அது அவர்களை மிக ஆபத்தான நிலையில் வைத்து இருக்கிறது. திருத்துவக் கோட்பாடு பைபளில் காணப்படுகிறதும் இல்லை, பைபல் போதிக்கிறதொடு பொருத்தமாயும் இல்லை என்பதற்கு அத்தாட்சி மறுக்கமுடியாது இருக்கிறது. இதற்கான விளக்கம் பைபளில் மற்றும் இந்த தளத்தில் போதிய அளவு விளக்கம் கொடுக்கப்பட்டும் இருக்கிறது. திருத்துவ வாதிகள் உண்மையான கடவுளைப் படுமோசமாய்ச் தவறாகச் திரித்துக் காட்டுகிறது. எனினும், இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:
''உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்''
இவ்வாறு, தங்கள் வணக்கம் ''உண்மையோடு''' அதாவது கடவுளுடைய சொந்த வார்த்தையில் குறித்துவைக்கப்படுள்ள சத்தியத்தைப் பொருந்த இல்லாதவர்கள், ':-
6 . உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7. மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
இது பைபளின் தெளிவான சத்தியன்களுக்குப் பதில் மனித
பாரம்பரியங்களைப் தெரிந்து கொண்டு ஆதரித்து வாதாடும் இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளோருக்கு அதே வலிமையுடன் பொருந்துகிறது.
திருத்துவதைக் குறித்து, அதன் உறுப்பினர் ''புரிந்துகொள்ளமுடியாதவர்கள்''' என்று அதநேசியன் விசுவாசப்பிரமானத்தில் சொல்லிருகிறது. இந்தக் கோட்பாட்டைப் போதிக்கிறவர்கள் அது ''மர்மம்'' என அடிக்கடி கூறுகின்றனர். ''நாங்கள் அறிந்திருகிறதைத் தொளுதுகொள்கிறோம்''' என்று இயேசு சொன்னபோது சந்தேகமில்லாமல், இத்தகைய ஒரு திருத்துவக் கடவுள் இயேசுவின் மனதில் இல்லை.
''நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது'' என்று யோவான் எழுதக் கூடியவராக இருந்தார்.
நீங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிரிர்களா?
1 . வின்னைமையான கேள்விகள் நம் ஒவ்வொருவரையும் எதிர்படுகின்றனர்:- நாம் சத்தியத்தை உள்ளப்பூர்வமாய் நேசிக்கிறோமா? 2 . எல்லாரும் சத்தியத்தை உண்மையாய் நேசிக்கிர்தில்லை. பலர் சத்தியத்தின் மீதும் கடவுள் மீதுமுள்ள அன்புக்கு மேலாகத் தங்கள் உறவினர்களின் மற்றும் கூட்டாளிகளின் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதைப் வைதிருகின்றனர்.
II தெசலோனிக்கேயர் 2 : 9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
யோவான் 5 : 39. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. 41. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ஆனால், இயேசு தம்முடைய பரலோகப் பிதாவிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் சொன்னது போல: ''ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்''' குறிக்கிறது. மேலும் சங்கீதம் 144:15 - ல் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.:- ''இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது''.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )