நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என யெகோவா அடையாளம் காட்டுகிறார்.
கேள்விகள்:-
இயேசுதான் மேசியா என்பதை அடையாளம் காட்ட தூதர்களை யெகோவா எவ்வாறு உபயோகித்தார்?
இயேசுதான் மேசியா என்பதைச் சுட்டிக்காட்ட யோவான் ஸ்நானகரை யெகோவா எவ்வாறு உபயோகித்தார்?
மேசியா தான் தம்முடைய மகன் என்பதை யெகோவா எவ்வாறு அடையாளம் காட்டுகிறார் ?
கடவுளுடைய மகன் - என்ன அர்த்தத்தில் ?
யேகோவாதான் இயேசுவின் தந்தை; ஆனால், சாதாரண மனிதர்களைப் போல் தாம்பத்திய உறவு முறையில் இயேசு பிறக்கவில்லை. மாறாக கடவுளே அவரை நேரடியாக படைத்தார். பார்க்கப் போனால், யெகோவாவின் முதல் படைப்பே அவர்தான்.
கொலேசே 1 :15 -17 "15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும்"
யெகோவாவே இயேசுவைப் படைத்தது அவருக்கு உயிர் கொடுத்தால், அவரை இயேசுவின் தந்தை என்று சொல்லலாம். விண்ணுலகில் யெகோவா தமது மகனைப் படைத்தபின் அவரை "சிற்பியாக" உபயோகித்து இந்த அண்டசராசத்தையும் படைத்தார். - நீதிமொழிகள் 8 :30 "நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
இங்கு மேலே எழுதிய பதிவுகளுக்கு யாராவது ஒரு வித்தியாசமான கோணத்தில் பதில் கொடுக்கக் கூடியவர்கள் முயட்சிகலாம். தொடரும்
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை மக்கள் அடையாளம் காண யெகோவா வழிசெய்தாரா ? ஆம், வழிசெய்தார். என்ன செய்தாறேனக் கவனியுங்கள். எபிரேய வேதாகமம் எழுதிமுடிக்கப்பட்டு ஏறக்குறைய 400 வருடங்கள் உருண்டோடி இருந்த சமயம் அது. கலிலேயா மாகாணத்துக்கு வடக்கே இருந்து நாசரேத் ஊரில் மரியாள் என்ற கன்னிப்பெண் வசித்து வந்தாள். திடீரென ஒருநாள் காபிரியேல் என்ற தேவதூதர் அவளைச் சந்தித்து, கடவுளுடைய சக்தி யினால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று கூறினார். அவர் வாகுப்பண்ணப் பட்ட அரசராகா இருப்பார், நித்தியத்துக்கும் அரசாளுவார் என்றும் அந்தத் தூதர் கூறினார். இயேசுவின் உயிர் விண்ணுலகத்தில் இருந்து மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டாலும் அவர் கடவுளுடைய மகனாகவே இருப்பார்.
இந்த அரும்பெரும் பாக்கியத்தை மரியாள் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டாள். மரியாள் கர்ப்பமான விதத்தை தேவதூதர் மூலம் தெரிந்து கொண்ட பிறகே அவளுடைய வருங்கால கணவர் யோசேப்பு அவளை மனம் செய்து கொண்டார். ஆனால், பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்?
///மறுபடியும் உளற ஆரம்பித்து விட்டார் டினோ. இவருக்கு ஆய்வு கட்டுரை இது தொடர்பாக பதித்திருந்தேன். மீண்டும் மீண்டும் ரசலின் புளித்துப் போன போதனைகளை அள்ளித் தெளித்துள்ளார் நாகரிகத்திற்காகவேனும் இதனை குறிப்பிடுகிறாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. மூலபாஷை விடயத்தில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே இந்த விடயத்திலும் நடந்து கொள்கிறார்.
மீண்டும் கூறுகிறேன். மனிதப்போதனைகளை விடுத்து வேதத்தின் வெளிச்சத்தில் எழுதுங்கள். ரசலின் நூல்கள்தான் உங்களுக்கு வேதப்புத்தகம் என்றால் அதனையே வேதாகமத்தைப் பாவிக்காதீர்கள். ///
கொல்வின் அவர்களே, நான் மனிதபோதனைகளை கொண்டவனும் அல்ல அத்துடன் உங்களைப் போன்று பாரம்பரிய போதனைகளை கொண்டவனும் அல்ல !!!!! மற்றும் அர்கே என்ற சொல்லை எங்கு இருந்து எடுத்திர்கள் என்ற கேள்விக்கு நான் எனது பதிவுகளில் பதில்களையும் கொடுத்துவிட்டேன். அத்துடன் நீங்கள் எழுதும் பதிவுகளில் எனக்கான விடையும் இல்லை. என் காலம் பொன்னானது !!!!!!!! அதை வேறும் திருதுவதுக்காக வீண் அடித்துக் கொண்டு இருப்பது என்னைப் பொருத்தமட்டில் மடமை. ஒரு மனிதனுக்கு பைபளைப் படிப்பதும்; வீண்விவாதம் செய்வதும் அல்ல வாழ்க்கை. ஒருவன் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துகொண்டு எதை வேண்டும் என்றாலும் சொல்லமுடியும். உங்களுக்கு கிடைத்திருக்கும் நேரம் எனக்கு இல்லையே !!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
// Hi dino your avathar சூப்பர் /// நன்றி நண்பர் குரு அவர்களே, இதன் அர்த்தம் என்னவென்றால் தேவதூதர்களுக்கு எல்லாம் தலைமை தூதர் தான் இயேசு!!! யார் என்ன சொன்னாலும் இயேசு தேவன் அல்ல, அவர் தேவனின் ஜீவனுள்ள குமாரன்....
///மேசியா வா ஏசாயா வா???
நண்பர்களே எனக்கு உங்களின் மொழி புரியவில்லை! ////
நண்பர் இந்திரஜித்தை வரவேற்கிறேன். மேசியா தொடர்பாக இயேசு கிறிஸ்து என்ற திரியில் கொடுத்து இருக்கிறேன். தயவுசெய்து வாசித்து பயனைடயுங்கள். ஏதும் கேள்வி இருப்பின் சகோதரர் பெறேயான்ஸ் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
ஏசாயா என்பவர் ::::::: ஏசாயா என்ற பெயரின் அர்த்தம் : "யெகோவாவின் இரட்சிப்பு " குடும்பம்: மணமானவர், குறைந்தது இரண்டு குமாரர்கள் இருக்கவேண்டும். வசிப்பிடம்: எருசலேம் சேவை செய்த ஆண்டுகள்: குறைந்தது 46 ஆண்டுகள். சுமார் பொது சகாப்தத்துக்கு முன் 778 முதல் பொது சகாப்தத்துக்கு . மூ 732 - க்குப் பின்பு வரை மேலதிக தகவலுக்கு ஏசாயா புத்தகத்தை வாசியுங்கள் .
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
அந்தச் சமயத்தில் மக்கள் தொகையெச் கணக்கெடுக்க ரோம ஆட்சியாளர் ஆணை பிறப்பித்தார். அதற்க்காக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த ஊருக்குச் சென்று பெயர்ப்பதிவு செய்ய வேண்டிஇருந்தது. யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் பிறந்தவர்கள். அதனால், கர்ப்பமாய் இருந்த தன் மனைவியே அழைத்துக்கொண்டு யோசேப்பு அங்கு சென்றார். ஒரு மாட்டு தொழுவத்தில் மரியாள் குழந்தையைப் பெற்றெடுத்து அதைத் தீவனத் தொட்டியில் கிடத்தினாள். இந்தக் குழந்தை தான் வாக்குப்பண்ணப் பட்ட மேசியா என்பதை மலையருகே ஆடுகளைக் காவல் காத்துக்கொண்டு இருந்த மெய்பபர்களிடம் தெரிவிக்க ஏராளமான தூதர்களைக் கடவுள் அனுப்பினார்.
