kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கத்தோலிக்க சபை சரியான சபையா!?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கத்தோலிக்க சபை சரியான சபையா!?


1 தீமோத்தேயு 4:1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். 2. விவாகம்பண்ணாதிருக்கவும், 3. விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

தேவ ஆவி வெளிப்படுத்தியிருக்கிறபடி, அதை பவுல் வார்த்தைகளால் தீமோத்தேயுவிற்கு ஒரு தீர்கதரிசனம் சொல்லுகிறார்!! பிற்காலங்களிலே, பிற்காலம் என்பது ஏதோ கடைசி காலம் இல்லை, அதன் சரியான மொழிப்பெயர்ப்பு, '' என்று தான் உள்ளது, அதாவது தொடர்ந்து வரும் காலத்திலேயே, சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கு செவிக்கொடுப்பார்கள் என்றும் விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் என்று நடந்தேறிய ஒரு காரியமாக நமக்கு முன் இருக்கிறது!! இது வாசிக்கும் போது எல்லாம், என்னமோ இனி தான் இந்த பொய்யர்களும் மாயத்தில் விழுவார்கள் என்று நினைக்க வேண்டாம்!! அவர்கள் எப்படி பட்ட போதனைகளை தருவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் பவுல்!!

1. விவாகம்பண்ணாதிருக்கவும்!! எந்த சபையில் இது நடந்தேறியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்!! சிலர் கத்தோலிக்க சபையை குறித்து தவறாக ஒன்றும் எழுதக்கூடாது என்று மிரட்டியும், அன்புடனும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்கள் அறிவார்கள்!! விவாகம்பண்னாதிருக்கவும் என்கிறதை ஒரு சட்டமாக கொண்டு வந்தது முதலில் ரோமன் கத்தோலிக்க சபையே!! இதை பிசாசின் உபதேசம் என்றும் வஞ்சிக்கிற ஆவிகளின் மாயையினால் வருகிற போதனையை போதிக்கும் ஒரு சபையை நான் தவறு என்று எழுதுவதில் என்ன தவறு!! இந்த சபையை வேதமே வேசி சபை என்று சொல்லியிருக்கிறது, வெளிப்படுத்தின விசேஷத்தில்!! கத்தோலிக்க சபை சரியானது தான் என்றால் ஏன் மார்ட்டீன் லூத்தர் அதை எதிற்து வர வேண்டும்!! இத்துனை சொல்லும் நீங்கள் ஏன் கத்தோலிக்க சபையில் இல்லாமல் அந்த சபையின் ஆராதனையில் பங்கு கொள்ளாமல் இருக்கிறீர்களாம்!! அப்படி என்றால் பொய்யான போதனை என்று ஒப்புக்கொள்ள வேண்டும்!! திரித்துவம் என்கிற ஒரே போதனையில் இனைந்திருப்பதால் அந்த சபை நல்ல சபை என்றால் அதே சபையில் இருக்க வேண்டியது தானே!! கத்தோலிக்க சபை குறித்து எழுதக்கூடாது என்று சொல்லுகிறவர்கள் வாருங்கள் விவாதத்திற்கு, ஏன் எழுதக்கூடாது என்று!! ஒரு வேளை நீங்கள் கத்தோலிக்க சபையினராக இருந்தாலும் பதில் உண்டு, ஒரு வேளை நீங்கள் கத்தோலிக்க சபையை சாராதவராக இருந்தால் அதற்கு கேள்விகள் உண்டு!!

விவாகம் பண்ணாமல் இருக்க வேண்டும், நீள அங்கியை தரித்துக்கொள்ள வேண்டும் போன்ற போதனைகளை கொண்டுள்ள கத்தோலிக்க சபையை குறித்து தான் பவுல் தீர்க்கதரிசினமாக எழுதியிருக்கிறார்!!

2. தேவன் படைத்த போஜனப்பதார்த்தங்களை சாப்பிட கூடாது என்று லெண்ட் நாட்கள் என்று ஒன்று உருவாக்கி அதில் கறி மீண் சாப்பிட கூடாது என்கிற ஒரு கட்டளை உருவாக்கியது ரோமன் கத்தோலிக்க சபை!! பிற்பாடு அந்த கோட்பாட்டை கொண்டு வந்ததற்கு வேறு பல காரணங்கள் காட்டினாலும், இதையும் பிசாசுகளின் உபதேசம் தான் என்று பவுல் தெளிவாக சொல்லியிருக்கிறாரே!! அவர் சொன்னதை நான் எடுத்து சொல்லுகிறேன், அவ்வளவே!!

இதை தவிர விசுவாசத்தை விட்டு விளகி போன இவர்கள் என்ன விதமான ஆராதனைகளை சபைக்குள் புகுத்தினார்கள் என்பதற்கு நானே சாட்சி!! நான் சுமார் என் 32 வயது வரையில் கத்தோலிக்கனாக தான் இருந்தேன், அதில் உள்ள அனைத்து போதனைகளும், தந்திரங்களும், தவறுகளும் எனக்கு அத்துப்படி!! ஆனாலும் கத்தோலிக்க மக்களை நான் மிகவும் நேசிப்பேன்!! நான் எதிர்ப்பது அந்த சபையை தானே அன்றி அந்த மக்களை அல்ல‌!!

