King James Bible And Enoch walked with God: and he was not; for God took him.
American King James Version And Enoch walked with God: and he was not; for God took him.
American Standard Version and Enoch walked with God: and he was not; for God took him.
Darby Bible Translation And Enoch walked with God; and he was not, for God took him.
English Revised Version and Enoch walked with God: and he was not; for God took him.
Webster's Bible Translation And Enoch walked with God, and he was not: for God took him.
World English Bible Enoch walked with God, and he was not, for God took him.
Young's Literal Translation And Enoch walketh habitually with God, and he is not, for God hath taken him.
ஆதியாகமம் 5:24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
இங்கே தேவனோடு சஞ்சரித்துக்கொண்டு இருந்தான் என்று வாசிக்கிறோம், தேவன் என்று தமிழில் வாசித்தாலும் இங்கே உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை ஏலோஹிம் (angels, exceeding, God (gods)(-dess, -ly), (very) great, judges, mighty.)!! ஏலோஹிம் யெகோவா தேவன் என்று அல்ல, இன்னும் நிறைய பேரை ஏலோஹிம் என்று வேதம் சொல்லியிருக்கிறது!! ஏனென்றால் பலர் தேவன் என்றவுடன் அதற்கு குதர்த்தம் கண்டுப்பிடிப்பதில் தான் நேரம் செலவிடுவார்கள்!! இங்கே ஏனோக் யெகோவா தேவனோடு அல்ல, மாறாக வல்லமையுள்ள தேவ தூதர்கள் அல்லது பிரதான தூதர்களோடு தான் நடந்திருக்க முடியும், ஏனென்றால் யெகோவா தேவனை ஒருவனும் ஒரு போதும் பார்த்ததில்லையே, ஏசாயா உட்பட தான்!! ஏனென்றால் ஒரு வசனம் இன்னோரு வசனத்தை பொய்யாக்க முடியாது!! யெகோவா தேவனை யாரும் கண்டதில்லை என்றால் நிச்சயமாக கண்டதில்லை தான்!!
இதையே ஆவிக்குறிய அர்த்தத்தில், ஏனோக் தேவனின் வழியில் நடந்தான், அதாவது தேவன் அவனை நடத்தியப்படியே நடந்தான்!! அப்படி இருக்கும் போது அவன் காணப்படாமற்போனான் என்று தான் வேதம் சொல்லுகிறதே தவிர அவன் பரலோகத்திற்கோ அல்லது பரதீசுக்கோ எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று நம் கிறிஸ்தவ போதகர்கள் சத்தியமே செய்தாலும் அது தவறே, ஏனென்றால் கிறிஸ்து இயேசு சொல்லியிருக்கிறாரே,
ஒருவனும் பரலோகத்துக்கு ஏறினவன் இல்லை என்று கிறிஸ்து இயேசுவின் வார்த்தைக்கு இரண்டு சாட்சிகள் இருக்கிறது, ஒன்று இதை சொன்னது கிறிஸ்து இயேசு, அடுத்த சாட்சி அவரின் பிதா, ஏனென்றால் பிதா சொல்லுவதையே கிறிஸ்து இயேசு சொல்லுகிறார்!! ஆக இரண்டு சாட்சிகளுடன் சொல்லப்பட்ட வசனம் தவறாக வாய்ப்பில்லை!!
ஏனோக்கு காணமற்போனான் என்றால், இது நாள் வரை ஜனங்களோடு சஞ்சரித்த ஏனோக் அவர்களின் பார்வையில் படவில்லை என்பதே, ஏனென்றால் மரித்த பின்பு எப்படி ஜனங்கள் அவனை பார்த்திருக்க கூடும்!! தேவன் (எலோஹிம் (angels, exceeding, God (gods)(-dess, -ly), (very) great, judges, mighty.)), அவனை எடுத்துக்கொண்டாராம்!! வசனம் என்ன ஏனோக்கை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார் தேவன் என்றா இருக்கிறது!! இல்லையே, பிறகு ஏன் ஏனோக்கு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்கிற போதனை!!?? அறியாமை, தேவ வசனங்களை ஆறாயாமல் இருப்பது தான் இதற்கு காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை!!
மரித்த ஏனோக்கும் கிறிஸ்துவின் சத்தத்தை கேட்டு எழுந்து வருவானே!!
தானியேல் 12:13. நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.
யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;