kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறிஸ்தவ தளத்தில் கோவை பெரேயன்ஸ்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் கோவை பெரேயன்ஸ்!!


அற்புதம் என்கிறவர் தன் போக்கில் ஏதோ அவர் பங்குக்கு என்னமோ உதிர்த்துவிட்டு போயிருக்கிறார்:

//சகோ.கோல்வின் உங்கள் கேள்விகள் எதற்கும் இன்மேல் அவர்கள் பதில் தரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் சரக்கு தீர்ந்து விட்டது. இனிமே பதில் சொல்ல மாட்டாங்க, வேற எதாவது செய்ய முயற்சிப்பாங்க. இப்போதைக்கு அவங்களால முடிஞ்ச மட்டும் நல்லா திட்டதான் முடியும்.//

உங்கள் கூட்டாளிகளுக்கு பதில் தர மனிதில்லாமல் தான் பதில் தருவதில்லை என்கிற முடிவு எடுத்திருக்கிறேன், ஏனென்றால் நாங்கள் எங்கள் கருத்தில் பதில் தந்தால் அவர்கள் கருப்பு கண்ணாடி மாட்டிக்கிட்டு அதை வாசித்து, அவர்கள் இருதயத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆகவே இனியும் அவர்களுக்கு பதில் தர வேண்டாம் என்று நான் மாத்திரமே முடிவு செய்து இருக்கிறேன்!! என் கருத்து பதிவு செய்தால் அது அவர்களுகு யெகோவா சாட்சிகள், ரஸ்ஸல் என்று சம்பந்தமில்லாமல் தோன்றுகிறது, அதையும் அவர்கள் கருத்தாக சொல்லாமல் வசந்தகுமார் என்கிற வேத ஆய்வாளரின் கருத்துக்களையே பதிந்து வருகிறார், எனக்கு இது ஆரோக்கியமாக தெரியாததினால் தான் விட்டு விட்டேன்!! எனக்கு தேவையான சரக்கு முழுவதும் வேதத்தில் இருக்கிறது, உங்களை போன்று ஊழியர் கூட்டத்தை நம்பியோ வசந்தகுமாரையோ, ரஸ்ஸலையோ நம்பி இல்லை!! எனக்கு போதகர் கிறிஸ்து தான் என்று பல முறை சொல்லியும் அவர்கள் பல்லியை போல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுவதினால் எனக்கு அவர்களுடன் விவாதிக்க பிடிக்கவில்லை!! யார் திட்டுவதில் மாமன்னர் என்பதை திறந்த மனதுடன் இருக்கும் ஒவ்வொரு தளத்தையும் ஆறாயந்து பார்த்தாலே தெரியும், கருப்பு கண்ணாடி மாட்டி வாசித்தீர்கள் என்றால் அவர்களை போன்றே தெரியும்!! உங்களை எல்லாம் எதுவும் செய்வதற்கு நீங்கள் ஒன்றும் பெரிய ஆட்களாக நான் நினைப்பதில்லை, உங்களுக்கு அந்த நினைப்பு இருந்தால் அதை உங்கள் கூட்டத்தில் மாத்திரமே வைத்துக்கொள்ளுங்கள்!!

//இந்த கோவை பெரியன்ஸ் விவாதத்துக்கெல்லாம் வரவே மாட்டாங்க. அப்படியே வந்தாலும் ரசல் பத்தி எதுவும் பேசக் கூடாது அப்படின்னுதான் சொல்வாங்க. ந(ரி)தி மூலத்தைப் பற்றி பேசாமல் எப்படி ந(ரி)தியை எதிர்கொள்வதாம்? அவங்க நேரடி விவாதத்துக்கு வந்தால் நான் சாட்சிக்கு வரத்தயார்.//

வேதத்தை பற்றி விவாதிக்க சொன்னால் சரி எனலாம், மற்றபடி அடுத்த வீட்டின் அந்தரங்கத்தில் எல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது!! ஒநாய்களை குறித்து எனக்கு பேச தெரியும், பேசினாலோ, எழுதினாலோ நீங்கள் எல்லாம் கர்ச்சீப் வைத்து முக்கை பொத்துக்கொண்டு போகும் அளவிற்கு நாறி விடும்!! ஆனாலும் அதை எல்லாம் எழுதவோ, விவாதிக்கவோ எனக்கு தேவை இல்லை, எனக்கு தெரிந்தது எனக்கு தெரிந்ததாக இருக்கட்டும், எனக்கு வேதத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கும் போது, உங்களை போன்று கீழ்த்தர புத்தியில் ஒரு மனிதனை ஆறாயும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை!! அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் பிரியப்படும் உங்களை எல்லாம் எந்த கூட்டத்தில் சேர்த்துக்கொள்வது என்று தெரியவில்லை, வேத பாடங்களுக்கு பதிலாக மஞ்சல் பக்கங்களில் உங்களுக்கு விருப்பம் இருக்கலாம், என்னை அதர்கு இழுக்கவோ, விவாதத்திற்கு அழைக்கவோ நினைக்க வேண்டாமே!!

வசனம் பேசுபவன் உங்கள் கூட்டத்திற்கு நரி என்று தான் தெரியும், ஏனென்றால் ஓநாய்கள் தான் ஒவ்வொரு இரவும் பரலோகம் நரகம் என்று விஸிட் அடித்து கலர் கலராக ரீல் சுத்தி எப்படி எல்லாம் கறவை வேட்டையில் இருக்கிறார்கள் என்பது உங்கள் கண்களில் இருக்கும் கருப்பு கண்ணாடி மறைத்திருக்கிறது!!

இனி கொல்வின்:

//ஏற்கனவே அவரின் கேள்வி பலவற்றுக்கு ஆய்வு கட்டுரைகளை பதித்திருந்தேன். அவற்றுக்கு அவரிடமிருந்து பதில் இல்லை.//

ஆய்வு கட்டுரைகள் என்பது இன்னொருவர் அவரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவரின் கருத்தை எழுதுகிறார், அதை அவரின் கருத்தாகாவே நான் பார்க்கிறேன், அதை குறித்து அவருடன் தான் விவாதிக்க முடியுமே தவிர, அவரை பார்த்து அச்சிட்டு வெளியிடுவதை நான் ஏன் உங்களுடன் விவாதிக்க வேண்டும்!! உங்களுக்கு புரியாது கொல்வின், விடுங்கள்!!

//வேதத்தை புரட்டுபவனே கள்ளப்போதகன். அப்படிப்பார்த்தால் அது உங்கள் கூட்டத்திற்கே சாலப்பொருந்தும். கிறிஸ்து தேவன் இல்லையென்று சொல்லுவதும் பரிசுத்த ஆவி செயற்படும் சக்தி என உளறுவதும். ஊழியர்களை வசைபாடுவதும்..... இன்னும் அதிகம். வரலாற்றை சற்று பின்னோக்கிப் பாரும். யெகோவா சாட்சிகளே கள்ளப்போதகர்களாகவும். பொய் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களாகவும் இருந்துள்ளனர்//

எந்த கூட்டம் வேதத்தை புரட்டுகிறது என்பது சீக்கிரமே புரிந்து விடும் கொல்வின் அவர்களே!! வேதம் எனக்கு சொல்லிக்கொடுத்த சத்தியத்தில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது, ஏனென்றால் வேதத்தை புரட்ட "அநேகர்" என்கிற ஒரு பெரிய கூட்டம் தான் இருக்குமே தவிர, எங்களை போன்று ஆங்கே ஒன்று இங்கே ஒன்று என்கிற சிறிய கூட்டமாக இருக்காது என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்!! ஆகவே தான் அன்று கத்தோலிக்க மதத்திலிருந்து, அவர்கள் வேத புரட்டர்கள் என்றும், அந்தி கிறிஸ்து சபை என்றும், சொல்லி மார்ட்டீன் லூத்தர் என்கிறவர் மறுமலர்ச்சி கொண்டு வந்தார், சபைகள் பிரிந்தது, அதன் பின் இன்னோரு கூட்டம் வந்து சுமார் 1800 வருடங்கள் இல்லாத "ஆவி"யின் ஞானம் வெளிப்பட்டது!! எந்த ஆவி என்பது தான் ஆராய்ச்சிக்குறியதாக இருக்கிறது!! இப்படி ஆதி சபையிலிருந்து, அப்போஸ்தலர்களிடம் பிரிந்து பிரிந்து வேத புரட்டலின் உச்சத்தில் இருப்பவர்கள் தயவு செய்து வேதத்தை புரட்டுபவர்கள் யார் என்று நிதானித்து பாருங்கள்!!

நீங்கள் ஊழியர் என்று சொல்லுபவர் என்னை பொறுத்தவறையில் வஞ்சிக்கும் பிரதிநிதிகளே, அதற்கு மேல் வேறு ஒன்றும் அவர்களிடம் பிரமாதமாக சொல்லுவதற்கு இல்லை!! மிஷ்னரிகள் என்று இருந்தவர்களை நிச்சயமாக நான் மதிக்கிறேன், ஏனென்றால் அவர்கள் எல்லாம் இன்றைய ஊழியர்கள் போன்ற வேலை வெட்டி இல்லாதவர்களாக இல்லை!! அவர்கள் தங்களின் நாடுகளில் வேலை பார்த்து சம்பாதித்து, அந்த வருமானத்துடன் இங்கே அல்லது ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்வார்கள், காணிக்கையோ தசமபாகமோ கேட்காமல்!! தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன கிறிஸ்து அவரின் அப்போஸ்தலர்கள் இருந்த நிலை நாம் அறிந்ததே, இன்றைய ஊழியர்கள் இருக்கும் நிலைகளை நாம் அறிந்ததே, நான் சொல்லுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை!!

கத்தோலிக்க சபையோ, மார்ட்டீன் லூத்தர் கொண்டு வந்த சபை பிரிவோ தசமபாகம் போதித்தது கிடையாதே!! அப்படி என்றால் இன்றைய ஊழியர்கள் மாத்திரம் எப்படி இந்த வழியை திடீர் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்!! வேத புரட்டலுக்கு இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்!!

யெகோவா சாட்சிகளுக்கு இங்கே யாரும் சான்று வழங்கவில்லை!! நீங்களாகவே என்னமோ நான் யெகோவா சாட்சி என்றும் ரஸ்ஸலின் மாணவன் என்றும் நினைப்பில் அவர்களுக்கு விரோதமாக எழுதுவதை எனக்கு பொருத்தி பார்க்கிறீர்கள் அவ்வளவே!! உங்கள் பார்வைக்கு யெகோவா சாட்சிகளை தவிர வேறு யாரும் கள்ள போதகர்களாக தெரியவில்லை?? கள்ள "தீர்க்கதரிசிகளாக" தெரியவில்லை?? நீங்கள் யெகோவா சாட்சிகளை எதிர்க்கவேண்டும் என்றால் தாராளமாக எதிர்க்கலாம், ஆனால் என்னை அவர்களுடன் சம்பந்தப்படுத்தாமல், இதை ஏற்கனவே பல முறை உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன், ஆனால்.........!!!

மீண்டும் அற்புதம்:

//சகோ.கோல்வின் பார்வைக்கு நாங்க விவாதத்துக்கு ரெடின்னு அவங்க வெளிப்படையா சொன்னாலும், திறந்த மனதுடன் வரத் தயார் என்று இன்னும் சொல்ல வில்லை. அவங்க சகோ.சில்சாம் அவர்களை மிரட்டின மாதிரி கேஸ் போடுவோம்னு சொல்லத்தான் செய்றாங்களே ஒழிய முன்ன வர மாட்டாங்கறேங்களே!//

பார்வைக்கு இல்லை, விவாதத்தை குறித்து உங்கள் மைகோவையிடம் நீண்ட விவாதம் அலைபேசியில் நடந்தேறியதை நிச்சயமாக அவர் உங்கள் கூட்டத்தாருடன் பகிர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்!! உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசும் அளவிற்கு நான் பேதையும் இல்லை, பேடியும் இல்லை!! சில்சாம் என்னை தனிப்பட்ட முறையில் எழுதியதற்கு நான் கேஸ் போடுவேன் என்று ஒரு போதும் எழுதவோ சொல்லியதோ கிடையாது!! வேறு எதற்கு என்று நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை!! வேதத்தையும், அதிலிருக்கும் கோட்பாடுகளை குறித்து பேச (விவாதிக்க) விரும்பினால் நிச்சயமாக என் பங்கு உண்டு என்று சொல்லிக்கொள்கிறேன்!! ஆனால் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை குறித்து தான் நாங்கள் விவாதிப்போம் என்றால் ஆதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்பதையும் தெரிவித்திருக்கிறேன், தெரிவித்துக்கொள்கிறேன், அது எனக்கு அவசியமும் இல்லை, நேரமின்மை என்றே நினைத்து இருக்கிறேன்!!

//அவங்க மறைந்திருந்து குழி பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பதுங்கு குழிகளிலிருந்து வெளிக்கொண்டு வந்தால்தான் அவர்கள் பற்றி எல்லாருக்கும் சீக்கிரத்தில் தெரியவரும். சீக்கிரத்தில் யாராவது ஒருத்தர் கோவை பெரியன்ஸ் மேல கேஸ் போடுங்கப்பா....!!!! //

உங்களுக்கு இருக்கும் புத்தியை ஏன் இப்படி வெளிப்படுத்துகிறீகள்!! நான் மறைவாக இருந்துக்கொண்டு என்னை "இரகசிய கிறிஸ்தவன்" என்று சொல்லிக்கொள்வதில்லை!! எதை எழுதினாலும் பகிரங்கமாக எழுதுகிறேன்!! வாங்க யாருக்கு என் மேல் கேஸ் போட ஆர்வமாக இருக்கிறது என்றும் பார்க்கலாமே!! யார் பதுங்கு குழியிலிருந்துக்கொண்டு, "சீக்கிரத்தில் யாராவது ஒருத்தர் கோவை பெரியன்ஸ் மேல கேஸ் போடுங்கப்பா" என்று எழுதியிருப்பது தாங்கள் எப்படி பட்டவர் என்பதை தாங்களே வெளிப்படுத்தியிருக்கிறீர்களே!! என்  மேல் கேஸ் போடும் அளவிற்கு நான் ஒன்றும் அத்துனை பிரபலமாகவில்லையே!! இருந்தாலும் உங்களுக்கு அப்படி பட்ட ஒரு ஆசை (வெறி) இருந்தால் அதையும் செய்யுங்களேன்!!

இடையில் இன்னோரு செருமல்:

//இவங்க கேஸ் (Case) போடுவாங்களா? அல்லது கேஸ் (Gas) விடுவாங்களா? //

இதுக்கு எல்லாம் பதிலா எழுத முடியும்!! வடிவேலு வந்து இடையில் கிச்சு கிச்சு மூட்டி போவது போல் வாசித்து விட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்!! ஆனாலும் அற்புதம் இப்படி கேஸ் போடுங்கள் என்று சொல்லியவுடன் நீங்கள் இப்படி எழுதியது அவருக்கு தான் வருத்தமாக இருக்க போகிறது திரு சேகர்சாமுவேல் அவர்களே!!

மீண்டும் கொல்வின்:

//சகோ. மைகோவைக்கு ஏற்கனவே இது தொடர்பாக அனுபவம் இருப்பதால் அவரே முயற்சிக்கலாமே. இல்லையெனில் நாமே பகிரங்கமாக அவருக்கு அறிவித்தல் விடுத்தால் என்ன? அவர் ஏற்கனவே அறிப்பை விடுத்துவிட்டார்.//

இது விவாதத்திற்கா கேஸ் போடுவதற்கா என்பதில் தெளிவுப்பெற‌ விரும்புகிறேன் திரு கொல்வின் அவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அற்புதம்:

//சகோ.கோல்வின் கோவை பெரியன்ஸிடம் பதில் இல்லை, ஆகவே அவர்கள் கழுவிகிற மீனில் நழுவுகிற மீனாக ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். Citations & Reference எதற்காக கொடுக்கப்படுகிறது என்கிற அடிப்படைப் புரிந்துகொளளுதல் கூட இல்லாமல் இருப்பவர்களிடம் போய் நீங்கள் சொல்வது எந்தளவுக்கு புரிந்து கொள்ளப்படும்? வேதாகமத்தைப் பற்றிய அடிப்படைப் புரிந்து கொள்ளலே இல்லாதவர்களிடம் சத்திய வேதம் குறித்துப் பேசுவதும் பன்றிகளின் முன் முத்தை வைப்பது போன்ற ஒரு செயலே! //

பெரேயன் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் உறுப்பினர் கிடையாது என்று கூடவா தெரியாது அற்புதத்திற்கு!! என் தளத்தில் தேவையான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறாது!! கொல்வின் என்கிறா ஒரு நபர் சொல்லிய பிறகு Citation and Reference குறித்து இத்துனை சர்ச்சை எழும்பியிருக்கிறதே, தளம் துவங்கி இத்துனை காலம் வரை அதை எல்லாம் உங்கள் கூட்டத்தார் ஏன் பின்பற்றவில்லை!! குற்றம் கண்டு பிடிக்கவும் ஒரு தகுதி வேணும் திரு அற்புதம் அவர்களே!! வேத வசனமே எங்களுக்கு Citation and Reference என்று பல முறை சொல்லியாகிவிட்டது, வசனத்துக்கு விளகி பாரம்பரியத்தில் இருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு மனிதர்களின் போதனையை Citation and Referenceஆக தருவது தான் மகிழ்ச்சியாக இருக்கும் போல்!! வேத காரியங்களை பேசும் போது Citation and Reference முக்கியத்துவம் இழந்து போகிறது, அது மார்க் வாங்கவும், ப்ராஜெக்ட் ஸப்மிட் பண்ணவுமே தேவையாக இருக்கிறதே தவிர, தன் சொந்த கருத்துக்களை பதிய அல்ல!! வேதத்தையே ஒதுக்கி வைத்து மனித போதனைகளை நம்பியிருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு முன்பாக வசனங்களை சொன்னது நீங்கள் எழுதியது போல் பன்றிகளின் முன் முத்தை போட்டதாக தான் இருக்கிறது!!

வேதத்தின் புரிந்துக்கொள்ளுதல் அதிகமாக இருப்பது என்பதால் தானே ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று திரிக்கும் கூட்டமாக இருக்கிறீர்கள்!! இதில் எங்களின் வேதாகம தெளிவை பற்றி பேசும் தகுதியே உங்கள் கூட்டத்தாருக்கு கிடையாது!! முதலில் வேதத்தில் இல்லாததை பேசாதீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard