இந்த பகுதியை வாசித்தோமென்றால் யோபு மரணத்திற்கு பிறகு சம்பவிக்கும் காரியத்தை சொல்லுகிறார் வசனம் 10 முதல்!!
உயிர்த்தெழுதல் நடந்த பின் நான் பட்ட வேதனைகளையும் கஷ்டங்களையும் பார்ப்பீர், என் பாவங்களை பார்க்க மாட்டீர் என்று எபிரேயு மொழிப்பெயர்ப்பும் பொது மொழிப்பெயர்ப்பும் சொல்லியிருக்கிறது, ஆனால்
நம் ஊழியர்கள், வழக்கம் போல், நேற்று இரவு ஆவியானவர் வந்து நாளைக்கு இந்த வசனத்தை நீ பேச வேண்டும் என்றும், இப்பொழுது என் நடைகளை எண்ணி பார்க்கிறார் தேவன், என் பாவத்தின்மேல் அல்லவா கவனமாயிருக்கிறார் என்று பிரசங்கம் செய்ய சொல்லி என்னுடன் சேரில் உட்கார்ந்து பேசினார் என்று சாதிப்பார்கள் இந்த குருட்டு ஊழியர்கள், ஏமாற்றுக்காரர்கள்!! கேட்டால் எல்லாரும் உபயோகிக்கும் தமிழ் "பரிசுத்த வேதாகமத்தில்" எந்த தவறும் இல்லை, அதுவும் பரிசுத்த ஆவி தந்தது என்று வாதாடுவார்கள்!!
எத்துனை பெரிய தவறை தேவன் தான் தந்தார் என்று பொய் சொல்லி, பரிசுத்த ஆவி தான் பிரசங்கிக்க சொன்னார் என்று புருடா விட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்!! யார் இவர்கள்!! பிசாசின் ஊழியர்கள் தானே!!
-- Edited by soulsolution on Friday 8th of July 2011 08:22:49 AM
யோவான் 6:29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
இந்த வசனத்தை பார்த்தோமென்றால் சுய கிரியைகளின் மேல் விசுவாசம் வைப்போருக்கு சாதகமாக இருக்கும் வசனம் போல் தோன்றுகிறது!! கிரியைகளினால் இரட்சிப்பு என்று சொல்லுவோர் இந்த வசனங்களை காண்பிப்பார்கள்!! இந்த வசனத்தின்படி தேவன் அனுப்பிய கிறிஸ்துவை நாம் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாக இருக்கிறது என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் ஆனால் இதன் மற்ற மொழிப்பெயர்ப்பை பார்த்தோமென்றால்,
Douay-Rheims 1899 American Edition (DRA)
John 6:29 Jesus answered, and said to them: This is the work of God, that you believe in him whom he hath sent.
Darby Translation (DARBY)
John 6:29 Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.
இந்த வசனம் சொல்லுகிறபடி, தேவன் அனுப்பிய கிறிஸ்துவின் மேல் நாம் விசுவாசம் கொள்வது தேவனின் செயல்!!
தலைகீழாக இருக்கிறது மொழிப்பெயர்ப்பு!! இதை வாசித்து விட்டு தான் நம் ஊழியர்கள் ஆவி(யானவரிடம்)யிடம் பேசினேன் என்று எல்லாம் கதை விடுவார்கள்!! வஞ்சகம்!!