ஞான சூனிய வயதில் "ஞானஸ்நானம்" என்கிற சடங்கிற்கு உட்பட்ட கொல்வின் அவர்கள், அடிக்கடி நைய்யாண்டியாக எழுதும் ஒரு வரி:
//தேவதூதர்களுக்கு கால் கிடையாது. பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தை படைத்து அதன் மூலம் உலகத்தைப் படைத்தது போன்ற பபிலோனிய மதப்புராணக்கதைகளை சொல்பவர்கள். விகர்ப்பமான போதனைகளை செய்பவர்கள்.//
சரி வேசி சபையாரே, தேவதூதர்களுக்கு கால் இருக்கிறது என்றாவது வசனத்தை காண்பியுங்களே!! சர்வவல்லமையுள்ள தேவனை அறியாதவர்களாக அதிலும் திரித்துவத்தில் ஆரம்பகர்த்தாக்காள் இருக்கும் சபையில் இருக்கும் இவருக்கு வசந்தகுமாரை தெரிந்த அளவிற்கு வேதம் தெரியவில்லை!! வசந்தகுமரின் எழுத்துக்களை தானே வேதத்தை காட்டிலும் அதிகமாக நேசித்துக்கொண்டு இருக்கிறீர்!! தேவன் என்று பிசாசையும் தான் எழுதியிருக்கிறது, அதற்காக உங்களை போல் அவனை என்னால் விழுந்து வணங்க முடியாது!! அய்யா கொல்வின் அவர்களே, பாபிலோன் மார்க்கத்தில் வந்தது தான் திரித்துவம் என்பதை கூட அறியாமல் இருக்கிறீர்களே!! ஏன் வசந்தகுமார் இதை குறித்து ஒன்றும் எழுதவில்லையோ!! எல்லாம் சரி அடிக்கடி கொக்கரிக்கும் இந்த வார்த்தைகளுக்கு, தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது என்று நிரூபியுங்களே!! உங்கள் ஆட்கள் தான் அடிக்கடி பரலோகம் நரகம் (!!) விஸிட் அடித்து வருகிறாகளே!! ஒருவனுமா இது வரை இதை குறித்து எழுதவில்லை!! ஆனாலும் என்னை விட ரஸ்ஸலை அதிகம் படித்து வருகிறவர்கள் வேசி சபையார் தான் போல்!!
//இவர்களுக்கு இரசலின் நூல்கள்தான் வேதப்புத்தகம் ஆனால் அதனை வெளியில் சொல்லுவதற்கு வெட்கம்.//
அட போங்கய்யா!! என்னைவிட ரஸ்ஸலை நீங்கள் தான் அதிகம் படிக்கிறீர்கள் போல்!! நான் படிப்பதை சொல்லுவதற்கு வெட்கப்பட மாட்டேன்!! ஆனால் எது என் கருத்தாகி விடுகிறதோ, அதற்கு பின் அது எங்கே இருந்து வந்தது என்கிற ஆராய்ச்சி உமக்கு எதற்கய்யா!!
மருத்துவர் பேதுரு எழுதியது:
//வெட்கப்படுத்திய கோவை என்ற தலைப்பிலேயே வெட்கப்பட்டுப்போனது கோவை பெரியன்ஸ் என்பது தெளிவாகிறது. ஆனால் வெட்கபடுத்தியது சகோ. மைகோவை அல்ல.... அவர்மூலம் செயல்பட்ட திரியேக தேவன் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மனதில்லாமல், சகோ. மைகோவை மீது மனுஷீகமான குற்றச் சாட்டினை வைக்கிறார்கள். //
அப்படீங்களா டாக்ட்ர் அய்யா!! சரீங்க, நீங்க நினைப்பது போல் இருந்துவிட்டு போகட்டுமே!! ஆனாலும் எனக்கு ஒரு சந்தோஷம், என் ஒருவனுக்காக ஒரு தலைப்பை உருவாக்கி உங்களின் வேலை வெட்டியை விட்டு விட்டு எனக்கு விளம்பரம் தேடி தரும் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்!! ஏனென்றால் நீங்கள் "அநேகராக" இருக்கிரீர்களே!! உங்களிடம் ஒதுங்கி இருப்பது வேதத்தின் படி சரி தான்!!
ஜீஸஸ் மை லவ்:
//அருமையான சவுக்அடியான பதில்கள் இருந்தும் திருந்தமாட்டார்கள் , //
திருந்தியவர்களை (வேசி மார்க்கத்தை விட்டு வெளியேனவர்கள்) திருந்தமாட்டார்கள் என்றால் நீங்கள் கருப்பு கண்ணாடி அனிந்துக்கொண்டு இருக்கிறீர்கள் போல், ஆகவே தான் எதை எழுதினாலும் உங்களுக்கு கருப்பாக தெரிகிறது போல்!!
மீண்டும் கொல்வின்:
//ஆயினும் இவர்களுடன் விவாதம் செய்வது முட்டாள்தனமானது. இவர்களைப் பொறுத்தவரையில் ரசலின் நூல்கள் தான் இவர்களின் வேதப் புத்தகம். //
எங்களுடன் விவாதம் செய்வது முட்டாள்தனமானது என்று சொல்லிக்கொண்டு, எங்களுடன் தானே விவாதித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! அப்படி என்றால் நீங்கள் எழுதியது உங்களுக்கு பொருந்துகிறதா!! என்னமோ இவர்கள் எல்லாம் வேதத்தை தாங்கி பிடித்து அதிலிருந்து எழுதுவது போல் ஒரு மமதையில் இருக்கிறார்கள் போல்!! எழுதுவது வசந்தகுமாரை, பேசுவது வேதாந்தமா!!
//சிலவற்றை மாற்றியும் திரித்தும் தங்கள் சபைக்கு ஏற்ற விதமாக மாற்றி பிரசங்கிக்கிறார்கள். இவர் கோவை பெரியன்ஸ் அமைப்புக்கு போப் ஆவார்.//
அதானே, கத்தோலிக்க சபைக்கு தானே போப், மைக்கோவை என்பவர் பெந்தகோஸ்தே சபையை சேர்ந்தவராயிற்றே, அவருக்கு எப்படி போப் பதவி என்கிற ஆதங்கம் கொல்வினுக்கு இருப்பது புரிகிறது!! அய்யா போப் என்பவர் மாற்று போதனை மாத்திரம் அல்ல, சர்வாதிகாரியான ஒரு ஆள் என்பதை அந்த சபையில் இருந்துக்கொண்டு தெரியாது என்று சொல்லாதீர்கள்!! ஏனென்றால் உங்கள் சபை கட்டுப்பட்டு இருப்பது கிறிஸ்து இயேசுவிற்கு அல்ல மாறாக உங்கள் தலைமையான போப்பிற்கே!! என்னை போப் என்று அழைக்கும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாதே, நான் என் தளத்தில் ஒரு போதும் ஒருவரின் பதிவையும் தூக்கியது இல்லை, ஆனால் மைகோவை அவர்கள் நான் அந்த தளத்தில் இருந்த போது, என் எழுத்தையெல்லாம் எந்த ஒரு அறிவிப்புமின்றி நீக்கினார், அந்த விதத்தில் தான் அவரை போப் என்றேன்!!
//நண்பர் மைகோவை உங்களின் பதில்கள் மிக அருமை. நேரடி விவாதத்திற்கு அழையுங்கள். இம்முறை கண்டிப்பாக வீடியோ பதிவு எடுங்கள். அவர்களும் எடுக்கட்டும். பின்னர் அவற்றை பகிரங்கமாக இணையத்தில் பதிப்போம்.//
இது சவால்!! ஆனால் வேதத்திலிருந்து தான் பேச வேண்டும்!! பாரம்பரியத்தை அல்ல!!
//தேவன் இவருக்கு எலியாவின் ஆவியையும், அந்த யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளாராம். இவர் யோவானா? அல்லது எலியாவா? //
கிறிஸ்துவின் ஆவி எனக்குள் இருக்கிறது, தேவனின் ஆவி உங்களுக்குள் வாசம் செய்வதால் நீங்கள் ஆலயம் தானே அன்றி தேவன் அல்ல!! அப்படி தான் யோவானின் ஆவியோ, எலியாவின் ஆவியோ எனக்கு கிடைத்திருப்பதால், நான் யோவான் அல்ல எலியாவில்லை!! ஒவராக வசந்தகுமாரை படித்து விட்டு அதையே எழுதி எழுதி சுயமாக என்ன எழுதுகிறோம் என்றே சிந்திப்பதில்லை போல்!!
//இந்த கோவை பெரியன்ஸ் அடிக்கடி சொல்லுகிற ஒரு வார்த்தை: ” கிறிஸ்து வரும்போது “ . ஆனால் இவர்களின் காட்ஃபாதர் ரசல் 1874லேயே கிறிஸ்து வந்துவிட்டார் என்று நம்பினார். அர்மகதான் யுத்தம் 1914ல ஆரம்பிச்சதா (முதல் உலகப் போரைச் சொல்றார்) சொன்னார். தப்புத்தப்பா நிறைய குழப்பங்களையும் உபதேசங்களையும் விதைச்சார். அவர் வழி வந்த ரசலின் ரசிகக் கண்மனிகள் அவரைப் போலவே குட்டையைக் குழப்புவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. //
அற்புதம் அவர்களின் கருத்து:
எப்படி வேதத்தை அறைகுறையாக புரிந்து இருக்கிற கூட்டத்தாராக இருக்கிறீர்களோ, அப்படியே தான் என்னையும் புரிந்து வைத்திருக்கிறீர்கள்!! எனக்கு காட் (God) மற்றும் ஃபாதர் (Father) எல்லாம் என் தேவன் தான்!! எனக்கு போதகர் என் காட்ஃபாதரின் குமாரன்!! ஆனால் உங்களுக்கு அநேக காட்ஃபாதர்கள் இருக்கிறார்கள், ஒவ்வொன்றாக ஒவ்வொருவரின் முகத்திரையை கிழிக்கிறேன்!! பொறுத்திருங்கள் அற்புதம் அவர்களே!!
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்..." (அப்போஸ்தலர்.16:31)
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள் அப்போழுது தான் நீ இங்கே பதிய முடியும் என்கிற கள்ள போதகன் சில்சாம் அந்த தளத்தின் அடுத்த போப் போல்!!
மீண்டும் அற்புதம்:
//இவர்களின் புரட்டுக்கு ஒரு அளவில்லையா? அவர்கள் கொடுத்திருக்கும் ஆதார வசனமாகிய யோவான் 10:36 என்ன சொல்கிறது? பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?//
அய்யா அற்புதம் அவர்களே, ஆனாலும் எந்த அற்புதத்தின் பெயரில் ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று திரிக்கிறீர்கள்!! இதைவிடவா வேதபுரட்டல் இருக்கிறது!! பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்துவை என்று கூட புரிய முடியாமல் இருக்கிறீகள் என்பது ஆச்சரியம் தான்!! தேவன் கிறிஸ்துவை பரிசுத்தம் செய்து அனுப்பினார் என்று எழுதியிருக்க, வேதப்புரட்டர்களோ, போப்மார்களோ, இல்லை இல்லை, தேவனே கிறிஸ்துவாக வந்தார் என்றால் அதைவிடவா ஒரு வேதபுரட்டல் இருக்கிறது!!
//ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஆனால் இவர்கள் பானையைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது. கோவை பெரியன்ஸ் போன்ற சத்திய விரோதிகள் சாத்தானின் ஏஜெண்டுகளே அல்லாமல் வேறொன்றுமில்லை. //
மண்ணிக்கனும் உங்களின் ஏஜண்ட் நான் அல்ல!!
ஜான் எழுதியதாக மீண்டும் கொல்வின்:
//நண்பர் பெரேயன்
//மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். // தாம் ஊழியர்கள் என்கிற போர்வையில் எத்துனை பேரை வஞ்சிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தார் மூலமாக தான் வஞ்சகம் உண்மையான சபையை பீறி போட்டதே தவிர, அற்புதம் எழுதுவது போல் ஏதோ ஒரு சிறிய கூட்டம் வஞ்சிக்காது, கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி, அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள்!!//
இது என்ன ஒரு சின்னபுள்ள தனமான கருத்து. உங்கள் கூட்டத்துடன் பேச ஆரம்பித்து சில நீங்கள் வேதம் வாசிக்கும் பெரேயா (??) முறைமையை புரிந்து கொண்டேன். நீங்கள் காட்டிய வசனம் (மத்தேயு 24:4) அநேகர் வந்து வஞ்சிப்பார்கள் என்றுதான் சொல்லுகிறதே தவிர தனி ஆளாகவோ அல்லது சிறு கூட்டமாக வந்து 'அருமையான வேதாகம வகுப்புகள்" என்று கூவி அழைத்து வஞ்சிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. கிழே உள்ள வசனத்தில் சிலர் என்று வருகிறது உடனே வஞ்சிக்கிறவர்கள் சிறு கூட்டமாக (உதாரணமாக உங்கள் கூட்டத்தை போல) வருவார்கள் என்று முடிவு செய்ய முடியுமா?
முதுகில் குத்திவிட்டு நண்பர் என்று அழைப்பது அழகல்ல!!
உங்களினிந்த பதிவு மூலமாக நீங்களே பதில் தந்திருக்கிறீர்கள்!! நானும் அதையே தான் சொல்லுகிறேன், வேதம் சொல்லுகிறபடி அநேகர் வந்து தான் அநேகரை வஞ்சிப்பார்கள்!! நீங்கள் எழுதுவது சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கிறது!! பால் வெள்ளையாக இருக்கிறது என்று சொன்னால், பால் கருப்பாக இல்லை என்று ஒருபோதும் சொல்லப்படவில்லையே என்று பேசுகிற உங்களிடம் என்னத்தை பேச!!
உங்களிலும் சிலர் எழும்பி என்று பவுல் சொன்னது யாரிடம் என்று வாசித்து பாருங்கள், அதன் பின் வசனத்தை பதியுங்கள்!!
//நெசமாவா? நான் சாத்தான் மட்டும்தாம் விசாலமான பாதையில் நடப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லாம் இடுக்கமான வாசல் வழியை நடப்பவர்கள் என்றும் அல்லவா நினைத்தேன். எல்லாரும்தான் பரலோகம் போகப்போறோமே எப்படி நடந்தா என்ன?
இன்னும் எத்துனை காலம் தான் ஏமாற்றுவீர்களோ!!//
உங்களை நடுத்துபவன் சொல்லுவதை நீங்கள் நம்பிக்கொண்டு இருப்பதற்கு நானா பொறுப்பு!! எல்லோரும் பரலோகம் போகப்போகிறோம் என்று நான் ஒருபோதும் எழுதியதில்லை!! எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று தான் வேதம் சொல்லியப்படி எழுதியிருக்கிறேன்!! வேதத்தை காட்டிலும் வசந்தகுமாரை நம்புவோருக்கு இது புரியாது!! இன்று கத்தோலிக்கர்கள் குழந்தை ஞானஸ்நானம் எடுத்து இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார்கள், தசமபாகம் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் இரட்சிக்கப்ட்டிருக்கிறோம் என்கிறார்கள், தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன கிறிஸ்துவை பென்ஸ் காரிலும், தங்கம் வைரம் வைடூரியம் நிறம்பிய அறையில் தரிசிப்பவர்களும், கோபுரங்கள் கட்டி அதில் வசிப்பவர்களும், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பரலோகம் போகிறோம் என்று சொல்லி, என் சபைக்கு வா நீ பரலோகம் சென்று விடுவாய் என்று சொல்லுபவர்கள் எல்லாம் பரலோகம் போய்விடுவார்கள் என்று நீங்கள் தானய்யா போதிக்கிறீர்கள்!! இரட்சிப்பு என்றால் பரலோகம் சென்று விடுவது என்று நீங்கள் தானய்யா போதிக்கிறீர்கள்!! நான் எழுதாதை நான் எழுதியதாக சொல்ல வேண்டாம் என்று சொல்லிக்கொள்கிறேன்!!
ஆனாலும் ஒன்றை ரசிக்க முடிந்தது, இவர்கள் யாவரும் குழந்தைகள் தான் என்று, வேறு ஒன்றும் இல்லை, இவர்களின் அவர்தார் படங்கள் எல்லாம் குழந்தைகள் கொண்டது என்று சொல்லுகிறேன்!! மற்றப்படி இப்பிரஞ்சத்தின் தேவனின் உபதேசம் இவர்களில் தெளிவாக வெளிப்படுகிறது!!
சில்சாம் திருடனின் அவ்தார் படத்தைப்பார்த்தும் அவனை தளத்தில் விட்டுவைத்திருக்கிறார்கள். வேத வசனத்தை ஆராயாமல் வெறும் ஒரு மொழிபெயர்ப்பு KJV 1611(அதில் 14 அதிக புத்தகங்கள் இருந்தது) வேதத்தை வைத்து 'படம்' காட்டிக்கொண்டிருந்தால் சாத்தான் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து (நித்திய ஜீவனோ?) இவர்கள் அரைகுறை வேத ஞானத்தில் 'குத்திக்'கொண்டுதான் இருப்பான்.