///ebi wrote:சகோ.சில்சாம், அவர்களுக்கு பதில் அளிப்பதில் தவறில்லை. ஆனால் இனிமேல் அவர்கள் பெயரையோ அல்லது தளத்தையோ குறிப்பிடாமல் ஏற்கனவே நீங்கள் சொன்னது போல் பொதுவாக பதிலளியுங்கள். ”கிறிஸ்துவைப்பற்றி, வேதவசனங்கள் பற்றி எந்த மாதிரி தவறான கருத்துக்கள் உலவுகின்றன என்றும் அது ஏன் தவறு, அதன் உண்மையான அர்த்தம் என்ன” போன்று பொதுவாக விளக்கம் தாருங்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் எக்காரணம் கொண்டும் எழுதவேண்டாம். டினோ போன்ற புதிய சைத்தான்கள்,இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான் போன்று எழுதவேண்டாம். அது தேவையில்லாததும் கூட. கருத்துக்கு எதிர்கருத்தை மட்டும் வையுங்கள். அவர் யார் என்ன எப்படிபட்டவர் என்பதெல்லாம் வேண்டாம். ////
என்னை வம்புக்கு இழுத்து, என் பெயரையும் பாவித்து எதோ உளறி இருக்கும் ''எபி'' என்ற முந்திரிக் கொட்டைக்கு எழுதிக் கொள்வது.!!!! கிறிஸ்துவைப் பற்றியும்; வேத வசனங்கள் பற்றியும் என்ன? தவறான கருத்துக்களை நான் சொல்லிவிட்டேன் என்பதையும் சேர்த்து பதிவு செய்து எழுதினால் நாம் புரிந்துகொள்வோம். அதை விட்டுவிட்டு பேதுரு போல முந்திக்கொண்டு வீரவசன பேசி சில்சாம் என்ற கள்ளப் போதகனின் புகழ்சியே சம்பாரிக்க இவ்வளவு காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று நாம் ஆதாரத்துடன் தான் எமது பதிவுகள் எழுதிக்கொண்டு வருகிறோம். நீராகிலும் சரி உமது தலத்தில் இருக்கும் ஜோன், கொல்வின் அவர்கள் அனைவர்க்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் எவ்வளவு தான் எடுத்து வாதாடினாலும் உங்கள் பாரம்பரியம் கொண்ட நம்பிக்கையே உங்கள் கருத்துக்களில் வெளிப்படுகிறது. உண்மையே ஒரு நாளும் பொய்யாக முடியாது. அதைதான் நீங்கள் அனைவரும் செய்து வருகிறிர்கள். உங்களால் முடிந்தால் பின்வரும் தலைப்புக்கு குறிய விஷயங்களுக்கு வேத ஆதாரப் பூர்வமாக பதில் கொடுங்கள் பார்ப்போம். 1. திருத்துவம் 2. மனிதர்கள் சாகாவரம் பெற்ற ஆத்துமாவைப் உடையவனாய் இருக்கிறான். 3. செத்தவுடன் நல்லவர்கள் மாத்திரம் பரலோகத்துக்குப் போய் சந்தோசத்தை அனுபவிப்பது என்ற போதனை. 4. பொல்லாதவர்கள் செத்தவுடன் நரகத்துக்கு போய் நித்திய வேதனையே அடைகிறார்கள் என்ற:::::::::: 5. சிலர் மரித்தவுடன் உத்தரிக்கும் ஸ்தலத்துக்குப் போய் வேதனைப்படுகிறார்கள் மற்றவர்கள் தங்களுக்காக செய்யும் புண்ணிய கிரியைகளின் பலனால் வேதனை குறைந்து மோட்சத்துக்கு போகிறார்கள்.
இது போன்ற இன்னும் 50 கேள்விகள் இருக்கு!!!!! மேலே கூறிய விஷயத்துக்கு சரியான பதில் தெரிந்தவர்கள் வேத ஆதாரத்துடன் மட்டும் வாதாட அழைக்கிறேன். பின்குறிப்பு யெகோவாவின் சாட்சியே அல்லது ரசலையோ இதுக்குள் இழுத்து வாதத்தை தந்திரமாக திசைதிருப்பு மட்டும் முயற்சிக்க வேண்டாம். உங்கள் பதிவு கண்டு தொடரும் ....
-- Edited by Dino on Sunday 3rd of April 2011 10:55:24 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
சில்சாம் தளத்தில் சகோ.எபி எழுதியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். உங்களை “சைத்தான்” என்றும் “குரங்கு” என்றும் சொன்னது சில்சாமேயொழிய எபி அல்ல. சில்சாம் சொன்னதை எடுத்துச் சொல்லி, இப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் எழுதவேண்டாம் என்றுதான் சகோ.எபி ஆலோசனை கூறியுள்ளார்.
மீண்டுமொருமுறை சில்சாமின் பதிவையும் அதைத் தொடர்ந்த எபியின் பதிவையும் படித்துப் பாருங்கள்.
சில்சாம் எழுதினது:
//இதனால் நாம் அறியவேண்டியது என்னவென்றால் இவர்களுக்கெதிராக யாரும் எழுதக்கூடாது;ஆனால் இவர்கள் பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமாக எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்;இரவு பகலாக பிள்ளைகள் கண்விழித்து எழுதிப் பதிக்கும் ஒன்றையும் பரிசீலிக்கமாட்டார்கள்;இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான்;அது குணமாகவும் விடமாட்டார்கள்;மருந்துபோட வருபவர்களையும் கடித்து குதறுவார்கள்.
அப்பாவியான - மென்மையான குணாதிசயம் கொண்ட கோல்வின்,ஜாண்,சந்தோஷ் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோரையும் விட்டு வைக்கிறதில்லை;டினோ போன்ற புதிய சைத்தான்கள் வேறு புறப்பட்டு நம்முடைய சகோதரர்களுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறது;இனி நாம் என்ன செய்யலாம்,தொடர்ந்து முன்னேறுவதா,அல்லது சில நண்பர்கள் வேண்டிக்கொண்டது போல இவர்களுக்கு தேவையற்ற விளம்பரம் தராமல் ஒதுங்கிக்கொள்ளலாமா?//
எபி எழுதினது:
//சகோ.சில்சாம், அவர்களுக்கு பதில் அளிப்பதில் தவறில்லை. ஆனால் இனிமேல் அவர்கள் பெயரையோ அல்லது தளத்தையோ குறிப்பிடாமல் ஏற்கனவே நீங்கள் சொன்னது போல் பொதுவாக பதிலளியுங்கள். ”கிறிஸ்துவைப்பற்றி, வேதவசனங்கள் பற்றி எந்த மாதிரி தவறான கருத்துக்கள் உலவுகின்றன என்றும் அது ஏன் தவறு, அதன் உண்மையான அர்த்தம் என்ன” போன்று பொதுவாக விளக்கம் தாருங்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் எக்காரணம் கொண்டும் எழுதவேண்டாம். டினோ போன்ற புதிய சைத்தான்கள்,இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான் போன்று எழுதவேண்டாம். அது தேவையில்லாததும் கூட. கருத்துக்கு எதிர்கருத்தை மட்டும் வையுங்கள். அவர் யார் என்ன எப்படிபட்டவர் என்பதெல்லாம் வேண்டாம். //
இப்படியெல்லாம் எழுதவேண்டாமென்றுதான் எபி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஆலோசனை கூறக்கூடிய ஒருசிலராவது அத்தளத்தில் இருப்பதை எண்ணி நான் மகிழ்கிறேன்.
நன்றி சகோதரர் அன்பு அவர்களே, என் உறவினர்கள் கூட அதை தவறாக தான் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். நண்பர் அபி அவர்களே , உங்கள் கருத்துக்களை தவறாக புரிந்துகொண்டு எதோ எழுதிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும். நன்றி தாழ்மையுடன் .........
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
அர்ப்புதம் என்ற வேதப் பண்டிதர் எழுதுகிறார்.............
///சகோ.கோல்வின் உங்கள் கேள்விகள் எதற்கும் இன்மேல் அவர்கள் பதில் தரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் சரக்கு தீர்ந்து விட்டது. இனிமே பதில் சொல்ல மாட்டாங்க, வேற எதாவது செய்ய முயற்சிப்பாங்க. இப்போதைக்கு அவங்களால முடிஞ்ச மட்டும் நல்லா திட்டதான் முடியும்.
இந்த கோவை பெரியன்ஸ் விவாதத்துக்கெல்லாம் வரவே மாட்டாங்க. அப்படியே வந்தாலும் ரசல் பத்தி எதுவும் பேசக் கூடாது அப்படின்னுதான் சொல்வாங்க. ந(ரி)தி மூலத்தைப் பற்றி பேசாமல் எப்படி ந(ரி)தியை எதிர்கொள்வதாம்? அவங்க நேரடி விவாதத்துக்கு வந்தால் நான் சாட்சிக்கு வரத்தயார்.
உங்களுக்கு அச்சிட நான் உதவ முடியும் என்று நினைக்கிறேன். என் மெயில் ஐடிக்கு விவரங்களை அனுப்புங்கள். விவாதிப்போம். நன்றி!////
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அர்ப்புதம் என்பவர் புதிதாக உளற ஆரம்பித்து இருக்கிறார். நாம் இவர் கேட்ட கேள்விக்கு பல தடவைகள் பதில் கொடுத்தாலும் இயேசு தொழத்தக்க தெய்வமே என்று வாதாடும் உங்களைப் போன்றவர்களிடம் இன்னும் பேசி எமது நேரத்தை விரயம் செய்ய நாம் ஒன்றும் ஞானத்தில் குறைவு அற்றவகள் அல்ல. அத்துடன் திருத்துவம் போன்ற தலைப்பில் நாள் தோறும் விவாதம் செய்வதால் உங்களுக்குள் பல கருத்துக்கள் இருந்தபோதிலும் அதை நாங்களோ அல்லது உங்கள் கருத்துக்களை நாங்களோ ஏற்றுக் கொள்ளாத நிலையிலே இருக்கிறது. இன்னும் நாம் சிறு பிள்ளைகள் போலவே ஒரு விஷயத்தையே சதா காலமும் விவாதிபதால் யாருக்கு என்ன லாபம்? அண்மையில் சகோதரர் அன்பு அவர்கள் வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்? என்ற திரியில் ஒரு விவாதத்தை முன்வைத்தார். அதற்கு தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அல்லது கள்ளப் போதகன் சில்சாம் இடம் கூட இன்றுவரை பதில் வரவில்லை. இதை கொல்வின் மற்றும் ஜோன் அவர்கள் கூட கருத்தில் கொண்டு பதில் கொடுக்க முயற்சிக்கவும். இந்த கருத்துக்களை தமிழ் கிறிஸ்தவ தளத்தில் வெங்காயம் உரித்துக் கொண்டு இருக்கும் அர்ப்புதம் என்பவருக்கு அறியத்தருகிறேன்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
// சகோ.கோல்வின் கோவை பெரியன்ஸிடம் பதில் இல்லை, ஆகவே அவர்கள் கழுவிகிற மீனில் நழுவுகிற மீனாக ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். Citations & Reference எதற்காக கொடுக்கப்படுகிறது என்கிற அடிப்படைப் புரிந்துகொளளுதல் கூட இல்லாமல் இருப்பவர்களிடம் போய் நீங்கள் சொல்வது எந்தளவுக்கு புரிந்து கொள்ளப்படும்? வேதாகமத்தைப் பற்றிய அடிப்படைப் புரிந்து கொள்ளலே இல்லாதவர்களிடம் சத்திய வேதம் குறித்துப் பேசுவதும் பன்றிகளின் முன் முத்தை வைப்பது போன்ற ஒரு செயலே! ///
அற்புதம் என்பவர் தமிழ் கிறிஸ்தவ தளத்துக்கு; இருந்து இருந்துட்டு அங்கு இருக்கும் சிலபேருக்கு "காஸ்" கொடுக்கும் விதமாக ஏதாவது எழுதுவது இவரின் சிறு ஊழியம் போல இருக்கு!!! வேதாகமம் முழுவதும் அற்புதத்துக்கு புரிந்து விட்டதாம் அதனால் மற்றவர்களுக்கு வேதாகமத்தின் அடிப்படையே தெரியாது என்று சொல்லி தன்னைத் தானே புகழ்ந்துகொள்வார். "திரித்துவத்தில்'' வரும் பிதா, குமாரன், பரிசுத்தாவி இவர்கள் மூன்று பெரும் வேறு வேறு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மனதில்லை. இன்னும் பழைய பாரம்பரியன்களிலே மூழ்கி இருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை புரிந்துகொள்ள தேவன் இன்னும் கால அவகாசம் கொடுத்து இருக்கிறார் போல ..... பழைய காலத்தில் இருந்த பல மேதாவிகள் இயேசு கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள். அற்புதம் என்பவர் மேதாதிக்கும் மேதாதி தானே !!! அவருக்கு மட்டும் பிரியாது. உதாரணத்துக்கு மேதை நியூட்டன் கணித்த கிபி:2060
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )