அந்நிய பாஷை என்றால் நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழி அல்லாத வேறு ஒரு மொழி (பாஷை) தான் அந்நிய பாஷை!! நம் மொழிக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!! அப்படி என்றால் அந்நிய பாஷைக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!!
ஆனால் நான் சென்ற சில கூட்டங்களில் அந்நிய பாஷை என்று பேசி அது எனக்கு புரியவேயில்லையே!! அந்த பாஷையை யாரும் மொழிப்பெயர்க்கவும் இல்லையே!! ஆனால் வேதம் சொல்லுகிறதே, உலகத்தில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் அர்த்தம் உண்டென்று,
I கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
அப்படி என்றால் அந்நிய பாஷை என்கிற பெயரில் சபைகளில் செய்யப்படும் துனிச்சலுக்கு என்ன அர்த்தம்!!
ஏன் அந்நிய பாஷை??
படிக்காத மீனவ கூட்டத்திலிருந்து தன் அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக சுவிசேஷம் உலகெங்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்து விட்டு கிறிஸ்து இயேசு பரலோகம் சென்று விட்டார்!! இனி இந்த படிக்காத அல்லது ஒரே பாஷையை தெரிந்தவர்கள் எப்படி தான் உலகெங்கும் சென்று வேற்று மொழி பேசுவோருக்கும் சுவிசேஷம் சொல்லுவார்கள்!! அல்லது வேற்று மொழிக்காரர்கள் இவர்களிடத்தில் வரும் போது அவர்களுக்கு எப்படி சுவிசேஷம் சொல்லுவார்கள்!!
இதற்காகவே தேவன் இந்த எளிய மக்களிடம் வேற்று மொழி (அந்நிய பாஷை) பேசுவது மற்றும் வேற்று மொழியை வியாக்கியானம் (அர்த்தம் சொல்லுவது) செய்யும் வரத்தை தனது வல்லமை ஆவியினால் கொடுத்தார்!!
இந்த வரம் ஏதோ அப்போஸ்தலர்கள் அல்லது அன்றைய சபையார் எல்லாரும் சேர்ந்து சபையில் கூச்சிலட கொடுக்கப்படவில்லை, மாறாக சத்தியத்தை அவர்களுக்கு தெரியாத மொழிகளில் (மனிதர்கள் பேசும் / அர்த்தம் உள்ள வார்த்தைகள் கொண்ட மொழி) சொல்லவும், அல்லது அவர்களுக்கு தெரியாத வேற்று மொழியை புரிந்துகொண்டு அதற்கு பதில் கொடுக்கவே கொடுக்கப்பட்டது!!
எடுத்துக்காட்டாக, தோமா, இந்தியாவில் கேரளாவில் வந்து இறங்கின போது அவர் ஒன்றும் மலையாலத்தை கற்று தேர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இங்கு வந்து கேரளாவில் பேசுவதற்கு தேவன் தாமே அவருக்கு அந்த பாஷையை பேசவோ புரிந்துக்கொள்ளவோ வரமாக தந்திருப்பார்!!
அந்நிய பாஷையின் முதல் அனுபவம்:
அப்போஸ்தலர் 2:4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
இப்படி உலகில் எங்காவது ஒரு இடத்தில் பேசப்படும் அர்த்தமுள்ள பாஷையில், அதை கேட்கும் மக்களுக்கு அது புரிகிற பாஷையாக இருப்பது தான் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்நியபாஷை பேசும் வரம்!! இந்த வரம் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் தேவை பட்டது!!
ஆனால் இன்று சபைகளில் அந்நிய பாஷை என்று சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வருவது உண்மையிலேயே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி ஆவியின் வரமா? இல்லை என்று வசனங்கள் சொல்லுகிறதே!!
தெளிவில்லாத வார்த்தைகளால் போடப்படும் கூச்சல் சத்தத்தை தான் இன்று அந்நிய பாஷை என்று சொல்லி ஒரு மாயையில் இருக்கிறார்கள் சபையார்!! சில இடங்களில் இதை பேச பயிற்சியும் அளிக்கப்படுகிறது (இதற்கு நானே சாட்சி)!! வேதம் சொல்லுகிறதே, யாருக்கும் புரியாதது போல், தெளிவில்லாமல் பேசினார் அது ஆகாயத்தில் பேசுகிறது போல், அதாவது செவியின் வழியாக உள்ளே செல்லாமல், ஒன்றும் புரியாததினால் அது தலைக்கு மேல் செல்லும் வார்த்தைகளாக இருக்கிறதே!!
2. 1 கொரிந்தியர் 14:27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
இதுவும் சபையில் நடக்காத ஒன்று!! போதகர் மேடையிலிருந்தப்படியே கத்துவார், "எல்லாரும், எல்லாரும், இப்போ அந்நிய பாஷையில் தேவனை துதியுங்கள், ஒருவர் விடாமல், எல்லாரும் சேர்ந்து தேவன் தரும் அந்த அந்நிய பாஷையை பயன்ப்படுத்துங்கள்" என்று!! எப்படி வேதத்திற்கு முறனான ஒரு செயல்!! ஒருவர், இரண்டு பேர் அல்லது அதிகப்படியாக மூன்று பேர் மட்டுமே பேசி, அதுவும் அவர்கள் பேசுவதற்கு அர்த்தத்தையும் சொல்ல வேண்டுமாம்!! இது இன்றைய சபைகளில் நடக்கிறதா!! இல்லையே, ஏனென்றால் அந்நிய பாஷை வரம் என்பதை ஏதோ விச்சித்திரமான உச்சரிப்பில் பேசுவது என்று நினைத்திருக்கிறார்கள் இன்றைய போதகர்களும் சரி, சபையாரும் சரி!! இப்படி பேசுகிற முறை சுமார் 200 ஆண்டுகளுக்குள் தான் வந்திருக்கிறது, அதற்கு முன் இருந்த கத்தோலிக்கர்கள் அல்லது ப்ரொடஸ்டண்ட் இப்படி எல்லாம் பேசியதாக இந்த செய்தியும் இல்லையே!!
1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
பெந்தகோஸ்தே சபைகளினால் அந்நிய பாஷை என்கிற மாயையை உற்சாகப்படுத்த இந்த வசனம் தான் பயன்ப்படுகிறது!! அதாவது, அந்நிய பாஷையில் தேவனோடு பேசினால் அது பிசாசுக்கு (சாத்தானுக்கு) புரியாதாம்!! ஆகவே நீங்கள் அந்நிய பாஷையில் பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள் என்றும், ஆவியை பெற்றுக்கொண்டதின் முதல் அடையாளமே அந்நியபாஷை பேசுவதாம்!!
இவர்களின் கூற்றுப்படி பாவம் தேவன், தன் பிள்ளைகளின் ஜெபத்தை சாத்தானிடத்தில் போய் சேராதப்படிக்கு அவருக்கு மாத்திரமே புரிகிற பாஷையை தருகிறாராம்!! அந்த ஒரு குறிப்பிட்ட பாஷையில் பேசினால் தான் அது சாத்தானுக்கு விளங்காதாம்!! அதாவது, இவர்கள் சாத்தானுக்கு அத்துனை முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தானே அர்த்தம்!! தேவனை இத்துனை கீழாக எடைப்போட்டிருக்கிறார்கள் இந்த கூட்டனியர்!! ஆனால் தேவனோ,
லூக்கா 16:15.............. தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்;........
தேவனிடத்தில் பேச அந்நியபாஷை தேவையில்லை, நம் இருதயத்தில் இருக்கும் ஜெபங்களையே அவர் தெரிந்துக்கொள்கிறார்!! சரி இந்த பெந்தகோஸ்தே சபையினர் வரும் முன் இருந்த எந்த ஒரு சந்தத்தியும் பிசாசுக்கு ஜெபம் கேட்டு விடக்கூடாது என்று இது வரை ஜெபித்ததாக இல்லையே!! யூதர்களானாலும் சரி, கிறிஸ்து இயேசு தன் பிதாவிடத்தில் ஜெபித்த போதும் சரி, அதன் பின் வந்த ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரொடஸ்டண்ட் சபைகளானாலும் சரி, யாரும் இப்படி அந்நிய பாஷை பேசி தேவனிடத்தில் ஜெபித்து கிடையாதே!! இப்போ தான் அவர்களின் சபைகளிருந்து கூட்டங்கள் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக, அந்நியபாஷை என்கிறா மாயையில் எல்லா சபைகளும் சிக்கி இருக்கிறது!!
மேலும் இந்த வசனம் சாத்தானை குறித்து எதுவும் சொல்லுவதில்லையே, மாறாக அந்நிய பாஷையில் ஜெபிப்பவன் மனுஷனிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான் என்று தானே இருக்கிறாது, அப்படி என்றால் இதில் சாத்தான் எங்கே வந்து விட்டான்!!
அப்படி என்றால் இந்த வசனம் என்ன தான் சொல்லுகிறது!!
1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
இதன் விளக்கம் 5ம் வசனத்தில் இருக்கிறது!!
இப்ப தமிழ் மாத்திரமே தெரிந்த ஒரு கூட்டம் கூடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்!! அங்கே வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து ஆங்கிலத்திலேயே பிரசங்கத்தை வைக்கிறார் என்றால், அங்கே கூடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அவர் பேசுவது தான் அந்நிய பாஷை!! அவர் ஆங்கிலத்தில் பேசுவது, தமிழ் மாத்திரமே புரியும் மக்களுக்கு வியப்பாக இருக்கும், இப்படி இருக்க, அவர்கள் நினைப்பது என்னவென்றால் இவர் எங்களிடத்தில் எதையும் சொல்லாமல், தேவனிடத்தில் தான் பேசுகிறான், ஏனென்றால் தேவனுக்கு மாத்திரமே இப்பொழுது, இந்த கூட்டத்தில் இவன் பேசும் பாஷை புரியும், நமக்கு யாருக்கும் புரியவில்லையே என்று!! அவன் பேசுவது என்னவென்று நாம் யாரும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் (எங்களிடத்தில்) பேசாமல், தேவனிடத்தில் (நமக்கு புரியவில்லை, ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எல்லாம் புரியுமே) பேசுகிறான்!! இதில் சாத்தான் எங்கே இருந்து வந்தான் என்று தான் புரியவில்லை!! மனிதனுக்கு புரியவில்லை ஆனால் தேவனுக்கு புரியுது என்று தான் வசனம் சொல்லுகிறது, இதையே ஜோடிச்சு, தேவனுக்கு மாத்திரமே புரியத்தான் அந்நிய பாஷை என்று சொல்லி அந்நிய பாஷை என்கிற ஒரு பெருத்த மாயையை கொண்டு வந்திருக்கிறார்கள்!!
அந்நிய பாஷை பேசுகிறவர்கள், மற்றவர்களும் புரிந்துக்கொள்ளும்படி அர்த்தத்தை சொல்லும்படியாக சொல்லப்பட்டிருக்கிறது!! சபையில் இது நடக்கிறதா என்றால் இல்லையே!! தேவனின் வார்த்தையை மீறுகிறார்களே!! அந்நிய பாஷை தேவன் புரிந்துக்கொள்ளுகிறார் என்றும், சாத்தான் புரிந்துக்கொள்ளமாட்டான் என்று அல்ல, மாறாக, புரியாத ஒரு பாஷையில் ஒருவர் பிரசங்கம் செய்யும் போது, அதன் அர்த்தத்தை சொன்னால் தான் பேசியது பிரயோஜனமாக இருக்கும் என்று தான் இந்த வசனங்கள் சொல்லுகிறது!!
பவுல் தெளிவாக சொல்லுகிறார், அந்நியபாஷையில் (வேற்று மொழியில்) பேசி அது சபையாருக்கு புரியாமல் போனால் அதினால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்று!! இன்று சபைகளில் சராமாரியாக வாய்க்கு வந்தபடி ஒருவர் இருவர் அல்ல, சபை முழுவதுமாக யாருக்கும் பிரயோஜனமில்லாதப்படி பேசுகிறார்களே!! இது உண்மையிலேயே அந்நிய பாஷை தானா!! யாரை கவர்வதற்கு இத்தகைய மாய்மாலம் நடக்கிறது!! பவுலாவது உலகத்தில் பேசப்படும் ஒரு மொழியை அந்நிய பாஷை என்கிறார், ஆனால் நம் சபையார்களோ, உலகத்தில் எங்கேயும் பேசாத சில வார்த்தைகலை மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள், என்ன பிரயோஜனம்!! வெறும் மேட்டிமையே அன்றி வேறு ஒன்றும் இல்லை!! ஊதப்படும் வாத்தியங்கள் கூட சரியான தொனி எழுப்பாவிட்டால் அது எழுப்பும் அந்த தொனி பிரயோஜனம் இல்லாததாக இருக்கும்!! போர் வரும் போது, போருக்குண்டான எக்காளம் தொனிக்காமல், சமபந்தமே இல்லாத ஒரு தொனி தொனித்தால், எப்படி வீரர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள், என்கிறார் பவுல்!!
அப்படியே, தெளிவில்லாத அர்த்தமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தால், என்ன பேசப்பட்டது என்று எப்படி விளங்கும்!! இன்று சபைகளில் அந்நிய பாஷை என்று சொல்லிக்கொண்டு, ஒருவர் அல்லது இருவர் என்று பேசாமல், முழு சபையே பேசுகிறதே, அதினால் யாருக்கு என்ன பிரயோஜனம்!! பக்கத்து இருக்கையில் இருப்பவருக்கு கூட புரியாதப்படி ஒருவர் பேசினால், அந்த வார்த்தையினால் என்ன பிரயோஜனம், என்ன பக்தி உண்டாகும்!!?? அது ஏதோ தலைக்கு மேல் சென்ற வார்த்தைகள் போல் இருக்குமாம்!!
10. உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
உலகில் பேசப்படும் எல்லா பாஷைகளுக்கும் அர்த்தம் இருக்கிறதே, அல்லது அர்த்தமுள்ளதை மாத்திரமே பாஷை என்கிறோமே, அப்படி இருக்க, அர்த்தமற்ற ஒரு பாஷையில் சபை முழுவதும் கூச்சலிட்டு, நாங்கள் பிசாசுக்கு தெரியாமல் தேவன் கொடுத்த அந்நிய பாஷை வரத்தில் அவருடன் பேசுகிறோம் என்று சொல்லுவது சரியாகுமா!!?? தேவனிடத்தில் பேசுவதற்கு அந்நிய பாஷை என்று யார் சொன்னது!! இல்லையே, அப்போஸ்தலர்களுக்கும் ஆதி சபையாருக்கும் பல மொழி பேசுகிற மனிதர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதற்காக தான் இந்த வரம் தரப்பட்டது!! அதிகம் கல்லாத அப்போஸ்தலர்களும், சீஷர்களுக்கும் கொரிந்து போல் வியாபார பட்டனத்தில் வரும் பல பாஷைக்காரர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதற்கே தேவன் அவர்களுக்கு பல பாஷைகளை பேசவோ, அல்லது மொழிப்பெயர்த்து அர்த்தத்தை சொல்லும் வரத்தை தந்தார்!! இன்று வெளிநாட்டிலிருந்து யாராவது ஊழியக்காரர் வந்து பொது மேடையில் பிரசங்கம் செய்தால் மொழிவாரியாக மொழிப்பெயர்க்கிறார்களே, அது போல் தான்!! இன்று பல மொழிகளை கற்று அதை செய்கிறார்கள், அன்று இருந்த நேரத்திலும், அவர்களின் கற்கும் திரனும் குறைவாக இருந்தப்படியே, தேவன் இப்படி பல மொழிகளில் பேசுவதை வரமாக கொடுத்தார்!!
வரம் என்றாலே கேட்டு பெற்றுக்கொள்வது கிடையாது!! தேவன் தாமாகவே அவர்களுக்கு தந்தார்!! அப். 2ம் அதிகாரத்தில் அவர்கள் ஒன்று கூடி ஜெபித்துக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மேல் வந்த ஆவியும், பிளந்த நாவுகளில் அக்கினி இருப்பது போன்று பார்த்தார்கள், இன்று எங்காவது இப்படி நடக்கிறதா, இல்லையே!! தொடர்ந்து பேதுரு எழும்பி பேசும் போது சுமார் 17 பாஷைக்காரர்களுக்கு அவர் அவர் ஜென்மபாஷையில் பேசுவது போல் கேட்டார்களே, அது என்ன பேதுரு தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொண்டதா, இல்லையே!!
நம் தேசத்தின் பாராளுமன்றத்தில் ஒருவர் ஒரு மொழியில் பேசினால் அது அனைவருக்கும் அவர் அவர் பாஷையில் கேட்குமாம், ஆனால் இதற்கு விஞானம் தேவைப்படுகிறது!! இதையே அன்று தேவன் தந்தார், இலவசமாக, சிலருக்கு, அவரின் சித்தத்தின்படியே!! ஆனால் இன்று பவர் மினிஸ்ட்ரி என்கிற பெயரில் அந்நிய பாஷை என்கிற ஒரு மாயையை கற்று தரப்படுகிறது, இதற்கு நான் நேரடி சாட்சி!!
1 கொரிந்தியர் 14:11. ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். 12. நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
என்ன பேசுகிறோம் என்கிறதை அறியாமல் பேசிக்கொண்டு இருப்பதால், எனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு நான் அந்நியனாகயிருப்பேன் என்கிறார் பவுல், அப்படியே எனக்கு முன்னால் ஒருவன் புரியாத ஒரு சத்தத்தை எழுப்பிக்கொண்டு இருந்தால், அவன் எனக்கு அந்நியனாயிருப்பான் என்கிறார் பவுல்!! முன்னமே சொன்னது போல் அந்நியபாஷை என்பது சபைக்கு பக்திவிருத்தி உண்டாகத்ததாக இல்லை, ஆகவே பவுல் சொல்லுகிறார், சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்ப்படியான ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள் என்று!! 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் 9 வரங்களை பற்றி பேசப்பட்டிருக்கிறது, அவை அனைத்துமே அன்று சபையின் வளர்ச்சிக்கு தேவையாக இருந்தது, ஆகவே தேவனால் கொடுக்கப்பட்டது, நிறைவான வேதப்புத்தகம் எழுதப்பட்டு அதுவும் இப்பொழுது பேசப்படுகிற ஏறகுறைய அனைத்து மொழிகளிலும் வேதம் வந்துவிட்டதால் இனியும் அந்நியபாஷை என்பது தேவையற்றது, அதுவும் இன்றைய பெந்தகோஸ்தே சபைகளில் பேசப்படுவது வெறும் சத்தமே, அதற்கு அர்த்தமும் கிடையாது, அது பிரயோஜனமற்றது!!
அந்நாட்களில் கொரிந்துப்பட்டினம் வியாபார ஸ்தலமாக இருந்ததினால் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பல பாஷைக்காரர்கள் அங்கே வருவார்கள்!! அவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல அவர்களின் (வருபவர்களின்) பாஷை தேவைப்பட்டது!! அது மாத்திரம் அல்ல, அப்படியே இன்னொருவர் தீர்க்கதரிசினத்தை அவரின் சொந்த பாஷையில் சொல்லிக்கொண்டு இருந்தாலோ, அதை மொழிப்பெயர்த்து அர்த்தம் சொல்லும் வரத்தையும் தேவனிடத்தில் கேட்க்க சொல்லுகிறார் பவுல்!!
