//அந்த பாபிலோன் சபையாகிய வேசி சபை எது? இக்கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.பதில் தெரிந்த அன்பர்கள் தகுந்த வசன ஆதாரத்துடன் தங்கள் பதிலைக் கூறலாம். ///
சகோதரர் ''அன்பு'' அவர்கள் வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்? என்ற திரியில் அருமையான கேள்வியே முன்வைத்து இருக்கிறார். நிட்சயமாக இந்தக் வெளிப்படுதல் 14 :8 வசனத்துக்கு கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்களோ அல்லது திருத்துவதுக்கு ஆதரவாக பேசுபவர்களோ இதற்கு பதில் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. காரணம் பாபிலோனிய மகா வேசி குறிப்பது உலகத்தில் உள்ள பொய் மதத்தை அதில் ரோமன் கதோலிக்கமும்; அதில் இருந்து பிரிந்து வந்த புரட்டஸ்தாந்து சபையும் போதனைகளையும் குறிக்கிறது. மற்றும் ''அன்பு'' அவர்கள் கேட்ட கேள்விக்கு நானும் எனக்கு தெரிந்த பதிலை சொல்வது நலமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் கிழேஎழுதும் பதிவுகளில் ஏதும் உண்மை சத்தியத்துக்கு அல்லது போதனைகளுக்கு முரணாக இருந்தால் அன்பு அவர்கள் அதை தெளிவுபடுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். காரணம் நான் வயதில் சிறியவனாக இருப்பதினால் வேத அறிவு கூட அது போலவே இருக்கும். நன்றி
மகா பாபிலோனை அடையாளம் காணுதல்:- வெளிப்படுதல் புத்தகத்தில் உள்ள சில வார்த்தைகளை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வெளி 1 : 1 ''சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்''.
உதாரணத்துக்கு, நெற்றியில் ''மகா பாபிலோன்'' என்ற பெயர் எழுதப்பட்டு இருந்த ஒரு வேசியேப் பற்றி வெளிப்படுதல் சொல்கிறது. அந்த வேசி, 'கூட்டங்கள் மீதும் ஜாதிகள் மீதும்' உட்கார்ந்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருகிறது.
வெளி 17 : 1 ,5 ,15 ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; 5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 15. பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
இங்கே குறிப்பிட்டுள்ளபடி சொல்லர்த்தமான எந்தப் பெண்ணாலும் அப்படி உட்க்கார முடியாது; ஆக, மகா பாபிலோன் அடையாள அர்த்தமுடயவையாகவே இருக்கவேண்டும். அப்படியானால், அந்த வேசி எதற்கு அடையாளமாக இருக்கிறாள்?
அடையாளப்பூர்வமாக அந்தப் பெண், ''பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம்'' என்பதாக வெளிப்படுதல் 17 :18 விமர்சிக்கிறது.''நகரம்'' என்ற வார்த்தை ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் தொகுதியே குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ''மகா நகரம்'' ''பூமியின் ராஜாக்கள்'' மீது அதிகாரம் செய்வதால், மகா பாபிலோன் என்ற பெயருடைய அந்தப் பெண் மிகுந்த செல்வாக்குள்ள உலகளாவிய ஊர் அமைப்பாகத் தான் இருக்கவேண்டும். அதனால், மகா பாபிலோனை ஓர் உலகப் பேரரசு என்று மிகச் சரியாகவே நாம் அழைக்கலாம்.
எத்தகைய பேரரசு அது?
அது ஒரு மதப் பேரரசு. இந்த முடிவுக்கு வர வெளிப்படுதல் புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்பதைக் அடுத்த பதிவில் கவனிப்போம் .......
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
வெளிப்ப 17 :1 ,2 ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; 2. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி'';
யாக்கோபு 4 :4''விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்''.
ஒரு பேரரசு என்பது அரசியல் பேரரசாகவோ, வர்த்தகப் பேரரசாகவோ, மதப் பேரரசாகவோ இருக்கலாம். மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் ஓர் அரசியல் பேரரசாகவோ இருக்க முடியாது. ஏன்னெனில் ''பூமியின் ராஜாக்கள்'' அதாவது இவ்வுலக அரசியல் அமைப்புக்கள், அவளோடு ''வேசித்தனம் பண்ணியதாக'' கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது. வேசித்தனம் செய்தது இவ்வுலக ஆட்சியாளர்களோடு அவள் கூட்டுச் சேர்ந்து இருப்பதைக் குறிக்கிறது. அதோடு, அவள் ''மகாவேசி'' என்று அழைக்கப்படுவதட்கான காரணத்தையும் அது அளிக்கிறது.
வெளி 18 அதிகாரம் 3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். 9. அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி, 10. அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். 15. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; 16. ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். 17. மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
மகா பாபிலோன் ஒரு வர்த்தகப் பேரரசாகவும் இருக்க முடியாது. ஏனெனில் ''பூமியில் வர்த்தகர்'' அதாவது வணிக அமைப்புக்கள், அவளுடைய அழிவின் போது அவளுக்காகத் துக்கித்து அழுது கொண்டிருப்பார்கள். சொல்லப் போனால், ராஜாக்களும் வர்த்தகர்களும் மகா பாபிலோனைத் ''தூரத்திலிருந்து'' பார்த்துக் கொண்டிருப்பது போல விவரிக்கப்பட்டிகிரார்கள். எனவே, மகா பாபிலோன் என்பது ஓர் அரசியல் பேரரசும் அல்ல, வர்த்தகப் பேரரசும் அல்ல, ஆனால் அது ஒரு மதப் பேரரசு என்ற முடிவுக்கு வருவதே நியாயமானது.
**மகா பாபிலோன் எல்லா ஜாதிகளையும் தனது ''சூனியத்தால்'' மோசம் போக்கிறாள் என்ற வசனம், அவள் ஒரு மதப் பேரரசு தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது**.
வெளிப் 18 :23'' விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே''.
எல்லா விதமான சூனிய வேலைகளுக்கும் மத சமந்தமானவை என்பதாலும், அவற்றிற்குப் பேய்கள் தான் காரணம் என்பதாலும் மகா பாபிலோன் ''பேய்களுடைய குடியிருப்பு'' என்று பைபல் அழைப்பதில் ஆச்சரியமே இல்லை. ( வெளிப் 18 :2 / உபாகமம் 18 :10 -12 ) இந்தப் பேரரசு 'தீர்க்கதரிசிகலையும்' 'பரிசுதவாங்களையும்'' துன்புறுத்துவதன் மூலம் மெய் வணக்கத்தைச் தீவிரமாய் எதிர்த்து வருகிறது எனவும் விவரிக்கப் பட்டுள்ளது:
வெளி 18: 24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.
உண்மையில், மெய் வணக்கத்தைச் மகா பாபிலோன் அந்தளவு அதிகமாக வெறுப்பதால், ''இயேசுவினுடைய மனவாட்டிகளை'' அவள் கொடூரமாகத் துன்புறுத்தி, கொலைகூட செய்கிறாள். வெளி 17 : 6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆகையால், மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் பொய் மத உலகப் பேரரசே அடையாளப்படுத்துகிறாள். யேகோவா தேவனை எதிர்த்து நிற்கிற எல்லா மதங்களுமே அந்தப் பொய் மதங்களில் அடங்கும்...... பாபிலோனியன் நகரமாகிய வேசியின் பதிவுகள் தொடர்ந்து வெடிக்கும் .....
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )