kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிளம்பீட்டான்யா, கிளம்பீட்டான்யா......!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிளம்பீட்டான்யா, கிளம்பீட்டான்யா......!!


அமேரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவை சேர்ந்த சிவில் எஞ்சினியராக இருந்து ஊழியனாக மாறி ரேடியோ மூலமாக ஊழியம் செய்யும் திரு ஹரோல்ட் எக்பர்ட் கேம்பிங் (Harold Egbert Camping). இவர் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்!! அது என்னவென்றால் மே மாதம் 21 தேதி 2011ல் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் நாள் என்றும் சரியாக ஐந்து மாதங்கள் கிறிஸ்து வேதத்தில் சொல்லியபடியே ஆளுகை செய்யவேண்டுமாம் (எங்கே என்று தான் தெரியவில்லை!!) அதன் பின் 5 மாதங்கள் சென்று சரியாக அக்டோபர் 21, 2011ல் உலகத்தை அழித்துவிடுவாராம் தேவன்!!

இது தான் கிறிஸ்தவ மண்டலத்தில் லேடஸ்ட் சூப்பர் ஹிட் தீர்க்கதரிசனமாம்!!

வேதம் சொல்லுகிறது,

அப்போஸ்தலர் 1:7. அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் அல்ல ஹரோல்டுக்கும் இது பொருந்தும்!! காலங்களையும் வேளைகளையும் அறிகிறது நமக்கு அடுத்ததல்ல என்று சொல்லிய பிறகும் துள்ளியமாக தேதியையும், நேரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் இவர் உண்மையில் கிறிஸ்தவர் தானா என்கிற ஐயப்பாடு தான் முதலில் எழும்புகிறது!! அதிலும் 5 மாதங்கள் கிறிஸ்து ஆளுகை செய்து அதன் பின் அக்டோபர் 21ல் உலகத்தை அழிப்பார் தேவன் என்கிறார்!! உலகத்தை அழிப்பது தேவனின் சித்தமே கிடையாது, இருக்கும் உலகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது தான் தேவனின் நோக்கமும் சித்தமும்!!

இவரை போன்றே உலகில் பல காலங்களிலும் நேரங்களிலும் கள்ளதீர்க்கதரிசிகள் தோன்றி அநேகரை வஞ்சகத்திற்குள் நடத்தியிருக்கிறார்கள்!!

இதோ ஹரோல்டின் தீர்க்கதரிசன பக்கம்!!

எங்கே தான் போகிறதோ கிறிஸ்தவம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நண்பர் பெறேயான்ஸ் அவர்களே, இதைப் போலவே அண்மையில் Frankfurt am Main  என்ற இடத்துக்கு சென்று இருந்தோம். அங்கு பல நாட்டு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு கூட இப்படி பலகைகளை ஏந்திக் கொண்டு நியாயதீர்ப்பு நாள் சமீபித்துவிட்டது!!! அதற்கான நாள் மாதம் ஆண்டு போன்ற விபரங்களை குறித்த விளப்பரப் பலகைகள் அந்த இடத்தியில் அநேகம் காணக் கூடியதாக இருந்தது!! என்னுடன் வந்த  அனைவரும் வேதமானாக்கர் விசுவாசத்தை சேர்ந்தவர்கள். நாம் அவர்களிடம் பல கேள்விகளை கேட்டேன். அவர்கள் வேதத்தில் இருந்து அதற்கு பதில்களையும் சொன்னார்கள். இதில் விசித்திரம் (காமடி) என்னவென்றால் அங்கு நியாயதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு பலகைகளை ஏந்திக்கொண்டு இருந்தவர்கள் அணைத்து பிரிவுகளும் இயேசுவை தெய்வமாக தொழுபவர்கள். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான நாட்களில் மாதங்களில் வருடங்களில் நியாயதிர்ர்பு வருமாம். இதையெல்லாம் பார்த்து நாம் நமக்குள்ளே நகைத்துக் கொண்டோம். அவர்களின் அறியாமையே நினைத்து!!!



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

நானும் தீர்க்கதரிசி தான் இந்த தீர்க்கதரிசனம் யாராலும் மறுக்கவோ ,மட்டறுக்கவோ முடியாது ஏன் என்றால் இன்று காலை நமது கபிரியேல் தூதனோடு காப்பி சாப்பிட்டுவிட்டு, அவர் போகும் போது நான் கேட்டு அவரே!!! சொன்னது 


குரு = என்ன கபிரியேல்  எப்போது உலகம் அழியும் ?

கபிரியேல்= அது ரகசியமாச்சே 

குரு = என்னப்பா டெய்லி உனக்கு காப்பி வாங்கிதரேன் இத கூட சொல்ல மாட்டியா? கண்டவனெல்லாம் சொல்றான் நான் சொல்ல ௬டாத?

கபிரியேல்= சரி சரி ரொம்ப பீல் பண்ணாதே சொல்றேன் கேட்டுக்க!!! பிப்ரவரி மாதம் 30 ம் தேதி உலகம் அழியும், 

குரு = எந்த வருஷம் ?

கபிரியேல் = சாரி பா உன் காப்பிக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும் நெக்ஸ்ட் மீட்டிங் ல பாக்கலாம் ஓகே பாய் !!!!

குரு = இத வைச்சே  10 ௬ட்டம் போடலாமே கலக்சன் களை கட்டுமே !!!!!    


கதை 
வசனம் 
கற்பனை 

குரு 

அடிக்காதீங்க ப்ளீஸ் >>>>>..........>>......>>>>>>>>>>>>
No nO no NO BAD WORDS ...........................................



-- Edited by Guru on Friday 20th of May 2011 08:02:10 AM

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இப்படி தான் யோசிப்பார்களோ!!

பரவாயில்லையே, நீங்களும் நல்லா தான் சொல்லுகிறீர்கள்!!

தீர்க்கதரிசி ஆகிவிட்டீர்களோ!! கப்ரியேல் தூதனுக்கு காபியா? அவர்கள் காபியும் குடிப்பார்களா? உங்களிடம் நிறைய விஷயம் இருக்கும் போல் இருக்கிறதே!! இன்னும் கொஞ்சம் கற்பனை குதிரையை அவிழ்த்துவிடுங்கள்!!

ஆனால் அடுத்த முறை கப்ரியேல் தூதன் என்று சொல்லாமல், தேவனே உங்களிடத்தில் வந்து சொன்னார் என்று சொல்லுங்கள்!! தூதர்களுக்கு எல்லாம் இவர்கள் மத்தியில் அவ்வுளவு மதிப்பு கிடையாதுங்கோ!! தேவன் சொன்னார் என்று சொன்னால் தான் நம்புவார்கல், அப்ப தான் அது தீர்க்கதரிசனமாகும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

நான் இன்னும் அவ்ளோ பெரிய தீர்க்கதரிசி ஆகலைங்கண்ணா ஆன உடனே ஆண்டவர் கிட்டயே ஐ எஸ் டி போட்டு கேட்டு சொல்றேங்கண்ணா!!!!!!

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

The Apology for May 21st Judgement Day Prediction

I’m Sorry You Weren’t

Saved in the Rapture

Jesus has come, few were saved, even less noticed his presence, but May 21st was still Judgement Day.  If you are reading this blog, then you were not saved by Jesus in the Second Coming, and have been left behind during the End of Days.  There are just five months remaining until the End of The World on October 21 2011.  Prepare yourself for the End Times now by stocking up on water, canned goods, and appropriate clothing before the End of The World.

How to Prepare for the Apocalypse

You can prepare for the Apocalypse, now that the Rapture has come and gone, by acknowledging that you have been missed in the Second Coming of Jesus.  There were millions saved that went unnoticed on May 21st, but the signs that Jesus is back until the End of the World will soon become much more evident as time goes on.

I Survived Judgment Day 2011 T-Shirt

Buy Now!  On Sale for $20.40

Get a shirt, show the world that you were one of the “lucky ones” on May 21st who weren’t taken to Heaven by Jesus.  They’re on sale for a limited time, they fit great, and match almost anything in your closet!  May 21st 2011 is the most important day that has ever happened on earth, and you can own this piece of history with just a couple mouse clicks.

The End of The World 2011 still coming October 21st

Saturday May 21st is just the start of the Apocalypse now that Jesus has returned to Earth.  Those left now face 5 months of torment during the End Times since they were not saved on Judgement Day 2011.  Are you disappointed by God’s decision not to save you in the Rapture?  Are you Ok with the fact that you will see the End of the World in just 5 short months?  Buy yourself a T-Shirt!  It’s a GREAT conversation starter, and will help you spread the word that the End of the World is coming soon.

 

போய்ட்டாங்கய்யா போய்ட்டாங்க‌....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

T-Shirt விற்பனை செய்ய இப்படி எல்லாம் கிளம்பியிருக்கார்களோ!! இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழலில் இந்த பணத்தை வாங்கி என்ன செய்ய போகிறாராம் இந்த கள்ள தீர்க்கதரிசி!!

இந்த செய்தியில் சில கேள்விகள் எழும்புகிறது:

1. நியாயத்தீர்ப்பென்றால் "எடுத்துக்கொள்ளப்படுதலா"?

2. இந்த செய்தியை தந்த கள்ளத்தீர்க்கதரிசி "எடுத்துக்கொள்ப்படவில்லையா"?

3. எடுத்துக்கொள்ளப்படாதவர்கள் சந்தோஷமானவர்களா?


சகோ ஆத்துமா அவர்களே, நீங்கள் தந்திருக்கும் இந்த பதிவை வைத்து ஒன்று மாத்திரம் நிச்சயமாகிறது!! அந்த மனிதன் கள்ள தீர்க்கதரிசி மாத்திரம் இல்லை, "லூசு" வேறு!! அவர் என்ன சொல்லிகிறார் என்று அவருக்கே புரியவில்லை!!

I’m Sorry You Weren’t
Saved in the Rapture
என்று வருத்தத்தை தெரிவிக்கிறார், அதே நேரத்தில்,

" Those left now face 5 months of torment during the End Times since they were not saved on Judgement Day 2011."
என்று எழுதி, விடுப்பட்டவர்கள் வாதிக்கப்படுவார்கள் என்கிறார்!! பிறகு இப்படியும் எழுதியிருக்கிறார்,

"Get a shirt, show the world that you were one of the “lucky ones” on May 21st who weren’t taken to Heaven by Jesus. "
அதாவது விடப்பட்டவர்கள் வாதிக்கப்படுவார்களாம் ஆனால் அவர்கள் "அதிர்ஷ்டசாலிகலாம்"!! என்ன நடக்குது!! இதை எல்லாம் யாரும் கேட்கமாட்டார்களா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard