இங்கு தீர்க்கதரிசனம் என்று அப்.பவுல் குறிப்பிடுவது "உனக்கு வேலை கிடைக்கும்",
" நீ வெளிநாடு(தூரதேசம்)போவாய்",
உனக்கு குழந்தை பிறக்கும்.".... இன்னபிற அல்ல.
வசனத்தைப் பகுத்து விளக்கி அது அனைவருக்கும் எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வதே பவுல் அப்போஸ்தலன் கூறும் தீர்க்கதரிசனம் என்று நான் நம்புகிறேன்.
இன்று ஆளாளுக்கு புதுவருட தீர்க்கதரிசனம் சொல்கிறார்களே,
எந்த நாயாவது ஜப்பானில் சுனாமிவரும் என்று சொன்னதா? ஓசாமா சாவான் என்று சொன்னதா?
யார் ஆட்சிவரும் என்று சொன்னதா?
ஏதாவது ஒன்றை உளறிக்கொட்டிவிட்டு அதை நான் தான் சொன்னேன் என்பது கேட்பவர்களை முட்டாள்களாக்கும் செயலல்லவா?
அக்கால தீர்க்கதரிசனத்தில் நினிவே பட்டணம் மனந்திரும்பியது; உன் தீர்க்கதரிசனத்தில் யாருக்கு என்ன நன்மை?
உன் அப்பன் சாகப்போவதே உனக்குத் தெரியவில்லையே?
இன்றிருக்கும் சுகமாக்கும் வரம் பெற்ற எல்லா ஊழியக்காரனும் வியாதிவந்துதான் சாவான் அதை ஏன் உணர மறுக்கிறாய்.
என்றைக்கு வெளிப்படுத்தல் புத்தகம் (புதிய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசனம்) எழுதி முடிக்கப்பட்டதோ அன்றே மற்ற எல்லா வரங்களும் நின்று போனது. இப்போது இருப்பது நம்பிக்கை, விசுவாசம், அன்பு மட்டுமே. இதிலும் அன்பே சிறந்தது என்று பவுல் சொன்னது மறந்துவிட்டதே...
அந்த அன்பு இன்றைக்கு தேவனை அறியாத அநேகரிடத்தில் இருப்பதால்தான் கைம்மாறு கருதாமல், எதையுமே எதிர்பார்க்காமல் அநாதை ஆசிர்மங்கள், முதியோர் காப்பகங்கள், மனநல மருத்துவங்கள், இலவச மருத்துவமனைகள் 'தேவ அன்பு'டன் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் பாவம் அவர்களெல்லாம் நரகத்துக்குப் போய்விடுவார்களே....