பிற்பாடு, இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு மற்றவர்களும் கூட சான்றளிதார்கள். மேசியா செய்யப் போகும் மிக முக்கியமான வேலைக்கு வழியேத் தயார்படுத்த ஒருவர் தோன்றுவார் என்று ஏசாயா திர்க்கதரிசி முன்னரே சொல்லிருந்தார்.
அவர்தான் யோவான் ஸ்நானகன்.அவர் இயேசுவைக் கண்டபோது, யோவான் 1: 29. "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்". என்று யோவான் பரவசத்தோடு சொன்னார்.
மற்றும் இயேசு தெய்வம் அல்ல என்றும் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்க வேறு சான்றுகளும் இருந்தன. இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது விண்ணுலகில் இருந்து யெகோவாவே குரல் கொடுத்தார். தமது சக்தினால் இயேசுவை மேசியாவாக நியமித்து, ( இங்கு நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அதாவது இயேசுவை தேவனே தனது குரலால் இவர் என் மகன் என்று சொல்கிறார்)
மத்தேயு 3 : 6. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.என்று சொன்னார். ஆம், வேகுகாலதுக்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தோன்றிவிட்டார்!!!
இது எப்போது சம்பவித்தது? கி . பி : 29 - ல் ஆம், தானியேல் முன்னுரைத்தபடி சரியாக 483 வருடங்களுக்கு பின் சம்பவித்தது!! இயேசுதான் மேசியா, அதாவது கிறிஸ்து, என்பதற்க்கான எண்ணற்ற ஆதாரங்களில் இதுவும் ஒன்று. ஆனால், அவர் பூமியில் இருந்தபோது என்ன செய்தியே அறிவித்தார் ? இதை கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு போதிக்கிறார் என்ற என்னுடைய அடுத்த திரியில் விவரிக்கிறேன்: நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
தாங்கள் விவாதங்களில் ஈடு பட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் அவர்களுக்கு ஜீரனிக்க முடிவதில்லை!! ஆகவே தான் கக்கிக்கொண்டு இருக்கிறார்கள்!! விவாதங்களை நான் எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் சத்திய வசனங்களை விளக்கிக்கொண்டு இருங்கள், தெளிவான போதனைகள், பாரம்பரியங்களுக்கு அப்பாற்பாட்ட போதனைகள், மனித அறிவினால் தோன்றாத போதனைகள், இவற்றில் நீங்கள் கவனம் செலுத்துங்கள், இவர்களின் கூட்டத்தாருக்கு தேவை என்றால் நான் பதில் குடுக்கிறேன்!! எனக்கு ஒத்தாசையாக சகோ அன்பு இருக்கிறார், வேத வசனங்கள் இருக்கிறது!!
தங்கள் சத்திய பணி தடையின்றி நடக்க தேவனின் வல்லமை உள்ள கரம் தாமே நடத்தட்டும்!! தேவ ஆவி உங்களுடனும் நீங்கள் செய்யும் பணியிலும் வெளிப்படுவதாக!!
தாங்கள் விவாதங்களில் ஈடு பட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் அவர்களுக்கு ஜீரனிக்க முடிவதில்லை!! ஆகவே தான் கக்கிக்கொண்டு இருக்கிறார்கள்!! விவாதங்களை நான் எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் சத்திய வசனங்களை விளக்கிக்கொண்டு இருங்கள், தெளிவான போதனைகள், பாரம்பரியங்களுக்கு அப்பாற்பாட்ட போதனைகள், மனித அறிவினால் தோன்றாத போதனைகள், இவற்றில் நீங்கள் கவனம் செலுத்துங்கள், இவர்களின் கூட்டத்தாருக்கு தேவை என்றால் நான் பதில் குடுக்கிறேன்!! எனக்கு ஒத்தாசையாக சகோ அன்பு இருக்கிறார், வேத வசனங்கள் இருக்கிறது!!
தங்கள் சத்திய பணி தடையின்றி நடக்க தேவனின் வல்லமை உள்ள கரம் தாமே நடத்தட்டும்!! தேவ ஆவி உங்களுடனும் நீங்கள் செய்யும் பணியிலும் வெளிப்படுவதாக!!
தொடருங்கள் சகோதரரே!!
நன்றி சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, இது எனக்கு தேவை இல்லாத விஷயம் என்று ஆரம்பத்திலே தோன்றியது . நீங்களே சொல்லி விட்டிர்கள். நான் இனி எந்த விவாதத்துக்கும் பதில் கொடுக்கப் போவதில்லை. மற்றும் , நான் சத்தியத்தை இப்போ தான் சரியாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதில் தங்களின் தளம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. நீங்கள் கேட்டுக்கொண்டத்துக்கு அமையவே நடக்கின்றேன். அத்துடன் என்னால் ஏதாவது தவறு நடந்து இருப்பின் மன்னிக்கவும். நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
எபேசியர் 2:20அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
I பேதுரு 2:7ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
சகோ.குரு அவர்களின் கேள்விகளில் ஒரு கேள்விக்கு சகோ.டினோ வேதவசனங்கள் மூலம் சரியான பதிலைத் தந்துள்ளார்.
மூலைக்கல்லாகிய இயேசுவைத் தள்ளியது யார் எனும் கேள்விக்கான பதிலை பின்வரும் வசனத்தில் பேதுரு கூறுகிறார்.
அப்போஸ்தலர் 4:11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
இவ்வசனத்தில் உங்களால் எனும் வார்த்தை, இயேசுவைக் கொலை செய்த வேதபாரகர் மற்றும் பிரதான ஆசாரியர்கள் மூப்பர்கள் மற்றும் யூதராகிய ஜனங்களையே குறிப்பிடுகிறதென 5-ம் வசனத்தில் பார்க்கிறோம்.
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வீடு, தேவனுடைய ராஜ்யமே.
ஆனால் அவர்களோ தேவனுடைய ராஜ்யமாகிய வீட்டின் மூலைக்கல்லாகிய இயேசுவைத் தள்ளி கொன்றுபோட்டதால், அவர்களிடமிருந்து தேவனுடைய ராஜ்யம் நீக்கப்பட்டு பிற ஜனங்களிடம் கொடுக்கப்படுவதைக் குறித்து பின்வரும் வசனத்தில் இயேசு கூறுகிறார்.
சகோ.குரு அவர்களின் கேள்விகளில் ஒரு கேள்விக்கு சகோ.டினோ வேதவசனங்கள் மூலம் சரியான பதிலைத் தந்துள்ளார்.
மூலைக்கல்லாகிய இயேசுவைத் தள்ளியது யார் எனும் கேள்விக்கான பதிலை பின்வரும் வசனத்தில் பேதுரு கூறுகிறார்.
அப்போஸ்தலர் 4:11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
இவ்வசனத்தில் உங்களால் எனும் வார்த்தை, இயேசுவைக் கொலை செய்த வேதபாரகர் மற்றும் பிரதான ஆசாரியர்கள் மூப்பர்கள் மற்றும் யூதராகிய ஜனங்களையே குறிப்பிடுகிறதென 5-ம் வசனத்தில் பார்க்கிறோம்.
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வீடு, தேவனுடைய ராஜ்யமே.
ஆனால் அவர்களோ தேவனுடைய ராஜ்யமாகிய வீட்டின் மூலைக்கல்லாகிய இயேசுவைத் தள்ளி கொன்றுபோட்டதால், அவர்களிடமிருந்து தேவனுடைய ராஜ்யம் நீக்கப்பட்டு பிற ஜனங்களிடம் கொடுக்கப்படுவதைக் குறித்து பின்வரும் வசனத்தில் இயேசு கூறுகிறார்.
சகோதரர் அன்பு அவர்களுக்கு என் நன்றிகள்!!!! சகோதரர் குரு அவர்கள் கேட்டகேள்விக்கு நேரம் போதாது நிமித்தம் மொட்டையாக பதிலைக்கொடுத்து; பின்பு வந்து நீண்ட விளக்கம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்!!! அன்பு அவர்கள் சரியான பதிலை கொடுத்து இலகுபடுத்திவிட்டார். எம்மைப் போன்ற இளையோர்களுக்கு அன்பு மற்றும் சகோதரர் பெறேயான்ஸ் போன்றவர்கள் ஒரு வரப்பிரசாதம்!!! இவையாவும் தேவனின் ஏற்பாடுகளே.... நன்றி.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
இயேசு கிறிஸ்து தேவனாகிய யெகோவாவின் முதல் சிருஷ்டி , இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15.
இவர் தேவனுடைய
''ஒரே பேறான குமாரன் ” ;என்றும் முதற்பேறானவர்” என்றும் அழைக்கப்படுகிறார். யோவா 3:16, சங் 89:27, எபி 1:6. இவர் ஒருவரே பிதாவாகிய தேவன் யேகோவாவினால் நேரடியாய் சிருஷ்டிக்கப்பட்டவர். மற்ற யாவையும் தேவன் தமது குமாரனாகிய இயேசுவின் மூலம் சிருஷ்டித்தார். ஆதலால் இவரை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்படுகிறார்.
சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தேவனுடைய முதல் சிருஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வ முதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். “யேகோவா தமது சிருஷ்டிகளில் என்னையே முதலாவதாக சிருஷ்டித்தார். அல்லது படைத்தார்.” என்று திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும், தமிழ் புதிய திருப்புதலிலும் அவ்வாறே இருக்கிறது.நீதி 8:22
பூமி உண்டாகும் முன்னும் ஆதி முதற்கொண்டும், அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகு முன்னே நான் ஜெநிபிக்கப்பட்டேன். மலைகள் நிலைப்பெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும், அதன் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும், உண்டாக்கு முன்னும், நான் ஜெநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன் : அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திவாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன் : நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமூகத்தில் களி கூர்ந்தேன்:” என்று எழுதப்பட்டிருக்கிறது. நீதி 8:23-30.
தேவனுடைய முதற்பேறான குமாரனாகிய இயேசுவுக்கு “ஞானம் ” என்னும் ஓர் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத் 11:19; 1கொரி 1:31. ஜெநிப்பிக்கப்பட்டேன் என்பதற்கு பிறப்பிக்கப்பட்டேன் அல்லது சிருஷ்டிக்கப்பட்டேன் என்று அர்த்தம். ஆதி 1:20 இயேசு பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்.
இயேசு கிறிஸ்துவுக்கு தேவனுடைய ''வார்த்தை'' என்ற ஓர் நாமமும் உண்டு. வெளி 19:13. அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாஷையில் “LOGOS” – “லோகாஸ்” அதாவது “வார்த்தை” என்று அழைத்தார்கள். தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசியபடியால் அவருக்கு “தேவனுடைய வார்த்தை” என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. யோவான் 12:49. உபா 18:18,19. அப் 3:22:23; எபி 1:1:2. இக்காரணத்தை முன்னிட்டு யோவான் 1:1-3யில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். பிதாவாகிய தேவன் யோகோவாவிடம், வார்த்தை எனப்பட்ட குமாரனாகிய இயேசு, தேவனாக இருந்தார் என்று காட்டப்பட்டிருக்கிறது.
எபிரெய பாஷையில் “எல்லோயிம்” (“ELOHIM”) என்னும் பதம் “தேவன்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. “எல்லோயிம்” என்றால் “வல்லவர்” என்று அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, வல்லவர்களான மோசே, நியாயாதிபதிகள், தூதர்கள், தேவனுடைய வார்த்தையைப் பெற்ற வேதனுடைய குமாரர்கள் யாவரையும் “தேவர்கள்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத் 4:16; 7:1. (தேவர்கள் = நியாயாதிபதிகள் யாத் 22:28) சங் 82:1-6. யோவான் 10:34-36. பொல்லாத கிரியைகளில் ஓர் வல்லவனாயிருக்கும் சாத்தானையும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2 கொரி 4:4.
கீழ்க்கண்ட இந்த வசனத்தை கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால், “In the beginning was the Logos, and the Logos was with THE GOD and a god was the word” என்று இருக்கிறது. இவ்விதமாய் கிரேக்க பாஷையில் பிதாவாகிய தேவனை “THE GOD ” - தி காட்= மகாதேவன் என்றும், வார்த்தையானவராகிய இயேசுவை “a god ” ஒரு தேவனாகவு மிருந்தார் (ஏ காட்) என்றும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. (Diaglott - john.1:1)
பிதாவாகிய தேவன் யேகோவாவை வேதாகமத்தில், தேவாதிதேவன், மகாதேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனும், எல்லா தேவர்களிலும் பயப்பட்டத்தக்கவர். தேவர்களை நியாயம் விசாரிக்கும் தேவன், என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உபா 10:17; சங் 82:1; 95:3; 96:4; 97:7,9; 136:2; 138:1. வானத்திலும் பூமியிலும் தேவர்கள் என்பவர்கள் உண்டாயிருந்தாலும், நமக்கு பிதாவானவரே மெய்த்தேவன், மற்றும் இயேசு கிறிஸ்து, நமது கர்த்தர் 1கொரி. 8:5,6.
திருச்சபையிலுள்ள தேவனுடைய பிள்ளைகளை தேர்வகள் என்றும் சங் 82:1-6. யோவான் 10:34-36. திருச்சபைக்கு தலைவரான இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்றும் ஏசாயா 9:6, இயேசுவுக்கு தலைவரும், அவரைவிட சகலத்திலும் பெரியவரான பிதாவானவரை “சர்வ வல்லமையுள்ள தேவன்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி 17:1; 28:3; 35:11; யாத் 6:2,3; வெளி 1:8; 4:8.
அனுப்பப்பட்டவர் தன்னை அனுப்பினவரிலும் பெரியவரல்ல. என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று இயேசுவே கூறினார். யோவான் 13:16 14: 28 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். 1கொரி. 11:3.
பிதாவானவர் குமாரனுக்கு ஜீவனை கொடுத்திருக்கிறார். யோவான் 5:26, இயேசு பிதாவினால் பிழைக்கிறார். யோவான் 6:57; 2கொரி. 13:4. மரித்த இயேசுவை நமது
பிதாக்களின் தேவன் உயிரோடே எழுப்பினார். அப் 2:24-32; 5:30,31.
தேவன் தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவினிடம் வார்த்தையாயிருந்தவார், மாம்சமானார். அதாவது பரிசுத்த ஆவியாகிய தேவ வல்லமையால் கன்னிமரியாளின் கர்ப்பத்தில் உற்பவித்து, பாலகனாய் பிறந்து, இயேசு என்று அழைக்கப்பட்டு, முப்பத்து மூன்றரை வருஷம் ஜீவித்து, உலகத்தின் பாவங்களுக்காக, தம்மைத்தாமே பரிசுத்த பலியாக மரணத்தில் ஒப்புக்கொடுத்து, பிறகு மூன்றாம் நாள் தேவனால் உயிரோடே எழுப்பப்பட்டு பரலோக மகிமையில் பிரவேசித்தார். யோவான் 1:14; 3:14,15; லூக்கா 1:26-35. எபி 1:1-3. அவர் பிதாவாகிய தேவனுடைய வலது பரிசத்தில் வீற்றிருக்கிறார்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )