இரண்டாம் மரணம் என்கிற ஒரு மாபெரும் விஷயத்தில் தெளிவு உண்டாயிருக்கிறது, இந்த தளத்தின் மூலமாக அதை பகிர்ந்துக்கொள்கிறேன்!! இரண்டாம் மரணத்தை குறித்து பலவிதமான வாதங்கள் இருக்கிறது!! ஒரு மரணத்திற்கு பிறகு உயிர்த்தெழுதல் அதன் பின் மீண்டும் என்றென்றைக்கும் வாதிக்கப்படும்படியான இரண்டாம் மரணம் என்று கிறிஸ்தவத்திற்குள் அச்சுறுத்தலின் எல்லைகள் மீறி மனித போதனைகள் நடந்தேறிக்கொண்டு இருக்கிறது!! என் புரிந்துக்கொள்ளுதலின்படியே Systemsஇன் அழிவை தான் இரண்டாம் மரணம் என்று நம்பி வந்தேன், ஆனால் அதில் தவறு ஒன்றும் இல்லை, ஏனென்றால் இந்த Systems (பிசாசினால் கொண்டு வரப்பட்ட) எல்லாம் ஒழிந்துபோய்விடும் என்பது உண்மையே!! ஆனால் அதையும் தாண்டி இரண்டாம் மரணம் என்று வெளிப்படுத்தின விசேஷம் சொல்லியிருப்பதை எழுத்தின்படி எடுத்துக்கொண்ட கிறிஸ்தவம், தேவனை ஒரு அரக்கனாக தான் சித்தரிக்கிறது!! முதல் மரணத்தில் "தற்காலீக நரகம்" அதன் பின் உயிர்த்தெழுதல், வெள்ளாடு, செம்மறியாடு என்று பிரித்து ஒரு கூட்டத்தை "இரண்டாம் மரணம்" என்கிற கொடிய இடத்தில் என்றென்றைக்கும் (அழிவே இல்லாமல்) போட்டு விடுவார் தேவன் என்கிற போதனை, தேவன் அன்புள்ளவர் என்று எப்படி சொல்ல முடியும்!! ஆனால் வேதம் சொல்லுகிறது, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று,
I யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
I யோவான் 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்;
சரி, இனி விஷயத்திற்கு வருவோம், இரண்டாம் மரணம்!! அதன் முன்பு
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
"And as it is appointed unto men [Gk: 'anthropose'--human, mankind] once to die, but after this the judgment"
இந்த வேத பகுதி இது வரை வாழ்ந்த வரயிருக்கிற எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். முழு மனிதக்குலமும் ஒரு முறை மரித்து, அதிலிருந்து உயிர்த்தெழுந்து நியாயத்தீர்ப்பு அடைவதுதான் தேவனின் நியமனம்!! மனநோயயாளிகள், குழந்தைகள், உட்பட இதில் யாருக்கும் சலுகை கிடையாது!! [பலர் போதிப்பார்கள், சிறு குழந்தைகள் மரித்தவுடன் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்று, அது எல்லாம் சும்மா, நம்பாதீர்கள், அதற்கு வேத ஆதாரம் எல்லாம் ஒன்றும் கிடையாது, அது உங்களை திருப்த்திப்படுத்த சொல்லும் பொய்களே]!!
தேரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் சபையின் இந்த யுகத்திலேயே நியாயதீப்பு அடைகிறார்கள் (I பேதுரு 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; 1 கொரிந்தியர் 11:31), மற்ற அனைவரும் நியாயத்தீர்பின் அந்த நாளில் உயிர்த்தெழுதல் முடிந்த பிறகு நியாயத்தீர்ப்படைவார்கள்!!
அப்போஸ்தலர் 17:31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
தொடரும்......................
(அன்பர் ரே ஸ்மித் எழுதியதின் தமிழாக்கம் இந்த கட்டுரை!! கட்டுரை முடியும் வரை இந்த திரியில் வேறு பதிவுகள் வேண்டாம்!! ஆகிலும் கேள்விகள் இருந்தால் வேறு திரி துவங்கலாம்!!)
-- Edited by soulsolution on Wednesday 6th of July 2011 08:37:09 AM