எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.
"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."
"ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது"ரோமர்5:18,21
இங்கு "உண்டாயிற்று", "ஆண்டுகொண்டது" என்பது சிலுவையில் கர்த்தர் "எல்லாம் முடிந்தது" என்று கூறியதற்கு அர்த்தம் கொடுப்பதாக உள்ளது. இந்த வசனங்களில் "எல்லா மனுஷருக்கும்" என்ற பதம் நிபந்தனை இல்லாத மீட்பைக் குறிக்கிறது.*No Conditions Appy.
இந்த மாபெரும் கிருபையை புரிந்துகொள்ள தேவ அன்பு வேண்டும்.
எல்லாருக்கும் நித்திய ஜீவன் என்றால் ஏத்துக்கமாட்றானுகய்யா....
எல்லாருக்கும் அவரே நித்திய ஜீவனை தருகிறார் என்றால் பிறகு நாங்கள் எதற்கு, என்கிற சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா சகோதரா?? நாங்கள் தான் உங்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்த முடியும் என்று ஒரு கூட்டமும், எங்கள் சபைக்கு வந்தால் தான் உங்களுக்கு இரட்சிப்பு என்று இன்னோரு கூட்டமும், மேன்மை பாராட்டுகிறார்களே!!
நீங்களோ எல்லாருக்கும் இலவசமாக (No conditions apply) இரட்சிப்பு என்று வசனத்தை சொன்னாலும் அதை தேவ அன்பு உள்ளவனே கேட்டுக்கொள்வான், மற்றவர்கள் தான் இருக்கிறார்களே நரகத்தின் (!!) வாசல் கதவை திறந்து விட!! இவர்களின் சுவிசேஷம், நற்செய்தியே இது தானே, நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகம் தான், கிறிஸ்து எல்லா மனுஷருக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கலாம், ஆனாலும் நீ கிற்ஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டுமே!!
சிலுவையின் சுவிசேஷத்தை குறித்து இவர்கள் படும் ஆதங்கம் ஒன்று இவர்களின் பெயர் புகழுக்காக அல்லது பணத்திற்காக மாத்திரமே!! ஆனால் நமக்கோ சிலுவையின் சுவிசேஷம் என்றாலே அனைவருக்காகவும் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் பயனாக அனைவருக்கும் இரட்சிப்பு!! அனைவருக்கும் இரட்சிப்பை விடவா ஒரு பெரிய சுவிசேஷம் இருக்க போகிறது!!
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
இங்கு கவனிக்க வேண்டியது முதலில் இரட்சிப்பு (மரணத்திலிருந்து) பின்பு சத்தியத்தை அறிகிற அறிவடைதல் (1000 வருட கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில்). தேவனுடைய இந்த சித்தம் பரிபூரணமாக நிறைவேறி 'எல்லாமனுஷரும் இரட்சிக்கப்பட்டு ( உயிர்த்தெழுந்து) சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்து நித்திய நித்தியமாய் இந்த பூமியில் வாழ்வார்கள். வேதம் கூறும் அதிஉன்னத, மகத்தான, தேவ அன்பின் உச்சத்தை விளக்கும் நற்செய்தி இதுவே.
சகல துதி, கனம், மகிமை அவர் ஒருவருக்கே!
-- Edited by soulsolution on Thursday 1st of September 2011 08:18:59 AM