யோவான் 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
இயேசு கிறிஸ்து மரித்து போன பிறகு என்ன நடக்குமோ என்று கலங்கியிருக்கும் சீஷர்களுக்கு அவர் அறிவுறை செய்து வருகிறார், அப்படியே அவர் சொல்லும் போது, நீங்கள் பயம் கொள்ளாதீர்கள், உங்கள் இருதயம் கலங்காமல் தெளிந்தவர்களாக இருங்கள் என்கிறார்!! கலங்காமல் இருக்க நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும், என்னிடத்தில் விசுவாசம் வைய்யுங்கள்!!
தேவனிடத்தில் விசுவாசம்: இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் தேவனே!! இந்த தேவன் அனைவருக்கும் ஜீவ சுவாசத்தை கொடுத்த தேவன், ஜீவனை உருவாக்கியதால் பிதா என்றாகிறார்!! இந்த தேவன் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்ப வல்லவராக இருக்கிறார் என்றே விசுவாசிக்க சொல்லுகிறார்!! அத்துடன் என்னிடத்திலும் (கிறிஸ்துவிடத்தில்) விசுவாசமாயிருங்கள் என்கிறார்!!
கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம்: மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட கிறிஸ்து, அவர் வரும் நாளில் அனைவருக்கும் ஜீவனை தருவார் என்கிற விசுவாசம்!!
இப்படி கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு இனியும் தேவன் தான் அனைவரையும் எழுப்புவார் என்று இல்லாமல் , அந்த அதிகாரத்தை கிறிஸ்துவிடம் தந்திருக்கிறார் தேவன்!! இதுவே கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் விசுவாசமாகும்!!உயிர்த்தெழுந்த கிறிஸ்துவிற்கு சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டாகி விட்டது என்பதை வசனம் சொல்லுகிறது!!
மத்தேயு 28:18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
இந்த வசனத்தை வாசித்து பல ஊழியர்கள் அந்த வாசஸ்தலங்களை பார்த்து வந்து விட்டதாக சொல்லுகிறார்கள்!! அவர்களுக்கு என்று ஒரு தனி பங்களா, பெரிய லான், இன்னும் என்னன்னமோ!! வாசஸ்தலங்கள் என்பது கட்டிடங்களோ, பங்களாக்களோ அல்ல!! வாசஸ்தலத்தின் அர்த்தம், தங்கியிருக்கும் இடம் (abode) அல்ல, மாறாக சார்ந்து இருக்கும் ஒரு நிலை (To abide)!! பின்பற்றி இருக்கும் ஒரு நிலை!! இது செங்கல், சிமெண்ட் போட்டு கட்டப்படும் கட்டிடம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் சாயலில் மாற்றப்பட்டவர்களாக அவருடன் தரித்திருக்கும் நிலையாகும், தேவனை தரிசிக்கும் நிலையாகும்!!
பரலோகத்தில் அநேக ஆவிக்குரிய ஜீவிகள் இருக்கிறார்கள் என்கிறது வேதம்!! தேவன், அவரின் குமாரன் கிறிஸ்து இயேசு, பிரதான தூதர்கள், கேரூபுகள், சேராபீன்கள், மற்றும் கோடாகோடி தேவ தூதர்களின் கூட்டம்!! இவர்கள் யாவாருக்கும் தனி தனி மகிமை, தனி தனி நிலை இருக்கிறது!! அனைவருமே ஆவிக்குறிய ஜீவிகளாக இருந்தாலும், ஒவ்வொருவரின் நிலையிலும் அதிகாரங்கங்களிலும் வேறுபாடு இருக்கிறது!! ஏற்கனவே பரலோகத்தில் இருக்கும் இவர்களுக்கு மத்தியில், கிறிஸ்துவின் சாயலில் உயிர்ப்பிக்கப்பட இருக்கும் மனிதர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதையே கிறிஸ்து இங்கே இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறார்!! இவர்கள் இருக்கப்போகும் நிலையை ஆயத்தப்படுத்துவதையே கிறிஸ்து இப்படியாக சொல்லுகிறார்!! கிறிஸ்துவின் பலியை ஏற்றுக்கொண்டு பிதா சிலரை கிறிஸ்துவின் சாயலில் மாற்ற சித்தமுள்ளவராக இருக்கிறார், அவர்கள் கிறிஸ்துவின் சாயலில் மாறி இருக்கும் நிலையை தான் செலுத்திய பலியினால் சம்பாதித்து, அதன் பின் வந்து (இரண்டாம் வருகை) கூட்டி செல்வேன் என்கிறார்!! கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழப்போகும் மனிதர்களின் நிலையை குறித்தே, கிறிஸ்து வாசஸ்தலம் என்கிறாரே தவிர, நவீன போதகர்கள் பல விதங்களில் பரலோகத்திற்கு விஸிட் அடித்து தங்களின் ஃபளாட்டை அல்லது பங்களாவை பார்வையிட்டு வருவதாக சொல்லுவது எல்லாம் சுத்த ரீல்!! அதை கீழே உள்ள வசனம் நிரூபிக்கிறது!!
அநேக வாசஸ்தலங்கள் என்றால் அநேக நிலைகள், அதிகாரங்கள்!!
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
கிறிஸ்து சொல்லுகிறார், இப்படி ஒரு நிலையை ஆயத்தப்படுத்திய பிறகு, அதாவது தன் பலியினால் சம்பாதித்த அதிகாரத்தை கொண்டு பிதாவுடன் இருக்கும் ஒரு நிலையை அவர் ஒரு சிறிய கூட்டத்திற்கு பெற்று தருகிறார்!! அந்த கூட்டத்தின் தேர்வு தான் இந்த உலகத்தின் முடிவு வரையில் நடக்கிறது!! அதன் பின், கிறிஸ்துவின் வருகையின் போது, கிறிஸ்துவுடையவர்கள் (கிறிஸ்தவர்கள் அல்ல) அவரின் சாயலில் உயிர்த்தெழுந்து, அவர் இருக்கும் நிலைக்கு செல்வார்கள்!!
1 கொரிந்தியர் 15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 யோவான் 3:2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 3. அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
இப்படி அவரின் இரண்டாம் வருகையின் போது நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வை தான் இன்றைய ஊழியர்கள் அவர்களாகவே சென்று யாரோ இவர்களின் கரத்தை பிடித்து கூட்டு செல்கிறார்கள் என்றும், இவர்களுக்கு தையாராகிக்கொண்டிருக்கும் பங்களாக்களை பார்வையிடுகிறார்கள் என்று கதை சொல்லி வருகிறார்கள்!! பூமிக்கு உண்டான மணாசை இவர்களுக்கு பரலோகத்திலும் தொடர்ந்திருக்கும் என்கிற எண்ணம் எத்துனை கொடியது!!
இந்த வசனங்களில் கிறிஸ்து இயேசு தன் அப்போஸ்தலர்களை தேற்றி, அவர்களின் கலக்கத்தை போக்கும்படியாக சில காரியங்களை சொல்லியிருக்கிறார், அதில் விசேஷமாக அந்த அப்போஸ்தலர்கள் இருக்க போகும் நிலையும், அந்த நிலையை அடைய அவர்கள் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதே!!
மாறாக, உங்களை அடிக்கடி வந்து நான் நீங்கள் தங்கவிருக்கும் வாசஸ்தலத்தை காண்பிப்பேன் என்று எல்லாம் சொல்லவில்லை!! அப்படி அவர் யாரையும் கூட்டிக்கிட்டும் போகவில்லை!! இப்படி சொல்லுகிற ஊழியர்கள் ரீல் விடுகிறார்கள் என்றே அர்த்தம்!!
சத்தியத்தை வாஞ்சிப்பவர்கள் சத்தியத்தையே ரசிப்பார்கள்!! தங்களின் உற்சாகத்திற்கு நன்றிகள்!! இவை அனைத்தும் தேவனின் வழி நடத்துதலே!! உங்களை போன்ற சில சகோதரர்களுக்கு நான் எழுதுவது சற்றெனும் பிரயோஜமாக இருப்பதற்கு நான் தேவனை துதிக்கிறேன்!! அவரே நம்மை வழி நடத்தட்டும்!!
சகோ டினோ அவர்களே, தங்களின் பதிவுகளும் அபாரம்!! உங்களின் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்!! தேவனே உங்களை நடத்தட்டும்!!
சகோ ஆத்துமா அவர்களே, தங்களின் பதிவுகளும் வந்து நாட்கள் ஆகி விட்டன, தொடருங்கள், உற்சாகத்துடன்!!