மரத்தின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? கெட்ட கனி கொடுக்கும் மரத்தை ஏன் யாரோ வைக்கவேண்டும்? அப்புறம் சுட்டெரிக்க வேண்டும்? அல்லது கெட்ட கனி கொடுக்கும் மரம் எப்போதாவது நல்ல கனி கொடுக்கக்த்தான் கூடுமா? மரத்தைக் குறைகூறி அதைத் 'தண்டிக்க' தேவன் முட்டாளா?

"தேவனால் எல்லாம் கூடும்" 

அன்பு அவர்களே முதலில் நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும். வசனத் தோடும், தேவ அன்புக்கும், அவரது நீதிக்கும் இசைவாகவும் இருக்கும்பட்சம் நல்லது.

ஒரு மனிதனை குழந்தையாக இருக்கும்போதே காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டால் அவன் எப்படிப்பட்ட‌ சுபாவமுள்ளவனாக இருப்பான்? பாஷை தெரியுமா? எப்படி 'நடக்க வேண்டும்' என்று தெரியுமா? சிந்தியுங்கள்.

அதே போலத்தான் ஒவ்வொரு மனிதனும் பாவம் நிறைந்த 'காட்டுக்குள்' விடப்பட்ட குழந்தையாக தனது சூழலுக்கு ஏற்றவிதமாகத்தான் இருக்க முடியும். அவனை அந்தச் சூழலில் பிறக்கச் செய்தது யார்? 

மனிதன் எப்படி சுபாவ அன்போடு 'தேவ சாயலாக' இருக்க வேண்டுமோ அப்படித்தான் அவன் இருக்க வேண்டும். இதைப்போய் பெரிய கிரியை என்று எண்ணுவது முட்டாள்தனமானது. லஞ்சம் வாங்கும் அலுவலகத்தில் லஞ்சம் வாங்காமல் இருப்பது 'கிரியை' அல்ல, சாதாரணமாகவே அப்படித்தான் இருக்க வேண்டும். அது போலத்தான் பிறரிடம் உண்மை அன்பு செலுத்தும்போது இயற்கையாக அதற்கேற்ற 'கிரியை'கள் வெளிப்பட வேண்டும். உங்களுடைய ஃபேமஸ் ஜெயில் விசிட், ஹாஸ்பிடல் விசிட் போன்றவை இயல்பாகவே நடக்க வேண்டும்.

மேலும் நீங்களே கிரியைகளை செலக்ட் செய்து உங்களுக்கு செய்ய சுலபமாக இருப்பதைத்தான் கடைபிடிக்கிறீர்கள் அல்லது முயலுகிறீர்கள் என்று என்னால் குற்றம் சாட்ட முடியும். கேட்டால் 'என்னுடைய புரிந்து கொள்ளுதல்' என்று சப்பை கட்டு கட்டுவீர்கள்.

உதாரணமாக‌,

மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

லூக்கா 6:30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

 

லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

லூக்கா 6:35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், 

இவையெல்லாம் யாருக்கு சகோதரரே!

உங்கள் வீட்டையும், வாகனத்தையும் நான் கேட்டால் கொடுத்துவிடுவீர்களா? ஒரு லட்சம் கடன் கொடுங்களேன். (லூக்கா 6:30) 

இல்லாவிட்டால் இரண்டாம் மரணம் ஜாக்கிரதை!!!

//மனுஷனால் செய்யமுடியாத தேவகட்டளைகள் உண்டு எனக் கூறுவது தேவகட்டளையை அவமதிப்பதாகும். மனுஷரால் முடியாததைச் செய்யும்படி தேவன் கூறினால், அவரது அக்கட்டளை அர்த்தமற்றதாகிவிடும்.//

நம்முடைய நீதியெல்லாம் அழுக்கும் கந்தையுமாயிருக்கிறது பிரதர். அதுதான் உண்மை.



-- Edited by soulsolution on Monday 18th of July 2011 12:10:41 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//இதில் நூறுவயது சென்று மரிக்கிறவன் வாலிபனென்று எண்ணப்படுவான். இது எந்த மரணம்? மரிக்கிறவன் ஏன் வாலிபனென்று எண்ணப்படவேண்டும்? நூறு வயதுள்ள பாவிக்கு என்ன சாபம்? இதில் உங்கள் 'புரிந்து கொள்ளுதலை' விளக்குங்கள்.//

நீங்கள் ஒரு கருத்தை “இதுதான் சரி” என உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்; இப்படிப்பட்ட உங்களிடம் என்ன சொல்லி விளக்கினாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. நீங்கள் புரிந்ததை நீங்கள் செய்யுங்கள். நான் புரிந்ததை நான் செய்துகொள்கிறேன்.

சோல்சொல்யூஷன்:

//நம்மைக் குறித்து என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை? வேதம் வாசிப்பவர்களையா, உலகத்தையா, தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களையா? தெளிவு படுத்துங்கள்.//

இக்கேள்விக்குப் பதில் தெரிந்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? மீண்டும் மீண்டும் அரைத்த மாவையை அரைக்கப்போகிறீர்களா? அல்லது நீ சொல்வது முட்டாள்தனமானது எனப் பகடி செய்யப்போகிறீர்களா? அதிமேதாவியான உங்களுக்கு முட்டாள்தனமான என்னால் எதையும் சொல்லி புரியவைக்க இயலாது.

சோல்சொல்யூஷன்:

//ஒரு மரம் நல்ல கனி கொடுப்பதும் கொடுக்காததும் மரத்தின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? கெட்ட கனி கொடுக்கும் மரத்தை ஏன் யாரோ வைக்கவேண்டும்? அப்புறம் சுட்டெரிக்க வேண்டும்? அல்லது கெட்ட கனி கொடுக்கும் மரம் எப்போதாவது நல்ல கனி கொடுக்கக்த்தான் கூடுமா? மரத்தைக் குறைகூறி அதைத் 'தண்டிக்க' தேவன் முட்டாளா?//

ஒரு மரம் நல்ல கனி கொடுப்பதும் கொடாததும் மரத்தின் கட்டுப்பாட்டில் இல்லை எனும் மாபெரும் உண்மையை இந்த Truth Seekers தளத்தில் கண்டறிந்த உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனின் செயலே அவனது கட்டுப்பாட்டில் இல்லை; அவன் பாவம் செய்வதும் பாவம் செய்யாதிருப்பதும் நன்மை செய்வதும் நன்மை செய்யாதிருப்பதும் தேவனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது எனக் கண்டுரைத்த நீங்கள், மரத்தை மட்டும் விட்டுவைக்கவா போகிறீர்கள்?

நீங்கள் கண்டுகொண்ட உண்மைப்படி ஒரு மரம் நல்ல கனி கொடுப்பதும் கொடாதிருப்பதும் அதன் கட்டுப்பாட்டில் இல்லை எனும் போது மரத்தைக் குறை கூறி அதைத் தண்டிக்க தேவன் முட்டாளா எனும் கேள்வி 100-க்கு 100 நியாயமானதே. ஆனால் நல்லகனி கொடாத மரம் தண்டிக்கப்படும் எனச் சொன்னது நானல்ல, இயேசுகிறிஸ்து. எனவே உங்கள் கேள்வியை இயேசுகிறிஸ்துவுக்கு Re-direct செய்கிறேன். அவரே உங்களுக்குப் பதில் தருவாராக.

சோல்சொல்யூஷன்:

//அன்பு அவர்களே முதலில் நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும்.//

உங்களுக்குத் தெளிவுபடுத்தவா? வேண்டாம் பிரதர், வேண்டாம். இதுவரை தெளிவுபடுத்தி முயன்று நான் பட்ட பாடு போதாதா?

சோல்சொல்யூஷன்:

//ஒரு மனிதனை குழந்தையாக இருக்கும்போதே காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டால் அவன் எப்படிப்பட்ட‌ சுபாவமுள்ளவனாக இருப்பான்? பாஷை தெரியுமா? எப்படி 'நடக்க வேண்டும்' என்று தெரியுமா?//

அவன் எப்படி இருப்பான் என எனக்குத் தெரியாது. ஏனெனில் அப்படிப்பட்டவனைக் குறித்து வேதாகமத்தில் தகவல் இல்லை. ஆனால் ஆத்துமா அறிவில்லாதிருப்பது நல்லதல்ல என வேதாகமம் சொல்வதும், மிருகங்களுக்கு இருக்கும் அறிவுகூட இல்லாமல் மனிதன் உணர்வுகெட்டவனாக இருக்கிறான் என வேதாகமம் சொல்வதும், அந்த மனிதன் பொல்லாப்பு செய்ய அறிவாளியாகவும் நன்மை செய்ய அறிவில்லாதவனாகவும் இருக்கிறான் என வேதாகமம் சொல்வதும், அறிவில்லாமையால் ஜனங்கள் சங்காரமாகிறார்கள் என வேதாகமம் சொல்வதும் (நீதி. 19:2; ஏசாயா 1:3; எரேமியா 4:22; ஓசியா 4:6) எனக்கு மிகமிக நன்றாகவே தெரியும்.

(இதைப் படித்ததும், “இதென்ன தேவன், அவரே எல்லாரையும் அறிவற்றவர்களாகப் படைத்துவிட்டு, அவரே தமது சித்தப்படி எல்லாரையும் அறிவுகெட்டத் தனமாக நடக்க வைத்து விட்டு, அப்பாவியான அவர்கள் சங்கரிக்கப்படுவதற்கு அவர்களின் அறிவில்லாமையே காரணம்” என்கிறார்? இதென்ன நியாயம் அன்பு அவர்களே? என என்னிடம் கேளாதீர்கள். எனக்கு நிச்சயமாகப் பதில் தெரியாது.)

சோல்சொல்யூஷன்:

//அதே போலத்தான் ஒவ்வொரு மனிதனும் பாவம் நிறைந்த 'காட்டுக்குள்' விடப்பட்ட குழந்தையாக தனது சூழலுக்கு ஏற்றவிதமாகத்தான் இருக்க முடியும். அவனை அந்தச் சூழலில் பிறக்கச் செய்தது யார்?//

சூப்பர் கேள்வி சகோதரரே! யோபுவின் கேள்விகளையும் மிஞ்சிவிட்டது உங்கள் கேள்வி. எனவே உங்கள் கேள்வியை தேவனிடமே Re-direct செய்கிறேன்.

சோல்சொல்யூஷன்:

//மனிதன் எப்படி சுபாவ அன்போடு 'தேவ சாயலாக' இருக்க வேண்டுமோ அப்படித்தான் அவன் இருக்க வேண்டும். இதைப்போய் பெரிய கிரியை என்று எண்ணுவது முட்டாள்தனமானது.//

யோபு 40:4,5 இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன்.

சோல்சொல்யூஷன்:

//உங்களுடைய ஃபேமஸ் ஜெயில் விசிட், ஹாஸ்பிடல் விசிட் போன்றவை இயல்பாகவே நடக்க வேண்டும்.//

Objection brother! ஜெயில் விசிட், ஹாஸ்பிடல் விசிட் எல்லாம் சொன்னது நானல்ல, நம் மூத்த சகோதரர் இயேசுதான் சொன்னார்.

சோல்சொல்யூஷன்:

//மேலும் நீங்களே கிரியைகளை செலக்ட் செய்து உங்களுக்கு செய்ய சுலபமாக இருப்பதைத்தான் கடைபிடிக்கிறீர்கள் அல்லது முயலுகிறீர்கள் என்று என்னால் குற்றம் சாட்ட முடியும். கேட்டால் 'என்னுடைய புரிந்து கொள்ளுதல்' என்று சப்பை கட்டு கட்டுவீர்கள்.//

குற்றஞ்சாட்டுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் பிரதர். தண்டனை எதுவும் கொடுத்து விடாதீர்கள் Please.

சோல்சொல்யூஷன் :

//உதாரணமாக‌,

மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

லூக்கா 6:30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

லூக்கா 6:35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், 

இவையெல்லாம் யாருக்கு சகோதரரே!

உங்கள் வீட்டையும், வாகனத்தையும் நான் கேட்டால் கொடுத்துவிடுவீர்களா? ஒரு லட்சம் கடன் கொடுங்களேன். (லூக்கா 6:30) 

இல்லாவிட்டால் இரண்டாம் மரணம் ஜாக்கிரதை!!!//

இப்பொழுது ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகிவிட்டது. இம்மாதிரி வசனங்களின்படி நடக்க வேண்டும் எனப் போதித்தால், எங்கே இந்த வசனங்களைக் காட்டி யாராவது உங்களிடம் கேட்டுவிடுவார்களோ எனப் பயந்துதான், வசனங்களின்படி நடக்கவேண்டும் என அவசியமில்லை, ஆனாலும் தேவன் பட்சபாதமில்லாமல் அனைவருக்கும் நித்திய ஜீவன் கொடுப்பார் எனப் போதிக்கிறீர்கள், சரிதானா சகோதரரே?

சோல்சொல்யூஷன்:

//நம்முடைய நீதியெல்லாம் அழுக்கும் கந்தையுமாயிருக்கிறது பிரதர். அதுதான் உண்மை.//

அது அழுக்காக இருந்தாலும் சரி, கந்தையாக இருந்தாலும் சரி, நம்மிடம் நீதி கட்டாயம் வேண்டும் பிரதர். ஏனெனில்,

நீதியைச் செய்கிறவன் தான் தேவனில் பிறந்தவனேயொழிய (1 யோவான் 2:29), அழுக்கும் கந்தையுமான நீதியை நான் ஏன் செய்யணும்னு கேள்வி கேட்கிறவன் சாத்தானில் பிறந்தவனாகிவிடுவான்;

நீதியைச் செய்கிற நீதிமான்கள்தான் நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்களேயொழிய, அழுக்கும் கந்தையுமான நீதியை நான் ஏன் செய்யணும்னு கேள்வி கேட்கிறவன் நித்திய ஆக்கினைக்குத்தான் போவான் (மத்தேயு 25:46).

ஆனா நீங்கள் இதைப் பத்திக் கவலைப்படவேண்டியது இல்லை. உங்களை ஆட்டுவிப்பவர் முழுக்க முழுக்க தேவனே; எனவே நீங்கள் நீதியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதற்கு பொறுப்பு தேவனே; எனவே எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.

உங்களுடனான என் விவாதத்தை இனிதே முடித்துக்கொள்கிறேன் சகோதரரே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//உண்மையான அன்பு நிச்சயமாக இல்லை!! பேசுவதற்கு உணர்சிப்படுவதற்கும் அன்பு என்று சொல்லிவிடுகிறோம், ஆனால் உண்மையான அன்பு இல்லை!!//

உண்மையான அன்பு இருக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் சகோதரரே?

பெரியன்ஸ்:

//அன்பே இல்லை என்றும் சொல்லவில்லை!! ஆனால் தேவன் விரும்பும் அந்த அன்பு இப்பொழுது இல்லை!! பகைவரை மன்னிக்கும் அன்பு இல்லை, நம்மை போல் பிறரை நேசிக்கும் அன்பு இல்லை, வேற்று மதஸ்தாரிடம் அன்பு இல்லை, வேற்று ஜாதியிடத்தில் அன்பு இல்லை!! ஆனால் சிலரிடத்தில் அன்பு நிச்சயமாக இருகிறது, சுயநலமற்ற அன்பு இருக்கிறது அது மிகவும் சிலரிடத்தில் தான் இருக்கிறது!! கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்தவ பெயர் சபைகளுக்கு போகிற அனைவரிடமும் சுவபாவத்தில் அன்பு இருக்கிறது என்று சொல்லவில்லை!! சீஷர்களாக வாழ அழைக்கப்பட்ட சிலரிடம் மாத்திரமே அந்த அன்பு இருக்கிறது!! அப்படியே புறமதஸ்தாரிடமுன் இருக்கிறது!!//

அன்பு இருக்கிறதா, இல்லையா, அது உண்மை அன்பா, பொய் அன்பா என்ற கேள்வியே தேவையில்லை. அன்பு எனும் கிரியையை வேதாகமம் வலியுறுத்துகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி.

பெரியன்ஸ்:

//இப்பொழுதே எல்லாரிடமும் அன்பு இருக்கிறது என்றால் இந்த தீர்க்கதரிசங்கள் நிறைவேறாமல் போய்விடும்!! நீங்கள் சுட்டி காட்டும் கிரியைகள் எல்லாவற்றிலும் கீழ்கானும் விஷயங்கள் நடக்கும் என்று பவுல் எழுதியிருக்கிறாரே!! இப்பொழுதே அந்த அன்பு எல்லாரிடமும் இருக்கிறது என்றால் கீழே உள்ள வசனம் பொய்யானதாக இருக்கும்!! சிலர் இருக்கிறார்கள், அவர்கள் ஆதிமுதலிருந்து கிறிஸ்துவிற்குள் தேவனால் தேரிந்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டவர்கள் ஆவர்!! நீங்களோ நானோ அன்பை போதிப்பதாலோ பிரசங்கிப்பதாலோ அன்பு வந்து விடாது, அப்படியே மற்ற கிரியைகளும்!!

2 தீமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,.........//

எல்லாரிடமும் உண்மையான் அன்பு இருக்கிறது என நான் சொல்லவுமில்லை, அந்த நிலை வந்துவிடும் என நான் எதிர்பார்க்கவுமில்லை. நித்திய ஜீவனை சுதந்தரிக்க நாம் என்ன செய்யவேண்டும் என வேதாகமம் கூறுகிறது, நித்திய ஜீவனை சுதந்தரிக்க அன்பு எனும் கிரியை அவசியமென வேதாகமம் கூறுகிறதா என்பதை அறிந்து, அறிந்ததன்படி நடக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

கொடியகாலங்கள் வரும் என்று சொன்ன அதே வேதாகமம் தான், நாளானது எவ்வளவாய் சமீபித்து வருகிறதோ அவ்வளவாய் புத்தி சொல்லுங்கள் என்றும் கூறுகிறது (எபி. 10:25).

எனவே, “தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்கிறது, நான் யாருக்கும் போதித்து பயனில்லை, எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள், நானுங்கூட அப்படித்தான் இருப்பேன்” என்றெல்லாம் சொல்லி சோம்பேறித்தனமாக இருப்பது சரியல்ல.

பெரியன்ஸ்:

//கீழே எழுதிய இந்த வசனமும் நம் வேதத்தில் தான் இருக்கிறது, நீங்கள் மட்டும் இதை ஆறாயவில்லையா, அல்லது உங்கள் போதனைக்கு மாற்றாக இருக்கிறது என்று விட்டு விட்டீர்களா!! நான் இந்த வசனத்தை பல முறை கேட்டுவிட்டேனே!!

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.//

கிருபையினால் இரட்சித்து அழைத்ததாகக் கூறும் பவுல், தொடர்ந்து கூறுவதையும் சற்று கவனியுங்கள்.

2 தீமோ. 1:13  நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. 14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.

2:3 நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 9 இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. 10 ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.(சகிக்காவிட்டால் இரட்சிப்பை இழக்க நேரிடும்)

11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; (அவரோடுகூட மரிக்கவில்லையெனில் பிழைப்போமா?)

12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; (ஆம், பாடுகளைச் சகித்தால்தான் ஆளுகை, சகிக்க மறுத்தால் ...?) நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; (ஆம், கிருபையைப் பெற்றபின் எல்லாம் நமது கையில்தான் இருக்கிறது)

22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. (ஆம், நாம் தான் ஓடவேண்டும், தேவன் நம்மை இழுத்துச் செல்லமாட்டார்)

3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

இவ்வசனங்கள் கூறுகிறபடி, வேதவாக்கியங்களைக் கொண்டு உபதேசிப்பதை விட்டுவிட்டு, யாரிடமும் அன்பு இருக்காது, யாரும் சொன்னால் கேட்கமாட்டார்கள், நாம் என்னதான் முயன்றாலும் தேவசித்தம் தான் நடக்கும், எனச் சொல்லிக்கொண்டிருக்கலாமா சகோதரரே?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//இப்பூமியில் முதலாம் மரணத்திற்கு முன் அன்பின் கிரியை இல்லாதவர்கள் 1000 வருட அரசாட்சியில் பிரஜைகளாக மாட்டார்கள் என்கிற உங்கள் கருத்தை வசனத்துடன் சொல்லுங்கள்!!//

நேரடியான வசனம் இல்லாவிட்டாலும், மறைமுகமான வசனம் இருப்பதை ஏற்கனவே காட்டியிருந்தேன். அது:

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

இவ்வசனத்திற்கு நீங்கள் என்னதான் விளக்கம் சொல்வீர்கள்? இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பு எப்போது நடக்கும்? அந்த நியாயத்தீர்ப்பு இரக்கமில்லாததாக இருக்கும் என்றால் அது எப்படி? இக்கேள்விகளுக்குத் தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.

உங்கள் பதிலுக்கு முன்னதாக, உங்கள் கேள்விக்கான எனது பதிலைத் தந்துவிடுகிறேன்.

1000 வருட அரசாட்சி என்பது நீதியைக் கற்றுக் கொடுக்கும் ஒரு காலம். இதில் இரக்கமுள்ள கற்றுக் கொடுத்தல், இரக்கமில்லாத கற்றுக் கொடுத்தல் எனும் பாகுபாடு இருக்காது. எனவே இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு 1000 வருட அரசாட்சியில் நடக்கபோகிற நியாயத்தீர்ப்பு அல்ல; இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பைப் பெறப்போகிறவனான “இரக்கம் செய்யாதவன்” 1000 வருட அரசாட்சியின் பிரஜையாக வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான் அன்பின் கிரியையாகிய இரக்கத்தைச் செய்யாதவன் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாக மாட்டான் எனக் கூறினேன்.

பெரியன்ஸ்:

////இந்த நியாயத்தீர்ப்புக் காலத்தில், அந்த அரசாட்சியின் கீழுள்ள ஜனங்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படும் (ஏசாயா 26:9).//

ஏற்கனவே நீதியின் கிரியைகள் செய்ததால் தானே இவர்கள் உயிர்த்தெழுந்தே வந்திருக்கிறார்கள், இவர்களுக்கு எதற்கு மீண்டும் நீதியை கற்றுக்கொடுக்கப்படும்??!!//

ஏற்கனவே இவர்களிடம் இரக்கம் செய்தல் எனும் நற்கிரியை இருந்ததால், இவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாயினர். ஆயினும் வேறு பல பாவங்கள் இவர்களிடம் இருக்கக்கூடும். அதாவது மாம்ச பலவீனத்தாலும் சாத்தானின் தூண்டுதலாலும் செய்கிற பாவங்கள் இருக்கக்கூடும். உதாரணமாக, இச்சை, கோபம் போன்ற பாவங்கள் இருக்கக்கூடும்; இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கக் கூடும்; இப்படி பல பாவங்கள் செய்திருக்கலாம். அல்லது கிறிஸ்துவை அறியும் வாய்ப்பைப் பெறாதிருந்திருக்கலாம். இவற்றின் காரணமாகத்தான் இவர்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கப்படும்.

பெரியன்ஸ்:

//இந்த வசனத்திற்கு ஜோடு வசனம் இல்லாததால் இது இன்னும் விளங்காத ஒரு வசனமாக எனக்கு இருக்கிறது!!//

இப்படித்தான் பல வசனங்கள் விஷயத்தில் கூறுகிறீர்கள்.

பெரியன்ஸ்:

//அந்த அறியாமைக்குள் அவரே ஜனங்களை வைத்து விட்டு, அவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை பெறும்படி நேரடியாக "இறுதி நியாயத்தீர்ப்பின்" போது உயிர்த்தெழசெய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்!! உங்களின் இந்த கூற்று தேவ நீதியை கொச்சைப்படுதுகிறதாக இருக்கிறது!!//

அந்த அறியாமைக்குள் அவரே வைத்துள்ளார் என வசனம் சொல்லவில்லை; அது உங்கள் கருத்து. எவர்கள் கீழ்ப்படிய மறுத்தார்களோ அவர்களைத்தான் அறியாமைக்குள் வைத்துள்ளார். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

ரோமர் 1:21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

நன்றாகக் கவனியுங்கள் சகோதரரே! தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க வர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்தான், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

தேவனை அறிய வாஞ்சித்தவர்களையும் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பினவர்களையும் அவர் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கவுமில்லை, கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போடவுமில்லை.

தம்மை அறிய வாஞ்சிப்பவர்களையும் தமக்குக் கீழ்ப்படிய வாஞ்சிப்பவர்களையும் அவர் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தால் அல்லது கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டால் அது தேவனுக்கு எத்தனை அவப்பெயரைக் கொண்டுவரும்? சிந்தியுங்கள் சகோதரரே!

வசனங்களை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, தேவத்தன்மைக்கு இழுக்கைக் கொண்டுவரும் கருத்தை உருவாக்கவேண்டாம்.

ஜனங்களை அறியாமைக்குள் வைத்துவிட்டு, இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கொடுத்தால் அது நிச்சயம் அநியாயம்தான். ஆனால் தேவன் அவராகவே ஜனங்களை அறியாமைக்குள் வைக்கவில்லை என்பதே உண்மை.

பெரியன்ஸ்:

//எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை கிறிஸ்து ஒப்புக்கொடுத்தார் என்றால் அந்த எல்லாரையும் அவர் வகை பிரிக்கவில்லை, நீதியின் கிரியைகள் செய்தவர்கள், செய்யாதவர்கள், அக்கிரமக்காரன், கொலைக்காரன், கொள்ளைக்காரன், விபச்சாரக்கார‌ன் அனைவருமே அந்த "எல்லாரும்"இல் அடங்குவார்கள்!!//

ஆம், எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தான் கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். அதாவது ஆதாமுக்குள் மரித்த எல்லாரையும் கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கிற இந்த மீட்புக்காக, மீட்கும் பொருளாக கிறிஸ்து தம்மை ஒப்புகொடுத்தார்.

பெரியன்ஸ்:

//இப்படி எல்லாருக்காகவும் கிறிஸ்து தன்னை ஈடுபலியாக கொடுத்திருக்கும்போது, அது எப்படி ஒரு சாரார் முதலிலும் ஒரு சாரார் 2ம் மரணத்திற்கும் உயிர்த்தெழுவார்கள் என்கிற போதனை தரமுடிகிறது?//

இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும் என வசனம் சொல்வதாலும், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் என வசனம் கூறுவதாலும் இதுபோன்ற கருத்தை ஏராளமான வசனங்கள் கூறுவதாலும்தான் இப்போதனையைத் தரமுடிகிறது.

இப்போதனைக்கு மாறாக வேறு எந்த போதனையை எதிர்பார்க்கிறீர்கள்? இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பின் மூலம் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்றும், அக்கினியில் போடப்பட்டாலும் நித்திய ஜீவனுடன் இருப்பார்கள் என்றும் போதிக்க வேண்டுமென்றா எதிர்பார்க்கிறீர்கள்?

பெரியன்ஸ்:

//நான் கிரியை செய்தால் நான் பிழைப்பேன், அவன் கிரியை செய்யாமல் எப்படி பிழைக்கக்கூடும் என்பதில் ஒரு அன்பும் இல்லை!!//

கிரியை செய்யாதவன் பிழைப்பதில்லை என வேதவசனம் கூறும்போது, “இல்லையில்லை, நான் அவனை எவ்வளவாய் நேசிக்கிறேன், எனவே அவனும் நிச்சயமாகப் பிழைப்பான்” என்று சொல்லி, அவனை கிரியை செய்யாத நிலையில் வைத்து, பின்னர் அவனைப் பிழைக்கக்கூடாதபடி செய்வதா அன்பு?

பெரியன்ஸ்:

//தேவன் ஏதிர்ப்பார்க்கிறது சுயநலமற்ற அன்பு!! நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசு கிடைக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் செய்யப்படுவது அன்பு அல்ல, அது ஒரு கைமாற்று கிரியை, அவ்வளவே!!//

ஆனால் இயேசு இப்படியல்லவா சொல்கிறார்:

இரக்கமுள்ளவர்கள் (அதற்குப் பரிசாக) இரக்கம் பெறுவார்கள்; சிறியர்களுக்கு நற்கிரியைகளைச் செய்தவர்களுக்கு பரிசாக நித்திய ஜீவன் என்றல்லவா பல வசனங்களில் மாறி மாறி சொல்கிறார்? உங்கள் கூற்றை நம்பி, “நான் செய்வது கைமாற்றுக் கிரியையல்லவா” என நினைத்து எனக்கு நானே நொந்துகொள்ளவா? அல்லது இயேசுவின் கூற்றை நம்பி, எனக்குக் கிடைக்கப்போகும் பரிசை நினைத்து அகமகிழவா?

பெரியன்ஸ்:

//நீங்கள் அன்பை கிரியையில் வெளிப்படுத்தினால் தான் அன்பு என்கிறீர்கள்!!//

ஆம், வேதாகமம் இப்படிச் சொல்வதை அதேவிதமாகச் சொல்லி, இதைக் கேட்பவர்கள் அன்பை கிரியையில் வெளிப்படுத்தி அதன் பரிசாக நித்தியஜீவனைப் பெறவேண்டுமென ஆசிக்கிறேன். நீங்களோ,

//கிறிஸ்துவினால் எல்லாருக்கும் மீட்பு என்கிற விசுவாசத்தில் அன்பை வெளிப்படுத்துகிறேன்!!// என்று சொல்லி எல்லோருக்கும் மீட்பு எனும் தவறான பல்லவியைப் பாடிப் பாடி அன்பின் கிரியையை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு இடறலாகி, அன்பின் கிரியைக்குப் பலனான நித்தியஜீவனை அவர்கள் பெறக்கூடாதபடி செய்கிறீர்கள்.



-- Edited by anbu57 on Monday 18th of July 2011 10:37:54 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1. இறுதி நியாயத்தீர்ப்பு என்னவென்று ஒவ்வொரு பதிவுலும் கேட்கிறேன் பதில் இல்லை!! இறுதி நியாயத்தீர்ப்பு என்றால் பல நியாயத்தீர்ப்புகள் இருக்க வேண்டும்!! ஆனால் வசனமோ ஒரே தரம் மரிப்பதும் (உங்களை பொறுத்தவரை பல மரணங்கள் இருக்கிறது) அதன் பின் நியாயத்தீர்ப்புக்கு (நியாயத்தீர்ப்புகள் அல்ல) எழும்புவது மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்ரு சொல்லுகிறது!! உங்களின் இந்த "இறுதி நியாயத்தீர்ப்பு" கோட்ப்பாட்டை விளகுவீர்கள் என்றால் நானும் புரிந்துக்கொள்கிறேனே!!

2. உங்கள் பார்வையில் பாவிகள் வேறு இரக்கம் செய்யாதவர்கள் வேறு!! இரக்கம் செய்யாதவர்கள் நேரடியாக இரண்டாம் மரணத்திற்கு உயிர்த்தெழுந்து "இறுதி நியாயத்தீர்ப்பில்" பங்கு கொண்டு எந்த வித வாய்ப்பும் (நீதியை கற்று கொடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல்) அவர்கள் மாத்திரம் கண்டிப்பாக இரண்டாம் மரணத்திற்குள் போவார்கள்!! அப்படி தானே!! அப்படி என்றால் இரக்கம் செய்யாதவர்கள் "பாவிகள்" என்கிற கெட்டகரியில் வராமால், இந்த இரக்கம் செய்யாதவர்களுக்கு கிறிஸ்து சிந்திய இரத்ததில் காப்பாற்றும் தகுதியில்லை என்று சொல்ல வருகிறீர்கள்!! அப்படி தானே!! அதாவது கிறிஸ்துவின் இரத்தம் எல்லாரையும் மீட்டு கொள்ள முடியாது என்கிற போதனை தருகிறீர்கள்!!

1 தீமோத்தேயு 2:6 ஏதோ கிறிஸ்துவினால் ஆதாமின் பாவத்திலிருந்து எல்லாரையும் மீட்டுக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைப்பது போல் வசனம் இல்லை!! அவர் எல்லா மனிதர்களையும் மீட்டுக்கொள்ள தான் தன்னை மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்தார், அதின் பயனால எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுவார்கள் என்கிறது வேதம்!! ஆனால் நீங்களோ இரக்கம் செய்யாதவர்கள் எழும்ப மாட்டார்கள், பாவிகள் எழும்புவார்கள் என்கிற ஒரு புதிய போதனையை தருகிறீர்கள்!! மொத்தத்தில் கிறிஸ்து தன்னை மீட்கும் பொருளாக கொடுத்ததில் "இரக்கம் செய்யாதவர்களுக்கு" பிரயோஜனம் இல்லை என்கிறீர்கள்!! ஏனென்றால் அவர்கள் நேரடியாக இரண்டாம் மரணத்திற்குள் போகும் படி "இறுதி நியாயத்தீர்ப்பில்" பங்கு கொள்வார்கள் என்கிறீர்கள்!! உங்கள் நீதியின் கிரியைகளின் போதனையினால் நீங்கள் கிறிஸ்துவின் ஈடுபலியையே அவமாக்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகிறேன்!!

எல்லா மனிதர்கள் என்றால் அதில் "இரக்கம் செய்யாதவர்கள்" இருக்க மாட்டார்கள் என்பது உங்களின் தவறான புரிந்துக்கொள்ளுதலாகும்!!

//நம்மைக் குறித்தும், நாம் என்னசெய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் வேதாகமம் சொல்வதைத்தான் நான் முக்கியமாகக் கருதி ஆராய்கிறேனேயொழிய, தேவனின் சிங்காசனம் எப்படிப்பட்டது, வானம் பூமி எப்படி அகன்றுபோகும் எனும் தேவனுக்குரிய காரியங்களை நான் அதிகமாக ஆராய்வதில்லை.//

வேத புத்தகம் என்றால் அதில் எல்லாவற்றையும் தான் பார்க்க வேண்டும்!! இயேசு கிறிஸ்துவை ஆட்டுக்குட்டி என்று எழுதியிருப்பதால் ஆட்டுக்குட்டி என்றே வைத்துக்கொள்ளலாமா!! ஏனென்றால் அவர் ஆட்டுக்குட்டியாக இருந்தா என்ன எப்படி இருந்தால் தான் என்ன, உங்களை குறித்தும், நீங்கள் என்ன "செய்ய" வேண்டும் என்பதை குறித்தா சொல்லுகிறது!! வெறும் நீதியின் கிரியையில் பிரியப்பட்டு, அதினால் மாத்திரமே நீங்கள் மற்றவை ஒன்றும் ஆராய்ச்சி செய்ய தேவையில்லை என்றால் நம் இந்த விவாதமே வீண் என்று தான் சொல்லவேண்டும்!! ஏனென்றால், நீங்கள் நீதியின் கிரியை மாத்திரமே புடித்துக்கொண்டு எழுதுகிறீர்கள், மற்றது ஒன்றும் உங்களுக்கு தேவையில்லை!! கிறிஸ்துவினால் இரக்கம் செய்யாதவர்களை மீட்க முடியாது என்கிற புதிய போதனையை உங்களிடத்தில் எதிர்ப்பார்க்கவில்லை தான்!! வேதம் என்பது இரக்கம் செய்யாதவர்களுக்கு என்ன நேரும் என்பதில் மாத்திரம் முடியவில்லை சகோ அன்பு அவர்களே, அதிலும் வெளிப்படுத்தல் என்கிற இந்த சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட "இரண்டாம் மரணம்" என்கிற ஒரு வார்த்தை வைத்துக்கொண்டு கிறிஸ்துவின் இரத்தம் இரக்கம் செய்யாதவர்களை மீட்க முடியாது என்கிற எண்ணத்தில் எழுதுவது எல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான்!! இரக்கம் செய்யாதவர்கள் மாத்திரமே "இரண்டாம் மரணத்திற்குள்" போவார்கள் என்றால்,

வெளி 21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

அப்போ பாவம் செய்த எல்லாரும் இரண்டாம் மரணத்திற்குள் போக வேண்டும் என்றால் "நீதியான நியாயத்தீர்ப்பு:, "நீதியை கற்றுக்கொள்வார்கள்"; போன்ற பதங்கள் எல்லாம் அர்த்தமற்றவைகளாக போகும்!! நரகம் இருக்கிறது என்பதை காட்டிலும் உங்களின் இந்த போதனை இன்னும் கொடுரமாக இருக்கிறது!!


இது எல்லாம் எப்போ செய்யப்பட்ட பாவங்கள்!! முதலாம் மரணத்திற்கு முன்னமா, அல்லது உயிர்த்தெழுந்த பிறகா!! முதலாம் மரணத்திற்கு முன்பு என்றால், இவைகள் மன்னிக்கப்படவில்லையா!! உயிர்த்தெழுதலுக்கு பிறகு 1000 வருட அரசாட்சியில் என்றால் கிறிஸ்துவின் ராஜியத்திலும் இது போன்ற பாவங்களுக்கு இடம் இருக்குமா??!


//சிறியோர், பெரியோர் எனும் வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தை மற்றும் அதன் அர்த்தங்களைத் தருகிறேன், படித்துப் பாருங்கள்.//

அய்யா நான் சிறியோருக்கும் பெரியோருக்கும் அர்த்தம் கேட்கவில்லை, "மரித்தோர்" என்று இருக்கிறது அவர்கள் யார் என்று கேட்க்கிறேன்!!

//இப்பூமியில்தான் எனக் கருதுகிறேன்.//

இப்பூமியில் தான் நடக்கும் என்று கருதுகிறிர்கள்!! சரி!! ஆனால் நியாயத்தீர்ப்பின் போது அந்த ஜனங்கள் எங்கே போவார்கள், அதான் வானமும் பூமியின் காணாமற் போயிற்று என்று வசனம் சொல்லுகிறதே!! இதை கேட்டல் அதை பற்றி எல்லாம் அறிய வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்!! ஒரு விஷ்யத்தை பாதியாக வைத்துக்கொண்டு அது தான் முழுமை என்று வாதாடுகிறீர்கள் அன்பு அவர்களே!!

//குழப்பமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஆகிலும், நான் ஏற்கனவே சொன்னபிரகாரம் இரக்கம் செய்யாதவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமல் நேரடியாக சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வருவார்கள் எனும் தகவலில் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.//

இதில் எந்த குழப்பமும் கிடையாது!! உங்களிடம் "நம்புகிறேன்", "கருதுகிறேன்" போன்ற வார்த்தைகளில் பதில் இருப்பதால் உங்களுக்கு இது குழப்பமான கேள்வியாக தோன்றுகிறது!!

//இரக்கம் செய்யாதவர்கள் எனும் பிரிவினர் உயிர்தெழாமலும் இருப்பார்கள்.//

இது உங்கள் நியாயத்தீர்ப்பா!!?

//எல்லாவற்றையும் ஒரே இடத்தில்தான் சொல்லவேண்டுமென்பதில்லை. எவர்கள் (அக்கினிக் கடலெனும்) அக்கினிக்குள் போடப்படுவார்கள் என பின்வரும் வசனங்கள் சொல்வதைப் பாருங்கள்.//

நீங்கள் கொடுத்த எல்லா வசனங்களிலும் அக்கினி இருக்கு "கடல்" இல்லையே!!

உங்கள் குற்றசாட்டுகளுக்கு பதில் தர அவகாசம் தராமல் இருக்கிறீர்கள்...........எனக்கு கொஞ்சம் காலம் தாருங்கள், உங்களின் வாதங்களுக்கு பதில் தந்த பிறகு நீங்கள் தொடரலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

இந்த வசனம் என்ன சொல்லுகிறது!! நம்முடைய கிரியை என்றால் என்ன? ஏன் அதன்படி நம்மை இரட்சிக்காமல், அவரின் தீர்மானத்தின்படியும், ஆதிமுதல் இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் நம்மை இரட்சிக்கிறார், பரிசுத்த அழைப்பினால் அழைக்கிறார்!! ஏற்கனவே தீர்மானிப்பதில்லை என்கிற உங்களுடைய வாதத்திற்கு இந்த வசனம் உங்களுக்கு பதில் தருவது போல் இல்லையா?? மனிதன் எதை செய்கிறான் என்பதை பொறுத்து தேவன் தன் திட்டங்களை மாற்றுகிறார் என்றால், அவர் ஏன் ஆதிமுதலிலேயே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும்?

பதில் கிடைக்குமா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

நிறைய விஷயங்களில் நான் ஒரு கருத்தில் சொல்வதை நீங்கள் வேறொரு கருத்தாக திரித்துக் கூறுகிறீர்கள். இப்படிச் சொல்வது விவாதத்திற்கு தேவையற்றதாக இருப்பதோடு, விவாதம் செய்கிற என்னை சலிப்படையவும் செய்துவிடுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்:

பெரியன்ஸ்:

//அதாவது கிறிஸ்துவின் இரத்தம் எல்லாரையும் மீட்டு கொள்ள முடியாது என்கிற போதனை தருகிறீர்கள்!!//

இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு எனச் சொல்வது வேதாகமம் (நானல்ல).

பிறரது குற்றத்தை மன்னித்தால்தான் நமது குற்றத்தை தேவன் மன்னிப்பார் எனச் சொன்னது இயேசு (நானல்ல).

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் எதுவாக இருக்கும்? நித்திய ஜீவனாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவ்வாறெனில் அது மரணமாகத்தானே இருக்க முடியும்?

தேவன் நம் குற்றத்தை மன்னிக்காவிட்டால் நமக்கு என்ன நியாயத்தீர்ப்பு கிடைக்கும்? நித்திய ஜீவனாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவ்வாறெனில் அது மரணமாகத்தானே இருக்க முடியும்?

இதன் அடிப்படையில்தான் இரக்கம் செய்யாதவனும் பிறர் குற்றத்தை மன்னியாதவனும் இரண்டாம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்கிறேன் நான். எனது கூற்றுக்கு அடைப்படை வேதவசனம் தானே? அப்படியிருக்க, கிறிஸ்துவின் இரத்தம் எல்லாரையும் மீட்க முடியாது என்கிறீர்களா என என்னை நீங்கள் கேட்டால் அதற்கு நான் என்ன பதில் சொல்வது?

நம் விவாதம் சரியான பாதையில் செல்லவேண்டுமானால், இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் என்னவென நீங்கள் விளக்க வேண்டும். அதைவிடுத்து அவ்வசனத்தின் அடிப்படையில் நான் சொல்வதை வைத்து என்னிடம் ஏடாகூடமான கேள்வியைக் கேட்கக்கூடாது.

இப்போதும் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்.

1. “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் என்னவென” நீங்கள் சொல்கிறீர்கள்?

2. “பிறர் குற்றத்தை மன்னியாத நமது குற்றத்தை தேவன் மன்னிக்காவிட்டால் நம் நிலை என்னாகும்” என நீங்கள் சொல்கிறீர்கள்?

3. “பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இடத்திற்குச் சென்றவர்களான சபிக்கப்பட்டவர்களின் நிலை என்னாகும்” என நீங்கள் சொல்கிறீர்கள்?

இந்த 3 கேள்விகளுக்கு முதலாவது தெளிவான பதிலைத்தாருங்கள், அதன்பின் மற்றதைப் பார்க்கலாம். சில வசனங்களுக்கு இணை வசனம் இல்லை எனச் சொல்லி அவற்றைத் தவிர்க்கிறீர்கள். ஆனால் அப்படிச் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து.

எனது 2-வது கேள்விக்கு ஆதார வசனமான மத்தேயு 6:14, கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன்னதாகச் சொல்லப்பட்டது என்றும், கிறிஸ்துவின் பலிக்குப் பின்னர் அது காலாவதியாகிவிட்டது என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் இயேசு சொன்ன அந்த வசனம் யாருக்கேனும் Apply ஆக வாய்ப்பு இருக்குமா? யாருக்குமே Apply ஆக வாய்ப்பு இல்லையெனில் அவ்வசனத்தை இயேசு சொல்லவேண்டிய அவசியம் என்ன? அல்லது ஒருசிலருக்கு அவ்வசனம் Apply ஆக வாய்ப்பு உண்டெனில், அவர்களின் நிலை என்னாகும்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard