''தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்''.
எபிரெயர் 11 - ஆம் அதிகாரத்தில், விசுவாசத்தைப் பற்றி பவுல் அருமையான விவரங்களை அளித்தார். முதலில் விசுவாசம் என்றால் என்னவென்று ரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டார், அதன்பின் விசுவாசத்தில் சிறந்து விளங்கியவர்களான நோவா, ஆபிரகாம் போன்ற ஆண்களையும், சாராள், ராகாப் போன்ற பெண்களையும் பட்டியலிட்டார். இந்த விஷயங்களை மனதில் வைத்துதான் அவர் சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினார். 'விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவருமான இயேசுவின் மீதே கண்களை ஒருமுகப் படுத்துங்கள்''. இயேசுவின் மீது கண்களை ஒருமுகப்படுத்தும்படி அவர் ஏன் சொன்னார் ?
எபிரெயர் ௧௧- ஆம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஆண்களும் பெண்களும் கடவுளுடைய வாக்குருதியில் பலமான விசுவாசம் வைத்திருந்த போதிலும், மேசியாவின் மூலமும், பரலோக அரசாங்கத்தின் மூலமும், பரலோக அரசாங்கத்தின் மூலமும் கடவுள் தமது வாக்கை எவ்வாறு நிறைவேற்றுவார் என்பது பற்றிய எல்லா விவரங்களையும் அவர்கள் அறிந்துக்க வில்லை. இந்த அர்த்தத்திலே அவர்களது விசுவாசம் முழுமையடையாது இருந்தது. சொல்லப் போனால், மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பலவற்றை எழுதுவதற்காக யேகோவாவால் உபயோகிக்கப் பட்டவர்களும் கூட, தாங்கள் எழுதிய விஷயங்களின் கருத்தை முழுமையைப் புரிந்து இருக்கவில்லை. அந்தத் திர்க்கதரிசனங்களை இயேசு எப்படி எல்லாம் நிறைவேற்றினார் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே விசுவாசம் பரிபூரணமடையும், அதாவது முழுமையடையும். ஆகவே, ''விசுவாசத்தின் அதிபதியாகவும், விசுவாசத்தைப் பரிபூரனமாக்குபவராகவும்'' இயேசு வகிக்கிற பங்கைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு அதை மதித்து உணர்வது எவ்வளவு முக்கியம்!!!!!!!!
எபிரெயர் 12 : 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )