ஏசா 35:8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
புதிய பூமியில் தேவனின் ராஜியத்தை குறித்தான ஒரு அருமையான தீர்க்கதரிசனம்!! இதற்கு முந்தய வசனங்கள் பார்த்தோமென்றால், குருடர்களுக்கு பார்வை, செவிடர்களுக்கு கேட்கும் திறன், ஊமையர்கள் பேசுவதும், முடவர்கள் மானை போல் துள்ளி குதித்து வருவார்கள் என்று உள்ளது!! இவை யாவும் இப்பொழுது நடக்கும் ஊழியங்களினால் அல்ல, ஏனென்றால் குருடர்களும், செவிடர்களும் ஊமையர்களும் முடவர்களும் இந்த "பெருவிழாக்களில்" சரியாவது கிடையாது!! ஆனால் தேவனின் ராஜியத்தில் எல்லாம் நிறைவேறும், ஆவிக்குறியபடியும், மாம்சத்திலும் நிறைவேறும்!! சத்தியத்திற்கு குருடாகி, சத்திய வசனங்களை கேட்க மறுத்து செவிடானவர்கள், சத்தியத்தை ஆதாயத்திற்காக அடகு வைத்த ஊமையர்களும், சத்தியத்தை அறிக்கை செய்யாமல் முடங்கியிருக்கும் முடவர்களும் தேவனின் ராஜியத்தில் தெளிவு பெறுவார்கள் என்கிறது வசனங்கள்!!
1 தீமோத்தேயு 4:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ஏசாயா 11:9. ..........................சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
மேலும் மாம்சத்தில் இன்று நோய் வாய்ப்பட்டிருக்கும் கோடாகோடி ஜனங்களும் சுகம் பெறுவார்கள் என்பதே நற்செய்தி!! இந்த சுகம் அளிக்கும் கூட்டங்களில் சுகம் பெறுவதாக சாட்சிக் கொடுத்தாலும், சிறிது காலம் கழித்து வியாதியிலோ அல்லது வேறு காரணத்தினாலோ மரித்து போவார்கள்!! ஆனால் தேவனின் ராஜியத்தில் கிடைக்கும் சுகம் நிறந்தரமானது!!
இப்படி எல்லா நிலையிலும் கைவிடப்பட்டவர்கள், சோர்ந்திருப்போர், யாவருக்கும் இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, திடப்படுத்த வேண்டியது சத்தியத்தை அறிந்தவர்களின் கடமையாகும்!! இன்று நோயில், பாடுகளில் பயந்து இருப்பவர்கள் போன்ற எல்லா விதமானவர்களிடமும் நாம் சொல்ல வேண்டியது,
ஏசாயா 35:3. தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
இது ஏதோ நற்செய்தி கூட்டத்திற்கு போய் சுகம் பெறுவதற்கு சொல்லுவதில்லை, ஏனென்றால் அவை ஒன்றும் நிரந்தரமில்லை, ஆனால் இதோ தேவன் நமக்கு இருக்கும் எல்லா சிறுமையையும், எல்லா வியாதியையும், எல்லா குறைப்பாடுகளையும், எல்லா வேதனைகள், கஷ்ட்டங்கள், பாடுகள் எல்லாவற்றிலுமிருந்து விடுவிக்க வருகிறார், நீங்கள் தைரியமாக இருங்கள் என்று சொல்லுவதே உண்மையான நற்செய்தியாகும்!! எல்லாம் முடிந்து விட்டது என்று நம்பிக்கை இழக்காமல் இதோ தேவன் புதிய பூமியில் ஒரு இளைப்பாறுதலின் காலத்தை வைத்திருக்கிறார் என்று நம்பிக்கை தரவேண்டியது, சத்தியத்தில் இருக்கும் அன்பர்களின் ஊழியமாகும்!! பிசாசின் தந்திரத்தில் சிக்கி சிக்குண்டு தவிக்கிற மக்களே, இதோ நம் தேவன் நமக்கு இரட்சிப்பை கொண்டு வருகிறார், நீங்கள் திடமாக இருங்கள் என்கிறதே மெய்யான நற்செய்தி!!
நமக்கு தேவனே வாக்கு செய்திருக்கிறார்!! அவர் நம்மை மாத்திரம் அல்ல, உலகத்தில் உள்ள சகல மனிதர்களையும் மீட்டு கொள்வார் என்று நமக்கு தெரியும்!! வேதத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் எல்லா மனுஷர்களின் இரட்சிப்பை குறித்தே செய்தி தருகிறது!! விபரீதமாக புரிந்துக்கொள்வோர் மத்தியில் தேவன் நமக்கு கேட்கும் காதுகளை தந்து, பிசாசு என்ன தான் கண்களை கட்டி இருட்டாக நினைத்தாலும், இதோ நீதியின் சூரியனின் ஒளியை நமக்கு தந்து தமது வார்த்தைகளை நமக்கு புரிய செய்கிற தேவனையே நாம் துதிப்போம்!!
இதோ காலம் வருகிறது, பெறும் பாதை ஒன்று ஏசாயா பார்க்கிறார், அதில் நடப்பவர்கள் அனைவருமே கர்த்தரால் மீட்கப்பட்டவர்களாம்!! யார் கர்த்தரால் மீட்க்கப்படுகிறார்கள்!!
1 தீமோத்தேயு 4:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே
போன்ற வசனங்கள், மாம்சமான யாவருமே கிறிஸ்து இயேசு சிந்திய இரத்தத்தின் பலனாக உயிர்த்தெழுந்து (மரணத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள்) இத பாதையில் நடப்பார்களாம்!! இந்த பெரும் பாதை சியோன் என்கிற தேவனின் ராஜியத்தையே குறிக்கும்!! இந்த பாதை பூமியெங்கும் நிறைந்திருக்கும்!! இன்று கெர்ஜிக்கிற சிங்கமாகவும், அவனின் கூட்டாளிகளான எல்லா தீங்குகள் என்னும் காட்டு மிருகங்களும், அந்த ராஜியத்தில் காணப்படுவதில்லையாம்!!
இன்று இருக்கும் பொல்லாத பிரபஞ்சமும் அதை ஆண்டுக்கொண்டிருக்கும் சாத்தானும் தேவனின் ராஜியத்தில் காணப்படுவதில்லை!! அங்கே நடப்பவர்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உயிர்த்தெழுந்து வருபவர்களே!! மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாங்கள் யாரால் மீட்கப்பட்டோம் என்கிற செய்தியை அறிந்து அந்த தேவனை துதிப்பார்கள், துதி பாடல்கள் எழுப்புவார்கள்!! வரயிருக்கும் தேவனின் அந்த ராஜியத்தில் இனி எந்த ஒரு இழப்பும், பாடுகளும் இல்லையே!!
வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
எல்லா பாடுகளும் ஓய்ந்து போய், தேவன் எந்த நோக்கத்திற்காக இந்த பூமியையும், அதில் மனிதர்களையும் படைத்தாரோ, அவை யாவும் அவரின் சித்தத்தின்படியே நடக்கும், அது நண்மைக்கு ஏதுவாக நடக்கும் என்பதே வேதம் நமக்கு தரும் நம்பிக்கை!! இதுவே நம் விசுவாசம்!!
இதை விட்டு விட்டு நற்செய்தி சொல்லுகிறோம் என்று ஜனங்களை பயப்படுத்தி கிறிஸ்து அனைவருக்காகவும் சிந்திய இரத்தத்தை கொச்சைப்படுத்தும் இன்றைய ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!! இவர்கள் தேவனின் இரட்சிப்பை இப்பொழுது அறியமாட்டார்கள், கிறிஸ்து ஆளுகை செய்யப்போகும் தேவனின் ராஜியத்தில் அதை அறிந்துக்கொள்வார்கள்!!
பிசாசின் எவ்வளவு வல்லமையான பிடியில நீங்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது!
எல்லா மனுஷரும் இரட்ச்சிக்கப்படுவது அவர் சித்த்தமென்றால் அது நடன்துவிடுமோ? நாங்களெல்லாம் பின் முட்டாள்களா? நாங்கள் சுவிசேஷம் அறிவித்து எத்தனை பேரை 'பரலோகத்த்திற்கு' தகுதியாக்கியிருக்கிறோம் தெரியுமா?
ஹலோ? நாங்கள் அறிவித்து ஏற்றுக்கொள்பவர்கள் பரலோகம், மற்றவர்கள் நரகம். இதுவே நற்செய்தி...
சும்மா உளறாதீர்கள்!
-- Edited by soulsolution on Wednesday 18th of May 2011 11:10:45 PM