தொடரும்........................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆழமாக செல்லாமல், மேலோட்டமாகவே அந்த சபையில் நடக்கும் சில வித்தியாசமான போதனைகளும் ஆராதனைகளும், மனித போதனைகளையும் பார்ப்போம், அதன் பின் நான் கத்தோலிக்க சபையை தப்பான சபை என்று ஏன் எழுதுகிறீர் அல்லது எழுதக்கூடாது என்பவர்கள் கேள்வி கேட்கட்டும்!!

1. தங்களை "தந்தை" என்று அழைத்துக்கொள்ள பிரியப்படுகிறார்கள்!!

மத்தேயு 23:9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10. நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

முதல் முதலில் குருக்கள் என்றும் சாதாரன மக்கள் என்றும் பிரித்து (Priestly/ Laity) அதை ப்ரொடஸ்டண்ட் சபைகள் தொட்ரந்து அதன் பின் பெந்தகோஸ்தேயில் பாஸ்டர் / விசுவாசி என்கிற பிரிவினை இருக்கிறது!! இது வேதத்தின் படி தவறே!! ஏனென்றால் வேதம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோரை குறித்து சொல்லுவது.

1 பேது 2:9. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

இப்படி எல்லாரும் ஒரே நிலையில் இருப்பவர்களாக இருக்க, இந்த க்லாசை பிறித்து வைத்தது கத்தோலிக்க சபையே!! இதை சரி என்று சொல்லவா!!

2. ஜெபமாலை எனும் ஒரு புதிய ஜெபிக்கும் முறையை கண்டுபிடித்தார்கள்!!

1090ல் துறவியான பேதுருவால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின் 1208ல் புனிதர் டாமினிக் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த ஜெபமாலையை கொண்டு ஜெபிக்கும் முறை பிற மார்க்கங்களான ஹிந்து, இஸ்லாமியர்கள், புத்தர்கள் இன்னும் பல மதங்களில் உள்ள ஜெபிக்கும் முறையை கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தார்கள் (இது இருண்ட காலத்தில் நடந்த விஷயம், வேதத்தை மறைத்து வைத்து மனித போதனைகள் தினிக்கப்பட்ட காலம்)!! இதையும் சரி என்று சொல்ல சொல்லுகிறீர்களா!!

3. என்றும் கன்னி மரியாள் என்று மரியாளின் நிலை உயர்த்தப்படுதல்!!

கிறிஸ்து கர்ப்பத்தில் உற்பவித்த போது மரியாள் கன்னியாக இருந்தது உண்மை, ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு அதன் பின் இன்னும் அநேக பிள்ளைகளை பெற்றெடுத்த பிறகும் மரியாளை என்றும் கன்னி மரியாள் என்று சொல்லுவது நியாயமா!!

மத்தேயு 13:55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56. இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,

அது மாத்திரம் இல்லை, மனிதர்களுக்கு தேவனுக்கும் ஒரே மத்தியஸ்தர் கிறிஸ்து என்று வேதம் சொல்லுவதை சற்றும் அசட்டை செய்யாமல், மரியாளும் உடன் அல்லது துனை பரிந்துரையாளர் அல்லது மத்தியஸ்தர் என்று சொல்லுவதும் நியாயமாகுமா!!

1 தீமோத்தேயு 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

I யோவான் 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

வசனங்கள் இப்படி சொல்ல மரியாளை மத்தியஸ்தராகவோ பரிந்து பேசுபவராகவோ போதிக்கும் சபை சரி என்று சொல்ல சொல்லுகிறீர்களா!!

கத்தோலிக்கர்கள் மரியாளை போற்றி துதித்து ஆராதித்து பல பாடல்கள் எழுதி பாடியிருக்கிறார்கள் (இதற்கு நானே சாட்சி)!! இதையும் சரி என்று சொல்ல சொல்லுகிறீர்களா!!

4. விக்கிரக ஆராதனை செய்து வரும் ஒரு சபை!!

தேவனால் மிகவும் அறுவறுக்கப்பட்ட ஒரு காரியமும், யூதர்களுகு சொல்லும் போது அதை கட்டளையாகவே வைத்தவர் தேவன்!! விக்கிரக ஆராதனை கூடாது என்று!! ஆனால் கத்தோலிக்க ஆலயங்களில் அலங்காரமான விக்கிரகங்கள், தங்கத்தினால் ஆன விக்கிரகங்கள், இப்படி பல விதமான விக்கிரகங்கள் இருப்பதையும், அதை சபை மக்கள் விசுவாசத்தோடு தொட்டு வணங்குவதையும், அதை தெரு எங்கும் தேரில் அமர்த்தி கூட்டி செல்வதையும், வருடத்திற்கு ஒரு முறை விழா என்கிற பெயரில் அந்த விக்கிரகத்தை அலங்கரித்து நமஸ்கரிப்பதையும் கத்தோலிக்க சபை சொல்லி தருகிறது!! இதுவும் சரியா!!

இப்படி இன்னும் இருக்கிறது, இத்துனை இருந்தும் "நீர் கத்தோலிக்க சபையை குறை கூறி எழுதாதீர்" என்கிற சொல்லுக்கு ஆளாகிறேன்!! சரி நண்பர்களே, வேதத்திற்கு புறம்பான ஒரு கருத்தை கொண்டுள்ள இந்த சபையை ஆதரித்து எழுத சொல்லுகிறீர்களா!! ஏன் எதிர்த்து எழுதக்குடாது என்கிற காரணத்தை தெரியப்படுத்துவீர்களா!!

தொடரும்..............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard