"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்..' பிலி 2:6
கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் என்று கூறுபவர்கள் காண்பிக்கும் வசனம் இது. "தேவனுக்கு சமமாயிருப்பதை" என்று கில்லாடித்தனமாக மொழிபெயர்த்துள்ளனர்.
Weymouth: "The attitude you should have is the one that Christ Jesus had. He always had the very nature of God. Yet he did not think that by force he should try to become equal with God"
"அவருக்கு தேவனுடைய சுபாவம்(தன்மை) இருந்தாலும், தன்னை தேவனுக்கு சமமானவராக எண்ணவில்லை..'
New American Bible: "Your attitude must be that of Christ: Though he was in the form of God, he did not deem equality with God something to be grasped at."
Goodspeed: "Have the same attitude that Christ Jesus had. Though he possessed the nature of God, he did not grasp at equality with God"
மூல பாஷையாகிய கிரேக்கத்தில் தன்னை தேவனுக்கு சமமானவராக எண்ணக்கூட(நினைவில்கூட) இல்லை என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.
Jesus Christ did not even think about attempting or contemplating to be equal to God!.
மேலும் 5ம் வசனம் சொல்கிறது
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" இதைத் தொடர்வதுதான் மேற்படி "சமமாக" இருக்கும் வசனம். பவுல் ஏன் இதைச் சொல்லவேண்டும். கிறிஸ்து தேவனுக்குச் சமம் என்று எண்ணியிருந்தால், அதே சிந்தை "உங்களிலும் இருக்கக்கடவது" என்று சொல்லும்பட்சம் எல்லாரையும் தேவனுக்குச் சமமாக எண்ணச்சொல்கிறாரா?
இந்த குருட்டுக் கிறிஸ்தவத்துக்கு இதெல்லாம் தெரியாது.
ஏசாயா 14:14 "...உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே"
தேவனுக்கு ஒப்பாவேன் என்று சாத்தான் இருதயதில் எண்ணியதை, கிறிஸ்து இயேசு எண்ணாமல் இருந்தார். ஆனால் கிறிஸ்தவம் அவரை உன்னதமானவருக்கு 'ஒப்பாக' உயர்த்தி மாபெரும் தேவதூஷணம் செய்து சாத்தானுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறது.
' மேலும் இரகசியம், மகாபாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாயான" வெளி17:5 பாபிலோன் வேசி'யின் உக்கிரமான மதுவின் மயக்கத்தில் இருக்கும் போலிக்கிறிஸ்தவம் இதை உணராது.
எல்லா தப்பறையான கோட்பாடுகளிலும் மிகவும் விபரீதமான கோட்பாடு தேவனுக்கு நிகராக வேறொருவரை உயர்த்துவதே. அந்த மாபெரும் தவறை இந்தக் கிறிஸ்தவம் ஆண்டாண்டுகாலமாக செய்துகொண்டிருக்கிறது.
இந்த மாபெரும் குற்றத்திலிருந்து தேவன் நம்மை விடுவித்ததற்காக நன்றி கூறுவோம்.
நீங்க வேறு சகோதரரே!! மூல பாஷையை குறித்து இவர்களிடம் பேசி பிரயோஜனமே கிடையாது!! ஏனென்றால் இவர்களின் தீர்க்கதரிசிகள் இவர்களுக்கு பரலோகத்திலிருந்து தமிழில் தான் வேதத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்!! அதை எப்படி மொழிப்பெயர்த்திருந்தாலும் என்ன!! அப்படி இருந்தாலும் அதில் மார்க் 16ம் அதிகாரத்தின் கடைசி சில வசனங்களை இவர்களால் பின்பற்ற முடியாது!! இவர்கள் இப்படி தான்.......
ஜோஸப் எழுதுகிறார்: //தெளிவு பெறுவோம் பகுதியில் தெளிவில்லாத பதிவு அதற்கு ஒத்து ஊதும் அத்தளத்தின் நிர்வாகி. நீர் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களை கேவலப்படுத்தினாலும் உண்மை மாறாது.
Weymouth: "The attitude you should have is the one that Christ Jesus had. He always had the very nature of God. Yet he did not think that by force he should try to become equal with God"
New American Bible: "Your attitude must be that of Christ: Though he was in the form of God, he did not deem equality with God something to be grasped at."
Goodspeed: "Have the same attitude that Christ Jesus had. Though he possessed the nature of God, he did not grasp at equality with God"
மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில் ஒன்றை கவனிக்கலாம், கிறிஸ்து தேவனுக்கு உரிய தன்மைகளை பெற்றிருந்தார் என்பது விளங்கும். Though he "possessed" the nature of God என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தெளிவு. தேவனுக்கு சமமானவராக எப்போது எண்ணவில்லை? கிறிஸ்து இப்பூமிக்கு மானிடனாக வரும்போது எண்ணவில்லை என்று தான் பொருள்படுகிறது. அடுத்து வரும் வசனத்தின் தொடர்ச்சி இதை தெளிவாக்கும். தேவன் கிறிஸ்துவை எப்படி ஜெனிப்பித்தார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். அது தேவத்துவத்தின் உன்னதம். ஒன்றை யோசித்து பாருங்கள், பிதாவின் வலது பாரிசத்தில் அவருக்கு அருகில் இருக்க வேறு யாருக்காவது முடியுமா?
மேற்கண்ட ஆங்கில மொழிபெயப்புகளில் பார்த்தால் கிறிஸ்துவுக்கு தான் பிதாவுக்கு ஒப்பான தன்மைகள் இருந்தது. இப்பூமிக்கு வருவதற்காகத்தான் தனது தெய்வீகத்தன்மையை ஒறுத்தார். இதை விடுத்து தான் உருவாக்கிய நோக்கத்தை அறியாமல் தேவனுக்கு சமமாக தன்னை எண்ணிய லூசிஃபரோடு கிறிஸ்துவை ஒப்பிடுகிறீர்கள். //
எழுதினால் முழுவதுமாக சுட்டி காண்பித்து எழுதவேண்டும்!! இப்படி அறைகுறையாக எழுதுவது சற்றும் சரியில்லை!! உங்கள் வாசகர்களுக்கு இதையும் தெரிவிக்கனும்,
//Jesus Christ did not even think about attempting or contemplating to be equal to God!.
மேலும் 5ம் வசனம் சொல்கிறது
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" இதைத் தொடர்வதுதான் மேற்படி "சமமாக" இருக்கும் வசனம். பவுல் ஏன் இதைச் சொல்லவேண்டும். கிறிஸ்து தேவனுக்குச் சமம் என்று எண்ணியிருந்தால், அதே சிந்தை "உங்களிலும் இருக்கக்கடவது" என்று சொல்லும்பட்சம் எல்லாரையும் தேவனுக்குச் சமமாக எண்ணச்சொல்கிறாரா?
இந்த குருட்டுக் கிறிஸ்தவத்துக்கு இதெல்லாம் தெரியாது. //
நீங்கள் எழுதுவதில் உங்களுக்கு குழப்பம் வராதா!! சில சமயம் பிதா தான் கிறிஸ்துவாக வந்தார் என்கிறீர்கள், சில சமயம் கிறிஸ்து தேவனுக்கு சமமாக இருந்தார் என்கிறீர்கள், பிறகு இல்லை இல்லை இருவரும் ஒருவரே தான் என்கிறீர்கள், பிறகு இதை ஒரு இரகசியம் என்பீர்கள், பிறகு கிறிஸ்து பிதாவின் வலது பக்கத்தில் இருக்கிறார் என்பீர்கள்!! முதலில் உங்கள் குழப்பத்தை போக்குங்கள் பிறகு மற்றதை பார்க்கலாம்!! ஏனென்றால் தான் தான் பிதா என்று கிறிஸ்து சொல்லாததை நீங்கள் சொல்லுவது, லூசிஃபர் சொன்னது போல் தான் என்பதை வெளிப்படுத்துகிறது!!
உங்களுக்கு தோன்றுகிற இடத்தில் இருவரும் ஒருவராக இருக்கிறார்கள், வசனத்தை காட்டினால் இருவரும் சமமாக இருக்கிறார்கள் (இருவருக்கே இத்துனை குழப்பம், இன்னும் திரித்துவத்தில் மூன்றாவது ஒருவர் இருக்கிறாரே, அவரை என்ன செய்ய போகிறீர்களோ!!) என்கிறீர்கள், அப்படியா என்றால், இன்னோரு வசனம் கிறிஸ்து தேவனின் வலதுப்பக்கத்தில் வீற்றிருப்பதாக இருக்கிறது, ஒருவராகவும் இல்லாமல், சமமாகவும் இல்லாமல், வலது பக்கமாக இருக்கிறார்!! ஏன் உங்கள் கோட்பாடுகளை காப்பாற்ற தேவனை பலியாக்குகிறீர்கள் என்று தெரியவில்லை!! இதில் என்ன ஈகோ வேண்டி கிடக்கிறது!! வசனத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஏன்ன பிரச்சனையாக இருக்கிறது!! நேரத்திற்கும் வசனத்துக்கும் தகுந்தாற்போல் கோட்பாட்டை மாற்றிக்கோண்டிருப்பது தான் விசுவாசமா??
நாங்கள் சொல்லுவதில் என்ன குழப்பம் இருக்கிறது, குழப்பம் ஒன்றும் இல்லை, உறுத்தல், என்னவென்றால் ரஸ்ஸல் இதை சொல்லியிருக்கிறாரே, என்று!! வேறு ஒன்றும் இல்லை!! தேவனின் குமாரன் என்று சொல்லும் கிறிஸ்துவை ஏன் பிதா என்று சொல்லுகிறீர்கள், அவர் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது நான் தான் பிதா என்று சொல்லியிருக்கலாமே!! ஆனால் அவர் சொன்னது, நான் என் பிதாவிடத்திற்கு போகிறேன் என்று அல்லவா சொல்லுகிறார்!!
நான் தமிழ் வேத மொழிப்பெயர்ப்பாளர்களை கேவலப்படுத்தவில்லை திரு ஜோஸப் அவர்களே, தேவையில்லாத வாதத்தை கிளப்பி விடாதீர்கள், என்ன!! நான் சொல்லுவது தவறான மொழிப்பெயர்ப்பையும், அதில் உள்ள தவறுகளை மாற்ற விரும்பாததையும் தான்!! இது தவறு என்று தெரிந்தும் வேதத்தில் உள்ள ஒரு புள்ளியாவது மாறக்கூடாது என்கிற வசனத்தை காட்டி, தமிழ் மொழிப்பெயர்ப்பில் மாற்றாமல் இருப்பதை தான் சொல்லுவேன்!! மற்றப்படி அதில் உள்ள தனிப்பட்ட எந்த ஒரு மனிதனிடத்திலும் எனக்கு எந்த பகையும் கிடையாது, எந்த தொடர்பும் கிடையாது!! நீங்கள் தயவு செய்து ஒரு குற்றத்தை முன்வைக்கும் முன் என்ன எழுதுகிறோம் என்று யோசித்து எழுதுங்கள்!! தெளிவை தேடுவோருக்கும், தெளிவானவர்களுக்கு அது தெளிவுகளை தரும் பகுதி என்று இத்தள நிர்வாகி அறிந்திருக்கிறார், உங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை என்பதற்கு தள நிர்வாகி பொறுப்பல்ல!! அது உங்களுக்கு இருக்கும் தெளிவு, அவ்வளவே!!
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும்,கிறிஸ்துவுக்குதேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
எபேசியர் 4:15 அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டுதலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.