யோவேல் 2:28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
அப்போஸ்தலர் 2:17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
இந்த வசனங்கள் நிறைவேறி விட்டதா, அல்லது நிறைவேறுமா!?
நிறைவேறி விட்டது என்று சொல்லுபவர்களிடம், அப்படி என்றால் மாம்சமான யாவர்மேலும் ஆவி ஊற்றப்பட்டாகிவிட்டதா?? ஆவியை பெற்ற அனைவரும் இன்று தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்களா!? யாவர்மேலும் ஆவி ஊற்றப்பட்டு விட்டது என்றால் இத்துனை மதங்களும் மார்க்கங்களும் எப்படி??
ஆனால் இந்த வசனத்தின் ஒரு பகுதியான என்னுடைய ஊழியர்கள் மேல் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னது பெந்தகோஸ்தே நாளில் நிறைவேறியது!! அன்று தான் முதல் முதலில் தேவனின் ஆவி ஊழியர்கள் மீது ஊற்றப்பட்டது, ஊற்றப்பட்ட ஆவி மீண்டும் மேலே போய்விடவில்லை, அதை வாரம் தவறாமல் "இப்போ வாரும், இறங்கி வாரும்" என்று பாட்டு பாடி கூப்பிடுவதற்கு!! கொடுக்கப்பட்ட தேவ ஆவி, அன்று முதல் தொடர்ந்து கிறிஸ்துவின் சீஷர்களுக்கு அது கொடுக்கப்பட்டு வருகிறது!! இந்த ஆவியை ஒரு ஆள் என்று எடுத்துக்கொண்டதால் இத்துனை குழப்பங்கள்!! அதுவே ஆவி என்பது தேவனின் வல்லமை அல்லது சிந்தை என்று எடுத்துக்கொண்டால் இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள சிரமமே இல்லை, அது போன்று பாடல்கள் பாடவும் தேவையில்லை!!