அந்நிய பாஷை என்னவென்று நாம் புரிந்துக்கொள்ள சிறந்த எடுத்துக்காட்டு தோமா தான்!! கேரளாவில் வந்தவுடன் அவர் பேசுவதை மலையால மக்கள் புரிந்துக்கொள்ளும்படியாக, தோமா ஒன்று மலையாலத்தில் பேசியிருக்க வேண்டும், அல்லது மலையாலம் பேசிய மக்கள் தோமா பேசியதை புரிந்துக்கொண்டிருக்க வேண்டும்!! இது தான் நடந்தது!! ஆனால் இது ஆதி சபை, வேதம் கைய்யில் வராத நாட்கள்!! அதன் பின் பல ஊழியர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள், அவர்கள் தங்களுடன் செல்லும் ஊர்களுக்கு அந்த ஊர் மொழிப்பேச தெரிந்தவர்களையும், இவர்கள் பேசும் ஆங்கிலத்தை புரிந்துக்கொள்பவர்களை கூட வைத்துக்கொள்வார்கள்!! ஏனென்றால் அந்நிய பாஷையின் வரம் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன், நின்றுபோனது!! உலகில் உள்ள எந்த பாஷையும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் கற்றுக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது, உலகம் சுருங்கி விட்டது, இனியும் அந்நிய பாஷை என்கிற ஒரு வரம் தேவையில்லாமல் போனது!!
ஆனால் சபையில் பேசப்படுவது அந்நிய பாஷை என்றால் தேவனோடு பேசுவது என்கிற ஒரு நினைப்பில் மாத்திரமே, இதற்கு எந்த ஒரு மூகாந்திரமும் இல்லை!! தேவன் எல்லா மொழிகளையும் புரிந்துக்கொள்ளும் சர்வவல்லமையுள்ளவர், அவரே எல்லாருக்கும் மொழிகளை தந்திருக்கிறார், அவரிடம் பேசுவதற்கு நம் தாய்மொழியோ, ஏன் நம் இருதயத்தில் பேசினாலே போதும், அவர் தெரிந்துக்கொள்வார்!! இதை விட்டு விட்டு ஜெபிக்கிறோம், தேவனை அந்நிய பாஷையில் ஆராதிக்கிறோம் என்று கூச்சலிட்டு பேசுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்!!
அருமையான பதிவு. இதைவிடத் தெளிவாக அந்நிய பாஷை குறித்து விளக்க இயலாது. இதை ஒரு கைப்பிரதியாக அச்சிட பிரயாசப்படலாம். நானும் ஏறத்தாழ மூன்றரை வருட காலம் இந்த 'அந்நிய பாஷை'யை 'உளறி'க்கொண்டிருந்தேன். இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் பொதுவாக இந்த 'அந்நிய பாஷை' பேசுபவர்கள் சற்று ஆணவமாக இருப்பார்கள். இந்த 'வரம்' இல்லாதவர்களை ஒரு படி கீழேதான் மதிப்பார்கள். இந்த உளையான சேற்றிலிருந்து என்னை மீட்டெடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஆக, இன்று உளறிக்கொட்டும் இந்த 'அந்நியபாஷை' வேதத்துக்குப் புறம்பானது என விளங்கிக்கொள்ளூம் பட்சத்தில் தற்போது இதை பேசும், அல்லது இதை அங்கீகரிக்கும் எந்த நபரையும், சபையையும் பிசாசின் பிள்ளைகள், துருபதேசக் கூட்டம், அந்திகிறிஸ்துவின் ஆவியுடையவர்கள் என்று முடிவெடுத்து இவர்களைக் கண்டித்து உணர்த்தாவிட்டாலும் குறைந்தபட்சம் இவர்களிடமிருந்து விலகியாவது இருக்கலாம்.
ஆனால் இதை வாசிக்கும் பெரும்பாலோர் உள்ளத்தில் இதை உண்ர்ந்து கொண்டாலும் சாதாரணமாக வெளியே வரமாட்டார்கள்.
1 கொரிந்தியர் 14:14. என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 15. இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
ஆவியின் வரமான அந்நியபாஷை பேசப்படும் போது அது பேசுபவர் தன் சொந்த கருத்தில் அல்ல மாறாக ஆவியின் வல்லமையில் நிறம்பி அங்கே நின்று இவன் பேசுவதை கேட்ப்பவர்களுக்கு புரியும்ப்படியாக, அவனுக்கு கிடைத்த பாஷை பேசுகிறான்!! ஆவியினால் கிடைக்க்கும் மொழியில் இவன் கருத்து இருக்காதாம், இவன் நினைத்ததை அல்ல மாறாக கேட்பவர்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு பேசுவான்!!! ஆவியில் விண்ணப்பம்பண்ணுவேன் (என்றால் அந்நிய பாஷையில்), இன்னும் என் சொந்த பாஷையில் கருத்தோடு ஜெபம் பண்ணுவேன், பாடலும் பாடுவேன் என்கிறார் பவுல்!!
16. இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
கல்லாதவன் என்பவன் இது போன்ற பாஷைகளை அறியாதவனாகிறான், அவன் அந்நிய பாஷையில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு ஆமென் என்று சொல்லுவேண்டுமென்றால் பேசப்படுகிறதை அறியவேண்டுமே, அர்த்தம் புரிந்துக்கொள்ள வேன்டுமே!! இன்று சபைகளில் அந்நிய பாஷை என்கிற பெயரில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு யார் ஆமென் என்று சொல்லுகிறார்கள்!! யாரும் இல்லையே!! திடீர் என்று பாஸ்டர் சொல்லுவார், இப்பொழுது எல்லோரும் சத்தமாக தேவன் (!!) கொடுக்கும் பாஷையில் பேசுங்கள், என்றவுடன் சபை முழுவதும் ஒரு கூச்சல் சத்தம் உண்டாகும், அவர் அவர் ஏதோ பரத்திலிருந்து பாஷை இறங்கி வருவது போல் பேச ஆரம்பிப்பார்கள், கத்துவார்கள், கூச்சலிடுவார்கள், ஒரு சில சபையில் ஒரு விதமான குவளை சத்தத்துடனும் அந்நிய பாஷையை கேட்ட அனுபவம் இருக்கிறது!! பாஸ்டர் திடீர் என்று நிறுத்துவார், உடனே ஒருசேராக எல்லாரும் நிறுத்துவார்கள், அதன் பின் அவர்களுக்கு புரியும் பாஷையில், அனைவருக்கும் தெளிவாக விளங்கும்ப்படியாக பாஸ்டர் ஜெபிப்பார், அதன் பின் தான் எல்லாரும் ஆமென் சொல்லுவார்கள்!! ஆக நீ பேசும் பாஷை புரியாதவன் எப்படி தான் ஆமென் சொல்லுவான், சொல்ல மாட்டான்!!
17. நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
பார்க்கும் போது ஏதோ மிகவும் பக்தியில் இருப்பவர்கள் போல் ஏதோ ஒரு சத்தத்தமிட்டு கொண்டு தான் இருப்பார்கள், ஆனால் அதினால் யாருக்காவது பக்திவிருத்தியாகுமா!! ஆகாதே!! அதை தான் பவுல் எழுதுகிறார், ஆனால் அவர் சொன்னது அன்று உண்மையாகவே உள்ள ஒரு பாஷையை குறித்து, இன்று சபைகளில் பேசப்படும் பாஷையகளை குறித்து அல்ல!! ஏனென்றால் இன்று சபைகள் பேசப்படுவது அந்நிய பாஷை கிடையாது, அநியாய பாஷையே!!
18. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
இங்கே பவுல் சொல்லுவது என்னமோ அவர் அதிக நேரம் அந்நிய பாஷை பேசுகிறார் என்று அல்ல, மாறாக அதிக எண்ணிக்கையில் பாஷைகள் தெரிந்தவராக இருக்கிறாராம்!! பவுல் அதிகமாக பிரயானம் செய்து அநேக பாஷை பேசும் மக்களிடம் சுவிசேஷம் சொல்லியிருக்கிறார், ஆகவே அவருக்கு அதிகமாக பாஷைகள் தேவைப்பட்டது!! தேவனால் அப்போஸ்தலன் என்று நியமிக்கப்பட பவுல் (இன்றைய சுயவிளம்பர அப்போஸ்தலர்கள் போல் அல்ல) அவனுக்கு இப்படியாக அதிகமாக பாஷைகள் தெரிந்துக்கொள்ளுமபடியான வரத்தினால் நிறப்பினார்!! இதை தான் இங்கே பவுல் சொல்லுகிறார்!! ஆனால் சபைகளில் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா, பவுல் அதிக நேரம் அல்லது எப்பவுமே அந்நிய பாஷை பேசிக்கொண்டிருந்தது போல், நீங்களும் பேச வேண்டும் என்று சொல்லுவார்கள், அதை நம்பி, போகும் போது, வரும் போது, நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திரும்பி பார்த்துக்கிட்டு அந்நிய பாஷை என்று எதையோ பேசிக்கொண்டிருக்கும் பலரை எனக்கு தெரியும்!! சிலக்காலம் இது போன்ற மூடத்தனத்தில் நானும் பங்குக்கொண்டு இருந்ததை நினைத்து பார்க்கிறேன், ஆனால் தேவன் அதை எனக்கு ஒரு அனுபவமாக தந்தார் என்பதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்!!
19. அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
எத்துனையோ பாஷைகளை தெரிந்து வைத்திருந்த பவுல் அதை சுயவிளம்பரத்திற்காக பேசாமல் இருந்தார், ஏனென்றால் அந்நியபாஷையில் முழு ஆராதனையை நடத்தினாலும், அது அங்கே கூடியிருப்பவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்று அவருக்கு தெரியும்!! ஆகவே அனைவரும் புரிந்துக்கொள்ளும் படியாகவே அவர் அதிகமாக பேசினார் என்று அவரே சொல்லுகிறார்!! ஆனால் சபைகளில் இன்று இதற்கு விரோதமாக தான் சொல்லப்பட்டும் செய்யப்பட்டும் வருகிறது!! அதிகமாக அந்நிய பாஷை (!!) பேசுவதை ஊக்கப்படுத்துகிறார்கள்!! யாருக்கு பிரயோஜனம் என்று தான் தெரியவில்லை!!
20. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் என்கிறார் பவுல்!! ஏனென்றால் தெளிந்த புத்தியுள்ளவன் இப்படி பாஷைகளை பேசுகிறேன் என்று வாய்க்கு வந்ததை பேசமாட்டானே!! குழந்தைகள் தெளிவாக பேசும் முன் பலவிதமான ஓசை எழுப்புகிறது, அது போல் இருக்க வேண்டாம் என்கிறார்!! குழந்தைகளை போல் வஞ்சகம் இல்லாமல் இருங்கள், ஆனால் பேசுவதில் (பாஷைகளை) புத்திசாலியாக, பிறர் புரிந்துக்கொள்ளும்படியே பேசுங்களேன்!! பிரயோஜனமாக இருக்குமே!!
1 கொரிந்தியர் 14:21. மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
ஏசாயா 28:11ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வசனத்தை தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது!! இங்கே நிறைவேறியது!! எத்துனை பாஷைகளை கொண்டு தேவன் அந்த யூத ஜனங்களுக்கு முன் பேச வைத்திருந்தாலும் அவர்கள் மாறவில்லையே!! கிறிஸ்து இயேசுவின் அற்புதங்களை கண்டவர்கள் மாறவில்லை, இந்த சீஷர்கள் மூலமாக பல விதமான பாஷைகளில் பேச கேட்டும் அவர்கள் தேவனின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்காமல் போனார்களே!!
சபைகளுக்குள் பேசப்படும் அந்நிய பாஷை எந்த விதத்திலும் விசுவாசத்தின் அடையாளம் இல்லையாம், மாறாக அவிசுவாசிகளுக்கு முன் பேசப்படும் போது, அவர்கள் இப்படி பட்ட ஒரு வரத்தை கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார்கள்!! சொந்த பாஷையை தவிர வேறு எந்த பாஷையும் கல்லாதாவர்கள் எப்படி இப்படி பல பாஷைகளில் பேசுகிறார்களோ என்று அவர்களுக்கு அதன் மூலம் விசுவாசம் வந்திருக்கலாம்!! ஆனால் சபைக்குள் அனைவருக்கும் தெரியும், அந்நிய பாஷை என்பது தேவனின் வரமே, அதில் ஒன்றும் ஆச்சாரியம் அல்லவே என்று!! ஆக அந்நியபாஷை அன்று பேசப்பட்டதும், அந்நியபாஷை என்று எண்ணி இன்று பேசப்படுவது எந்த விதத்திலும் விசுவாசைகளுக்கானதோ அல்லது விசுவாசத்திற்கான அடையாளம் கிடையாது!! அதே போல் தீர்க்கதரிசனம் (வேலை கிடைக்கும், சுனாமி வரும், வெளிநாடு போவாய், வீடு வாங்குவாய் போன்றவைகள் அல்ல) என்பது தான் விசுவாசிகளுக்கு அடையாளமாம்!! ஆனால் இன்றைய சபைகள் இந்த வசனத்துக்கு நேர் மாறாக நடப்பதை நாம் நன்கு அறிவோம்!!
23. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
எத்துனை பெரிய தீர்க்கதரிசனம் பவுல் எழுதியிருப்பது!! இன்று சபைகளுக்குள் இப்படி அந்நியபாஷை என்கிறா பெயரில் கூச்சலும் சத்தமும் போட்டுக்கொண்டு இருக்கும் போது, வேற்று மதத்தை சேர்ந்த அல்லது மத நம்பிக்கை இல்லாதவரே வந்தால், இவர்கள் போடும் கூச்சலையும் சத்தத்தையும் கேட்டு, இவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று தான் கேட்பார்கள்!! அந்நிய பாஷை என்று நினைத்து அதை எந்நேரமும் பேசிக்கொண்டு இருப்பவர்களின் வேதத்திலும் நிச்சயமாகவே இந்த வசனம் இருக்கிறது, ஆனால் பழகி போன ஒன்றை சுலபமாக உதறி தள்ளிவிட மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் வேத வசனத்தை விட அவர்கள் பாஸ்டர்மார்கள் சொல்லுவது தான் அதிக சரி என்றே நினைக்கிறார்கள்!! சரி பாஸ்டர்மார்களாவது இந்த வசனத்தை படித்து பார்க்கலாமே!!
1 கொரிந்தியர் 14:27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
இந்த வசனத்தை முதலில் அன்று பவுல் இருந்த காலத்தில் உண்மையான அந்நிய பாஷை வரத்தை வைத்து பார்ப்போம்!! அன்று இருந்த சபையில் பல விதமான பாஷைக்காரர்கள் கொரிந்துப்பட்டனத்திற்கு வியாபரத்தின் நிமித்தம் வருவார்கள்!! அப்படி இருக்க, அநேக விதமான பாஷைகளை பேசும் வரம் பெற்று இருந்த சபையார் இருந்தனர், ஆனால் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு உண்டான பாஷை வரத்தை வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் வருகிறவர் இவர்களை பைத்தியம் என்று நினைத்துக்கொள்வார்களே, ஆகவே தான் பவுல் சொல்லுகிறார், இரண்டு பேர் அந்நிய பாஷையில் பேசுங்கள், அதிகபட்சமாக மூன்று பேர் மட்டும் பேசலாம் என்கிற ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்!! இந்த மூன்று பேரும் ஒரே நேரத்தில் பேசாமல், ஒருவர் பின் ஒருவர் பேசவும், மற்றொருவர் அதற்கு அர்த்தம் சொல்லவும் வேண்டும் என்கிறார்!! ஏனென்றால் இருவர் அல்லது மூவர் ஒரு சேர அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாஷை வரத்தை வைத்து பேச ஆரம்பித்தால் வருகிற புதியவர்கள் ஓடி போய்விடுவார்கள்!!
ஆனால் இன்று சபைகளில் அந்நிய பாஷை என்கிற பெயரில் பவுலின் இந்த வார்த்தைகளும் மீறப்படுகிறது!! பாஸ்டரின் கட்டளை கிடைத்தவுடன் ஒன்றாக பேச தொடங்கி, புரியாத ஒன்றை அனைவரும் சேர்ந்து பல விதமான சத்தத்துடன் பேசுவார்கள், பாஸ்டர் நிறுத்த சொல்லும் போது நிறுத்தி விடுவார்கள்!! அடுத்து, ஒருவரும் அர்த்தத்தை சொல்ல மாட்டார்கள்!! இது தான் சபைகளில் இன்றைய அந்நிய பாஷை!! அர்த்தம் இருந்தால் தானே சொல்லுவதற்கு!!
அடுத்து, சபையில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் இப்படி பேசவே வேண்டாம் என்கிறார் பவுல்!! உனக்கு அந்நிய பாஷை வரம் இருக்கிறது என்றால் நீ தேவனிடத்தில் பேசிக்கொள், ஏனென்றால் தேவனிடத்தில் பேசும் போது பெருமை பாராட்ட முடியாதே!! ஆனால் இதே சபைகளில் பேசும் போது, மற்ற மக்களுக்கு முன் அதை குறித்து பெருமைப்பட முடியுமே!! இன்றைய சபைகள் இதையும் பின்பற்றுவது கிடையாது!! சுமார் 2 வருடங்கள் நானுமே இந்த அந்நிய பாஷை என்கிற சேற்றில் சிக்கி தத்தளித்துக்கொண்டு இருந்தேன்!! இதை கற்றுக்கொண்ட இடம் மறைந்த டீஜீஎஸின் பவர் மினிஸ்ட்ரியில், கற்றுக்கொடுத்தவர்கள் "ஆவிக்குறிய" போதகர்கள்!! கற்று கொண்ட விதம் இங்கே சொல்ல விரும்பவில்லை!! கத்தோலிக்கம் தொடங்கி இப்படி பட்ட சகல அனுபவங்களை தந்து தேவன் என்னை நடத்தி வந்திருக்கிறார்!!
இன்று சபைகளில் எல்லாரும் சேர்ந்து அந்நிய பாஷை (அநியாய பாஷை) பேசுவதும், சேர்ந்தே நிறுத்துவதும், இதுபோக தனியாகவும் பேசிக்கொள்வோரும் இருக்கிறார்கள்!! கேட்டால் தேவனிடத்தில் பேசுகிறோம் என்கிறார்கள்!! இவை எல்லாவற்றிலும் இருந்து விடுதலை நாள் சமீபமாக இருக்கிறது!! கிறிஸ்துவின் ராஜியத்தில் அனைத்தும் வெளிச்சமாக இருக்கும், இருள் நீங்கி விடும்!! இப்ப புரிந்துக்கொள்ளாதவர்கள், தேவனின் ராஜியத்தில் புரிந்துக்கொள்வார்கள்!!
மீண்டுமாக:
1. அந்நிய பாஷை சபையின் தொடக்க காலத்தில் பல வித பாஷைக்காரர்களிலிடத்தில் அதிகம் கல்லாத அப்போஸ்தலர்கள் அன்றைய சீஷர்கள் சுவிசேஷம் சொல்லும்படியாக கொடுக்கபட்ட உலகத்தில் அர்த்தத்துடன் பேசப்படும் மொழியாகும்!!
2. அப்போஸ்தலர்களுக்கு உலகமெங்கும் சென்று நற்செய்தி சொல்லும் பணியை கிறிஸ்து இயேசு கட்டளையிட்டுருந்தார், அவர்களுக்கு இன்று போல் அன்று ஒரு பாஷைய கற்று தேர்ந்து அதன் பின் போய் பிரசங்கிக்கும் அளவிற்கு நேரமும் வசதிகளும் இல்லாமல் இருந்தது!! ஆகவே இவர்கள் போகும் புதிய தேசங்களில் ஒன்று இவர்களுக்கு அந்த தேசத்தின் பாஷை பேசும் வரம் கிடைத்தது, அல்லது இவர்கள் பேசுவது அந்த வேற்று பாஷைக்காரர்களுக்கு புரிந்தது!!
3. வேற்று பாஷையின் வரம் இருந்தாலும் அதை சபையில் அனைவரும் சேர்ந்து பேசினால் ஒருவனுக்கும் புரியாது, வருகிற புதிய மனிதன், தேவனை குறித்தோ கிறிஸ்து இயேசுவை குறித்து அறியாதவன் இவர்களை பைத்தியம் என்று நினைப்பான் என்பதர்காக இருவர் அல்லது மூவர் வரையில் சபையில் பேசவேண்டும் என்கிறா பவுல் கட்டளை இன்றை சபைகளில் மீறப்படுகிறதே!!