இத்தளத்த்ற்கு நான் புதியவன். கடந்த சில வாரங்களாகவே இந்த தளத்தில் வெளியாகி வரும் கட்டுரைகளை படித்து வருகிறேன். மிகவும் அருமையான கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன.
பொதுவாகவே கிறிஸ்தவத்தின் மீது துர்-அபிமானம் குறிப்பா மிஷனரிகளின் செயல்பாடு, நித்திய நரக கோட்பாடு முதலியவை மீதானது. உங்கள் கட்டுரைகளை படித்த உடன் அவை அனைத்தும் போய் விட்டன.
துர்-அபிமானம் என்பது நீங்கி கிறிஸ்தவத்தின் மீது உண்மையான அபிமானம் தோன்றிவிட்டது, உண்மையான கிறிஸ்தவம் என்பது இது தான் என்று எனக்குப்படுகிறது.
நான் சென்னையில் வசிக்கிறேன். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன். யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.
சென்னையில் யெகோவா சாட்சிகளின் சபை ஒன்று உள்ளது, அங்கு செல்லலாமா ?
இந்த மன்றத்தின் என்னால் (இப்போதைக்கு) ஏதும் பங்களிக்க இயலாததை நினைத்து வருந்துகிறேன். எனினும் இங்கு வெளிவரும் கட்டுரைகளை படிப்பதையே பெரும் பேறாக கருதுகிறேன்.
சகோதரர் விஷால் அவர்களை இத்தளத்திற்கு வரவேற்கிறோம். இத்தளத்திலேயே தங்களுக்குத் தேவையான எல்லா விபரங்களும் கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். மிகப் பொறுமையாக இத்தளத்திலுள்ள வசன விளக்கங்கள், தலைப்புவாரி வேதபாடங்களைப் படிக்கவும். யேகோவா சாட்சிகளிடத்தில் ஓரளவே உண்மை உள்ளது. எனவே அங்கு சென்றாலும் குழப்பமே மிஞ்சும். மேலும் உங்களுக்கு சென்னையில் இது சம்பந்தமாக உதவி தேவைப்பட்டால் எங்களால் உதவக்கூடும். திறந்த மனதுடனும், கடற்றுக்கொள்ளும் வாஞ்சையுடனும் இருந்தால் சத்தியத்திற்கு யாருமே தூரமானவர்கள் அல்ல.
நண்பர் விஷால் அவர்களை இத்தளத்திற்கு உன்னதமான தேவன் யெகோவாவின் நாமத்திலும் அவரின் குமாரனும் நம் மீட்பரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவின் நாமத்தின் அன்புடன் வரவேற்கிறேன்!!
தங்களுக்கு இந்த தளம் பிரயோஜனமுள்ளதாக இருந்தது என்பதில் மகிழ்ச்சியே!! சகோ ஆத்துமா பதிந்தது போல் தொடர்ந்து தலைப்பு வாரியாக பதிவுகளை வாசியுங்கள்,! கிறிஸ்தவத்தின் போலிகளை விட்டு விலகி, சத்தியத்தை அறிவிக்கவும், அறிந்துக்கொள்ளவுமே இந்த தளத்தின் நோக்கம், நீங்களும் இதில் பங்கு பெற்று பதிவுகளை தர அழைக்கிறேன்!!
தேவன் தாமே அவரின் அநாதி தீர்மானத்தின்படியும் அவரது கிருபையின் படியும் நம்மை நடத்துவாராக!! தங்களின் கேள்விகள், விவாதங்கள் எதுவானாலும் பதிவு செய்யுங்கள்!!
நண்பர் விஷால் அவர்களை இத்தளத்திற்கு உன்னதமான தேவன் யெகோவாவின் நாமத்திலும் அவரின் குமாரனும் நம் மீட்பரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவின் நாமத்தின் அன்புடன் வரவேற்கிறேன்!!
நீங்கள் இந்த தளத்துக்கு வந்ததே தேவசித்தம்!!!! வேதம் இவ்வாறு சொல்கிறது:- யோவான் 6:44 "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" ஆகவே தேவனின் சித்தத்துக்கு அமைய உலகில் எங்கு இருந்தாலும் தேவன் அவரவர்களை தேர்வு செய்துகொண்டே இருப்பார்.
இந்த தளத்தில் தங்களுக்கு தேவையான அணைத்து விஷயங்களும் தலைப்புவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது!!! வாசித்து பயனடையுங்கள். அத்துடன் கிறிஸ்தவத்தின் போலியான உபதேசங்களில் இருந்து தெளிவு பெறுங்கள். தேவன் தானே சதாகாலமும் உங்களோடு இருப்பாராக. நன்றி அன்பின் வாழ்த்துக்களுடன் டினோ
Vishal wrote:
அனைவருக்கும் வணக்கம்
இத்தளத்த்ற்கு நான் புதியவன். கடந்த சில வாரங்களாகவே இந்த தளத்தில் வெளியாகி வரும் கட்டுரைகளை படித்து வருகிறேன். மிகவும் அருமையான கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன.
பொதுவாகவே கிறிஸ்தவத்தின் மீது துர்-அபிமானம் குறிப்பா மிஷனரிகளின் செயல்பாடு, நித்திய நரக கோட்பாடு முதலியவை மீதானது. உங்கள் கட்டுரைகளை படித்த உடன் அவை அனைத்தும் போய் விட்டன.
துர்-அபிமானம் என்பது நீங்கி கிறிஸ்தவத்தின் மீது உண்மையான அபிமானம் தோன்றிவிட்டது, உண்மையான கிறிஸ்தவம் என்பது இது தான் என்று எனக்குப்படுகிறது.
நான் சென்னையில் வசிக்கிறேன். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன். யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.
சென்னையில் யெகோவா சாட்சிகளின் சபை ஒன்று உள்ளது, அங்கு செல்லலாமா ?
இந்த மன்றத்தின் என்னால் (இப்போதைக்கு) ஏதும் பங்களிக்க இயலாததை நினைத்து வருந்துகிறேன். எனினும் இங்கு வெளிவரும் கட்டுரைகளை படிப்பதையே பெரும் பேறாக கருதுகிறேன்.
நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )