kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்


Executive

Status: Offline
Posts: 425
Date:
யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்


யௌவன ஜனம் தள நிர்வாகி சில்சாமின் ஒரு விமர்சனம், சில நாட்களாக நம் விவாத மேடைகளுக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருப்பதை அனைவரும் அறிவர். சர்ச்சைக்குரிய அந்த விமர்சனத்தை நீக்குவதற்கு சில்சாம் தயாராயிருப்பதாக அவரது பதிவுகளிலிருந்து நான் அறிகிறேன். ஆயினும் அவரது விமர்சனத்தை மேற்கோள் காட்டி பதியப்பட்ட பதிவுகள் என்னாகும் என்பது அவரது கேள்வியாயுள்ளது.

//எனது பெயர் விவரம் "கோவை வெறியன்" அவர்களது தளத்தின் குறிப்பிட்ட திரியிலிருந்து நீக்கப்பட்டவுடனே சர்ச்சைக்குரிய வரிகள் என்னுடைய கட்டுரையிலிருந்தும் நீக்கப்படும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;அதேபோல இந்த வரிகளை மேற்கோள் காட்டி அவர் எழுதியிருப்பவையும் நீக்கப்படவேண்டியிருக்குமே;அதை என்ன செய்வது என்று புரியவில்லை..!//

//எனது விமர்சனத்திலிருந்து சர்ச்சைக்குரிய வரிகளை நீக்குவது குறித்து நான் நியாயமான ஐயத்தையே எழுப்பியிருக்கிறேன்;ஏனெனில் இன்றைக்கு என்னை நீக்கச் சொல்லி நீங்கள் மிரட்டிக்கொண்டிருக்கும் அதே வரிகளின் அடிப்படையில் அன்பு அவர்கள் ஒரு கட்டுரையையே எழுதிவிட்டார்;நான் என்னுடைய வரிகளை நீக்கினாலும் என்னுடைய வரிகள் வெவ்வேறு தளங்களில் சூழலில் இன்னும் இருக்குமே என்கிறேன்;//

அவரது ஐயத்தில் நியாயம் உள்ளது. சர்ச்சைக்குரிய அவரது விமர்சனத்தை  இனிமேலும் யாரும் படிக்கக்கூடாது, அதினிமித்தம் யாரும் மனம் நோகக்கூடாது என்பதே எனது விருப்பம்.

எனவே சில்சாம் தனது விமர்சனங்களை நீக்கினால், அதை மேற்கோள் காட்டி எனது தளத்தில் பதியப்பட்ட அத்தனை பதிவுகளும் நீக்கப்படும் என நான் உறுதிகூறுகிறேன். கோவைபெரியயன்ஸ் தளத்தில் பதிக்கப்பட்ட பதிவுகளையும் நீக்குவதற்கு சகோ.பெரியன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே இனியும் காலந்தாழ்த்தாமல், உடனடியாக சில்சாம் தனது விமர்சனத்தை நீக்கும்படி வேண்டுகிறேன். இதுபற்றி சில்சாமுக்கு ஆலோசனை கூறும்படி ஜாண், கொல்வின், எபி, ஜோசப் ஆகியோரை வேண்டுகிறேன்.

இவ்விஷயத்தில் யாரும் கவுரவம் பார்க்கவேண்டாமென வேண்டுகிறேன். விமர்சனத்தை முதலில் பதித்தவர் சில்சாம்தான், எனவே அவர்தான் முதலில் தனது பதிவை நீக்கவேண்டும்.

இவ்வேண்டுகோளை பெரியன்ஸ்-ன் நலனுக்காக நான் விடுப்பதாக யாரும் கருதவேண்டாம். இவ்விஷயத்தால் யாருக்கு அதிக பாதிப்பு என்றெல்லாம் நாம் நினைக்கவேண்டியதில்லை. மொத்தத்தில் எவருமே பாதிக்கப்படக்கூடாது என்பதே எனது விருப்பம்.

எனது வேண்டுகோளை Good sense-ல் எடுத்து சில்சாம் செயல்படுவார் என நம்புகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

இத்தளத்தில் பதியப்படும் எந்தவொரு பதிவையும் உடனுக்குடன் பார்த்து பதில்தருகிற “யௌவன ஜனம் தள உறுப்பினர்கள்”, இத்திரி பதிக்கப்பட்டு சுமார் 9 மணி நேரமாகியும் குறிப்பிடத்தக்க பதிலைத் தரவில்லை. சகோ.எபி மட்டும் நியாயமான முறையில் தந்து வேண்டுகோளை விடுத்துள்ளார். அவரது வேண்டுதலையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே சர்ச்சைக்குரிய விமர்சனம் நீக்கப்படவேண்டும் என்ற எண்ணம் சில்சாமுக்கும் இல்லை, அவரது சகாக்களில் எபியைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என அறிகிறேன்.

deleted



-- Edited by anbu57 on Thursday 24th of March 2011 11:15:07 PM



-- Edited by anbu57 on Friday 25th of March 2011 09:45:45 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்


நான் என் எழுத்து மூலமாகவே தெரிவித்து விட்டேன், அவர்கள் நீக்கினால் நான்நீக்குவேன் என்று!! இதற்கு மேலும் முரண்டு பிடிப்பது என்பது இதை ஒரு தன்மானப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டிருப்பதால் தானோ!! இப்பவும் தான் எழுதிய கருத்தில் தவறாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள மனதில்லாதும் சில்சாமின் நண்பர்களும் (எபி, கொல்வின் என்பவர்களை தவிர) அதை குறித்து சில்சாமிற்கு எந்த ஒரு அறிவுறையும் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!! ஈகோ எதற்கு உதவாது என்பதை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!! எழுதியது தவறு என்று ஒப்புக்கொண்டு சர்ச்சைக்குறிய பதிவை மாத்திரம் நீக்கினால் போதும், நான் அது சம்பந்தமான என் எல்லா பதிவுகளையும் நீக்கி விடுவேன் என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்!! அதற்கு மேல் உங்கள் இஷ்ட்டம்!!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேச பற்று ராணுவத்தாரையும் தூஷிக்கும் சில்சாமுக்கு எச்சரிக்கை!! என்கிற பதிவு முற்றிலுமாக நீக்கி விட்டேன்!! இது ஒரு ஈகோ பிரச்சனையோ இல்லை என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியதற்காக தொடங்கப்படவில்லை!! வாசித்த அனைவருக்கும் தெரியும்!! மேலும் சகோ சோல் சொல்யூஷன் எழுதியது அவரின் ஆதங்கமே, அவரும் விமான படையில் நேர்த்தியாக 20 வருடங்கள் பணியார்றி ஓய்வு பெற்றவர்!! அவர் பதிவு செய்ததை நீக்க இயலாது, ஏனென்றால் அதில் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரின் அந்தரங்கத்தை வெளியிடவில்லை!! மற்றபடி சில்சாமை பாதிக்க கூடிய மேற் கூறப்பட்ட திரி முற்றிலுமாக நீக்கி விட்டேன்!! இனியும் இதுபோன்ற சமபவங்கள் நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது யெளவன ஜனம் தளத்தின் பொறுப்பு!!

நன்றி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:
யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்


சுமார் 11 மணி நேரத்திற்கு முன்னால் சில்சாம் தனது தளத்தில் இவ்வாறு பதிந்துள்ளார்:

//நேற்று (24.03.2011)- (ஒருநாள் மட்டும்) ஒரு கிராமத்திலிருந்து வந்த அழைப்பினிமித்தமாக தூரப் பிரயாணம் (4am) சென்றிருந்தேன்; நள்ளிரவு  (1am) வீடுதிரும்பி கணிணியை திறந்தால் அது பழுதுபட்டு அதில் மீண்டும் பிரச்சினை;எனவே சுமார் 36 மணிநேரம் நான் நண்பர்களுடைய விவரங்களையும் தளத்தின் போக்கையும் கவனிக்க முடியாமற்போனது.

நான் யாரையும் அசட்டை செய்ததாக தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம்;(மேசியாவின்) எதிரிகளாக நான் பாவித்து எழுதிவரும்  மதிப்பிற்குரிய எதிரிகளான‌ நண்பர்கள் உட்பட அனைவரையும் சமமாக நேசிக்கிறேன்; இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மேடையிலும் தேசத்தின் மன்றங்களிலும் ஆக்ரோஷமாக பேசிவிட்டு வெளியே வந்து கைகுலுக்கிக் கொண்டு அரட்டையடிப்பார்களே அதுபோன்ற பொய் கோபமே என்னிடம் உண்டு; இங்கே போட்டி உண்டு பொறாமையில்லை;வேகத்தின் அளவிலேயே விவேகமுமுண்டு.

எனவே இணக்கமான சூழல் உருவாக விரும்பி நண்பர்கள் எடுத்துள்ள எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக எனது சர்ச்சைக்குரிய வரிகளை அதாவது நண்பர் கோவை வெறியன் அவர்களை கோபப்படுத்தியசர்ச்சைக்குரிய‌ வரிகளை நீக்குவதுடன் என்னுடைய கடினமான போக்கினால் புண்பட்டிருக்கக்கூடிய அவருடைய மென்மையான உணர்வுகளை மதித்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன்.

தேவ சமாதானம் நம்மை ஆளுவதாக,அவர் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி ஆவார்..!//

இத்திரியின் முதல் பதிவில் நான் பதித்திருந்த வேண்டுகோள் தனது கவனத்திற்கு வரஇயலாமற்போனது என தகுந்த காரணத்துடன் சில்சாம் கூறுகிறார்.  அவர் சொல்வதை நான் ஏற்கிறேன்.

தற்போது சர்ச்சைக்குரிய பதிவை சில்சாம் நீக்கிவிட்டதால், நான் உறுதிகூறியிருந்தபடி, சர்ச்சைக்குரிய பதிவை மேற்கோள் காட்டி எனது தளத்தில் நான் பதித்துள்ள பதிவுகளை நீக்கிவிடுகிறேன். சகோ.பெரியன்ஸ்-ம் இத்தளத்தில் அப்படியே செய்ததற்காக அவருக்கு நன்றி கூறி பாராட்டுகிறேன்.



-- Edited by anbu57 on Friday 25th of March 2011 09:49:21 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்


பிரியமானவர்களே,

நம்மை "(மேசியாவின்) எதிரிகள்" என்று வெறுப்பிலோ, அன்பிலோ அல்லது போறாமையிலோ, எதில் சொல்லுகிறார்களோ, ஆனால் யெளவன ஜனம் தளத்தில் பதிவோருக்கு அடுத்தவர்களின் பெயரை சரியாக உச்சரிக்கும் நாகரீகம் இல்லை போல், அல்லது அப்படி எழுதுவதால் தான் அவர்களுக்கு ஆதும திருப்தியாக இருக்கிறது போல்!! எடுத்துக்காட்டாக‌,

கோவை பெரேயன்ஸ் என்பதை கோவை வெறியன் என்று எழுதுவது எத்துனை முட்டாள்தனமாக இருக்கிறது!! இது ஏதோ ஒரு முறையோ, இரு முறையோ எழுதினால் ஏதோ காமெடி போல் இருக்கும், அதையே திருப்பி திருப்பி எழுதுவது அவர்களின் எழுத்தில் உள்ள கோளாறு அவர்களின் இருதயத்தில் உள்ள நஞ்சையே வெளிப்படுத்துவதாக இருக்கிறது!! ஏதோ தனிப்பட்ட முறையில் தாக்குவதே கிடையாது என்று அவர்களின் தள நிர்வாகி தான் இதை நீண்ட நாட்களாக தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்!! அது அவர் இஷ்ட்டம் தான், ஆனாலும் கோவை பெரேயன்ஸ் எழுதியத கோவை வெறியன்ஸை  என்று எழுதி தொடுப்பு கொடுப்பது அவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் "நாகரீகத்திற்கு" சம்பந்தமில்லாததாய் இருக்கிறது!!

அடுத்து இந்த தளத்தில் இருக்கும் சகோ சோல்சொல்யூஷன்!! அதை நண்பர் ஜான் தன் எரிச்சலை வெளிப்படுத்துவதாக நினைத்து தொடர்ந்து தங்களின் நாகரீகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது!! கருத்தின் மேல் விவாதம் இருக்கும் போது, உங்களுக்கு ஏன் தனிப்பட்ட மனிதன் வைத்திருக்கும் பெயர் மேல் அத்துனை எரிச்சல்!! ஏன் ஒரு பெயரை இப்படி கொலை செய்கிறீர்கள்!!?? சொல்யூஷன் என்பதற்கு "தீர்வு" என்கிற நியாயமான அர்த்தம் உங்கள் பார்வைக்கு படவில்லையா!!??

மேலும் நாய் என்று எழுதிய ஒரு வார்த்தைக்கு ஜான் அவர்கள் இந்த அளவிற்கு சூடாக வேண்டிய அவசியம் இல்லை!! நீங்கள் எழுதிக்கொண்டு இருக்கும் தளத்தில் முதலில் அதை கடைப்பிடித்து விட்டு பிறகு அடுத்த தளத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் அறிவுறைகள் தந்தால் நலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்!!

தங்களின் தளத்தில் உள்ளவர்களிடம் இதை கடைப்பிடித்து அதன் பின் அடுத்தவர்களிடம் கைய்யை நீட்டலாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

joseph wrote:

//பெரியன்ஸ் தளத்தில் ஆத்தும கரைசல் அல்லது கோந்து எனப்படும் ஒரு மனிதர் (?) எழுத்திலும் கருத்திலும் தடித்த சொற்களை பயன்படுத்திகிறார்.//

chillsam wrote:

//எனவே இணக்கமான சூழல் உருவாக விரும்பி நண்பர்கள் எடுத்துள்ள எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக எனது சர்ச்சைக்குரிய வரிகளை அதாவது நண்பர் கோவை வெறியன் அவர்களை கோபப்படுத்தியசர்ச்சைக்குரிய‌ வரிகளை நீக்குவதுடன் என்னுடைய கடினமான போக்கினால் புண்பட்டிருக்கக்கூடிய அவருடைய மென்மையான உணர்வுகளை மதித்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன்.//

ஒருவரிடம் மன்னிப்பு கோரும்போதுகூட யௌவன ஜனம் தள நிர்வாகி சில்சாம் “கோவை பெரியன்ஸை” “கோவை வெறியன்” என்றே சொல்லி தனி வெறியை தணித்துக்கொண்டுள்ளார். வெறியன் என அவர் குறிப்பிடுகிற “கோவை பெரியன்ஸ்”-ன் மென்மையான உணர்வுகளை மதிப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறார். வெறியனிடம் மென்மையான உணர்வா? இது என்ன முரண்பாடு? இவரது இம்மாதிரி கூத்துக்கள் வருடக்கணக்காக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வரிக்கு வரி பெரியன்ஸ் அவர்களை வெறியன் என அழைத்துக்கொண்டும் அல்லது அம்மாதிரி அழைப்பவர்களுக்கு தாளம் போட்டுக்கொண்டும் இருக்கிற யௌவன ஜனம் தள உறுப்பினர்களில் எவருக்கும் சோல் சொல்யூஷனை தட்டிக்கேட்க உரிமையில்லை.

சோல் சொல்யூஷனின் வார்த்தைகளை நான் ஆதரிப்பதாக யாரும் கருதவேண்டாம். ஆனால் அவரைக் குற்றஞ்சாட்டுபவர்கள் தாங்கள் சாக்கடைக்குள் முங்கிக் கிடப்பதை அறியத் தவறியது ஏனோ என்பதுதான் எனது கேள்வி.

உண்மையில் பெரியன்ஸ் அவர்களை மிக அதிகமாகப் பாராட்டவேண்டும். யௌவன ஜனம் தள உறுப்பினர்கள் அத்தனை பேரும் அவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெறியன் என வரிக்கு வரி கூறியுள்ளபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரின் வாதத்திற்கும் நிதானமாகப் பதிலளித்துவரும் அவரது பொறுமை மிகமிக பாராட்டத்தக்கது.

ஒருவரை வெறியன் என அழைத்தால் என்ன? நாய் என அழைத்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். அப்படியிருக்க பெரியன்ஸை வரிக்குவரி வெறியன் என அழைக்கும் கூட்டத்தார், தங்களை ஒருவர் நாய் எனச் சொன்னதும் குய்யோ குய்யோ எனக் கூப்பாடு போடுவதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

ராஜ்குமாரை பேதையர் என நான் சொன்னதை சுட்டிக்காட்டும் கொல்வின், அவர் என்னை பிசாசு எனச் சொன்னதை வெளியரங்கமாக தட்டிக்கேட்க மாட்டாராம்; மின்னஞ்சல் மூலம் இரகசியமாக தட்டிக்கேட்பாராம்; அதில் நாம் திருப்திபடவேண்டுமாம்.

என்னையும் பெரியன்ஸ் மற்றும் சுந்தரை சிலர் பிசாசு எனச் சொன்னபோது ஒருகாலத்தில் தட்டிக்கேட்ட கொல்வின், சமீபத்தில் பெரியன்ஸைப் பார்த்து சாத்தானின் வாய் கோவைவெறியன்ஸ் அவர்களே என ஒரு பதிவில் எழுதியுள்ளார். இப்படி ஆளாளுக்கு தடித்த வார்த்தைகளை வளர்த்துக்கொண்டே போகும்போது சோல் சொல்யூஷனை மட்டும் சொல்லி என்ன பயன்?

நான் ராஜ்குமாரை பேதையர் எனச் சொன்னதற்காக என்னிடம் கடுமையாகச் சாடிய கொல்வின், என்னை களவாடியவர் என சகோ.அன்பு அவர்களுக்கு எனும் திரியில் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை “பேதையர்” எனும் சொல்லைவிட “களவாடியவர்” எனும் சொல்தான் கடுமையானதாகும். எந்தவித முகாந்தரமும் இல்லாமல் சற்றும் பொறுப்பின்றி யெகோவா சாட்சிகளின் வெளியீட்டை நான் களவாடியதாக கொல்வின் கூறியுள்ளார். இதோ அவரது பதிவு:

//ஏனென்றால் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை தொடர்ந்து படிப்பவன், நான்; உங்களின் இயேசு மிகாவேல் தூதனாக இருந்தவர் அங்கிருந்து களவாடப்பட்டதுதான்.//

கொல்வின் வேண்டுமானால் வசந்தகுமாரின் ஆக்கங்களுக்கும் யெகோவா சாட்சியினர் ஆக்கங்களுக்கும் ரசிகராக இருக்கலாம், அவற்றை அவர் refer பண்ணலாம், copy பண்ணலாம். என்னைப் பொறுத்தவரை வேதபுத்தகம் ஒன்று மட்டுமே எனக்கு reference. சொல்வினுக்காக எந்த reference-ஐயும் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் எழுதியதி எந்தக் கருத்து வேதாகமற்கு வெளியேயுள்ளது என்பதை தனியே குறிப்பிட்டு கொல்வின் கேட்டால் அவருக்கு தகுந்த விளக்கம் தரப்படும். ஆனால் நான் நிச்சயமாகச் சொல்வேன், எனது கருத்துக்கள் யாவும் வேதபுத்தகத்திற்கு உள்ளே உள்ளதுதானேயொழிய அதற்கு வெளியே உள்ளது அல்ல.

அபாண்டமாக என்னைக் களவாடியவர் எனக் குறிப்பிட்ட கொல்வினின் செயல் வியப்பிற்கிரியதல்ல. அவர் உட்கார்ந்திருக்கிற இடம் அப்படி; அந்த இடத்திலிருந்து பேசுபவர்களுக்கு தானாக அதன் குணம் ஒட்டிக்கொள்ளும்.







__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard