இந்த கூத்துகள் நடக்கும் இடம் பிரபலமான சபைகளே!! அதாவது பேய் பிடித்தவர்களாக, சாத்தானின் பிடியில் இருப்பவர்களாக இருக்கும் இடம் அவர் அவர் சார்ந்த சபையே!! இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அவர்கள் சேர்ந்திருக்கும் சபை போதகர் (பாஸ்டர்) அவர்களை விடுவிக்க முடியாமல், வெளியில் இருந்து இறகுமதி செய்த ஆட்கள் அந்த மகிமையான (!!??) வேலையை தங்கள் தங்கள் பாணியில் செய்கிறார்கள்!!
இவர்கள் உலகமெங்கும் சென்று சுவிசேஷம் சொல்லுகிறவர்கள், முதலில் தங்கள் சபைகளில் உள்ளவர்களையே இவர்களால காத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்!! இவர்கள் சொல்லும் நற்செய்தி (துர்செய்தி) இவர்கள் சபைகளுக்கு மாத்திரமே, ஆனாலும் அதினால் பயன் பெறாமல் இவர்கள் இறகுமதி செய்த ஆட்களை கொண்டு சில வித்தைகள் (தள்ளி விடுதல், கூச்சல் இடுவது, குதிப்பது போன்ற பாபிலோனிய செய்லகள்) காண்பித்து பெயர் எடுக்கிறார்கள், அவ்வளவே!!
இவர்கள் வேறு யாரும் இல்லை, கிறிஸ்து இயேசு, இவர்களை குறித்து நமக்கு சொல்லியிருக்கிறார்,
மத்தேயு 24:11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.; 24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
இதோ முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வசனத்தை கொண்டு, நண்பர் டினோ இப்படிப்பட்ட சிலவற்றை நிரூபித்திருக்கிறார்!! இது எல்லாம் நமக்கு எச்சரிக்கையே!! ஆவியின் பெயரில் எந்த ஆவியில் செயல்படுகிறார்கள் என்பது இவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன!!
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! இவைகள் போன்ற பெரும் ஓநாய்களை சாத்தனை கொண்டு எவனை விழுங்களாம் என்று வகைத்தேடிக்கொண்டு இருக்கிறதுகள்!! எச்சரிக்கை!!
நன்றி சகோதரே!! இப்படியான வீடியோ பதிவுகளை காட்டியாவது இவர்களை விழிப்படைய செய்வோம். இதை கூட சரி என்று விவாதிப்பவரும் இருக்கார்கள்!!! இப்பபாருங்கள் இதையும் எடுத்து இது சரிதான் என்று வாதாடுவார்கள் ஒரு சில மூடர்கள்!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
ரஸ்ஸல் வசனத்தை எழுதி விபச்சாரர் பட்டத்தை பெறுகிறார் என்றால், இந்த கூத்தை என்னவென்று சொல்லுவது!!
வசனம் என்னவென்று தெரியாத இந்த கூட்டத்தாரும் அதில் பங்கு பெற்று ஆவியில் (எந்த ஆவியில் என்று பார்ப்பவர்களுக்கு தெரியும்) விழுவது எந்த விதமான விபச்சராம் என்று தெரியவில்லை!!
மோசே சமுத்திரத்திற்கு முன் நின்று கைய்யை நீட்டியபோது, தேவன் சமுத்திரத்தை பிரிக்க செய்தார், ஆனால் அதை பேசிக்கொண்டு இந்த 22 வயது வாலிபன் செய்யும் சில மாயா ஜாலத்தை கிறிஸ்துவின் ஆவியை கொண்டு செய்வது போலாகவா இருக்கிறது? சபையினர் போடும் கூச்சல் சற்றும் வேதத்திற்கு பொறுந்தாததாக இருக்கிறாது!! இதை தானே விரும்புகிறார்கள் இன்றைய கிறிஸ்தவர்கள்!! அந்த கூட்டத்தார் எல்லாம் சற்று முன்பு, அதாவது அந்த 22 வயது வாலிபன் வந்து பேசுவதற்கு முன் தான் "இப்போ வாரும், இறங்கி வாரும்" என்றி பாடியிருப்பார்கள், அந்த நிகழுவகளை பார்த்தால் ஏதோ ஒரு ஆவியின் சுற்றி சுற்றி விழுவது தான் தெரிகிறது, கேட்டால் பரிசுத்த ஆவியில் விழுகிறோம் என்பார்கள்!!
வேதம் சொல்லுகிறது,
அப். 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
பரிசுத்த ஆவி வரும் போது பெலன்டைவோம் என்கிறது வேதம் ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் அப்படியாக இல்லையே!!!
இது போன்ற தொடுப்பை கொடுத்து இவர்களின் கூத்தை வெளிப்படுத்துவோம்!!
என்ன துனிச்சலும், என்ன தைரியமும் இருக்கிறது இவர்களுக்கு தங்களையே சுவிசேஷர்கள், அப்போஸ்தலர்கள் என்று பெயரை வைத்துக்கொள்வதற்கு!! அதிலும் பென்னி ஹிண் என்கிற இந்த மனிதனின் கூத்தை கூட அங்கே இருக்கும் ஜனங்கள் கைகளை தட்டி ஆர்பரித்தி ஏதோ அதிலும் செய்தி வைத்திருக்கிறார் இந்த போதகர் என்று தான் நினைக்கிறார்கள் போல்!! இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது, சாத்தானின் சத்தம் ஓய!!