1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்ற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?
2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?
3. இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்பு எதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?
4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருட பூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்பு உண்டா?
5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடா கோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசி காலத்தில் வாழும் மக்கள்மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?
6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?
7. பரதீசு என்றால் என்ன? இப்போது அது எங்குள்ளது? வசன ஆதாரம்.
8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?
10. "லாசருவே வெளியே வா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?
A) பாதாளம் B) நரகம்C) பரலோகம் D) பரதீசு E) கல்லறை
11. நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?
12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?
13. சிறு மந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக் குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக்கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?
14. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)
15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?
16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?
17. இந்த ஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இது தான் நற்செய்தியா?
18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.
19. அந்நிய பாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?
20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?
21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?
22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள் மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?
23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும் போது ஏன் இத்தனை உபதேச வேறுபாடுகள், பிரிவினைகள்?
24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?
25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?
26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?
27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்? 28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?
29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா? ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்க்கப்படுவதில்லை? (வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் யாருமே ஒரு மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே அதை அறிந்தனரேயன்றி அந்நிய பாஷை வரம்பெற்று மொழிபெயர்க்கவில்லை என்று அறிக!)
30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?
31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?
32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?
34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச்சார்ந்துதான் செயல்படுகிறாரா?
35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?
36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?
37. 1யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?
38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?
39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே இது யோவான்3:13க்கு எதிராக இருக்கிறதே எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?
40. வியாதியே இல்லாத அல்லது வராத சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு ஊழியர் பெயர் கூறுக?
41. ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? இல்லை என்றால் எப்படி அடையாளம் காண்பது?
42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"
. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?
43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?
45. "பாவத்தின் சம்பளம் மரணம்", "பாவத்தின் சம்பளம் நரகத்தில் நித்திய வாதை" இதில் எது வேதத்தின்படி சரி?
46. பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை என்றால் இயேசு அந்த தண்டனையையல்லவா ஏற்றிருக்க வேண்டும்? ஏற்றாரா?
47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).
48. இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?
49. இயேசு மரித்தாரா?
50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?
51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள். தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.
1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது. 2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது. 3. மறுஒளிபரப்பின்போது. 4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது. 5. மேற்கண்ட நான்கும் சரி. 6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.
52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்? 1. நரகத்துக்கு 2. வேறெங்காவது சுற்றும் 3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும் 4. இன்னொரு மனிதனுக்குள் போகும்
54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?
55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்? 1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்
56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?
57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?
சரியா? தவறா?
1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது.
2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது.
3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது.
4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும்
வர வர யெளவன ஜனம் என்கிற தளத்தில் காமேடிக்கு பஞ்சம் இல்லை!! சகோ(தரி) கோல்டா என்பவர் கேள்விகளுக்கு நல்ல தமாசாக பதில் தந்திருக்கிறார்!! நல்லா பொழுது போகும்!!
எடுத்துக்காட்டு:
43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?
உண்டு. இறக்கைஇருக்குமாதெரியவில்லை. அதுவானத்திலும்ஓடும். பூமியிலும்ஓடும்.