kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!


நண்பர் ஜோஸப்பிற்கு சில விளக்கங்கள்!!

அருமை நண்பர் ஜோஸப் அவர்களின் நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகளுக்கு சில விளக்கங்களை தருகிறேன்!! முதலாவது நன்பர் ஜோஸப் அவர்களை இந்த தளத்தில் வரவேற்கிறேன்!! நீங்கள் என் தளத்தில் இருப்பதையும் படித்திருப்பது மகிழ்ச்சியே!!

நண்பர் ஜோஸப் எழுதுகிறார்:

//இயேசு ஒரு போதும் மூலபாஷையின் மேல் சபையை கட்டுவேன் என்று சொல்லவில்லை. மாறாக வெளிப்பாடு என்கிற கல்லின் மேல் அதுவும் குறிப்பாக அப்போஸ்தர்கள் மூலமாக, அவர் (இயேசு) யார் என்கிறா வெளிப்பாட்டின் மீதாக சபையை கட்டுவேன் என்று வாக்கு பண்ணியிருக்கின்றார்//

இயேசு ஒரு போதும் மூலபாஷையின் மேல் சபையை கட்டுவேன் என்று சொன்னதாக நான் ஒரு போதும் சொன்னதில்லை!! ஆனால் மொழிப்பெயர்ப்புகளில் நமக்கு சந்தேகம் வரும் போது மூலபாஷை என்ன சொல்லுகிறது என்று ஆராய்ந்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே!! தமிழிலோ, ஆங்கிலத்திலோ வேதம் கொடுக்கப்படவில்லையே!! இப்ப திருவள்ளுவர் எழுதியதை எத்துனை தான் மொழிப்பெயர்த்தாலும், அவர் எழுதிய மூல பாஷையில் அதை புரிந்துக்கொள்ளுவது தானே சிறப்பான அர்த்தத்தை கொடுக்கும்!! அதை தான் நாங்கள் சொல்லி வருகிறோம்!!

மேலும் கிறிஸ்து சபை கட்டுவது வெளிப்பாட்டின் மேல் அல்ல, வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்தின் மேல் தான்!! அது என்ன விசுவாசம் என்றால்,

மத்தேயு 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

நமக்கு இருக்க வேண்டிய விசுவாசமும் இதுவே!! அதாவது, கிறிஸ்து என்பவர் ஜீவனுள்ள (மரிக்க முடியாத, மரிக்க கூடாத, பிறருக்கு ஜீவன் (Life Giver) கொடுப்பவராக இருப்பவர்) தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்கிற விசுவாசம்!! அது மாத்திரமில்லை,

மத்தேயு 16:17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

ஒரு வேளை உங்களின் கூற்று சரி என்றால், பேதுரு சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகள், "நீர் ஜீவனுள்ள தேவன்" என்று தானே சொல்லியிருக்க வேண்டும்!! மாறாக "நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து" என்கிறார்!! ஜீவனுள்ள தேவன் என்பதற்கும், ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்துவிற்கும் வித்தியாசம் இருக்கிறது நண்பரே!! யாவருக்கும் ஜீவனை கொடுப்பவர் (பலியாக அல்ல) பிதாவாகிறார்!! கிறிஸ்து என்றால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்கிற அர்த்தம் உங்களுக்கும் தெரியும் என்றே என்னுகிறேன்!!

இப்படி கிறிஸ்து அந்த ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்று ஏற்றுக்கொள்வதே மேலான விசுவாசம்!! இதை விசுவாசத்தை பேதுருவிற்கு வெளிப்படுத்தியது பரலோகத்திலிருக்கிற தேவன் தான் என்கிறார் கிறிஸ்து!! அந்த விசுவாசத்தின் (அதாவது கிறிஸ்து தேவனின் குமாரன் என்கிற விசுவாசம்) மேல் தான் தன் சபையை கட்டுவேன் என்கிறார் கிறிஸ்து!! வேதத்தில் அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்தியதும் இதே விசுவாசத்தை தான்!! இந்த விசுவாசத்தை சத்திய வசனங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!


ஜோசப்ராஜ் எழுதுகிறார்:

//இதை சொல்வதற்கு மன்னிக்கவும், உங்களுடைய மற்றும் கோவை பெரேயன்ஸ் கருத்துக்களையெல்லாம் வாசிக்கும் போது, மீட்பின் அனுபவம் உங்களுக்கும், கோவை பெரேயன்ஸ் அவர்களுக்கு சுத்தமாக கிடையாது என்று தெரியவருகிறது//

மீட்பு என்பதற்கு பொதுவான கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மண்டலமும் நினைப்பதற்கும், வேதம் மீட்பை குறித்து சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

மத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

அப்போஸ்தலர் 19:5. அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இது இரண்டு விதமான ஞானஸ்நானத்தை குறித்து பேசுவது இல்லை!! இயேசு கிறிஸ்து சொன்னப்படி எடுக்கிற ஞானஸ்நானம் தான் இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானம்!! யூதர்களுக்கு பிதாவாகிய தேவன் யார் என்று தெரியும், பரிசுத்த ஆவி என்றால் என்னவென்று தெரியும்!! அவர்களுக்கு தெரியாதது இயேசு கிறிஸ்துவை தான்!! பிதாவை குறித்து அவர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை, ஆகவே கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம்!!

//ஆக பிதாவாகிய தேவனை ஆராதிக்கவேண்டுமானாலும், துதிக்கவேண்டுமானாலும், புகழ வேண்டுமானாலும் முக்கியமாக தொழுதுக்கொள்ள வேண்டுமானாலும், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமே சாத்தியம்//

இதில் எந்த முறன்பாடும் இல்லையே!! இதை தான் நானும் சொல்லுகிறேன்!! பிதாவை தொழுதுக்கொள்ள வேண்டும், கிறிஸ்து இயேசுவின் நாமத்தில்!! ஏனென்றால் பிதாவிடத்திற்கு செல்லும் ஒரே வழி கிறிஸ்து இயேசுவே!! கவனிக்கவும் பிதாவிடத்திற்கு செல்ல கிறிஸ்துவே வழி!!

1 கொரிந்தியர் 1:2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

தொழுதுக்கொள்ளுகிற என்று தமிழில் மொழிப்பெயர்த்ததை அப்படியே எடுத்துக்கொள்வது தப்பு என்பதால் தான் மூல பாஷையை பார்க்க வேண்டியிருக்கிறது!! ஏனென்றால் ஒத்த வார்த்தை/ வாக்கிய வசனம் நிறைய இருக்கும், ஆனால் இனை வசனம் இருந்தால் தான் அது செல்லுபடியாகும்!! மேலும் இந்த இடத்தில் தொழுதுகொள்ளுகிற என்கிற வார்த்தை தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது!! தொழுதுக்கொளுகிறதற்கு மூல பாஷை


யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

இதில் உள்ள தொழுதுக்கொள்ளுவதற்கு உள்ள வார்த்தை,


proskunēsete (προσκυνήσετε) - Definition: I go down on my knees to, do obeisance to, worship.

ஆனால் 1 கொரிந்தியர் 1:2ல் எழுதப்பட்டிருக்கும் தொழுதுகொள்ளுதல் என்பதற்கு பயன்ப்படுத்தப்பட்ட வார்த்தை,

epikaloumenois (ἐπικαλουμένοις) - Definition: (a) I call (name) by a supplementary (additional, alternative) name, (b) mid: I call upon, appeal to, address.

நீங்கள் வேதத்தை ஆராய்பவர், வித்தியாசம் புரியும் என்றே நினைக்கிறேன!!

தொடரும்............

பி.கு. : மூல பாஷையை முறையாக கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதற்கென்று Dictionaries, Concordances இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோஸப் எழுதுகிறார்:

//ஆகவே புதிய ஏற்பாட்டில் இருந்து யெகோவா என்கிற நாமத்தினால் அப்போஸ்தலர்களும் மற்ற விசுவாசிகளும் பிதாவை தொழுதுக்கொண்டார்கள் என்று ஒரே ஒரு வசனத்தையாவது காண்பிக்கும்படி நான் யெகோவா சாட்சிகளுக்கும், வேதமாணவர்களுக்கும், கோவை பெரேயன்ஸ் அவர்களுக்கும் பகிரங்கமாக சவால் விடுகிறேன்//

யெகோவா என்பது பிதாவின் நாமாம், சர்வவல்லமையுள்ள தேவனின் நாமம்!! உங்களை ஜோஸப் என்று உரிமையாக அழைப்பவர்களும் உண்டு, உங்களை அப்பா, மாமா, சித்தப்பா, அண்ணா, தம்பி என்று பெயர் சொல்லாமல் இன்னும் அதிகமான நெருக்கத்துடன் அழைப்பவர்களும் உண்டு!! அப்படி என்றால் பெயர் சொல்லி அழைக்காத மக்களுக்கு இனிமேல் நீங்கள் "ஜோசப்" இல்லையா!!

யெகோவா என்பது தேவனின் நாமம், அவ்வளவே!! மேலும் யெகோவா என்கிற பதம் எபிரேய பதமாக இருப்பதால் புதிய ஏற்பாட்டில் கிரேக்க, அராமிக் மற்றும் சில பார்சீக மொழிகல் மாத்திரம் இருப்பதால் "யெகோவா" என்கிற நாமத்தை கொடுக்காமல் அவரை தேவன் (ஹோ தியோஸ்) என்று சொல்லுகிறது வேதம்!! அந்த தேவன் கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார்!! நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியே அந்த தேவன் கிறிஸ்துவிற்கு மாத்திரம் அல்ல, நமக்கும் பிதாவாகிறார்!!

ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

எப்படி கிறிஸ்து தேவனுக்கு குமாரனோ, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர் தேவனின் குமாரனாகிறார்கள் (ஆக்கப்படுவார்கள்), எப்படி கிறிஸ்து தேவனுடைய சுதந்தரருமோ, அப்படியே நாம் இயேசு கிறிஸ்துவிற்கு உடன் சுதந்தரராம்!! சுதந்த்ரர் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்!!

மற்றபடி யெகோவா என்று புதிய ஏற்பாட்டில் எங்குமே கொடுக்கப்படாததால், நீங்கள் பகிரங்கமாக கேட்டாலும், என்னால் வசனத்தை தர முடியாது!! புதிய ஏற்பாட்டில் அவரின் குமாரர்களாக ஆகிறோம், அவரை பிதா என்று அழைக்கலாம்!! அவரையே தொழுதுக்கொள்ள இயேசு கிறிஸ்து நமக்க்கு போதிக்கிறார், சொல்லி தருகிறார்!! நீங்களே பிதா, மற்றும் கிறிஸ்துவை கொண்ட இத்துனை வசனங்கள் கொடுத்தும் இப்பொழுது இருவரும் ஒன்று தான் என்று எழுதுவதில் என்ன நியாயம்!! ஒருவரையே ஏன் இரு தன்மையில் அழைக்க வேண்டும்!!??

நானோ அல்லது இந்த தளத்தில் எழுதும் யாரும் யெகோவா என்கிற நாமத்தில் ஜெபியுங்கள் என்று சொல்லவில்லையே!! யெகோவா யார் என்பதை மாத்திரமே சொல்லுகிறோம்!! ஏன் இல்லாததை புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!

மேலும் யெகோவா என்கிற நாமம் தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து என்று எழுதியிருக்கிறீர்கள்!!

இது ஒரு புதிய முயற்சி, புதிய யோசனை!! ஏன் மூல பாஷை ஏன் மூல பாஷை என்று அநேகந்தரம் கேட்ட நீங்கள், ஏன் மூல பாஷை தேவை இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும்!! மூல பாஷை வேண்டாம் என்பதால் தான் உங்களால் இப்படி யெகோவா தான் இயேசு கிறிஸ்து என்று எழுத முடிகிறது!!

யெகோவா:

the proper name of the God of Israel
Original Word: יְהֹוָה
Transliteration: Yhvh
Phonetic Spelling: (yeh-ho-vaw')
Short Definition: LORD

NAS Exhaustive Concordance:

Word Origin from havah
Definition
the proper name of the God of Israel
NASB Word Usage
GOD (314), LORD (6399), LORD'S (111).

NAS Exhaustive Concordance of the Bible with Hebrew-Aramaic and Greek Dictionaries
Copyright © 1981, 1998 by The Lockman Foundation
All rights reserved Lockman.org

Strong's Exhaustive Concordance:
Jehovah, the Lord
From hayah; (the) self-Existent or Eternal; Jehovah, Jewish national name of God -- Jehovah, the Lord.

இயேசு:

Original Word: Ἰησοῦς, οῦ, ὁ
Part of Speech: Noun, Masculine
Transliteration: Iésous
Phonetic Spelling: (ee-ay-sooce')
Short Definition: Jesus
Definition: Jesus; the Greek form of Joshua; Jesus, son of Eliezer; Jesus, surnamed Justus.

HELP word studies  copyright © 1987, 2011 by Helps Ministries, Inc.
"Jesus Christ" is properly "Jesus the Christ." "Jesus" (2424 /Iēsoús) is His human name, as the incarnate, eternal Son of God (Mt 1:21,25, see also Lk 1:31) – the Christ, the divine Messiah (the second Person of the holy Trinity).

[Christ (His title) means "the Anointed One" (the eternal pre-incarnate, Logos, Jn 1:1-18).]

கிறிஸ்து:

Original Word: Χριστός, οῦ, ὁ
Part of Speech: Noun, Masculine
Transliteration: Christos
Phonetic Spelling: (khris-tos')
Short Definition: anointed, the Messiah, the Christ
Definition: anointed; the Messiah, the Christ.

HELP word studies  copyright © 1987, 2011 by Helps Ministries, Inc.
5547 Xristós (from 5548 /xríō, "anoint with olive oil") – properly, "the anointed one," the Christ (Hebrew, "Messiah").

இது மூல பாஷையின் விளக்கங்கள், அர்த்தங்கள்!! நம் மொழியில் தெரியவேண்டுமென்றால், பிதா (யெகோவா தேவன்) அபிஷேகம் செய்யப்பட்டவரை (கிறிஸ்துவை) இந்த பூமிக்கு மாம்சத்தில் "இயேசு" என்கிற நாமத்தில் அனுப்பினார்!! ஒருவர் அபிஷேகம் செய்கிறார், மற்றொருவர் அபிஷேகம் செய்யப்படுகிறார், ஆனால் இருவரும் ஒருவரே என்று வசனங்களை காண்பிக்கிறீர்கள், ஆனால் அந்த வசனங்களில் ஒன்று கூட இருவரும் ஒருவர் தான் என்று சொல்லுவதில்லை!!

கீழே உள்ள இந்த வசனங்களை வாசித்தால் இருவரும் ஒருவரே என்று உங்களுக்கு தோன்றுகிறதோ!!

எபேசியர் 3:15 நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
எபேசியர் 5:20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

நம்முடைய பிதாவாகிய தேவன் என்றும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசு என்று அப்போஸ்தலர்கள் எல்லா இடங்களிலும் இரு வேறு நபர்களை குறித்து சொல்லுவதை ஏன் ஏற்க மனதில்லாதவர்களாக இருக்கிறீர்கள்!!

கொலோசெயர் 1:5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
I தெசலோனிக்கேயர் 3:13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
பிலேமோன் 1:3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
I பேதுரு 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

என்னை குறித்து சொல்ல வேண்டுமென்றால், இதோ இந்த ஒரு வசனம் போதும்!! என் ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது!! உங்களுக்கு இருவரும் ஒருவரே என்பது உங்களின் புரிந்துக்கொள்ளுதலே!! இத்துனை தெளிவாக பிதாவோடும், குமாரனோடும் என்று எழுதியிருப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தில் ஒன்றாக தெரிகிறது என்பதை விளக்குவீர்களா??

I யோவான் 1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

பிலிப்பியர் 2:9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஒருவர் உயர்த்துகிறார், மற்றொருவர் உயர்த்தப்படுகிறார்!! இருவரும் ஒருவரா!! தேவன் கிறிஸ்துவை உயர்த்துகிறார் என்றால் இருவரும் ஒருவரா!! விளக்குங்கள்!!

இன்னும் வரும்.................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!


நண்பர் ஜோஸப் ராஜ் அவர்களுக்கு 3 பதிவுகளில் சில விளக்கங்கள் தந்திருக்கிறேன்!!

இப்பொழுது தான் அவரின் முழு பதிவையும் படிக்க நேர்ந்தது!! படித்த வரையில் அவர் Oneness Pentecostal என்கிற பிரிவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்!! இவரின் பெரும்பாலுமான கருத்துக்கள் Oneness Pentecostal  பிரிவை ஒத்து தான் இருக்கிறது!!

நண்பர் ஜோஸப்ராஜ் அறிய வேண்டிய முக்கியமான காரியம்!!

இந்த தளத்தில், யாரும் மூல பாஷையை ஆராய்சி செய்யவில்லை என்கிறதை அறிய வேண்டும்!! தமிழிலும் ஆங்கிளத்திலும் குழப்பமாக இருக்கும் இடங்களுக்கு மூல பாஷை தெளிவு தருவதாக இருப்பதால் அதை உபயோகித்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை!! வேத வசனம் இன்றி ஒன்றையும் நாங்கள் எழுதுவதும் இல்லை!! வேதத்தில் இல்லாததை ஏற்றுக்கொள்வதும் இல்லை!!

எடுத்துக்காட்டு, உங்கள் பதிவிலிருந்து தான்!!

லூக் 1:35ல் பரிசுத்தமுள்ளது என்பதை வசனத்தில் "சரீரம்" என்று உங்களுடைய சேர்ப்பு!!

தற்சொரூபத்தை "சரீரம்" என்று எழுதியிருப்பது!!

தேவன் (பிதா) புறாவின் வடிவில் வருவது!!

எல்லாவற்றுக்கும் மேலாக‌

பிதாவின் நாமம்: கர்த்தர்
குமாரனின் நாமம்: இயேசு
பரிசுத்த ஆவியின் நாமம்: கிறிஸ்து

என்று எந்த வசனத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறீகள்!!

உங்கள் கோட்பாடுகளின்படி பழைய ஏற்பாட்டில் யெகோவா என்று சொல்லப்பட்டவர் மறுவி புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து இயேசு என்றும், அவரே பரிசுத்த ஆவி என்றும் இருக்கிறார் என்பதை உங்களின் சொந்த வார்த்தைகளை வேத வசனங்களில் இனைத்து நிரூபிக்க எழுதியிருக்கிறீர்கள்!!

வேதத்தை ஆறாய (மூல பாஷையில்) கூடாது என்றால் வேதத்தை எந்த பாஷையிலும் ஆறாய அவசியம் இல்லை என்கிறேன்!! ஏனென்றால் தமிழில் ஆறாய்ந்தாலும் அது அராய்ச்சி தானே!! தமிழில் 3க்கும் மேற்பட்ட மொழிப்பெயர்ப்புகளில் எந்த வேதத்தை தேவனின் ஆவி தந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா!! ஏனென்றால் மூன்றிலும் வேறு வேறு வார்த்தைகள் உபயோகிக்கப்படுத்தப்பட்டிருக்கிறது!! தேவ ஆவி நமக்கு இவைகளை புரிந்துக்கொள்ள உதவுகிறார், ஆனால் அதற்காக அவர் நம்மிடம் வந்து பேச மாட்டார், வாசிப்பதை புரிந்துக்கொள்ள வைப்பார்!! கண்களை மூடிக்கொண்டு தியானிப்பவர்கள் தான் பரலோகம் நரகம் என்று விசிட் போய் வருவார்கள், வேதம் அப்படி கண்களை மூடிக்கொண்டு தியானித்து அர்த்தம் கொள்வதற்கு அல்ல‌!!

நீங்கள் தமிழ் வேதத்தை வைத்து உங்கள் பிரிவை (Denomination) சார்ந்து ஆராய்சி செய்து கட்டுறை எழுதுகிறீர்கள்!! நான் தமிழில் குழப்பமான இடங்களை ஆங்கிளத்திலோ அல்லது மூல பாஷையிலோ தேடி ஆராய்கிறேன்!! மனிதர்கள் கொண்டு வந்த எந்த பிரிவினையிலும் நான் பங்கு கொள்ளுவதில்லை!! கத்தோலிக்கத்திலிருந்து பெந்தகோஸ்தே என்று என் பயனத்தை தொடர்ந்து, வேதத்தில் தான் சத்தியம் இருக்கிறது, மனிதர்களின் போதனைகளில் இல்லை, அது எத்துனை பெரிய ஊழியராக இருந்தால் என்ன, என்பதை நம்புகிறேன்!!

எடுத்துக்காட்டாக:

2 தீமோ 3:16ல் "தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்றவுடன் அதை கண்மூடிக்கொண்டு பிதா என்று நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்!! ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை!! ஏனென்றால் தேவனை ஒருவரும் ஒரு போதும் கண்டதில்லை என்று வேதம் சொல்லும் போது இது சாத்தியம் இல்லை, அப்படி என்றால் இந்த வசனத்தை எப்படி புரிந்துக்கொள்ள முடியும் என்று கண்களை மூடிக்கொண்டு, இல்லாததிலிருந்து அர்த்தம் கிடைக்காது!! அப்படி என்றால் யார் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதை வேதமே சொல்லுகிறது, மாம்சத்தில் வந்தவர் கிறிஸ்து இயேசு தான் என்கிறது வேதம் இதற்கு இரண்டு வசனங்கள் இருக்கிறதே (1 யோவான் 4:2,3.)!! ஆக தேவன் மாம்சாத்தில் வெளிப்பட்டார் என்பதை பல மொழிப்பெயர்ப்புகள் இன்று கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று எழுதியிருக்கிறார்கள்!! இதுவே சரியானதாக இருக்கும்!! தேவன் என்கிற வார்த்தை வேதத்தில் பல இடங்களில் பலருக்கு உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை எல்லா இடங்களிலும் சர்வவல்லமையுள்ள தேவன் தான் என்று எடுத்துக்கொண்டால் குழப்பம் தான் மிஞ்சும்!!

நண்பர் ஜோஸப் ராஜ் அவர்களிடம் சில கேள்விகள்:

1. வேதம் சொல்லும் சர்வவல்லமையுள்ள தேவன் யார்?
2. வேதம் சொல்லும் வல்லமையுள்ள தேவன் யார்?
3. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்று வேதம் நேரடியாக சொல்லுகிறதா? (பரிசுத்த ஆவியை குறித்து பிறகு பேசலாம்)

இறுதியாக இந்த வசனத்தையும் விளக்க முயற்சியுங்கள், ஏனென்றால் பவுல் சொல்லியிருக்கிறார், இந்த அறிவு அநேகருக்கு இல்லை என்று,

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

இன்று இந்த அறிவு இல்லாததினால் தான் இத்துனை சபைகள்!! கிறிஸ்தவர்கள் முதலில் தேவன் யார் என்று அறிய வேண்டும், அதை பெற்றால் அனைத்தையும் புரிய தேவன் நமக்கு உதவி செய்வார்!!

நண்பர் ஜோஸப்ராஜ் இதற்கு பதில் தருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன் (நேரம் எடுத்து தான்)!!

This is to inform Mr Joseph Raj that I neither belong to Bible Students nor am a Jehovas' Witness!! This I say so that he doesn't put his questions or have a debate with a pre-conceived mind!! Thank you!!



-- Edited by bereans on Sunday 29th of May 2011 10:26:33 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!


இத்துனை சிரத்தை எடுத்து ஒரு தனிநபருக்கு விளக்கமளிக்க விழைந்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம் அந்த நபர் தேவனால் 'பொய்யை விசுவசிக்கத்தக்கதான வஞ்சக ஆவிக்கு' தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும் பட்சம் யாராலும் அவரை திருப்திபடுத்த முடியாது...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சங்கீதம் 83:17. யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

திரித்துவர்கள் "யேகோவா" என்கிற நாமத்தை அலர்ஜியுடன் பார்ப்பவர்கள் தங்களின் பழைய ஏற்பாட்டில் இந்த வசனத்தை எப்படி தான் வாசித்து போதித்திருப்பார்களோ!! இந்த வசனத்திற்கு இனை வசனம் தான்,

1 கொரிந்தியர் 15:28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

இன்னோரு நண்பர் ஜோஸப்ராஜ் அவர்கள் பிதாவின் நாமம் "கர்த்தர்" என்று புதிய ஒரு வெளிப்பாட்டை தந்திருந்தார்!! ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவன் (யேகோவா) என்பவர் தான் புதிய ஏற்பாட்டில் நமக்கு பிதா என்று இயேசு கிறிஸ்துவின் மூலமாக அறிந்துக்கொள்கிறோம்!! நம் பிதாவின் நாமம் யேகோவா என்பதை வேதம் எத்துனை தெளிவாக சொல்லியிருக்கிறது!! இவரிடம் நம்மை சேர்க்கவே கிறிஸ்து இயேசு நமக்கு வழியாக இருக்கிறார்!! கிறிஸ்து இயேசுவை தொழுதுக்கொண்டு யாரிடம் போவதற்கு என்பதில் அவர்கள் தெளிவில்லாதவர்களாக இருக்கிறார்கள்!! ஏனென்றால் அவரே தான் பிதா என்கிறார்கள், பிறகு அவரே தான் மாம்சத்தில் வந்தார், ஆனாலும் பரலோகத்திலும் இருந்தார் என்கிறார்கள், அங்கே உயிருடன் இருக்கும் போது, பூமியில் மூன்று நாட்கள் மரித்தார் (!!) என்கிறார்கள்!! மரித்தார் என்றால் சிலர் ஆத்துமாவில் என்கிறார்கள், சிலர் ஆவியில் என்கிறார்கள், சிலர் சரீரத்தில் என்கிறார்கள்!!

ஒருவர் உயிருடன் இருக்கிறார், அவரே பரலோகத்தில் உயிருடன் இருக்கிறார், அவர் மரித்த போன அவரையே உயிர்த்தெழசெய்கிறார், பிறகு ஆவியாக மீண்டும் ஊற்றப்படுகிறார்......எப்படி எல்லாம் குழம்பியும் குழப்பியும் கொண்டு இருக்கிறார்கள்!!

யேகோவா தேவன் நமக்கு பிதாவாக இருக்கிறார், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட கிறிஸ்து இயேசு, அவரின் முதற்பேறானவராக இருக்கிறார்!! இந்த கிறிஸ்து இயேசு, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தில் சிக்கிய மனிதர்களை மீட்டு எடுக்கும்படியாக தம்மை ஈடுபலியாக செலுத்தினார், இவரின் இந்த பலியினால், எல்லாரையும் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கும் அதிகாரத்தை கிறிஸ்து இயேசுவிடம் தந்திருக்கிறார்!! எல்லா அதிகாரங்களை அவர் பெறுகிறார், என்றால் கொடுக்கிறவர் இவருக்கும் மேலானவராக தானே இருக்க முடியும்!! பெற்றுக்கொள்கிறவர் கொடுப்பவருக்கு கீழ்ப்படிந்திருக்கிறார் என்கிறது வேதம்!! தேவனின் சிந்தையும் வல்லமையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக நம்மில் செயல்ப்படுவதே பரிசுத்த ஆவி அல்லது ஆவியானவர்!! இப்படி குழப்பமே இல்லாத ஒரு விஷயத்தை தான் வேதம் சொல்லுகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"... நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுபினார்" யோவான் 8:42.

 

எத்தனை தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார். 

புதிய ஏற்பாடு முழுவதும் பிதா, நான் என்று ஏராளமான வசனங்கள் இருந்தும் 'நானும் பிதாவும் ஒன்றாக இருகிறோம்' போன்ற வசனங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு வாதிடுவதில் பிரயோஜனமில்லை. 'அது போல நீங்களும் ஒன்றாயிருக்கிறீர்கள்' என்பதிலிருந்தே ஒன்றாயிருப்பதும், ஒருவராக இருப்பதும் விளங்கும். பிதா பெரியவர், எஜமானன், நான் அனுப்பப்பட்டவர், ஊழியக்காரன், ஆசாரியன், அவர் சித்தம் செய்ய வந்தவர்... என்று பிதாவின் தனித்தன்மையை மீண்டும் மீண்டும் கிறிஸ்து எடுத்துரைக்கிறார்.

 

இருந்தாலும் விளங்கிக்கொள்ள தேவ சித்தம் இருந்தாலேயொழிய தேவன் அனுமதித்த வஞ்சக ஆவி அவராலேயே நீக்கப்பட்டாலேயொழிய, அதற்கான கிருபை இருந்தாலேயொழிய ஆயிரம் வசனங்கள் காண்பித்தாலும் இதை விளங்கிக்கொள்ளவே முடியாது என்பதுதான் உண்மை!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard