kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதில் தெரியாத கேள்விகள் Oh Really?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
பதில் தெரியாத கேள்விகள் Oh Really?


 

//பதில் தெரியாத கேள்விகள்

தேவன் இஸ்ரவேல் ஜனத்தை கூட்டிக்கொண்டு எகிப்தில் இருந்து கானான் நோக்கி மோசேயை வரச்சொன்னார், அதுபோக ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமந்து கொண்டு வருவது போல கொண்டு வந்தேன் என்றார். 6 லட்சத்திற்கும் அதிகமான ஜனங்களை அடிமைத்தன நுகத்தில் இருந்து கானான் நோக்கி நடத்தி வர தேவன் சித்தமாய் தான் இருந்தார். ஏன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின தேவன் என்ன சொன்னார் உன் சந்ததியார் அன்னிய தேசத்திலே அடிமைத்தனத்தில் கிடப்பார்கள் மறுபடியும் திரும்ப வருவார்கள் என்று சொன்னார்.

எல்லாரும் வந்தார்களா? கடைசியில் தேறினது இரண்டே பேர் தான் அப்ப தேவன் சொன்னது என்ன ஆச்சு, அனைவருக்கும் ரட்சிப்பு என்பவர்கள் இதை யோசிக்கவேண்டும். தேவன் எதிர்பார்க்கும் தன்மைகள் நமக்கு இருக்கவேண்டும், கனிகொடாத மரத்தை அக்கினியில் சுட்டெரிப்பேன் என்கிறார் ஆண்டவர். தனது சுய சித்தத்தால் பாவத்தை ருசித்த ஆதி மனிதனான ஆதாமும் ஆதி மனுஷியான ஏவாளும் உலகத்துக்குள் பாவத்தை நுழையச்செய்தனர், தேவன் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை மாறாக அந்த கனியை குறித்து எச்சரிப்பு தான் செய்தார், அதே போல தனது குமாரனான இயேசுவின் மூலமாக மீட்பின் திட்டத்தை வைத்துள்ள ஆண்டவர் அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமையை மனிதனிடமே கொடுத்துள்ளார். இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிப்பவர்கள் சிலர் என்கிறது வேதம். மாறாக அனைவருக்காகவும் ஏன் பாவத்திலேயே விழுந்து கிடந்து செத்தவனுக்கும் ரட்சிப்பு என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது, யார் யார் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்ற லிஸ்டையே பைபிளில் ஆண்டவர் கொடுத்துள்ளார் ஆனால் மேசியாவின் எதிரிகள் எந்த மொள்ளமாறியும் கேப்மாறியும் அப்படியே மொள்ளமாறித்தனத்திலேயே செத்துப்போனாலும் அவர்களுக்கும் மீட்பு உண்டு என்கின்றனர். செத்ததுக்கு அப்புறம் என்ன மீட்பு என்று தான் தெரியவில்லை.//

ரோமர் 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
நாம் பாவிகளாக இருக்கையில்(உங்கள் பாஷைப்படி மொள்ளமாறிகளாய், கேப்மாறிகளாயிருக்கையில்) என்று வாசிங்க டாக்டர் சார்.

I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

பிரதான பாவின்னு பவுலே சொல்றார்சார், நீங்க சொல்லுங்க நீங்க தேவன் எதிர்பார்க்குமளவு பரிசுத்தவானா?

அடேயப்பா 6லட்சம்பேருக்கு( கிட்டத்தட்ட 20 லட்சம்பேர்) ஜஸ்ட் 2 பேர்தான் கானானுக்குப்போனார்கள். ரொம்ப சரி. அப்ப இதே விகிதாச்சாரத்தை இப்பவும் வைத்துக்கொள்ளலாமா?
20 லட்சத்துக்கு 2பேர். ஆக ஒரு கோடிக்கு 10பேர். 600கோடிக்கு ஒன்லி 6000பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள். மீதியுள்ளவர்கள் எல்லாமே நரகத்துக்கு. தமிழ்நாட்டில் இரட்சிக்கப்பட்டுள்ள 100பேரில் நீங்களும் ஒருவர் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் டாக்டர் ஜோ.

இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம தேவன் இவுங்க ரெண்டு பேரமட்டும் போச் சொல்லிருக்கலாம். ஓ தேவன் எதிர்பார்த்தது 6லட்சமும் கானானுக்குப் போவார்கள் என்றுதானே. பாவம் தேவன் ரொம்ம்ம்ம்ப ஏமாந்துபோயிருப்பார் அதேசமயம் சாத்தானும் அவன் தூதர்களும் ஒரு கிராண்ட் பார்டி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்; மாபெரும் வெற்றியல்லவா?

அன்பு நண்பரே வசனங்களை ஆராயாவிட்டால் இதுபோன்ற விபரீதங்களில்தான் போய் முடியும். 

எபிரெயர் 11:13 இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

எபிரெயர் 11:39 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.

அவர்கள் இன்னும் அடையவேயில்லை. ஏதோ 2பேர் கானான் போகும் விஷயத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரவேண்டாம் நண்பரே!

//செத்ததுக்கு அப்புறம் என்ன மீட்பு என்று தான் தெரியவில்லை.//
ஒரு வார்த்தை சொன்னாலும் உண்மையில் இப்பதான் PhD ரேஞ்ல கேட்ருகீங்க‌.

லூக்கா 9:56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.
லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

எபிரெயர் 5:7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

நண்பரே!
இரட்சிப்பு என்பதற்கு விளக்கம் சகோ.பெரேயன் பதிந்துள்ளார். அவசியம் படியுங்கள். ஆகவேதான் மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்வது முதலில் மனிதன் யார்? மரணம் என்றால் என்ன? ஆத்துமா என்ற பதம் உண்மையில் எதைக்குறிக்கிறது? போன்ற வேத அடிப்படை சத்தியங்களில் தெளிவு இல்லாவிட்டால் முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பதுபோல எல்லாமே கோணலாகிவிடும், இன்றைய கிறிஸ்தவத்தின் அவலமே இதுதான்.

பாவத்தின் சம்பளம் மரணம்; மரணம் மட்டுமே. எல்லாருமே பாவிகள் ஆகவேதான் எல்லாருமே மரித்தாகவேண்டும். ஆனால் தேவனுடைய மீட்பின் திட்டம் மனிதன் நித்தியமாக வாழவேண்டும் என்பதே. 

கிறிஸ்து சிந்திய ரத்தம், கிரய பலி, எல்லாருக்காகவும் ஒரே ஒரு முறை செலுத்தப்பட்ட பலியினால் மனிதனுடைய பாவம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டாகிவிட்டது. 

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

அடைத்துப்போட்ட அவரே விடுத்தும் ஆக வேண்டும். எனவேதான் மனிதனை மரணத்திலிருந்து 'மீட்டு' 'உயிர்த்தெழத்' தகுதியாக்குகிறார். ஒருவனுடைய பாவம் மன்னிக்கப்படாத நிலையில், அவனுடைய பாவங்களுக்காக இன்னொருவர் ஈடுப்பலி செலுத்தாத நிலையில் அவன் உயிர்த்தெழ வாய்ப்பே கிடையாது!
ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணமாயிற்றே? ஆனால் கிறிஸ்துவின் பலியினாலுண்டான பாவமன்னிப்பின் நிமித்தம், அவன் பாவங்களற்றவன் போல கருதப்பட்டு உயிர்த்தெழுதலுக்கு தகுதியாகிறான். கிறிஸ்து எல்லாருடைய பாவங்களுக்காவும் கிரயம் செலுத்தியதால்தான் எல்லாரும், ஒருவர் விடாமல் உயிர்த்தெழுவார்கள்.

(ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.)

I கொரிந்தியர் 5:7 ....ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

எபிரெயர் 9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.

எபிரெயர் 9:28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, 

எபிரெயர் 10:10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.(நம்முடைய கிரியைகளினால் இல்லவே இல்லை)

எபிரெயர் 10:12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

எபிரெயர் 10:14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

எபிரெயர் 10:18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.

I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

I யோவான் 4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

 



-- Edited by soulsolution on Monday 13th of June 2011 06:26:57 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். (மொள்ளமாறி, கேப்மாறிகளுக்காக என்றும் சொல்லலாமில்லையா?)

எனவே மனிதன் தலைகீழாக முயன்றாலும் தன்னுடைய பாவத்தைத் தானே கழுவிக்கொள்ள முடியவே முடியாது; நம்முடைய கிரியைகளினால் தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை யோசிக்கக்கூட முடியாது. ரோமர் புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள்:

ரோமர்514. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

எனவே மீட்பு, இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்துதான். அந்த மரண தண்டனையைத்தான் எல்லாருக்காகவும் தான் ஏற்றுக்கொண்டதினிமித்தம் எல்லாரையுமே நீதிபரராகிய தேவன் 'கேஸை'யே தள்ளுபடி செய்து (மரணத்தீர்ப்பை தள்ளுபடி) செய்து மீண்டும் உயிர்பெற வைக்கிறார்... 

இது உலகத்துக்கு....

ஆனால்... சபையாகிய சிறுமந்தை, கிறிஸ்துவின் சரீரம், உன்னத அழைப்புக்குப்,பாத்திரவான்களாக, குமாரனுடைய சாயலுக்கொப்பாக மாறி அவரோடே கூட  பூமியை ஆளுகைசெய்யப்போகும் சிலர்; நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தாரல்ல, பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளை நாடுங்கள் என்று கிறிஸ்துவும், பவுலும் மேன்மைபாராடும் ஒரு விசேஷமான இரட்சிப்பைக்குறித்தும் வேதம் கூறுகிறது..

I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

என்று ஒரு விசேஷத்த இரட்சிப்பைக்குறித்தே புதிய ஏற்பாடு முழுவதும் காணலாம். 'அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்' என்று நீங்கள் கூறியது இந்த 'சிலரை'த்தான்.

பார்லிமெண்ட்க்கு (ஆளுவதற்கு) தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், கிறிஸ்துவோடு கிறிஸ்துவாக அவரது மணவாட்டியாக வேண்டுமானால் அதற்கு எவ்வளவு தகுதி வேண்டும்? கிறிஸ்துவைப்போல ஒரு ஆவிரூபியாக மறுரூபமாகி பரலோக வாழ்வுக்குத் தேவனால் முன்குரிக்கப்பட்டு (உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே) தெரிந்துகொள்ளப்பட்டு, அவரைப்போலவே இவ்வுலகத்தில் பாடனுபவித்து, சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை அனுதினமும் பின்பற்றி வாழந்து, நாளை இப்பூமியை ஆளப்போகும் 'மணவாட்டி'யாகிய சபையை 

எபேசியர் 5:29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.

மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

மத்தேயு 20:16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

I கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

எபேசியர் 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

எபிரெயர் 3:1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, 
இந்தப்பரம அழைப்பு உலகத்துக்கல்ல...

ஆனால் இவைகளை அறியாத கிறிஸ்தவம் தேவனுடைய சித்தம் துளிகூட அறியாமல் 'உலகத்தை' சபைக்குள்வரும்படி அவரது சித்தத்துக்கு முற்றிலும் முரணாக நடந்து கொண்டிருக்கிறது.
இது எப்படியென்றால் ஓட்டுப்போடும் அனைவரையும் பார்லிமெண்டுக்கு அனுப்புவது போன்றது.
எனவே, முதலாவது

சபைக்கு 'இரட்சிப்பு' இந்த சுவிசேஷ யுகத்தில் அதாவது கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தேறவேண்டும். இவர்கள் ஆளுகைக்குத் தயாராக வேண்டும். 
இரண்டாவது உலகத்துக்குக் கற்றுக்கொடுக்கும் காலமாகிய 'நியாயத்தீர்ப்பு'. 

ஏசாயா26: 9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

இதில் பூச்சக்கரத்துக்குடிகள் உயிர்த்தெழுந்தபின் (எல்லாரும் இரட்சிக்கப்படவும்) நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (சத்தியத்தை அறியும் அறிவை அடையவும்).
கற்றுக்கொண்டபின் 

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

I கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

என்ற வார்தையின்படி மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.
தேவனை ஒரு வெற்றிச்சிறந்தவராகக் கொண்டாடுகிறது வேதம். ஒருவனும் கெட்டுப்போவது  (அழிந்து போவது) அவருடைய சித்தமல்ல‌.

இந்த சுவிசேஷத்தைத்தான் அப்போஸ்தலர் பிரசிங்கித்தார்கள்; இராஜ்ஜித்தின் சுவிசேஷம் என்றால், பூமிக்கு வரப்போகும் பரலோக இராஜ்ஜியமே.
இன்னும் பதியலாம்.


-- Edited by soulsolution on Monday 13th of June 2011 07:47:16 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அதே போல தனது குமாரனான இயேசுவின் மூலமாக மீட்பின் திட்டத்தை வைத்துள்ள ஆண்டவர் அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமையை மனிதனிடமே கொடுத்துள்ளார்.//

உங்கள் இந்த வாதத்துக்கு எவ்வித வசன ஆதாரமுமில்லை.

இந்த 2000 வருடங்களாக நீங்கள் சொல்லும் மீட்பின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்/ நிராகரிக்கும் உரிமையை மனிதனுக்கே கொடுத்துள்ளார் என்பது ஏற்கவியலாத வாதம். ஏன் நமக்கே மீட்பு என்றால் இதுவரை தெரியவில்லையே? 'கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்' எனும் பட்சத்தில் தேவனுக்கு ஏற்கனவே பெரும்பாலோர் நிராகரிப்பார்கள் என்று தெரியுமே.20 லட்சம்பேருக்கு 2பேர்தான் தேறுவார்கள் என்று தெரிந்து அந்த 2 பேருக்காக சந்தோஷப்படுவாரா? 19,99998 பேர் நரகத்துக்குப் போவது உண்மையில் ஒரு மீட்பின் திட்டமாக இருக்க முடியுமா?


இயேசுகிறிஸ்துவை ஜஸ்ட் விசுவாசித்தாலே பரலோகம் போக முடியுமா அல்லது முடிவுப்பரியந்தம் நிலை நிற்க வேண்டுமா?

ஏற்றுக்கொண்டும் பரிசுத்த ஜீவியம் செய்தும் முடிவுப்பரியந்தம் நிலை நிற்கமுடியாமல் போனால் அந்த மனிதரின் கதி?


நண்பரே 

திறந்த மனதுடன், கற்றுக்கொள்ளும் நோக்குடன் தேவ அன்பின் பரிபூரணத்தை உணர்ந்து கொள்ளும்பட்சம் மட்டுமே "சத்தியம் நம்மை விடுதலையாக்கும்".

உங்களைப்போன்ற பரிசுத்தவான்களை நேசிப்பது, அல்லது நீங்கள் சொன்ன மொள்ளமாறி, கேப்மாறிகளையும் நேசிப்பது எது தேவ அன்பை வெளிப்படுத்தும்?


மாற்கு 2:17 இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.


உங்களைப்போன்ற சுகமுள்ளவர்களுக்கு வைத்தியன் வேண்டியதில்லை.

பிணியாளிகளான மொள்ளமாறி, கேப்மாறிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தார். அழைப்பார் அப்போது


யோவான் 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;


அந்த அழைப்பின் சத்தத்தைக்கேட்டு அனைவரும் எழுந்துவந்து எல்லாரும் மனந்திரும்புவார்கள், சபையின் ஒத்துழைப்புடன்....

 
 
 
 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஜோசப்புக்கு,

இரண்டு விதமான ரட்சிப்பு என்று வசனம் கூறுவதை விளக்கியிருக்கிறேன்.

முதலில் இரட்சிப்பு என்றாலே அது மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதுதான், வேறொன்றுமில்லை என்றும் கிறிஸ்துவின் பலியால் அது முழுமனுக்குலத்துக்கும் பலனளிக்கும் எனவேதான் எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு.

எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றாவது நம்புகிறீர்களா? 

அடடா எல்லாருக்கும்தான் இரட்சிப்பாச்சே பின் நாம் மட்டும் ஏன் இப்படி பாவமில்லாத வாழ்க்கைக்கு பிரயாசப்படவேண்டும் என்று தோன்றினால் அதுதான் நாம் உண்மையில் விரும்பும் வாழ்க்கை. ஏதோ வெளிவேஷத்துக்காக பரிசுத்தம் பற்றி பேசுகிறோம் என்று அர்த்தம். கிருபை அதிகம் என்பதால் இன்னும் கொஞ்சம் பாவம் செய்யலாமே என்று அர்த்தமல்ல. நாங்கள் ஒரு போதும் யாரையும் பாவன் செய்யச்சொன்னதில்லை. அப்படி உங்களுக்கு ஒருவேளை தோன்றினால் நாங்கள் பொறுப்பல்ல‌...

 

தேவன் விரும்பும் பரிசுத்தமாக வாழ ஒருவனும் தகுதி கிடையாது. பரிசுத்தப்படுத்துகிறவர் தேவன். பவுலைப்போல ஒரு பரிசுத்தவானைக் காண்பிக்கமுடியுமா என்று முன்னர் நான் எழுப்பிய கேள்விக்கு, ஏன் நான் இருக்கிறேனே என்று ஒருவர் கூட சொன்னதில்லை. கிறிஸ்துவின் வாழ்வுக்கும், பவுல் போன்றோரின் வாழ்வுக்கும் 100 மார்க் போட்டால்

நமக்கு எத்தனை மார்க் கிடைக்கும் என்பது நமக்கே தெரியும். 100 வாங்கினால்தான் பரலோகம் என்று சொன்னால் எத்தனை பேர் தகுதியாவார்கள்?

 

கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டோம் என்று எத்தனை வசனங்கள் காண்பித்திருக்கிறோம். கிருபையை என்னவென்று புரிந்துகொண்டீர்களோ தெரியவில்ல. 

 

ஏதோ மற்றவர்களை மொள்ளமாறி, கேப்மாறி என்கிறீர்களே, இயேசுகிறிஸ்து சொன்னதுபோல உங்களில் பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும் என்று சொன்னால் முதல் ஆளாக எறிவீர்கள் போலுள்ளதே.

வேதம் திரும்பத்திரும்பச் சொல்வது எல்லாரும் பாவிகள் என்றுதான். அப்படி பாவமில்லாமல் இருப்பவர்களுக்கு 'பாவத்தின் சம்பளம் மரணம்' நடக்கவேகூடாது. பாவமில்லாதவன் எதற்கு மரிக்கவேண்டும்?

 

பாவம் பாவமே சின்னபாவமாக இருந்தாலும் அதற்கும் சம்பளம் மரணமே!

//தேவ‌ன் ந‌ம்மை ப‌ரிசுத்த‌த்திற்கே அழைத்திருக்கிறார் என‌ வேத‌ம் சொல்கிற‌து? ஒருவேளை ஒருவ‌ன் எப்ப‌டி இருந்தாலும் அவ‌னுக்கு மீட்பு என்றால் அப்ப‌ கிறிஸ்துவின் ர‌த்த‌த்திற்கு என்ன‌ சார் ம‌ரியாதை..?//

ஒருவன் எப்படியிருந்தாலும் மீட்பு என்பதுதான் கிறிஸ்துவின் ரத்தத்துக்கு மரியாதை.. பரிசுத்தவானுக்கு எதுக்குய்யா கிறிஸ்துவின் ரத்தம்....?

தேவன் நம்மை பரிசுத்தத்துக்கே அழைத்திருக்கிறார், இதில் நம்மை என்பது உலகத்தை என்று ஏன் நினைக்கிறீர்கள். உலகத்திலிருந்து 'பிரித்தெடுக்கப்பட்டது'தான் சபை என்று நீங்கள் வாசித்ததேயில்லையா?

அதுவும் தேவன் பிரித்தெடுக்கிறார் (முன்குறிக்கப்பட்டவர்கள்) அப்ப முன்குறிக்கப்படாதவர்கள் கதி? நீங்கள் நரகம் என்பீர்கள் நாங்கள் பூமியில் உயிர்த்தெழுந்தபின் நீதியைக் கற்றுக்கொண்டு வாழும் நித்திய வாழ்வு என்கிறோம்.

 

ரோமர் 5:18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

 

//திரும்ப‌ திரும்ப‌ ஒரே ப‌லி ஒரே ப‌லி என‌ சொல்லியிருக்கிறீர்க‌ள்; அந்த‌ ஒரே ப‌லி த‌ரும் தைரிய‌த்தில் ஒருவ‌ன் தேவ‌ன் விரும்பும் ப‌ரிசுத்த‌ம் இல்லாம‌ல் க‌டைசி வ‌ரை பாவியாக‌வே வாழ்ந்தாலும் அவ‌னுக்கு மீட்பு கிட்டுமா? அப்ப‌டியானால் வேற‌ வேலையை பாக்க‌ போக‌லாமே, அதான் நோகாம‌ நொங்கெடுக்க‌லாம்'ங்கிறீங்க‌ளே.//

திரும்பத்திரும்ப ஒரேபலி என்று நான் சொல்லவில்லை நண்பரே, வசனம் சொல்கிறது. நமக்குத்தான் புரிவேனா என்கிறது. பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்று வேதம் சொல்கிறது. அதற்கு நாம் கொள்ளும் அர்த்தம் ஒரு பாவி கிறிஸ்துவை அவனாக ஏற்றுக்கொள்ளூம்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டாலும் அதன்பின் அவன் செய்யும் பாவங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படாது, அவன் கடைசிவரை பரிசுத்தவானாக வாழவேண்டும், இப்படி இருந்தால் பரலோகம். இல்லாவிட்டால் நரகம். இதையா சொல்லவருகிறீர்கள். இப்படியிருந்தால் எத்தனை பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

 

நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொண்டால், 

கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்களின் நிலைபற்றி, (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உட்பட),  தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்; வசன ஆதாரத்துடன், அவர்களுக்கும் கிறிஸ்துவைப்பற்றி தெரியாதே? அவர் நாமமன்றி இரட்சிப்பில்லை என்று வேதம் கூறுகிறது.தேவன் பார்த்துக்கொள்வார்; அவர்களுக்கும் அவர் நீதியாக நியாயம் செய்வார் என்று பொத்தாம் பொதுவாக சொன்னால்...


பின்னர் தேவன் எல்லாரையுமே அப்படியே பார்த்துக்கொள்ளட்டுமே நீங்கள் ஏன் மெனக்கெடுகிறீர்கள் என்று எதிர்க்கேள்வி கேட்கவேண்டிவரும்.

 

யோசித்து பொறுமையாக பதில் எழுதுங்கள்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//உங்க கொள்கைப்படி எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் நீங்க இவ்வளவு மெனக்கெட வேண்டியதேயில்லை; அதான் எல்லாருக்கும் நித்திய வாழ்வு என்கிறீர்களே. இத அப்படியே ஏத்துக்கிறதா இருந்தா அது தான் தோன்றித்தனமான வாழ்க்கைக்கு தான் அடிகோலும். அப்படியே தேவன், விபசாரக்காரர், அநியாயம் செய்வோர், வேசிக்கள்ளர் இவர்கள் எல்லாம் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்கிறாரே, அப்ப அவர்களுக்கெல்லாம் ஆப்பு தானா இல்லை அவர்களுக்கு தரை டிக்கெட்டா? //

எங்கள் கொள்கை இல்லை இது!! வேதம் முழுவதும் சொல்லுவதே இரட்சிப்பை தான்!! அதற்கு இத்துனை வசனங்கள் கொடுத்து, இதற்கு மற்றான வசனத்தை தாருங்கள் என்றும் கேட்டு பார்த்துவிட்டோம், நீங்கள் தருவதாக இல்லை!! ஆக எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது வேதத்தின் கொள்கையே!! நாங்கள் போதிப்பது இந்த மகிழ்ச்சியான செய்தியையே!! இதற்காக எந்த விதத்திலும் மெனக்கெடவில்லை!! ஏனென்றால், நல்ல செய்தியை விரும்பவர்களுக்கு நல்ல செய்தியை கொடுப்பதில் எதற்கு மெனக்கெடவேண்டும்!! எல்லாருக்கும் நித்திய வாழ்வு என்று வேதம் தான் சொல்லுகிறது, நாங்கள் அதை ஏற்று, நம்பி, விசுவாசித்து இருக்கிறோம்!!

நான பல முறை கேட்டு விட்டேன், அதாவது, நரகம் இருக்கிறது என்று இத்துனை மெனகெடுகிறீர்களே, ஆனாலும் கடைசி காலத்தில் பாவங்கள் பெறுகும் என்று வேதம் கூறுகிறதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்!! நாங்கள் எல்லாருக்கும் இரட்சிப்பு இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லுவதாலோ, அல்லது நீங்கள் நரகத்தை குறித்தும், அனைவருக்கும் இரட்சிப்பு இல்லை என்று போதித்தாலும், வசனம் தான் ஜெயிக்கும்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற வசனமே அது, ஏனென்றால் தேவனின் வார்த்தையே சத்தியம் என்கிறது வேதம்!!

நீங்கள் சொல்லும் கேட்டகரி பரலோகத்தில் பிரவேசிக்காது என்று சொல்லுகிறீர்களே, அதோடு இன்னோரு கேட்டகரியும் இருக்கிறதே,

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

வேதத்தின்படி இவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதில்லை, ஆனால் தேவனுடைய ராஜியமான பூமியில் வரும் ராஜியத்தில் வருவார்கள் என்று தான் நாங்கள் சொல்லுகிறோம்!!

இரட்சிப்பை ஏன் பரலோகத்துடன் சேர்த்து வாசிக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை!! இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து தான்!! இப்பொழுது (சபை துவக்க முதல்) தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சாயலில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், ஒரு சிறு மந்தை மாத்திரமே கிறிஸ்துவின் சாயலில் மாற்றப்பட்டு பரலோகத்திற்குள் பிரவேசிப்பார்கள்!!

நாங்கள் ஒரு போதும் இரட்சிப்பு என்றால் எல்லாரும் பரலோகம் போவார்கள் என்று சொன்னதில்லை, அதையே ஏன் கேள்வியாக எழுப்புகிறீர்கள்!! உங்களுக்கு இரட்சிப்பு என்றாலே பரலோகம் என்பதால் தான் இத்துனை குழப்பம்!!

//அப்ப அவர்களுக்கெல்லாம் ஆப்பு தானா இல்லை அவர்களுக்கு தரை டிக்கெட்டா? //

இது தான் Ph.D படித்தவர் எழுதும் அழகா??!!

//விங் கமாண்டர் சார், ஸ்குவாட்ரன் லீடர், ஏர் கமோடர் சார், ஏர் மார்ஷல் சார்.., இதில் எப்படி உங்களை அழைக்கவேண்டும் என நீங்களே சொல்லிவிடுங்கள்; ஏனென்றால் நீங்கள் மரியாதையாக (!) டாக்டர் சார் என அழைக்கும் போது நானும் உங்களுக்கு  தொழில் சார்ந்த மரியாதை கொடுக்கவேண்டும் அல்லவா..? //

நாங்கள் கேட்கவில்லை!! எங்களை எப்படி எல்லாம் மனிதர்களை கூப்பிடக்கூடாதோ அப்படி எல்லாம் உங்கள் தலைவர் ஆசை தீர எழுதி தற்போது கொலை மிரட்டலை சூட்சகமாக வெளியிட்டிருக்கிறார்!! டாக்டர் என்பது உங்கள் தொழிலை சார்ந்து அல்ல நீங்கள் தான் மெத்த படிப்பான Ph.D படித்திருக்கிறீர்களே, அவர்களை டாக்டர் என்று தானே கூப்பிட வேண்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மத்தேயு 21:31 இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

மத்தேயு 10:15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

உங்கள் கூற்றுப்படி வேசிகள் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே (மெய்யாலுமேதாம்பா?) உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கிறிஸ்து தமாசு பண்ணாறா?

 

சோதோம் கொமாராவுக்கே இலகுவயிருக்குமாம், நரகத்தில் என்ன இலகு? என்ன கஷ்டம்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவர்கள் ஒரிஸாவில் ஒருவர் சுவிசேஷம் சொல்லிப்பாடு பட்டாராம் என்கிற வீடியோவை காண்பித்து தான் கிறிஸ்தவத்தை வளர்க்கிறவர்கள்!! "அண்ணன்" போன்ற பல அண்ணன்களுக்கு நாங்கள் பல ஆயிரம் கொடுத்து இருக்கிறோம்!! இன்னும் பலர் எங்களை போல் இவர்களின் போலித்தனத்தில் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக தான் இத்துனை பாடுகள் படுகிறோம்!! என்னமோ இவன் சாதுவிற்கும் வின்சென்ட்டுக்கும் பல கோடி கொடுத்ததினால் தான் பேசுகிறான் போல்!!

இவர்களுக்கு ஏத்துனை வசனம் காண்பித்தாலும் இவர்கள் இருதயம் "நரகத்தை" தான் நாடும் சகோதரரே, ஏனென்றால் அதை காட்டி மிரட்டி, அதிலிருந்து உங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று சொன்னால் தானே இவர்களின் பிழைப்பு ஓடும்!! எல்லா மக்களுக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொன்னால் யார் இவர்களுக்கு பணத்தை அனுப்புவார்கள்!! அதற்காகவே இப்படி பட்ட வசனங்கள் இவர்கள் கண்களுக்கு படவும் செய்யாது, அது பட்டாலும் மறைந்துவிடும்!!

மத்தேயு 21:31 இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

மத்தேயு 10:15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

//சோதோம் கொமாராவுக்கே இலகுவயிருக்குமாம், நரகத்தில் என்ன இலகு? என்ன கஷ்டம்?//

அங்கே என்னமோ புழு சாகாதாம், அக்கினி அவியாதாம் போன்ற விஷயங்கள் தான் நடக்குமாம், ஆனால் பெரும் பாவத்தை செய்திருந்த சோதோம் கொமாராவுக்கு இவர்கள் சொல்லும் "நரகம்" "இலகுவாயிருக்குமாம்"!! இதற்கு எல்லாம் இவர்கள் பதில் வைத்திருப்பார்களா!!

இப்படி ஒரு கேள்வியை கேட்டால், இதற்கு பதில் தராமல், இதோ ஊழியக்காரனை இப்படி சொல்றான், அப்படி சொல்றான் என்பதை கிளப்புவார்கள்!!

விடுங்க சகோதரரே..........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//இவர்களுக்கு கிறிஸ்துவின் பணிக்காக ரத்தம் சிந்துதல் அவ்வலவு கேவலமாக இருக்கும், ஆனால் பாருங்கள் இந்த நற்செய்தியை அறிவித்ததனால் தான் இயேசுவின் சீடர்கள் அனைவரும் (யோவான் நீங்கலாக) படுகொலை செய்யப்பட்டனர். அனைவருக்குமே ரட்சிப்பு என அவர்கள் பிரசங்க்கித்திருந்தால் அவங்களை ஏன் சார் கொலை செய்திருக்கப்போறாங்க//

ஏனென்றால் அவர்கள் பிரசங்கித்ததே அன்று ஜனங்களுக்க்கு புதிதாக இருந்த இயேசு கிறிஸ்துவையும், அவரின் இரட்சிப்பையும்!! அன்று இந்த உலகத்திற்கு கிறிஸ்துவும் அவரின் போதனைகளும் புதிதாக இருந்தது!! ஆனால் இன்று அப்படி இல்லை!! இன்று கிறிஸ்து என்கிற ஒரு தெய்வம் அல்லது சாமி இருக்கிறது என்று பட்டி தொட்டி முதல் எல்லா இடங்களிலும் தெரியும்!! இன்று இவர்கள் அடி வாங்கி இரத்தம் சிந்துவதே, "ஏன் எங்களை மனமாற்றி இன்னோரு தேவனை வழிப்பட சொல்கிறாய், அப்படி நான் செய்யா விட்டால் நான் நரகத்திற்கு போவேன் என்று நீ எப்படி சொல்லுகிறாய்" என்பதற்காகவே தானே அன்றி இவர்கள் ஏதோ இயேசு என்றாலே யார் என்று தெரியாதவர்களிடம் போய் சொல்லுவது போல் சொல்லுவதால் தான் இரத்தம் சிந்துகிறார்கள்!! இது பெயர் கிறிஸ்துவிற்காக இரத்தசாட்சி என்று நீங்கள் வேண்டுமென்றால் தராளமாக சொல்லிக்கொள்ளுங்கள்!!

கிறிஸ்துவின் சீடர்கள் ஒரு போதும் இரட்சிப்பை நீங்கள் சொல்லுகிறப்படி சொல்லியிருக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் இரட்சிப்பை குறித்து சொல்லும் விளக்கம் ஒரு வசனத்திலும் இல்லை!! அவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்ததே அவர்கள் புதிதாக கொண்டு வந்த போதனையினால் தான்!!

"நீங்கள் இன்றே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகத்திற்கு போவீர்கள்" போன்ற போதனைகளை ஒரு போதும் அப்போஸ்தலர்கள் தந்ததில்லையே!! எல்லா ஜனங்களும் இரட்சிக்கப்படவே கிறிஸ்து இயேசு வந்தார் என்று தானே அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது!!

இப்பவும் இதையே உபதேசியுங்கள், யாரும் அடிப்படமாட்டீர்கள்!! "ரஸ்ஸலின் சொல்லிக்கொடுத்த இரட்சிப்பினால் தான் நாங்கள் பிழைத்திருக்கிறோம் என்று" வீஎம்கே எழுதியிருந்தானே, அப்படி என்றால் இன்று திரித்துவத்தை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும், கோபுரங்களிலும், வாசல்களிலும், ஏன் இந்த வீஎம்கேயே எத்துனை முறை இரத்தம் சிந்தினார்களாம்!! நாங்களாகவது  தேவன் எங்களுக்கு தந்திருக்கும் கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதமாக நினைத்து சாப்பிட்டு வருகிறோம், அதுவே இந்த வீஎம்கேவிற்கு நக்கலாக இருக்கும், ஆனால் மேலே சொல்லப்பட்ட தொலைக்காட்சி தொடங்கி வாசல் வரையில் இருப்பவனில் ஒருவனாவது ஒரு வேலைக்கு போகிறானா, இல்லையே!! வேலைக்கு போகாமல் இப்படி அடி வாங்குகிறவர்களை ஏவி விட்டோ மெஸ்மரைஸ் செய்தோ இது தான் சுவிசேஷம் என்று சொல்லி நரகத்தை போதிப்பதா சுவிசேஷம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard