சில பல உயர் ரக கிறிஸ்தவர்கள் தங்களை பரிசுத்தவான்களாக எண்ணிக்கொண்டு (மனசாட்சியிடம் கேட்டு பார்த்தால் தெரியும்) இவர்கள் பரலோகத்திற்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற வீண் ஆசையிலும், மற்றவர்களை காட்டிலும் இவர்கள் உசத்தி என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களை பாவிகள் என்று தீர்த்து அவர்களை நரகத்திற்கு தகுதியுள்ளவர்கள் என்று போதிக்கிறார்கள்!! அதிலும் கிறிஸ்தவம் இதை தான் பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது என்று ஒருவர் எழுதுகிறார்!! இதை கிறிஸ்தவம் மாத்திரம் இல்லை, பெரும்பாலுமான மதங்களும் மார்க்கங்களும் இதை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறது என்பது இவருக்கு தெரியவில்லை போல்!!
இவர் பார்வையில் இவர் பரலோகம் சென்று விடும் அளவிற்கு இருக்கிறார் என்றும் இவர் பாவி இல்லை என்றும் மற்றவர்கள் தான் பாவிகள், நரகத்திற்கு செல்லும் கூட்டத்தார் என்று கிறிஸ்தவம பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது என்பது இவரது அறியாமையே,
1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், கிறிஸ்தவ பெயர்களை வைத்துக்கொள்பவர்கள், "இரகசிய கிறிஸ்தவர்கள்" என்று ஒரு கூட்டத்தார் எல்லோரும் பரலோகம் போய்விடுவார்கள் என்கிறா நப்பாசையில் இருக்கிறார்கள்!! அப்படி என்றால் பேதுரு, பவுல் போன்றவர்கள் எங்கே இருப்பார்கள்!! அவர்கள் அருகிள் நிற்க கூட தகுதி இல்லாத மாய்மாலம் செய்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் பரலோகம் போய் விடுவார்கள் என்பதே ஒரு அர்த்தமற்ற சிந்தையே!!
ஆனால் நரகம் யாருக்கு தான்!!
மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் பிறந்தவுடன் மரிக்கிற குழந்தைகள் மனித வாடையே இல்லாமல் காடுகளில் வசித்து மரித்திருப்பவர்கள், கிறிஸ்துவை அறியாமல் மரித்து போன கோடாகோடி மக்கள் கிறிஸ்து பூமிக்கு வரும் முன் மரித்தவர்கள், உலக ரீதியான பாவங்களில் ஈடுப்பட்டவர்கள்,
இவர்கள் யாவரும் நரகம் போய் விடுவார்கள் என்றால், யார் தான் பரலோகம் போவார்கள்!!
அனுதினமும் "நரகம்" என்கிற ஒரு இடத்திற்கு தங்களின் மூதாதையர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து திரும்பிவருபவர்களை காட்டிலும் பெரிய பொய்யர்களும் கற்பனைவாதிகளும் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது!! பாபிலோனிய மார்க்கங்களில் இருந்து வந்த போதனைகளை கிறிஸ்தவத்திற்குள் தினித்து விட்டு அதன் மூலமாக கிறிஸ்துவின் "நற்செய்தி"யை "துர்செய்தி"யாக மாற்றி வருகிறார்கள்!! இப்படி துனிச்சலாக பொய் பேசுபவர்களுக்கு கூட தேவன் தன் இராஜியத்தில் கிறிஸ்துவை இராஜாவாக கொண்டு சபை மூலமாக திருத்த இருக்கிறார், அவர்கள் அடிக்கடி பார்த்து வரும் ஒரு இடம் என்று ஒன்றும் இல்லை என்று அந்த நாட்களில் நினைத்து தாங்கள் விட்ட புருடாக்களை நினைத்து வெட்கப்பட்டு நிற்பார்கள்!! ஆனாலும் அவர்களும் இரட்சிக்கப்பட்டு தேவனின் சத்தியத்தை அறிந்து, அதன் பின் உண்மையாக வாழ்வார்கள் என்பதே வேதம் நமக்கு சொல்லி தரும் நற்செய்தி!! வேதத்தில் நல்ல செய்தியே உள்ளது, துர்செய்தியோ கெட்ட செய்தியோ கற்பனைகளோ கிடையாது!!
நரகம் இல்லை என்று போதித்தால் அனைவரும் என்ன வேண்டுமென்றாலும் பாவம் செய்வார்களே என்று கேள்வி எழுப்புவர்களுக்கு ஒரே கேள்வி, நரகம் இருக்கிறது என்று போதிப்பதால் எத்துனை பாவங்கள் குறைந்து போய்விட்டது என்று!! கிறிஸ்தவ நாடுகளில் சிறைச்சாலைகள் இல்லாமல் போய்விட்டதோ!!
எல்லோருமே உயிர்த்தெழுதலுக்கு முன் நரகத்திற்கு (கல்லறைக்கு) சென்றே ஆக வேண்டும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை!!